Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்!


Discussions on "மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்!" in "General Health Problems" forum.


 1. #1
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்!

  மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்!

  உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் ஒன்று மூக்கு. மூக்கில் தோன்றும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து கூறுகிறார் மயிலாப்பூர் ஏவிஎம் ரிசர்ச் பவுண்டேஷனின் இயக்குனர் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர் ரவி.கே.விஸ்வநாதன். மூக்கு ஆனது சுவாசம், நுகர்ச்சி ஆகிய செயல்பாடுகளுக்கு மட்டும் உதவக் கூடியது அல்ல. கண்ணீருக்கான கால்வாயாகவும் இருக்கிறது. கண்களில் கண்ணீர் பெருகும்போது, அதில் ஒருபகுதி மூக்கு வழியாக வெளியேறுகிறது. மழை, பனியால் முதலில் பாதிப்புக்கு ஆளாவது மூக்குதான்.

  வைரஸ் தொற்று காரணமாக மூக்கில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதன் காரணமாக மூக்கு தசை வீங்கி திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் உள்ளேயே தேங்கி சளியாக மாறுகிறது. 2 முதல் 3 வாரங்களில் இது குணமாகி விடும். 2 வாரங்களுக்கு பிறகும் சளி குணமாகவில்லை என்றால், சைனஸ் பிரச்னையாக இருக்கலாம். கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். மூக்கில் ஏதாவது பிரச்னை என்றால், மூக்கடைப்புதான் முதலில் தோன்றுகிறது.
  மூக்கில் அடிபடுவதால் அதன் நடுச்சுவர் வளைந்து மூக்கடைப்பு உண்டாகலாம். நடுச்சுவரில் சீழ்கட்டி, சதைக் கட்டிகளும் மூக்கடைப்புக்கு காரணங்களாக உள்ளன. மூக்கில் உள்ள செப்டம் என்ற எலும்பு, சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால்கூட சுவாசப் பாதை யில் தடை ஏற்படலாம். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். பாலிப் என்கிற சதை வளர்ச்சியாலும் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அலர்ஜி அல்லது பூஞ்சைகள், சதை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. இது ஆஸ்துமாவுக்கும் வழிவகுப்பதால், அறுவை சிகிச்சை மூலம் சதையை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.

  சில சிறுவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் தானாக கொட்டும் பிரச்னை இருக்கும். மூக்கினுள் விரலை விட்டு நோண்டுவதால் ரத்தம் வரலாம். தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாகவும், சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடியும். தொழுநோய், காசநோய், ரத்தஅழுத்தம், சைனஸ் போன்றவையும் மூக்கில் ரத்தம் வடிவதற்கு காரணங்களாக உள்ளன. பிறந்த 2வது நாளிலேயே குழந்தைகளுக்கு வாசனையை நுகரும் சக்தி வந்துவிடுகிறது. வாசனையை வைத்தே தனது தாயை குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்கின்றன. நமது மூக்கு 10 ஆயிரம் வகையான வாசனைகளை உணரும் திறன் படைத்தது.
  நுகரும் திறன் சிலருக்கு பிறவியில் இருந்தே இல்லாமல் இருக்கும். சளி, சைனஸ் போன்ற காரணங்களாலும், மூக்கு பொடி பழக்கத்தாலும் நுகரும் திறன் படிப்படியாக குறையலாம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஸ்டீராய்டு நாசல் ஸ்பிரே மூலம் நுகரும் திறனை மீட்டெடுக்க முடியும். சிறுநீரகம், பித்தப்பையில் கல் ஏற்படுவது போல மூக்கிலும் கல் ஏற்படுகிறது. மூக்கில் உறைந்த ரத்தகட்டி அல்லது கெட்டியான சளி இருந்தால், அதன்மீது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் படிந்து கல் போல மாறுகிறது. மூக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதிநவீன லேசர் முறையில் எண்டோஸ்கோபி ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதில் காயமோ, தழும்போ ஏற்படுவதில்லை.

  Similar Threads:

  Sponsored Links
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 2. #2
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்!

  ரெசிபி

  கேரட்-ஆப்பிள் சாலட்: 3 ஆப்பிள், 4 கேரட் எடுத்து நன்றாக சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் அரை டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடலாம். உடலுக்கு சத்துள்ள உணவு ஆகும்.

  தக்காளி-பூண்டு சூப்: தக்காளி (10), பூண்டு (4 பல்), கேரட் (1), வெங்காயம் (1), சர்க்கரை (1 ஸ்பூன்), எண்ணெய் (அரை ஸ்பூன்), வெண்ணெய் (1 ஸ்பூன்), துளசி சிறிது எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கேரட்டை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, மிளகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, கேரட் துண்டுகள், மல்லி இழை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இந்த கலவையை வடிகட்டி, மிக்ஸியில் அடிக்கவும். பிறகு கலவையை சூடாக்கி அதில் சர்க்கரை, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து பருகலாம்.

  பாலக் மசாலா இட்லி: பசலைக்கீரை 1 கட்டு, தக்காளி (1), காய்ந்த மிளகாய் (5), சீரக பொடி (அரை ஸ்பூன்), மிளகாய் சாஸ் (1 ஸ்பூன்), மிளகுத் தூள் (1 ஸ்பூன்), எண்ணெய் (1 ஸ்பூன்), தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், கீரை, தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம், கீரை, தக்காளி, மஞ்சள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக விட வேண்டும். நன்றாக வெந்த பிறகு, இந்த கலவையை கடைந்து கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய் சாஸ், மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் கீரை கலவையை ஊற்றி அதில் 8 இட்லிகளை போட்டு நன்றாக பிரட்டினால் பாலக் மசாலா இட்லி தயாராகி விடும்.

  டயட்

  மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திரவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும். பழச்சாறுகளோடு, சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது.

  வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.

  அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல கபீன் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 3. #3
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: மூக்கு பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்!

  பாட்டி வைத்தியம்

  *சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

  *தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகரலாம்.

  *ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

  *ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

  *துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

  *உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

  *அதுபோல மல்லி இலைச்சாறு சில சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

  *மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணவு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

  *நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.

  -தமிழ் முரசு


  Last edited by Ganga; 2nd Nov 2011 at 06:31 PM.
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter