Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #51
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

    மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

    இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

    இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

    ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

    இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
    இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

    இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

    இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.


    -நலம், நலம் அறிய ஆவல் - Shamvel.


    Sponsored Links

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #52
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்:

    நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரி செய்ய முடியாது. ஆனால் நோயைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்க்கு இன்சுலின் ஊசிதான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

    இரவில் படுக்கும் முன்பு இரண்டு வெண்டைக்காய்களை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும். முனைகளை நறுக்கியபின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவி விடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளைப் போட்டு ஊறவைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும். பின் காலையில் எழுந்ததும், அந்த துண்டுகளை நீக்கிவிட்டு அந்த நீரைக் குடிக்க வேண்டும்.

    இது போன்று தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். மேலும் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதைவிட, இவ்வாறு சாப்பிடுவதுதான் சிறந்த பலனைத் தரும்.

    ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதைத் தவிர்த்து மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

    வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

    நீரிழிவில் டைப் -2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

    எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.ஏனெனில் இந்தச் சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தைக் குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. எனவே வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

    - பெண்மணி


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #53
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    thank you gowrimohan for sharing wonderful information about Vendaikkaai.

    gowrymohan likes this.

  4. #54
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

    உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

    ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

    இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

    ப்ராக்கோலி
    ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

    பூண்டு
    ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

    கேரட்
    தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    காளான்
    காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

    நட்ஸ்
    புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

    பப்பாளி
    தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

    அவகேடோ
    அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

    திராட்சை
    திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

    தக்காளி
    உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ரெட் ஒயின்
    ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.



    - பசுமைப் புரட்சி

    sgr37, sumitra and Amirporkodi like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #55
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

    கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

    பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

    சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

    எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கிரீன் டீயின் நன்மைகள்

    1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

    2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

    3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

    4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

    5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

    6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

    7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

    8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

    9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

    10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

    11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

    12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

    13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

    14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

    15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

    15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

    16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

    17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.



    தமிழன்பன், சித்த மருத்துவ குறிப்புக்கள்.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #56
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    எளிய பாட்டி வைத்தியம்

    1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

    3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

    4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்துசாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

    5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

    6. உதட்டு வெடிப்புக்கு கரும்புசக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

    7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

    8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

    9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

    10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்

    - மருத்துவ உலகம்


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #57
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் :

    1. ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்தவேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

    2. தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

    3. தின்பண்டங்களுக் கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

    4. அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ,பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும்ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள்.
    உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

    5. வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை,கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு,
    நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும்அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    6. அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவேகொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

    7. தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

    8. அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

    9. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


    - மருத்துவ உலகம்


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #58
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    useful simple tips for weight loss......

    gowrymohan and sumitra like this.

  9. #59
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,967
    Blog Entries
    382

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by Mary Daisy View Post
    useful simple tips for weight loss......
    Sure................

    sumitra likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #60
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Wonderful medicinal tips you have shared Gowrymohan. thank you

    gowrymohan and Amirporkodi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter