Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #161
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    worthful sharing sis!

    TFS


    Sponsored Links
    chan likes this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  2. #162
    muthupl is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bangalore
    Posts
    133

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Thanks for sharing

    chan likes this.

  3. #163
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    முறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்!


    எதிர்பாரா புயல், மழை, வெள்ளத்தை விடவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது இந்தத் தகவல்.ஆம்... தூக்கம் ஒரு பிரச்னையாக இருக்கிறவர்களையும் நீரிழிவு அன்புடன் அரவணைத்துக் கொள்ளும். அது மட்டுமல்ல... உயர் ரத்த அழுத்தம், பருமன் ஆகிய பிரச்னைகளும் இலவச இணைப்பாகக் கிடைக்கும்!

    பாரம்பரியம், பருமன் போன்ற காரணிகளால் நீரிழிவு வரும் என்பதுதான் இதுவரை உலகம் அறிந்த உண்மையாக இருந்தது. இப்போது நீரிழிவு ஏற்படுவதற்கும் புதிது புதிதாகக் காரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மைதான் இந்த விஷயம்.

    வளர்சிதை மாற்றத்தில் (மெட்டபாலிசம்) ஏற்படும் பிரச்னைகள் காரணமா, நம் உடலில் 5 குறைபாடுகள் ஏற்படும். ரத்த குளுக்கோஸ் அதிகரித்தல், அதிக கொலஸ்ட்ரால், வயிற்றுப்பகுதியில் கூடுதல் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு அதிகரித்தல்... இந்தப் பிரச்னையில் பிரதானமாக இருப்பது சர்க்கரைதான் என்பதையும் நாம் அறிவோம். தூக்கமின்மை காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும் என்பதும் பால பாடமே. அதனால்தான் இத்திசையில் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள் நீரிழிவு மருத்துவ விஞ்ஞானிகள்.

    சமீப காலமாக 25-35 வயது இளைஞர்கள் மத்தியில் வாழ்க்கைமுறை மாற்றங்களால் தூக்கமின்மை அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். அதிக வேலை நேரம், இரவு பகல் மாற்றி மாற்றி வேலை, மன அழுத்தம், துரித உணவுகளில் நாட்டம், இரவு நேர பார்ட்டிகள் எல்லாம் சேர்ந்து, இவர்கள் உறங்குவது முறையற்று இருக்கிறது. இவர்களில் 15-20 சதவிகிதத்தினர் வேக வேகமாக நீரிழிவாளர்களாக மாறி வருகின்றனர். இந்த அதிர்ச்சிக்கு உரிய செய்தியின் பின்னணியில்தான் ‘தூக்கமின்மை - நீரிழிவு’ ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

    ஒரு நாளில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பருமன் ஆகியவை தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்னை இருப்பது உண்டு. அதையும் தாண்டி, டைப் 2 நீரிழிவு காரணிகளோடு தூக்கமின்மை பிரச்னை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.

    5 மணி நேரத்துக்குக் குறைவாக உறங்குபவர்களை மட்டுமல்ல... 9 மணி நேரத்துக்கும் அதிகமாக படுக்கையில் கிடப்பவர்களையும் நீரிழிவு தாக்கக்கூடும். அதிலும் குறட்டை விடுகிறவர்களுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகும். இவர்களுக்கு குளுக்கோஸ் தாங்கு திறன் குறைவதோடு, இன்சுலின் சுரப்பும் குறையத் தொடங்குகிறது...’ என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நரம்பியல் நிபுணரும் தூக்கம் சார்ந்த கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவருமான ப்ரீத்தி தேவ்னானி.

    ஒருவர் தேவைக்குக் குறைவாக உறங்கும்போது, அவரது உடலும் மனமும் சோர்ந்து போகிறது. அதே நேரத்தில் பசியைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கத் தொடங்குகிறது. இதனால் அவர் தன்னை அறியாமலே அதிகம் சாப்பிடத் தொடங்குகிறார். கலோரி அதிகமாகி, எடை அதிகரிக்கிறது.‘மிகக் குறைவான தூக்கம் காரணமாக ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

    இதுவே அவர்களுக்கு நீரிழிவு ஏற்பட அடிப்படையாகிறது. பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய லெப்டின் என்ற ஹார்மோன் சுரப்பு தூக்கமின்மையையே குறைத்து விடுகிறது. மாறாக பசியை அதிகரிக்கச் செய்யும் க்ரெலின் ஹார்மோனை அதிகம் சுரக்கிறது. இதனால்தான் குறைவாக உறங்குவோர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்’ என்கிறார் நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் வினய் குமார் அகர்வால்.

    ‘முறையான தூக்கம் கிட்டாத போது, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கக்கூடிய திறனை உடல் இழந்துவிடுகிறது. தூக்கமின்மையை உடல் ஒரு அழுத்தமாகவே எடுத்துக் கொள்கிறது. இந்நிலை தொடரும்போது நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது' என்கிறார் நீரிழிவு சிறப்பு மருத்துவர் ரோஷினி கட்கே.தூக்கமின்மை காரணமாக இன்சுலினை உருவாக்கும் செல்கள் திறன் இழந்து விடுகின்றன. அதன் விளைவாக ரத்த சர்க்கரை அளவு எகிறத்தானே செய்யும்?

    தூக்கமின்மையின் அடுத்த குழப்பமாக கோர்ட்டிசோல் எனும் ஸ்டெரெஸ் ஹார்மோனின் சுரப்பு தாறுமாறு ஆகிறது. இதுவும் இன்சுலின் சுரப்பை எதிர்க்கும். குளுக்கோஸை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதில் சுணக்கம் ஏற்படும். ஏற்கனவே நீரிழிவு இருந்தோலோ, ரத்த சர்க்கரை அளவு பயமுறுத்தும் நிலையை எட்டி விடும்.

    நீண்டகால தூக்கமின்மை மட்டுமல்ல... ஒருசில நாட்களில் ஏற்படும் உறக்கக் குறைவு கூட, தூங்கா மனிதர்களுக்கு அபாயத்தையே அளிக்கிறது. ஆகவே, நீரிழிவாளர்கள் மட்டுமல்ல... நீரிழிவு வர வேண்டாம் என நினைப்பவர்களும் நிம்மதியாக உறங்க வேண்டியது மிக அவசியம். இனி ரிலாக்ஸாக சொல்லுங்கள்... குட் நைட்!

    5 மணி நேரத்துக்குக் குறைவாக உறங்குபவர்களை மட்டுமல்ல... 9 மணி நேரத்துக்கும் அதிகமாக படுக்கையில் கிடப்பவர்களையும் நீரிழிவு தாக்கக்கூடும். அதிலும் குறட்டை விடுகிறவர்களுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

    சீனாவோடு போட்டி!

    மக்கள் தொகையில் மட்டுமல்ல... நீரிழிவாளர்களின் எண்ணிக்கையிலும் சீனாவோடு கடும் போட்டியில் இருக்கிறது நமது இந்தியா. ஆறரை கோடி இனிப்பு ஆசாமிகளைக் கொண்ட இந்தியா, இந்த விஷயத்திலும் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களும், முறையான தூக்கமின்மையுமே, எண்ணிக்கை இந்த அளவு அதிகரிக்க காரணம் என்கிறது டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை.

    2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 கோடியை நெருங்கி விடும். அப்போது அமெரிக்காவில் 3 கோடி டயாபடீஸ் காரர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா உள்பட உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியாவின் நீரிழிவு வேகம், நரேன் கார்த்திகேயன் ரேஸ் காரின் வேகத்தை விட அதிகமாக உள்ளது!

    ஸ்வீட் டேட்டா

    *தினமும் 7-8 மணி நேரங்கள் முறையாகத் தூங்குபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது.*அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற தூக்கப் பிரச்னைகள் உள்ளவர்களில் 70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு டைப் 2 நீரிழிவும் ஏற்படுகிறது.

    தூக்கமின்மை காரணமாக இன்சுலினை உருவாக்கும் செல்கள் திறன் இழந்து விடுகின்றன. அதன் விளைவாக ரத்த சர்க்கரை அளவு எகிறத்தானே செய்யும்?



  4. #164
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    nice sharing sis...TFS

    chan likes this.
    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

  5. #165
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    பட்டு சருமமோ? உலர் சருமமோ


    வாழ்க்கையே ஒரு கப் சர்க்கரைதான். அதுவும் காலம் தோன்று முன்னே கடன் வாங்கியது. திருப்பித் தர மறந்து போனது!

    உடலின் பல பகுதிகளை கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு தாக்கும் என்பது எல்லாருமே அறிவோம். எனினும், அது சருமத்தில் ஏற்படும் பாதிப்பு பலருக்குத் தெரியாது. மூன்றில் ஒரு பங்கு நீரிழிவாளர்களுக்கு சருமப் பிரச்னைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல... சருமப் பிரச்னை இருப்பது கூட, நீரிழிவின் முதல் அறிகுறிதான்!

    நீரிழிவாளர்களின் சருமம் உலர்ந்து காணப்படுவது சகஜம். சருமத் தொற்றுகளும் அவ்வப்போது ஏற்படும். இதற்குக் காரணம் பல காலமாக நீடிக்கும் அதிக ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் திரவங்களின் இழப்புமே. நல்லவேளையாக இச்சருமக் குறைபாடுகளை நாம் தடுக்க முடியும். முன்கூட்டியே அறிந்தால் குணப்படுத்துவதும் எளிது. ஆகவே, பிரச்னை கை மீறிப் போவதற்குள் மருத்துவ ஆலோசனை அவசியம்.

    நீரிழிவின் மற்ற சிக்கல்களைப் போலவே, சருமப் பிரச்னையை சரி செய்யவும் முதல் வழி - ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதே. இருப்பினும், சில வழிமுறைகளை கையாண்டு சருமத்தைப் பராமரிப்பதன் மூலம், பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

    சருமம் உலர்வாகவும் சுத்தமாகவும் இருக்கும்போது, நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும். ஆனால், பாருங்கள்... நீரிழிவாளர்களின் சருமம் ஏற்கனவே அதிக உலர்வாகத்தானே இருக்கிறது? கவலை வேண்டாம். இந்த புதிர் விளையாட்டில் சிறப்பாக ஆடி, நம் சருமத்தைப் பாதுகாக்க சில வழிகள் உண்டு!சருமத்தை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்...

    நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க இதுதான் முதல் வழி. அக்குள், தொடை இடுக்கு, கால் விரல்களுக்கு இடையேயான பகுதி ஆகியவற்றில், சருமம் உரசும் நிலை ஏற்படும். இப்பகுதிகளில் டால்கம் பவுடர் பயன்படுத்தி உரசலைத் தவிர்க்கலாம். இது ஈரப்பதத்தைத் தடுக்கும். ஆனால், சிலர் செய்வது போல உடல் முழுக்க பவுடர் குளியல் நடத்தி வியர்வைத்துவாரங்களை அடைத்து விட வேண்டாம்!

    சருமம் அதிகம் உலராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...அதிக வெப்பம் உள்ள வென்னீர் குளியல், ஷவர் குளியல் போன்றவை சருமத்தை கூடுதலாக உலர்வாக்கி விடும். ஏற்கனவே சருமம் உலர்வாக இருந்தால், பபுள் பாத் போன்றவை வேண்டாம். தேவையெனில், லேசான மாய்ச்சரைசர் பயன்படுத்தலாம். ஆனால், அக்குள், தொடை இடுக்கு, கால் விரல் இடையே எல்லாம் பயன்படுத்த வேண்டாம். கூடுதல் ஈரப்பதமானது பூஞ்சை கிருமிகள் வளர்வதற்கே சாதகமாக இருக்கும்.குளிர் காலத்தில் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்...

    அதீதமாக பருவநிலை நிலவுகிற இடத்தில் வாழ்வோருக்கு, குளிர்காலத்தில் சருமம் உலர்வது அதிக அளவில் இருக்கும். அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நலம் பயக்கும்.வெட்டுகள், காயங்கள், எரி காயங்களைக் கவனியுங்கள்...

    இதுபோன்ற காயங்களை உடனே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், நீரிழிவாளர்களுக்கு சீழ் வரை கொண்டு செல்லும். நீண்ட காலத்துக்கு ஆறாமலே இருக்கும். ஆகவே, இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சிறிய வெட்டுக்காயம் எனில், சோப்பு, தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

    ஸ்ட்ராங்கான ஆன்டிசெப்டிக்குகளை தவிர்க்கலாம். அவை சருமத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மருத்துவர் ஆலோசனையுடன் ஆன்ட்டிபயாடிக் க்ரீம் அல்லது ஆயின்மென்ட் பயன்படுத்துவதே நல்லது. தூசு போன்றவை உட்புகாத வகையில் தூய்மையான சல்லடைத்துணி கொண்டு கட்டிக் கொள்ளலாம். பெரிய காயமாக இருந்தாலோ, சிறிய தொற்றாக இருதாலும் கூட, சுய மருத்துவம் வேண்டாம். முறையான சிகிச்சை உடனடியாக அவசியம்.

    கால்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்...கால்களில்தான் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தினமும் கால்களை நன்கு கவனியுங்கள். காயமோ, புண்ணோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.புண் ஆற ஏன் தாமதம்?நீரிழிவாளரின் பாதங்களிலேயே அதிக அளவு காயம் அல்லது புண் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

    குறிப்பாக, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்காதவர்களின் பாதங்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அளவுக்கு அதிக சர்க்கரை படியும். அதைத் தொடர்ந்து ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகளும் பாதிப்பு அடையும். அதனால்தான் உணர்ச்சிகளை முழுமையாக அறிய முடிவதில்லை. காயங்கள் ஏற்படுவது நீரிழிவாளருக்குத் தெரியாமலே போய்விடுகிறது. ரத்த சர்க்கரை அளவு தாறுமாறாக இருக்கும்போது, அது கால் நரம்புகளில் கெட்டியாகப் படிந்து விடுகிறது. இந்நிலையில் உணர்ச்சி அற்றுப் போவதால் புது திசுக்கள் வளர்ந்து புண் ஆறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

    பொதுவாகவே பாதங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இச்சூழலில் அதிகப்படி சர்க்கரை படிந்து, ரத்த ஓட்டம் தடைபடுவதால், புதிய செல்கள் மீண்டும் உருவாவதும் தடுக்கப்படுகிறது.புண் ஆறுவதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளும் கிடைப்பது இல்லை. பாதிக்கப்பட்ட செல்களில் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவு. அதனால், நோய்க்கிருமிகள் மகிழ்வுடன் வளரும்.மதமதப்பு ஏன்?கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையின் விளைவுதான் இந்த மதமதப்பும். கை, கால் மற்றும் பாதங்களில் மதமதப்பு ஏற்படும். உணர்ச்சி குறையும். எரிச்சல் உண்டாகும். இந்த அறிகுறிகளைப் பொருட்படுத்தத் தவறினால், ஊசி குத்தும் வலி உண்டாகும். இந்தப் பிரச்னை இரவில் மிக அதிகமாக இருக்கும். உறக்கம் கெடும்.

    சருமம் உரிகிறதா?

    ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது, சருமத்திலுள்ள செல்கள் சேதம் அடைகின்றன. இதனால், அந்த இடங்களில் சிறு சிராய்ப்பு உண்டானாலும், தோல் உரிந்து விடும். இயல்பாகவே இந்த நிலையில் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவாகவே இருக்கும். பாக்டீரியா, காளான், பூஞ்சை போன்ற நோய் தொற்றுகளும் அதிரடியாகத் தாக்கும். சிலருக்கு பிறப்பு உறுப்பிலும் புண் அல்லது அரிப்பு உண்டாகவும் கூடும்.

    கிருமிகளுக்குக் கொண்டாட்டம்ரத்த குளுக்கோஸ் அதிகமாகும் போது கிருமிகளுக்கும் கொண்டாட்டம்தான். அவை பல்கிப் பெருகுவதற்கான வசதியான சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவே அர்த்தம். நீரிழிவு இல்லாத ஒரு நபரை கிருமிகள் தாக்குவதைக் காட்டிலும், நீரிழிவுகாரர்களின் பாதங்களை கிருமிகள் மிக அதிக அளவில் தாக்குகிறது. பாதங்களுக்கு சரியான ரத்த ஓட்டம் செல்லாததும், ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுமே காரணம்.

    கிருமிகளிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி... ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைப்பதுதான்.

    இதன் மூலம் ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை பாதுகாக்க முடியும்.
    இப்போது நீரிழிவு சிகிச்சை மையங்களில் கால்களை பரிசோதிக்கும் நவீன கருவிகள் உள்ளன. இதன் மூலம் காலில் புண் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களை படமாகவே எடுத்துப் பார்க்க முடியும். அந்த இடங்களில் அழுத்தம் ஏற்படாத வகையிலான பாதுகாப்பான காலணிகளை அணிந்து கொள்வது நல்லது.

    சருமம் உலர்வாகவும் சுத்தமாகவும் இருக்கும்போது, நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும். ஆனால், பாருங்கள்... நீரிழிவாளர்களின் சருமம் ஏற்கனவே அதிக உலர்வாகத்தானே இருக்கிறது? இது என்ன புதிர்!

    இப்போது நீரிழிவு சிகிச்சை மையங்களில் கால்களை பரிசோதிக்கும் நவீன கருவிகள் உள்ளன. இதன் மூலம் காலில் புண் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களை படமாகவே எடுத்துப் பார்க்க முடியும். அந்த இடங்களில் அழுத்தம் ஏற்படாத வகையிலான பாதுகாப்பான காலணிகளை அணிந்து கொள்வது நல்லது.



    (கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)


    Last edited by chan; 13th Jan 2016 at 12:45 PM.

  6. #166
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ‘இனிப்பான’ வாழ்வுக்குப் பத்து கட்டளைகள்



    நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கட்டளைகள்:


    1. நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    2. மாதம் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் ரத்தப் பரிசோதனை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஈ.சி.ஜி., நெஞ்சு எக்ஸ்ரே மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    3. சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

    4. அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

    5. மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிக்க வேண்டும்.

    6. பழங்களில் முக்கனியைத் தவிர்த்துக் கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.

    7. கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பாலக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

    8. சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண வேண்டும். கூழ், களி தவிர்க்கவும்.

    9. உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் இருப்பது மிக அவசியம்.

    10. தினசரி இரண்டு துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிட மாரடைப்பு மற்றும் கொழுப்பைத் தவிர்க்கலாம். கொடியில் வளரும் அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடலாம்.

    நன்றி: கோவில்பட்டி நீரிழிவு மருத்துவ நிபுணர் டாக்டர் இ.சா. தங்கப்பாண்டியன்



  7. #167
    aadhii is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2016
    Location
    chennai
    Posts
    34

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    useful info........tfs


  8. #168
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    டயாபடீஸ் டயட் - 4 கட்டளைகள்

    ந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. `ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.

    நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ். இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம் சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம். இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்.

    1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்

    நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம். வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம். இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது. இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.

    2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்

    எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம் என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
    3.விதவிதமாகச் சாப்பிடுதல்

    முழு தானியம், பழங்கள், காய்கறிகள் என அனைத்துவிதமான உணவுகளும் இருக்கும்படியாக நம்முடைய உணவுப் பழக்கத்தைத் திட்டமிட வேண்டும். ஒரே வகை உணவில் இருந்து எல்லா சத்துக்களும் கிடைக்காது. எல்லா வகை உணவும் எடுக்கும்போது, வைட்டமின், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து நிறைவாக உள்ளன. மிகக் குறைவான கலோரி இருக்கிறது. கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை; மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் கிடைக்கிறது.

    4.கொழுப்பு உணவைக் குறைத்தல்

    எந்த ஓர் ஆரோக்கியமான நபரும் கொழுப்பில் இருந்து பெறும் கலோரி, 30 சதவிகிதத்தைத் தாண்டாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    என்னுடைய தட்டை எப்படி உருவாக்குவது?

    சமச்சீரான உணவு என்பதுதான் இதன் சிறப்பு. இது மிகவும் எளிமையானது. இதை நம் தினசரி வாழ்வில் பின்பற்றினால், ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். இதற்கு உங்கள் தட்டில் பாதியை, கார்போஹைட்ரேட் இல்லாத (Non starchy) பழங்கள், காய்கறிகளால் நிரப்புங்கள். மீதி இருக்கும் அரைத் தட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒரு பகுதியில் கார்போ ஹைட்ரேட் உணவையும் இன்னொரு பகுதியில் புரதச்சத்து உள்ள உணவையும் வைக்க வேண்டும்.

    ஒரு கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பால் அல்லது பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து பின்பற்றினால், அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் நிறைவாகக் கிடைக்கும்.


    காய்கறி, பழங்கள்

    சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து உள்ளது. சில பழங்க ளை மட்டும் தவிர்த்தால் போதும். மற்றபடி, காய்கறி, பழங்கள்தான் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான வைட்டமின், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டு உள்ளன.

    சிப்ஸ், இனிப்புகளுக்குப் பதில் காய்கறி, பழங்களால் ஆன சாலட் எடுத்துக்கொள்ளலாம்.

    பழச்சாறு, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளுக்குப் பதில் பழங்களாகக் கடித்துச் சாப்பிடுவது நல்லது.

    பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறக் காய்கறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

    முழு தானியங்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டை அளிக்கிறது. ஒரே வகையான தானியத்தைஎடுப்பதைத் தவிர்த்து, கேழ்வரகு, கம்பு, தினை என விதவிதமாக எடுத்துக்கொள்ளலாம்.

    மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள ஆலிவ், கனோலா, கடலை எண்ணெய், மிகக் குறைந்த அளவில் பாலி சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள கார்ன், எள், சூரியகாந்தி எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். சாச்சுரேட்டட் ஃபேட் உள்ள கொழுப்பு நிறைந்த இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை எடுத்துக்கொள்வதை மிகக் குறைந்த அளவாக மாற்றிக்கொள்ளலாம்.



    ஸ்வீட்டர்: நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்றால், நேரடியாக பாக்கெட்டில் இருந்து எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது கொட்டி, மீதியை மூடி வைத்துவிட்டுச் சாப்பிடுவது நல்லது.

    டயாபடீஸ் டவுட்

    “சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்களே. எனக்குச் சர்க்கரை நோய் உள்ளது. நான் போதுமான அளவு சுகர் ஃப்ரீ உணவுகளை எடுத்துக்கொள்ளலாமா?”

    “சுகர் ஃப்ரீ என்றால், அது கார்போஹைட்ரேட், கலோரி, கொழுப்பு இல்லாத உணவு என அர்த்தம் இல்லை. சில சுகர் ஃப்ரீ உணவுகளில், மற்ற உணவுகளில் உள்ளது போலவே கலோரி, கார்போஹைட்ரேட் உள்ளன. எனவே, இதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்ல முடியாது. இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் முன் அதன் லேபிளைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்தேகம் இருந்தால், டாக்டர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெற வேண்டும்.”


    Last edited by chan; 29th Mar 2016 at 03:02 PM.
    ahilanlaks likes this.

  9. #169
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    உங்களுக்கு இஷ்க் இஷ்க் என்று கேட்க வில்லையா

    சுகர்? நோ... நோ... நான் ஏற்கனவே இனிப்பானவன்!

    நீரிழிவு குறித்து நீடித்து வரும் கேள்விகளும், அதற்கான நிலையான விளக்கங்களும் இதோ உங்கள் பார்வைக்காக...அறிகுறிகள் மூலம் நீரிழிவை அறிய முடியுமா?நீரிழிவு எனும் குறைபாடானது, மற்ற நோய்களைப் போல சட்டென அறியப்படக் கூடியதல்ல.

    அறிகுறிகளை வெளிக்காட்டாமலே பல காலம் உள்ளுக்குள்ளே ஒளிந்திருக்கவும் கூடும். உடலின் பல பகுதிகளையும் தாக்கிக்கொண்டே ஒன்றுமே தெரியாத நல்ல பையன் போல அமைதியாக இருக்கக் கூடும். தற்செயலாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை மூலமாகவோ, அதிகரித்து விட்ட ஒரு சிக்கல் வாயிலாகத்தான் பெரும்பாலான நீரிழிவுகள் அறியப்படுகின்றன.

    பொதுவாக நீரிழிவின் அறிகுறிகளை 3P எனக் குறிப்பிடுவதுண்டு.Polyuria (அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை)Polydipsia (அதிக தாகம்)Polyphagia (அதிக பசி)இந்த 3 அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருந்தாலோ, எடை இழப்பு ஏற்பட்டாலோ, காயம் அல்லது புண்கள் விரைவில் குணமாகாமல் இருந்தாலோ, நீரிழிவுக்கான அடிப்படை பரிசோதனைகள் உடனடித் தேவை.

    இவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்படவும் கூடும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், நீரிழிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாகவே அதீத தாகமும் உண்டாகிறது. சிறுநீரில் அளவுக்கு மீறி குளுக்கோஸ் வெளியேறி விடுவதால்தான், எடையும் குறைகிறது. இதன் தொடர்ச்சியாக சோர்வு, தசைகள் பலவீனம் ஏற்பட்டு, சோம்பலாக உணரத் தொடங்கி விடுகிறார்கள்.

    சிலருக்கு சிறுநீர் கழிக்கையில் வித்தியாசம் தெரியும்.இந்த அறிகுறிகள் எதையுமே கண்டுகொள்ளாமல் விடுகிறவர்களுக்கு நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய் விடுகிறது. சிறுநீரகச் செயல் இழப்பு, உணர்ச்சி இன்மை (நியூரோபதி), பார்வைக் குறைபாடு (ரெட்டினோபதி) ஆகிய பிரச்னைகள் சேர்ந்து கொள்கின்றன.

    நீரிழிவாளர்களுக்கு நெஞ்சு வலி அல்லது இதய வலி ஏற்பட்டால் கூட தெரியாதாமே... உண்மையா?
    நீண்ட காலமாக நீரிழிவு கொண்டோருக்கும், கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கும் நரம்புப் பாதிப்பு (நியூரோபதி) ஏற்படக்
    கூடும். நரம்புகள் பலவீனமாகி, மூளைக்குத் தகவல்கள் அனுப்புவது முடியாமல் போகும்.

    அதனால்தான் இதுபோன்ற வலிகள் கூட அறியப்படாமல் போகின்றன. பொதுவாக இதய நோயாளிகளுக்கு ஆஞ்சினா என்கிற வலி ஏற்படக்கூடும். இது மார்பின் இடதுபக்கத்தில் ஏற்படும் நெருக்குதல் காரணமாக உண்டாகும். நடக்கும் போது உண்டாகும் வலியானது, நின்றால் நின்று போகும். கட்டுப்பாடில்லா நீரிழிவாளர்களுக்கு, நியூரோபதி பிரச்னை காரணமாக, இந்த வலி தெரியாமலே இருக்கும். மூச்சு முட்டுவது போலவோ, இறுக்கமாக இருப்பது போலவோ அவர்கள் உணரக்கூடும். அதை அலட்சியப்படுத்தக்கூடாது.

    எல்லா நீரிழிவாளர்களுமே நெஞ்சு வலி வந்து விடுமோ என அஞ்சத் தேவையில்லை. 20-30 சதவிகிதத்தினருக்கு இந்த உணர
    முடியாத குழப்பம் நேர்கிறது. இதை Silent ischemia என்கிறார்கள். நமக்கு மட்டும் ‘இஷ்க் இஷ்க்’ என்று கேட்காமல், உள்ளுக்குள்ளேயே வலிக்கிறதோ என்றெல்லாம் குழம்ப வேண்டாம்... நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாலே போதும்.நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரை இருக்குமா?
    எல்லா நீரிழிவுக்காரர்களுக்கும் இப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.

    பொதுவாக உணவுக்குப் பின் நமது ரத்த சர்க்கரை அளவு 120mg%. இதுவே 180mg%க்கு அதிகமாகும் போதுதான், சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) காணப்படும். ரத்த சர்க்கரையானது இந்த அளவை எட்டும்போதுதான், சிறுநீரகம் குளுக்கோஸை சிறுநீரோடு வெளியேற்றும். இவ்விரு அளவுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் ரத்த சர்க்கரை இருக்கும்போது, சிறுநீரில் சர்க்கரையை காண முடியாது.

    ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அதை நாம் உணர முடியுமா?பலர் சொல்வதுண்டு... ‘என் உடம்பு எப்படி இருக்கு, சுகர் லெவல் எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியாதா’ என்று. அய்யோ பாவம்... அவர்கள் எதையும் அறியவில்லை!ரத்த சர்க்கரை அளவு எகிறிய சூழ்நிலையிலும் கூட, பொதுவாக நாம் எதையும் உணர முடியாது என்பதே உண்மை.

    பல ஆண்டு காலம் நீரிழிவு அறியப்படாமலே இருந்து, தற்செயலாக ஒருநாள் தெரிய வருவதற்கும் இதுவே காரணம். காயங்கள் ஆறுவதற்குத் தாமதம் ஆதல், திரும்பத் திரும்ப நோய் தொற்றுகள், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை மட்டும் காணப்படக்கூடும். அதையும் சிலர் வெவ்வேறு காரணம் கற்பித்து கண்டுகொள்ளாமல் விடுவார்கள். 400mg% என அதீதமாக ரத்த சர்க்கரை அளவில் உள்ளவர்களுக்குக் கூட, எந்த ஓர் அறிகுறியும் இல்லாது இருந்தது உண்டு.

    ரத்த சர்க்கரை அளவு அதிகமானால்தான் அறிகுறிகள் மூலம் அறிய முடியாது. குறைந்தாலோ ஊருக்கே தெரிந்து விடும்... உயிருக்கும் ஆபத்து.70mg% அளவுக்குக் கீழே குளுக்கோஸ் குறைந்து போனால், தாழ்நிலை சர்க்கரை (Hypoglycemia) பல அறிகுறிகளைக் காட்டும். ஆமாம்... சாலையில் யாரேனும் திடீரென மயங்கி விழுந்ததைக் கவனித்திருக்கிறீர்களா?

    ஹைபோக்ளைசீமியாவுக்கு என்ன அறிகுறிகள்?ரத்த சர்க்கரை அளவு 70mgக்குக் குறையும் போது ஏற்படும் தாழ்நிலை சர்க்கரையையே ஹைபோக்ளைசீமியா என்கிறோம். இதற்கு ஏராளமான அறிகுறிகள் உண்டு. அதீத பசி, வயிற்றுப்பகுதியில் வலி போன்ற உணர்வு, வியர்வை, இரட்டிப்புப் பார்வை, தளர்வு, உணர்வின்மை, அரிப்பு, மனக்குழப்பம்... இப்படி. இந்நிலையில் சிலர் முழுக்க முழுக்க உணர்விழப்பதும் உண்டு.
    கோமாவுக்கு தள்ளப்படுவதும் உண்டு. கொஞ்சம் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் சாப்பிட்டாலே போதும்...

    இவர்களுக்கு சரியாகிவிடும். மாத்திரைகள் அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்கிற நீரிழிவாளர்களுக்கே இந்தப் பிரச்னை ஏற்படும்... அபூர்வமாகத்தான்!
    இன்சுலின் டோஸ் அதிகமானாலோ, அளவு மீறி உடற்பயிற்சி செய்தாலோ ஹைபோக்ளைசீமியா உண்டாகலாம். சரியான
    நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தாலும் இப்படி ஆகலாம்.

    அதனால்தான் உணவு நேரம், உடற்பயிற்சிக்கு முன் பின் செய்ய வேண்டியவை, இன்சுலின் / மாத்திரைகள் பயன்படுத்தும் முறை ஆகியவை பற்றி மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள்.நீரிழிவுக்கு ஏன் `டயாபடீஸ் மெலிட்டஸ்’ என்ற பெயர் வந்தது?Diabetes என்ற வார்த்தைக்கு Running through என்றும் Mellitus என்ற வார்த்தைக்கு Sweet என்றும் மூலப்பொருள்.

    180mg என்கிற அளவுக்கு மீறி ரத்த சர்க்கரை செல்லும்போது, அது சிறுநீரில் தோன்றத் தொடங்குகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடுகிறது. முன்னொரு காலத்தில் நீரிழிவை சிறுநீர் கழித்தல் மற்றும் அதன் சுவையை வைத்தே கண்டுபிடித்திருக்கிறார்கள். பாலியூரியா நிலையில் சிறுநீர் இனிப்பாகக் காணப்படுமாம். அதனால்தான் இதற்கு டயாபடீஸ் மெலிட்டஸ் என்கிற இனிப்பான பெயர்!
    குளுக்கோமா என்கிற கண் பிரச்னைக்கு நீரிழிவு எப்படி காரணமாகிறது?

    விழிக்கோள அழுத்த பிரச்னையையே குளுக்கோமா என்கிறோம். நீரிழிவு இல்லாதவர்களுக்கும் இது ஏற்படக்கூடும் என்றாலும், நீரிழிவாளர்களுக்கு சற்று அதிக ரிஸ்க் உண்டு. விழிக்கோளத்தின் உள் உறையாக இருப்பது ரெட்டினா. இதன் மூலமே முறையான பார்வையைப் பெறுகிறோம்.

    கண்ணில் பிரச்னை உடையவர்களுக்கு அவ்வப்போது கருவிழியைத் தளர்த்தும் வகையில் சொட்டு மருந்துகள் தரப்படுவதுண்டு. இதன் மூலம் குளுக்கோமா தாக்குதல் அறியப்படும் வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட கண்ணில் வலி, மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் உணரப்படும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, கண்ணைக் காக்க வேண்டும். தாமதம் கூடாது.

    ஸ்வீட் டேட்டா

    76 சதவிகித நீரிழிவாளர்கள் தங்கள் குறைபாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதைச் சோதிப்பதே இல்லை. இன்சுலின் பயன்படுத்துகிற / பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிற 41 சதவிகிதத்தினரும் பரிசோதனை செய்வதில்லை. டைப் 1 நீரிழிவாளர்களில் இந்த அலட்சியம் 21 சதவிகிதமாக இருக்கிறது.

    தாழ்நிலை சர்க்கரையையே ஹைபோக்ளைசீமியா என்கிறோம். இதற்கு ஏராளமான அறிகுறிகள் உண்டு. அதீத பசி, வயிற்றுப்பகுதியில் வலி போன்ற உணர்வு, வியர்வை, இரட்டிப்புப் பார்வை, தளர்வு, உணர்வின்மை, அரிப்பு, மனக்குழப்பம்... இப்படி. இந்நிலையில் சிலர் முழுக்க முழுக்க உணர்விழப்பதும் உண்டு. கோமாவுக்கு தள்ளப்படுவதும் உண்டு.



    (கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)


    ahilanlaks likes this.

  10. #170
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க சில எளிய முறைகள்



    உணவு அட்டவணை
    நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவர முறையான உணவு அட்டவணை அவசியம். உங்கள் நீரிழிவு மருத்துவரிடமோ, நீரிழிவு மருத்துவமனை டயட்டீஷிய னிடமோ ஆலோசித்து இதை உருவாக்கிக் கொள்ளலாம். எந்தெந்த நேரத்தில் என்னென்ன உணவைச் சாப்பிட வேண்டும் என்பதை அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி பின்பற்ற வேண்டும். நீரிழிவின் அளவைக் குறைப்பதற்கான இலக்கை வரையறுத்துக்கொண்டு, இந்த அட்டவணையில் குறுகிய காலத்துக்குச் சில மாற்றங்களைச் செய்தாலும்கூட, நீண்டகாலம் அட்டவணையை மாற்றாமல் பின்பற்றுவதே நல்லது. நீரிழிவின் அளவைக் கட்டுப்படுத்திய பிறகு, உணவு அட்டவணையைக் கைவிட்டுவிடக் கூடாது.

    கார்போஹைட்ரேட் அளவு
    அரிசி, மாவு போன்றவற்றால் செய்யப்பட்ட உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகம் இருக்கும். அதனால் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவை ஒரே நேரத்தில் உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு கடுமையாக அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவை, தகுந்த இடைவெளிகளில் பிரித்து உண்ண வேண்டும். இப்படிச் செய்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

    உணவு இடைவெளியில்

    இரண்டு முதன்மை உணவுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் சர்க்கரை இல்லாத எலுமிச்சை பழச்சாறு, மோர், சர்க்கரை குறைவாக உள்ள பழங்கள், முளை கட்டிய பயிர்கள், தானியங்கள், வேகவைத்த முட்டை வெள்ளைக்கரு, வெள்ளரி, தக்காளி சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    நார்ச்சத்தும் புரதச்சத்தும்
    நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி உணவைக் குறைக்கும் அதேநேரத்தில், நார்ச்சத்து அதிகமுள்ள உணவையும் புரதம் அதிகமுள்ள உணவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உணவில் காய்கறிகளையும் மொச்சை-சுண்டல் வகைகளை அதிகரிக்க வேண்டும்.

    எடைக் கட்டுப்பாடு
    உங்களின் உடல் சராசரியின் அளவு (பி.எம்.ஐ.) அதிகபட்சமாக 22 முதல் 24 வரை இருக்கலாம். 25-ஐ தொட்டுவிட்டால், நீங்கள் உடல் பருமன் வளையத்துக்குள் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுடைய உயரத்துக்கு இணையில்லாத அதிகமான எடையைக் குறை யுங்கள். குறிப்பாக வயிற்றின் கீழ்ப் பகுதியில் தொந்தி போட்டிருந்தால் குறைத்தாக வேண்டும். தொந்தியால் இன்சுலின் சுரப்பு குறையும்.

    கொழுப்புக் கட்டுப்பாடு
    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து அதிகம். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தையும் உடலில் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுப் பழக்கம்
    மதுப் பழக்கத்தின் அளவுக்கேற்ப ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இதன் விளைவாக ஹைப்போகிளைசிமியா அல்லது 'இன்சுலின் ஷாக்' எனப்படும் இக்கட்டான நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    உடற்பயிற்சி
    நடைப்பயிற்சி, நீச்சல், டென்னிஸ் விளையாடுவது, நடனம் ஆகிய ஏதாவது ஒரு பயிற்சியை தினமும் 30 நிமிடங்களுக்குக் கட்டாயம் செய்ய வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இந்தப் பயிற்சிகளைச் செய்தால்கூட, உங்களுடைய உடல் எடை கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற கொழுப்பு உடலில் தங்காது. படபடப்பு, ரத்தக் கொதிப்பு போன்றவை அண்டாது.


    Last edited by chan; 11th Apr 2016 at 01:51 PM.
    ahilanlaks likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter