Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்


Discussions on "Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    பரிவு நரம்புகள்

    தண்டுவடத்தின் வெளிக் கொம்புகளில் உள்ள செல் துணுக்குகள், தண்டுவடத்திலிருந்து, அதனதன் தண்டுவட நரம்புகளாக வெளிவந்து, அவற்றிலிருந்து பிரிந்து, பரிவு நரம்புத் தண்டை அடைகின்றன.

    வலது இடது என்றுள்ள 1 ஜோடி பரிவு நரம்புத் தண்டு, முதுகெலும்புத் தண்டின் இரண்டு பக்கத்திலும் அமைந்துள்ளது. அதில் நரம்பு முடிச்சுகளும், அவற்றை இணைக்கும் கிளைகளும் காணப்படுகின்றன.

    பரிவு நரம்புத் தண்டின் பணிகள், கழுத்துப் பகுதியின், மார்புப் பகுதியின் மற்றும் வயிற்றுப் பகுதியின் முக்கிய இயக்கங்களில் பங்கு பெறுவதாக அமைந்துள்ளன.

    பரிவு நரம்புகள் கழுத்துப் பகுதியிலுள்ள கழுத்து, தலைப்பகுதியின் உள்ளுறுப்புக்களும், நரம்பூட்டம் அளிக்கின்றன. அதாவது முன்தொண்டை, உமிழ் நீர்ச் சுரப்பிகள், கண்ணீர்ச் சுரப்பிகள், கண்பார்வையை விரிவடைச் செய்யும் தசைகள் யாவும் ஊட்டம் பெறுகின்றன.

    மார்புப் பகுதிகளுக்கு வருகிற பரிவு நரம்புகள், மார்பு தமணி, உணவுக் குழல், மூச்சுக் கிளைக் குழல், நுரையீரல் ஆகியவற்றிற்கு கிளைகளை அனுப்புகின்றன.

    துணைப்பிரிவு பரிவு நரம்புகள்
    மூளைத் தண்டிலும், தண்டுவடத் திரிகப் பிரிவிலும் இவை காணப்படுகின்றன. பரிவு நரம்புகளும், உள்ளுறுப்புக்களில் பலவிதமான ஆதிக்கம் செலுத்திக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டும் எதிர்மாறான வேலைகளைச் செய்கின்றன.
    உதாரணமாக, பரிவு நரம்புகள் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பாருங்கள். உமிழ்நீர், கண்ணீர் சுரப்பிகளின் சுரப்பு குறைகிறது. சிறிய தமனிகளும் சிரைகளும் சுருங்குகின்றன. இருதயத் துடிப்பு விகிதம் கூடுகிறது. குடலின் அலைகின்ற அசைவு தாமதமாகின்றது.

    இரைப்பையின் சுரப்புகள் குறைகின்றன. மூச்சுக் கிளைத் தசைகள் தளர்கின்றன. உடலில் உஷ்ண இழப்பு குறைகிறது.
    ஆனால், துணைப்பிரிவு நரம்புப் பகுதியின் வேலையைப் பாருங்கள். கண்பார்வை சுருங்குகிறது. உமிழ்நீர், மற்றும் கண்ணீர் சுரப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு விகிதம் குறைகிறது. குடலின் அலைகின்ற அசைவு கூடுதலாகிறது. இரைப்பைச் சுரப்பு தூண்டப்படுகிறது. மூச்சுக்கிளைத் தசைகள் சுருங்குகின்றன. உடலில் உஷ்ண இழப்பு அதிகரிக்கிறது.

    இந்த இரு பிரிவு நரம்புகளும் பல்வேறு உறுப்புக்கள்மீது எதிரெதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலும், எல்லாம் நன்மையாகவே முடிகின்றன.

    அதாவது, உறுப்புக்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பெற்று, ஒரே அமைப்பாக மாறி, ஒழுங்காகவும் சிறப்பாகவும் பணியாற்றும் செழுமை ஏற்பட்டு விடுகிறது.

    அதாவது, இதயத்தின் வேலை, ஜீரண மண்டல சுரப்பிகள் இயக்கம், செல்களின் வளர்சிதை மாற்ற வேலைகள் எல்லாம் சீராகவும், ஜோராகவும் நடக்க உதவுகின்றன.


    Sponsored Links

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    நியூரோன்

    நரம்பு மண்டலத்தின், அடிப்படையான ஆதார சக்தியாக விளங்குபவை நியூரோன்களாகும்.
    நியூரோன்கள் என்பது ஒரு நரம்பு செல்லும், அதன் கிளைகளுமாகும்.

    நரம்பு செல்கள் எல்லாம் அமைப்பிலும், அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டவைகளாகவே விளங்குகின்றன.
    ஒரு நியூரோன் மூன்று பாகமாகப் பிரிந்திருக்கிறது.

    1. நியூக்கிலியஸ்
    2. ஆக்ஸன்
    3. டென்ட்ரைட்ஸ்

    ஆக்ஸான்கள் நீளமானதாகவும், மெல்லியதாகவும் உள்ள அமைப்பைப் பெற்று, செல்கள் பகுதியிலிருந்து உணர்வுகளைக் கடத்துகின்றன. டென்ரைட்டுகள் பொதுவாகக் குட்டையாகவும், கிளை விட்டும் இருந்தும், செல்களுக்கு உணர்வுகளைக் கடத்துகின்றன


  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    நரம்புத் திசு

    நரம்பு செல்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து கொண்டு, நரம்புத் திசுக்கள் என்ற அமைப்பை உண்டாக்கி விடுகின்றன.
    ஒரு நரம்பு செல்லிருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு, இந்த உணர்வுகள் கடத்தப்படுகின்றன.
    இந்த வேகம் மின்சாரம் செல்கின்ற வேகத்தைக் காட்டிலும், வேகம் குறைவாகவே விளங்குகிறது.
    நரம்புத்திசு வழியாகக் கிளர்த்தல் கடத்தப்படுவதுடன், அதன் வேகம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். மனிதனில் இந்தக் கிளர்த்தல், நொடிக்கு 90 மீட்டர் வேகம் எனக் கூறுவர்.
    நரம்புத் திசுவின் செயல் தன்மையை, கடத்தும் தன்மை என்றும் கூறுவர். உணர்ச்சிகளைக் கடத்துகின்ற ஆற்றல் நிறைவாக இருக்க வேண்டுமென்றால், முழுமையாக செயல்பட வேண்டும். இதன் முழுமை சேதாரமடைந்தால், பாதிக்கப்பட்ட நரம்பு, சரியாகப் பணிபுரிய முடியாது.
    இயக்க நரம்புகள் சேதமடைந்து போனால், இந்த நரம்புகள் இணையப் பெற்றிருக்கும் தசைகளின் பகுதிகள், சக்தியற்றதாகி விடுகின்றன. உணர்வு நரம்புகள் சேதமடைந்து போனால் தோல் பாதிக்கப்படுகிறது. தோலின் தொடு உணர்வும் பாதிக்கப்பட்டு, சுரணையற்றுப் போகிறது.


  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இரத்த ஓட்டம்

    குருதிச் சுற்றோட்டத் தொகுதி

    சிறிய விலங்குகளில் உடல் மேற்பரப்பு கனவளவு விகிதம் உயர்வு. பதார்த்தங்கள் கொண்டு செல்லப்பட வேண்டிய தூரம் குறைவு எனவே பரவல் முறையிலான பதார்த்தங்களின் பரிமாற்றம் போதுமானது.
    கூர்ப்பின் போது விலங்குகளின் உடற் பருமன், சிக்கற்தன்மை, வினைத்திறன் என்பன அதிகரிக்கின்றது. இதனால் பரவல் முறையிலான கொண்டு செல்லல் போதியதாக இருக்கவில்லை. எனவே வினைத்திறன் உடைய சுற்றோட்டத்தொகுதி அவசியமாகியது.
    சுற்றோட்டத் தொகுதியை முதல் முதலில் விருத்தி செய்த கணம் அனெலிடா ஆகும். அனெலிடாக்களில் மூடிய ஒற்றைச் சுற்றோட்டம் காணப்படுகின்றது.
    மூடிய சுற்றோட்டத்தில் குருதி இதயத்தின் செயற்பட்டால் குழாய்களின் ஊடாக செலுத்தப்படுகின்றது. இங்கு நாடி, மயிர்துளைக்குழாய்கள், நாளம் ஆகிய குருதிக்கலன்கள் காணப்படுகின்றன. இதில் குருதியுடன் அங்கங்கள் நேரடியான தொடர்பை பெறுவதில்லை.
    மூடிய சுற்றோட்டத்தில் இதயத்தில் இருந்து செலுத்தப்படும் குருதி நாடிகள், மயிர்துளைக்குழாய்கள், நாளங்கள் வழியாகச் செலுத்தப்படுகின்றது
    மண்புழுவில் 4 சோடி பக்க இதயங்கள் காணப்படுகின்றன. இவை 7 ஆம் 9 ஆம் 12 ஆம் 13 வாது உடற்துண்டம் வரை ஒவ்வொரு உடற் துண்டத்திலும் ஒரு சோடியகக் காணப்படுகின்றன. மூடிய சுற்றோட்டம் அனெலிடாக்களில் காணப்படுகின்றது. மொலஸ்காக்களில் செபலோப்பொடா என்னும் வகுப்பிலும் மூடிய சுற்றோட்டம் உண்டு.


  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    திறந்த சுற்றோட்டம்

    இதயத்தில் இருந்து நாடிகள் வழிய செலுத்தப்படும் குருதி குருதிக்குழியுள் விடப்பட்டு பின்னர் வாயுருக்களின் ஊடாக இதயத்தின் உள்ளே செல்லும் சுற்றோட்டம் திறந்த சுற்றோட்டம் எனப்படும். .

    எல்லா ஆத்திரோப்போடாக்களிலும் சில மொலஸ்காக்களிலும் திறந்த குருதிச் சுற்றோட்டம் காணப்படுகின்றது.
    பூச்சிகளின் சுற்றோட்டத்தொகுதிக்கு, உதாரணமாக கரப்பானை கருதினால் இங்கு இதயம் நடு முதுகுப்புறமாக முதுகுப்பட்டைக்கு உடனடிக் கீழாக நீளமான குழாயுருவான அமைப்பாக உள்ளது. இது 13 அறைகள் உடையது. ஒவ்வொரு அறையிலும் பக்கப்பாடான இரு வாயுருக்கள் உள்ளன. இவ்விதயம் முற்பக்க முளையில் மட்டும் குருதிக்கலனுடன் இணைந்து காணப்படும்.
    திறந்த சுற்றோட்டத்தில் குருதி, குருதிக்குழி வழியாகச் செல்கின்றது. அங்கங்கள் குருதியில் அமிழ்த்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பதார்த்தங்களின் பரிமாற்றம் நேரடியாக நடைபெறும்.

    மூடிய சுற்றோட்டம், “ஒற்றைச் சுற்றோட்டம்”, “இரட்டைச் சுற்றோட்டம்” என இரு வகைப்படும்


  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    ஒற்றைச் சுற்றோட்டம்

    குருதி தனது முழுச் சுற்றோட்டத்தின் போது ஒரு தடவை மட்டும் இதயத்தின் ஊடாகச் செலுத்தல் ஒற்றை சுற்றோட்டம் எனப்படும். அனெலிடாக்களிலும் மீன்களிலும் இவ்வாறான மூடிய ஒற்றைச் சுற்றோட்டம் காணப்படுகின்றது.

    இரட்டைச்சுற்றோட்டம்
    குருதி உடலினூடாக ஓர் முழுமையான சுற்றோட்டத்தின் போது இரண்டு தடவைகள் இதயத்தின் ஊடாகச் செல்லும் சுற்றோட்டம் இரட்டைச் சுற்றோட்டம் எனப்படும்.
    இங்கு முதலாவது சுற்றோட்டத்தில் குருதி இதயத்தில் இருந்து நுரையீரல்களிற்கு செலுத்தப்படுகின்றது. இது நுரையீரல் சுற்றோட்டம் எனப்படும். இரண்டாவது சுற்றோட்டத்தில் இதயத்தில் இருந்து குருதி உடலின் ஏனைய பாகங்களிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படும்.
    அம்பிபியாக்களில் இரட்டை சுற்றோட்டம் ஆரம்பிக்கின்றது. ரெப்ரீலியா, ஆவேஸ், மமேலியாக்களிலும் இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் காணப்படுகின்றது.
    அம்பிபியாக்களின் இதயம் மூன்று அறைகள் உடையது. இதில் ஒரு இதயவறையும் இரண்டு சோணையறைகளும் காணப்படுகின்றன. இதயவறை பிரிசுவரினால் பிரிக்கப்படாது இருப்பதால் ஒட்சிசன் செறிவு கூடிய குருதியும் ஒட்சிசன் செறிவு குறைந்த குருதியும் கலப்பு அடைகின்றன. இதனால் இங்கு நிறைவற்ற இரட்டை சுற்றோட்டம் காணப்படுகின்றது.
    முதலை தவிர்ந்த ஏனைய ரெப்ரீலியாக்களில் இதயம் மூன்று அறைகள் உடையது. எனவே பூரணமற்ற இரட்டை சுற்றோட்டம் காணப்படுகின்றது. எனினும் ரெப்ரீலியாக்களில் இதயவறை பிரிசுவர் ஒன்றினால் பகுதியாக பிரிக்கபட்டுள்ளது.
    ஆவேஸிலும் மமெலியாக்களிலும் இதயவறைகளும் சோணையறைகளும் முற்றாக பிரிசுவரினால் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே இதயம் நான்கு அறைகளையுடையது. இங்கு இதய அறைகளில் ஒட்சிசன் செறிவு கூடிய குருதியும் ஒட்சிசன் செறிவு குறைந்த குருதியும் கலப்பு அடைவதில்லை. எனவே இவற்றில் பூரணமான இரட்டை சுற்றோட்டத்தினால் உடல் பகுதிகள் ஒட்சிசன் செறிவு கூடிய குருதியை உயர் அமுக்கத்தில் பெற முடிகின்றது.
    சுற்றோட்ட தொகுதி ஒன்றில் கடத்தும் ஊடகம் ஒன்று காணப்படுகின்றது. அவ்வூடகத்தை செலுத்துவதற்கு பம்பும் தன்மையுள்ள இதயமும் குருதிக்குழாய்களும் காணப்படுகின்றன.


  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    மனிதனில் சுற்றோட்டத்தொகுதியின் தொழில்கள்
    மனிதனின் சுற்றோட்டத் தொகுதியின் அடிப்படையான தொழில்கள்.
    • பதார்த்தங்களை கொண்டு செல்லல்
    • சீராக்கம் செய்தல்
    • நுண்ணங்கிகளிடம் இருந்து பாதுகாப்பை வழங்குதல்
    • சமிபாடு அடைந்து அகத்துரிஞ்சபட்ட உணவின் கூறுகளான குளுக்கோஸ், அமினோஅமிலம், கொழுப்பமிலங்கள், விற்றமின்கள், கனிப்பொருள், அயன்கள் காவிச் செல்லப்படுகின்றன.
    • அனுசேபக் கழிவுகளான யூரியா, யூரிக்கமிலம் என்பன காவிச் செல்லப்படுகின்றன.
    • ஓமோன்கள் காவிச் செல்லப்படுகின்றன.
    • ஈரலில் பிறப்பிக்கப்படும் வெப்பத்தை உடல் பகுதிகளிற்கு காவுகின்றது. இதன் மூலம் வெப்பநிலை சீராக்கத்தில் உதவுகிறது
    • உடலின் pH சீராக்கத்தில் உதவுகின்றது.
    • குருதியில் உள்ள நடுநிலை நாடிகள் ஒற்றைக் குழியங்கள் என்பன பற்றீரியக்களை விழுங்கி அழிப்பதன் மூலம் தனித்திறன் அற்ற நிர்ப்பீடனத்தை ஏற்படுத்துகின்றன
    • நிணநீர் குழியங்கள் பிற பொருள் எதிரிகளைச் சுரப்பதன் மூலம் தனித்திறன் உடைய நோய் எதிர்ப்புதிறன் விருத்தி அடைவதற்குச் காரணமாக உள்ளன.
    • காயம் அடைந்த பகுதிகளில் குருதி உடைந்து குருதி இழக்கப்படாது தடுப்பதிலும், நோயாக்கிகள் உள்ளே செல்லுவதை தடுப்பதிலும் உதவுகிறது.
    • முள்ளந்தண்டு விலங்குகளின் சுற்றோட்டதொகுதி பின்வரும் அடிப்படை கட்டமைப்பு நிலையை உடையது.
    • வயிற்றுப்புற தசைச் செறிவான இதயம்.
    • வயிற்றுபுறப் பெருநாடி
    • வயிற்றுபுறப் பெருநாடியில் இருந்து எழும் ஆறு பக்கப் பெருநாடி விற்கள் இவை இணைவதால் தோன்றும் தனியொரு முதுகுப்புற பெருநாடி ஆகியவற்றை உடையது.

    மனிதனில் இவற்றுள் சில பக்கப் பெருநாடிகள் இழக்கப்பட்டுள்ளன. 1ம் 2ம் பெருநாடி விற்கள் இழக்கப்பட்டுள்ளன. 3வது பக்கப் பெருநாடிவிற்கள் சிரசு நாடிகளாக விருத்தியடைந்துள்ளன. 4வது இடது பக்கப் பெருநாடி வில்லில் இருந்து தொகுதிவில் தோன்றியுள்ளது. 6வது பக்கப் பெருநாடி விற்களில் இருந்து சுவாசவில் விருத்தியடைந்துள்ளது


  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    தொழிற்பாடு

    குருதிச் சுற்றோட்டத்தின் பாகங்களும் தொழிற்பாடுகளும்

    மனித இதயம்


    நெஞ்சறைக்குழியில் சுவாசப் பைகளிற்கிடையில் காணப்படுகின்ற இடைக்குற்றேவலி என்னும் வெளியில் உடலின் நடுகோட்டிலிருந்து இடதுபுறம் சாய்வான நிலையில் இதயம் அமைந்துள்ளது.
    இதயம் இதயச் சுற்று மென்சவ்வினால் மூடப்பட்டுள்ளது. இது கூம்பு வடிவமானது. இதயச்சுற்று மென்சவ்வின் மேலணியால் இதயசுற்றுப் பாய்பொருள் சுரக்கப்படுகின்றது. இப்பாய் பொருள் தொற்றுகை, உலர்தலில் இருந்து இதயத்தை பாதுகாக்கின்றது.
    இதயச்சுவர் மூன்று படைகளால் ஆனது. வெளிப்புறமாக இதயவறை மேற்சவ்வு உண்டு. நடுவில் இதய தசைப்படை காணப்படுகின்றது. இது தடித்தபடை. இதயச் சுவரின் 3/4 பங்கினை அமைக்கின்றது. இது இதயத் தசைகளால் ஆக்கப்பட்டது. உள்ளாக இதயவறை அகச்சவ்வு உண்டு. இது மெல்லியது. மென்சவ்வு போன்றது.
    மனித இதயம் நான்கு அறைகள் உடையது. இரு சோணை அறைகளும் இரு இதய அறைகளும் காணப்படுகின்றன.சோணை அறைகள் இதய அறைகளிற்கு மேலாக அமைந்துள்ளன.
    பிரிசுவர் ஒன்றினால் இதயம் வலது இடது பக்கமாக இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு பாதியிலும் ஒரு சோணை அறையும் ஒரு இதய அறையும் உள்ளது. சோணையறைகளின் சுவர்கள் இதயவறையின் சுவர்களை விட மெல்லியவை.
    வலது இதய அறையை விட இடது இதய அறையின் சுவர் அதிக தடிப்பு உடையது.
    இடது சோணையறைக்கும் இடது இதயவறைக்குமிடையில் இரு கூர் வால்வு உண்டு.
    வலது சோணை அறைக்கும் வலது இதய அறைக்குமிடையில் முக்கூர்வால்வு உள்ளது.
    இதயவறைகளின் உட்புறமான சுவரில் கூம்புருவான நீட்டங்களாக சிம்பித்தசைகள் காணப்படுகின்றன.
    சிம்பித்தசைகள் இதய நாண்களினால் சோணை இதயவறை வால்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
    வலது இதயவறையில் இருந்து சுவாச நாடி எழுகின்றது. இடது இதயவறையில் இருந்து பெருநாடி எழுகின்றது.
    சுவாச நாடியினதும் பெருநாடியினதும் ஆரம்பிக்கும் பகுதியில் அரைமதிவால்வுகள் உள்ளன.
    இவை மூன்றும் கிண்ணங்கள் போன்ற அமைப்புகள் வலது சோணை அறையில் முற்பெருநாளமும் பிற்பெருநாளமும் திறப்பதனால் இரு துவாரங்கள் காணப்படும்.
    இடது சோணை அறையில் நான்கு சுவாசப்பை நாளங்களும் தனித்தனியாக நான்கு துளைகள் வழியாகத் திறக்கின்றன. இதயத்தின் மேற்பகுதியில் முடியுருநாடிகள் காணப்படுகின்றன


  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இதய வட்டம்

    ஒரு பூரணமான இதயவடிப்பின்போது இதயத்தில் தொடராக நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும் இதய வட்டம் எனப்படும். இதய வட்டத்தில் சோணையறைகளினதும் இதயவறைகளினதும் சுருக்கத் தளர்வுகள் இடம்பெறுகின்றன.
    இதயவட்டமானது சோணையறைகளின் சுருக்கம். இதயவறைகளின் சுருக்கம், முற்றான இதயத் தளர்வு என்னும் மூன்று படிநிலைகளை உடையது. ஒரு இதய வட்டம் நிகழ்வதற்கு 0.8 செக்கன்கள் எடுக்கின்றது.
    சோணை அறைச்சுருக்கம்
    • சோணை அறைகளின் சுருக்கத்திற்கான தூண்டல் குடாச் சோணைக் கணுவினால் (saகணு) வழங்கப்படுகின்றது.
    குடாச் சோணைக்கணு விசேடமாகத் திரிபடைந்த இதயத் தசைக் கலங்களால் ஆக்கப்பட்டது. இது வலது சோணையறையின் சுவரில் முற்பெருநாளம் திறக்கும் இடத்திற்கு அருகாக அமைந்துள்ளது. இதுவே இதய விரைவு வீதமக்கி ஆகும்.
    • இங்கு பிறப்பிக்கப்பட்ட மின் அழுத்த தூண்டல் சோணை அறைகளின் சுவரின் வழியே பரவுகின்றது.
    • வலது சோணை அறையில் முற்பெரு, பிற்பெரு நாளங்கள் வழியாக வழங்கப்பட்ட குருதி விடப்பட்டிருக்கும்.
    • இடது சோணையறையில் நான்கு சுவாசப்பை நாளங்கள் வழியாக விடப்பட்ட குருதி காணப்படும்.
    • இரு சோணை அறைகளும் ஒரே வேளையில் சுருக்கம் அடைகின்றன.
    • சோணையறைகளுக்கும் இதயவறைகளுக்கும் இடைப்பட்ட வால்வு திறக்கின்றது.
    • வலது சோணையறையில் இருந்து குருதி வலது இதய அறைக்குள் விடப்படுகின்றது.
    • இடது சோணையறையில் இருந்து குருதி இடது இதயவறைக்குள் விடப்படுகின்றது.
    • இதற்கு எடுக்கும் காலம் ௦.1 செக்கன்கள் ஆகும்.


  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இதயவறையின் சுருக்கம்

    • சோணையறைகளின் சுவரின் வழியாகப் பரவி வரும் அழுத்தம் AV கணுக்களால் ஏற்கப்படுகின்றது.
    • இது இதயவறைகளிட்கிடைப்பட்ட பிரிசுவர் ஊடாக His இன் கட்டுகள் வழியாகக் காவிச்செல்லப்படுகின்றது. இங்கிருந்து Purkinje யின் நார்கள் வழியாக இதயவறைகளின் சுவர் வழியாகப் பரவுகின்றது.
    • இதனால் இரு இதயவறைகளும் ஒரே காலத்தில் சுருக்கம் அடைகின்றன.
    • அரைமதி வால்வுகள் திறக்கின்றன.
    • சோணையறை இதயவரைகளிடையிலான வால்வுகள் (AV வால்வுகள்) மூடுகின்றன.
    • வலது இதயவறையில் உள்ள குருதி சுவாச நாடியுள் செலுத்தப்படுகின்றது.
    • இடது இதயவறையுள் இருந்து குருதி தொகுதி நாடியுள் செலுத்தப்படுகின்றது
    • இதற்கு எடுக்கும் காலம் 0.3 செக்கன்கள் ஆகும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter