Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #561
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வீட்டு வைத்தியம்


    எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.
    நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
    குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
    உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
    அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
    மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.
    இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.
    சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.
    படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.
    நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும்.
    கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
    அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
    வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
    அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.
    முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
    பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.
    தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
    தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.
    முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
    சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
    வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்
    புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
    அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்


    Sponsored Links
    kkmathy likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #562
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Very good sharing, Gowri.

    gowrymohan likes this.

  3. #563
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by kkmathy View Post
    Very good sharing, Gowri.
    Thank you Komathy .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #564
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Useful tips.
    Thanks for sharing frd

    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #565
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by Strawberry View Post
    Useful tips.
    Thanks for sharing frd
    Thank you and welcome Ishu .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #566
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம்



    பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால் பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா?

    பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

    சிறிது கசப்பு சுவையுடன்தான் இருக்கும். ஆரோக்கியத்தை விரும்புவர்கள் அப்படியே பழத்தோடு சாப்பிடலாம். சுவையையும் கூட விரும்புவர்கள் விதைகளை மசித்து சாலட்டுடனோ, வேறு உணவுகளுடனோ, அல்லது ஜூஸுடனோ கலந்து சாப்பிடலாம்.
    இது நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், குழந்தைகளுக்கு எளிதில் அவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் போகலாம். ஆகவே மருத்துவரை ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு தரலாம்.


    பப்பாளி விதைகள் பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது. அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த விதைகளுக்கு உண்டு.


    தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.


    குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகளுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம். இவை இயற்கையாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும்.


    இவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் கேன்சர் செல்கள் உருவாகாது என ஆய்வு கூறுகின்றது.


    பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, ஆகியவற்றால் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்கும் இந்த பப்பாளி விதைகள்.


    பப்பாளி கல்லீரலுக்கு தேவையான ஆரோக்கியமான போஷாக்கைத் தரும். லிவர் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். பப்பாளி விதைகளை பேஸ்ட் செய்து அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து குடிக்கலாம்.


    சிறு நீரக செயல்பாட்டினையும் நன்றாக தூண்டும். இதனால் உடலில் தீங்கைத் தரும் நச்சுக்களும் கழிவுகளும் எளிதில் வெளியேறுகின்றன.

    ஆகவே உடலுக்கு இவ்வளவு நன்மை தரக் கூடிய இந்த பப்பாளி விதையை வாரம் ஒரு முறையாவது உங்கள் உணவினில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த நோயும் உங்களை தைரியமாக அண்டாது. அவற்றை ஓட ஓட விரட்டலாம்.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #567
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தையா? தீர்வு உங்கள் சமையலறையில் - இயற்கை மருத்துவம்


    சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா என்று பெயர்.
    வெஜைனாவில் தொற்று ஏற்பட்டிருந்தால், சுத்தமில்லாமல் பராமரிக்கப்பட்டால், அல்லது நீர் சத்து குறைந்து போனாலோ, இது போல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த சிறு நீர் தொற்றிற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.



    மோர் :

    புரோபயாடிக் என்று சொல்லக் கூடிய உணவுகளெல்லாம் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது என்று அர்த்தம். அவை உடலுக்குள்ளேயே உருவாகின்றன. அவைகளின் எண்ணிக்கை குறையும்போது தீய பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
    மோர் சிறந்த புரோபயாடிக் உணவு. அதில் பாஸ்பரஸ், கால்சியம், ரைபோஃப்ளேவின் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து, சிறு நீர் குழாயில் அல்லது பாதையில் ஏற்பட்ட தொற்றுக்களை அழிக்கிறது.
    போதிய இடைவேளைகளில் மோரில் இஞ்சி மல்லி தழை போட்டு குடித்துக் கொண்டு வந்தால், ஓரிரு நாட்களில் முன்னேற்றம் காணலாம்.


    ஆப்பிள் சைடர் வினிகர் :

    சிறு நீர் தொற்றிற்கு ஆப்பிள் சைடர் வினிகர் மிகச் சிறந்த மருந்து ஆகும். இது கிருமிகளுக்கு எதிராக செயல்புரிகிறது. உடலுக்கு வலிமையும் தருகிறது.
    சிறு நீரகத்தில் அமில் காரத்தன்மையை சமன் செய்கிறது. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து தினமும் குடித்தால், சிறு நீர் தொற்று குணமாகும்.


    இஞ்சி :

    இஞ்சி எந்தவிதமான தொற்றினையும் சரிபடுத்தும் சிறந்த ஆற்றல் கொண்டது. அது சிறு நீர்குழாயின் தங்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, நச்சுக்களையும் அகற்றுகிறது.
    இஞ்சியை தேநீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் இஞ்சியைத் தட்டி கொதிக்க வைத்து ஆறியவுடன் பருகினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்தால் போதும். அதிகமாக குடிக்கும்போது அசிடிட்டி உருவாகும்.

    வெந்தயம் :

    வெந்தயம் அமில காரத்தன்மையை சமன் செய்யும். அமிலத்தின் அளவு வெஜைனாவில் அதிகமாகும்போது, அலர்ஜி உண்டாகும். இதனால் கூட இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.
    வெந்தயம் அமிலத்தன்மையை சமன் செய்யும். அதே போல் சிறுநீர்ப்பாதையில் நச்சுக்கள் தங்கியிருந்தாலும் சிறுநீர் தொற்றிற்கு காரணமாகும். வெந்தயம் உடனடியாக நச்சுக்களை வெளியேற்றும். தொற்றிலிருந்து காப்பாற்றும். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

    நீர் நிறைய அருந்துங்கள் :

    உடலில் சில சமயங்களில் நீர் பற்றாக்குறையினால் பாக்டீரியாக்கள் சிறு நீர்ப்பாதையிலேயே தங்கி அட்டகாசம் செய்யும். போதுமான அளவு தினமும் நீர் குடிப்பது மிக மிக அவசியம்.
    சிறு நீர் தொற்று ஏற்பட்டிருக்கும்போது, நிறைய அளவு நீர் குடிக்க வேண்டும். குறைந்தது 4 லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். அப்போதுதான் கிருமிகள் அடித்துச் சென்று வெளியேற்றப்படும்.

    இது போல் உடலுக்கு ஒவ்வாத பல காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்படலாம். நம் வீட்டு சமையலறையிலேயே போதிய மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்கள் உள்ளன.

    வீட்டிலிருந்தபடியே இது போன்ற சிறு நீர் தொற்றிற்கு தீர்வுகளைக் காணலாம். நீங்களும் இவற்றை முயன்று பாருங்கள். சீக்கிரம் குணம் பெறுவீர்கள்.

    Vaisri02 and safron like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #568
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட..!!!
    100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்
    நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .
    இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது
    இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.


    - இணையதளத்திலிருந்து


    Vaisri02 and safron like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #569
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Gud sharings. Sis

    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  10. #570
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by safron View Post
    Gud sharings. Sis
    Thank you Sumy .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter