Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்


Discussions on "Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்" in "General Health Problems" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    காற்றுப் பாதைகள்
    காற்று உள்ளே சென்று வெளியே வருகின்ற பாதயைத் தான் காற்றுப் பாதை என்கின்றோம். அந்தப் பாதையை அமைக்கின்ற அமைப்புக்கள் பின்வருமாறு:
    • மூக்குக் குழி
    • தொண்டை
    • குரல் வளை
    • மூச்சுக் குழல்
    • மூச்சுக் கிளை
    • மூச்சுக்கிளைக் குழாய்கள்
    • நுரையீரல்



    காற்றுப் பாதை
    சுவாசத் தொகுதியின் உறுப்புக்கள்


    மூக்கும் மூக்குக் குழியும்

    சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.


    Sponsored Links

  2. #32
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    குரற்பெட்டி

    தொண்டை முடியும் இடத்தில் குரற்பெட்டி தொடங்குகிறது. தொண்டையானது சுவாசப் பாதைக்கும் உணவுக் கால்வாய்க்கும் பொதுவான இடமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் குரற்பெட்டியுள் போகாமல் தடுக்க மூச்சுக் குழல்வாய் மூடி காணப்படும். குரல் பெட்டியானது கசியிரையங்களால் சூழப்பட்டது. குரற்பெட்டியன் உள்ளே குரல் நாண்கள் காணப்படும். இந்தக் குரல் நாண்கள் அதிர்வடைவதால் குரல் ஆரம்பிக்கப்படுகிறது.

    வாதனாளித்தொகுதி.
    குரற்பெடடியின் கீழே வாதனாளி தொடங்குகிறது. வாதனாளியானது ஆங்கில எழுத்தான சீ வடிவ கசியிழையங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாதனாளியின் உள்ளே சீத அகவணியில் சீதச்சுரப்பு கலங்களும் பிசிர்களும் காணப்படும். வாதனாளியானது நெஞ்சறையில் ஐந்தாம் முள்ளந்தண்டின் மேல் மட்டத்தில் வலது இடது பிரிவாகப் பிரியும். பின்னர் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு மரக்கிளையமைப்பை உருவாக்கும். இறுதியாக சுவாசச் சிற்றறைகளில் புன்வாதனாளியாக நிறைவடையும்.

    சுவாசப் பைகள்
    மனிதனின் நெஞ்சறைக்கூட்டில் வலது இடது என இரண்டு சுவாசச் சோணைகள் காணப்படுகின்றன. இவை சுவாசச் சுற்றுவிரியால் சூழப்பட்டிருக்கும். வலது சோணை மூன்று சிறுசோணைகளாகவும் இடது சோணை இரண்டு சிறு சோணைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றினிடையே சுற்றுவிரி செல்வதால் பிளவுபோன்ற அமைப்பால் சிறு சோணைகள் வேறுபடுத்தப்பட்டிருக்கும். தவிர இந்த சிறு சோணைகளுக்கான வாதனாளி மற்றும் குருதி விநியோகம் தனித்தனியே இருக்கும். இவ்வாறு வலது சுவாசச் சோணையில் மேற்சோணை நடுச் சோணை கீழ்ச்சோணை என மூன்று சோணைகளும் இடது பக்கத்தில் மேற்சோணை கீழ்ச்சோணை என இரண்டு சோணைகளும் காணப்படும்.
    இவ்வாறு சோணைகள் பிரிக்கப்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட சோணையை அகற்றுதல் இலகுவானது.
    சுவாசச் சிற்றறையில் இருவகையான நுரையீரல் கல்ங்கள் காணப்படும். இதில் முதலாவது வகை சிற்றறையின் சுவரை உருவாக்கும். இரண்டாவது வகை நுரையீரல் கலங்கள் சுவாச மேற்பரப்பு சுரப்பை சுரக்கும். ( சேபக்ரண்ட்)


  3. #33
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    புரைக்கடித்தல்
    தவறுதலாக பாரிய துணிக்கைகள் அல்லது உணவுப் பொருட்கள் வாதனாளியில் புகும்போது பிரிரடித்தல் செயற்பாடடுடன் கூடிய இருமல் மூலம் அத்துணிக்ககைள் வெளியேற்றப்படும்.
    குறிப்பு
    1. புரைக்கடித்தல் என்பது ஒரு பாதுகாப்புச் செயன்முறை. இப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளபோது அல்லது சரியாக தொழிற்படாதபோது பிறபொருட்கள் உள்ளிழுக்கப்பட்டு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும். இது ஆங்கிலத்தில் அஸ்பிரேசன் நியுமோனியா எனப்படும்.

    2.மயக்க மருந்து ஏற்றப்பட்டவர்களில் புரைக்கடித்தல் செயற்பாடு மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடியின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.எனவே இவர்களுக்கு வாதனாளி உள்ளே குழாயை செலுத்தி (என்டோ டிரக்கியல் ரியுப்) பிறபொருட்கள் உட்செல்லல் தடுக்கப்படும்.

    3. வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மதுபோதையில் உள்ளவர்களுக்கு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
    குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகளிலும் நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் பிள்ளைகளிலும் நுரையீரலில் மேற்குறித்த சுரப்பு போதியளவில் காணப்படுவதில்லை. இதனால் இக்குழந்தைகள் மேற்பரப்பிழுவிசையை தாங்காமல் மூச்சுத்திணறலுக்கு உட்படலாம். இதனைத் தடுக்க சுவாச மேற்பரப்பு சுரப்பு செயற்கையாக வழங்கப்படும்.
    குரல் பெட்டியழற்சி (லறிஞ்சைட்டிஸ்) ஏற்பட்டவரது குரல் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படும்.


  4. #34
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    நோய்கள்

    சுவாசத் தொகுதி தொடர்பான நோய்கள்

    உயிர்ப்பான காசநோய்

    குணங்குறிகள்
    மூன்று வாரங்கட்கு மேற்பட்ட இருமல் அநேகமாக ஆரம்ப அறிகுறியாகும். இது வறண்ட அரிப்பூட்டுகின்ற இருமலாக ஆரம்பிக்க முடியும். இது மாதங்கள் வரையில் நீடித்து மோசமான நிலையினை அடைகிறது. காலஞ் செல்லச் செல்ல சளியுடன் கூடிய இருமல் உருவாகின்றது. இதனால் இருமும் போது அதிகளவு சளி வெளியேற்றப்படும். அது இரதக்கசிவுடன் காணப்படலாம்.

    ஏனைய பொதுவான குணங்குறிகள்
    காய்ச்சல், அதிகரித்த வியர்வை, உடல் அசதி, உடல் நிறை குறைவடைதல் , நெஞ்சு வலி, மற்றும் பசியின்மை என்பன. கிருமித் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு சுவாச சிரமம் ஏற்படுகிறது. சிகிச்சை வழங்கப்படாத விடத்து பல சிக்கல்கள் உருவாகின்றன. நுரையீரலிற்கும் நெஞ்சறை சுவருக்குமிடையிலுள்ள புடை மென்சவ்வுகளுக் கிடையில் திரவம் சேகரிக்கப்படுதல். இதனால் சுவாச சிரமம் மேலும் மோசமடைகிறது. காச நோயானது நுரையீரலிலுள்ள குருதிக் கலன்களை பாதிக்கையில் இருமும்போது குருதி வெளியேற்றப்படுகிறது.
    காசநோய் கிருமித்தொற்றானது சில வேளைகளில் குருதிச் சுற்றோட்டத்தொகுதி மற்றும் நிர்ப்பீடனத்தொகுதிக்குள் பரவும் போது உடலின் ஏனைய பகுதிகளிலும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. உடலின் எப்பகுதி பாதிக்கப்படுகிறது என்பதற்கிணங்க பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.
    • நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல் – உடலின் எப் பகுதியிலுமுள்ள நிணநீர்க் கணுக்கள் வீக்கமடையலாம். கழுத்து, தோள் மூட்டின் உட்பகுதி மற்றும் இடுப்பு தொடை சந்திப்புலுள்ள நிணநீர் கணுக்களை தொட்டுணர முடியும்.
    • உணவுக் கால்வாய் மற்றும் வயிறு – காசநோயானது வயிற்று வலி அல்லது வீக்கத்தினை ஏற்படுத்துகிறது. அல்லது போதிய சமிபாடின்றி வயிற்றொட்டம் மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்றவை ஏற்படுகிறது.

    • என்பு மற்றும் மூட்டுகள் - காச நோயானது என்பு அல்லது மூட்டுக்களை பாதிப்பதன் காரணமாக என்பு நோ (உ-ம் முள்ளந்தண்டு) மற்றும் மூட்டு வலி அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

    • இதயம் – காச நோய் சில வேளைகளில் இதயத்தினை சூழ அழற்சியினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக நெஞ்சு வலி அல்லது சுவாச சிரமம் என்பன ஏற்படுகின்றன.

    • சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை - இவை கிருமித் தொற்றுக்குட்படும் போது இடுப்பின் பின் பகுதியில் இரு கரைகளிலும் வலி, சிறுநீர் கழிக்கும்போது வலி என்பன ஏற்படுகின்றன.

    • மூளை – காசநோய் காரணமாக மூளைய மென்சவ்வழற்சி ஏற்படலாம். இதனால் தலைவலி, அருவருப்பு, வாந்தி, வலிப்பு, நித்திரை ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் நடத்தை மாற்றங்கள் என்பன.

    • தோல் – காசநோய் காரணமாக தோலில் தழும்புகள் ”எரித்தீமா நோடோசம்” எனும் சிவந்த முடிச்சுப் போன்றவை கால்களில் ஏற்படும் தழும்புகளாகும். லூபஸ்வல்காரிஸ் எனும் கட்டிகள் அல்லது புண்கள்.

    • உடலின் ஏனைய பகுதிகளுகளுக்குப் பரவலடைதல். இது மிலியரி காச நோய் எனப்படும். இது நுரையீரல், என்புகள், ஈரல் மற்றும் கண்கள் தோல் என்பவற்றைப் பாதிக்கிறது.


  5. #35
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    நுரையீரல் புற்றுநோய்

    குணங்குறிகள்
    வெவ்வேறு நோயாளிகளுக்கிடையே குணங்குறிகள் வேறுபட்டவை. பலரிலே ஆரம்பநிலைகளில் குணங்குறிகள் ஏதும் காணப்படுவதில்லை. நுரையீரல் புற்றுநோயானது சந்தர்ப்பவசமாக x கதிர்ப் பரிசோதனையானது வேறு காரண்ங்களுக்காக மேற்கொள்ளப்படும் போது கண்டறியப்படும்.

    நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக
    • தொடர்ச்சியான இருமல்

    • இருமும் போது இரத்தம் அல்லது இரத்த கசிவுடனான சளி வெளியேறல்.
    • இலேசான நெஞ்சுவலி
    • களைப்பு மற்றும் உடல்சக்தியற்ற தன்மை
    • உடல்நிறை குறைவடைதல்
    • மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது இளைப்பு/தொய்வு – விசேடமாக புற்றுநோய்க் கட்டியானது சுவாசக்குழாய்களிலே வளர்ச்சியடையும் போது அது காற்றோட்டத்தினை பகுதியாக தடைப்படுத்தும் சந்தர்ப்பங்களிலாகும்.புற்று நோயானது வளர்ச்சியடைந்து செல்லும்போது குணங்குறிகள் மோசமடைகின்றன.
    • மேற்கூறிய குணங்குறிகள் மோசமடையக்கூடும்
    • நுரையீரல் அழற்சி /நியூமோனியாவானது புற்றுநோய்க் கட்டியால் தடைப்படுத்தப்பட்டுள்ள சுவாசக்குழாய்க்கு சேய்மையான நுரையீரல் பகுதியிலே உருவாகக்கூடும். இவ்வாறான கிருமித்தொற்றானது நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு கட்டுப்படாது காணப்படலாம்.

    • நுரையீரல்களுக்கும் புடைமென்சவ்வுகளுக்குமிடையே திரவங்கள் தேக்கமடையக்கூடும். இதனால் சுவாசசிரமம் மோசமடையக்கூடும்.

    • நுரையீரலின் உச்சிப்பகுதியிலே காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் அவ்வழியாக செல்லும் நரம்பு நார்களை அழுத்துவதன் காரணமாக தோள் மற்றும் புயங்களில் வலி, அங்கபலவீனம், விறைப்பு போன்றவை உணரப்படலாம்.
    • இதயத்திலிரிந்து தலைப்பகுதிக்கு குருதியை கொண்டு செல்லும் நாளங்கள் புற்று நோய் கட்டியினால் அழுத்தப்படுவதன் காரணமாக முகம் வீக்கமடையலாம்.

    • சில ஸ்மோல்செல் காசினோமாக்கள் அதிகளவு ஓமோன்களை உருவாக்குகின்றன இதன் காரணமாக உடலின் ஏனைய பகுதிகளில் பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.

    • புற்று நோயானது ஏனைய அங்கங்களுக்குப் பரவும் போது ஏனைய பல்வேறு குணங்குறிகளை தோற்றுவிக்கிறது.


  6. #36
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    ஆஸ்த்மா

    சிலருக்கு இயற்கையாகவே உடலில் ஒவ்வாமைகளின் வெளிப்பாடாக எக்ஸிமா., ஆஸ்த்மா போன்றநோய்கள் காணப்படும். ஒவ்வாப் பொருட்களுடன் தொடுகை ஏற்படும்போது சுவாசக் குழாயின் சுவரில் அதிதீவிர தொழிற்பாடு over sensitivity (தொட்டாச் சுருங்கிச்செடியில் தொட்டவுடன் அது எதிர்விளைவு காட்டுவதுபோல) ஏற்பட்டுச் சுவாசக் குழாயின் உட்புறம் வீங்கும். சுவாசக் குழாயின் விட்டம் குறைவதனால் சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும்.
    சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும் அனைவரும் தமக்கு ஆஸ்த்மா நோய் ஏற்பட்ள்ளதாகக் கருதக்கூடாது. வேறுகாரணங்களாலும் கீச்சொலி கேட்கலாம். மூச்சுக்குழாய் ஆஸ்த்மா நோயாளருக்குச் செறிவுமிக்க சளி சுரக்கும். சுவாசிப்பதில் சிரமம் காணப்படும். ஆஸ்த்மா நோய் பரம்பரைத் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இதயம் தொடர்பானதாக வேறொரு வகையான ஆஸ்த்மாவும் ஏற்படுவதுண்டு. ஆதலால் வைத்தியரைச் சந்தித்து எந்த வகையான ஆஸ்த்மா ஏற்பட்டுள்ளது என அறிவது அவசியமானதாகும்.
    பின்வருவனவற்றுள் ஒன்றோ பலவோ ஒவ்வாமைக் காரணியாக இருந்து மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். சாம்பிராணி, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணை போன்றவற்றின் புகை, மரத்தூள் அடுப்புப் புகை, வாகனப்புகை, சிகரட் புகை, மரஅரிவுத்தூசி, புத்தகத் தூசி, தேயிலைத் தூசி, அஸ்பெஸ்டஸ் தூசி, சீமேந்துத் தூசி, தலைமயிர்ச் சாயங்கள், தோலை அழகாக்கும் விழுதுகள்(cream), பூச்சுகள், வாசனைப் பொருட்கள், சவர்க்காரங்கள், சில மூலிகைத் தயாரிப்புகள், சிலவகைக் காளான் தயாரிப்புகள், சிலவகை மரக்கறிகள், அன்னாசிப் பழம், கத்தரிக்காய், கணவாய், முட்டை, பட்டர், மாசரீன், சிலவகை குளிர்பானங்கள், குளிர்பானங்களிலிருக்கும் நிறப்பொருள்கள், சிலவகைச் செருப்புகள், சில உலோகங்கள், உடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறப்பொருள்கள். பிளாஸ்டிக், மிருகங்களின் உரோமங்கள், பறவைகளின் இறக்கைத் துகள்கள், பறவைகளின் எச்சங்கள், நுளம்புக்கடி, மூட்டைக்கடி, தெள்ளுக்கடி, உண்ணிக்கடி, பாம்புக்கடி மயிர்க்கொட்டி, பல்லி, எலி, கரப்பான்பூச்சி, தெள்ளு, உண்ணி, மூட்டைப்பூச்சி, எறும்பு, கறையான், நத்தை போன்றவையும் அவற்றின் எச்சங்களும்; சிலவகை மருந்துகள், வைக்கோல் துகள்கள், சில தாவரங்களும் அவற்றின் பூக்களும், சில புல்வகைகளும் அவற்றின் பூக்களும், வளியின்; ஈரப்பதன், சில வகை ஒலிகள் சில பழங்களின் மணம்,; மீன் மணம், இறைச்சி முட்டை பொரிக்கும் மணம், நெய் உருக்கும் மணம், சாக்கடை மணம், மலகூட மணம், கழிவு-குப்பைகளின் மணம் போன்றவை. நகர்ப்புறங்களில் கழிவு-குப்பைகள் ஒழுங்காக அகற்றப்படாது தேங்கி நாறுவதாலேயே நகர்ப்புறங்களில் மூச்சுக்குழாய் ஆஸ்த்மா அதிகமாக ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.

    படுக்கை விரிப்புகளிலும் தலையணைகளிலும் படியும் எமது உடலிலிருந்து உதிரும் தோல்த்துகள்களும் அவற்றில் வாழும் சிற்றுண்ணிகளும் மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். இவற்றுள் எது மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்துகிறது என அறிந்து, அதனைத் தவிர்த்து ஆஸ்த்மா ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    வைத்தியர்கள், சுவாசக் குழாயின் உட்புறம் வீங்குவதைத் தடுப்பதற்கு ஒரு மருந்தையும் சுவாசக் குழாயின் விட்டத்தைக் கூட்டுவதற்கு இன்னொரு மருந்தையும் சிபார்சு செய்யலாம். சுவாச உறிஞ்சிகளாக விற்கப்படும் இந்த மருந்துகள் இதே மருந்துகளின் குளிகைகளை விடச் சிறந்த பயன் தருபவையாகும். ஆஸ்த்மா எப்பொழுது ஏற்படும் என எதிர்வுகூற முடியாது என்பதனால் நோயாளிகள் எங்கே சென்றாலும் இந்த மருந்துகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.


  7. #37
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    உணவும் நாமும்

    உணவைப் போல, உடலுக்கு உதவிசெய்யும் சுவையான பொருட்கள் வேறெதுவும் இல்லை.உவை உட்கொள்ளாத உடல் தேய்வடைகின்றது. களைப்படைகிறது.கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, உயிரையும் இழந்து விடுகின்றது. எனவே, உணவு தான் உடலுக்குச் சக்தியைத் தருகின்றது. வளர்ச்சியை அளிக்கின்றமு. தேய்ந்த திசுக்களை பழுது பார்க்கின்றது, பராமரிக்கின்றது.

    சமிபாட்டுத் தொகுதி
    வாயினால் எடுத்துக் கொள்ளப் படுகின்ற உணவைச் சுவைப்பதிலிருந்து, அவை ஒவ்வொரு உறுப்பிலும் போற்றுதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்தி, உணவைச்செரிக்கச் செய்து,செரித்தவைகளை உறிஞ்சி, இரத்த்த்தில் சேர்க்கும் வரை உண்டாகிவிடும் மாற்றத்தையே சமிபாடு எனக் கூறுவோம்.
    சமிபாட்டுக்கு உதவுகின்ற உறுப்புக்களின் கூட்டதுதையே சமிபாட்டுத் தொகுதி என்கின்றோம்.

    மிபாட்டு உறுப்புக்கள்
    ஒரு மனிதன் ஓராண்டுக்கு 500 கிலோ அளவு உணவை உட்கொள்கின்றான். இந்த உணவின் வழி வாயிலிருந்து தொடங்கி மலம் கழிக்கும் குழாய் வரை நீண்டுசெல்கின்றது.
    • வாய்
    • தொண்டை
    • உணவுக் குழாய்
    • இரைப்பை
    • சிறுகுடல்
    • பெருங்குடல்
    • மலக்குடல்

    உணவை உடைப்பதற்கு உதவும் உறுப்புக்கள் போலவே, கரைப்பதற்கும் சில இரசாயன நீர்கன் இருக்கின்றன.

    • உமிழ் நீர்

    • பித்த நீர்
    • இரைப்பை நீரட
    • கணைய நீர்
    • குடல் திரவங்கள்
    சமிபாடு என்பது உணவில் ஏற்படுகின்ற திடமாற்றமும் இரசாயன மாற்றமும் ஆகும்.

    உறுப்புக்கள்
    மனிதனின் உணவுக் கால்வாய்த் தொகுதி
    வாய்குழி
    வாய்குழியில் உணவு துண்டாக்கப்படுகிறது.அரைக்கப்படுகிறது. இதனால் பௌதீக சமிபாடு நிகழ்கிறது.வெட்டும் பற்களும் வேட்டைப்பற்களும் உணவை சிறு துண்டுகளாக்குவதில் ஈடுபடுகின்றன.
    முன்கடைவாய்பற்கள்,கடைவாய்பற்கள் என்பவற்றினால் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்பட்டு உணவு திரளை ஆக்கப்படுகின்றது.உணவுத்திரளைகள் தொண்டையுள் கடத்தப்பட்டு விழுங்கப்படுகின்றன.
    மனிதனின் பற்கள் அனு என்பிலும் சிபுத என்பிலும் உள்ள குழிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.

    1 .உதிர்கின்ற பற்கள் இவை 20 காணப்படும்.
    2. நிரந்தரபற்கள்
    இவை ஒரு பாதி மேல் கீழ் தாடைகளில் உள்ள வெவ்வேறு பற்களின் எண்ணிக்கையை பற்சூத்திரம் எடுத்துக்காட்டுகிறது.

    பல்
    I. பன்முடி

    II. பற்கழுத்து
    III. பல்வேர் ஆகிய 3 பகுதிகளை உடையது.
    பல்முடி முரசின் மேலாகக் காணப்படும் பகுதியாகும். பற்கழுத்து முரசினால் சூழப்பட்ட பகுதியாகும். பல்வேர் தாடைகளை ஆக்கும் என்புக் குழிகளுள் பாதிக்கப்பட்டிருக்கும் அபகுதியாகும்.
    வெட்டடும் பற்களும் வேட்டைப் பற்களிற்கும் தனி வேர் உண்டு. முன் கடைவாய் பற்களில் இரு வேர்களும் கடைவாய் பற்களிற்கு 3 வேர்களும் காணப்படுகின்றன.பல் மூன்று பதார்த்தங்களினால் ஆக்கப்பட்டது.

    மிளிரி இது கனியுப்புக்களினால் ஆக்கப்பட்ட வன்மையான பகுதி. பன்முடியில் காணப்படுகின்றது. பன்முதல் இது பல்லின் பெரும் பகுதியை அமைக்கின்றது.பல்லரும்பர் குழியங்கள் காணப்படும். மிளிரி இதனால் சுரக்கப்படுகின்றது. பற் சீமெந்து நார்பதார்தங்களால் ஆக்கப்பட்டது.

    பல்லின் மத்தியில் மச்சைக்குழி உண்டு. இது பல்லின் ஒரு கூறு அல்ல. இதில் குருதிக் குழாய்களும் நிணநீர் குழாய்களும் நரம்புகளும் உள்ளன.

    ஒவ்வொரு உணவு வேளையின் போதும் பல்லின் மேற்பரப்பின் PH7 இல் இருந்து 5 ஆக குறைகின்றது. குறிப்பாக உணவில் உள்ள வெல்லங்கள் பற்றீரியாக்களினால் |சேதன அமிலங்களாக மாற்றப்படுவதால் இவ்வாறு PH மாற்றம் ஏற்படுகின்றது.இவ்வமிலங்களால் மிளிரி சிதைவடைகின்றது. இதனால் பற்சொத்தை ஏற்படுகின்றது. ஒழுங்கற்ற முறையில் அடிக்கடி உணவு உண்பதால் வாய்க்குழியில் அமிலத்தன்.மை அடையும் வாய்ப்பு கூடுகின்றது.

    உணவிலுள்ள வெல்லங்கள் பற்களின் வீக்கத் தழும்பின்(Plaque) ஆக்கத்தில் ஈடுபடுகின்ற பக்றீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகின்றது.உணவு மிகுதிகள் உமிழ்நீர்,பற்றீரியாக்கள் என்பவற்றால் Plaque ஏற்படுத்தப்படுகின்றது.இது வலிமை அடைந்து பற்கள் மீது படிந்துவிடுகின்றது


  8. #38
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    பற்களின் ஆரோக்கியத்திற்கு:
    I. நார்த்தன்மையான உணவுகளை உள்ளெடுத்தல்.
    II. குறைந்தளவு சமைத்த உணவுகளை உட்கொள்ளுதல்.
    III. பற்களுக்கிடையில் உணவுத்துணிக்கைகளை அகற்றும் வகையில் பல் துலக்கல்.
    IV. பற்களின் ஆரோக்கிய நிலையை பேணும் அளவில் Floride எடுத்தல்.

    உணவு வாய்குழியில் உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்படுகின்றது. உமிழ்நீரானது உமிழ்நீர்ச்சுரப்பிகளால் சுரக்கப்பட்டு வாய்குழியில் விடப்படுகின்றது.

    மனிதனில் 3 சோடி உமிழ்நீர்ச்சுரப்பிகள் உள்ளன.அவை,
    I. கன்ன உமிழ்நீர்ச்சுரப்பி
    II. அனுகீழ்ச்சுரப்பி
    III. நாவிற்கு கிழான சுரப்பி
    உமிழ்நீர்
    I. இதில் உமிழ்நீர் அமிலேஸ் அல்லது தயலின் நொதியம்.
    II. சீதம்
    III. Lysozyme என்னும் பற்றீறியாக்களை அழிக்கக்கூடிய நொதியம்
    IV. நீர்
    V. கனிப்பொருள் அயன்கள்
    VI. குருதி உறைதல் காரணிகள் என்பன உள்ளன.

    உமிழ்நீரினால் பின்வரும் தொழில்கள் ஆற்றப்படுகின்றன
    I. மாப்பொருளின் இராசயன சமிபாடு நிகழ்த்தப்படுகின்றது.
    II. உணவை ஈரலிப்பாக்கி திரளாக்குவதில் ஈடுபடுகின்றது.
    III. உணவை கரையச்செய்யும் ஊடகமாக இருப்பதன் மூலம் சுவையை அறியமுடிகின்றது.
    IV. Lysozyme பற்றீறியாக்களை அழிக்கக்கூடிய நொதுயம் ஆகையால் தனித்திறன் அற்ற நீர்பீடனத்தை வழங்குகின்றது.
    V. வாய்குழியை சுத்தமாக்குவதில் பயன்படுகின்றது.
    களம்
    I. தொண்டையை அடுத்த நீண்ட நேரான குழாய் வடிவமான அமைப்பு களம் ஆகும்.

    II. இது வதனாளிக்கு பின்புறமாகவும் முள்ளந்தண்டிற்கு முன்புறமாகவும் நெஞ்சறைக்குழியின் ஊடாக செல்லும் பகுதி ஆகும்.
    III. பிரிமென்றட்டை ஊடுருவிச்சென்று வயிற்றறைக்குழியில் உள்ள இரைப்பையுடன் தொடுகின்றது.
    IV. களம் உணவு இரைப்பைக்கு செல்லும் பாதையாக அமைகின்றது.
    இரைப்பை
    I. இரைப்பை வயிற்றறைக்குழியில் பிரிமென்றட்டு,ஈரல் என்பவற்றிற்கு கீழாக அமைந்துள்ளது.
    II. இரைப்பை J வடிவமானது.
    III. இது அடிக்குழி,உடல்,குடல்வாய்குழி ஆகிய மூன்று பகுதிகளை உடையது.
    IV. இரைப்பைச்சுவரின் சுரப்பிகளில்:
    a. சீதம் சுரக்கும் கலங்கள்
    b. Zymogenic கலங்கள்
    c. Oxyntic கலங்கள் உள்ளன.


  9. #39
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    இரைப்பையின் தொழில்கள்

    I. உணவு தற்காலிகமாக சேமிக்கப்படும் இடம்.
    II. புரதத்தின் இராசயன சமிபாட்டை நிகழ்த்துதல்.
    III. இரைப்பை பாகு ஆக்கப்படுவதன் மூலம் பௌதீ சமிபாட்டில் ஈடுபடுதல்.
    IV. மருந்துகள்,அற்ககோள்,சிறிதளவு நீர் என்பவற்றை அகத்துறிஞ்சுதல்.
    V. விற்றமின் B12 இனை அகத்துறிஞ்ச உதவும் காரணி பதார்த்தத்தை சுரத்தல்.
    VI. இரைப்பை உள்ளடக்கங்கள் முன் சிறுகுடலினுள் செல்வதைக் கட்டுப்படுத்தல்
    VII. Gastrin என்னும் ஓமோனைச்சுரத்தல்.

    சிறுகுடல்
    I. இரைப்பையிற்கும் பெருங்குடலிற்கும் இடையிலான நீண்ட உருவான அமைப்பு.

    II. இது முன் சிறுகுடல்,இடைச்சிறுகுடல்,சுருட்குடல் என 3 பகுதிகளை உடையது.
    III. முன்சிறுகுடல் வளைந்த பகுதியாகும்.
    சிறுகுடலின் தொழில்கள்
    I. சுற்றுச்சுருங்கல் அசைவினால் சமிபாடடைந்து வரும் உள்ளடக்கங்களை கொண்டு செல்லுதல்.

    II. சிறுகுடற்சாறை சுரத்தல்.
    III. காபோவைதரேற்றுக்கள்,புரதங்கள்,கொழுப்புக்களின் இராசயன சமிபாடு பூரணம் அடையும் இடமாக இருத்தல்.
    IV. Cholecystokinin, Secretin போன்ற ஓமோன்களை சுரத்தல்.
    V. சமிபாடு அடைந்த உணவுகளை அகத்துறிஞ்சுதல்.

    அகத்துறிஞ்சலுக்கான இசைவாக்கங்கள்
    I. சிறு குடலில் சடை முளைகள் காணப்படுதல்.
    II. மேலணிக்கலங்களில் நுண்சடைமுளைகள் காணப்படுதல்.
    III. சடைமுளைகளில் காணப்படும் மழமழப்பான தசைகளின் தொழிற்பாட்டினால்
    உணவுடன் சடைமுளைகள் தொடுகை அடையும் திறனுடையனவாக இருத்தல்.

    பெருங்குடல்
    இது சிறுகுடலைத்தொடர்ந்து குதம் வரை காணப்படும் பகுதியாகும்.பெருங்குடலானது குருட்டுக்குடல், குடற்குறை,நேர்குடல்,குதக்கான் ஆகிய பகுதிகளை உடையது.இதில் குடற்குறையானது ஏறுகின்றகுடற்குறை,குறுக்கானகுடற்குறை,இறங்குகின்ற_குடற்குறை 3 பகுதிகளை உடையது.


  10. #40
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    உணவுக்கால்வாய் ஓமோன்கள்

    Ÿ உணவுக்கால்வாயில் இரைப்பையினால் gastric எனும் ஓமோனும் முன்சிறுகுடலினால் secretion,cholecystokinin எனும் ஓமோன்களும் சுரக்கப்படுகின்றன.
    Ÿ உணவு இரைப்பையில் இருப்பதால் ஏற்படும் தூண்டல் gastric இன் சுரத்தலை தூண்டுகின்றது.
    Ÿ உணவு முன் சிறுகுடலை அடைவதால் ஏற்படும் தூண்டல்கள் secretion, cholecystokinin சுரத்தலைத்தூண்டுகிறது.
    Ÿ இவ் ஒமோன்கள் குருதியில் விடப்பட்டு குருதி வழியாக கொண்டுசெல்லப்படுகின்றது.
    Ÿ Secretion இரைப்பையில்தொழிற்பட்டு உதரச்சாறு சுரக்கப்படுவதை நிரோதிக்கிறது.
    Ÿ cholecystokinin சிறுகுடலில்செயற்பட்டு குடற்சாறு சுரக்கப்படுவதை secretion தூண்டுகின்றது.
    Ÿ Cholecystokinin பித்தப்பையின் சுருக்கத்தை தூண்டி பித்தத்தை வெளியேற்றுகின்றது.
    Ÿ Cholecystokinin சதையியில்செயற்பட்டு சதயச்சாறு சுரத்தலை தூண்டுகின்றது.
    சதையீ
    • மனிதனின் சதையீ வயிற்றறைக்குழியில் இரைப்பையின்மேல் இடது உப மணிப்பகுதியின் முன் சிறுகுடலின் வளைவுப்பகுதியில் அமைந்துள்ளது.
    • கான் சுரப்பியால் சதைச்சாறு சுரக்கப்படுகின்றது.
    • சதைக்குலைகளில் இருந்து சுரப்புக்கள் சிறு கான் வழியாக சதையக்கானில் விடப்படுகின்றது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter