Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்


Discussions on "Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்" in "General Health Problems" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    முற்றான இதயத் தளர்வு.

    • சோணை அறைகளும் இதயவறைகளும் ஒரே வேளையில் தளர்வு அடைகின்றன.
    • முற்பெரு பிற்பெரு நாளங்கள் வழியாக கொண்டு வரப்பட்ட குருதி வலது சோணையறையுள் விடப்படுகின்றது. சுவாச நாளங்கள் வழியாகக் கொண்டு வரப்பட்ட குருதி இடது சோணை அறையுள் விடப்படுகின்றது.
    • அரைமதிவால்வுகள் மூடுகின்றன.
    • இதற்கு 0.4 செக்கன்கள் எடுக்கின்றது.
    சராசரி மனிதன் இதயம் நிமிடம் ஒன்றிற்கு 72 தடவைகள் துடிக்கின்றது.
    இதயவறைகளின் சுருக்கம் ஏற்படும் பொழுது இருகூர், முக்கூர் வால்வுகள் மூடுவதனால் “லப்” (lub) என்னும் முதலாவது இதய ஒலி எழுகின்றது.இதயவறைகளின் தளர்வு நிகழும் போது அரைமதி வால்வுகள் மூடுகின்றன. இதனால் “டப்” (dub) என்னும் இரண்டாவது ஒலி எழுகின்றது.


    Sponsored Links

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இதய அடிப்பின் கட்டுப்பாடு

    • இதய அடிப்பு வீதத்தை கட்டுபடுத்தும் இதயக் கலன் நிலையம் நீள்வளையமையவிழையத்தில் உள்ளது. இதில் இதய அடிப்பினை விரைவுபடுத்தும் பகுதியும் இதய அடிப்பை நிரோதிக்கும் பகுதியும் உண்டு.

    குருதி அமுக்கத்தை அறியும் அமுக்கம் வாங்கிகள் பெருநாடியின் சுவரிலும், சிரசுநாடிக்குடாவின் சுவரிலும் உள்ளன.
    இயல்பு நிலையை விட அதிக அமுக்கத்தில் குருதி செல்லும் போது இவ்வாங்கிகள் தூண்டப்பட்டு நரம்பு வழியாக இதய கலன் நிலையத்திற்கு செய்தி கணத்தாக்கமாக அனுப்பப்படுகின்றது. அங்கு இதயக்கலன் நிலையத்தின் நிரோதிப்பு பகுதி தூண்டப்பட்டு பரபரிவு நரம்பு வழியாக அதாவது அலையு நரம்பு வழியாக விடப்படும். அசற்றயில்கோலினால் இதய அடிப்பு வீதம் குறைக்கப்படுகின்றது. குருதிக் குழாய்களின் சுருக்கம் குறைக்கப்படுகின்றது. இதனால் குருதி அமுக்கம் குறைக்கப்பட்டு இயல்பு நிலையை அடைகின்றது. எதிர் பின்னூட்டல் முறையில் அமுக்க வாங்கிகளின் தூண்டல் தடுக்கப்படுகின்றது.
    இவ்வாறே இயல்பு நிலையை விட குருதி அமுக்கம் குறையும் போது ஏற்படும் தூண்டலால் இதய விரைவுப்பகுதி தூண்டப்பட்டு பரிவு நரம்புகள் வழியாக நோர் அதிரினலினை விடிவிக்கின்றது. இதனால் இதய அடிப்பு வீதம் அதிகரிக்கின்றது. குருதிக் குழாய்களின் சுருக்கம் தூண்டப்படுகின்றது. இதன் விளைவாக குருதி அமுக்கம் அதிகரிக்கின்றது.
    பெருநாடியின் சுவரிலும் சிரசுநாடிக்குடாவிலும் காணப்படும் வாங்கிகள் குருதி அமுக்கம் மாற்றங்களையும் குருதியில் கரைந்திருக்கும் CO2 வின் செறிவையும் குருதியில் உள்ள O2 இன் செறிவின் மாற்றங்களாலும் தூண்டபடக்கூடியவை.
    இதய அடிப்பின் மீது ஒமோன்களும் தாக்கங்களைக் காட்டுகின்றன. இவற்றில் ஒன்று அதிரினலீன் (Adrenaline) மற்றையது தையிரொட்சின் (Thyroxine) அதிரினலீன் இதய அடிப்பை அதிகரிக்கச் செய்கின்றது. உடல் அதிர்ச்சி தகைப்பிற்கு உட்படும்போது அதிரினலீன் குருதியில் விடப்படுகின்றது. இதனால் இதய அடிப்பு வீதம் அதிகரிக்கின்றது.தையிரொட்சினாலும் இதய அடிப்பு வீதம் அதிகரிக்கின்றது.


  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    குருதி அமுக்கம்

    இடது இதயவறை சுருங்கும்போது குருதி பெருநாடியுள் செலுத்தப்படும் அமுக்கம் இதயச் சுருக்க அமுக்கம் சுருங்கலமுக்கம் எனப்படும் இது சாதாரணமாக 120 mm Hg.இதயத்தின் முற்றான தளர்வு ஏற்படும்போது பெருநாடியுள் காணப்படும் அமுக்கம் இதயத்தளர்வு அமுக்கம் விரிவமுக்கம் இது சாதாரணமாக 80 mm Hg ஆகும்.எனவே ஆரோக்கியமான மனிதன் குருதி அமுக்கத்தை 120/80 mm Hg எனக் குறிப்பிடலாம்.
    குருதி அமுக்கம் குருதியமுக்க மனோமானி என்னும் கருவியினால் அளக்கப்படுகின்றது. உயர் குருதி அமுக்கம் என்னும் நிலை பொதுவாக 140/90 mmHg என்னும் நிலையில் ஏற்படும். இது 160/95 mmHg இலும் அதிகரிக்கும்போது தீமையானது


  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    குருதி அமுக்கம் தங்கியிருக்கும் காரணிகள்.

    1. வயது வயதுடன் குருதி அமுக்கத்தின் இயல்பு நிலை வீச்சமும் அதிகரித்துச் செல்லும் நாடிகளின் சுவர் தடிப்படைவதால் மீள் தன்மை குறைகின்றது.
    2. பால்
    3. நாள் ஒன்றின் வேளை
    4. ஒருவரின் தொழிற்பாட்டு நிலை

    குருதி அமுக்கத்தை தீர்மானிக்கும் காரணிகள்
    1. இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் கனவளவு
    2. புன்நாடிகளின் சுருக்க விரிவுகள்
    3. நாடிச்சுவரின் மீள் தன்மை
    4. நாளங்கள் வழியாக மீண்டும் இதயத்தை வந்தடையும் குருதியின் கனவளவு.
    பெண்களின் குருதியில் ஈஸ்டிரோஜென் என்னும் ஓமோன் காணப்படுவதால் முடியுறு சார்ந்த இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.
    நாடிச் சுவர்களின் கொலஸ்ரோல் படிவதனால் முடியுரு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது. உணவில் குறையடர்த்தியுள்ள இலிப்போபுரதம் ldl காணப்படுவதாலும் கொலோஸ்ரோல் படிவடையும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எனவே ldl குறைந்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
    புகைத்தல் நாடிச்சுவர்களை கடினமடையச் செய்வதன் மூலம் ஆத்தெரோஸ்லெரோஸிஸ் ஏற்படச் செய்கின்றது .
    ஆத்தெரோஸ்லெரோஸிஸ் இன் போது நாடிகளில் கொழுப்பு பதார்த்தங்கள் படிந்தும், கொலஸ்ரோல், நார் என்பன படிந்தும் அதிக அளவு அழுத்தமான தசைகள் விருத்தியடைவதலும் நாடிகளின் உள்ளிடம் குறைக்கப்பட்டு குருதி ஓட்டம் குறைவடைகின்றது. மேலும் இதனால் குருதி உறைவு ஏற்படும் அடைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தும்


  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இது ஏற்படுவது:

    1. பரம்பரை காரணிகள்
    2. புகைக்கும் பழக்கம்
    3. உயர் குருதி அமுக்கம் இருத்தல்
    4. குருதியில் உயர் கொலஸ்ரோல் மட்டம் இருத்தல் என்பனவற்றில் தங்கியுள்ளது.
    ஆத்தெரோஸ்லெரோஸிஸ் என்பது நாடிகளின் சுவர்களின் கல்சியம் படிவதால் ஏற்படுகின்றது. இதனால் நாடிகள் ஊடாகச் செல்லும் குருதியின் அளவு குறைவதுடன் நாடிச்சுவரின் மீள் தன்மை குறைக்கப்படுகின்றது.
    பெருநாடிகளின் அடியில் இருந்து எழுகின்ற வலது இடது முடியுரு நாடிகள் இதயத்தசைகளிற்கு குருதியை வழங்கி முடியுருக்குடாக்கள் வழியாக சேகரிக்கப்பட்ட குருதி வலது சோணை அறையுள் விடப்படுகின்றது. இது முடியுருச் சுற்றோட்டம் எனப்படும்.
    முடியுரு நாடிகளின் குருதி உறைவதனால் அதன் ஊடாகக் குருதி செல்வது தடைப்பட்டு இதயத்தசைகளிற்கு குருதி வழங்கபடுவது தடைப்படுகின்றது.
    இதன் காரணமாக படிப்படியாக குருதி விநியோகம் கிடைக்கப்பெறாத பகுதிகளில் இதயத் தசைக்கலங்கள் இறக்கின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படுகின்றது. இதன் ஆரம்ப அறிகுறி அஞ்சைனா என்னும் மார்பு வலியாகும்.


  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    நோய்ச் சிகிச்சை

    குருதிச்சுற்றோட்டத் தொகுதி தொடர்பான நோய்கள்

    கொலஸ்டரோல்


    இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்தஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொ¦ஐஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.
    ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது. இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவை லைப்போ புரதம் (Lipoproteins) எனப்படுகின்றன.


  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    வரிக்கோஸ்

    இவை பொதுவாக முழங்காலுக்குக் கீழே பிற்புறமாக கெண்டைப் பகுதியில் ஏற்படும். தொடையின் உட்புறமாகவும் தோன்றலாம். தோலின் கீழாக தடித்து சுருண்டு வீங்கி, நீல நிறத்தில் அல்லது கரு நீல நிறத்தில் தோன்றும் இவை நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக இயங்காததாலேயே ஏற்படுகின்றன. நாளங்களில் உள்ள வால்வுகள் ஒரு வழிப் பாதை போலச் செயற்படுகின்றன.
    அதாவது கீழிருந்து மேலாக இருதயத்தை நோக்கி இரத்தத்தைப் பாய அனுமதிக்கின்றன. ஆனால் மேலிருந்து கீழ் வர அனுமதிக்கமாட்டா. ஆயினும் இந்த வால்வுகள் சரியானபடி இயங்க முடியாதபோது இரத்தம் வழமைபோலப் பாய முடியாமல், நாளங்களில் தேங்கி வீக்கமடையும். இப்படித்தான் நாளப் புடைப்புக்கள் தோன்றுகின்றன.
    சாதாரணமாக நாளப் புடைப்புக்கள் எந்தவித துன்பத்தையும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோன்றும் என்ற உணர்வுதான் பெரும்பாலும் சிகிச்சையை நாட வைக்கும்.
    ஆயினும் சற்று அதிகமானால் கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சற்று வலிக்கவும் செய்யலாம். கெண்டைக் காலில் தசைப் பிடிப்பும் ஏற்படுவதுண்டு. நீண்ட காலம் தொடர்ந்தால் கால்களின் கீழ்ப் பகுதிகளில் வீக்கமடைந்த நாளங்களைச் சுற்றி தோல் கருமையடைந்து அரிப்பும் ஏற்படக் கூடும். கால் வீக்கமும் ஏற்படக் கூடும். மாறாத புண்களும் தோன்றலாம். இந்த நாளப் புடைப்புகளில் காயப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பித்தால் உங்களால் நிறுத்துவது கஸ்டம்.


  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    சிகிச்சை முறைகள்

    பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. நோயின் தன்மைக்கும், நோயாளியின் தேவைகளுக்கும் ஏற்ப இவை மாறுபடும்.
    மிக இலகுவானது ஊசி மூலம் நோயுற்ற நாளங்களை மூடச் செய்வதாகும். நோயாளி நிற்க வைத்து நாளத்தினுள் ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். மருந்து அவ்விடத்தில் உள்ள நோயுற்ற நாளங்களை கட்டிபடச் செய்து அடைத்து மூடும்.
    மூடச் செய்வது என்று சொன்னவுடன் பயந்து விடாதீர்கள். புடைத்த நாளங்களை மூடச் செய்வதால் இரத்தச் சுற்றோற்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. அருகில் உள்ள சிறு நாளங்கள் ஊடாக அது திசை திருப்பப்பட்டு இடையூறின்றித் தொடரும். ஊசி போட்ட பின் இறுக்கமான பன்டேஸ் போட்டுவிடுவார்கள். இச் சிகிச்சை பொதுவாக சிறிய நாளப் புடைப்புகளுக்கும், மிகச் சிறிய சிலந்திவகைப் அடைப்புகளுக்கும் (Spider Veins) பொருந்தும்.
    பல வகையான சத்திர சிகிச்சைகள் நாளப்புடைப்பு நோயைக் குணப்படுத்தச் செய்யப்படுகின்றன. லேசர் (Laser) சிகிச்சையானது சிறிய நாளப்புடைப்புகளை ஒளிச் சக்தி மூலம் கரையச் செய்யும்.
    அகநோக்கிக் குழாய் (Endoscopy) மூலம் செய்யப்படும் சத்திர சிகிச்சையின் போது சிறிய துவாரம் ஊடாக செலுத்தப்படும் குழாயுடன் இணைந்த கமரா மூலம் நோயுற்ற வால்வுகளை நேரடியாகப் பார்த்து, அதனுடன் இணைந்த நுண்ணிய உபகரணம் மூலம் நோயுற்ற வால்வுகளை மூடச் செய்வதாகும்.
    வேறும் பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சையின் பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீரும். நாளாந்த நடவடிக்கைகளில் நீங்கள் வழமை போல ஈடுபடலாம். ஆயினும் தொடர்ந்தும் சில நாட்களுக்கு பன்டேஸ் அணிய நேரலாம். கால் வீக்கம், தசைப்பிடிப்பு, தோல் அரிப்பு, தோல் கருமை படர்தல் போன்ற இறிகுறிகள் ஏற்கனவே இருந்திருந்தால் அவை குணமாக சற்றுக் கூடிய காலம் எடுக்கும்.


  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இருகூர் வால்வுச் செயற்பாட்டுக் கோளாறு

    இதன் போது இதயவறை சுருங்கும் போது இறுக்கமாக மூட வேண்டிய இருகூர் வால்வுகள் அவ்வாறன்றி இதயவறை சுருங்கும் போது சோணையறையினுள் புகுவதால் இதயவறையிலிருந்து வெளிச் செல்லும் குருதி சோணையறைக்குள் புகுந்து அடுத்த இதய வட்டத்தின் போது இதயவறைக்குள் மீளச் செல்வதால் இதயவறை விரிவடையூம். இந்த நோயானது ருமற்றிக் காய்ச்சலால் இருகூர்வால்வினை பாதிப்பதால் ஏற்படுகின்றது.

    இதற்குரிய காரணிகள்
    • தொழிற்பாட்டு ரீதியாக வால்வு வளையங்கள் விரிவடைதல்
    • வால்வு வளையங்களில் கல்சியம் படிதல்
    • ருமற்றிக்காய்ச்சல் வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக இடம்பெறும் நோயாகும். 5-15 வயதானவர்களில் ஏற்படும். வகை யூ ஸ்ரெப்ரொகொக்கஸ் கிருமியால் ஏற்படுத்தப்படும் தொற்றானது 2-4 வாரங்களின் பின் உடலில் உருவாகும் பிறபொருளெதிரிகளால் இதய வால்வுகள் மூட்டுகள் மூளை தோல் ஆகியவற்றை தாக்கும்.
    இதன் போது பிறபொருளெதிரிகளால் வால்வு தாக்கப்பட்டு காலப்போக்கில் வால்வின் துவாரமானது அடைக்கப்படும் இது பொதுவாக பெண்களில் அதிகளவு இடம்பெறும் .பக்ற்றீரியா தொற்றுக்களால் ஏற்படும் தொண்டை நோய்த் தொற்றுக்கள் சரியான கிருமி கொல்லிகளால் சிகிச்சையளிக்கப்படவேண்டும.
    பென்சைல் பென்சிலின் ஆனது ருமற்றிக் காய்ச்சலை தவிர்க்க தொண்டை நோய்த் தொற்றுக்கான கிருமி கொல்லியாகப் பயன்படும்.
    இது மீளாய்வு செய்யப்பட்ட ஜோன்ஸ் வகைப்படுத்தலால் கண்டறியப்படும்.
    ஜோன்ஸ் வகைப்படுத்தலில் இரண்டு பிரதான வகைகளும் அல்லது 1 பிரதான வகையும் 2 சிறிய வகைகளும் இருப்பின் இந்நோயுள்ளதாக கருதப்படும். இந் நோயை கண்டறிய ஸ்ரெப்ரொகொக்கஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும் .
    • வால்வுகளில் இதய அகவணியில் நோய்த் தொற்று
    • வால்வை தாங்கும் நார் தசைகள் அறுதல்
    • இதயத்தசை நோய்கள்
    • பிறப்பில் வால்வு கோளாறு
    • பசியைத் தடுக்கும் சிலவகை மருந்துகள்
    இதயவறையினுள் அதிக குருதி தேங்குவதால் இடது இதயவறைச் செயலிழப்பினை உருவாக்கலாம்


  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    சுவாசத்தொகுதி

    உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.

    சுவாசம்.
    உயிர் வாழ்கின்ற எல்லா உயிரினங்களுமே சுவாசிக்கின்றன. பிறப்புத் தொடக்கம் இறப்பு வரை எல்லா உயிரினங்களுமே சுவாசிக்கின்றன. சுவாசம் இல்லாமல் எந்த உயிரும் இயங்க முடியாது. காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடித்துக் கொண்டு உறுப்புக்களுக்குத் தருவதும், உறுப்புக்கள் உண்டாக்குகிற கரியமில வெளியே அனுப்பி வைத்து விடவும் கூடிய செயற்பாடு தான் சுவாசம் எனப்படும். சுவாசமானது உட்சுவாசம் வெளிச்சுவாசம் என இருவகைப்படும்.

    உட்சுவாசம்
    உட்சுவாசம் எனப்படுவது நெஞ்சறை விரிவு காரணமாக ஏற்படும் எதிர் அமுக்கத்தினால் வளி உள்ளிழுக்கப்படுதலாகும். இதற்காக பளுவிடைத் தசைகளும் பிரிமென் தகடும் சுருங்குகின்றன. இதற்கு ஏ ரி பி சக்தி பாவிக்கப்படும். எனவே உயிர்ப்பான செயன்முறை.

    வெளிச்சுவாசம்
    வெளிச்சுவாசம் என்பது உயிர்ப்பற்ற செயன்முறை. இங்கே ஏ ரி பி சக்தி பாவிக்கப்படுவதில்லை. விரிந்த நெஞ்சறை மீண்டும் சுருங்கும்போது அதிக அமுக்கம் காரணமாக வளி வெளியேறும்.
    இவ்வாறு வளி உள்ளெடுக்கப்பட்டு வெளியேறும்போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட்சைட்டு போன்ற கழிவு வாயுக்கள் வெளியேற்றப்படும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter