Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #131
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்!!!

    இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. முற்காலத்தில் எல்லாம் குறிப்பிட்ட வயதிற்கு மேல், அதாவது 40, 50 வயதுக்கு மேல் ஆனால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. இப்பொழுதோ பிறந்த குழந்தைக்குக் கூட சர்க்கரை நோய் உள்ளது. இந்த சர்க்கரை நோயை முற்றிலுமாகத் தடுக்க வழி எதுவும் இல்லை. ஆனால், கட்டுப்படுத்த வழிகள் உள்ளன. அதுவும் நாம் பின்பற்றும் உணவு முறையில் தான் உள்ளது. வாருங்கள் நாம் இப்போது அவற்றில் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்....


    * சர்க்கரை நோய் தாக்குதலை தவிர்க்க நாம் சாப்பிடும் உணவில் மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் ஆகியவை 60:20:20 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

    * முதலில் காய்கறிகள், அதுவும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும். உதாரணமாக பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகள் இவற்றில் எல்லாம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றன.

    * காய்கறிகளைப் போலதான் பழங்களிலும் அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம், திராட்சை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஏனெனில், அவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது.
    தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைத் 100 மி.லி. தண்ணீரில் ஊற வைத்து விட்டு, காலையில் எழுந்ததும் அதை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதேபோல் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

    * சர்க்கரை நோயாளிகளுக்கும் இனிப்புப் பண்டங்களுக்கும் ரொம்ப தூரம். ஆனால் அவர்களுக்கும் இனிப்புப் பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கும். அதற்காகத் தான் இருக்கிறது இயற்கை இனிப்பான தேன். அவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு தேனைப் பயன்படுத்தலாம்.

    * சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு முறை பால் குடிக்க வேண்டும். ஏனெனில், பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் சரியாக அளவு இருக்கிறது. எனவே, இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.


    அடுத்ததாக அசைவ உணவுகளைப் பற்றி பார்ப்போம்.....

    அசைவ உணவுகளில் சர்க்கரை நோயாளிகள் மீனை தாராளமாக சாப்பிடலாம். கோழியை அளவோடு சாப்பிடலாம். ஆனால், மட்டனைத் தொட்டுக் கூட பார்க்கக் கூடாது. ஏனெனில், மட்டனில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது.

    * மேலும், அதிக கொழுப்புச் சத்து உள்ள சர்க்கரை நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.




    Sponsored Links
    jv_66 likes this.

  2. #132
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சுகர் ஸ்மார்ட்


    1. சுவையில் குறையொன்றுமில்லை!

    டயாபடீஸ் வரும் வரை, நான் எவ்வளவு உறுதிமிக்கவன் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது எனக்கு உறுதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை!
    - யாரோ

    நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் ஆற்றலாக மாற்றப்படுகின்றன. நமது பிரதான ஆற்றல் மூலம் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையே. நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என அனைத்துமே நம் உடலின் தேவைக்கேற்ப குளுக்கோஸ் ஆக மாற்றப்படுகிறது. இவற்றில் கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்துதான் ரத்த சர்க்கரை விஷயத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவுக்காரர்களுக்கு இதில் என்ன பிரச்னை?

    நீரிழிவு உடலால் உணவின் மூலம் பெறப்படும் குளுக்கோஸை உடைத்து, முறைப்படி ஆற்றலாக மாற்ற முடிவதில்லை. சில நேரங்களில் இதன் திறன் குறைந்து போய், குறைவான குளுக்கோஸே ஆற்றல் ஆகிறது. எஞ்சிய குளுக்கோஸ் ரத்தத்திலேயே இருக்கிறது. அதனால்தான் நீரிழிவுக்கான மருந்துகளோடு, உணவுக்கட்டுப்பாடும் கட்டாயம் என வலியுறுத்தப்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு என்பது உணவின் அளவை மட்டுமல்ல... தரத்தையும் பொருத்தது.

    நீரிழிவு, உணவுக்கட்டுப்பாடு என்றெல்லாம் கூறியவுடன் பலரும் ‘அய்யோ பரிதாபம்’ என்றே எண்ணுகிறார்கள். உண்மையில், நீரிழிவாளர்கள் ஆரோக்கியமானவர்கள் உண்ணுகிற அத்தனை ருசி உணவுகளையும் ஒரு கை பார்க்க முடியும். எல்லாவித உணவுக்குழுக்களில் உள்ள உணவுகளையும் தேர்ந்தெடுக்க முடியும். ஸ்மார்ட் ஆகச் செயல்பட்டு, சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், சுவையில் குறையொன்றுமில்லை!

    இதோ அதற்காக ஒரு கைடு...

    அளவாகச் சாப்பிடுங்கள்... அதிக முறை சாப்பிடுங்கள்!ரத்தத்தில் தடாலடியாக குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் இருக்க இந்த ஸ்டைல் உதவும். 3 வேளைகளில் மூக்குப்பிடிக்க சாப்பிடாமல், 5-6 வேளைகளாகப் பிரித்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொள்வது சிறப்பு. ஆனால், எந்த வேளை உணவையும் தள்ளிப்போடவோ, விட்டு விடவோ வேண்டாம்.

    மாவுச்சத்தைக் குறைக்கலாம்!

    அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை கூடிய வரை குறைக்கலாம். இவற்றில் அதிக சர்க்கரை உள்ளதால், ரத்த சர்க்கரையையும் விரைவில் உயர்த்தும்.

    வெரைட்டி நல்லது!

    முழு தானிய உணவுகள், அனுமதிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். இதன் மூலமே நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற முடியும். எந்த ஒற்றை உணவு மூலமாகவும் நமக்குத் தேவையான ஒட்டுமொத்த சத்துகளும் கிடைத்து விடாது அல்லவா? வைட்டமின், தாது (மினரல்), நார்ச்சத்து (ஃபைபர்) போன்ற அவசியமானவற்றை இந்த உணவுகளில் இருந்தே பெற முடியும். கொலஸ்ட்ராலும் கிடையாது. கொழுப்பும் குறைவு. கலோரியும் குறைவோ குறைவு!

    கொழுப்பையும் குறைக்கணும்!

    அதிக வாய் கொழுப்போ, அதீத உடல் கொழுப்போ... எதுவாக இருந்தாலும் வாழ்க்கைக்கு உதவாது. அதனால் மொத்த கலோரியில் 30 சதவிகித கொழுப்பையே உணவிலிருந்து பெற வேண்டும். குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த இலக்கை எளிதாக எட்டலாம்.

    உப்போ சர்க்கரையோ ஒவ்வாது!

    உப்பை மிகக்குறைவாகப் பயன்படுத்துங்கள். பாட்டில் பானங்கள், இனிப்புகள், கேக் வகைகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை கலக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு ‘நோ’ சொல்லி விடலாம். மாற்றாக அனுமதிக்கப்பட்ட பழங்களை ஆசையாகச் சாப்பிடலாம். ஆறேழு மாம்பழங்களை அலேக் செய்யும் ஆசாமிகளுக்கு இந்த விதி உதவாது!

    ஸ்வீட் டேட்டா

    உலகில் 7 வினாடிகளுக்கு ஒருவர் நீரிழிவு சார்ந்த பிரச்னைகளால் உயிர் இழக்கிறார்.

    2. மாற்று
    உணவுகள் இதோ!


    தினமும் காலையில் இட்லி, மதியம் சாதம், இரவில் தோசை என்று ஒரே மாதிரி உணவு சாப்பிட்டால் போரடிக்குமில்லையா? அதிலும் நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் உங்கள் நிலைமை ரொம்பவும் பரிதாபம் ஆகிவிடும். ஏற்கெனவே பல உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட உங்களுக்கு, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு ‘மெனு கார்டு’ வேறு கொடுத்துவிட்டால், வாழ்க்கையே வெறுத்துவிடும்...

    நினைத்த உணவைச் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம் பெருகும்... மாற்று உணவு கிடைக்காதா என்று மனசு தேடும்.
    அப்படிப்பட்டவர்களுக்காக தனது ‘சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது’ நூலில் (சூரியன் பதிப்பகம் வெளியீடு) பயனுள்ள தகவல்களை ஆராய்ச்சிப்பூர்வமாக அளித்திருக்கிறார் டாக்டர் கு.கணேசன். படித்துப் பயன்பெறுங்கள்!

    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உணவும் அளவும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. அடுத்து, ஒரு உணவுக்குப் பதிலாக அதே கலோரியைத் தரக்கூடிய மாற்று உணவையும் தெரிந்துகொண்டால், நாம் விரும்பும் உணவுகளை மாற்றி மாற்றிச் சாப்பிட்டுக்கொள்ள உதவும். இதன் பலனால், ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட வேண்டிய நிலைமைக்கு விடுதலை கிடைக்கும். இப்போது சந்தோஷம்தானே!

    இட்லிக்கு மாற்று உணவு (100 கலோரிகள்).
    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    தோசை 1, அரிசி சாதம் 150 கிராம்.
    சப்பாத்தி 1, கோதுமை ரொட்டி 1 துண்டு.
    பழ வகைக்கு மாற்று உணவு (50 கலோரிகள்).

    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    ஆரஞ்சு 1, ஆப்பிள் 1, பேரிக்காய் 1, நாட்டுக் கொய்யாப்பழம் 1, வாழைப்பழம் சிறியது, திராட்சை 20, தர்ப்பூசணி ஒரு துண்டு, பப்பாளி ஒரு துண்டு, மாம்பழம் 3 துண்டு, நெல்லிக்காய் 5, சப்போட்டா 1, பலாப்பழம் 3 சுளைகள்.
    காய்கறிகள் சமைத்தது 30 கலோரிகளுக்கு மாற்று உணவு.
    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, ேகரட், முள்ளங்கி, சவ்சவ், நூல்கோல், பசலைக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ, புதினா.

    காய்கறிகள் சமைத்தது - 60 கலோரிகளுக்கு மாற்று உணவு.
    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    அவரைக்காய், கொத்தவரங்காய்,
    வெங்காயம், முருங்கைக்கீரை.
    இறைச்சி வகைகள் - 80 கலோரிகளுக்கு மாற்று உணவு.
    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    மீன் 75 - 100 கிராம், கோழி இறைச்சி 75 கிராம், ஆட்டிறைச்சி 50 கிராம், ஈரல் 75 கிராம்
    முட்டை 1.

    பால் - 75 கலோரிகளுக்கு மாற்று உணவு.
    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    பசும்பால் - 125 மி.லி., எருமைப்பால் - 65 மி.லி., தயிர் 125 மி.லி., மோர் 600 மி.லி.
    கொழுப்பு உணவுகள் -
    75 கலோரிகளுக்கு மாற்று உணவு.
    இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
    வெண்ணெய் இரண்டரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், சூரியகாந்தி எண்ணெய் 2 டீஸ்பூன்.


    Last edited by chan; 18th Jun 2015 at 10:52 AM.
    jv_66 likes this.

  3. #133
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயாளிகளே காதை கவனிங்க




    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்கள், கண்கள், ஆகியவற்றின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வார்கள். ஆனால் அந்த வரிசையில் சர்க்கரை நோய் காதுகளை செவிடாக்கலாம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    இது குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஆய்வுகளில் ஒன்றிரண்டை மேற்கொள்காட்டி மருத்துவர்கள் தற்போது சர்க்கரை நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சப்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று 'உய்ங்' என்று சப்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. டிவியை சப்தமாக வைத்துக் கேட்பது என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் பழக்கமாகும். இவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்குமெனில் இவர்கள் காதுகளையும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    இரண்டு காதுகளிலும் சம அளவு கேட்கும் திறன் இழப்பு ஏற்பட்டால் அது வயதான கோளாறு என்று கூறலாம். ஆனால் நிறைய இளம் வயதினர்களில் ஒரு காது சற்று மந்தமடைவது தற்போது அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படியிருக்குமெனில் அதற்கு பல காரணங்களில் சர்க்கரை நோயும் ஒன்று என்கின்றனர் மருத்துவர்கள்.

    காதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனி காதுகளையும் பரிசோதனைக்குட்படுத்துவது சிறந்தது


    jv_66 likes this.

  4. #134
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயை தடுப்பதற்கான சில எளிய டிப்ஸ்...


    இன்றைய உலகத்தில் நோய்களின் எண்ணிக்கை எண்ண முடியாத அளவில் வளர்ந்து நிற்கிறது. நோய்க்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் பெருகிக் கொண்டே போகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் முதுமை மட்டுமே பெரிய நோயாக இருந்தது. ஆனால் இன்றோ குழந்தைகள் பிறந்தது முதல் பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் வந்து சேர்கிறது.

    அதில் பல வித நோய்கள் உயிரை பறிக்கும் விதமாக மிகவும் ஆபத்தானதாய் விளங்குகிறது. அப்படி உங்களை மெதுவாக கொல்லும் ஒரு நோய் தான் சர்க்கரை நோய். சரிவர கவனிக்காமல் விட்டு விட்டால் உங்கள் உயிரையே காவு வாங்கிவிடும். ஆம், அது தான் உண்மை.

    சர்க்கரை நோய்க்கு முதல் எதிரியே நாம் உண்ணும் உணவு தான். எனவே சில வகை உணவுகளில் கட்டுப்பாடு வேண்டியது அவசியமே. ஆனால் அதையும் தாண்டி கடைப்பிடிக்க வேண்டிய சில வாழ்க்கை வழிமுறைகளும் உள்ளது. அவைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை தடுக்கலாம். அவை என்னவென்று தெரிய ஆவலாக உள்ளதா? வாங்க பார்க்கலாம்.

    சீரான உடற்பயிற்சி
    சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் பல விதமான ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கவும் பராமரிக்கவும் செய்யலாம். வாதம், மெட்டபாலிக் சிண்ட்ரோம், டைப் 2 சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் இதில் அடக்கம்.


    அப்படி செய்யும் போது எச்.டி.எல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மேம்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற ட்ரைகிளிசரைடுகள் குறையும். இதனால் இரத்த ஓட்டம் சீராக ஓடும். இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும்.

    கொழுப்புகள் நிறைந்த உணவு மற்றும் ஜங்க் உணவுகளை
    தவிர்க்கவும் ஜங்க் உணவு என்பதில் எந்த ஒரு ஊட்டச்சத்தும் நிறைந்திருக்காது. மேலும் அவைகளில் கலோரிகளும் அதிகம், உடல்நல ஆபத்துக்களும் அதிகம். ஹைட்ரோஜினேட்டட் கொழுப்புகளில் இருந்து தான் ஜங்க் உணவுகளுக்கு நல்ல சுவை கிடைக்கிறது.


    இந்த கொழுப்புகள் உடல் பருமன், தமனித் தடிப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும். ஜங்க் உணவுகளை உண்ணுவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகம். அதனால் முடிந்த வரை அவற்றை தவிர்த்திடவும்.

    35 வயதிற்கு பிறகு வருடாந்திர முறையில் இரத்த சர்க்கரை மதிப்பிடுதல்
    இப்படிச் செய்வதால் ஒவ்வொருவரும் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் எண்ணிக்கையை சோதித்துக் கொள்ளலாம்.


    இதனால் எந்தளவிற்கு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும், எந்தளவிற்கு உணவு கட்டுப்பாடு தேவை போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படும். இதனால் உண்ணும் பழக்கத்தின் மீதும் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் ஒருவருக்கு விழிப்புணர்வு உண்டாகும். இதன் விளைவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    மன அழுத்த பராமரிப்பு/வாழ்க்கை முறையில் மாற்றம்
    இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தம் என்பது பலருக்கும் சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு விஷயமாகி விட்டது. பல நோய்கள் உருவாவதற்கு இது ஊக்கியாக விளங்குகிறது, குறிப்பாக சர்க்கரை நோய்க்கு. பெரியவர்களுக்கு மன அழுத்தத்தை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


    அதற்கு சீரான முறையில் உடற்பயிற்சியிலும், யோகா பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியான பயணம் மற்றும் சீரற்ற அலுவலக நேரம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் உடலின் இயல்பு செயல்பாட்டை பாதித்து பல நோய்களை உண்டாக்குகிறது. அதில் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

    சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உங்கள் பாதங்களை தினமும் சோதனை செய்து கொள்ளுங்கள். பாதத்தில் புண் போன்றவை ஏற்பட்டால் அவற்றை சீக்கிரமாக கவனியுங்கள்.

    உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரியுங்கள்
    மேற்கூறிய அனைத்தின் மீதும் போதிய அக்கறை எடுத்து, உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை பராமரிப்பது பிரச்சனையாகவே இருக்காது. உடல் பருமனும், சர்க்கரை நோயும் கையோடு கை சேர்த்து நடைபோடும்.


    அதனால் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு முக்கியமானதாக விளங்குவதே உடல் எடையை பராமரிப்பதே. சரியாக சாப்பிட்டு தினமும் உடற்பயிற்சி செய்து வந்தாலே உடல் எடையை பராமரிக்கலாம்.

    அதிகமாக உண்ணுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். அது உடல் எடையை அதிகரித்து உடல் பருமனை உண்டாக்கி விடும். உயரத்திற்கு ஏற்ற எடை உள்ளதா என்பதை அறிய வேண்டுமா?

    Last edited by chan; 27th Jun 2015 at 02:46 PM.
    jv_66 likes this.

  5. #135
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?




    அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

    உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?
    கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.

    1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
    2. எப்போதும் பசித்தல் – 2
    3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
    4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
    5. ஆறாத புண் – 2
    6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
    7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
    8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
    9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு – 2
    10. மிகக் கூடுதல் எடை – 3
    11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
    12. மங்கலான பார்வை – 2

    நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்

    நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

    1. பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.
    2. சிறுநீரகங்கள் சேதமடையலாம்.
    3. இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.
    4. காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.
    5. உடலுறவில் இயலாமை ஏற்படலாம்.
    6. மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

    நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

    நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

    நீரிழிவு நோயின் சிகிச்சையில்
    1. உணவுமுறை
    2. உடற்பயிற்சி
    3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
    4. இன்சுலின் பயன்படுத்துதல்

    இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

    1. உணவு முறை
    சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.

    1. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.
    2. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.
    3. சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.
    4. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
    5. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
    6. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?
    நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.

    நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
    உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

    மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?
    ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.

    1. காய்கறிகள்.
    2. கார்போஹைட்ரேட்ஸ்.
    3. பழங்கள்.
    4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்.
    5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்.
    6. தானியங்கள்.
    7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.
    2. உடற்பயிற்சி

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,
    1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
    2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
    3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
    4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.

    உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை
    உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.
    1. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.
    2. மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.
    3. காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
    4. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
    5. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

    3. மாத்திரைகள்
    சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.

    சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
    சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

    4.இன்சுலின்
    நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

    இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?
    இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.

    இன்சுலினின் வகைகள்
    இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

    இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

    இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?
    1. முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
    2. உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.
    3. இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.
    4. தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.
    5. ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.
    6. இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.
    7. தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

    நினைவில் வைத்திருக்க வேண்டியவை
    1. நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.
    2. உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.
    3. நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
    4. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.
    5. தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.
    6. ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.
    7. உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.
    சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.


    Last edited by chan; 2nd Jul 2015 at 02:40 PM.
    jv_66 likes this.

  6. #136
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்


    தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

    உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

    ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

    எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!!!

    பாகற்காய்
    நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

    வெந்தயக் கீரை
    கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

    வெண்டைக்காய்
    வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    சுரைக்காய்
    இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

    லெட்யூஸ் (Lettuce)
    இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

    காலிஃப்ளவர்
    மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

    பூசணிக்காய்
    அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

    பிரெஞ்சு பீன்ஸ்
    பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.


    Last edited by chan; 2nd Jul 2015 at 02:44 PM.
    jv_66 likes this.

  7. #137
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    உங்கள் சிறுநீரை எறும்பு மொய்த்தால் டயாபடீஸ்!



    இன்று ஒரு வீட்டில் சுவர் இருக்கிறதோ இல்லையோ, வீட்டில் வசிப்பவர்களில் ஒருவருக்காவது சுகர் இருக்கிறது. அந்தளவுக்கு இன்று சர்க்கரை நோய் தாக்காத குடும்பங்கள் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதே போன்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்னைகளை சந்திக்கக்கூடும்.

    இப்படி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை ஹைப்பர் கிளைசீமியா என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை ஹைப்போ கிளைசீமியா என்றும் சொல்வார்கள். பொதுவாக உடலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில அறிகுறிகள் வாயிலாக வெளிப்படும்.

    தாகம் அதிகம்: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளில் ஒன்றுதான் தாகம். உங்கள் வாய் எப்போதும் வறட்சியுடன் இருப்பது போல், தாகம் அதிகம் எடுத்தால், உடனே கவனியுங்கள்.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது: தண்ணீர் அதிகம் குடிக்காமல், அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று உணர்ந்தால், அதுவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதன் அர்த்தம்தான்.

    சோர்வு, தலைவலி: ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும்.

    பசி அதிகரிக்கும்: உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும்.

    உடல் வறட்சி: போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

    எடை குறைவு: திடீரென்று உடல் எடை குறைவது, பல்வேறு பிரச்னைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதும் ஒன்று.

    சிறுநீரில் குளூக்கோஸ்: ரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தால், சிறுநீரில் வெளியேறும் குளூக்கோசை சிறுநீரகமானது உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால், குளூக்கோசானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். அப்படி டாய்லெட்டில் சிறுநீரை வெளியேற்றிய பின், டாய்லெட்டில் சிறு கறுப்பு எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தால், சிறுநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.



    Last edited by chan; 3rd Jul 2015 at 04:07 PM.

  8. #138
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்!



    மருந்து, மாத்திரைகளை விட உணவு முறைகளை முறையாக பின்பற்றினாலே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம். பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், தக்காளி முதலியவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.

    தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பாகற்காய்: நார்ச்சத்து கொண்டது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் சக்தி கொண்டது. பாகற்காயை அவித்தும், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். தக்காளி சேர்த்து சமைத்தால் கசப்பு தன்மை குறையும்.

    வெந்தயம்: வெந்தயம் எளிதில் கிடைக்ககூடியது.
    வெந்தயத்தை தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, ஒரு ஸ்பூன் தினமும் மோர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை தண்ணீரில், 8 மணிநேரம் ஊறவைத்து வாயில் மென்று சாப்பிடலாம். அதிக அளவு கசக்காது. இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தயத்தை முளைகட்டி உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம்.

    பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டும். வாழை, மாம்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் அதிகமாக உண்ணக் கூடாது.

    நாவல் பழம்,- கொட்டை: நாவல்பழம், நாவல் கொட்டை ஆகிய இரண்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. சாப்பிடும் போது பழம் மட்டுமல்லாமல், அதன் கொட்டையையும் மென்று சாப்பிடலாம். சீசன் அல்லாத நேரங்களில் நாவல் பழக்கொட்டை பொடியை, கடைகளில் வாங்கி தினமும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

    அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

    வேப்பிலை: தினமும் அல்லது வாரத்திற்கு, 5 நாட்கள் வேப்பிலையை 2 கை அளவு பறித்து அதை நன்றாக கழுவி பிறகு, 400 மில்லி தண்ணீர் விட்டு அவித்து அதை, 100 மில்லியாக வந்த பிறகு அந்த கசாயத்தை ஆற வைத்து குடிக்கலாம். பச்சையாக வேப்பிலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை காயவைத்து அதை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது வேப்பம்பூவை பொறியலாக சமைத்தும் சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது இது. அது மட்டும் அல்ல குடலில் உள்ள பூச்சிகளையும் அழித்து விடும்.

    குறிப்பு: டாக்டரின் ஆலோசனை பெற்று, இந்த மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது.

    Last edited by chan; 3rd Jul 2015 at 04:10 PM.

  9. #139
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?


    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம்.


    வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

    வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:

    புரதச்சத்து
    சுண்ணாம்புச் சத்து
    பாஸ்பரஸ்
    பொட்டாசியம்
    சோடியம்
    இரும்புச் சத்து
    விட்டமின் ஏ
    தையாமின்
    ரிபோபிளேவின்
    நிக்கோடினிக் அமிலம்

    ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.

    நீரிழிவு நோயாளிகளுக்கு எதற்காக நல்லது?

    சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 – 110 மி.லி வரை இருக்கலாம்.

    நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும்.u

    அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.

    அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது.

    தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

    கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு.



  10. #140
    butterfly09 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Mumbai
    Posts
    51

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Hai, Thanks for sharing.....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter