Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்


Discussions on "Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்" in "General Health Problems" forum.


  1. #61
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    பால் இனச் சுரப்பி

    பால் இன ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகளாக விரைகளும், சூலகங்களும் விளங்குகின்றன. இச்சுரப்பிகள் பால் இன ஹார்மோன்களைச் சுரந்து, இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. இந்த ஹார்மோன்கள் இரண்டு தரமான காரியங்களைச் செய்கின்றன. முதல்தரப் பாலினப் பண்பு, இரண்டாந் தரப் பாலினப் பண்பு என்பதாக அப்பணிகள் வேறுபடுகின்றன.

    முதல்தரப் பண்பில், பால் இன உறுப்புக்களும், ஆண் மற்றும் பெண்களில் கலவி உறுப்புக்களும் அடங்கும். இரண்டாந் தரப் பண்பில், ஆணிலிருந்து பெண்ணையோ அல்லது பெண்ணிலிருந்து ஆணையோ பிரித்தறியக் கூடிய அமைப்புக்கள் அடங்கும்.
    அவை பின்வருமாறு:

    1. ஆண், பெண் உடலமைப்பு வேறுபாடு, அதாவது உடல் அமைப்பு, தோள்பட்டை, இடுப்புப் பின் பகுதியமைப்பு, மார்புக் கூடு, மண்டை அமைப்பு.

    2. தேகத்தில் தாடி, மீசை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் ஆண்களுக்கு முளைக்கக் கூடிய உரோம அமைப்பு.

    3. பேசும் போது ஏற்படுகிற குரல் வித்தியாசம்
    பால் இன ஹார்மோன்கள் வகைகளை மூன்றாகக் கூறுவார்கள்.

    a) ஆன்ட்ரோஜென்ஸ்
    b) ஒஸ்ட்ரோஜென்ஸ்
    c) புரோஜெஸ்ட்ரஜென்ஸ்


    ஆண் பால் ஹார்மோன்

    இவற்றில், டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஆன்ட்ரோஸ்டீரான் ஹார்மோன்கள் விரைகளால் செய்யப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள், ஆண்களுக்கு ஏறத்தாழ 15 வயதாகிற போது, பூரண வளர்ச்சியடைந்து விடுகின்றன. இதன் தொழில் எடுப்பாக ஆரம்பமாகும் பொழுது, மிடுக்கான பல மாற்றங்கள், ஆண்கள் தேகத்தில் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

    1. முகத்திலும் தேகத்திலும் மயிர் வளர்ச்சி.

    2. பேசும் குரலில் கனம். அகன்ற குரல்.

    3. தேகத்தில் உண்டாகும் தசை அமைப்பு.
    15 வயதிற்கு முன்னதாக இச்சுரப்பிகள் அகற்றப்பட்டால், மேற்கூறிய மாற்றங்கள் எதுவும் தேகத்தில் நிகழாது. மேற்கூறிய குணங்கள் இல்லாது போனால், அவர்களை அலிகள் என அழைப்பர்.

    பெண் பால் ஹார்மோன்
    சூலகத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்களில், ஒஸ்ட்ரோஜென்ஸ் முக்கியமானதாகும். சூலகங்கள் இரண்டும், வயிற்றின் அடிப்பாகத்தில், கருபப்பையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. பெண்களுக்கு 12 அல்லது 13 வயது ஆகும் போது இந்தச் சுரப்பிகள் பூரண வளர்ச்சியைப் பெறுகின்றன. இதன் அறிகுறிகள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாகும்.

    இந்த ஹார்மோன்களின் பணிகள் பின்வருமாறு:
    1. பெண்களின் பருவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.
    2. மார்பகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    3. மாதவிடாயைக் கட்டுப்படுத்துகிறது.
    மூன்றாவதாக உள்ள ஹார்மோன் புரோஜெஸ்டிராஜென்ஸ் ஆகும். இது கர்ப்பத்தின் சகஜமான பணிக்கு உதவுகிறது. இந்த ஹார்மோனை, கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கின்றனர். பெண்பால் ஹார்மோன்கள், ஆண்பால் ஹார்மோன்களைப் போல செல்களின் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கேற்கின்றன.

    பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுகின்றது. பெண்களுக்கு 40 முதல் 50 வயதாகும் போது, இந்த ஹார்மோன்கள் சுரப்பது, படுப்படியாகக் குறைந்து போகிறது. இதன் காரணமாக மாதவிடாய் நின்று போகிறது. இதை ஆங்கிலத்தில் மெனோபாஸ் என்பார்கள். மாதவிடாய் நின்று போகிற சமயத்தில், அதிகமான நரம்புக் கிளர்ச்சி, தலைவலி, சிலசமயங்களில் உறக்கம் இன்மை போன்ற விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும். என்றாலும், அவற்றை, அறிவாண்மையுடன் பொறுத்துக் கொள்ளுதல் பெண்களுக்கு அழகாகும். அந்த மனப் பண்பாடு இருந்தால்தான், மகிழ்ச்சியோடு வாழ முடியும். மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு மகப்பேறு பெறுகிற பாக்கியம் முடிந்து போய்விடுகிறது.


    Sponsored Links

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    கணையச் சுரப்பி

    கணையமானது, உட் சுரப்பும், வெளிச் சுரப்பும் கொண்ட ஒரு சுரப்பியாகும். இதன் ஹார்மோன் ஒன்று முன் சிறு குடலுக்குச் செல்கிறது. இதைத் தவிர, கணையம் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது.

    a. இன்சுலின் இன்சுலின் மாவுப் பொருளைக் கரைக்கும் பணிக்கு உதவுகிறது. இது மாவுப் பொருளைக் கரைக்கவும், கிளைக்கோஜனைத் தசைகளிலும் கல்லீரலிலும் சேர்த்து வைக்கவும் உதவுகிறது. இந்த ஹார்மோன் மந்தமாக சுரந்தால், நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்பட்டு விட்டால், திசுக்கள் சர்க்கரையை சகஜமான முறையில் தன்மயமாக்கிட முடியாமல் போகிறது. கல்லீரலும் கிளைக்கோஜனைச் சேமித்து வைப்பதில் தவறி விடுகிறது. அதனால் சிறுநீரில் சர்க்கரை காணப்படுகிறது.

    b. குளுக்காகோன் குளுக்காகோன் ஹார்மோன், கிளைக்கோஜன் சேமிப்பைச் சீர்குலைக்கும் பணியைச் செய்கிறது. அதாவது, இன்சுலின் செய்கிற விளைவுகளுக்கு எதிரான பணியில் ஈடுபடுகிறது.

    பீனியல் சுரப்பி
    பீனியல் சுரப்பி, பெருமூளை எபிபிசிஸ் எனும் இடத்தில், ஒரு சிறிய உறுப்பாக அமைந்திருக்கிறது. இச் சுரப்பியின் பணி பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தைப் பருவத்தில், இச்சுரப்பி சிறந்த முதிர்ச்சிமிக்க வளர்ச்சியை அடைகிறது என்றும், இனப்பெருக்கச் சுரப்பிகள் பருவத்திற்கு முன்னதாக, வளர்ச்சியடைவதைத் தடுப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.


  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    நோய்கள் பற்றி

    நாளமில்லாச் சுரப்பித் தொகுதியுடன் தொடர்புடைய நோய்கள்
    கபச்சுரப்பி நோய்கள்


    கபச்சுரப்பியானது குறைந்தளவு அல்லது அதீத செயற்பாட்டை காட்டக்கூடியதாகும்

    கபச்சுரப்பியினால் பினவரும் நோய்கள் ஏற்படலாம்;
    1. செயற்பாட்டுக் குறைவு
    2. அதீத வளர்ச்சி

    கபச்சுரப்பியினால் பின்வரும் ஹார்மோன்கள் சுரக்கப்டுகின்றன
    1. வளர்ச்சி ஓமோன்
    2. FSH புடைப்பு வளார்ச்சி ஓமோன்
    3. தையிரொயிட்டை தூண்டும் ஓமோன் TSH
    4. LH-மஞ்சட் கலவிழையத்தை தூண்டும் ஓமோன்
    5. அதிரீனல் மேற்பட்டையை தூண்டும் ஓமோன் ACTH
    6. ஒட்சிடோசின்
    7. வேஸோபிரசின்

    கபச்சுரப்பியின் செயற்பாட்டுக்குறைவு
    இதன் போது கபச்சுரப்பியின் முற்புறப்பாகத்தால் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவானது பின்வரும் ஒழுங்கில் குறைவடையூம்
    1. வளர்ச்சி ஹார்மோன் (GH)
    2. FSH
    3. LH
    4. TSH
    5. ACTH
    சில வேளைகளில் அனைத்து ஹார்மோன்களினதும் அளவும் ஒட்டுமொத்தமாக குறைவடையாலாம் கதிர்வீச்சு சத்திரசிகிச்சை கபச்சுரப்பியில் கட்டுப்பாடற்ற கலவளர்ச்சி என்பன இதற்குரிய சில காரணிகளாகும் இந்நோய்க்கு குறைவடைந்த ஹார்மோன்களின் மீளப்பிரதியீடு செய்வதே உரிய சிகிச்சையாகும்.

    இவை பின்வருமாறு
    1. ACTH குறைபாட்டிற்கு - ஐடிரோகாட்டிசோன்
    2. TSH குறைவிற்கு - தைரொக்சின்
    3. இலிங்க உறுப்பு விருத்தி மற்றும் ஒஸ்டியோபுரோசிஸ் இற்கு இலிங்க ஹார்மோன்கள் - டெஸ்டெஸ்ரோன் 250மிகி மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் - ஈஸ்ரஜின்
    4. வளார்ச்சி ஹார்மோன் பிரதியீடு

    கபச்சுரப்பியில் ஏற்படும் அதீத கலவளார்ச்சி
    இவற்றில் மூன்று வகை உள்ளன
    1. குரோமோபோபீல் கலவளார்ச்சி - இது 70% கலவளர்ச்சியாகும் அநேகமாக இது வளர்ச்சி ஹார்மோனகளை உற்பத்தியாக்குவதில்லை
    2. அசிடோபில் கலவளாச்சி 15% இது வளர்ச்சி ஹார்மோன் அல்லது புரோலக்டினை சுரக்கும்
    3. பேசொபில் கலவளர்ச்சி 15% இது ACTH ஹார்மோனை சுரக்கும் இவை 1mm இலும் சிறியதாயின் மைக்ரோஅடினோமோ எனவூம் 1mm இலும் பெரியதாயின் மக்ரோஅடினமோ எனவூம் அழைக்கப்படும்.இவை தலைவலி பார்வைப்புலப்பாதிப்பு மண்டையோட்டு நரம்புப்பாதிப்பு போன்றவற்றைவும் எற்படுத்தும்.
    இவற்றை கண்டறிவதற்கு பின்வருவன பயன்படலாம்;
    1. கபச்சுரப்பியின் MRI ஸ்கான் பாரிசோதனை
    2. ஹார்மோன் அளவீடுகள்
    3. பார்வைப்புல பாரிசோதனைகள்

    சிகிச்சை
    • சத்திரசிகிச்சை மூலம் கலவளர்ச்சியை அகற்றல்
    • கதிர்வீச்சு மூலம் கலவளர்ச்சியை குறைத்தல்
    • ஹார்மோன் பிரதியீடுகள்


  4. #64
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    1) கபச்சரப்பி செயற்பாட்டுக் குறைபாடுகளுக்கான காரணிகள்

    அ)கால்மன் நோய்த்தொகுதி
    ஆ)கலவளர்ச்சி
    இ)அழற்சி
    ஈ)நோயத்தொற்று (காசநோய் மூளைக்காயச்சல்)

    2) கபச்சுரப்பி காம்பின் மட்டத்தில்
    அ)விபத்து சத்திரசிகிச்சையில் காயமேற்படல்
    ஆ)சத்திர சிகிச்சை
    இ)வேறு கலவளர்ச்சிகளினால் ஏற்படும் அழுத்தம்
    ஈ)மூளையினை சுற்றியூள்ள சுவர்களின் புற்றுநோய்கள்
    உ)குருதிக்குழாய்கள் விரிவடைதல்

    3) கபச்சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகள்

    1. அதீதகலவளர்ச்சி
    2. கதிர்வீச்சு
    3. அழற்சி
    4. வேறுநோய்களின் ஊடுருவல்
    5. குருதி வழங்கலில் ஏற்படும் குறைபாடுகள்

    சுரப்பிகளுடன் தொடர்புடைய மேலும் சில நோய்கள்
    தைராய்டின் அதிகமாகப் பணி என்பது அதிகமான சுரப்பாகும்.இதனால் உடலுல் மிகையான வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, நரம்பு மண்டலம் அதிகமாகக் கிளர்ச்சி பெற்று,கடைசியாக அந்த மனிதரை அசதிக்குள்ளாக்கும் கஷ்டத்தைக் கொடுத்து விடுகிறது. இந்த வியாதிக்குப் பெயர் பேஸ்டோவின் வியாதி என்பதாகும்.

    முண்டக்கண்,நரம்புத் தளர்ச்சி,வேகமான நாடித் துடிப்பு போன்றவை நோயின் குணங்களாகும். தைராய்டின் மந்தமாக பணி செய்யும் போது, மிக்சடிமா, கிரிட்டினிசம் வியாதிகள் ஏற்படுகின்றன.

    தாய்மார்களின் மகப்பேறு காலத்தில்,அயோடின் சத்து குறைந்து போவதால், அவர்களுக்கு அப்போது பிறக்கும் குழந்தைகள்,குறைந்த சக்தியுள்ள தைராய்டு சுரப்பிகளுடனே தான் பிறக்கும். அப்படிப்பட்ட தைராய்டு உள்ள குழந்தைகள், அறிவு வளர்ச்சி குறைவடைதல், சரியான வளர்சிதை மாற்றம் நிகழாது இருத்தல், உறுப்புக்களின் பொருத்தமற்ற வளர்ச்சி, மிகையான அறிவுச் சோர்வு போன்ற நிலைமையுடனேயே வளரும்.அந்த வியாதிக்கு கிரிட்டினிசம் என்று பெயர்.

    வயது வந்தவர்களுக்கு தைராய்டு சுரப்பியின் மந்தமான பணியால், உடலில் தண்ணீரும்,தசைகளில் கொழுப்புப் பொருட்களும் அதிகமாகச் சேர்ந்து விடும். அப்பொழுது ஏற்படும் அறிகுறிகள்”: முகம் பெரியதாக அளவில் மாறும். தலை, புருவம் இவற்றில் முடி உதிரும், அறிவு வளர்ச்சி குன்றும். தேகத்தில் தேவையான சூடு குறையும்.இப்படிப்பட்ட வியாதிக்கு மிக்சடிமா என்று பெயர்.

    பாராதைராய்டு சுரப்பி அதிகமாக பாராதார்மோனைச் சுரந்து விட்டால்,இரத்தத்தில் கல்சியத்தின் அளவு கூடிப்
    போகிறது.இதனால் சிறு நீரகப் பிரிவுகளில், ல்சியம் அதிகமாகப் படிந்து போய்,சிறு நீரகக் கற்கள் உண்டாகின்றன.
    அத்துடன், எலும்புகளில் உள்ள கல்சியச் சத்து, அதிகமாக எடுக்கப்பட்டு விடுவதால், ஆஸ்டிரிட்டிஸ் பைபிரோசாசிஸ்டிரிகா என்ற நோய் ஏற்படுகின்றது.

    கல்சியக் குறைவால், வாலிபர்களுக்குப் பல வியாதியும் ஏற்படக் காரணமாகின்றது. அதாவது, பாராதார்மோனின் விளைவு, வைட்டமின் d யைப் பாதிப்பதாகவும் அமைந்திருக்கிறது. பாராதார்மோன் சுரப்பு குறைந்து போய்விட்டால் இரத்தத்தில் கல்சியம் குறைகிறது. அதனால் வலிப்பு நோய் வருகிறது.


  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    ஹார்மோன் சீராக்கம்
    உடற்பயிற்சிகளும் நாளமில்லாச் சுரப்பிகளும்.

    இளைஞர்கள், சிறுவர்கள், தங்கள் தேகத்தை மிகுதியான தகுதியும் திறமும் கொண்டதாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், தகுதியான தேகமென, தேகவளர்ச்சியை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. உடற்பயிற்சிகள் தான், உயர்ந்த தேகத்திறனை வளர்த்து விடுகின்றன.
    டெஸ்டொஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிற போது, தசை வளர்ச்சி ஏற்படுகிறது. தசைகளில் வலிமையும், நீடித்துளைக்கும் ஆற்றலும் மிகுதியடைகின்றது.
    இன்சுலின் என்ற ஹார்மோன், அதிகமாகச் சுரக்கும்.சர்க்கரையில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்திகிறது.இன்சுலின் பற்றாக்குறை நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைகின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு,உடற்பயிற்சி உணவு போல் அமைந்து விடுகிறது. உடற்பயிற்சி அவர்களுக்குச் சீரான விடுதலையையும், பூரண மகிழ்ச்சியையும் வழங்குகிறது.
    அட்ரீனலின் உற்பத்தியை, உடற்பயிற்சி தூண்டுகிறது. அதனால் தேகத்தில் தகுதியும் திறமும் மிகுதியாக உண்டாகிறது. இப்படிப்பட்ட தகுதியுள்ள மனிதர்கள், சாதாரணமாக சுறுசுறுப்புடன் வாழ்கிறார்கள்.
    உடற்பயிற்சிகள் நாளமில்லா சுரப்பிகளை உற்சாகத்துடன் செயற்பட உதவுகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன.


  6. #66
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!

    நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.

    அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...

    பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

    ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

    மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

    மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

    ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

    நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

    நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

    நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது

    . மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

    உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

    ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

    கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

    மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

    கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

    900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

    மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.


  7. #67
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    தசைகள் எவ்வாறு இணைகளாகச் (pairs) செயல்புரிகின்றன?

    தசைகள் உண்மையில் இணைகளாகத்தான் செயல்படுகின்றன. ஒரு தசை ஒரு திசையில் இழுக்கப்படும்போது, உடன் உள்ள எலும்பை அதன் சரியான இடத்தில் வைத்திருக்க, அதன் இணைத் தசையை எதிர்த் திசையில் இழுக்க வேண்டியுள்ளது. நாம் நமது முன்கையை (forearm) உயர்த்தும்போது, மேற்கை முன்தசைகள் (biceps) எலும்பை உயர்த்தும் பொருட்டு குறுகுகிறது. நாம் நமது கையை நீட்டும்போது, மேற்கைப் பின் தசைகள் (triceps) அதனைப் பழையபடி இழுக்கின்றன; அப்போது கையின் முன் தசைகள் தளர்வுறுகின்றன. இதே போன்ற செயல்பாடுகள் நடக்கும்போதும் ஓடும்போதும் நமது கால்களில் நடைபெறுகின்றன; நமது கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் ஆகியன அசையும்போதும் நடைபெறுகின்றன.

    நாம் உண்ணும் உணவைச் சிதைத்து நடைபெறும் வேதியியல் செயல்பாடே வளர்சிதை வினை மாற்றம் (metabolism) எனப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சியின் போது நமது உடலில் நடைபெறும் வளர்சிதை வினை மாற்றத்தின் வீதம் அதிகரிக்கிறது; உண்ணும் உணவின் ஆற்றலும் அப்போதுதான் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

    உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் எவ்வாறு வினை புரிகின்றன (respond)?

    தசை நார்கள் (fibres) எனப்படும் மெல்லிய உயிரணுக்களால் (cells) ஆனவையே தசைகள். ஆனால் அவை என்ன செய்கின்றன, எவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பொறுத்துத் தசைகள் வேறுபடுகின்றன. ஒரு தசை சுருங்கும்போது, அது லேக்டிக் அமிலம் என்னும் ஓர் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அமிலம் நச்சுத் தன்மை வாய்ந்தது; இது உங்கள் தசைகளைக் களைப்படையச் செய்து அதன் விளைவாக உங்களையும் சோர்வடையச் செய்கிறது. இந்த லேக்டிக் அமிலத்தை களைப்புற்ற தசையிலிருந்து நீக்கி விட்டால், சோர்வு நீங்கி உங்களால் மீண்டும் நன்கு செயல்பட முடிகிறது!

    ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது லேக்டிக் அமிலம் சாதாரணமாக வெளியேற்றப்படுவதில்லை; மற்றும் தசைகள் சுறுசுறுப்பாக இயங்கும்போது பல்வேறு நச்சுப் பொருட்களும் (toxins) உற்பத்தியாகின்றன. அவை இரத்தத்தால் உடல் முழுதும் எடுத்துச் செல்லப்பட்டு, உடல், குறிப்பாக மூளை களைப்படையக் காரணமாகின்றன. எனவே உடற்பயிற்சிக்குப் பின்னர் களைப்பாக உணர்வது என்பது ஒருவகை உட்புற நச்சுத்தன்மையால் உண்டாவதே.

    இருப்பினும், உடலுக்கு இக்களைப்பு உணர்வு தேவைப்படுகிறது எனலாம்; இதனால் உடல் ஓய்வு பெற விரும்புகிறது. ஓய்வின்போது கழிவுப் பொருட்கள் வெளியேறுகின்றன; உயிரணுக்கள் மீட்சி அடைகின்றன; மூளையின் உயிரணுக்கள் தமது மின்கலன்களுக்கு (batteries) மீள்செறிவூட்டம் (recharging) அளிக்கின்றன; மூட்டுகளில் பயன்படுத்தப்பட்ட உயவுப் பொருட்களுக்கு (lubricants) மாற்றுப்பொருட்கள் அளிக்கப்படுகின்றன. எனவே, உடலுக்கும் தசைகளுக்கும் உடற்பயிற்சியின்போது நன்மையே விளைகிறது.

    முழங்கால் என்பது ஒரு சுமைதாங்கும் இணைப்பு (joint) ஆகும். எலும்பின் முனைகளில் அமைந்துள்ள குஷன் (cushion) போன்ற குருத்தெலும்பு, அதன் மீதான தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உயவு நீர்மம் (synovial fluid) என்னும் உயவுப் பொருளால் எலும்பின் மீதான தேய்மானமும் குறைக்கப்படுகிறது.


  8. #68
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?


    உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வுசெய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப்
    பிரிக்கப்படுகின்றன. அக்குழுக்கள் பின்வருமாறு:

    எலும்பு (skeletal) மண்டலம்,

    தசை (muscular) மண்டலம்,

    நரம்பு (nervous) மண்டலம்,

    நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,

    மூச்சு (respiratory) மண்டலம்,

    இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,

    நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,

    செரிமான (digestive) மண்டலம்,

    கழிவு (excretory) மண்டலம் மற்றும்

    இனப்பெருக்க (reproductive) மண்டலம்


  9. #69
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.
    வளர்ந்த ஒருமனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

    ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்துபெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல்,சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப்பொருத்த முடியும்.

    ஓர் உயிரணுவின் (cell) உள்ளே என்ன இருக்கிறது?


    தாவரம், விலங்கு, மனிதர் ஆகிய அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் ஆனவையே. இவ்வுயிரணுக்களில் சைடோபிளாசம் (cytoplasm) எனப்படும் பாகு (jelly) போன்ற நீர்மப் பொருளே நிரம்பியுள்ளது.

    ஒவ்வொரு உயிரணுவும் மிக மெல்லிய சவ்வு போன்ற பொருளால், நீர் நிரம்பிய பலூன் (balloon) போன்று ஒன்றிணைக்கப்படுகிறது. உயிரணுவின் உள்ளே சைட்டோபிளாசம், குறிப்பிட்ட நுண் உறுப்புப் பகுதிகளில் (organells) அடங்கியிருக்கும். உயிரணுக்களின் செயல்பாட்டை இவையே கட்டுப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக புரதங்களின் (proteins) உற்பத்தியைக் குறிப்பிடலாம்.

    மைட்டோகாண்டிரியா (mitochondria) எனப்படும் மிகச் சிறு நுண்ணுறுப்புகள் உயிர்வளியைப் பயன்படுத்தி உனவுப் பொருளைத் துகள்களாக மாற்றி, உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

    அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.

    குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

    உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களையும் இவையே வெளியேற்றுகின்றன. உயிரணுவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் வேதிப்பொருட்களையும் இரத்தமே அளிக்கிறது.

    பொது அறிவு:
    உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.

    ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.

    தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.

    ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன

    உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.

    ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.

    தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.

    நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.

    உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். அதேபோல் காதுக்குள் இருக்கும்.

    சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு ரத்தம் செல்வதில்லை. இவை தமக்கு வேண்டிய சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன.

    செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.

    மூளை, உடலில் மொத்த எடையில் மூன்று சதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித கலோரிகளும், அதற்குத்தான் போகிறது. அது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன் உபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


    நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 200 துடிப்புகள் வரை கூட உயரும்


  10. #70
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Diseases of Internal Organs - உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

    கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு

    மனித உடலில் வெட்டினாலும் வளரக்கூடிய ஒரே உறுப்பு கல்லீரல் தான். அதே போல் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் உச்சபட்ச சாதனையாக இருப்பது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தான்.

    இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்கின்றன. ஆனால் கல்லீரல் மட்டும்தான் உணவை ஜீரணம் செய்வதில் ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது வரை, 3,000-க்கும் அதிகமான பணிகளை செய்து கொண்டே இருக்கிறது.
    குடிப்பழக்கத்தாலும், வைரஸ் கிருமிகளாலும் பாதிக்கப்படும் கல்லீரல் 80 சதவிகிதம் கெட்டுப்போன பிறகு தான் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதையே நம்மால் அறிய முடியும். இது நமக்குத் தெரியவரும் போது கல்லீரல் பிரேக் டவுன் ஆகும் நிலையில் இருக்கும்.

    கல்லீரல் புற்றுநோய், வயிற்றில் நீர் கோத்து வயிற்றைப் பானை போல் மாற்றி விடுவதோடு கால் வீக்கம், லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி, சுய நினைவு இழப்பு, நடக்கவே முடியாத நிலை எனப் படிப்படியாக மனிதனை முடக்கிவிடும்.

    ஆகையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றே நிரந்தரத் தீர்வு.
    கல்லீரல் பிரச்னை வராமல் இருக்க அதிகக் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதம், மாவுச் சத்து, வைட்டமின் மற்றும் காய்கறி, பழ வகைகளைச் சாப்பிடுவது கல்லீரலைக் காக்கும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter