நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இருந்து 50 சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரம்பரையினால் ஏற்படும் நீரிழிவு நோய், மற்றய நீரிழிவு அதிகளவு இனிப்புப் பதார்தம், மாப்பொருள் என்பன உட்கொள்வதனால் உடல் பருமனால் கூடி இத்தகைய நீரிழிவு நோய் வரக் காரணமென தற்போதைய வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுப் பொருட்களளை அதிகளவு உட்கொள்ளல், அதனால் ஏற்படும் உடல் பருமன், தேக அப்பியாசக் குறைவு, என்பன இவ்வாறான நீரிழிவு நோய் ஏற்படுவதற்குக் காரணமாய் இருக்கிறதென வைத்திய அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு வெளியே தெரியக்கூடிய அறிகுறிகளாக அதிக நீர்தாகம் ஏற்படல், உடல் பலவீனம் அடைதல், களைப்படைதல், அடிக்கடி மலசலம் கழித்தல் என்பனவை காணப்படுகின்றன.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பிரித்தானிய தேசீய வைத்தியத் துறை மட்டும் 9 பில்லியன் பவுண்ஸ் நிதியை செலவு செய்கின்றது.

3 மில்லியன் இளைஞர்களும், சிறுவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்ற 12 மாதங்களுக்குள் 11,7000 மேலதிகமானோர் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயிற்கான அரசாங்கத்தின் நிதிச்செலவு வரவு செலவு திட்டத்தின் பத்தில் ஒரு பகுதியாக காணப்படுகிறது.

இரண்டாவது வகையான நீரிழிவினால் 90 சதவீதமானோர் பீடிக்கப்பட்டிருப்பதற்கு அதிக உடன்பருமன் அதிகரிப்பே பெரும்பாலான காரணிகள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar Threads: