Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #141
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கார்ன் ப்ளேக்ஸ்



    ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் சேருவதினால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.


    கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ அல்லது சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டுமோ சேர்வதினால் இந்த நோய் வரக்கூடும்.

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள், மாவுச்சத்து கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    இவர்கள் சோளம் கலந்த உணவினை எடுத்துக்கொள்வது நல்லது, ஆனால் நீரிழிவு நோயாளிகளில் ஏராளமானோர் காலை உணவுக கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுவார்கள்.

    ஆனால் இது ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    ஆரோக்கியமானதா? ஆரோக்கியமற்றதா?

    இந்த கார்ன் ப்ளேக்ஸ் சோளத்தைக் கொண்டு செய்யப்பட்டாலும், அதில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் க்ளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) அதிக அளவில் உள்ளது.

    இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு தீவிரமடையவும் வாய்ப்புள்ளது.

    அதாவது கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதைப்போன்று இந்த க்ளைசீமிக் இன்டெக்ஸ் ஒரே நேரத்தில் இரத்த அளவை அதிகமாக உயர்த்திவிடும், எனவே இதனை கவனமாக உடகொள்ள வேண்டும்.

    மேலும், இந்த கார்ன் ப்ளேக்ஸில் புரோட்டீன் அளவு குறைவாக இருப்பதால், இதனை உட்கொண்ட பின்னரும் பசி உணர்வு இருக்கும்.

    எனவே, மேற்கொண்டு கண்ட உணவுகளை உட்கொள்ள நேரிடும்.

    நார்ச்சத்து உணவுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், ஆனால் கார்ன் ப்ளேக்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் இதனை சாப்பிடுவது பயனற்றது.

    மேலும், கார்ன் ப்ளேக்ஸில் சோடியம் உள்ளது. ஆய்வுகளில் ஒரு கப் கார்ன் ப்ளேக்ஸில் 1 பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ளதை விட அதிகமாக சோடியம் நிறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.


    Sponsored Links
    ilakkikarthi likes this.

  2. #142
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ள



    சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.


    ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பார்க்கலாம்.

    • கழித்தல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

    • சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

    • அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

    • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும். சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும். இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

    • இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.


    ilakkikarthi likes this.

  3. #143
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    காயமே அது மெய்யடா!

    எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்... அது என்னவோ தெரியலை... என்ன மாயமோ தெரியலை... எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை...’’ `குணா’ கமல் ஸ்டைலில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த நீங்கள், திடீரென காயம் ஆறாதது கண்டு அதிர்ச்சியடைகிறீர்களா? காயம் ஆறாவிட்டால், நீங்கள் உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரி பார்க்க வேண்டியது அவசியம்.



    கவனக்குறைவு காரணமாக ஏற்படும் சிறுசிறு சிராய்ப்புகள், புண்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் கவனிக்க தவறிவிட்டால், அவை பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் சொல்லவே தேவையில்லை. கை, கால் முதலான உறுப்புகளை அகற்றும் அபாயம் கூட ஏற்படலாம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்து, புண்களின் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் மேற்கொண்டால், உடல் உறுப்புகள் இழப்பில் இருந்து சர்க்கரை நோயாளிகளைப் பாதுகாக்க முடியும் என்கிறார் காயங்களுக்கான சிறப்பு மருத்துவர் வி.பி.நாராயணமூர்த்தி.



    ``அன்றாடம் நாம் ஒவ்வொருவரும் சராசரியாக 10 ஆயிரம் அடிகளாவது (Steps) நடக்கிறோம். அவ்வாறு நடந்து போகிற நேரங்களில், எதிரே தென்படும் சுவர், தூண் ஆகியவற்றில் இடித்துக் கொள்ளலாம். தடுமாறி விழலாம். ஆணி மற்றும் கற்கள் காலில் குத்த நேரிடலாம். இதன் காரணமாக, கை, கால்களில் சிறுசிறு காயங்கள் ஏற்படும். நாளடைவில் அவை
    புண்களாக மாறத் தொடங்கும். ஆரோக்கியமானவர்களுக்கு இத்தகைய காயங்கள் மற்றும் புண்களால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. அவை விரைவாகவே குணமாகி விடும். சர்க்கரை நோயாளிகளுக்கோ, சிறுகாயத்தைக் கூட எளிதில் உணர முடியாது. அந்தக் காயம் சீழ்பிடித்து புரையோடி (Septic) நீர் வடிய ஆரம்பித்த பின்னர்தான் தெரிய ஆரம்பிக்கும்.
    இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில், சர்க்கரை நோயாளிகளுக்கு உணர்ச்சிகள் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கும்.
    அடுத்து நரம்புகள் செயல் இழக்கும். இதனால் செயல்திறன் கெடும். இவர்களால் அதிக சூட்டை உணர முடியாது. காலில் ஆணி, கல் குத்தினாலும்கூட உடனே தெரிய வராது. இதன் காரணமாக ஏற்படும் புண்கள் சில நிலைகளுக்குப் பிறகு, எந்த மாதிரியான நவீன சிகிச்சை அளித்தாலும் கூட ஆறாது. கை, கால்கள் போன்ற பிற உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். அதற்கென தனியாக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய வாழ்க்கைச் சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக பூங்காக்கள், விளையாட்டுத்திடல், சாலையோரம் எனப் பல இடங்களில் மக்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான இடங்களில் நடைப்பயிற்சி செய்வது என்பது முக்கியம். ஏனென்றால், நடைப்பயிற்சியின்போது, இடித்துக்கொள்ளுதல் மற்றும் ஆணி, கற்கள் குத்துவதால் உண்டாகும் சிறுசிறு காயங்கள் ஆரம்ப நிலையில் தெரியாது.

    நடைப்பயிற்சிக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமோ, அதைப் போல காலணிகளை வாங்கும்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பாதத்துக்குச் சரியாக பொருந்தக்கூடிய அளவில் வாங்காமல், ஒரு விரல் அளவாவது பெரிதாக வாங்க வேண்டும். அப்போதுதான் காயங்களில் இருந்து கால்களைப் பாதுகாக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் மாலை நேரத்தில்தான் காலணிகள் வாங்க வேண்டும். அப்போதுதான் கால்களின் அளவு சரியாக தெரிய வரும். ‘சர்க்கரை நோயாளிகளுக்குப் புண்கள் வந்துவிட்டால் சீக்கிரமாக குணப்படுத்த முடியாது. கை, கால்களை அகற்ற நேரிடும்’ என்பதில் சிறிதளவும் உண்மை இல்லை. இதைக் குணப்படுத்த முடியும். அதற்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

    குறிப்பாக, உடலில் இயல்புக்கு மாறாக உள்ளவற்றை அவசியம் பரிசோதனை செய்வது நல்லது. செயல் இழந்த நரம்பில் உணர்ச்சித் தன்மையைக் கொஞ்சம் கொண்டு வந்தாலும் புண்களை குணப்படுத்த முடியும். அதோடு, புண்களின் தன்மையைப் பொறுத்து உரிய சிகிச்சைகளை அளித்தால், சர்க்கரை நோயாளிகளின் நாள்பட்ட புண்கள் முழுவதும் விரைவாக குணமாகும். இதன்மூலம், உடல் உறுப்பு அகற்றப்படும் பாதிப்பில் இருந்து சர்க்கரை நோயாளிகளைக் காப்பாற்றலாம்...’’

    "சர்க்கரை நோயாளிகள் மாலை நேரத்தில்தான் காலணிகள் வாங்க வேண்டும்."

    "புண்கள் சில நிலைகளுக்குப் பிறகு, எந்த மாதிரியான நவீன சிகிச்சை அளித்தாலும் கூட ஆறாது. கை, கால்கள் போன்ற பிற உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும்".




    Last edited by chan; 4th Aug 2015 at 05:36 AM.
    ilakkikarthi likes this.

  4. #144
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மாத்திரை!


    டாக்டர் கு.கணேசன்

    இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். குழந்தைகள் முதல் வயதானோர் வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் இது உள்ளது. சாதாரணமாக ஒருவருடைய ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 120 மி.கி/டெசி லிட்டர் என்று இருக்க வேண்டும். இது 200க்கு மேல் அதிகரித்தால் அதை நீரிழிவு என்கிறோம். நம் உடலில் உள்ள கணையத்தில் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுதான் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இன்சுலின் சரியான அளவில் சுரக்கவில்லை என்றால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் வந்துவிடும்.

    சிலருக்கு இன்சுலின் சரியாக சுரக்கும்; ஆனால் வேலை செய்யாது. காரணம், செல்களில் இன்சுலினை ஏற்றுக்கொள்கிற ஏற்பான்களின் (Receptors) எண்ணிக்கை குறைவாக இருக்கும். இவை இன்சுலினை செல்களுக்குள் நுழைய விடாது. இதற்கு ‘இன்சுலின் எதிர்ப்பு உணர்வு’ என்று பெயர். பெரும்பாலானோருக்கு இந்தக் காரணத்தால்தான் நீரிழிவு நோய் வருகிறது. உலகில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முதலில் இன்சுலின் ஊசி மருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எல்லோருக்கும் அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தது. எனவே, இதற்கு பதிலாக மாத்திரைகளைக் கண்டு
    பிடிப்பதில் அலோபதி மருத்துவம் தீவிரமாக களம் இறங்கியது.

    நீரிழிவு நோய்க்கான மாத்திரை முதன்முதலில் கொடுக்கப்பட்டது 1926ம் ஆண்டில். சிந்தாலின் (Synthalin) என்பது அதன் பெயர். மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், அதைக் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். அதற்குப் பிறகு மருத்துவத்துறையில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றங்களால், பலதரப்பட்ட மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வேலை செய்து ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த மாத்திரைகளின் செயல்பாட்டை இரண்டு பிரிவுகளில் கொண்டுவந்துவிடலாம். ஒன்று, கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, அதன் மூலம் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பது.

    அடுத்தது, ஏற்கனவே சுரந்து இருக்கிற இன்சுலினைச் சரியாகச் செயல்பட வைத்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பது. நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலோர் பயன்படுத்துவது 1942ல் கண்டுபிடிக்கப்பட்ட சல்ஃபொனைல் யூரியா (Sulfonylureas) மாத்திரைகளைத்தான். இந்த மாத்திரைகள் கணையத்தின் ‘பீட்டா’ செல்களைத் தூண்டி, இன்சுலினைச் சுரக்கச் செய்து, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கும், ஒல்லியாக உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஏற்றது. என்றாலும், இதில் பொதுவான இரண்டு குறைகள் உண்டு. ஒன்று, உடல் எடை கூடும். இன்னொன்று, தாழ்ச் சர்க்கரை ஏற்பட்டு மயக்கம் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.


    மேலும் கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வது என்பது கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பதைப் போன்றது. மிக மிக அதிக வீரியமுள்ள இந்த வகை மாத்திரைகளைத் தொடர்ந்து அதிக காலம் சாப்பிடும்போது, இவை கணையத்தைத் தொடர்ந்து தூண்டுவதால், அது சீக்கிரத்தில் களைத்துவிடுகிறது. ரொம்பவும் பிழியப்பட்ட கரும்புச் சக்கையில் சாறு இல்லாமல் போகும் அல்லவா? அதைப் போலவே, கணையத்திலும் இன்சுலின் இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடும். பிறகு, இன்சுலின் ஊசிதான் உதவும்.

    எனவே, ஏற்கனவே சுரந்து இருக்கிற இன்சுலினைச் சரியாகச் செயல்பட வைத்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் மாத்திரைகள்தான் நல்லது என்று மருத்துவ உலகம் கருதியது. இந்தக் கருத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பதுபோல், மெட்ஃபார்மின் (Metformin) எனும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஒரு தாவரம்தான் உதவியது என்பது ஒரு தனிக் கதை.


    கி.பி 17ஆம் நூற்றாண்டில் ‘கெலிகா அஃபிசினலிஸ்’ (Galega officinalis) எனும் தாவரத்தின் இலைகளைச் சாறு பிழிந்து நீரிழிவு நோயாளிகளுக்குக் கொடுப்பது நடைமுறையில் இருந்தது. இங்கிலாந்து தாவரவியலாளர் குல்பெப்பர் என்பவர் இந்தச் சாற்றில் ரத்தச் சர்க்கரையைக் குறைக்கிற குவானிடின் (Guanidine), கேலிஜின் (Galegine) எனும் இரண்டு வேதிப்பொருள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்துச் சொன்னார். இவற்றில் குவானிடின் பக்கவிளைவுகள் அதிகமுள்ள வேதிப்பொருள் என்பது காலப்போக்கில் தெரிய வந்ததால், இந்த மருந்தைக் கொடுப்பது நிறுத்தப்பட்டது. 1920ல் பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவர் கார்சியா என்பவர் குவானிடின் வேதிப்பண்பில் சில மாற்றங்களைச் செய்து பைகுவானைட் எனும் புதிய மருந்தைக் கண்டுபிடித்தார்.

    இதற்கு ஃபுளூமமின் என்று தனிப் பெயரிட்டார். இவர் இந்த மருந்தை ஃபுளூ காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சல் உள்ளவர்களுக்கும் கொடுத்தார். இந்த நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், மலேரியா கிருமிகள் இறந்துவிடுகின்றன என்று அதற்குக் காரணம் சொன்னார். ஆனால் இந்த மருந்தையும் நெடுநாட்களுக்குப் பயன்படுத்தும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்குப் பாதிப்பு வந்ததால் இதையும் தொடர்ந்து நீரிழிவு நோயாளிகளுக்குக் கொடுக்க முடியவில்லை.


    இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் 1957ல் பிரான்சு நாட்டின் நீரிழிவு நோய் நிபுணர் ஜீன் ஸ்டேர்ன்ஸ் முடிவு கட்டினார். இவர் ஃபுளூமமின் வேதிக்கட்டமைப்பில் மேலும் சில மாற்றங்களைச் செய்து மெட்ஃபார்மின் எனும் வேதிப்பொருளாக மாற்றினார். 39 நீரிழிவு நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்குத் தொடர்ந்து இதைக் கொடுத்தார். பாதிப்பேருக்கு மேல் ரத்தச் சர்க்கரை குறைந்து நீரிழிவு நோய் நன்கு கட்டுப்பட்டது. இதுதான் இன்றைக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளில் சிறந்தது என்று பெயர் பெற்றுள்ளது.

    இது எப்படி வேலை செய்கிறது?
    உடல் செல்களில் உள்ள இன்சுலின் ஏற்பான்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, இன்சுலின் எதிர்ப்பு உணர்வைச் சரி செய்கிறது. உடலில் ஏற்கனவே சுரந்திருக்கும் இன்சுலினைச் சரியாகப் பயன்பட வைத்து, ரத்தச் சர்க்கரையைக் குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு நோயின் ஆரம்பத்திலேயே இதைக் கொடுத்தால் நோய் நன்றாக கட்டுப்படும்.


    Last edited by chan; 10th Aug 2015 at 07:07 PM.
    ilakkikarthi likes this.

  5. #145
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?

    டாக்டர் கு. கணேசன்

    ஓவியம்: வெங்கி
    ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
    இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.

    என்ன காரணம்?
    ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.

    ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.

    எது தாழ்சர்க்கரை?
    ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.

    எப்படி வருகிறது?
    சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.

    ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.

    அறிகுறிகள் என்ன?

    ஆரம்ப அறிகுறிகள்
    ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    உடல் அதிகமாக வியர்ப்பது.

    உடல் குளிர்ச்சியாக இருப்பது.

    உடல் தளர்ச்சி.

    படபடப்பு.

    உடல் நடுக்கம்.

    அதிகப் பசி.

    தலைவலி.

    தலைசுற்றல்.

    பார்வை குறைவது.

    இதயத் துடிப்பு அதிகரிப்பது.

    அடுத்த கட்ட அறிகுறிகள்
    ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.

    l பேச்சு குழறுதல்.

    l மனக் குழப்பம்.

    l அரை மயக்கம் (Semiconsciousness).

    இறுதி கட்ட அறிகுறிகள்
    l வலிப்பு வருவது.

    l முழு மயக்கம் (Unconsciousness).

    l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.

    முழு மயக்கம் ஏற்பட்டால்?
    முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.

    டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.

    எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
    வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.

    குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?

    டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

    பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.

    எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.

    தடுப்பது எப்படி?
    l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.

    l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.

    l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.

    l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.

    l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.

    l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.

    தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
    l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.

    l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.

    l தாமதமாகச் சாப்பிடுவது.

    l விரதம் இருப்பது.

    l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.

    l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.

    l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.

    l வெறும் வயிற்றில் மது அருந்துவது.

    யாருக்கு வருகிறது?
    கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.

    l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.

    l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.

    l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)

    l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.

    l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.

    இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

    l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.

    l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

    l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.

    l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

    l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

    என்ன முதலுதவி?
    தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
    l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.

    l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.

    l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

    l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.

    l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும்.
    என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.

    கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
    தொடர்புக்கு: gganesan95@gmail.com





    Last edited by chan; 10th Aug 2015 at 10:49 PM.

  6. #146
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோய் 7 அறிகுறிகள்

    98 சதவிகித இந்தியர்களுக்கு, அவர்களின் தவறான வாழ்க்கைமுறையின் காரணமாகத்தான் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளது என்கிறது, ‘இந்திய சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூட்டமைப்பு’. சர்க்கரை நோய் பற்றிய பயம் இருந்தாலும், போதிய விழிப்புஉணர்வு இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் 30 வயதுக்கு மேல்தான் வரும். அந்த நேரத்தில், உடல் எடையைக் குறைத்தல், கட்டுக்குள் வைத்திருத்தல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு என்று கவனமாக இருந்தால், நிச்சயம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். மேலும், சில அறிகுறிகளைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் ஆரம்பகட்டத்திலேயே அதாவது, ப்ரீடயாபடீஸ் நிலையிலேயே கண்டறிந்து, சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.

    அதிக தாகம்
    சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறி, தாகம். வழக்கத்துக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். டாக்டர்கள் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கிறார்கள். நாமும் இப்போது நிறைய தண்ணீர் குடிக்கிறோமே என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. திடீரென்று நம்மையும் அறியாமல் அதிக தாகம் எடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கிறோம் என்றால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, அதை வெளியேற்ற நம்முடைய சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதை ஈடு செய்வதற்காக, தாகம் அதிகரிக்கிறது.

    அடிக்கடி சிறுநீர் கழித்தல்
    ரத்தத்தில் உள்ள சர்க்கரையை வெளியேற்ற, சிறுநீரகம் முயற்சிக்கும்போது, உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவு சிறுநீர் கழிக்கச் சென்றால், தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    உடல் எடை குறைதல்
    சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்றால், இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது அதன் செயல்திறன் போதுமான
    தாக இல்லை என்று அர்த்தம். செல்களுக்கு குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை ரத்தத்திலேயே இருப்பதால், எந்தக் காரணமும் இன்றி உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கிறது.

    அதிகப் பசி
    டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்திறன் குறைந்துவிடுகிறது. இதன் மூலம் செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கணையமானது இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது. இன்சுலின் அளவு அதிகமாக இருக்கிறது. இது, மூளைக்கு இன்னும் குளுக்கோஸ் தேவை உள்ளதாக சிக்னல் செய்கிறது. இதனால், பசி எடுக்கிறது.

    வாய் உலர்தல்
    சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள் எடுப்பதன் காரணமாகவும் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படலாம். வாய் உலர்தல் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

    அதிகப்படியான சோர்வு
    நம் உடலில் உள்ள செல்கள்தான் குளுக்கோஸைப் பயன்படுத்தி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. செல்களுக்கு போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்கவில்லை, நீர்ச்சத்தும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது எனில், உடலில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், தலைவலியும் ஏற்படுகிறது.

    பார்வை மங்குதல்
    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்ணில் ரெட்டினா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பார்வை மங்கலாகும். இவர்கள், சர்க்கரை நோய் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவதன்மூலம், ஆரம்பநிலையிலேயே இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். காலில் மதமதப்பு அல்லது காலில் ஊசி குத்துவது போன்று சுறுக்சுறுக்கென வலி, காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்த பெண்களுக்கு பிறப்பு உறுப்பில் நமைச்சல், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டால் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.




  7. #147
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    'டயாபடிக் நியூரோபதி'




    01. 'டயாபடிக் நியூரோபதி' என்றால் என்ன?

    சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்பு மண்டலம், ரத்தக் குழாய், இதயம் என, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை 'டயாபடிக் நியூரோபதி' எனப்படுகிறது.

    02. 'டயாபடிக் ரெட்டினோபதி' என்றால் என்ன?
    சர்க்கரை நோயால், சிறுநீரகம் பாதிக்கப்படுவதை 'டயாபடிக் ரெட்டினோபதி' என்கின்றனர்.

    03. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் பார்வை பாதிக்கப்படுமா?
    எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு விழித்திரை அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிரிக்கும்போது, விழித்திரைக்கு செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளைர ஆரம்பிக்கும். அதனால் பார்வை மங்கலாகத் தெரியும்.
    ஒரு கட்டத்தில், ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.

    04. 'டயாபடிக் ரெட்டினோபதி' இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
    பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவை பரிசோதிக்க வேண்டும். கண்ணில் சொட்டு மருந்தை விட்டு, 'இன்டைரக்ட் ஆப் தல்மோஸ்கோப்பி' என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாய் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா என பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்படும்.

    05. 'டயாபடிக் ரெட்டினோபதி'யில் வகைகள் உள்ளனவா?
    'டயாபடிக் ரெட்டினோபதி'யில், 10 விதமான நிலைகள் உள்ளன. முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில், எந்தவித சிகிச்சையும் தேவையில்லை. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடிக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும்.

    06. ஐந்து நிலைகளை கடந்ததும், சிகிச்சை செய்ய வேண்டுமா?
    ஆறு முதல் பத்து நிலைகளில் இருந்தால், ரத்த குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது. ரத்தக்குழாய்கள் வளர்ந்துள்ளனவா என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வௌ்ளைப்பகுதியில் 0.5-0.7 மி.மீ. அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டு நுண்ணிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    07. ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டோருக்கு, பார்வை மீண்டும் கிடைக்குமா?
    முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலமும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலமும், மீதமிருக்கும் பார்வைத் திறனை காப்பாற்றிக் கொள்ளலாம்.

    08. டயாபடிக் ரெட்டினோபதி பரம்பரை காரணமாகவும் வருமா?
    குடும்பத்தில் யாருக்கேனும், சர்க்கரை நோய் இருந்து, அது பரம்பரையாக கடத்தப்பட்டிருந்தால், ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படலாம்.

    09. டயாபடிக் ரெட்டினோபதி வராமல் எப்படி தடுக்கலாம்?
    பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பின், மருத்துவர்கள் பரிந்துரையோடு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், பார்வை இழப்பை தடுக்கலாம்.

    10. டயபடிக் ரெட்டினோபதிக்க உணவுமுறை மாற்றும் தேவையா?
    எந்த பொருளாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து. எனவே புரதச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை, சரிவிகிதத்தில் எடுத்துக் கொண்டாலே போதுமானது.

    - கா. நமிதா புவனேஸ்வரி,
    கண் அறுவை சிகிச்சை நிபுணர்,
    அரசு கண் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர், எழும்பூர், சென்னை.
    94442 88784



  8. #148
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?



    சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.

    உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.

    அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

    சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.


    பானங்கள் (200 மி.லி அளவு):

    * தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

    * நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..

    * உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..

    * கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.

    * இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.

    * பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.

    * மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.

    எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.

    உணவு வகைகள்

    உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):

    * கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.

    * வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.

    * பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.

    * கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.

    * அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..

    * கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.

    * உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.

    * இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.

    * எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

    * 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.

    * 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

    பழங்கள் (100 கிராம்)

    * தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..

    * வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.

    * கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..

    * மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.

    * பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.

    * ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.


  9. #149
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    மகிழ்ச்சியா? மனச்சோர்வா?

    சுகர் ஸ்மார்ட்

    யாரோ ஒருவர் நமக்கான அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பதற்காக, சிறப்பாகச் செயல்படுவதை நிறுத்திவிட வேண்டுமா என்ன? அங்கீகாரத்தை விட மகிழ்ச்சி முக்கியம்... நல்மனம் முக்கியம்!

    நீரிழிவை நிர்வகிப்பதற்கு நிறையவே கவனமும் முயற்சியும் தேவைப்படும் என்பது உண்மைதான். இது சிலருக்குச் சுமையாகவே இருக்கக்கூடும். வேலையே செய்ய விரும்பாத ஒருவருக்கு முழுநேர வேலையை அளித்து, அந்த வேலையை விட்டு விலகவும் முடியாதபடி செய்தால் எப்படி இருக்கும்? நீரிழிவும் அப்படித்தான் சிலருக்கு. இவ்வளவு கடினமாக உழைத்தும் ரிசல்ட்டும் சரியாக வராவிட்டால்?

    அந்தத் தொடர் முயற்சிகளே மனச்சோர்வையும் அளித்து தன்னம்பிக்கையையும் குறைத்துவிடுமே!அதே நேரத்தில் மனச்சோர்வின் சில பின்விளைவுகள் நீரிழிவு மேலாண்மையையே குலைத்துவிடவும் கூடும். உதாரணமாக... மனச்சோர்வு ஏற்படுகையில் கன்னாபின்னாவெனச் சாப்பிடுவது சிலரின் வழக்கம். இது எடையை அதிகரிக்கும். பருமன் ஆவதோ நீரிழிவின் அபாயத்தை அதிகரிக்கும். இப்படி ஒரு சங்கிலித்தொடர் போல - இதனால் அதுவும் அதனால் இதுவும் நிகழும்.

    ஒருவித அயர்ச்சி அல்லது தகுதிக்குறைவாக தன்னையே கருதச் செய்யும் சூழலும் சில நேரங்களில் ஏற்படக்கூடும். இதன் தொடர்ச்சியாக ‘கரெக்ட்டா இருந்து என்னத்த கண்டோம்’ என்கிற எண்ணத்தில் உணவுக்கட்டுப்பாடு மீறல்கள், மருந்து மாத்திரைகளில் அக்கறையின்மை போன்றவை நிகழ்ந்து, நீரிழிவை இன்னும் மோசமாக்கும்.

    நீரிழிவோடு மனச்சோர்வும் உடையவர்கள் மற்ற நீரிழிவாளர்களை விட மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றே ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவாளர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது சகஜம்தான் என்பதால், ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டுகொண்டால், அதைப் போக்கிவிட முடியும்!

    உதவி வேண்டலாம்!மனச்சோர்வை சரிசெய்து கொள்வது நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்தும். தகுந்த சிகிச்சை பெறுவதன் மூலம், நல்ல மனநிலையை அடைவதோடு, ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனச்சோர்விலிருந்து விடுபடுவது என்பது ஒரே இரவில் நிகழக்கூடியது அல்ல.

    இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றாலும், இப்போது இந்தியாவில் நல்ல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. ஒரு காலத்தில் மனநல மருத்துவர் / உளவியல் ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதே தீண்டத்தகாத செயல் போல கருதப்பட்டது. இப்போது அந்த எண்ணம் மாறி வருவது மிக நல்ல விஷயம். அடுத்தவர் என்ன நினைப்பார் என்பது எந்த விதத்திலும் நமக்கு நன்மை பயக்காது.

    நம் உடல் நம் மனம் நம் உரிமை. நம் உடலையும் மனதையும் நாம்தான் பராமரிக்க வேண்டும். அதனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளாது, தேவை என்கிற பட்சத்தில் மனச்சோர்வுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.மனச்சோர்வுக்குப் பொதுவான சிகிச்சைகள் உளச்சிகிச்சை / கலந்தாய்வு மனச்சோர்வு ஏற்படுத்திய காரணங்களை சைக்கோதெரபிஸ்ட் அளிக்கிற உளச்சிகிச்சை வாயிலாக அறிந்து, அதைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். இந்த தெரபி குறுகிய காலத்துக்கோ, நீண்ட காலத்துக்கோ - பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து அமையும். பிரச்னையை புரிந்து கொள்பவராக, உங்களால் எளிதில் பேச முடிகிறவராக தெரபிஸ்ட் இருப்பது அவசியம்.

    மனச்சோர்வு போக்கும் மருந்துகள்

    சில வேளைகளில் சைக்கோதெரபியோடு மருந்துகளும் அளிக்கப்படுவதுண்டு. மனச்சோர்வைப் போக்க பலவித மருந்துகள் உள்ளன. இருப்பினும், இவை அவசியமாக இருந்தால் மட்டுமே, மருத்துவர் அல்லது மனநல மருத்துவர் அறிவுறுத்தலின் படியே பயன்படுத்தப்பட வேண்டும். இவை பரிந்துரைக்கப்படும் போது, மருத்துவரிடம் பக்க விளைவுகள் பற்றி தயங்காமல் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவில் மாறுதல்கள் ஏற்படுமா என்பதையும் மறவாமல் கேட்க வேண்டும்.

    குணப்படுத்தும் மற்ற வழிமுறைகள்

    பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறைகள் மூலமும் மனச்சோர்வை விரட்ட முடியும். சொந்த முயற்சியும் இதற்கு கை கொடுக்கும். இவற்றில் சிலவற்றுக்குப் போதுமான அறிவியல் நிரூபணங்கள் இல்லை என்றாலும்,
    பலருக்கும் பயன் தருவதாகவே கூறப்படுகிறது.
    -முறையான, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தல்.
    -ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு, ‘பிசி’யாக இருத்தல்.
    -நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல்.
    -மூச்சுப்பயிற்சி / தியானம்.
    -போதுமான சூரிய ஒளியை கிரகித்தல்.
    -அவசிய ஊட்டச்சத்துகளை உணவாகவோ, தேவையெனில் மாத்திரையாகவோ உட்கொள்ளுதல்.

    அடுத்தவர் என்ன நினைப்பார் என்பது எந்த விதத்திலும் நமக்கு நன்மை பயக்காது. நம் உடல் நம் மனம் நம் உரிமை. நம் உடலையும்
    மனதையும் நாம்தான் பராமரிக்க வேண்டும்.

    ஸ்வீட் டேட்டா

    மற்றவர்களை விடவும், நீரிழிவாளர்களுக்கு (ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத போது) மனச்சோர்வுப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம்.
    (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கிளினிக்கல் எக்சலன்ஸ், யுகே ஆய்வின் படி...)

    நீரிழிவோடு இணையும் மனச்சோர்வை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!

    மனிதராகப் பிறந்த அத்தனை பேரையும் ஏதோ ஒரு தருணத்தில் மனச்சோர்வு தாக்குவது இயல்பான விஷயம்தான். இருப்பினும், அது சிலரை மீள முடியாத புயலில் சிக்கியவர் போல மாற்றிவிடுகிறது. 2 வாரங்களைத் தாண்டியும் மனச்சோர்விலிருந்து விடுபடா விட்டால்தான் சிகிச்சை தேவைப்படும். அதைத்தான் ‘டிப்ரஷன்’ என்கிறோம்.

    நீரிழிவு உடையவர்கள் மனச்சோர்வை சட்டென அடையாளம் காண்பது சற்று சிரமமே. நீரிழிவின் மற்ற அறிகுறிகள் மனச்சோர்வை வெளிக்காட்ட விடாது என்பதே காரணம். ஏதேனும் ஒரு சூழலில் மிக வருத்தமாகவோ, குழப்பமாகவோ உணர்ந்தால், பின்வரும் மனச்சோர்வு அறிகுறிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்...

    * வழக்கமான செயல்பாடுகளில் மகிழ்ச்சிக் குறைவு.

    *தூங்குவதில் சிரமம் ஏற்படுதல்... தூக்கத்தின் தேவை அதிகரித்தல்...

    *பசி ஏற்படுவதில் மாற்றம். இதனால் வேகமாக எடை அதிகரிப்பது அல்லது குறைவது...

    *கவனம் குறைதல்... முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம்...

    *ஆற்றல் குறைதல்... எப்போதும் சோர்வாக உணர்தல்...

    *பதற்றம், கலக்கம், ஏக்கம் போன்ற உணர்வுகள்... ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது கூட சிரமமாக இருத்தல்.

    *ஒருவித குற்ற உணர்வு... சுயமதிப்பீடு குறைதல்.

    *தற்கொலை எண்ணங்கள்.
    இவை மனச்சோர்வின் அறிகுறிகள். இருப்பினும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதது கூட, மனச்சோர்வு போன்ற அறிகுறிகளைக் காட்டும். பின்வருவனவற்றைப் போல...

    *கட்டுப்படாத ரத்த சர்க்கரை காரணமாக சோர்வாக உணர்தல்... பதற்றம் அடைதல்...

    *தாழ் ரத்த சர்க்கரை காரணமாக அதீத பசி ஏற்பட்டு ஏராளமாகச் சாப்பிடுதல்.
    *இரவில் தாழ் ரத்த சர்க்கரை ஏற்படும்போது, தூக்கம் தொலைதல்.

    *இரவில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்து செல்ல நேரிடும்... அதனால் அடுத்த நாளில் சோர்வாக இருக்கும்.இந்த நீரிழிவு சார்ந்த அறிகுறிகளுக்கு சைக்கோ தெரபியோ, மனநல மருந்துகளோ தேவையில்லை. சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே சாதாரணமாகி விடும்.

    இவற்றை சரியான முறையில் வகைப்படுத்துவதில் சிரமம் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம். உங்களின் துன்ப மனதுக்கு என்ன காரணம் என அவர் அடையாளம் கண்டு அறிவுறுத்துவார்... கவலை வேண்டாம்!நீரிழிவு சார்ந்த மனச்சோர்வு அறிகுறிகளுக்கு சைக்கோ தெரபியோ, மனநல மருந்துகளோ தேவையில்லை. சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே சாதாரணமாகி விடும்.


    (கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)


    Last edited by chan; 8th Nov 2015 at 12:47 PM.

  10. #150
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    டயாபடீஸ் ரகசியங்களும்... தீர்வும்...

    கம்ப்ளீட் கைடு

    நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு தினம்



    சர்க்கரை நோய் - கம்ப்ளீட் கைடு
    ர்க்கரை நோய் என்பது புதிதாக மனிதர்களுக்கு வந்திருக்கும் நோய் அல்ல. காலம்காலமாக உலகம் முழுக்கப் பரவலாக இருந்ததுதான். ஆரம்பத்தில் இது, பணக்கார வியாதியாகக் கருதப்பட்டது. இப்போது வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக நம் குடும்பத்தில், அக்கம்பக்கத்தில், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலருக்கும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

    கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றம்.
    சர்க்கரை நோயாளிகள் ஒரு பக்கம் இருக்க, தனக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம். சர்க்கரை நோய் வந்தவர்களும் விழிப்புஉணர்வுடன் இருப்பதன் மூலம், சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுக்குள்வைக்க முடியும். சர்க்கரை நோய் குறித்த முழு விவரங்களை உள்ளடக்கிய இந்த கைடு என்றென்றும் உதவும்.


    சர்க்கரை நோய் என்றால் என்ன?

    *நாம் சாப்பிடும் உணவு, செரிமானத்தின்போது குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.

    *குளுக்கோஸ்தான் நமக்கு ஆற்றல் தரக்கூடியது. குளுக்கோஸை நம்முடைய செல்களால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது.


    *இதற்கு உதவ, கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கிறது.


    *ரத்தத்தில் கலக்கும் இன்சுலின், செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.


    *இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.


    சர்க்கரை நோய் வகைகள்

    *டைப் 1 சர்க்கரை நோய்

    *டைப் 2 சர்க்கரை நோய்


    *கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes)


    *இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary diabetes)


    *மோடி சர்க்கரை நோய் (Maturity onset diabetes of the young (MODY))


    *குழந்தைப் பருவ சர்க்கரை நோய்



    டைப் 1 சர்க்கரை நோய்

    இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளில், ஐந்து சதவிகிதம் பேர் டைப் 1 வகையைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு, கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது. டைப் 1 சர்க்கரை நோய் ஒரு முறை வந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க செயற்கை இன்சுலின் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

    *டைப் 1 சர்க்கரை நோய், குழந்தைகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகம் வருகிறது.


    *இந்த வகை சர்க்கரை நோயை நாம் தடுக்க முடியாது.


    *டைபாய்டு போன்று ஏதேனும் நோய் தாக்கிய பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடலையே தாக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்னை காரணமாக ஓரிரு மாதங்களில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடலாம்.


    *வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை வருவதைத் தடுப்பதன் மூலம் டைப் 1 சர்க்கரை நோய் திடீரென வருவதற்கான வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும்.


    Last edited by chan; 11th Nov 2015 at 01:16 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter