Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #121
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்
    உஷா ஶ்ரீராம்
    நாளமில்லா சுரப்பி நிபுணர்
    ர்க்கரை நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. இன்சுலின், தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ செயல்திறன் குறைவாக இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இந்த நிலையை சர்க்கரை நோய் என்கிறோம். இந்த இன்சுலின் எங்கிருந்து வருகிறது தெரியுமா? கணையசுரப்பியில் இருந்துதான்.
    நமது உடலில் வயிற்றுப்பகுதியில் சற்று பெரிய அளவில் கணையம் இருக்கிறது. சுரப்பிகளில் நாளமுள்ள சுரப்பி, நாளமில்லா சுரப்பி என்று இரண்டு வகை உள்ளது. பிட்யூட்டரி, தைராய்டு போன்ற சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன், ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் செல்லும். இவற்றை நாளமில்லா சுரப்பிகள் (Endocrine Gland) என்போம். வியர்வை, எச்சில் சுரப்பிகளில் அதன் இலக்கை அடைய நாளங்கள் இருக்கும். இதை நாளமுள்ள சுரப்பிகள் (Exocrine Gland) என்போம். கணையம் மற்றும் கல்லீரலில் மட்டும்தான் இத்தகைய இரண்டு வகை சுரப்பிகளும் உள்ளன.

    நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்குத் தேவையான சில என்சைம்கள், கணையத்தில் சுரக்கின்றன. இவை, இரைப்பைக்கு நாளங்கள் வழியாகச் செல்கின்றன. கணையத்தின் லாங்கர்ஹேன்ஸ் திட்டுக்கள் என்ற பகுதியில் இருந்து இன்சுலின் சுரக்கிறது. கணைய சுரப்பியில் ஆல்பா, பீட்டா என்று இரண்டு வகை செல்கள் உள்ளன. ஆல்பா செல்கள் குளுக்ககான் (Glucagon)ஹார்மோனையும், பீட்டா செல்கள் ப்ரோஇன்சுலின் (Proinsulin) ஹார்மோனையும் சுரக்கின்றன. ப்ரோஇன்சுலின் ஹார்மோன் இன்சுலின், சி-பெப்டைடு என இரண்டாக உடலில் பிரியும்.

    நாம் உண்ணும் உணவைச் செரிமானமண்டலம் குளுக்கோஸாக மாற்றி, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்வது குளுக்ககான் ஹார்மோன்தான். குளுக்கோஸ் தேவை ஏற்படும்போது, கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றவும் குளுக்ககான் அவசியம்.

    இதற்கு நேர்மாறாக இன்சுலின் செயல்படும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவது இன்சுலினின் பணி. குளுக்கோஸை உடல் செல்கள் உணவாகப் பயன்படுத்திக்கொள்ள, திறவுகோலாக இருப்பதும் இன்சுலின்தான். குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதை சேமித்துவைக்கும்படி, கல்லீரலுக்கு சிக்னல் அனுப்பும். இந்த இரண்டு ஹார்மோன்களும் இணைந்துதான் நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமலும் குறையாமலும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றன.

    இன்சுலினின் அவசியம்
    சர்க்கரை நோயில், டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உள்ளன. தன் எதிர்ப்பு சக்தியே (Auto immune) இன்சுலின் சுரக்கும் செல்களைத் தாக்கி, இன்சுலின் சுரப்பை முற்றிலுமாக நிறுத்துவதை, டைப் 1 சர்க்கரை நோய் என்கிறோம். பொதுவாக, இது குழந்தைகளுக்கு ஏற்படும். இவர்கள் திடீரென எடை குறைவார்கள், அதிகமாக சிறுநீர் கழிப்பார்கள். இவர்களுக்குச் செயற்கை இன்சுலினை வாழ்நாள் முழுக்க செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

    டைப் 2 என்பது, வாழ்க்கை முறை மாற்றம், வயது, மரபியல் காரணமாக இன்சுலின் சுரத்தல் அளவில் ஏற்படும் மாறுபாட்டால் வருவது. சிலருக்கு இன்சுலின் செயல்

    திறன் குறைவாக இருக்கும். இதனால், குளுக்கோஸ் முழுவதையும் உடல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். உலகில் 95 சதவிகிதம் சர்க்கரை நோயாளிகள் இந்த வகையினர்தான்.

    இவர்களுக்கு இன்சுலினை சுரக்கவைக்க, மாத்திரைகள் கொடுக்கப்படும். இன்சுலின் தேவைக்குச் சற்று குறைவாக இருக்கிறது எனில், தினமும் இன்சுலின் ஊசி செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால் டைப்-2 சர்க்கரை நோயில் இருந்து எளிதாக மீள முடியும்.



    செயற்கை இன்சுலின்
    விலங்குகளிடமிருந்து செயற்கை இன்சுலின் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஆர்.டி.ஏ (Recombinant DNA technonology) எனப்படும் உயர் தொழில்நுட்பம் மூலம் பாக்டீரியாவில் மனித டி.என்.ஏ உருவாக்கி, அதில் இருந்து இன்சுலின் எடுக்கப்படுகிறது. இது மிகவும் திறன் வாய்ந்தது. இன்சுலின் ஊசிகளில் தற்போது பல வகைகள் இருக்கின்றன. குறைந்த காலம் செயல்படும் இன்சுலின் ஊசிகள் முதல், நீண்ட காலம் செயல்படும் இன்சுலின் ஊசிகள் வரை இப்போது கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் இன்சுலின் ஊசி செலுத்தலாம், ஒரு நாளில் காலை, இரவு மட்டும் இன்சுலின் ஊசி செலுத்தலாம், ஒரே நாளைக்கு ஒரு முறை மட்டும் இன்சுலின் ஊசி செலுத்தினால் போதுமானது, தற்போது, டெக்லூடெக் (Degludec) தொழில்நுட்பம் மூலம் 36 - 48 மணி நேரத்துக்கு ஒரு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு சிகிச்சை முறை வளர்ந்துள்ளது.
    இன்சுலின் அதிகமாகச் சுரந்தால் ?
    கணைய சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் இருக்கும் பட்சத்தில், சில நேரம் அதிக அளவு இன்சுலின் சுரக்கலாம். இன்சுலின் அதிகமாகச் சுரந்து உடலில் சேர்ந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தவிடும். இந்நிலையில், படபடப்பு ஏற்பட்டு, உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டி மயக்கம்கூட வரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது எனில், சிலர் அதைச் சட்டைசெய்யாமல் தொடர்ந்து சர்க்கரை அளவு குறையும் நேரங்களில் இனிப்பான பொருட்களைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு அடிக்கடி பசி எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால், உடல் எடை அதிகரிக்கும். உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்
    பட்டால், சி.டி ஸ்கேன் மூலம், கணைய சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என சோதனை செய்து, அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்படும். ஒரு வேளை கணைய சுரப்பியில் இருப்பது, புற்றுநோய் கட்டி எனில், புற்றுநோய்க்கான சிகிச்சை கொடுக்கப்படும்.



    இன்சுலின் பம்ப்
    ன்சுலின் பம்ப் என்பது, தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த முறையில் கையடக்க செல்போன் போன்ற கருவி ஒன்றை இடுப்புப் பகுதியில் பொருத்திவிட்டால், அதில் இருந்து மெல்லிய ஊசி மூலம் இன்சுலின் உடலுக்குத் தேவையானபோது செலுத்தப்பட்டுவிடும். மருத்துவர் பரிந்துரையின் பேரில், டைப்-1 டயாபட்டீஸ் பிரச்னை இருப்பவர்கள், இந்த இன்சுலின் பம்பைப் பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு சியர்ரா சான்டிசன் இந்த இன்சுலின் பம்ப் அணிந்து அழகி போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


    Sponsored Links
    Last edited by chan; 19th May 2015 at 02:25 PM.
    Dangu likes this.

  2. #122
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடிப்பதை கைவிடுங்கள்




    காபியை அடியோடு கைவிடுங்கள். காபியில் உள்ள கேபீன் ஸ்டிரெஸ் ஹார்மோனை அதிகரிக்கச் செய்கின்றது. இது இன்சுலினை அதிகரிக்க செய்வதால் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது.


    கணையம் வீக்கமடைகின்றது. காபி பழக்கம் அதிகரிக்கும்பொழுது இன்சுலின் திறன் சக்தி குறைகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது.

    காபி பானத்தில் சில நன்மைகள் இருந்தாலும் கெட்ட கொலஸ்டிரால் அதிகம் உருவாக காரணமாகின்றது. காபி குடலில் அசிடிடி பிரச்சினையை அதிகரிக்கும்.

    கால்சியம், மக்னீசியம், பொட்டாசிய் போன்ற தாது உப்புக்களை காபி குடிப்பவரின் சிறுநீரில் அதிகம் வெளியாகின்றது.

    காபி சில மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். காபி மட்டுமல்ல, கேபின் உள்ள எந்த பானமும் இதே பாதிப்பை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.



    Dangu likes this.

  3. #123
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தவிர்ப்பது எப்படி?


    என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் பல நேரங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென சர்க்கரை அளவு கூடும், குறையும். இதற்கு கீழ் கண்டவை கூட காரணமாக இருக்கலாம். இரவு சரியான தூக்கமின்மை, புது மருந்து, ஒரு கப் அதிக காபி, வெப்பமான சூழ்நிலை,


    * என்னதான் செயற்கை இனிப்பினை பயன்படுத்தினாலும் டயட் சோடா கூட திடீர் என சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம் ஆகலாம்.

    * உடலில் நீரின் அளவு குறைவதும் சர்க்கரையின் அளவை கூட்டும். சர்க்கரை பாதிப்புடையோர் அதிக சிறுநீர் செல்வதாலும் உடலில் நீர் சத்து குறையும். தினமும் 2 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் அருந்துவது சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும்.

    * ஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகள் சர்க்கரை அளவை மிகவும் அதிகமாக்கி விடும்.

    * பலருக்கு காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாகவே இருக்கும். காலை 3-4 மணி அளவில் மறுநாளுக்காக உடலை தயார் செய்யும் ஹார்மோன்களின் செயல்பாடே இதற்குக் காரணமாகின்றது. சிலருக்கு இரவில் எடுக்கும் மருந்தாலும், இரவில் மிகக் குறைவாக சாப்பிடுவதாலும் அல்லது சாப்பிடாமல் இருப்பதாலும் காலையில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனை மருத்துவர் உதவி கொண்டு சர்க்கரையின் அளவினை சரி செய்ய முடியும்.

    * சர்க்கரை பாதிப்புள்ள பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்கள் ரத்தத்தில் கூடுதல் சர்க்கரை அளவினை காட்டும்.

    * தூக்கமின்மை என்பது அதிக ‘ஸ்டிரெஸ்’ பாதிப்பினை உடலில் ஏற்படுத்துவதால் சர்க்கரையின் அளவு கூடும். தூக்கம் இயற்கை உடலுக்குத் தரும் நல்ல மருந்து. முறையாக தூங்கும் பழக்கம் 6-8 மணி நேர தூக்கம் சர்க்கரையினை அளவாய் வைக்கும்.

    * மிக அதிக வெய்யில், மிக அதிக குளிர் இரண்டுமே சர்க்கரை அளவை கூட்டும். இரண்டுமே உடலுக்கு அதிக ஸ்டிரெஸ் கொடுப்பவை. இதன் காரணமாய் சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கும். எனவே அதிக வெய்யில், அதிக குளிர் இரண்டினையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

    * பயணம் செய்யும் பொழுது மருந்து ஏடுக்கும் நேரம், உணவு உட்கொள்ளும் நேரம், உணவு இவை அனைத்தும் மாறுபடக் கூடும். எனவே கையில் அவசர உணவினை வைத்திருங்கள். தண்ணீர் குடியுங்கள், சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    * நீங்கள் வீட்டிலேயே ‘க்ளுகோபீட்டர்’ கொண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளலாம். ஆனால் கைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு பரிசோதித்து கொள்ளுங்கள். ரத்தத்தில் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவினை சீராய் வைத்திருக்க உதவும்.

    சர்க்கரையின் அளவு உணவின் மூலமே அதிக மாறுதலைப் பெறுகின்றது. சர்க்கரை நோய் முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு இரண்டிலும் சாப்பிட்ட 2 மணி நேரத்தில் சர்க்கரை அளவு அதிகம் காணப்படுகின்றது. உங்கள் உணவில் அதிக கார்போஹடிரேட் உள்ளதா அல்லது மருந்தின் அளவு போதவில்லையா என்பதை இந்த பரிசோதனை சொல்லிவிடும்.

    உணவுக்குப்பிறகு அதிகரிக்கும் சர்க்கரையினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. உணவுக்கு முன் உணவுக்குப்பின் என எடுக்கப்படும் சோதனைகளால் உணவின் அளவை மருந்தின் அளவை சீர் செய்து கொள்ள முடிகின்றது. பிரிவு ஒன்று சர்க்கரை பாதிப்பில் உணவுக்கு முன் பரிசோதிக்கும் முறையினால் சரியான அளவு இன்சூலின் எடுத்துக் கொண்டோமா என்பதனை உணர முடிகின்றது.

    பிரிவு இரண்டு சர்க்கரை பாதிப்பில் உணவுக்கு முன் பரிசோதிக்கும் சர்க்கரையினால் உங்கள் உடல் மருந்தின் பலத்தில் எந்த அளவு ஈடுகொடுக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. யாரெல்லாம் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

    * இன்சூலின் எடுத்துக் கொள்பவர்கள்

    * கர்ப்ப காலம்

    * மருந்தினால் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த சிரமம் படுபவர்கள்.

    * குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள்

    * அறிகுறிகள் எதுவும் இல்லாமல் குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள்.

    * அதிக சர்க்கரை அளவின் காரணமாக சிறுநீரில் பாதிப்பு இருப்பவர்கள். இவர்கள் அனைவரும், க்ளுகோ, மீட்டர் உதவியுடன் வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    வீட்டில் குளுகோ மீட்டரில் எப்படி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?

    * கையை நன்கு கழுவுங்கள்

    * க்ளுகோ மீட்டரில் பரிசோதனை ஸ்டிரிப்பினை வையுங்கள்.

    * விரலின் நுனியில் கொடுக்கப்பட்டுள்ள ஊசியால் லேசாக குத்துங்கள்.

    * ஸ்டிரிப்பின் அடையாள பகுதியில் ரத்தம் படச் செய்யுங்கள்.

    * சில நொடிகளில் சர்க்கரையின் அளவை க்ளுகோ மீட்டர் காண்பிக்கும்.

    அளவு மாறுபடும் விவரம்:

    * சர்க்கரை பாதிப்பின் காலம்.

    * வயது கூடிய முதுமை

    * இருதய பாதிப்புகள்

    * பாதிப்புடையோரின் கவன ஈடுபாடு இவற்றினைக் கொண்டு சர்க்கரையின் அளவில் மாறுதல் இருக்கும். சிறுநீர் பரிசோதனையை விட ரத்த பரிசோதனையே சரியான அளவாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 மி.மி கீழ்போவது ஆபத்தானது இதனை தவிர்க்க.

    * உங்கள் மருந்தை புரிந்து கொள்ளுங்கள்.

    * வேகமாக வேலை செய்யும் இன்சூலின் எடுத்துக் கொள்பவராயின் 2 மணி நேரத்தில் உங்கள் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும்.

    * இன்சுலின் உபயோகிப்பவர்கள் இரண்டு வகைகளை மருந்துகளை தவறாக கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * சர்க்கரை உடலில் குறையும் போது ஏற்படும் அறிகுறிகளை நன்கு அறிந்து வைத்திருங்கள்.

    * கையில் எப்பொழுதும் பிஸ்கட் போன்று ஏதாவது இருக்கட்டும் சர்க்கரை குறைந்து வெலவெலப்பு ஏற்பட்டால் உடனடியாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * நன்கு தூங்குகள்

    * இன்சுலின் போட்டுக் கொண்டு சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

    உணவுக்கு முன் சர்க்கரையின் அளவு 70-130 மிகி/டெசிலி. உணவு உண்டு 2 மணி நேரத்திற்குப் பிறகு 180 மிகி/டெசிலிக்கு குறைவாக என குறிப்பிடுகின்றது. இந்த அளவீட்டின் முறையினை விட குறைவான அளவினையே நம் நாட்டில பரிந்துரைக்கின்றோம்.

    இங்கு உணவு முறை அதிக அரிசியோடு இருப்பதாலும், இந்தியா டயாபடிக் தலைநகரம் என வர்ணிக்கப்படுவதாலும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் இருப்பதாலும் இதனை மிகுந்த கவனத்தோடு நம் நாட்டில் பார்க்க வேண்டி உள்ளது. காலை வெறும் வயிற்றில் 100 மிகி/டெசிலி கீழும், உணவுக்கு 2 மணி நேரம் பிறகு 120 மிகி/டெசிலி இருப்பதுமே அனைவருக்கும் சிறந்தது.

    உங்கள் ரத்த அளவை அடிக்கடி நீங்களே பரிசோதித்துக் கொண்டு எழுதும் பொழுது எந்த உணவு ஸ்டிரெஸ், உடல் உழைப்பு இவை உங்கள் சர்க்கரை அளவினை பாதிக்கின்றது என்பதனை உங்களாலேயே உணர முடியும்.

    Last edited by chan; 23rd May 2015 at 02:33 PM.
    Dangu likes this.

  4. #124
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ரத்தத்தில் சர்க்கரையின் முறையான அளவு என்ன?

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவு என்பது மிகு/ டெசிலி என்ற முறையில் குறிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் எம்.எம்ஆர்./ லி என்ற முறையிலும், குறிப்பிடப்படுகின்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் கூட மாறுபடும்.

    சாப்பிட்ட உடன் அதிகம் கூடும். உடற்பயிற்சிக்குப் பின்பு பொதுவில் நன்கு தெரியும். மருத்துவர்கள் இரவு உணவுக்குப்பின் சுமார் 8 மணி நேர உணவின்மை இடைவெளியில் எடுக்கும் காலை பரிசோதனையும், உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எடுக்கும் பரிசோதனையையும் முக்கியமாக கொள்கின்றனர்.

    காலை பரிசோதனையில் காலையில் எதுவும் சாப்பிடும் முன்பு எடுக்கப்படும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70-92 மிகி/டெசிலி என்பது மிக மிக சிறப்பானது. அனேக மருத்துவர்கள் 100 மிகி/டெசிலி சரியானதே என்று ஏற்றுக் கொள்கின்றனர். சாப்பிட்டு 1-2 மணி நேரத்திற்கும் பிறகு 120 மிகி/டெசிலி என்பதும் மிக சிறப்பானது. எப்பொழுதும் 70 மிகி/டெசிலி கீழ் என்ற அளவு சரியானது அல்ல.


    Last edited by chan; 24th May 2015 at 12:53 PM.
    Dangu likes this.

  5. #125
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    உணவுக்குப்பின் ஏன் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது?


    ஒரு ஆரோக்கிய மனிதன் உணவு உட்கொள்ளும் பொழுது சிறிதளவு சர்க்கரை அளவு உயரும். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். கார்போஹைடிரேட் உணவை உட்கொள்ளும் பொழுது கணையத்திலிருந்து இன்சுலின் வருகின்றது.

    இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செல்களுக்கு சில நிமிடங்களில் அனுப்பிவிடும். அமைலின் என்ற ஹார்மோனும் வெளியாகும். இது வயிற்றிலிருந்து சிறு குடலுக்கு உணவு வேகமாக செல்வதனை நிதானப்படுத்தும். இதனால் சத்துக்களும் நன்கு உறிஞ்சப்படும். இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையினை நீக்கி விடும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போடுபவர்களுக்கு 15 நிமிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்து 60-90 நிமிடத்தில் முழு உயர்வில் வேலை செய்து 4 மணி நேர அளவில் இவ்வேலை முடியும். அமைலின் ஹார்மோன் சுரப்பது குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஆகவே உணவு வயிற்றிலிருந்து சீக்கிரமாகவே குடலுக்கு சென்று விடலாம்.

    இதன் காரணமே சர்க்கரை அளவு ஏறுகின்றது. இப்படி ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் பிரிவு 1 சர்க்கரை நோயாளிகளுக்கு கண், கிட்னி இரண்டும் பாதிக்கும் அபாயம் அதிகரிக்கின்றது என்றும் பிரிவு 2 நோயாளிகளுக்கு இருதய நோய் பாதிக்கும் ஆபத்து இருக்கின்றது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவில் எந்த நேரத்திலும் உடலில் சர்க்கரையின் அளவு கூடும் பொழுது உடலில் சக்தி குறையும்.

    மூளையின் செயல் திறன் குறையும். வேலை செய்ய முடியாத சோர்வு ஏற்படும். மனச்சோர்வும், கவனகுறைவும், டென்சனும் ஏற்படும். அதிக சர்க்கரை ரத்த குழாய்களை வீங்கச் செய்யும். எனவே பல முறை களூகோ மீட்டர் உதவியுடன் காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும், உணவுக்கு 2 மணி நேர பின்னும் பரிசோதனை செய்வது உங்கள் வாழ்க்கை முறையினை மாற்றிக் கொள்ள வழிவகுக்கும்.

    பொதுவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில தான் சரக்கரை கூடிய நிலையில் இருக்கும். பிரிவு 1 பாதிப்புடையோர் மருத்துவ உதவியுடன் சரியான அளவு இன்சுலின் எடுத்துக் கொள்வதும், பிரிவு 2 பாதிப்புடையோர் சரியான மருந்து, உணவுமுறை இருந்தால் வாழ்க்கை எளிதாகும்.


    Dangu likes this.

  6. #126
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு?
    ஜெயஶ்ரீ கோபால்
    சர்க்கரை நோய் மருத்துவர்
    ஹேமா, ஒரு சாப்பாட்டுப் பிரியை. அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தததும் பயந்துபோனார். இனிமேல், இனிப்பு, எண்ணெய், வறுவல் என எதையுமே தொடக் கூடாது வெறும் சப்பாத்தி மட்டும் சாப்பிட்டால்தான் உயிர்வாழ முடியும் என நினைத்தார். விரும்பிய உணவைச் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.
    இவரைப் போல பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு, என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்ற தெளிவு இல்லை. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும்முறை, என்ன வகை உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி, தெளிவாகப் பட்டியலிடுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஜெயஶ்ரீ கோபால்.

    சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, சுவையான உணவுகளுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டும் என எண்ணுவது தவறு. சீரான, சத்தான, உணவு அட்டவணையைக் கடைப்பிடித்தாலே போதும். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

    டயாபடீஸ் டயட்
    சாப்பிடும் உணவு மூலமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம். ஒவ்வொரு உணவு பொருளுக்கும் கிளைசமிக் குறியீட்டு எண் உண்டு. அதாவது, சாப்பிடும் உணவுப்பொருள் எவ்வளவு நேரத்தில், எந்த அளவுக்குச் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கிறது, என்பதைக் குறிக்கும் குறியீட்டு எண். சர்க்கரை நோயாளிகள், இந்த கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாக உள்ள உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதிகம் பாலிஷ் செய்யப்படாத, நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை, குறைவான கிளைசமிக் குறியீட்டு எண் கொண்டவை.

    உயரத்துக்கு ஏற்ற சரியான எடை இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோளை எட்ட, எண்ணெய் மற்றும் இனிப்பான பொருட்களைக் குறைவாக, சீரான இடைவெளியில் எடுத்துக்கொள்ளலாம்.

    ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு டீஸ்பூன் சர்க்கரை, இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை மட்டும் உணவில் சேர்த்துகொள்ளலாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளான முறுக்கு, சமோசா, வடை, சிக்கன் 65, போண்டா போன்ற உணவுகளைக் அவசியம் தவிர்க்க வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உருளை, சர்க்கரைவள்ளி போன்ற கிழங்கு வகைகளை குறைவாகச் சாப்பிடலாம்.

    லட்டு,ஜாங்கிரி முதலான இனிப்புகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், மைதாவால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தால், 10 நாட்களுக்கு ஒருமுறை, இதில் ஏதாவது ஒன்றை மட்டும் சிறிதளவு சாப்பிடலாம்.ஆனால், மனக்கட்டுப்பாடு அவசியம்.

    அரிசி சாதத்தைவிட, காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகளுடன் உப்பு,எண்ணெய், ஆகியவற்றைக் குறைவாகச் சேர்த்துச் சமைப்பது நல்லது. தினமும், வெவ்வேறு காய்கறிகளை மூன்று நான்கு கப் அளவுக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தினமும் உணவில் இரண்டு கப் பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, மாதுளம் பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். பேரீச்சம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிடலாம். மா, பலா, வாழை, தர்பூசணி ஆகிய பழங்களை மிகக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தவிர்ப்பது நல்லது. முழுப் பழமாக சாப்பிடவும். பழச்சாறாக அருந்த வேண்டாம்.

    சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை எப்போதாவது சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

    தினமும் காலை, மாலை வேளைகளில் சர்க்கரை சேர்க்காத ஒரு கப் டீ அல்லது காபி அருந்தலாம்.

    நார்ச்சத்து எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மாவுச்சத்தும் முக்கியம். ஒரு நாளைக்கு ஏதாவது ஒருவேளை மட்டும் அரிசி சாதம் சாப்பிடவும். மற்ற இரண்டு வேளை, கோதுமை உப்புமா, கேழ்வரகு, கோதுமை சப்பாத்தி, கம்பு தோசை, கோதுமை பொங்கல், கம்பு அடை போன்ற, அரிசி வகையைத் தவிர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணலாம்.

    தினமும் ஒன்றிரண்டு கப் பால் அருந்தலாம். ஒரு கப் தூய்மையான தயிர் சாப்பிடலாம். பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற டிரை ப்ரூட்ஸ் தினமும் 8 - 10 சாப்பிடவும். இதயத்துக்கு நல்லது. வேர்க்கடலை அளவாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

    முட்டையின் வெள்ளைக்கரு போலவே மஞ்சள் கருவிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. மஞ்சள் கருவைச் சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவும் வாரம் மூன்று முறை முழு முட்டையும் சாப்பிடலாம். முட்டையில் பல்வேறு நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன.

    அசைவ உணவை சாப்பிடலாம் தவறு இல்லை. ஆனால், சமைக்கும்போது, அதிக எண்ணெய், உப்பு, மசாலா சேர்க்காமல், வாரம் ஒரு முறை சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். ஆவியில் வேகவைத்த அசைவ உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்ளுங்கள். அசைவ உணவுகளில் உடலுக்குத் தேவையான புரதமும்சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிக அளவு கிடைக்கின்றன.
    உப்பு நிறைந்த உணவுகளான அப்பளம், வற்றல், ஊறுகாயை அறவே தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்க, உப்பு குறைவாகச் சாப்பிடவேண்டும். தினமும் ஒன்றிரண்டு டீஸ்பூன் உப்பு மட்டுமே சமையலில் சேர்க்கவேண்டும்.

    சாப்பிடும் முறை :
    மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டாம். சிறிதும் பெரிதுமாக, மொத்தம் ஆறு வேளைகளாகப் பிரித்துச்சாப்பிடவேண்டும்.

    நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம். ஒவ்வொரு வேளையிலும் பசித்தால் தேவையான அளவு சாப்பிடவும். மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் எடுத்துக்கொள்பவர்கள் பசி எடுக்காவிட்டாலும், குறைவாக குறிப்பிட்ட நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அப்போதுதான், உடலில் சர்க்கரை அளவு திடீரென குறைவதைத் தடுக்க முடியும்.

    உணவைக் கடித்து, சுவைத்து, அரைத்து, மெதுவாக விழுங்க வேண்டும். ஒரு சப்பாத்தியைச் சாப்பிடுவதற்கு, குறைந்தபட்சம் 8-10 நிமிடங்கள் எடுத்துக்கொள்வது அவசியம். மதியம் உணவை அரை மணி நேரமாவது பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.

    சாப்பிட்டவுடன் உடனடியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, 10-15 நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    ஒரே வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது போரடித்தால், விதவிதமான டிஷ் செய்து சாப்பிடுங்கள். ஒரு வாரத்துக்கு, என்னென்ன டிஷ் எப்போது செய்வது என்பதை, ஒரு அட்டவணையாகப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி, முடிந்தவரை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய் என்று முடங்கிவிடாமல் ஆரோக்கியமான உணவுகளைச் சுவைக்கத் தொடங்குங்கள். தினமும், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.



    குறிப்பு: சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்த அட்டவணையைக் கடைப்பிடிக்கலாம்.


    Last edited by chan; 1st Jun 2015 at 02:33 PM.

  7. #127
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    வந்துவிட்டது இந்திய டயாலிசிஸ்!

    சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துகிற வரையில் டயாலிசிஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த ஹீமோ டயாலிசிஸ் தொழில்நுட்பக் கருவிகள் ஜெர்மனி, கொரியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தயாரிக்கப்படுவதால்தான் டயாலிசிசுக்கான கட்டணமும் அதிகமாகவே இருக்கிறது.

    இந்த வெளிநாட்டுப் பூனைகளுக்கு மணி கட்டும் விதமாக ‘க்ளினிக்கல் கிரேட் ஃபைபர்ஸ்’ எனும் இழைகளைப் பயன்படுத்தி டயாலிசிஸ் செய்யும் தொழில்நுட்பத்தை மேற்கு வங்காளத்தின் காரக்பூர் ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளதுடன், கண்டுபிடிப்பை அங்கீகரித்து தேசிய விருது வழங்கியும் கௌரவித்துள்ளது!

    ‘‘டயாலிசிஸ் கருவிகளுக்கான காப்புரிமையை சில வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இதனால்தான் வாரம் ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கே ரூ.1,500 வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ரூ.200 முதல் ரூ.300க்குள்ளேயே டயாலிசிஸ் செய்துகொள்ள முடியும்’’ என்று கூறியிருக்கிறார், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான அனிர்பன் ராய்.



  8. #128
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ஆரோக்கியம் காக்கும் இன்சுலின்


    இன்சுலின். நீரிழிவுக்காரர்களுக்கு இந்தப் பெயர் பிரபலம். உடலில் இன்சுலின் சுரக்காவிட்டால் நீரிழிவு நோய் வரும் என்றும், கட்டுப்படாத நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பலருக்கும் தெரியும்.‘இன்சுலின்’ என்பது ஒரு ஹார்மோன்; கணையத்தில் உள்ள ‘பீட்டா’ செல் இதைச் சுரக்கிறது. இதுதான், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சரியான அளவில் வைத்துக் கொள்கிறது.

    உணவு செரிமானமானதும், மாவுச்சத்து குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இதனால், குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. அப்போது, ‘இன்கிரிட்டின்’ (Incretin) எனும் ஹார்மோன் சிறுகுடலில் சுரக்கிறது. இது ரத்தம் வழியாக கணையத்தை அடைந்து, பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்கிறது.

    இன்சுலின் ரத்த ஓட்டத்தில் கலந்து, ஒவ்வொரு செல்லுக்கும் செல்கிறது. செல்லின் சுவரில் ‘இன்சுலின் ஏற்பான்’ (Insulin Receptor) எனும் ‘பூட்டு’ உள்ளது. அந்தப் பூட்டைத் திறக்கும் ‘சாவி’தான், இன்சுலின். பூட்டில் சாவியை நுழைத்துத் திறப்பதுபோல், இன்சுலின், இந்த ஏற்பான்களோடு இணையும்போது மட்டுமே, செல் சுவர்களில் உள்ள ‘குளுக்கோஸ் கதவுகள்’ திறக்கின்றன. அப்போது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைகிறது. அங்கு சில வேதிவினைகள் ஏற்பட்டு குளுக்கோஸ் சக்தியாக மாறி உடலின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.

    அதேநேரம், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் முழுவதுமே செல்களுக்குள் நுழைந்துவிடவும் முடியாது. குறிப்பிட்ட அளவு குளுக்கோஸ் செல்களுக்குள் வந்தவுடன், ‘குளுக்கோஸ் கதவுகள்’ மூடிக்கொள்கின்றன. அதனால், மேன்மேலும் குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.

    அப்போது ரத்தத்தில் 140 மி.கி./டெ.லி.க்கு மேல் குளுக்கோஸ் இருந்தால், இன்சுலின் அதைக் கல்லீரலுக்கும் தசைகளுக்கும் எடுத்துச் சென்று, கிளைக்கோஜனாக மாற்றிவிடுகிறது. இதனால், ரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.

    இந்த அளவு 100 மி.கி./டெ.லி.க்கு வந்ததும், அது மேன்மேலும் குறைந்து விடாமல் இருக்க, கணையம் இன்சுலின் சுரப்பதைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொள்கிறது. இவ்வாறு, ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருக்கும்படி இன்சுலின் பார்த்துக் கொள்கிறது.

    அதேநேரம், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிதுகூட சுரக்காவிட்டாலோ, சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 140 மி.கி./டெ.லி.க்கு மேல் தாண்டிவிடும். இந்த நிலைமையை ‘ரத்த மிகைக் குளுக்கோஸ்’ (Hyperglycaemia) என்கிறோம். இது 200க்கு மேல் தாண்டிவிட்டால் அதை நீரிழிவு என்கிறோம்.

    நீரிழிவைக் கட்டுப்படுத்த மாத்திரை, இன்சுலின் ஊசி மருந்துகள் உதவுகின்றன. இவற்றில் இன்சுலின் மருந்து மனித உடலில் சுரக்கிற இன்சுலினைப் போலவே வேலை செய்வதால், இதுவே நீரிழிவு நோய்க்கு அற்புத மருந்து என்கிறது ஆங்கில மருத்துவம். இருபதாம் நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு இன்சுலின் மருந்து.

    இது மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் நீரிழிவு நோயால் மனித குலமே சீரழிந்து போயிருக்கும்; கால் இழந்து, பார்வை இழந்து, பக்கவாதம் வந்து கோடிக்கணக்கான பேர் முடமாகி இருப்பார்கள். இன்னும் பல கோடிப் பேர் நடுத்தர வயதிலேயே இறந்திருப்பார்கள்.

    இன்சுலினைக் கண்டுபிடித்து உலக அளவில் உயிரிழப்பைக் குறைத்தவர்கள் கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), பெஸ்ட் (Best) எனும் மருத்துவ விஞ்ஞானிகள். 1920ம் ஆண்டுவரை உடலில் கணையத்துக்கும் நீரிழிவுக்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும்தான் தெரியும். பாண்டிங், தன்னுடைய ஆராய்ச்சியின் முதல்படியாக, ஆரோக்கியமான ஒரு நாயின் கணையத்தை அகற்றி, அதிலிருந்து ஒரு திரவத்தைப் பிழிந்து, அதை நீரிழிவு நோயுள்ள நாய்க்கு ஊசிமூலம் செலுத்தினார்.

    என்ன ஆச்சரியம்! அந்த நாயின் ரத்த சர்க்கரை குறையத் தொடங்கியது. அதை பல நாய்களிடம் சோதித்துப் பார்த்தார். எல்லா நாய்களுக்கும் ரத்த சர்க்கரை குறைந்தது.
    அதைத் தொடர்ந்து, நீரிழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ‘லியோனார்ட் தாம்சன்’ என்ற 19 வயதுச் சிறுவனுக்கு அதைச் செலுத்தினார். அவனுக்கும் நோய் கட்டுப்பட்டது. அதன்மூலம், ‘நீரிழிவு நோய்க்குக் காரணம் இன்சுலின் குறைவு; அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி இன்சுலினைச் செலுத்துவது’ என்று பாண்டிங் உறுதி செய்தார். இது நடந்தது 1922ம் ஆண்டில்.

    பாண்டிங், தான் கண்டுபிடித்த திரவத்துக்கு ‘ஐலெட்டின்’ (Isletin) என்றுதான் பெயரிட்டார். ஆனால், அவருடைய ஆராய்ச்சிக்கு உதவிய ‘மேக்ளியாட்’ எனும் விஞ்ஞானி, அதை ‘இன்சுலின்’ (Insulin) என்று மாற்றிவிட்டார். லில்லி என்ற மருந்து நிறுவனம் முதன்முதலில் இந்த இன்சுலினைத் தயாரித்துக் கொடுத்தது. நாயிடம் பெறப்பட்ட இன்சுலினுக்கு ஒவ்வாமை குணங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் மாடு / பன்றி கணையத்திலிருந்தும் இன்சுலினைத் தயாரித்தார்கள். பிறகு இதிலும் மாற்றம் ஏற்பட்டது.

    1978ல் ‘டி.என்.ஏ. மறுசேர்க்கை தொழில்நுட்ப’த்தைப் (DNA recombinant technology) பயன்படுத்தி மனித இன்சுலினைப் போலவே உள்ள புதிய இன்சுலினை செயற்கைமுறையில் தயாரிக்கத் தொடங்கினர். ஈ.கோலை(E.Coli) எனும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனித மரபணுவை இணைத்து வளர்க்கிறபோது, மனித இன்சுலினை ஒத்த புது வகை இன்சுலினை அது சுரக்கிறது. பக்கவிளைவுகள் குறைந்த, அதிக பலன் தருகிற அற்புத மருந்து இது. இப்போது இதன் வேதிக்கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்து பலதரப்பட்ட இன்சுலின்களைத் தயாரிக்கிறார்கள்.

    இவற்றை டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு, மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் போடு
    கிறார்கள். அறுவை சிகிச்சை, ஆறாத புண், நோய்த்தொற்று, மிகு ரத்த சர்க்கரை மயக்கம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு தற்காலிகமாகப் போடுகிறார்கள்.

    இதனால் ரத்தச் சர்க்கரை இவர்களுக்கு நன்றாகக் கட்டுப்படுகிறது. நீரிழிவால் ஏற்படுகிற பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இன்சுலின் செய்யும் அற்புதம் இது!


    டாக்டர் கு.கணேசன்



  9. #129
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    இனிக்கும் வாழ்வே கசக்கும்... கசக்கும் வாழ்வே இனிக்கும்!

    ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில், ‘டேய் பஞ்சாயத்த சீக்கிரம் முடிங்கடா, எனக்கு சுகர் லோவாகுது, மாத்திரை போடணும்’ என்பார் ரவுடி அண்ணாச்சி.

    ரவுடி-நல்லவன், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, ஆண்-பெண், ஹிந்து-முஸ்லிம்-கிறிஸ்தவன், மேல்சாதி-கீழ்சாதி எனப் பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் சமமாக பாதிக்கும் கம்யூனிஸ நோய், சர்க்கரை நோய் ஒன்றே. ஒரே ஒரு ஏற்றத்தாழ்வு, குழந்தை-பெரியவர் மட்டுமே. முன்பெல்லாம் பெரியவர்களை அதிகமாக பாதித்த இந்த நோய் இப்போது சிறுவர்களிடமும் வர ஆரம்பித்திருப்பது ஒரு சமூக சாபம்.

    இருவகை டயாபடீஸில் முதல் வகை பரம்பரை நோயாகும். நம் பெற்றோர், பாட்டன் பாட்டி, கொள்ளு எள்ளு மற்றும் ஜொள்ளு தாத்தா பாட்டிகள் யார் ஒருவருக்கு இந்த டைப் 1 டயாபடீஸ் இருந்தாலும் நமக்கு இது வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. எந்த வயதிலும் இது வரலாம். கணையம் முற்றிலும் செயலிழந்து, வாழ்நாள் முழுதும் இன்சுலின் ஊசி போட வேண்டும். நமக்கு அடுத்த சந்ததிக்கு இது வருவதை எந்த சாமியாராலும் டாக்டராலும் இப்போதைக்குத் தடுக்க முடியாது. இன்சுலின், உடலில் உள்ள செல்களை, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உறிஞ்ச செய்து, அதை சக்தியாக மாற்ற தூண்டுகிறது.

    முதல் வகை டயாபடீஸில் கணையம் (Pancreas) பழுதாகி இன்சுலின் சுரப்பதில்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி நரம்பு, ரத்தக்குழாய், கிட்னி, கண், இதயம் ஆகியவற்றை பாதிக்கிறது. இதற்கு இன்சுலின் ஒன்றே தீர்வு. சிரிஞ்சில் இன்சுலினை ஏற்றி உடலில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒரு வேளை மட்டும் (Glargine Insulin), ஒரு பேனா வழியாக சுலபமாக போட்டுக் கொள்ளும் முறை பரவலாகியிருக்கிறது. கொஞ்சம் பணமிருந்தால் ஒரு மெஷினை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அது தானாகவே சுகர் செக் செய்து, உடலில் இன்சுலினை ஏற்றி விடுகிறது.

    அவ்வப்போது டப்பாவில் ஹார்லிக்ஸ் ரொப்புவது போல் ரீஃபில் பேக் மாற்றிக் கொள்ளலாம். டாக்டர் ஃபீஸ், லேப் ஃபீஸ், அலைச்சல் மிச்சம். ஜாலியாக ஜல்லியடிக்கலாம். ஊசியே இல்லாமல் மூக்கால் உறிஞ்சும் இன்சுலின் இன்ஹேலர் சீக்கிரம் மார்க்கெட்டில் வந்து விடும். நாம் ஸ்டைலாக மூக்குப்பொடி போடுவதை ஃபாரின்காரன் காப்பியடித்து இந்த வைத்தியத்தை கண்டுபிடித்தான் என யாராவது கேஸ் போடலாம்!

    தோலில் ஸ்டிக்கர் போல் ஒட்டி வைத்தால் உள்ளே போகும் இன்சுலின், மாத்திரை வழி இன்சுலின், நாக்குக்கடியில் வைத்தால் கரைந்து உள்ளே போகும் இன்சுலின் என ஆராய்ச்சியாளர்கள் மூளை, கிட்னி என எல்லாத்தையும் கசக்கி யோசிக்கிறார்கள். ஒருவருக்கு முதல் வகை டயாபடீஸ் உடலில் உருப்பெறும் போது மருந்துகள் கொடுத்து சுகர் வராமல் தடுக்கக்கூடிய ஒரு கடின ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

    இறந்த பின் தானம் கிடைக்கும் கணையத்தின் செல்களை எடுத்து டயாபடீஸ் காரர்களுக்கு ஊசி மூலம் போடுவது சிலருக்கு பலன் தருகிறதாம். நார்மலாகி விடுகிறார்களாம். கணையத்தின் மரபணுவை தட்டி எழுப்பி இன்சுலின் தயார் செய்ய வைக்க முயற்சிகள் நடக்கிறது.

    ஸ்டெம் செல்லை எடுத்து அதைத் தூண்டி புதிய கணையத்தை ஆராய்ச்சிக்கூடத்தில் தயார் செய்து உடலில் பொருத்தும் ஆராய்ச்சி 20 வருடங்களாக நடந்து வருகிறது. இது வரும்ம்ம் ஆனா வராது. ‘ஆ ஊனா ஸ்டெம் செல்லை எடுத்துக்கிட்டு கூட்டம் கூட்டமாக வந்துர்றானுங்க’ என அங்கலாய்க்க வேண்டாம். எள்ளு பேத்திக்கு இந்த வகை கணையம் கிடைப்பது உறுதி. அதுவரை அடம் பிடிக்கக் கூடாது!

    இரண்டாம் வகைதான் நாம் அதிகம் பார்ப்பது. நாம் செய்யும் கம்மியான உடலுழைப்பு, சரக்கடித்தல், அதிகமாக சாப்பிடுதல், குண்டாக இருத்தல், டென்ஷன், கம்மியாக தூங்குதல் போன்ற தவறுகள் மற்றும் பரம்பரையாகவும் வரும் லைஃப்ஸ்டைல் நோய்களில் ஒன்றான டைப் 2 டயாபடீஸ், மருந்து கம்பெனிகளின் ஒரு வரம். கேப்பிடலிசத்தால் வரும் கம்யூனிஸ நோய். இரண்டாம் வகை டயாபடீஸில், கணையம் இன்சுலின் சுரக்கும்.

    ஆனால், உடல் செல்களுக்கு அந்த இன்சுலினை பயன்படுத்தும் ஆற்றல் குறைந்து விடும். மொளகாப்பொடி போட்டு கண்ணில் கண்ணீர் வரவழைப்பதைப் போல் கணையத்தை பிழிந்து இன்னும் கொஞ்சம் இன்சுலினை வரவழைக்கவும், உடலின் செல்கள் இன்சுலினை பயன்படுத்தத் தூண்டவும், உணவில் சர்க்கரையை அதிகம் உடலுக்குச் செல்லாமல் தடுக்கவும் செய்யக்கூடிய மாத்திரைகள்தான் இப்போது இருக்கின்றன. எதுவும் வேலை செய்யாவிட்டால் இன்சுலின் போட வேண்டும்.

    இன்னும் 300-400 மருந்துகள் ஆராய்ச்சி யில் உள்ளன. பிற்காலத்தில் டைலர் மேடு ட்ரீட்மென்ட் வந்து விடும். ஒவ்வொருவருக்கும் அவர் உடலமைப்பு, பிரச்னைகளுக்கு ஏற்ப பிரத்யேக மருந்துகள் மற்றும் மருத்துவம்.

    பல நோய்களை குணப்படுத்துவதாக கூறும் ஜில் ஜக்கா சாமியார்கள், காதில் ஊதி பூச்சி எடுக்கும் காமெடியர்கள், வயிற்றில் எலும்பு, முடி எடுத்து குணப்படுத்துவதாகக் கூறும் குபீம் கபாம் வைத்திய சிகாமணிகள், மல்ட்டிலெவல் மார்க் கெட்டிங் மூலம் எல்லா நோய்க்கும் தற்காப்பு மருந்து விற்பவர்கள் பல பேர் ரகசியமாக சுகருக்கு எங்களைப் பார்த்து மாத்திரை போடுகிறார்கள்.

    இதில் பல ரோட் சைட் லேகிய ஸ்பெஷலிஸ்ட்டுகளும் அடக்கம். முற்றிலும் குணமாக்குவேன் பேர்வழி என்று சொல்பவர்கள் அடுத்த பில் கேட்ஸ், அம்பானி என்ன, அமெரிக்க ஜனாதிபதியே ஆகலாம். அப்படி யாரும் இப்போது இல்லை!

    சுகர் டெஸ்டிங்கில் புரட்சியே வந்து விடும் போலிருக்கிறது. வீட்டிலேயே குளுக்கோமீட்டர் வைத்து தானாகவே சுகர் பார்த்து இன்சுலின் போடுவதுதான் வாழ்வாங்கு வாழ வைக்கும் மந்திரம். அதை எளிமைப்படுத்த ரத்தமே எடுக்காமல் சர்க்கரை டெஸ்ட் செய்யும் கருவி கள் வரும் நாள் தொலைவில் இல்லை.

    சர்க்கரையினால் வரும் கால் புண், கண்ணில் ரெட்டினோபதி போன்றவற்றுக்கு புதுப்புது வைத்தியங்கள் வந்த வண்ணம் உள்ளன. சுகரை கன்ட்ரோலில் வைத்தால், இது வராமலேயே தடுக்கலாம்.

    ரெகுலர் மருத்துவ செக்கப், டாக்டர் சொல்வதை் ஒழுங்காகச் செய்வது, தினமும் கால்களை தடவிப் பார்ப்பது, அதிக ஃபைபர் / கம்மி கொழுப்பு / சர்க்கரையில்லா உணவு, எக்சர்சைஸ், தூக்கம், பாசிட்டிவ் எண்ணங்கள், பொழுதுபோக்குகள், சரக்கில்லாமை, இன்டர்நெட் பார்த்து பல சர்வரோக நிவாரணிகள் சாப்பிடாமை என இவை எல்லாம் இருந்தால் சர்க்கரை நோயினால் வரும் சைடு டிஷ் நோய்களை வராமல் தடுக்கலாம்.

    இப்போதைக்கு நாம் செய்யக்கூடியது டாக்டர் சொல்வதைக் கேட்டு நடப்பது தான். சில பேர் என் கிளினிக்கில் வந்து கேட்கிறார்கள்... ‘டாக்டர், என் பக்கத்து வூட்டுக்காரரு சொல்றாரு, இன்சுலின் போட்டா போட்டுக்கிட்டே இருக்கணுமாம்.

    நிப்பாட்டவே முடியாதாம். அதனால எனக்கு சுகர் குறையாட்டியும் பரவால்ல, இன்சுலின் வேணாம்...’ நமக்கு அப்படியே சுர்ர்ர் என வந்து விடும். அந்த பக்கத்து வீட்டுக்காரன் மட்டும் சிக்கினான், மவனே, கைமா ஆக்கிடுவேன். ‘ஏம்மா அவர் சொல்றார்னு சொல்றியே, சுகர் கம்மியாவலனா இதயம், கிட்னி பாதிச்சுரும், அப்புறம் அல்பாயுசுதான்.

    மாத்திரைல குறையலன்னா இன்சுலின் போட்டுத்தான் ஆவணும். இங்க பாருங்க, குழந்தைங்க கூட போட்டுக்கிறாங்க’ என்று எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. அப்புறம் சுகர் குறையாமல் 500-600 என்று ஐபிஎல் சிக்ஸர் மாதிரி எகிறி, கீட்டோ அசிட்டோசிஸ் வந்து அஞ்சு நாள் ஐசியூவில் கிடப்பார்கள்.

    அப்புறம் என்னிடம் வந்து ‘டாக்டர், எனக்கு ஏன் அப்பவே இன்சுலின் ஆரம்பிக்கலை? இவ்ளோ சீரியஸ் ஆகியிருக்காதுல்ல? இனிேம டெய்லி இன்சுலின் போட்டுக்கிட்டா இப்படி ஆவாதுன்னு சொன்னாங்க’ என்கிறார்கள். என்னது, நான் சொல்லலியா? உயிர் பிழைத்து வந்தவங்களை என்னனு சொல்றது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என விட வேண்டியதுதான்.

    நோயை இல்லாமல் ஆக்குவதுதான் சிறந்த மருத்துவம். ஒருவருக்கு காச நோய் வந்தால் மருந்து கொடுத்து அதை இல்லாமல் ஆக்குவது போல், டயாபடீஸ் போன்ற தொற்றா (Non-communicable) நோய்களை குணப்படுத்த யாராலும் முடிவதில்லை. கன்ட்ரோல் வேண்டு மானால் செய்யலாம்.

    வயிற்றில் இருக்கும் போதே ஜெனிடிக் டெஸ்டிங் செய்து, ‘சுகர் பின்னால் இவனுக்கு வருமா’ எனக் கண்டுபிடித்து அங்கேயே ஜில்பகா வேலை செய்து மரபணுவை மாற்றி, பிறக்கும் முன் சர்க்கரையை வராமல் தடுப்பதே சிறந்தது. அவனும் ஒழுங்காக ஒழுக்கமாக ஒல்லியாக இருந்தால் கசக்கும் வாழ்வு இனிமையாக இருக்கும். இப்படி ஒரு வசதி பிற்காலத்தில் வரவேண்டும் என சீனியம்மனை வேண்டுவோம்.

    - ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!

    நாம் ஸ்டைலாக மூக்குப்பொடி போடுவதை ஃபாரின்காரன் காப்பியடித்து இந்த வைத்தியத்தை கண்டுபிடித்தான் என யாராவது கேஸ் போடலாம்!வயிற்றில் இருக்கும் போதே ஜெனிடிக் டெஸ்டிங் செய்து, ‘சுகர் பின்னால் இவனுக்கு வருமா’ எனக் கண்டுபிடித்து அங்கேயே ஜில்பகா வேலை செய்து மரபணுவை மாற்றி, பிறக்கும் முன் சர்க்கரையை வராமல் தடுப்பதே சிறந்தது.

    டாக்டர் வி.ஹரிஹரன்


    sudhavaidhi likes this.

  10. #130
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    அதிக இனிப்பு சாப்பிட்டால் மாத்திரையை கூட்டலாமா?


    ஆண்களுக்கு தசை வளர்ச்சி அதிகம் என்பதால், அதிக அளவு புரதச்சத்து மற்றும் கலோரி தேவைப்படும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் இனிப்பு எடுத்துக் கொள்ளும் போதும், உணவின் அளவு அதிகரிக்கும் போது அதற்கு தகுந்தாற்போல், மருந்தின் அளவை அதிகரித்து கொள்ளலாமா என்ற சந்தேகம் உள்ளது.

    சர்க்கரை நோய்க்கு மருந்தின் அளவை நாமாக, முடிவு செய்வது மிகவும் தவறான ஒன்று. எந்த வகை இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தும், உணவின் அளவை பொறுத்தும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

    அதற்கு எந்த அளவு மருந்து தேவைப்படும் என்பது, மருத்துவருக்கு மட்டுமே தெரியும். நாமே மருந்துகளின் அளவை அதிகப்படுத்தும்போது, சில சமயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து, லோ சுகர் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உயிருக்கே ஆபத்தானதாக முடிந்து விடும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter