Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்


Discussions on "Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்" in "General Health Problems" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    ஈரல்

    • மனிதனின் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி ஈரலாகும்.
    • இது வயிற்றறைக்குழியில் வலது உப மணிப்பகுதியில் அமைந்துள்ளது.
    • ஈரல்மெல்லிய உறை ஒன்றினால் முற்றாக மூடப்பட்டும் சுற்று விரி ஒன்றினால் பகுதியாக மூடப்பட்டும் உள்ளது.
    • மனித ஈரல் நான் சோணைகள் உடையது.இவற்றுள் வலது சோணை பெரியது,இடது சோணை சிறியது.வாற்சோணை,நாற்புடைசோணை என்பன சோணைகள் ஆகும்.
    • ஈரலிற்கு ஈரல் வாயில் நாளம் வழியாகவும் ஈரல் நாடி வழியாகவும் குருதி வழங்கப்படுகின்றது.எனவே ஈரல்இரட்டைக்குருதி தரவு உடையது.


    Sponsored Links

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    ஆரோக்கியம்
    சமிபாட்டுத் தொகுதி தொடர்பான நோய்கள்


    சதையியில் ஏற்படும் புற்றுநோய்

    இது மேற்குலக நாடுகளில் பொதுவாக ஏற்படும் புற்றுநோய் ஆகும். இது வயதுடன் உருவாகும் வாய்ப்பு கூடுவதுடன் பெரும்பாலானவை60 வயதிற்கு மேற்பட்டோரில் ஏற்படுகிறது. 60% நோயாளிகள் ஆண்கள் ஆவர். புகைத்தலானது இதன் ஆபத்தை 2 மடங்கு அதிகரிக்கும். நீண்ட கல சதையி அழற்சியும் இதற்கு இட்டுச்செல்லும். இவற்றுடன் விகாரம் அடைந்த மரபணுக்களும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் கூட்டுகின்றன.

    அறிகுறிகள்
    இவை எங்கு புற்றுநோய் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து வேறுபடும். சதையியின் தலைப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயானது பித்தக்கானை ஆரம்பக்கட்டங்களிலேயே அடைப்பதனால் இதன் குணங்குறிகள் ஏனையவற்றுக்கு முன்னர் ஏற்படும். பொதுவாக வலியானது காணப்படாது.
    ஏற்படும் வலியானது புற்றுநோய் சதையியின் உடல், வால் பகுதியில் உள்ளமையை அல்லது நோயானது நன்கு பரவி உள்ளமையைக் காட்டும். இது முதுகிற்கும் பரவிச் செல்லும் வலி ஆகும். பித்தக்கான் அடைக்கப்பட்டு கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம். வயிற்றில் வைத்தியரால் பரிசோதிக்கப்படும் போது பித்தப்பை பெருத்தல், ஈரல் வீக்கம் ஆகியன காணப்படலாம்.
    சிலரில் பல மூட்டுக்களைப் பாதிக்கும் மூட்டுவாதம், தோலில் கட்டிகள் என்பன ஏற்படலாம்.

    நோயானது கண்டறியப்படல்
    வயிற்றின் கழியொலி ஸ்கான் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டாலும் உடல், வால்ப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயை காணமுடியாது. CT ஸ்கான், ERCP பரிசோதனை, MRI ஸ்கான் ஆகியன பயன்படும்.

    சிகிச்சை
    பெரும்பாலான நோயாளிகளுக்கு நோயானது முற்றிய நிலையிலேயே நோயானது கண்டறியப்படுகிறது. இவர்களில் சத்திரசிகிச்சை மூலம் புற்றுநோயை வெட்டி எறிய இயலுவதில்லை. எனினும் புற்றுநோய்க்கான மருந்துகள், கதிர்வீச்சு சிகிச்சை ஆகியன பயன்படலாம். பித்தக்கானின் அடைப்பானது குழாய் ஒன்றின் மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கலாம்.
    நோய் குணங்குறிகள்.
    தைரொயிட் சுரப்பியிலுள்ள கலங்கள் உடலின் கட்டுப்பாடில்லாமல் பெருகுவதனாலும் தைரொயிட் புற்றுநோய் உண்டாகின்றது. அத்தொடு உடலின் மற்றய பகுதிகளுக்கும் மற்றய புற்று நோயைப் போன்று பரவலடைகிறது.
    பெரும்பாலும் நோயின் ஆரம்பநிலைகளில் நோய்அறிகுறிகள் இருப்பதில்லை. ,பின்னய நிலைகளிலேயே ஏற்படுகின்றது. கீழ்கூறப்பட்ட வற்றில் ஒன்று அல்லது அதற்கு அமற்பட்ட குணங்குறிகள் இருக்கலாம். எனினும் இவை வேறு தைரொயிட் வருத்ததினாலும் ஏற்படலாம்.எனவே நோய் குணங்குறிகளை மட்டும் கருத்தில் கொண்டு தைரொயிட் புற்றுநோயை உறுதிப்படுத்த முடியாது. கீழ்கூறப்பட்டவை காணப்படின் வைத்தியரின் ஆலோசனையைப் பெறவும்.
    • கழுத்தின் முன்பகுதியில் தைரொயிட் சுரப்பியிலிருந்து கட்டி / வீக்கம் ஏற்படுதல்.

    • உணவை விழுங்குவதற்குக் கடினமாக இருத்தல்.
    • முச்சு எடுப்பதற்குக் கடினமாக இருத்தல்.
    • குரலில் மாற்றம் ஏற்படுதல்.
    • கழுத்துப் பகுதியில் நிணநிர் முடிச்சுக்கள்.9Lymphnodes) !வீங்குதல்.
    • கழுத்துப்பகுதியில் நோவு ஏற்படுதல்.
    • உடலின் மற்றய பகுதிகளுக்கு புற்றுநோய் பரவுமாக இருந்தால் (நுரையீரல், ஈரல்,என்பு ) அவற்றின் காரணமாகவும் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். உதாரணமாக நுரையிரலுக்கு புற்றுநோய் பரவுவதனால் இருமல் ஏற்படுகின்றது.


  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    பித்தக் கற்கள்.

    பித்தக் கற்கள் உனப்படுபவை சிறிய கல் போன்ற

    திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder) உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.


    ஈரல் மற்றும் பித்தப்பாதை. :
    பித்தப் பாதையானது பித்தத்தினைக் கடத்துகின்ற தொழிலைச் செய்கிறது. பித்தமானது ஈரலில் உருவாக்கப்படுகின்றது. பின்னர் பித்தப்பாதையில் சேமிக்கப்பட்டு தேவையேற்படின் பித்தக் குழாயினுடு முன்சிறுகுடலை அடைகிறது. பித்தக் குழாயானது பித்தக்கற்களினால் அடைப்புக்கு உட்படுமாயின் பித்தச் சுற்றோட்டம் தடுக்கப்டுவதனால் பித்தக் குழாயினுள் பித்தம் தெங்குகின்றது. உடலில் பித்தத்தின் அளவு கூடுவதனால் உடலும் கண்ணும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இது Jaundice என அழைக்கப்படும். பித்தக்குழாயின் அடைப்பினால் ஏற்படுவதனால் இவ்வகை Jaundice ஆனது Obstuctive Jaundice என அழைக்கப்டும்.
    பித்தமானது சிறிகுடலை அடைந்தத்தும் அங்கு காணப்டும் கொழுப்புவகை உணவுகளை குழம்புகளாக அதாவது சிறு சிறு துணிக்கைகளாக உடைக்கிறது. இதன் மூலம் கொழுப்புப் பதார்த்தங்கள் சமிபாடைந்து அகத்துறிஞ்சப் படுகின்றது.
    பித்த்தில் காணப்படும் பிளிரூபின் (bilirubin) என்ற பதார்த்தத்தின் முடிவுப் பொருட்களினாலேயே மலத்தின் மஞ்சள் நிறம் ஏற்படுகின்றது. பித்தத்தின் பாதை அதாவது பித்தக்குழாய் அடைப்புக்குள்ளாகின்ற பொழுது மலத்தின் மஞ்சள் நிறம் அற்றுப் போகிறது . இதனால் மலம் மஞ்சள் நிறமாக மாறும்.
    பித்தக் குழாய் அடைப்புக்குள்ளாகின்ற பொழுது குருதியில் பித்தத்தின் அளவ் அதிகரிப்பதனால் தோலில் மஞ்சள் நிறமான பித்தம் படிவடைவதனால் தோல் மஞ்சளாவதஞடன் (Jaundice) சிறுநிருடன் சேர்ந்து பித்தப் பொருட்கள் வெளியேறுவதனால் சிறுநீர் தேனிர் நிறத்தில் / Coco—cola நிறதத்ில் வெளியேறும்.
    பித்தப்பாதையில் ஏதாவது நோய்கள் ஏற்படுமாயின் அதனால் எண்டாகும் நோவு வயிற்றின் மெல் பகுதியில் வலியாக உணரப்படும்.

    பித்தக்கற்களில் பலவகையுண்டு. பெரும்பாலான கற்கள் கொலஸ்ரோல் மற்றும் பித்தப் பொருட்கள் என்பவற்றினால் ஆக்கப்பட்டது. பித்தக் கற்களின் அளவு மற்றும் அவை காணப்படும் இடம் (பித்தப்பையா ? பித்தக் குழாயா?) என்பவற்றைப் பொறுத்து ஏற்படும் நோய்குணங்குறிகள் வேறுபடும்.


  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    அடிசன்

    நோய்க் குணங்குறிகள்
    இந்நோய் பொதுவாக காலம் தாமதித்தே கண்டறியப்படுகிறது

    1. களைப்பு
    2. பலவீனம்
    3. பசியின்மை
    4. உடல் எடைக்குறைவு
    5. தலைச்சுற்றல்
    6. தலைவலி
    7. மூட்டுவலி
    8. மனச்சோர்வு
    9. மனநோய்
    10. சமிபாட்டுத்தொகுதியில் – குமட்டல், வாந்தி
    11. வயிற்று நோ
    12. மலச்சிக்கல்
    13. தோல் கைகளின் கரமை அதிகரித்தல்
    14. உதடுகளின் மேலணி கருமையடைதல்
    15. நிற்கும் போது இரத்த அழுத்தம் குறைதல்
    16. சுற்றோட்ட செயலிழப்பு
    17. தோல் வெளிறல்
    18. காயச்சல்
    19. ஆண்மைக் குறைவு
    20. மாதவிடாய்ச் சிக்கல்கள்
    21. மூட்டு மற்றும் நாரிவலி

    பரிசோதனைகள்
    1.குறுகிய கால acth பரிசோதனை சினக்தன் வழங்கப்பட்டு அதன் முன்னரம் 30 நிமிடங்களின் பின்னரும் குருதிப்பாய கோட்டிசோலின் அளவு அளவிடப்படும்
    2 வது அளவீடு 50 நனோமூல்/லீற்றா விட அதிகமாக காணப்பட்டால் நோயானது இல்லை எனக்கூறலாம் .
    2.காலை 9மணிநேரத்தில் acth இன் அளவு 300மி.கி/லீற்றருக்கு அதிகமாக காணப்படல். எனினும் இது சில குறிப்பிட்ட வகை நிலைமைகளில் குறைவாக காணப்படும்
    3.வயிறு மற்றும் நெஞ்சின எக்ஸ் கதிர்ப்படம்
    காச நோய் அதிரினல்களில் கல்சியம் படிவு ஆகியவற்றை கண்டறியலாம்
    4.mri ஸ்கான் ct ஸ்கான் uss ஸ்கான் காச நோய் அதிரினல்களில் கல்சியம் படிவு ஆகியவற்றை கண்டறியலாம்
    5.சோடியம் குறைதல் பொற்றாசியம் கூடுதல் கல்சியம் கூடுதல் குருதியில் கியோசினோபில் கலங்கள் கூடுதல் குருதிச்சோகை
    6.நோயாளி மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டு குருதியழுத்தம் குறைந்து காணப்படடால் ஐதரோக்கோட்டின் 100மி.கி வழங்கப்பட்டு இயலுமாயின் acth பரிசோதனையானது உடனடியாக செய்யப்படல்.


  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    குடல் புற்றுநோய் (Clinical features).

    நோய்க்குணங்குறிகள்
    1. மலத்தினூடாக இரத்தம் வெளியேறுதல்..
    இரத்தம் மாற்றத்திற்குள்ளாகி கறுப்பு நிறமாகவோ அலல்து மாற்றத்திற்குள்ளாகாமல் சிவப்புநிறமாகவோ காணப்படலாம்.
    2. மலம் கழிக்கும் வழமையில் மாற்றம் ஏற்படலாம்..
    அதாவது மலச்சிக்கலும் வயிற்றோட்டமும் மாறி மாறி ஏற்படலாம். அத்துடன் மவம் கழிக்கும் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இவை சாதாரணமானதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்கள் முன்னைய மலம் கழிக்கும் வழமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
    3. சடுதியாக ஏற்படும் குடல் அடைப்புடன் (Intestina obstruction) நோயாளி வைத்திய சாலைக்கு வரலாம். இதன்போது நோயாளிக்கு வயிற்றுவலி மலம் செல்லாமை (ஊழளெவயைவழை,வயிறு வீக்கம் , வாந்தியெடுத்தல் ஆகிய குணங்குறிகள் காணபப்டலாம்.
    4. நீண்ட காலத்திற்கு குடல் புற்றுநோயிலிருந்து தொடர்ச்சியாக சிறிது சிறிதபக இரத்தக் கசிவு ஏற்படுவதனால் நோயாளிக்கு குருதிச் சோகை (Anemia) ஏற்படலாம். இதனால் சோர்வு ,மூச்சடைப்பு , நெஞ்சு படபடப்பு என்பன ஏற்படலாம்.
    5. உடல் நிறைகுறைவு மற்றும் உணவில் விருப்பமின்மை.
    6. மலம் கழித்தபின்னரும் மலம் முற்றாக வெளியேறாதது போன்ற உணர்வு ஏற்படலாம்.
    7. வைதத்ியரினால் மலவாயிலூடாக விரல் விடப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றபோது சிலவேளைகளில் மலக்குடலில் அல்லது குதமார்க்கத்தில் காணப்படும் கட்டி கண்டுபிடிக்கப்படலாம். சில வேளைகளில்மலவாசல் பரிசோதனையின் பின் வைத்தியரின் விரலில் காணபப்டும் இரத்தத்திலிருந்து குடல் புற்று நோய் இருப்பது சந்தேகிக்கப்படும்.
    8. குடல் புற்று நோயானது ஈரவிற்கு போதுவாகப் பரவுகின்ற தன்மை கொண்டது. இதனால் ஈரலின் பரிமாணம் அதிகரிக்கின்றது. இது வைத்தியர் வயிற்றுப் பகுதியை அமத்தி பரிசோதனை செய்கின்றபோது அவரினால் அடயாளம் காணப்படலாம்.

    குடல் புற்றுநோய்
    நோயாளியினால் வழங்கப்படுகின்ற நோய்க்குணங்குறிகள் மற்றும் வைத்தியரினால் செய்யப்படும் உடற்பரிசோதனைகளிலிருந்து குடல் புற்றுநோய் இருப்பது ஓரளவிற்கு அடையானப்படுதத்ப்படும். இதனை உறுதிசெய்வதற்காக மேலதிக பரிசோதனைகளை மருத்துவர் செய்வார்.


  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    சிறுநீரகத் தொகுதி

    மனித உடலானது பல தொகுதிகளை கொண்டது.உதாரணமாக குருதிச்சுற்றோட்டத் தொகுதி, சமிபாட்டுத்தொகுதி, நரம்புத்தொகுதி, கழிவுத்தொகுதி, என்பு தசைத்தொகுதி, சுவாசத்தொகுதி என்பன அடங்கும். ஒவ்வொரு தொகுதியும் தமக்கேயுரிய தொழிற்பாடுகளை கொண்டவை.இத்தொகுதிகள் யாவும் இணைந்தே உடலை உருவாக்குவதுடன் நாளாந்த தொழிற்பாடுகளையும் மேற்கொள்கிறது.இந்த வகையில் சிறுநீரகத்தொகுதி உடலின் பலவிதமான முக்கிய தொழில்களை ஆற்றுகின்றது. அவையாவன:

    • உடலில் காணப்படும் கழிவுப்பொருட்களான யூரியா போன்றவற்றை வெளியேற்றுதல்
    • உடலில் நீர் கனியுப்புக்களின் சமநிலையை பேணுதல்.இதனாலேயே சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களில் உடலில் நீர் கனியுப்புக்கள் தேக்கமடைவதால் அவர்கள் வீக்கமடைவார்கள்.
    • பல முக்கிய ஓமோன்களையும்,உடல் இரசாயனத்தாக்கங்களையும் செய்வதன் காரணமாக

    • குருதியில் செங்குருதிச்சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கு உதவுகிறது.எனவே சிறுநீரகங்கள் பாதிப்படைந்தவர்களில் செங்குருதிக்கலங்களின் அளவு குறைவடைவதால் குருதிச்சோகை ஏற்படுகிறது.

    • உடலில் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்துகிறது
    • விற்றமின் D தெகுப்பிற்கு உதவுகிறது எனவே சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களில் விற்றமின் D இன் அளவு குறைவடைந்து என்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

    சிறுநீரக தொகுதியானது பின்வரும் முக்கிய பகுதிகளால் உருவாக்கப்பட்டது.அவையாவன
    • ஒரு சோடி சிறுநீரகம்
    • ஒரு சோடி சிறுநீர்க்குழாய்கள்
    • சிறுநீர்ப்பை சுரப்பி (ஆண்களில் மட்டும்)
    • சிறுநீர் வழி

    குருதியானது வடிகட்டப்பட்டு சிறுநீரகத்தில் சிறுநீர் உருவாக்கப்படுகிறது.சிறுநீர் நீர்,கழிவுப்பொருட்கள் என்பவற்றால் ஆக்கப்பட்டது.பின்னர் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பக்கு சிறுநீரை கடத்துகின்ற தொழிலை சிறுநீர்க்குழாய்கள் செய்கின்றன.இதன்போது சிறுநீர்க்குழாயில் ஏற்படும் சுற்றுச்சுருங்கல் அசைவு இதற்கு துணைபுரிகிறது.
    பின்னர் சிறுநீர்ப்பையில் சிறுநீரானது தற்காலிகமாக சேமிக்கப்படும்.ஏறத்தாழ 400 ml சிறுநீர் சேர்ந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டுமமென்ற உணர்வு ஏற்படும்.இதன் பின்னர் சிறுநீர்ப்பை சுருங்குவதனாலும் சிறுநீர்ப்பையின வாயிலுள்ள இறுக்கிகள் தளருவதாலும் சிறுநீரானது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்ப்பையினூடாக வெளியேறுகிறது.
    சிறுநீர் வழியானது ஆண்களில் நீண்டதாகவும் (20 cm) பெண்களில் சிறியதாகவும் (4 cm) காணப்படும். இச்சிறுநீர் வழியில் எங்காவது அடைப்பு ஏற்படுமாயின் வலி ஏற்படுவதுடன் சிறுநீர் உடலில் தேங்கி நிற்கு் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.இவற்றினால் சிறுநீரகத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

    கட்டமைப்பு
    சிறுநீரகத் தொகுதியின் கட்டமைப்பு


    சிறுநீரகங்கள் அவரைவித்து வடிவானவை. நடுக்கோட்டுப் பகுதியில் குழிவானவை. பக்கப்பாடாக குவிவானவை. சிறுநீரக உறையால் மூடப்பட்டிருக்கும். இது வெண்நார் இழையங்களால் ஆக்கப்பட்டது. நடுக்கோட்டு மேற்பரப்பில் மணிப்புள்ளி உண்டு. இதன் வழியாக குருதிக்குழாய்கள், நிணநீர்குழாய்கள், நரம்புகள் செல்கின்றன. சிறுநீர்குழாய் இதன் வழியாகசெல்கிறது.சிறுநீரகங்களின் அதிவெளிப்புறப் பகுதி மேற்பட்டையாகும். உட்புறமான பகுதிமையவிழையம் ஆகும்.மையவிழையத்தில் சிறுநீரக பிரமிட்டுக்கள் எனப்படும் கூம்பு வடிவமான பல அமைப்புக்கள் உள்ளன.இவை வரித்தோற்றம் உடையவை .


  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    சிறுநீரகத்திகள்

    சிறுநீரகத்தி ஒரு முனையில் மூடப்பட்டும் மற்றய முனையில் திறந்து காணப்படுகின்றதுமான சிறுகுழாய் ஆகும்.இது திறந்த முனை வழியாகசேகரிக்கும் கானினுள்திறக்கின்றது. இதன் மூடியமுனை கிண்ண வடிவமான போமனின் உறையை அமைக்கின்றது.இதன் வெளியான படைதனிச் செதில் மேலணியால் ஆக்கப்பட்டது. உள்ளான படையில்பாதக்குழியங்கள் என்னும் விசேடகலங்கள் காணப்படுகின்றன.
    போமனின்உறையைத்தொடர்ந்து அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய் என்லேயின் இறங்குபுயம், என்லேயின் வளைவு, என்லேயின் ஏறுபுயம் என்பனவும் இதனைத் தொடர்ந்த சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாயும் காணப்படுகின்றது.
    சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாயின் அந்தம் சேகரிக்கும் கானில் திறக்கிறது. அண்மையான மடிப்படைந்த சிறுநீர்குழாய் எளியகன வடிவமேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டது இதன் சுயாதீன கலப்பரப்பில் நுண்சடை முளைகள் காணப்படும். என்லேயின் இறங்குபுயம் எளியகன மேலணியாலும் ஆக்கப்பட்டது. என்லேயின் வளைவு எளிய செதில்மேலணியாலும் ஆக்கப்பட்டது


  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    என்லேயின் தடம்

    சிறுநீரகத்தியின் என்லேயின் தடம் u வடிவமான குழாய் போன்ற பகுதியாகும். என்லேயின் தடம் நீர்காப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அமைப்பு என்லேயின் தடத்தினால் மையவிழையப் பகுதியில் அதிக உப்புச்செறிவு ஏற்படுத்தபடுகின்றது. இதன் காரணமாக மையவிழையப் பகுதியூடு செல்லுகின்ற சேகரிக்கும் கான்களில் இருந்து பிரசாரணம் மூலம் நீர் வெளியேறி மையவிழையத்தை அடைவதனால் சிறுநீர் மூலம் இழக்கப்படும் நீரின் அளவு மேலும் குறைவடைகின்றது.

    என்லேயின் இறங்குபுயம் வழியாக கலன் கோள வடித்திரவம் கீழ் நோக்கியும் ஏறுபுயம் வழியாக மேல் நோக்கியும் செல்கின்றது. இதனால் இது எதிரோட்டப் பொறிமுறையை ஏற்படுத்துகின்றது.
    என்லேயின் இறங்கு புயம் நீரைப்புகவிடும் தன்மையுடையது. இதனால் கலன்கோள வடித்திரவத்தில் இருந்து பிரசாரணம் மூலம் நீர் வெளியேறுகின்றது.

    மையவிழையப் பகுதியில் இருந்து Na+ அயன்கள் உயிர்ப்பாகவும் CI- மந்தமாகவும் இறங்கு புயப்பகுதியில் உள் எடுக்கப்பட்டு கலன்கோள வடித்திரவத்தினுள் சேர்க்கப்படுகின்றது. இதனால் இறங்கு புயத்தில் கீழ் இறங்கிச் செல்லச் செல்ல வடித்திரவத்தில் Na+, CI- அயன்களின் செறிவும் அதிகரித்துச் செல்லும் மிகக்கூடிய காரியங்களின் செறிவு என்லேயின் வளைவுப்பகுதியில் காணப்படும். தடத்தின் நீளம் அதிகரிக்க இவ்வாறான நீரின் மீள் அகத்துறிஞ்சலும் அதிகரிக்கும்.

    என்லேயின் ஏறுபுயம் நீரைப்புகவிடும் தன்மை அற்றது இப்பகுதியில் கலன் கோளவடித்திரவத்தில் இருந்து உயிர்ப்பான முறையில் Na+ அயன்களும் மந்தமான முறையில் CI- அயன்களும் வடிவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மைய விழையத்தில் விடப்படுகின்றது.

    சிறுநீரகத்தியின் அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதி தேர்விற்குரிய மீள் அகத்துறிஞ்சலை நிகழ்த்தும் பிரதான பகுதியாகும். மீள் அகத்துறிஞ்சலுக்கு ஏற்றதாக இதில் காணப்படும் சிறப்பியல்புகள்

    1. கலங்களின் மேற்பரப்பில் நுண்சடை முளைகள் இருப்பதனால் அதிக மேற்பரப்பு வழங்கப்படுகின்றது.

    2. உயிர்ப்பான அகத்துரிஞ்சலிற்கு ATP யை வழங்க இழை மணிகள் அதிக எண்ணிக்கையில் இருத்தல்.

    3. குருதி மயிர் குழாய்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருத்தல்.


  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    தொழிற்பாடு

    சிறுநீரகத் தொகுதி


    மனிதனின் சிறுநீரகங்களின் தொழில்கள்

    1 நைதரசன் கழிவுகளை அகற்றுதல்
    2 உடலின் நீர் சமநிலையைபேணுதல்.
    3 குருதியின் கன அளவைபேணுதல்.
    4 குருதியின் pH இனை சமப்படுத்தல்.
    5 பிரசாரணச் சீராக்கம்செய்தல்.
    6 சிறு நீரை உருவாக்குதல்.
    7 குருதி அமுக்கத்தைப்பேணுதல்.
    8 ஒரு சீர் தடநிலயைப்பேணுதல்.
    சிறுநீர் ஆக்கச் செயற்பாடு.
    சிறுநீர் ஆக்கம் சிறுநீரகத்திகளில் நிகழுகின்றது. இது மூன்று படிநிலைகளை உடையது.
    1. அதீத வடிகட்டல்
    2. தேர்வு மீள் அகத்துறிஞ்சல்
    3. சுரத்தல்

    அதீத வடிகட்டல்
    அதீத வடிகட்டலில் குருதி வடிகட்டப்படுகின்றது. இதில் உயர் அமுக்கம் காரணமாக கலன்கோளத்தின் குருதி மயிர்க்குழாய்களின் சுவரின் ஊடாகவும் போமனின் உறையின் உள்ளான சுவரின் வழியாகவும் குருதி வடிக்கப்படுகின்றது.
    வடிகட்டலால் பெறப்பட்ட வடித்திரவம் கலன்கோள வடிதிரவம் எனப்படும் .

    இதில் நீர், உப்புகள், அல்லது கனிப்பொருள், அயன்கள், அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், யூரியா, விற்றமீன்கள், சில மருந்துகள் என்பன காணப்படும்.குருதி முதலுருப் புரதங்களும் குருதிக் கலவைகளும் வடிதிரவத்தில் காணப்படுவதில்லை.

    தேர்வு மீள் அகத்துறிஞ்சல்

    அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியில் கலன்கோள வடிதிரத்தில் இருந்து சில பதார்த்தங்கள் தேர்விற்குரிய முறையில் மீள் அகத்துறிஞ்சப்படுகின்றன.

    Na+, அமினோ அமிலங்கள், குளுக்கோஸ் என்பவை உயிர்பான முறையில் மீள் அகத்துறிஞ்சபடுகின்றன. கட்டுப்பட்ட நீரின் மீள் அகத்துறிஞ்சல் இங்கு நிகழ்கின்றது.C1-, யூரியா, HCO3 என்பன மந்தமான முறையில் மீள் அகத்துறிஞ்சபடுகின்றன.
    கலன் கோள வடித்திரத்தில் இருந்து ஏறத்தாள 75 % நீரின் மீள் அகத்துறிஞ்சல் அண்மையான மடிப்படைந்த சிறுகுழாயில் நிகழ்கின்றது. இது உடலின் நீர் சமநிலையில் தாங்கியிருக்காது. ஆகையால் கட்டுபட்ட நீரின் மீள் அகத்துறிஞ்சல் எனப்படும்.
    ஆரோக்கியமனவர்களின் கலன்கோள வடித்திரவத்தின் இருந்து அமினோ அமிலங்கள், குளுக்கோஸ் என்பன முற்றாக மீள் அகத்துரிஞ்சபடுகின்றது.

    இதனையடுத்து கலன் கோள வடித்திரவம் என்லேயின் இறங்கு புயம் வழியாகச் செல்லுகின்றது. இதில் பிரசாரணம் மூலம் அதாவது, மந்தமான முறையில் நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.
    என்லேயின் ஏறுபுயத்தில் Na+ இன் உயிர்ப்பான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. C1- இன் மந்தமான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.

    சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியில் Na+ இன் உயிர்ப்பான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. C1- இனதும் HCO3-, இனதும் மந்தமான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.

    ADH ஓமோன் காணப்படும்போது இங்கு நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. ADH இனால் சேகரிக்கும் சிறுகான் பகுதியில் இருந்தும் நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது,
    சுரத்தல் ( Secretion)
    சிறுநீரகத்திகளின் சேய்மையான மடிப்படைந்த சிறு குழாய்பகுதியில் நிகழ்கின்றது.இங்கு குருதியில் இருந்து உயிர்ப்பான முறையில் K+, H+, NH4+, Creatinine, யூரியா, சில மருந்துகள் என்பன கலன்கோள வடித்திரவத்தினுள் சுரந்து விடப்படுகின்றன
    சிறுநீரகண்களால் நாள் ஒன்றிற்கு ஏறத்தாள 100 – 180 l குருதி வடிக்கபடுகின்றது. இங்கு நாள் ஒன்றிற்கு 1 - 2 l வரையிலான சிறுநீர் உருவாக்கபடுகின்றது. சேகரிக்கும் கான் வழியாகச் செல்லும் சிறுநீர் சிறுநீரக இடுப்பு பகுதியில் சேகரிக்கப்படுகின்றது. இதில் இருந்து சிறுநீர் கான்கள் வழியாக சிறுநீர்ப்பையை அடைகின்றது.சிறுநீர் பையினுள் தற்காலிகமாகச் சேமிக்கப்படும் சிறுநீர் சிறுநீர்வழியூடு வெளியேற்றப்படுகின்றது.


  10. #50
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    மனிதனின் சிறுநீரில் காணப்படும் கூறுகள்

    1. நீர்
    2. யூரியா
    3. Creatinine
    4. யூரிக்கமிலம்
    5. அமோனியா
    6. Na+, K+, C1-, PO3-4 போன்ற அயன்கள்

    சிறுநீரகத்தில் இருவகையான சிறுநீரகத்திகள் காணப்படுகின்றன.

    1. மேற்பட்டைக்குரிய சிறுநீரகத்தின் இவற்றின் பெரும்பகுதி சிறுநீரக மேற்பட்டையில் காணப்படுகின்றது.என்லேயின் தடம் நீளம் குறைந்ததாகவும் காணப்படும். இவ்வகைச் சிறுநீரகத்திகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

    2. மேற்பட்டை மைய விளையச் சிறுநீரகத்திகள் இவற்றில் போமனின் உறைப்பகுதி மேற்பட்டைமையவிழைய சந்திப்பிற்கு அருகாகக் காணப்படும். என்லேயின் தடம் நீண்டு காணப்படுகின்றது.நீர் குறைவகாகக் கிடைக்கும் நிலையில் உடலில் மேலதிக நீரைப் பேணும்வகையில் மேற்பட்டை மையவிழையச் சிறுநீரகத்திகள் தொழிற்படுகின்றன.


    சிறுநீர் கழித்தல்
    சிறுநீர் கழித்தல் தெரிவினைச் செயற்பாடு ஆயினும் இச்சைவழி இதனைக் கட்டுப்படுத்த முடியும். சிறுநீர்பையில் சிறுநீர் நிரம்பும்போது அதன் சுவர் விரிவடைகின்றது. இதில் இருக்கும் இழுவை வாங்கிகள் தூண்டப்பட்டு சிறுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.

    சிறுநீர்பை சுருக்கம் அடைந்து அதன் அடியில் உள்ள இறுக்கித் தசைகள் தளர்ந்து சிறுநீர் வெளியேற்றப்படுகின்றது.
    சிறுநீரகங்களினால் பிரசாரணச் சீராக்கம் செய்யப்படுதல்
    குருதியின் கரைய அழுத்தத்தினை மாறுபடாது பேணுவதில் சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய்பகுதியும் சேகரிக்கும் கானும் ஈடுபடிகின்றன. உள் எடுக்கப்படும் நீரின் அளவு குறைதல், வியர்வை மூலம் இழக்கப்படும் நீரின் அளவு கூடுதல் என்பவற்றால் குருதியில் கரைய அழுத்தம் மேலும் எதிர் பெறுமானம் அடைகின்றது.

    இந்த மாற்றம் பரிவாகக் கீழில் உள்ள பிரசாரண வாங்கிகளால் அறியப்படுகின்றது. இதன் தூண்டலால் கபச்சுரப்பியில் இருந்து ADH (Anti diuretic hormone) வெளிவிடப்படும் அளவு அதிகரிக்கின்றது. ADH குருதி வழியாக சிறுநீரகங்களை அடைகின்றது. ADH சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியிலும் சேகரிக்கும் கான்களிலும் நீரின் புகவிடும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் கலன்கோள வடித்திரவத்தில் இருந்து மேலும் நீர் வெளியேறி குருதியை அடைகின்றது. குருதியின் பிரசாரணச் செறிவு இயல்பு நிலையை அடையும்போது பரிவாகக் கீழில் உள்ள வாங்கிகளின் செயற்பாடு எதிர் பின்னூட்டல் முறையில் நிரோதிக்கப்படுகின்றது.

    ADH இன் முன்னிலையில் நிகழும் நீரின் மீள் அகத்துறிஞ்சல் அமையத்திற்கு ஏற்ற நீரின் மீள் அகத்துறிஞ்சல் எனப்படும். இதனால் குறைந்த கனவளவின் செறிவு கூடிய சிறுநீர் உருவாக்கப்படுகின்றது.

    உள் எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கும்போது வியர்வை மூலம் இழுக்கப்படும் நீரின் அளவு குறையும்போது குருதியில் நீரின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் குருதியில் கரைய அழுத்தம் குறைந்தளவு எதிர் பெறுமானத்தை அடைகின்றது.
    இந்த மாற்றம் பரிவாகக்கீழில் உள்ள பிரசாரண வாங்கிகளால் அறியப்படுகின்றது. இதன் தூண்டலால் கபச்சுரப்பியில் இருந்து வெளியே விடப்படும் ADH இன் அளவு குறைகின்றது. இதனால் சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறு குழாயிலும் சேகரிக்கும் கானிலும் நீரின் புகவிடும் தன்மை இழக்கப்படுகின்றது. இதனால் இங்கு நிகழக்கூடிய அமையத்திற்கேற்ற நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ முடியாது போகின்றது. எனவே மேலதிகமான நீர் சிறுநீர் மூலம் இழக்கப்படுகின்றது. இதனால் ஐதான கனவளவு கூடிய சிறுநீர் உருவாக்கப்படுகின்றது.
    குருதியில் கரைய அழுத்தம் இயல்பு நிலையை அடையும்போது பிரசாரண வாங்கிகளின் செயற்பாடு எதிர்பின்னூட்டல் முறையினால் நிரோதிக்கப்படுகின்றது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter