Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #171
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Very nice ji. Worthy share.


    Sponsored Links

  2. #172
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    மாத்திரைக்கு மாற்றாகுமா உடற்பயிற்சி?


    சுகர் ஸ்மார்ட்

    குளுக்கோஸை குறைக்கும் தன்மை எக்சர்சைஸுக்கு உண்டு என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டயட் மற்றும் எக்சர்சைஸ் மட்டுமே 60 சதவிகித நீரிழிவாளர்களுக்குப் போதுமானது. 20 சதவிகிதத்தினருக்கு மாத்திரைகள் தேவைப்படும். மீதிஉள்ளோருக்கு மட்டும்தான் இன்சுலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் உண்டு.



    உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொண்டு, உணவுக் கட்டுப்பாட்டையும் மீறாமல் இருந்தால், நீரிழிவு நிர்வாகத்தை சிறப்பாகவே மேற்கொள்ள முடியும். இவ்விரண்டும் இணைந்தும் நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க முடியாத போதுதான், கூடுதலாக மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

    மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு, சிலருக்கு எதிர்பார்த்ததை விடவும் குளுக்கோஸ் அளவு குறைய கூடும். அவர்களுக்கு மருந்து அளவு குறைக்கப்படலாம் அல்லது எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் படலாம். சிலருக்கு தியானம் (Meditation) கூட, மாத்திரைகளை நிறுத்தவோ, குறைக்கவோ உதவி இருக்கிறது!



    மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகள் நிறுத்தப்பட்ட பிறகு, டயட், வாக்கிங், யோகா / எக்சர்சைஸ் ஆகியவற்றை ஒழுங்காகப் பின்பற்றுவது மிக முக்கியம். அவ்வப்போது ரத்த சர்க்கரை பரிசோதனை செய்து நலத்தை உறுதிசெய்து கொள்வது அதை விட முக்கியம்!

    சிறந்த உடற்பயிற்சி எது?

    ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி மிக அவசியம். நாம் உடற்பயிற்சி செய்யும்போது என்ன நடக்கிறது? தசைகளுக்குத் தேவையான ஆற்றல் (எரிபொருள்), ரத்தத்தின் வழியாகவே பெறப்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை குறைகிறது.

    ஒரு நீரிழிவாளர் தினம் அரை மணி நேரம் வாக்கிங் செல்வது கூட, அவருக்குப் பெரிய அளவில் உதவும். உடற்பயிற்சி இன்மையே பருமனுக்கும், நீரிழிவு
    கட்டுப்பாடு இல்லாததற்கும் காரணம். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வோருக்கு ரத்த சர்க்கரை அளவு 10-15 சதவிகிதம் குறைவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    நடைப்பயிற்சியின் போது ரத்த சர்க்கரையும் கொழுப்பும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு, உடல் செல்களின் கலோரி எரிப்பு அமைப்பும் அதிகரிக்கிறது. தசைகளுக்கான ரத்த வரத்து சீராகிறது. இதனால் நல்ல உடலமைப்பையும் பெற முடியும். காலை, மாலை - இரு
    வேளையும் நடைப்பயிற்சி செய்வோருக்கு மிகுந்த பலன் கிடைக்கிறது.

    யோகாசனங்கள் செய்வது இன்னும் சிறப்பு. யோகா செய்யும் போது, நமது சகல மூட்டுகளும் நகர்கின்றன. நமது உடல் புத்துணர்வு பெறுகிறது. யோகாவை நடைப்பயிற்சி செய்யும் முன் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் மேற்கொள்ளலாம்.நீரிழிவாளர்களுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடிய யோகாசனங்கள் பல உண்டு. இன்சுலின் சுரக்கக்கூடிய கணையத்தைத் தூண்டி விடக்கூடிய யோகாசனங்களை முறையாக பயிற்சி பெற்று பின்பற்றலாம்.
    தினம் தினம் கவனம்!

    *உடற்பயிற்சி செய்து முடித்த உடன், மறக்காமல் கால்களைப் பரிசோதிக்க வேண்டும்.

    *தீவிர உடற்பயிற்சி செய்கிற காலகட்டத்தில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் நிறைந்த சமச்சீர் உணவு எடுத்துக்
    கொள்ளலாம். இது ஹைப்போக்ளைசீமியா எனும் தாழ்நிலை சர்க்கரை ஏற்படாமல் இருக்க உதவும்.

    *பொருத்தமான, நல்ல காலணிகள்/ ஷூக்களையே உடற்பயிற்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

    உடற்பயிற்சியும் தாழ்நிலை சர்க்கரையும்

    *அளவு மீறிய நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு தாழ்நிலை சர்க்கரை (ஹைப்போக்ளைசீமியா) ஏற்படக்கூடும். வழக்கமாக ஒரே அளவு பயிற்சி செய்கிறவர்களுக்கு பொதுவாக இப்பிரச்னை ஏற்படுவதில்லை. திடீரென ஒரு நாள் அதீத ஆர்வத்தில் ‘டூ மச்’ ஆகச் செய்தால், ரத்த சர்க்கரை சடாரென இறங்கவும் கூடும்.

    *உணவு அருந்தாமலோ, விரதம் இருந்தோ உடற்பயிற்சி செய்தாலும், இப்படி ஆகக் கூடும் (நீரிழிவாளர்களுக்கு விரதமும் ஆகாது... விருந்தும் ஆகாது என்பது மற்றொரு எச்சரிக்கை).

    *உடல்நலப் பிரச்னையின் போதோ, காய்ச்சலின் போதோ, வயிற்றுப்போக்கு இருக்கும் போதோ, உடற்பயிற்சி செய்தாலும் தாழ்நிலை சர்க்கரை ஏற்படலாம்.

    *மாத்திரைகளை அதிகமாக எடுத்துவிட்டு, உடற்பயிற்சி செய்தாலும் ஹைப்போக்ளைசீமியா நிலை வரலாம். ஆகவே, மாத்திரைகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துகிற போது, உடற்பயிற்சியிலும் அளவு மீறல் ஆபத்தே!எப்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது?

    * ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும்போது (டைப் 1 நீரிழிவில் 300 mg/dl அளவுக்கு அதிகமாகவும், டைப் 2 நீரிழிவில் 400 mg/dl அளவுக்கு அதிகமாகவும்)...

    இச்சூழலில் உடற்பயிற்சி செய்தால் ரத்த சர்க்கரை அளவு இன்னும் அதிகமாகக் கூடும். உடற்பயிற்சி செய்யும்போது கல்லீரலில் சேமிக்கப்பட்டுள்ள குளுக்கோஸ் வெளியிடப்படும். இன்சுலின் ரத்த ஓட்டத்தில் இருக்கும்போது, நமது தசைகள் குளுக்கோஸாக எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

    ஆனால், உடற்பயிற்சி செய்யும் முன்பே அதிக சர்க்கரை இருந்தால் (சிறுநீரில் கேட்டோன்கள் உருவாகாத நிலையிலும் கூட) என்ன அர்த்தம்? அச்சூழலில் ரத்த சர்க்கரையை சமாளிக்கும் அளவு இன்சுலின் இல்லை என்பதுதான் அதன் பொருள். இப்போது செல்களால் குளுக்கோஸை பயன்படுத்த முடியாது என்பதால், ரத்த சர்க்கரை அளவு மேலும் எகிறவே செய்யும்.

    *சிறுநீரில் கேட்டோன்கள் உள்ள போது...உடற்பயிற்சியின் போது நாம் வழக்கமாக குளுக்கோஸையும் கொழுப்பையும் எரிக்கிறோம். கொழுப்புகள் எரியும்போது கேட்டோன்ஸ் எனும் துணைப்பொருளை உருவாக்கும். ரத்தத்தில் தேவையான அளவு இன்சுலின் இருக்கிற பட்சத்தில், இந்த கேட்டோன்களும் எரிக்கப்பட்டு விடும்.

    இன்சுலின் குறைவாக இருக்கும்போதோ, உருவாகும் கேட்டோன்கள் சிறுநீரில் கலந்துவிடும். குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்கிற அளவுக்கு ரத்தத்தில் இன்சுலின் இல்லை என்பதே சிறுநீரில் கேட்டோன்கள் கலக்கக்
    காரணம். ரொம்ப கெட்ட பய சார் இந்த கேட்டோன்!

    *உடல்நிலை குன்றும் போது...உடல்நலம் சீராக இல்லாத நிலையில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடும். அப்போது உடற்பயிற்சி செய்தால், அது இன்னும் அதிகரிக்கும்.

    * வலி ஏற்படும் போதும் பார்வையில் மாற்றம் ஏற்படும் போதும்...

    தலை சுற்றும்போதோ, மயக்கமாக உணர்கிற போதோ, குமட்டலாக வரும் போதோ, மூச்சுவிட சிரமமான நிலையிலோ, ஒருபோதும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது இதயம் சார்ந்த பிரச்னையாகவும் இருக்கலாம். திடீரென பார்வை மாற்றம் ஏற்பட்டாலோ, கரும்புள்ளிகள் தென்பட்டாலோ, உடற்பயிற்சி வேண்டாம். இது நீரிழிவு சார்ந்த கண் பிரச்னையை அதிகப்படுத்தி விடும்.

    நீரிழிவாளர்களுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடிய யோகாசனங்கள் பல உண்டு. இன்சுலின் சுரக்கக்கூடிய கணையத்தைத் தூண்டி விடக்கூடிய யோகாசனங்களை முறையாக பயிற்சி பெற்று பின்பற்றலாம்.

    ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வோருக்கு ரத்த சர்க்கரை அளவு 10-15 சதவிகிதம் குறைவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு, சிலருக்கு எதிர்பார்த்ததை விடவும் குளுக்கோஸ் அளவு குறையக் கூடும். அவர்களுக்கு மருந்து அளவு குறைக்கப்படலாம் அல்லது எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படலாம். சிலருக்கு தியானம் (Meditation) கூட, மாத்திரைகளை நிறுத்தவோ, குறைக்கவோ உதவி இருக்கிறது!


    (கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)


    Last edited by chan; 26th May 2016 at 08:43 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter