Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #91
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரழிவு நோய் விவரங்கள் - Pdf 2
    please ref my earlier posts.


    Sponsored Links
    Attached Files Attached Files
    chan and thenuraj like this.

  2. #92
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Quote Originally Posted by Dangu View Post
    நீரழிவு நோய் விவரங்கள் - Pdf 2
    please ref my earlier posts.


    thanks uncle for the pdf...

    Dangu likes this.

  3. #93
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Quote Originally Posted by thenuraj View Post
    thanks uncle for the pdf...
    See my post # 40,50,59.

    All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


  4. #94
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம்



    பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை பராமரிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள உணவு கட்டுபாடு மிகவும் அவசியமாக உள்ளது. ஆகவே உணவுக்கட்டுபாட்டில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நீரிழிவுக்காரர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துகள், கொழுப்பு சத்துகள், அதிக கலோரிகள் இல்லாத உணவு வகைகளை தேர்வு செய்து உட்கொள்லாம்.

    செறிவூட்டப்பட்ட கொழுப்புக்கள் கொண்ட உணவுகள்.


    செறிவூட்டப்பட்ட கொழுப்புக்களை கொண்ட உணவுகளான இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சமைத்த பன்றி இறைச்சி, தீயில்வாட்டிய இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆதலால் செறிவூட்டப்பட்ட உணவை தவிர்க்கவும். குறிப்பாக பதப்படுத்தபட்ட உணவுகளில் வெண்ணெய் உணவுகளை சேர்க்ககூடாது..

    அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகள்


    கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தின் முதல் எதிரி. நீரிழிவு நோயாளிகள் கொழுப்பு உணவு வகைகளை சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படும். ஆதலால் கண்டிப்பாக கொழுப்பு கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளான முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் தோல் போன்றவற்றில் கொழுப்பு சத்து இருப்பதால் இந்த வகை உணவுகளை தவிர்க்கலாம்.

    ஃபைபர் நிறைந்த உணவுகள்.

    நார்சத்து அதிகமுள்ள உணவுகள் செரிமானத்திற்கு நல்லது. இவை ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஃபைபர் நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. நார்சத்துகளை கொண்ட ராஸ்பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சைகள், பார்லி, தவிடு, பாப்கார்ன், பழுப்பு அரிசி, பயறு வகைகள், ஆர்டிசோக், மற்றும் பட்டாணி போன்ற உணவுகளில் நார்சத்து அதிகம் கொண்டுள்ளதால் இவை நீரிவுக்கு சிறந்தது.

    நல்ல கார்போஹைட்ரேட்.


    சிறந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தஅளவுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும். சிறந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளான முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், தவிடு, மற்றும் பருப்பு வகைகள் உள்ளன.

    நல்ல கொழுப்புகள் கொண்ட உணவுகள்.


    நல்ல கொழுப்புகளை கொண்ட உணவுகளான பாதாம், ஆலிவ், வெண்ணெய், மற்றும் அக்ரூட் பருப்புகள் சிறந்தது. சால்மன் மீன், போத்தா மீன், கானாங்கெளுத்தி போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

    Diabetic patients often have to maintain their blood sugar levels.


  5. #95
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு காரர்களுக்கான உணவு



    நீரிழிவு நோயாளிகள் தானிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல; அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.


    கூழ் வகைகள் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நார்த்தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் - உரிய அளவுகளில் உட்கொண்டு வரலாம்.

    இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதோ, கூழாக தயாரித்து உண்பதோ நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்போது பருப்பு வகைகளும், கீரை வகைகளும் கலந்த அடைகளாக தயாரித்து உண்ணலாம்.

    அதிகமாக உணவு உட்கொண்டால் இன்சுலினை சுரக்கின்ற கணையம் சோர்வடைந்து விடக்கூடும். எனவே எந்த உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு குறைத்து உண்பதே நல்லது.

    காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரி யல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3மண்டலம்நோய்க்குத் தக்க படி சாப்பிட்டு வருவது சிறப்பு.

    வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்கா யத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வர கு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.


  6. #96
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    பேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்




    உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் கூறியதாவது; நம் மக்கள் மறந்த கனிகளில் அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான்.

    இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. ஆண்டுகளுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள்.

    இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைப்பாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது.

    பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் டைப் 2 சர்க்கரையை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் இன்சுலின் உணர்த்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.


    Dangu likes this.

  7. #97
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    மாத்திரைகள் உதவாத போது?

    ஆரம்ப நிலை நீரிழிவை உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகளின் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். சர்க்கரை அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டி வரும். இன்சுலின் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், அது தொடர் கதையாகி விடும் என பரவலான நம்பிக்கை ஒன்று உண்டு. இது தவறு. சர்க்கரை அளவு தாறுமாறாக எகிறும் போது சிலருக்கு சில வாரங்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு, கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, பிறகு மருத்துவர் ஆலோசனை பெற்று, மறுபடி மாத்திரைகளை தொடரலாம்.

    இன்சுலின் பல வகைகள் உள்ளன. ஷார்ட் ஆக்டிங் இன்சுலின் என்பது 4 முதல் 6 மணி நேரம் வரை பலனளிக்கும். இதை உணவுக்கு முன் போட்டுக்கொள்ள வேண்டும். லாங் ஆக்டிங் இன்சுலின் என்பது 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்துக்குப் பலனளிக்கும். நோயாளிகளின் உடல்நிலை மற்றும் பாதிப்பின் அளவை பொருத்து நாளொன்றுக்கு 1 முதல் 4 இன்சுலின் ஊசிகள் வரை தேவைப்படலாம்.

    மாத்திரைகளை ஆரம்பித்த பிறகு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை, முறையான மருத்துவ பரிசோதனை முக்கியம். ரத்த சர்க்கரை அளவுக்கான சோதனையும், ரத்த அழுத்தத்துக்கான சோதனையும் செய்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரைக்கான சோதனையை எப்போதும் மாத்திரையை சாப்பிட்ட பிறகே எடுக்க வேண்டும். இவை தவிர, பி.பி மற்றும் கொலஸ்ட்ராலுக்கான சோதனைகளும் அவசியம்.


    Dangu likes this.

  8. #98
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?




    உங்கள் பாதங்களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் தினந்தோறும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். கால் விரல்களுக்கு இடையிலும் கூட... தேவையெனில் வேறு யாராவது ஒருவரின் உதவியை நாடுங்கள். பாதங்களின் கீழ்ப்பகுதியைப் பார்க்க நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்தலாம்.

    உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது பாதங்களை பரிசோதிக்குமாறு கூறுங்கள். வீக்கமாக உள்ள அல்லது சிவந்து போய் இருக்கும் பகுதிகள், வெடிப்புகள், வெட்டுகள் அல்லது சிராய்ப்புகள், வறண்டு போன சருமத் தழும்புகள், ஜில்லென்று குளிர்வாக உள்ள பகுதிகள் (ரத்த ஓட்டம் தாழ்வாக இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது) அல்லது மிகவும் சூடாக இருக்கும் பகுதிகள் (உடலின் அப்பகுதி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது) என ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் பாதங்களை தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீரில் (சுடுநீர் வேண்டாம்) நன்றாக சோப்பு போட்டு கழுவவும். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள். தினமும் இருமுறை உங்கள் ஷூக்களை சோதித்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது ஒரு பொருள் இல்லாதபடி ஷூக்களை மேலும் கீழுமாக கவிழ்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    நன்றாக பொருந்தும் ஷூ, சாக்ஸ்களை மட்டுமே அணியுங்கள். ஒரு போதும் வெறும் காலோடு நடக்க வேண்டாம். கால்விரல் நகங்கள் வளரும் போது ஜாக்கிர தையாக இருக்கவும். விரல் நகங்களை நேர் குறுக்காக வெட்டவும். நகங்கள் தடிமனாகவும், வளைந்தும் இருந்தால் அல்லது உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால் வேறு யாரையாவது நகங்களை ஒழுங்காக வெட்ட உதவும்படி கேட்டுக் கொள்ளுங்கள். சுடுநீரால் ஏற்படும் தீப்புண், நடைபாதை, மணல், சுடுநீர் பாட்டில்கள் மற்றும் ஹீட்டிங் பேடுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். சூட்டையோ அல்லது தீப்புண்ணையோ உங்களால் உணர முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    கால் ஆணி அல்லது பாதங்களில் தடிமனாகிப் போய் விட்ட தோலை நீங்களாகவே வெட்டி எறிய முயற்சிக்க வேண்டாம். இந்த தொல்லைகளுக்கு பொடியாட்ரிஸ்ட் எனப்படும் பாத நிபுணரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைப் பெறவும். பாதங்களில் சீழ்ப்புண் அல்லது வெளியே தெரியக்கூடிய வகையில் புண், வெட்டுப்பட்ட காயம் அல்லது கொப்புளத்தில் தொற்றுநோய், கால்விரல் சிவந்து மென்மையான நிலை, உணர்வில் மாற்றம் அதாவது, வலி, நடுக்கம், மரத்துப் போய்விட்ட நிலை அல்லது எரிச்சல், பாதங்களை நீங்கள் பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏதாவது வெடிப்புகள் காயங்கள் தென்பட்டால் நீரிழிவு மருத்துவர் அல்லது பொடியாட்ரிஸ்ட்டை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

    டாக்டரிடம் நீங்கள் ஆலோசனை பெறும் ஒவ்வொரு முறையும் பாதங்களையும் சரிவர பரிசோதித்துக் கொள்ளுங்கள்.நீரிழிவாளர்களுக்கு என்றே இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிற காலணிகளை, மருத்துவர் ஆலோசனையுடன் வாங்கி அணியுங்கள். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்கு பிரத்யேகமான ஷூக்களை அணியுங்கள்.



    Dangu likes this.

  9. #99
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி



    தற்போது நம்மவர்களை பயமுறுத்தும் முதல் கொடிய நோய் சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் எண்ணை பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தால், இந்த நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற் கதவாக இருப்பது மேலும் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. டாக்டரிடம் சென்றால், தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். டென்சன் ஆகாதீர்கள். இப்படி பல அறிவுரை கூறுவார். ஆனால் கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது.

    நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளது. நம்மவர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு புறமும். நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே என்று மறுபுறமும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்று கூடி பேசுவோர் மற்றொரு பக்கமும் நின்று பட்டிமன்ற பாணியில் விவாதித்து வருகின்றனர்.சர்க்கரை நோயை பற்றி சமீபத்திய ஆய்வு ஒரு தகவல் கூறியுள்ளது. அதை பார்ப்போம்...

    ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்று பெயர். சுருக்கமாக ஜிஐ (GI ). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் ஜிஐ 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள். 100-70 வரை ஜிஐ உள்ள உணவுகளை, அதிக ஜிஐ என்றும், 70-55 வரையிலான உணவுகளை நடுத்தர ஜிஐ என்றும், 55க்கு கீழே உள்ள உணவுகளை, குறைந்த ஜிஐ என்றும் அழைக்கிறோம்.

    அதிக ஜிஐ உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த ஜிஐ உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துகின்றன. ஆகவே, 70க்கும் மேல் ஜிஐ உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55க்குக் கீழ் உள்ள உணவுகளே பாதுகாப்பானவை.

    அப்படியானால், நாம் உண்ணும் உணவின் ஜிஐ எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்..! வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் கவரிலும் ஜிஐ அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது. இங்கு அப்படி கிடையாது. இதில் நாம் கவனிக்க வேண்டியது கைக்குத்தல் அரிசியின் ஜிஐயை தான். கைக்குத்தல் அரிசிக்கு வெறும் 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் ஜிஐ அளவு மிகவும் அதிகம். அதாவது 75.

    நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) ஜிஐ இடைப்பட்ட ரகம்: 56-58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும் நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் பொன்னி அரிசிதான் வேண்டும் என்கிற நம்முடைய பிடிவாதம் சரியா... இல்லையா... என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

    சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் ஜிஐ மட்டுமல்லாமல்... சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity) கூட கணக்கிடப்படுவது முக்கியம் என்கிற கருத்தும் உண்டு. இதை கிளைசீமிக் லோடு (GlycemicLoad) என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக ஜிஎல் (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில் மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய குளுக்கோஸ் சுமை அதிகம் தானே? அதிக ஜிஐ இருக்கும்போது, அதிக ஜிஎல்லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?

    நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை நாம் மறந்ததே பல்வேறு பிரச்சினைகளுக்கு திறவு கோளாக உள்ளது. கேப்பை, கம்பு போன்ற உணவுகளை மறந்து நோய் வந்தவுடன் அதனை மருந்தாக உண்கிறோம். அது போன்றே பொன்னி அரிசி சாப்பிடுவது பெருமை என்று நாம் எண்ணி வருகிறோம். ஆனால் அதனால் வரும் ஆபத்தை உணர வேண்டும். உணர தயாராகி விட்டீர்கள் அப்படித்தானே..!


    ilakkikarthi and Dangu like this.

  10. #100
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    very valuable information. B'use these days we hav increased rate of diabetic affected persons. If we follow these things atleasr we can control it. Thank you very much.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter