Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By sumathisrini
  • 1 Post By sumitra

Can C-section anesthetic lead to low back pain? - மயக்க ஊசிக்கும் முதுகு வலிக்கும&


Discussions on "Can C-section anesthetic lead to low back pain? - மயக்க ஊசிக்கும் முதுகு வலிக்கும&" in "General Health Problems" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,555

    Can C-section anesthetic lead to low back pain? - மயக்க ஊசிக்கும் முதுகு வலிக்கும&

    Can C-section anesthetic lead to low back pain? - மயக்க ஊசிக்கும் முதுகு வலிக்கும&-400x400_image23243238.png


    சிசேரியன் உள்ளிட்ட பல பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முதுகில் மயக்க ஊசி போடுவது காலங்காலமாக இருந்து வருகிற பழக்கம். அப்படிப் போடப்படுகிற ஊசியால் முதுகுவலி வருவதாக ஒரு அபிப்ராயமும் மக்களிடையே உண்டு.

    உண்மையில் மயக்க ஊசிக்கும், அதன் தொடர்ச்சியாக வரும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். நம்மில் 90 சதவிகித மக்களுக்கு முதுகுவலி இருக்கிறது. முதுகெலும்பைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதியில் ஏற்படுகிற பாதிப்பு, தசைகள், எலும்புகள் என எதிலும் உண்டாகிற பாதிப்புகளின் காரணமாக முதுகு வலி வரலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பான மயக்க ஊசியானது, முதுகுத் தண்டு வடத்தைச் சுற்றியுள்ள வெளி உறைக்கு வெளியே சிறிது செலுத்தப்பட்டு, தேவையான பகுதியை, தேவையான நேரத்துக்கு வலியின்றி இருக்கச் செய்யக் கூடியது.

    எனவே இந்த ஊசியானது, மேலே சொன்ன சவ்வு, எலும்பு அல்லது எலும்புச் சந்திப்புகளில் செலுத்தப்படாமல், எந்த விளைவையும் உண்டுபண்ணாமல், அந்த வழியே கூட செல்லாமல், துல்லியமாக முதுகுத் தண்டு வடத்தில் மிக மெல்லிய ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. எனவே முதுகில் போடப்படுகிற மயக்க ஊசிக்கும், முதுகு வலிக்கும் 0.1 சதவிகிதம் கூட தொடர்பில்லை. வலியுள்ள 90 சதவிகித மக்களில் அதிகபட்சமாக 10 சதவிகிதம் பேரே ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அவர்களில் 25 சதவிகிதம் பேருக்குத்தான் முதுகில் மயக்க ஊசி போடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மீதி சதவிகிதத்தினர், அறுவை சிகிச்சை இல்லாவிட்டாலும் வலியை அனுபவிப்பவர்கள்.

    அதாவது, அறுவை செய்யப்படாமலே, முதுகுப் பகுதியில் எலும்பு, சவ்வு அல்லது எலும்பு இணைப்புகளில் பிரச்னை இருப்பதாலோ, உடல் பருமன், நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருப்பதாலோ அவர்களுக்கு முதுகு வலி இருக்கலாம். முதுகுப் பகுதியில் போடப்படுகிற மயக்க ஊசியானது 1885ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிற சிகிச்சை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, பாதுகாப்பான, முழுமையான மயக்க மருந்தும்கூட. எனவே மயக்க மருந்து என்றதும் பயப்படத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், முதுகு வலிக்கு சில நேரங்களில் முதுகு வழிதான் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி சிகிச்சையளிக்கப்படும். அதை பெர்க்யூட்டனஸ் சிகிச்சை முறை என்கிறோம். எனவே முதுகு வழியே செலுத்தப்படுகிற மருந்துகள் குறித்து, இனி பயப்படத் தேவையில்லை என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார் ஆர்.வைதேகி


    நன்றி வசந்தம்




    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Can C-section anesthetic lead to low back pain? - மயக்க ஊசிக்கும் முதுகு வலிக்கு

    Very useful information. thank you Sumathisrini!

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter