Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு

    காளான்
    காளான் சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம். ரத்தசோகை போக்கும். நீரழிவு நோயாளிகள் சாப்பிடலாம். காளான் சைவ உணவு. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

    வெந்தயம்
    நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தயம். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

    இயற்கை ஜூஸ்
    நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மாமரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக
    பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

    கற்றாழை ஜெல்
    நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு தேக்கரண்டி சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உணவுக்குப் பின்னரும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

    சப்பாத்தி
    நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சோயா போன்றவைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.


    Sponsored Links
    jv_66 and Dangu like this.

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    மூலிகை கசாயம்

    வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

    நீரழிவு நோய் நீக்கும் ஆவாரம் பூ
    ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரழிவு நோய் படிப்படியாக குறையும்.

    ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.
    ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்

    நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்

    சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.

    கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை

    இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.


    jv_66 and Dangu like this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?

    காலை வேளையில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே டைப் 2 நீரழிவு இருந்து, அதை சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை அளவு 200ஐத் தாண்டிவிடுகிறது. அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு 120தான் இருந்தது. சாப்பாடு, உடற்பயிற்சி எல்லாவற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறேன். ஒருநாளைக்கு ஒருமுறையாவது நடைப்பயிற்சி செய்கிறேன். சரியான உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன்.

    இருந்தும் சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?
    காரணம் சொல்கிறார் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் வி.மோகன்…

    காலையில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உங்களுடைய நீரிழிவு பிரச்னையின் தன்மை, வளர்ச்சிக்கு ஏற்ப இது ஏற்படும். இதைச் சரி செய்ய, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சரியான மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். அரிதாக, சிலருக்கு நடு இரவில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். பிறகு வேகமாக அதிகரித்து காலையில் அதிக அளவாகும்.

    அதிகாலை 3 மணிக்கு உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பாருங்கள். அளவு குறைவாக இருந்தால் இரவு நேரத்தில் குறைவான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக இருந்தால், இரவில் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இதுவரை நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ளாதவராக இருந்தால், அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

    சலரோகம் எனும் நீரழிவு நோயும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும் – யாழ் வைத்தியபீட மாணவர்களினால் வெளியிடப் பெற்றது.

    jv_66 and Dangu like this.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Diabetic Neuropathy-சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்பட

    சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் பாதிப்புகள்

    "சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி (Diabetic neuropathy) காரணமாக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். ஒவ்வொரு ஆறாவது சர்க்கரை நோயாளிக்கும் பாதப் புண் பிரச்சனை ஏற்படுகிறது.

    இதனால் கால் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்சனை செல்கிறது. உலக அளவில் கால் துண்டிப்பு செய்வதற்கு, 85 சதவிகிதம் அளவுக்கு பாதங்களில் ஏற்படும் புண்ணே காரணமாக உள்ளது.

    கால்களை தினசரி கவனித்தல்: வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், சிவந்துபோய் இருத்தல், வீக்கம், நகங்களில் பிரச்னை உள்ளதா என்பதை தினசரி கவனிக்க வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

    அன்றாடம் கால்களைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து கழுவ வேண்டும். அழுத்தமாகத் துடைக்காமல் ஒற்றிஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும்.

    கால் விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டில்கூட செருப்பு அணிந்து நடக்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. இதனால், கால்களில் ரத்த ஓட்டம் குறையும்."


    jv_66 and Dangu like this.

  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Diabetic Neuropathy-சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்பட

    Thanks for these tips.

    chan and Dangu like this.
    Jayanthy





  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ரத்தத்தில் சர்க்கரை அளவு

    ரத்தத்தில் சர்க்கரை அளவு

    உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு

    எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) – 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக

    சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து… 80 முதல் 140 மி. கிராம் சதவீதத்துக்குக் குறைவாக

    கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு…
    எதுவும் சாப்பிடாமல்….80 முதல் 120 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.

    சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து…140 முதல் 160 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.

    முக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வரும்போது தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். காபி, டீ, பால், சிகரெட், மது மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    சர்க்கரை நோயாளிகளாக இருக்கும் நிலையில்சாப்பிட்ட பின் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்தே ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும்

    jv_66 and Dangu like this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இடுப்பை பாருங்க… சர்க்கரை நோய் வராது!

    இடுப்பை பாருங்க… சர்க்கரை நோய் வராது!

    ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே… உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி’தான். வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியை பாதிக்கிறது. நீங்கள் உணவுஉண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுபதற்காக கணையம் `இன்சுலினை’ சுரக்க வேண்டும். இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிரப்பு நிலை எனப்படுகிறது.

    அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்’ என்ற நஞ்சாகிவிடுகிறது.

    அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்’ கொழுப்பு அபாயம் அதிகம்.

    அடிவயிற்று பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்’ கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டிள்ள `சகுட்டேனியஸ்’ கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும். `விசரால்’ கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது.

    பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி. தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும்.

    பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள். `விசரால்’ கொழுப்பிலிருந்து நீங்க, உங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை’ எடுத்துக்கொள்ளலாம். தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்து பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.

    இதய பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள். நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும். தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் முலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.


  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சர்க்கரை': காலணி இல்லாமல் நடக்காதீர்கள்

    சர்க்கரை': காலணி இல்லாமல் நடக்காதீர்கள்

    சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் கால்களைக் காப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக்குள் நடமாடும்போதுகூட வெறுங்காலோடு நடக்காதீர்கள். காலணி அணிவது நல்லது. ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.

    பாதங்களில் ஏதேனும் கொப்புளங்கள், வெடிப்புகள், கீறல்கள், தோலுரிவது, நிறம் மாறுவது ஏற்பட்டிருக்கிறதா என்று தினமும் சோதனை செய்து பாருங்கள். குறிப்பாக விரல் இடுக்குகளைக் கவனியுங்கள்.

    தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிஷங்கள் பதிய வையுங்கள். நீரின் வெதுவெதுப்பை முழுங்கையால் உணர்ந்து பாருங்கள். ப்யூமிக் ஸ்டோன் கொண்டு கடினமான பாதங்களை மெல்ல தேயுங்கள். பின் இரு பாதங்களையும் சோப் கொண்டு கழுவுங்கள். நன்றாக உலர்த்திய பின் குதிகாலைச் சுற்றி எண்ணெய்ப் பசை கொண்ட நல்ல கிரீமைத்தடவுங்கள்.
    உடல் முழுவதையும் கால் தாங்குகிறது. எனவே காலில் அழுத்தம் அதிகம்.

    வாகனங்களுக்கு “ஷாக் அப்சார்ஃபர்’ உள்ளதுபோல் அழுத்தத்தைத் தாங்க பாதங்களுக்கு உதவ சிறப்புக் காலணிகளை (எம்சிஆர் காலணிகள்) அணியுங்கள். ஈரமான காலணிகளை அணியாதீர்கள்.

    காலில் ஆணியோ தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்டியெறிய முயற்சிக்காதீர்கள். மருத்துவரிடம் செல்லுங்கள். பாதங்களின் மேல் ஒத்தடம் தருவதற்காக சுடுநீர் பாட்டில்களையோ உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள்.

    புகை பிடிப்பதை விட்டு விடுங்கள். புகையிலை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கி கால்களுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இறுதியில் காலையே இழந்துவிடக் கூடிய அபாயம் ஏற்படக்கூடும்.

    நகம் வெட்ட கத்தரிக்கோல், பிளேடு, நகம் வெட்டி, கத்தி போன்றவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. நகத்தை வெட்டாமல் “அரம்’ கொண்டு தேய்த்துக் குறைப்பது நல்லது.

    தரையில் படுத்து உறங்காதீர்கள். பூச்சிகளும் எலி போன்றவைகளும் காலைக் கடிக்கும் ஆபத்து உண்டு. தரையில் அமரும்போது கால்களைக் குறுக்குவாட்டாக வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இப்படி அமர்வதின் காரணமாக நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களின் மீது அழுத்தம் ஏற்படலாம்.

    எப்போதும் நாற்காலியில் உட்காரப் பழகுங்கள்.
    வீட்டில் வெறுங்காலில் இருட்டில் நடக்காதீர்கள். வெளிச்சத்தில் நடக்கலாம். அதிக சூடு அல்லது கடும் குளிர்ச்சி இரண்டையும் தவிர்க்கவும். சூடான இடங்களில் கால் வைக்காதீர்கள். இரவில் பாதங்கள் குளிரால் ஜில்லென்று ஆகிவிட்டால் பருத்தி அல்லது கம்பளி காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

    ஷு போடும் போது நூறு சதவீதம் பருத்தியிலான காலுறைகளை அணிவதே நல்லது. அவை பாதங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தவேண்டும். எப்போதும் தோல் ஷுக்களையே அணியுங்கள். காலணிகள் சரியான அளவில் இருப்பது அவசியம். கூரான முனையுள்ள ஷுக்களைத் தவிர்த்துவிடுங்கள்.

    தினமும் காலணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஷுகள், காலுறைகளைச் சோதித்துப் பாருங்கள். உள்ளே தேவையற்ற பொருள்கள் ஏதேனும் இருக்கக் கூடும். அவற்றை அகற்றிவிடுங்கள். அதேபோல கழற்றும் போதும் ஒரு முறை பாதங்களைக் கவனித்துப் பாருங்கள். கால் தோலின் நிறம் மாறுதல், வலி எடுத்தல், எரிச்சல், ஊசி குத்துவது போன்ற உணர்வு, மதமதப்பு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.


  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    “சர்க்கரை': தினம் பாத பூஜை செய்ய மறந்துடாத

    “சர்க்கரை': தினம் பாத பூஜை செய்ய மறந்துடாதீங்க

    இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடி. உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி இந்த எண்ணிக்கை 2025-ல் 5.7 கோடியாக உயரும்.

    சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது.

    எனினும் சர்க்கரை நோய் காரணமாக கால்கள் பாதிக்கப்படுவோர் அதிகம். எங்கும் நகர விடாமல் ஆளை முடக்கி விடும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு. சர்க்கரை நோய் காரணமாகவே 40 முதல் 72 சதவீதம் பேர் கால்களை இழக்கின்றனர்.

    எனவே “சர்க்கரை நோயும் கால்களும்’ என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

    55 வயது ஆகும்போது…: உடலில் கால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகள், 19 தசைகள், 32 இணைப்பு மூட்டுகள் (Joints) உள்ளன. ஒருவர் 55 வயதை எட்டும் நிலையில், தனது வாழ்நாளில் 70 ஆயிரம் மைல்கள் நடந்திருப்பார். அதாவது உலகை இரண்டு முறை சுற்றிவருவதற்கு இத் தொலைவு சமம்.
    முக்கிய அறிகுறிகள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான அளவை (சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140 மி.கி.) தாண்டும்போது உடலில் கோளாறுகள் தெரிய ஆரம்பிக்கும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    உணர்ச்சி குறைதல்: ரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கும் நிலையில், கூடுதல் குளுக்கோஸ் ஆற்றலாக மாறாது; அது “சார்பிடால்’ என்ற வேதிப்பொருளாக மாறும். இந்த வேதிப் பொருள் கால்களில் உள்ள சிறு சிறு நரம்புகளைப் பாதிக்கத் தொடங்கும்.

    இதனால் காலில் உணர்ச்சி குறையத் தொடங்கும். உணர்ச்சி குறைவதால் காலில் ஏதாவது குத்தினால்கூடத் தெரியாது. இரவில் படுத்தவுடன் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். ஊசியால் குத்துவதுபோல் வலி இருக்கும். பகலில் நடக்கும்போது பஞ்சு மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும்.

    ஆடு சதையில் குடைச்சல்: ஒரு சில சர்க்கரை நோயாளிகளுக்கு ஆடு சதையில் குடைச்சல் ஏற்படும். கால் நரம்புகளின் பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து ஆடு சதையில் வலி உருவாகும். இவையெல்லாம் “சார்பிடால்’ வேதிப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகள். இவ்வாறு அதிக சர்க்கரை காரணமாக கால் நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு “டயபட்டிக் நியுரோபதி’ என்று பெயர். எனவே பாதத்தில் எரிச்சல் உள்பட அறிகுறிகள் தெரியத் தொடங்கிய உடனேயே மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


    சேற்றுப் புண்: தண்ணீரில் அதிகம் வேலை செய்வதால் பெண்களுக்கு கால் விரல் இடுக்குகளில் சேற்றுப் புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், கிருமிகள் புண்ணை ஆறவிடாமல் செய்துவிடும். எனவே சர்க்கரை நோய் உள்ள பெண்கள், விரல் இடுக்குகளில் புண் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். விரல் இடுக்குகளை அவ்வப்போது துடைத்து உலர்ந்த தன்மையோடு பராமரிப்பது அவசியம்.

    அலட்சியம் வேண்டாம்: பலவீனம் காரணமாகவே காலில் எரிச்சல், குடைச்சல், வலி ஏற்படுகிறது என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனெனில் மேற்சொன்ன அறிகுறிகளை “அறிவித்த’ பிறகு, ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு ஒரு காயத்துக்காகக் காத்திருக்கும்.

    பிரச்சினை ஏதுமில்லாமல் உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு காயம் ஏற்படும்போது, ரத்த வெள்ளை அணுக்கள் காயத்தைச் சூழ்ந்து போர் வீரர்களாகச் செயல்படும்;
    அதாவது வெளியிலிருந்து எக்கிருமியையும் காயத்துக்குள் அவை அனுமதிக்காது.

    ஆனால் அதிக சர்க்கரை அளவு காரணமாக காலில் காயம் ஏற்படும் நிலையில், ரத்த வெள்ளை அணுக்களின் போர்க் குணம் செயலிழந்த தன்மைக்குச் சென்று விடும். ஆக, வெளியில் உள்ள கிருமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சிறிய கீறல், சீழ் கொண்ட ஆறாத புண்ணாக மாறும்.

    நடக்க முடியாது: சிறிய கீறல், புண்ணாக மாறிய பிறகும் உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், காயம் ஏற்பட்ட பகுதி வீங்கத் தொடங்கும். நடக்க முடியாத கடும் வலி இருக்கும். தோலில் சிவப்புப் புள்ளிகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    அப்போதும் கவனிக்காத நிலையில், சீழுடன் கூடிய புண் உள்ள செல்கள் போரில் தோற்று மடியத் தொடங்கும். புண் ஏற்பட்ட இடம் மெதுவாக கருகி அழுகத் தொடங்கும். இவ்வாறு படிப்படியாக காயம் ஏற்பட்ட பகுதி அழுகும் நிலைக்கு “காங்கிரின்’ (Gangrene) என்று பெயர். அந்த இடத்தைத் தொட்டால் “ஜில்’லென்று இருக்கும்.

    இரண்டே நாளில்…: இவ்வாறு சிறு காயம், புண்ணாகி அழுகுவதற்கு இரண்டு நாள் அலட்சியம் போதும். காயம் ஏற்பட்ட பகுதியில் செல்கள் முழுவதும் அழுகி மடிந்துவிட்ட நிலையில், நோய்த் தொற்று மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க கால் விரலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். பாதம் முழுவதும் அழுகும் நிலையில் முழங்கால் வரை காலை அகற்ற வேண்டியிருக்கும்.

    காலைக் காக்க சிகிச்சை என்ன?

    ஆறாத காயத்துடன் நோயாளி வந்தவுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் முதலில் இன்சுலின் ஊசி மருந்து செலுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இன்சுலின் ஊசி மருந்து போட்டால்தான் காயம் விரைவாக ஆற ஆரம்பிக்கும்.

    காயம் ஆறுவதன் அறிகுறி என்ன?

    தோலுக்குள் உள்ள சீழின் அளவு குறைவாக இருந்தால் மாத்திரைகள் மூலமே கரைத்துவிட முடியும். மாறாக, சீழின் அளவு அதிகமாக இருந்தால், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த இடத்தைக் கீறி சீழை அகற்ற வேண்டியிருக்கும். காயம் நன்றாக ஆறும் வரை மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

    வீட்டுக்குத் திரும்பியவுடன் காயம் முற்றிலுமாக ஆறும் வரை அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் காயக் கட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்ய கீறிய இடத்தில் சிகப்பு நிறம் தெரிய ஆரம்பித்தால் காயம் ஆறிவருவதாகக் கொள்ளலாம். மஞ்சள் நிறம் இருந்தால் ஆறாமல் சீழ் இருப்பதாகக் கொள்ளலாம்.
    உயர்வான நிலையில்…: காயம் முழுவதும் ஆறும் வரை காலை உயர்வான நிலையில் தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இப்படி வைத்துக்கொண்டால் வலி இருக்காது.


    அதிக செலவு தேவையா?

    மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 100 சர்க்கரை நோயாளிகளில் 20 பேருக்கு கால் தொடர்பான பாதிப்புகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமல் கால்கள் பாதிக்கப்படும் நிலையில் குறைந்தபட்சம் 12 தினங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்க வேண்டியிருக்கும். இதனால் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். எனவே கால்களைச் சர்க்கரை நோயாளிகள் பாதுகாப்பதே சிறந்த வழியாகும்.

    சிறுநீரகங்கள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நிலையில் ஓசையின்றி சிறுநீரகங்களையும் தாக்கத் தொடங்கும். சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ளாத நிலையில் சர்க்கரை நோயாளிக்கு ஐந்து ஆண்டுகள் கழித்தே சிறுநீரகப் பாதிப்பு தெரியும். சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) ஏற்படும் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதற்கு சர்க்கரை நோயே காரணம்.

    எனவே சர்க்கரை நோயாளிகள் முன்னெச்சரிக் கையாக இருப்பதன் மூலம் சிறுநீரக செயலிழப்பை எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும். அதாவது, சர்க்கரை நோய் இருப்பது தெரிந்த உடனேயே சிறுநீரகங்களின் செயல்பாட்டைக் கண்டறிய சிறுநீர்ப் பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம்.

    சோதனை என்ன?

    காலையில் எழுந்தவுடன் முதலில் வெளியேற்றும் சிறுநீரைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனையில் “மைக்ரோ ஆல்புமின்’ என்ற புரதத்தின் வெளியேற்ற அளவு 30 மைக்ரோகிராம் வரை இருந்தால் ஆபத்தில்லை.

    இந்த அளவைத் தாண்டியிருந்தால் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதேபோன்று ரத்தப் பரிசோதனையில் யுரியாவின் அளவு 40 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் சிறுநீரகங்களைக் காத்துக்கொள்ள சிகிச்சை அவசியம்.

    உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகப் பாதிப்பும்: உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகப் பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்த அளவை உயர் நிலையில் 140 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் கீழ் நிலையில் 90 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் பராமரிக்க வேண்டும். இந்த அளவில் 1 எம்எம் கூடினால்கூட உஷார் அடைவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் தடுக்க “ராம்பிரில்’ என்ற சிறந்த மாத்திரை உள்ளது.

    மட்டன் வேண்டாம்: உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் புரதச் சத்து உள்ளது. வாரத்துக்கு இரண்டு நாள்கள் மீன் சாப்பிடலாம். வாரத்துக்கு ஒரு நாள் சிக்கன் சாப்பிடலாம்.

    புகை வேண்டாம்: புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக சிறுநீரகங்களின் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல், சிறுநீரில் ஆல்புமின் (புரதம்) அதிகமாக வெளியேறும் நிலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

    மூன்று தடவை…: சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் ஆறு மாதத்துக்குள் மருத்துவரின் பரிந்துரைப்படி இரண்டு அல்லது மூன்று தடவை சிறுநீரில் மைக்ரோ ஆல்புமின் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அப்பாதுதான் சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும்.


  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோய் எப்படி வருகிறது?

    பேராசிரியர் சு.அர்த்தநாரி

    மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று தொல்லையில்லா வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.
    சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:

    * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா?

    அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா?

    * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?

    * சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.

    * பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.

    முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம்,
    செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.

    சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
    நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரைப்பையை அடைந்தவுடன் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரைப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டர் செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

    சர்க்கரை நோய்:
    நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல்லாது ஆல்பாசெல், பீட்டாசெல் இந்த செல்களில் சுரக்கும் குளுகோகான் ஆல் பருத்து வருகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் பீட்டாவிலிருந்து வருகிறது.

    (ஏ) ஆல்பா செல் குளுகோனை சுரக்கிறது. இது சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகிறது.

    (பி) பீட்டா செல் (இன்சுலினை சுரக்கிறது). இது சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது.

    'ஏ'யும் 'பி'யும் தராசுத் தட்டுகள் போல சரியாக இயங்க வேண்டும். இதில் கோளாறு (ஏ) அதிகமாகி (பி) குறைந்தால் சர்க்கரை நோய் உண்டாகும்.

    சர்க்கரை நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டுமல்லாது இந்த குளுகான் கல்லீரலில் இருந்து சர்க்கரையை அதிகமாக்குகிறது. மற்றும் கொழுப்பு, புரதம் முதலியவற்றில் இருந்தும் சர்க்கரையை உருவாக்கி ரத்தத்தில் குளுகோஸை அதிகமாக்கி விடுகிறது.
    சர்க்கரை நோய் கண்டவர்கள் தினமும் நரகமாக, சந்தோஷத்தை தொலைத்து நோயை வேண்டா வெறுப்புடன் சரியாக கவனிக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பல. முக்கியமாக நாம் பயப்பட வேண்டிய உறுப்புகளில் உயிர் காக்கும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம், கண் இவைகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.

    கேசம் முதல் நகம் வரை:
    சர்க்கரை நோய் உச்சந்தலை கேசம் முதல் காலில் உள்ள நகம் வரை தாக்குகிறது. சர்க்கரை நோயை கண்ணுக்குத் தெரியாத மைக்ராக்ஸ் கோப் ரத்த நாளங்களின் வியாதி எனப்படும். இதை ஆஞ்சியோபதி என்பர்.

    மைக்ரோ ஆஞ்சியோபதி டயாபடிக் ரெட்டினோபதி கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவர் கொலஸ்டிரால் தாக்கப்பட்டு நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகிறது. இதனால் கண்ணின் உட்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு கண் பார்வையை பாதித்து நாளடைவில் பார்வை இழக்க நேரிடும்.

    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter