Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By shansun70

வயிற்று வலி தீர! - Natural remedies for stomach pain


Discussions on "வயிற்று வலி தீர! - Natural remedies for stomach pain" in "General Health Problems" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Cool வயிற்று வலி தீர! - Natural remedies for stomach pain

  வயிற்றுவலி வந்தவுடன் சாப்பிட்டால் வலி உடனே நிற்கிறது என்ற விஷயம் சிந்தனைக்குரியது. உங்களுக்கு வயிற்றில் புண் இருப்பதற்கான அறிகுறியை இது வெளிப்படுத்துகிறது. சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் போது புண் சிறுகுடலின் முதல் பகுதியிலோ, நடுப்பகுதியிலோ இருந்தால் இரைப்பையிலிருந்து சிறுகுடலில் நுழையும் போது, இப்புண்ணில் படும்போது, சாப்பிட்ட உடன் நின்ற வலி மறுபடியும் வந்துவிடுகிறது. 18 வயதுக்குட்பட்டவருக்குப் பொதுவாக இந்த உபாதை ஏற்படுவதில்லை. உணவில் கட்டுப்பாடின்றி கண்டபடி தின்று கொண்டிருக்கும் வாலிப வயதினருக்கு அதிகமாய் இந்த உபாதை ஏற்படுகிறது.
  வயிற்றில் வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்பு தேவைப்படுகிறது. எண்ணெய்யும், நெய்யும் நேரடியாகச் சேர்க்க முடியாத நிலையில் கூட பால், தயிர், எள்ளு, தேங்காய் முதலியவற்றைச் சேர்ப்பதால் கிட்டுகிறது. நெய்ப்பின்றிச் செல்லும் உணவு ஜீரணத்திற்குக் கெடுதலே.
  உண்ட உணவின் இறுக்கம் நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்போதுதான் ஜீரணத் திரவங்கள் ஒரே சீராகப் பரவி அவற்றைப் பக்குவப்படுத்தமுடியும். இதற்குப் போதுமான திரவமும், திரவத்தால் கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாவிடில் உணவு ஜீரணமாகாமல் கனத்துக் கல்போலாகி வயிற்றில் வலியை ஏற்படுத்தும். அதனால் உணவைத் தளர்த்த திரவத்தைச் சிறிது சிறிதாக உணவின் தன்மைக்கேற்ப வெதுவெதுப்பாகவோ, குளிர்ந்ததாகவோ நீங்கள் சாப்பிட வேண்டும்.
  வயிற்றில் புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்பது ஒரு தவறான கருத்து. இடைவெளியிருக்கும் வகையில் இரைப்பையை நிரப்புதல் அவசியம். இடைவெளி இல்லாதிருந்தால் நெகிழ்ந்த உணவு கீழ் இறங்காது. காற்று எளிதில் இடம் விட்டு இடம் மாற வாய்ப்பிருந்தால் உணவும் இடம் மாறும். எளிதில் செரிக்கும் உணவும் இடம் மாற இடமில்லாதிருந்தால் தேங்கிப் புளித்து வயிற்றில் புண் ஏற்படுத்திவிடும். அதனால் உணவுக்கேற்றபடி ஜீரணமாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். 1 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஜீரணமாகும் பொருள்கள் உண்டு. அதற்கான அவகாசம் தராமல் மேன்மேலும் உணவு கொள்ள நோய் வருகிறது. ஜீரணத் திரவம் எத்தனை வலிவிற் சிறந்ததாக இருந்தாலும் நேர ஒதுக்கீடு அவசியமாகிறது.
  வயிற்று வலி தீர, கீழ்காணும் வகையில் உணவைச் சாப்பிட முயற்சி செய்யவும்.
  காலை: நெல்பொறி, பாசிப்பயறு, சம்பா கோதுமைக் குருணை வகைக்கு நூறு கிராம், 8 டம்ளர் (சுமார் 2 லிட்டர்)தண்ணீர் விட்டுக் கஞ்சி காய்ச்சி, வடிகட்டி, ஆயுர்வேத மூலிகை மருந்தான விதார்யாதி கிருதம் எனும் நெய்யை 2 ஸ்பூன்(10 மி.லி.) கலந்து இளஞ்சூடாகப் பருகவும்.
  மதியம்: புழுங்கலரிசி சாதம், பூசணிக்காய்ச் சாம்பார், பரங்கிப் பிஞ்சு மோர்க்குழம்பு, அகத்தி(அ) மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ வடகறி நன்கு கடைந்த புளிக்காத மோர்.
  இரவு: கோதுமை மாவில் தயாரித்த சுட்ட சப்பாத்தி. பச்சைக் காய்கறிகள் வேக வைத்த சூப் அல்லது சப்ஜி.
  காலை, மாலை டீ, காபிக்குப் பதிலாகப் பசும்பால் குடிக்கவும். மாதுளம்பழம், வெள்ளரிப்பழம், வாழைப்பழம், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், இனிப்புச் சாத்துக்குடி போன்ற பழங்கள் சாப்பிட நல்லது.
  ஆயுர்வேத மருந்துகள்:
  திராக்ஷாதி கஷாயம் - 3 ஸ்பூன் கஷாயம், 12 ஸ்பூன் கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
  கேப்ஸ்யூல் அப்ரகம் 1 - காலை, இரவு உணவிற்கு 1 மணி நேரம் முன்பாகப் பாலுடன் சாப்பிடவும்.

  Similar Threads:

  Sponsored Links
  sumathisrini likes this.

 2. #2
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,567

  Re: வயிற்று வலி தீர! - Natural remedies for stomach pain

  Thanks for sharing these home remedies to cure stomach pain, very useful.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter