Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #111
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    டாக்டர் கௌதமன், ஆயுர்வேத மருத்துவர்

    மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்திக் கொட்டை,


    எள்ளுப்புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ. 'மாடு சாப்பிடுவதை எல்லாம் மருந்து எனச்சொல்கிறாரே’ என்று நினைக்கலாம். இப்போது டி.என்.ஏ. கட்டமைப்பு உள்ள ஹியூமன் இன்சுலின், உலகம் முழுக்க வந்துவிட்டது. இதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்தில் இருந்தும், பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்தும்தான் இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஓர் ஆச்சர்யம் என்ன என்றால், சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலும், கோரைக் கிழங்கிலும், எள்ளுப் புண்ணாக்கிலும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்தும் அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போஹைட்ரேட்டைக் கரைக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.

    கிராமங்களில் சர்க்கரை நோய் என்று தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களைப் பார்க்கவே முடியாது. அரை கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ, 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்துவைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கை அளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இப்படித் தொடர்ந்து செய்யும் போது, சர்க்கரை நோய் தானா கவே சரியாகிவிடும்.

    இந்தியர்களுக்கு, உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

    1. வெந்தயம்: சர்க்கரை நோயைப் பிரதானமாக கட்டுப் படுத்தக்கூடிய தன்மை வெந்த யத்துக்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள், வெந்தயம். வெந்தயத்தை வறுத்துவைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். இரவில், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்த யத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப் பாட்டுடன் இருக்கும்.

    2. தக்காளி: உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    3. பாதாம்: தினமும் தண்ணீரில் ஊறவைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

    4. தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டைக் கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிடத் தோன்றினால், அதனுடன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

    5. பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

    6. காய்கறிகள்: அதிக நார்ச்சத்து உள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    7. பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளைவிட, பருப்பு வகைகளால் ரத்தத்தில் குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாகக் கருதப்படுகிறது.


    8. ஒமேகா3:
    ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பு போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது.

    9. பழங்கள்: அதிக நார்ச்சத்து உள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம்,
    வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

    10. உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் சிறிய அளவு உணவை, போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்து உள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    11. இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனைக் கலந்துகொள்ளலாம்.

    12. உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்துக்குப் பக்கபலமாக நிற்கும்.

    13. பாகற்காய்: பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

    சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். சிறுநீரகச் செயலிழப்புகூட உண்டாகலாம். நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்துபோவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோய் இது.

    நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்துவைத்து, திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும்போது சர்க்கரை கட்டுப்படும்.

    சமையலில் சீரகத்துக்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்ப்பது, சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.


    Sponsored Links
    Last edited by chan; 28th Apr 2015 at 03:53 PM.
    jv_66 and Dangu like this.

  2. #112
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Hi @chan, really very useful information collection you have presented about diabetes! thank you!

    chan and Dangu like this.

  3. #113
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    தவிர்க்க வேண்டியவை

    சர்க்கரை, கரும்பு, சாக்லெட், ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், ஜாம் வகைகள், பாலாடை கட்டிகள், திரட்டுப்பால், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், நுங்கு, சப்போட்டா, சீதாப்பழம், உலர் திராட்சை, சேப்பங் கிழங்கு, உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு.

    அளவோடு சேர்த்துக் கொள்ளக் கூடியவை
    கம்பு, ஓட்ஸ், அரிசி, அவல், ரவை, பார்லி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, வால்நட்.

    அதிக அளவில் சேர்த்துக் கொள்ளக் கூடியவை
    பாகற்காய், சுரைக்காய், வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி, தக்காளி, கொத்தவரங்காய், காராமணி, வெள்ளரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், கீரை, கண்டங்கத்திரி, கோவைக்காய், வெங்காயம், பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைப்பூ, பீர்க்கங்காய், பப்பாளிக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், நூல்கோல், சீமை கத்தரிக்காய்.

    சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்
    கத்தரிப் பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக் காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காலிஃப்ளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்த வரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழைப் பிஞ்சு, நூல்கோல், முருங்கைக்காய், வெள்ளரிக் காய், சௌசௌ இவற்றுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பச்சடி யாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

    நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்
    கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லா ரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை. இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து, தினமும் ஒரு டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துவந்தால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    நன்றி டாக்டர் விகடன்


    jv_66 and Dangu like this.

  4. #114
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

  5. #115
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோய் இதயத்தை பாதிக்கும்




    சர்க்கரை நோயின் தாக்கத்தைப் பற்றி மனு மருத்துவமனையின் பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் பூபதி விழிப்புணர்வளிக்கிறார். நமது உடலில் ஜீரணத்திற்கு பங்கு வகிக்கும் முக்கிய உறுப்புகளில் கணையமும் ஒன்று. இது இரைப்பைக்கு முன்பு வயிற்றுக்கு குறுக்காக அமைந்திருக்கும். இதில் சுரக்கும இன்சுலின் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இவ்வாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையான அளவைவிட அதிகரிப்பதையே சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

    இந்நோய் உலகத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் உள்ளது. எனினும் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. பொதுவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உணவுக்கு முன்பு 80 முதல் 120 என்ற அளவில் இருப்பது நலம். உணவு உண்ட பின்பு ஒன்றரை மணி நேரத்தில் 160 வரை வந்து பின்பு இரண்டரை மணி நேரத்தில் இயல்பான நிலையை எட்டவில்லை எனில் சர்க்கரை நோய் தாக்கம் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. சர்க்கரை நோயானது பரம்பரையாகவோ அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தினாலோ வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம் என்பது உடல் உழைப்பின்மை மற்றும் உணவு பழக்கவழக்கங்களாகும்.

    உடலிலுள்ள அத்தனை பிரதான உறுப்புகளையும் பாதிப்படையச்செய்யும் ஒரே நோய் இந்த நீரிழிவு நோய் ஆகும். குறிப்பாக சர்க்கரை நோய்க்கும் இதயம் தொடர்பான நோய்க்கும் சம்பந்தமிருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும் இதய நோய் வரலாம். அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதில் தடையும் இரத்தத்தில் அதிக அளவு க்ளூக்கோசும் காணப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் ஏற்படும். இதன் காரணமாக இதய நோய் மற்றும் இதய தாக்கம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

    சர்க்கரை நோய் வந்தால் அடிக்கடி சிறு நீர் கழித்தல், அளவிற்கதிகமான பசி, அளவிற்கதிகமான தாகம், மன உளைச்சல், தூக்கமின்மை, பாதம் எரிச்சல் போன்ற அறிகுறி தோன்றும். சிலருக்கு சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறியுமே தென்படாது. திடீரென உடம்பிலுள்ள ஏதாவது பிரதான உறுப்பு பாதிக்கப்படும். பரிசோதனை செய்து பார்த்தால் அந்த பாதிப்பானது சர்க்கரை நோயின் விளைவாக இருக்கக்கூடும். எனவே, நாம் அவ்வப்பொழுது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

    சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து இவை மூன்றையுமே மிக முக்கியமாக கடைபிடிக்கப்படவேண்டும். இவ்றறில் ஏதாவது ஒன்றை நிறுத்தினாலோ சில சமயங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக மயக்கம் ஏற்பட்டு சுயநினைவிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், முதல் வகை சர்க்கரை நோயாளிகள் தவறாமல் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்.

    இந்த நவீன யுகத்தில் உணவுக் கட்டுப்பாடு என்பது இல்லாமல போய்விட்டது. ஏனென்றால் அனைவரும் அவசரம் என்ற பெயரில் துரித உணவுகளை விரும்பி உண்கிறோம். பழைய எண்ணெய், காரம், கலர் அதிகமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்கிறோம். விளைவு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் - என்ற வள்ளுவர் வாக்கினை கருத்தில் கொண்டு வாழ வேண்டும்.


    Dangu likes this.

  6. #116
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    இனிப்பைக் குறைத்தும் இனிமையாக உண்ணலாம்!



    நீரிழிவைச் சமாளிப்பது என்பது அறிவியல் மட்டுமே அல்ல...

    அது ஒரு கலை!


    நீரிழிவாளர்களுக்கு மட்டுமல்ல... எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும் கூட, சர்க்கரை பயன்பாடு அதீத விளைவுகளை ஏற்படுத்துகிறது. ‘வேணாம்... ஆனா, வேணும்’ என்கிற இரட்டை மனநிலைக்குள் நம்மைத் தள்ளுகிற இந்த இனிப்பை என்னதான் செய்வது? ரொம்பவும் யோசித்துக் குழம்ப வேண்டாம். இதோ... இந்த குட்டி மாற்றங்கள் நம் உடல்
    நலத்தைப் பாதிக்காமலே, உணவை இனிமையாக்கும்.

    ஃப்ரெஷ் ஜூஸ் நல்லதே... நீரிழிவு இல்லாதவர்களுக்கு மட்டும். நீரிழிவாளர்களும் எடை குறைப்பில் ஈடுபடுவோரும் இதற்கு மாற்றாக அனுமதிக்கப்பட்ட பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஜூஸில் அதிக அளவு சர்க்கரையும் குறைந்த அளவு ஊட்டச்சத்துமே உள்ளன. உதாரணமாக... ஓர் ஆப்பிளில் 2.6 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் 50 கலோரியும் உள்ளன. அதோடு, பழத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து நம் வயிறு நிறைவதாகவும் உணர வைக்கிறது. 250 மி.லி. ஆப்பிள் ஜூஸிலோ 6 டீஸ்பூன் அளவு சர்க்கரையும். 123 கலோரியும் உள்ளன.

    பாக்கெட் பவுடர்களாக விற்கப்படும் இன்ஸ்டன்ட் சூப் வகைகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே ஃப்ரெஷ் ஆக சூப் தயாரித்து சூடாகப் பருகலாம். ஏனெனில், இன்ஸ்டன்ட் சூப்களில் 4 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் 171 கலோரிகளும் காணப்படுகின்றன. நாமே தயாரிக்கும் சூப்பில் புத்தம்புது காய்கறிகளைப் பயன்படுத்துவோம்... அதில் சர்க்கரை குறைவு... ஊட்டச்சத்தோ அதிகம். இதயத்துக்குப் பாதிப்பு உண்டாக்கும் அதிக அளவு உப்பையும் நாம் தவிர்க்க முடியும்.

    கடைகளில் கிடைக்கிற ஃப்ரூட் யோகர்ட் போன்றவை கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம். மாற்றாக சர்க்கரை இல்லாத பிளைன் யோகர்ட் சாப்பிடலாம்... அதிக இனிப்பில்லாத பழங்களை தனியாகச்
    சாப்பிடலாம்.

    காபி ஷாப்களில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் வேளையில் ஹாட் சாக்லெட், க்ரீம் கலந்த பானங்களைத் தவிர்க்கலாம். இவற்றில் 4.5 டீஸ்பூனுக்கும் அதிக சர்க்கரையும், 200 கலோரியும் உள்ளன. கொழுப்பு தனி! தேநீரிலோ குறைவான சர்க்கரையும் 20 கலோரியும்தான் கிடைக்கும், பால் கலந்திருந்தாலும் கூட! எது நல்லது?

    ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீமில் 3 டீஸ்பூன் சர்க்கரையும் 180 கலோரியும் காணப்படுகின்றன. ஆசைக்கு எப்போதாவது செயற்கை இனிப்புள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். உண்மையில் வாழைப்பழத்தில் இதைவிட அதிக சத்துகளும் குறைவான சர்க்கரையுமே உள்ளன. ஆனால், நீரிழிவு கட்டுப்பாட்டைப் பொருத்தே வாழைப்பழ காமெடிகளுக்கு அனுமதி!

    எப்போதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என அதீத வேட்கை ஏற்பட்டால், சடாரென சாக்லெட்டை எடுக்க வேண்டாம். ஒரு பார் சாக்லெட்டில் 260 கலோரியும் 6 டீஸ்பூன் சர்க்கரையும் இருக்கக் கூடும். அது மட்டுமல்ல... இனிப்பு ஆர்வமும் இதில் அடங்காது. கடலைமிட்டாயும் சிப்ஸும் கூட இப்படித்தான். தின்னத் தின்ன இன்னும் இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கும். ஒன்று மட்டும்தான் எனத் தொடங்கி, ஒரு பாக்கெட்டையே காலி செய்பவர்களே நம்மில் பலர். மாற்றாக கொஞ்சம் செர்ரி அல்லது கொய்யா சாப்பிடலாம். ஒரு சிறிய கப் செர்ரியில் 50 கலோரியும் 2 டீஸ்பூன் சர்க்கரையுமே உள்ளன.


    Dangu likes this.

  7. #117
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    வாய் நாற்றமா? நீரிழிவாக இருக்கலாம்!


    இந்தத் தலைப்பைச் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் பல் மருத்துவர் யஷ்வந்த் குமார் வெங்கடராமன். உண்மைதான்... வாயே நோயைச் சொல்லும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, நீரிழிவையும் வாய் நாற்றமே சொல்லி விடுகிறது. அதோடு, நீரிழிவாளர்களும் இன்ன பிறரும் வாய் மற்றும் பற்களைப் பராமரிப்பது குறித்தும் அவர் விளக்குகிறார்.

    வாய் நாற்றம் என்பது நாம் வாயின் வழியே வெளியிடும் காற்றின் வாசம்தான். இது விரும்பத்தகாத மணமாக இருக்கும் பட்சத்தில் Bad Breath அல்லது Halitosis என்று அழைக்கப்படுகிறது. மிகுந்த தர்மசங்கடம் விளைவிக்கும் இந்த விஷயத்தை நாம் அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. முக்கியமாக நம்மை விட நமக்கு அருகில் உள்ளவர்களே, இதனால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வாய் நாற்றத்தின் ஆரம்பம் பல் சுத்தம், வாய் சுத்தம் இல்லாததுதான். சில நேரங்களில் உணவில் அதிகம் சேர்க்கப்பட்ட பூண்டும் பின்விளைவுகளை அளிக்கும்.

    இந்தச் சிறிய காரணங்களைத் தாண்டினால், அது பெரிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், உடனடியாக பல் மருத்துவரின் துணையோடு, இதைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.


    சரி... வாய் எப்படி நோயை சொல்லும்?

    வாய் பராமரிப்பு சரியில்லாத காரணத்தால், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் கந்தக சேர்மங்களை வெளியிடும். மூச்சுக்காற்றில் பழ வாசனை இருப்பது ketoacidosis என்ற நிலையைக் குறிக்கும். இது நீரிழிவு உள்ளவர்களுக்கு உண்டாகும் வாய்ப்பு அதிகம். இது மிக அபாயமான ஒரு நிலையாகும். இன்சுலின் மிகமிகக் குறைந்து, உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களும் எரிக்கப்பட்டு, உடல் அபாயகட்டத்தை நோக்கிச் செல்லும்.

    அதீத துர்நாற்றம் வாயிலிருந்து வெளிப்படுமானால், அது வயிற்றுக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். தொடர்ச்சியாக வாந்தி எடுத்திருந்தாலும் இப்படி நேரலாம். சிறுநீர் அல்லது மீன் அல்லது அமோனியா நாற்றம் இருந்தால், அது தீவிரமான சிறுநீரகப் பிரச்னையாகலாம்.

    அழுகிய பழ வாசனை Anorexia Nervosa எனும் சாப்பிட பயப்படும் குறைபாட்டைக் குறிக்கும். எடை அதிகமாகி விடுமோ என்ற பயத்தில் உணவைத் தவிர்க்கும் மனநலப் பிரச்னை இது. ஆஸ்துமா மற்றும் நுரையீரல், கல்லீரல் பிரச்னைகளும் மூச்சுக்காற்றில் மாறுபட்ட நாற்றத்தை உண்டாக்கும்.

    இவை இருக்கட்டும். வாய் நாற்றத்தின் மூலமே நீரிழிவை அறிய முடியும் என்பதே சமீபத்திய ஆய்வு முடிவு. நீரிழிவுக்கு முந்தைய நிலையையும் ஆரம்ப கால நீரிழிவையும் கூட, ‘இன்ஃப்ராரெட் ப்ரீத் அனலைசர்’ கருவி மூலம் கண்டறிய முடியும். இது மட்டுமல்ல... ப்ரீத்தலைசர் கருவியை பயன்படுத்தியே ரத்த சர்க்கரை அளவை அறியக்கூடிய சோதனைகளும் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது வெற்றியடையும் பட்சத்தில், நீரிழிவாளர்கள் ஒரு துளி ரத்தத்தைக்கூட பரிசோதனைக்காக அளிக்க வேண்டியதில்லை!

    டயாபடீஸ் வாய் மணத்துக்கு என்ன காரணம்?

    நீரிழிவாளர்களின் வாய் நாற்றத்துக்கு முதல் காரணம் ஈறு சார்ந்த பிரச்னைகளே... இவற்றை Gum Diseases(Periodontitis) என்று குறிப்பிடுகிறோம். Periodontitis என்பதை பல்சூழ்திசு அழற்சி என்று தமிழில் சொல்லலாம். ஈறு அழற்சி அல்லது ஈறுவீக்கமான gingivitis, லேசான அல்லது நடுத்தரமான அல்லது பல்சூழ்திசு அழற்சி வரை பலதும் ஈறு சார்ந்த பிரச்னைகளே... இந்நோய்களில் நம் பல்லுக்கு ஆதரவு அளிக்கும் திசுக்களையும் எலும்புகளையும் பாக்டீரியா வெறியோடு தாக்குகிறது. இதனால் வீக்கம் ஏற்படுகிறது.

    அதோடு விட்டால் பரவாயில்லை... வீக்கம் காரணமாக உடலின் மெட்டபாலிசம் என்கிற வளர்சிதைமாற்றமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. வளர்சிதைமாற்றத்தில் கோளாறு ஏற்பட்டால், ரத்த சர்க்கரை அளவு கூடுவதும் இயல்பு. அதன் பிறகு நீரிழிவும் மோசமாகும் என்பது நாம் அறிந்ததே. சாதாரணமாக பல்லிலோ, ஈறிலோ ஏற்படக்கூடிய ஒரு சிறிய பிரச்னை கண்டுகொள்ளாமல் விடப்பட்டால், நீரிழிவையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது அதிர்ச்சியான செய்திதானே?மற்றவர்களை விடவும், நீரிழிவாளர்களுக்கு ஈறு நோய்களைக் குணப்படுத்த அதிக காலம் பிடிக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீரிழிவும் ஈறு நோய்களும் சேரும்போது இருமுனைக் கத்தி போல அபாயமாகி விடுகிறது. நீரிழிவு காரணமாக ஈறு நோய்கள் ஏற்படலாம். ஈறு நோய்கள் காரணமாக நீரிழிவு அதிகமாகலாம். IOSR Journal of Dental and Medical Sciences அளித்துள்ள ஆய்வுத்தகவலின் படி, மூன்றில் ஒரு நீரிழி வாளருக்கு ஈறு நோய்களும் இருக்கின்றன.

    ஏற்கனவே நீரிழிவுடன் தொடர்புள்ள இதய நோய்கள், ஸ்ட்ரோக் ஆகியவற்றோடும் ஈறு நோய்களுக்குத் தொடர்பு இருப்பது அடுத்த அதிர்ச்சி. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு காரணமாக உடலின் ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுகிறது. ஈறுகளிலும் இப்பிரச்னை எதிரொலிக்கிறது. ஈறுகளுக்கும் பற்களுக்கும் போதுமான ரத்தம் பாயாவிட்டால், அவை பலவீனம் ஆவதோடு, நோய்த்தொற்றுக்கும் ஆளாகின்றன.

    வாய்ப்பகுதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, அங்கு பாக்டீரியாவும் கன்னாபின்னாவென வளர்கிறது. இதனால் நோய்த்தொற்றும் வாய் துர்நாற்ற மும் உண்டாகின்றன. சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத போதோ, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் திறனையும் உடல் இழக்கிறது. ஈறு நோய்கள் குணமாவதும் கடினமாகிறது. இப்படி சுத்திச் சுத்தி அடிக்கிறது இந்தத் தாக்குதல் புயல்!

    ஈறு நோய்களின் பிரதான அறிகுறி வாய் நாற்றம்தான். மற்ற அறிகுறிகள்...

    சிவந்த அல்லது மென்மையான ஈறு...
    ஈறுகளில் ரத்தக் கசிவு...
    பல் கூச்சம்...
    ஈறு பின்னடைதல்...


    Last edited by chan; 11th May 2015 at 01:40 PM.
    Dangu likes this.

  8. #118
    bookslover is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    737

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Good information. Thanx

    chan likes this.

  9. #119
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ஆணிக்கால்கள் வராமல் பராமரிக்கும் முறை




    பாதங்களுக்கு அழுத்தம் கிடைக்காமல், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அழுத்தம் அதிகமாக ஏற்படும்போதுதான் ஆணிக்கால் உருவாகிறது.

    குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆணிக்கால் உருவாகும் வாய்ப்பு அதிகம். பாதத்தில் இருக்கும் கொழுப்பு நகர்வதால் பாதத்தின் வடிவம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறிது மாறும். இதனால் பாதத்தின் எலும்புக்கும் தரைக்கும் நடுவில் உள்ள தோல் மாட்டிக்கொண்டு தடிமனாகிவிடும். இதுதான் ஆணிக்காலாக மாறுகிறது.

    இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆணிக் காலுக்கும் சதைக்கும் இடையில் உராய்வு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது நாளடைவில் வெளியில் தெரியாத புண்ணாகவும் மாறலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பிலும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையை இந்த உள் புண் உண்டாக்கிவிடும். அதனால், ஆணிக்காலை சாதாரணமாக நினைக்கக் கூடாது.

    ஆணிக்காலுக்கு மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தெருக்களில் ஆணி எடுக்கப்படும் என்று வருபவர்கள் தரம் குறைந்த முறையில் எடுப்பர் இவர்களிடம் சென்று மிகவும் குறைந்த செலவாக இருக்கிறதே அவசரப்பட்டு காலை காண்பிக்ககூடாது மிகுந்த எச்சரிக்கை தேவை.

    தகுந்த அறுவை சிகிச்சையின் மூலம் தகுந்த மருத்துவர்கள் ஆலோசனையில்லாமல் இது போல செயல்களில் இறங்க கூடாது.


    Dangu likes this.

  10. #120
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    1. காலையும் மாலையும்

    நீரிழிவு என்பது ஒரு வார்த்தை (Word) மட்டுமே...
    அது ஒரு தண்டனை (Sentence) அல்ல!

    அதிக ஆற்றல் அளிக்கக்கூடிய காலை உணவு,
    மிதமான இரவு உணவு... இவை இரண்டும் உங்கள் ரத்த சர்க்கரை எகிறுவதைக் கட்டுப்படுத்த உதவும். டெல் அவிவ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளின் அண்மைக்கால ஆய்வு முடிவு இது!

    உலகில் 38 கோடிக்கும் அதிக மக்கள் நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். பெரும்பாலும் டைப் 2 டயாபடீஸ்.உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை அளவு அதீதமாக அதிகரிக்குமானால், அது இதயம் உள்பட பல உறுப்புகளின் பிரச்னைகளுக்கு வித்திட்டு,
    வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும்.

    இந்நிலையில் உணவு மூலமே ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அதிக கலோரி காலை உணவும் குறைந்த கலோரி இரவு உணவும் இணையும் போது, அது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மருத்துவ ரீதியாகச் சொல்வதானால், முறையான உணவே ரத்த பிளாஸ்மாவில் அதிக குளுக்கோஸ் கலக்கும் Hyperglycaemia என்கிற நிலையைக் குறைக்கிறது.

    (Hypoglycemia என்பது தாழ்நிலை சர்க்கரை. மேலே கூறியதற்கு நேர் எதிர் நிலை. இதையும் அதையும் குழப்ப வேண்டாம்!)‘‘காலை உணவில் அதிக கலோரி இருந்தாலும், ஓரளவே குளுக்கோஸ் அதிகரிக்கிறது. இரவு உணவில் குறைவான கலோரி இருந்தாலும் கூட, அதிக குளுக்கோஸ் உருவாகிறது. இதன் செயல்பாடு நாள் முழுக்கத் தொடர்கிறது’’ என்கின்றனர் டெல் அவிவ் விஞ்ஞானிகள்.30-70 வயதுடைய இருபாலரிடமும் தொடர்ச்சியாக இச்சோதனை நிகழ்த்தப்பட்டது.

    முதல் குழுவுக்கு அதிக கலோரி காலை உணவும் குறைந்த கலோரி இரவு உணவும் வழங்கப்பட்டது.
    (காலை உணவு: 704, மதிய உணவு: 603, இரவு உணவு: 205... கிலோ கலோரி அளவீடு படி)
    இரண்டாம் குழுவுக்கு குறைந்த கலோரி காலை உணவும் அதிக கலோரி இரவு உணவும் வழங்கப்பட்டது.

    (காலை உணவு: 205, மதிய உணவு: 603, இரவு உணவு: 704... கிலோ கலோரி அளவீடு படி)
    அதாவது, இரு குழுக்களுக்கும் காலை உணவும் இரவு உணவும் முறையே மாற்றி வழங்கப்பட்டது.

    ரிசல்ட் என்ன?

    காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் உட்கொண்ட முதல் குழுவுக்கு குளுக்கோஸ் அளவு 20 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது. அதோடு, இன்சுலின், ஏ மற்றும் பி இன்சுலின் சங்கிலிகளை இணைத்து அதன் சீரிய செயல்பாட்டுக்கு உதவும் C-peptide என்கிற அமினோ
    அமிலம், இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற GLP-1 எனும் ஹார்மோன் ஆகியவற்றின் அளவும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

    காலையில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் உட்கொண்ட இரண்டாம் குழுவுக்கு இந்த நற்பலன் கிட்டவில்லை. அதோடு, மதிய உணவுக்குப் பின் இக்குழுவின் ரத்த சர்க்கரையானது, முதல் குழுவை விட, 23 சதவிகிதம் அதிகம் இருந்தது.இரண்டு குழுக்களும் ஒட்டுமொத்தத்தில் ஒரே அளவு கலோரிதான் எடுத்துக் கொண்டனர். ஆனால், எப்போது, எவ்வளவு சாப்பிட்டார்கள் என்பதில்தான் இந்த அதிரடி மாற்றமே!

    2. உங்கள் உணவு உங்கள் உரிமை!

    ஆரோக்கிய உணவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை. அதிலும் குறிப்பாக நீரிழிவாளர்களுக்கு உணவே ஓரளவு மருந்தும் கூட. மேலே பகிர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு கூறுவதும் அதைத்தானே? அனைத்து ஊட்டச்சத்துகளையும் சரியான அளவீட்டில் அளிப்பதுதான் ஹெல்த்தி டயட். நமது உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளையும் அளிக்கக்கூடிய ஒரே ஓர் உணவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனாலேயே நாம் வெரைட்டியாக சாப்பிட வேண்டி இருக்கிறது!

    நமது உடலுக்கு எவ்வளவு கலோரி தேவைப்படுகிறது, என்னென்ன ஊட்டச்சத்துகள் அவசியம் ஆகியவற்றைப் பொறுத்தே, மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணரும் உணவுத் திட்டத்தைப் பரிந்துரைக்கிறார்கள். நமது உடல் தேவையின் அடிப்படையில் ஊட்டச்சத்துகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. உடலுக்கு அதிக அளவு தேவைப்படும் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரோட்டீன் (புரதம்), ஃபேட் (கொழுப்பு) ஆகியவை மேக்ரோநியூட்ரியன்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. வைட்டமின்களும், மினரல்களும் (தாதுக்கள்) உடலுக்குக் குறிப்பிட்ட அளவே தேவை.

    இவை மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகக்குறைந்த அளவுதான் தேவை என்றாலும், மிகமிக முக்கியமானவை. உணவுத் திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு, இந்த ஊட்டச்சத்துகள் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம்.

    கார்போஹைட்ரேட்

    தினசரி செயல்பாடுகள் புரிய நமது உடலுக்கு முதன்மை ஆற்றல் மூலமாகத் திகழ்வது இதுதான். வேதி அமைப்பின் படி, இது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் என இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. நீரிழிவாளர்களுக்கு காம்ப்ளக்ஸ் வகையே உகந்தது. ஏனெனில், இவை மெதுவாக உடைவதால், ரத்த சர்க்கரை அளவும் மெல்ல மெல்லத்தான் உயரும்.

    சிம்பிள் வகையை விட, இது இன்னொரு விதத்திலும் சிறந்தது. சக்தியோடு, வைட்டமின், மினரல், ஃபைபர் (நார்ச்சத்து) ஆகியவற்றையும் அளிப்பதே காரணம். தானிய / சிறுதானிய வகைகள், அரிசி மற்றும் சில காய்கறிகள், பழங்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மிகுதியாகக் காணப்படுகிறது. நீரிழிவாளர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் போது, அதன் அளவு மிக முக்கியம். இவை சத்துகளை அள்ளித் தந்தாலும், ரத்த சர்க்கரையையும் எகிறச் செய்யுமே!

    புரோட்டீன்

    கடினமாக உழைக்கும் தசைகள், உறுப்புகள் மற்றும் திசுக்களை கட்டமைக்கவும் பழுதுபார்க்கவும் உதவுபவை புரோட்டீன் எனும் புரதச்சத்தே. மீன், கோழி, இறைச்சி ஆகியவற்றில் இச்சத்து மிகுந்து காணப்படுகிறது. முட்டையிலும் புரதம் ஏராளம். வெஜிடேரியன்கள் கவலைப்பட வேண்டாம்... தினை போன்ற சிறுதானியங்கள், கிரீன்பீஸ் (பச்சைப் பட்டாணி), பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், பீன்ஸ், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை, டோஃபு, பச்சை இலைக் காய்கறிகள், எள், கசகசா, பூசணி விதை, பால், சோயா மில்க், சீஸ், பீனட் பட்டர் உள்பட புரதம் நிறைந்த உணவுகள் பல உள்ளன.

    உடலுக்குப் போதுமான கார்போஹைட்ரேட் கிடைக்காத போது, புரதமே உடைக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. நம் ஆற்றலில் 10-20 சதவிகிதம் புரதச்சத்து மூலமே பெறப்படுகிறது. புரத உணவுகளை அதிக கொழுப்பு இல்லாதவையாகத் தேர்வு செய்வது அவசியம்.

    ஃபேட்

    உடலியலுக்கு அவசியமான திசுக்களையும் ஹார்மோன்களையும் உருவாக்கித் தருவது ஃபேட் எனும் கொழுப்புச்சத்தின் பணியே. எண்ணெய், நட்ஸ் வகைகள், வெண்ணெய் உள்பட பல பொருட்களிலிருந்து கொழுப்பு கிடைக்கிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது கொழுப்புக்குத்தான் ரொம்பவே பொருந்தும். உணவில் கொழுப்புச்சத்து அதிகமாவது பல பிரச்னைகளுக்கு அடிகோலும். சில கொழுப்பு வகைகள் ஆரோக்கியத்துக்கு உதவும்தான். ஆனால், எல்லா கொழுப்பும் நல்ல கொழுப்பல்ல!

    ?சுகர் ஃப்ரீ என விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை தாராளமாகச் சாப்பிடலாமாசுகர் ஃப்ரீ என விளம்பரப்படுத்தப்படுகிற எல்லாமும் ஆரோக்கியமானவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவற்றிலும் கலோரி, கார்போஹைட்ரேட், எக்ஸ்ட்ரா கொழுப்பு எல்லாம் இருக்கக்கூடும். உண்மையில் சில சுகர் ஃப்ரீ பொருட்களில், அதன் ஒரிஜினலில் உள்ள அதே அளவு கலோரி உள்ளது. ஆகவே, வசீகர வார்த்தைகளில் மயங்க வேண்டாம்!

    ஸ்வீட் டேட்டா

    மார்பகப் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களால் இறப்பவர்களை விடவும், நீரிழிவு சார்ந்த கோளாறுகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்

    Last edited by chan; 18th May 2015 at 12:53 PM.
    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter