Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
 • 1 Post By sudhavaidhi
 • 1 Post By sumitra

All About Oats - ஓட்ஸ் : என்ன இருக்கிறது?


Discussions on "All About Oats - ஓட்ஸ் : என்ன இருக்கிறது?" in "General Health Problems" forum.


 1. #1
  sudhavaidhi's Avatar
  sudhavaidhi is offline Guru's of Penmai
  Real Name
  Sudha
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Muscat
  Posts
  6,171

  All About Oats - ஓட்ஸ் : என்ன இருக்கிறது?

  ஓட்ஸ் : என்ன இருக்கிறது?  பீட்ஸாவுக்கும் பர்கருக்கும் நேரம் சரியில்லை. டாக்டர்கள், டயட்டீஷியன்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பாரபட்சமில்லாமல் பீட்ஸா உள்பட பல துரித உணவுகளை திட்டிக் கொண்டிருக்கும் வேளையில், சமர்த்தாக பலரிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறது ஓட்ஸ். இன்றைய ஹெல்த் டிரெண்டாக வேகமாக மாறி வரும் ஓட்ஸ் பற்றி சில குறிப்புகள்...

  கோதுமையை உடைத்தாற்போல இருக்கும் ஒரு தானிய வகையே ஓட்ஸ். இது ரஷ்யா, கனடா, போலந்து போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம்,பீகார் போன்ற மாநிலங்களிலும் விளைகிறது. ஓட்ஸ் பற்றிய குறிப்புகள் மஹாபாரதத்தில் காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.11ம் நூற்றாண்டிலிருந்தே இங்கிலாந்து மக்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுகிற வழக்கம் இருந்திருக்கிறது. அதன்பிறகு, சீனர்கள் ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பினார்கள். இன்று அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் ஓட்ஸின் செல்வாக்கு பரந்து விரிந்திருக்கிறது. இவர்கள் எல்லோரையும் விட ஓட்ஸ் பயன்படுத்துவதில் சுவிட்சர்லாந்து மக்களே முதலிடம் வகிக்கிறார்கள்.

  அதிகம் வேலை வைக்காமல் எளிதாக செய்துவிட முடியும் என்பதால் காலை உணவுக்கு பலரின் சாய்ஸ் ஓட்ஸ்தான். ஓட்ஸ் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வைட்டமின் இ, துத்தநாகம், நார்ச்சத்து, செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீஸ், புரதம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், பருமன் போன்ற நோய்களை கட்டுப்படுத்திக் குறைக்க முடியும் என்பதும் ஆராய்ச்சியின் முடிவுகளாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  ஓட்ஸில் ஓல்டு ஃபேஷண்டு ரோல்டு மற்றும் ஸ்டீல் கட் (ஐரீஷ் அல்லது ஸ்காட்டிஷ் ஓட்ஸ் என்றும் சொல்வார்கள்) என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டும்தான் ஆரோக்கியமானவை. ஓட்ஸ் நல்லது என்பதற்காக அளவுக்கு மீறியோ, அத்துடன் கண்டதையும் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. இது கொழுப்பை கரைக்கிற ஓர் உணவு அல்ல. ஆனால், இதிலுள்ள லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (அதனால்தான் நீரிழிவுக்காரர்களும் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்) காரணமாகவும் பசி கட்டுப்படுத்தும் தன்மையினாலும் எடை குறைக்க விரும்புவோருக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஓட்ஸ் என்பது கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் கலந்தது என்பதால், இதை எடுத்துக்கொள்ளும் அளவு மிக முக்கியம்.

  பாலுடன் ஓட்ஸ் சேர்த்துக் குடிப்பதனாலும் கால்சியம், புரதம் மற்றும் நல்ல கொழுப்பு கிடைக்கும். அதே நேரத்தில், இனிப்பு சேர்க்கும் போதுதான் எடை கூடுகிறது. ஓட்ஸ் உடன் மோர் கலந்து குடிப்பதால் மட்டுமே எடை குறைந்து விடாது. உடற்பயிற்சியும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மலச்சிக்கலை நீக்கு வது, டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைப்பது, கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என ஓட்ஸ் வேறு சில நல்ல தன்மைகளையும் கொண்டது.

  ஓட்ஸ் என்றாலே கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. ஓட்ஸ் பக்கோடா, ஓட்ஸ் புட்டு, ஓட்ஸ் அல்வா என்று வெரைட்டியாகவும் செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமாவுக்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும், மாவுச்சத்து அல்லாத உணவுப்பொருட்களோடு ஓட்ஸை சேர்த்துக் கொள்ளும்போது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் கிடைக்கிறது என்று மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

  ஓட்ஸா? நவதானியமா?

  ஓட்ஸ் பிரபலமாகிக் கொண்டிருப்பதற்கு இணையாக அதைப் பற்றிய விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.10 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்ஸ் என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது. ஆனால், இன்று ஓட்ஸுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை இந்தியர்கள் செலவழிக்கிறார்கள். உண்மையில் கொதிக்க வைத்துக் குடிக்கும் கஞ்சிதான் அது. பசியை கட்டுப்படுத்துமே தவிர, வேறு எந்த சத்தும் கிடையாது. இந்தியர்களுக்கு ஓட்ஸ் மோகத்தை ஏற்படுத்தும் சர்வதேச வணிக மோசடி இது என்றும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஓட்ஸ் அதிகம் விளைந்தும் அவர்களே அதைப் பயன்படுத்துவதில்லை. இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள்.

  உண்மையில் ஓட்ஸைவிட 4 மடங்கு சத்து கொண்டது நம் கேழ்வரகு. நவதானியங்கள் என்று அழைக்கப்படும் சோளம், கம்பு, தினை, சாமை போன்றவற்றில் இல்லாத சத்துகளே இல்லை. நம் ஊரிலேயே விளைவதால் நவதானியங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாவதால் ஓட்ஸ் மேல் நமக்கு பெரிய கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதுவும் அந்நிய மோகத்தின் ஒரு முகம்தான் என்றும் விமர்சனங்கள் பெருகிக் கொண்டு வருகின்றன. சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? என்று பாடிவிட்டு நவதானியங்களை தேடுவதுதான் சரியான வழியோ!

  Similar Threads:

  Sponsored Links
  sumitra likes this.

 2. #2
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: All About Oats - ஓட்ஸ் : என்ன இருக்கிறது?

  Very good explanation! thank you Sudhavaidhi!

  sudhavaidhi likes this.

 3. #3
  sudhavaidhi's Avatar
  sudhavaidhi is offline Guru's of Penmai
  Real Name
  Sudha
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Muscat
  Posts
  6,171

  Re: All About Oats - ஓட்ஸ் : என்ன இருக்கிறது?

  Quote Originally Posted by sumitra View Post
  Very good explanation! thank you Sudhavaidhi!
  welcum and thanks too Sumitra....


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter