Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Quote Originally Posted by Dangu View Post
    Attached pdf of the above all posts.This may be very useful to our friends/members.
    Thank u @Dangu sir


    Sponsored Links
    Dangu likes this.

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

    'ஒரு சர்க்கரையில்லாத காபி கொடுங்க’, 'ஸ்வீட்... சின்ன பீஸ் போதும்’ - பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே உச்சரித்து வந்த வார்த்தைகள் இவை. ஆனால், இன்றைய இளைஞர்களும் ஹோட்டல், பார்ட்டி, பங்ஷன்களில் தித்திப்பு உணவுகளை அதிகம் தவிர்க்க...

    இப்போது தனியாக சர்க்கரை இல்லாத டீ கேன்களை விருந்துகளில் வைப்பது சகஜமாகிவிட்டது. காரணம், 'கசப்பான’ சர்க்கரை நோய்தான்.

    மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சர்க்கரை நோய் பற்றிய பயத்திலேயே பலரும் வாழ்கின்றனர். சர்க்கரையைக் கட்டுப்படுத்த வழி தேடி, கடைசியில் 'அறுகம்புல் ஜூஸ்’ விற்பவர் முன் போய் நிற்கிறார்கள். அரிசியைக் கண்டால் அலறுகிறார்கள். நடையோ நடை என்று நடக்கிறார்கள். 'சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. வாழ்க்கை முறையில் சின்னஞ்சிறு மாற்றங்களை செய்து கொண்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்'

    'சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உணவு விஷயத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை. சுவையான லட்டு, அல்வா சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எதை, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும்''

    உடல் எடை
    உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவேண்டும். உடல் எடை சற்று அதிகமாக இருந்தால், ஐந்து அல்லது 10 சதவிகிதம் எடையைக் குறைப்பது கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன். உடலில் உள்ள எல்லா கொழுப்பும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதில்லை. கொழுப்பு எங்கே அதிகம் படிகிறது என்பதுதான் முக்கியம். அதிலும், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு ஆபத்தானது. இப்படி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்திருப்பவர்களை 'ஆப்பிள்’ டைப் என்போம். இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ.க்குக் கீழும், பெண்களுக்கு 80 செ.மீ.க்குக் கீழும் இருக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உணவு
    சாப்பிடும் உணவைத் திட்டமிடுவது அவசியம். தட்டில் ஊட்டச்சத்து நிறைவாகவும், கொழுப்பு மிகமிகக் குறைவாகவும், கலோரி தோராயமான அளவிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இலையின் ஒரு பகுதியில் சாதத்தை அதிகமாகவும், மற்றொரு பகுதியில் காய்கறியை வைத்தும் சாப்பிடுவோம். இலையைத் திருப்பி காய்கறிகள் அதிகமாகவும், சாதம் குறைவாகவும் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கரிப்பதில் கார்போஹைட்ரேட்டுக்குதான் முக்கிய பங்கு இருக்கிறது. எது எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளதோ அது எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. உணவில் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, வண்ணங்களைச் சேர்க்கலாம்.

    வயிறு நிறைய பயிறு
    முடிந்தவரை சமைக்காத இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது, எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம். வயிறு நிறைய முளைவிட்ட தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள என்சைம்கள் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலைப் பாதுகாக்கும். மேலும், நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். இதனால், நம் உடல், சர்க்கரையைக் கிரகிக்கும் வேகம் குறையும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆப்பிள், கேரட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சர்க்கரையை மட்டுமல்ல, ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கும்.

    வீட்டு உணவு
    வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செய்யப்படும் உணவுகளில் சுவையூட்டிகள், நிறமேற்றிகள் உள்ளிட்ட பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் சுவைமிக்கதாக இருந்தாலும், அதில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன. அவற்றில், கார்போஹைட்ரேட்தான் அதிக அளவில் உள்ளது. வீட்டில் என்ன சமைக்கிறோம்; அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு தவிர்க்கப்படும். உணவை பொறுமையாக மென்று சாப்பிடவேண்டும். போதும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு சாப்பிட வேண்டாம். கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.

    உடற்பயிற்சி
    அன்றாட உடற்பயிற்சி நோயின் தீவிரத்தைக் குறைத்து, எதிர்காலத்தில், சர்க்கரை நோய் ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் செலவிடப்படும் கலோரி காரணமாக உடல் எடை குறைகிறது. இதனால், உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. உடற்பயிற்சியானது இன்சுலின் ஏற்புத் தன்மையை (சென்சிடிவிட்டி) அதிகரிக்கிறது. தொடர் உடற்பயிற்சியால் கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமும் குறைகிறது. எனவே, தினமும் உடற்பயிற்சிக்கு என்று நேரத்தை செலவிடுவது அளவில்லா ஆரோக்கியத்தைத் தரும்.

    சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...

    1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

    3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.

    4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.

    5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.

    "நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."
    உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...
    "உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."
    எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...



    Attached Thumbnails Attached Thumbnails All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-10455692_780598248676975_175258940028731462_n.jpg  
    jv_66, sarjana ul and Dangu like this.

  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவுக்கேற்ற காலை உணவு

    உலகளவில் நாம் எதில் மற்ற தேசங்களை விட முன்னேறியிருக்கிறோமென்றால் அது நீரிழிவு வியாதியில் தான்! இந்தியாவும் சீனாவும் மாறி மாறி, உலகிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளை கொண்ட தேசம் என்ற "பெருமையை" அடைகின்றன. இந்தியா நீரிழிவு எனும் பேராபத்தின் உச்சியில் இருக்கிறது. தற்போது 50 மில்லியன் (ஒரு மில்லியன் - 10 லட்சம்) களுக்கு மேல் "தெரிந்த" நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். நீரிழிவை தெரியாமலேயே 'அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்' இன்னும் எத்தனை பேரோ? 2030 ல் நோயாளிகளின் எண்ணிக்கை 80 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி அதனுடன் வாழ முடியும் இதற்கு மருந்துகள் மட்டும் போதாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா - இவைகள் மிக, மிக அவசியம்.

    உணவுக்கட்டுபாட்டின் லட்சியங்கள்
    ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது
    உடல் எடை ஏறாமல் இருப்பது
    உடலின் குளூகோஸ் அளவுகள் 'ஏறுமாறு' ஆகக் கூடாது.

    உணவு நியமங்கள்
    எந்த ரூபத்திலும் இனிப்புகள், சர்க்கரைகள் கூடாது. இவை சேர்ந்த, சார்ந்த உணவுகளும் கூடாது.
    எந்த விதமான கஞ்சி, கூழ், களி சேர்த்துக் கொள்ளக் கூடாது.
    காலை உணவை தவிர்க்கக் கூடாது.

    வறுத்த, பொரித்த உணவுகள்

    பூரி, பஜ்ஜி, போண்டா, வடை, முறுக்கு முதலியவற்றை - தவிர்க்கவும். நெய்யின் அளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நல்லது.

    தினமும் 1 (அ) 2 டம்ளர் பால், ஒரு கப் தயிர் இவற்றை எடுத்துக் கொள்ளவும்.

    சில உப்பில்லாத பாதாம் பருப்பு போன்ற கொட்டைகளை (3 அ 4) எடுத்துக் கொள்ளலாம்.

    நேரத்திற்கு உண்ணவும்.

    உணவில் உப்பையும் எண்ணெய்யையும் குறைக்கவும்.

    காலை உணவின் அவசியம்

    நாளும் நாம் உண்ணுகின்ற உணவில் காலை உணவு ஒரு தனியிடத்தைப் பெறுகிறது. நாள் ழுழுதும் தேவைப்படும் திறனை, சக்தியை அளிக்க வல்லதாக இவ்வுணவு அமைவது அவசியம். உடலுக்குத் தேவையான புரதச் சத்தும், மாவுச்சத்தும், கனிமச் சத்தும் விட்டமின்களும் கொண்ட சமச்சீர் உணவாக இது அமைய வேண்டும்.

    இரவு முழுவதும் குறைந்த குளூக்கோஸ் அளவில் சமாளிக்கும் மூளை, காலையில் எழுந்தவுடன், குளூக்கோஸை தேடும் - அப்போது காலை உணவு உட்கொண்டால் மூளையின் சக்தி தேடல் திருப்தியாகும். அந்த சமயத்தில் உணவுச்சக்தி கிடைக்காவிட்டால் மூளை வேறிடங்களிலிருந்து (கல்லீரல் போன்ற) கொழுப்பு, புரதம் இவற்றை கொண்டு சமாளிக்க இயலும். நாளடைவில் மூளை சோர்ந்து விடும். பல வியாதிகள் உருவாகும். எனவே காலை உணவு அவசியம். காலையில் 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள் காலை உணவு எடுப்பதே நல்லது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சில காலை உணவுகள்

    ப்ரெட் சாண்ட்விச், இட்லி, தோசை (தொட்டு கொள்ள மிளகாய் பொடி (அ) சாம்பார், சட்னி (தேங்காயில்லாமல்), அப்பமும் வெங்காய சட்னியும், இடியாப்பமும் சாம்பார் / சட்னி, சேவையும் சாம்பார் / தக்காளி சட்னி, உப்புமா இவற்றுக்கு மாற்று உணவுகள் சப்பாத்தி, வெஜிடபிள் உப்புமா, பொங்கல், கோதுமை ரவை உப்புமா. சூப்புடன் காலை உணவை ஆரம்பிப்பது நல்லது.



    jv_66, sarjana ul and Dangu like this.

  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    புரிந்து கொண்டால் தவிர்ப்பது எளிது

    சர்க்கரை நோயினருக்குச் சர்க்கரை என்ற மாவுப் பொருளும், உயர் இரத்த அழுத்த நோயினருக்கு உப்பும், கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு கொழுப்பும் ஏற்றவை அல்ல. இதை எப்படி அறிவது.

    உயர் இரத்த அழுத்தம் உப்பு ஏற்றதல்ல - எந்த உணவுப் பொருளின் லேபிளில் சோடியம் என்ற சொல் சேர்க்கப்பட்டிருந்தால் குத்துமதிப்பாக அதில் உப்பு உள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.

    சோடியம் குளோரைடு, அஜினமோட்டோ அல்லது மானோ சோடியம் குளுடாமேட் Cal.disodium phosphate தாவரக் கொழுப்பு, சீஸ், முட்டை குளிரூட்டப்பட்டது.

    சர்க்கரை நோயினர் ஜீனி ஏற்றதல்ல - வெல்லமும், ஜீனியும் தான் சர்க்கரைச் சத்து என்பதல்ல. மென்பானங்கள், மால்டுகள், சாக்லெட்டுகள் போன்றவை தவிர சுக்ரோஸ், மால்டோஸ், குளுகோஸ், லாக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், தேன், ஃப்ரக்டோஸ் மால்ட், டெக்ஸ்ட்ரின் என்ற எல்லாமே சர்க்கரை தான்.

    கொலஸ்ட்ரால் / உடல் எடை கூடியவர் செரிவுற்ற கொழுப்பு () ஏற்றதல்ல & தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், வெஜிடபிள் ஆயில், டால்டா, நெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சிக் கொழுப்பு, பட்டர், சீஸ், க்ரீம், முட்டை மஞ்சள்



    jv_66, sarjana ul and Dangu like this.

  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    பழங்களும், உடல் நலமும்- சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டடியவை
    பழங்கள் நிறையச் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படுமென்று அனேகர் மற்ற உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுகின்றனர். இது தவறான கருத்தாகும். இது கேடு விளைவிக்கும். உதாரணமாக வயிற்றில் வலி ஏற்படலாம். பான்கிரியாட்டிஸ் (Parncreatitis) யென்ற வியாதி ஏற்படலாம். மேற்கொண்டு நகங்கள், பற்கள், பழுது படலாம். தோல் வரண்டு காணப்படும். தலைமுடி சேதமடையும். சிகப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும். ஹீமோகுளோபின் அளவும் குறையும். பல் ஈறுகள் வீங்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மனதில் உணர்ச்சி பூர்வமாக பாதிப்புகள் ஏற்படும். வைட்டமின் பி.12, குறைபாடு ஏற்படும்.

    பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாகயிருப்பதால், சர்க்கரை நோய் ஏற்படலாம். சோடியம் அளவு குறையும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். சரிவிகித உணவுயில்லாததால் மயக்கம் கூட ஏற்படலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டடியவை

    சர்க்கரை நோய் தொல்லை தரும் நோய்களில் ஒன்று. முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப்பபாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் - மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு.

    சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம் கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் போவது. இதனால் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்தில் தங்கி விடும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

    சர்க்கரை நோயில் இரு அடிப்படை பிரிவுகள் உள்ளன. தினமும் கட்டாயமாக இன்சுலீனை ஊசி மூலம் ரத்தத்தில் ஏற்றி கொள்ளும் நிலைமையான டைப் - 1 ஒன்றும், மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும் நிலைமை டைப் - 2 என்றும் சொல்லப்படுகிறது.

    சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாட்டின் அவசியம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதொன்று. உடல் பருமன் அளவுக்கு மீறி இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.


    சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், வெல்லம், ஜாம், தேங்காய் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், டால்டா, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட், கோகோ கோலா, பெப்ஸி, லிம்கா, மால்ட்டோவா, ஃபேண்டா போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு கூடாது. வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால், மாம்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், பலாப்பழம், திராட்சை ஆகியவற்றை தவிர்க்கவும்.

    நிறைய சேர்க்க வேண்டிய காய்கறிகள்: வாழைத்தண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டை, பீர்க்கை, வெள்ளைப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், பரங்கி, குடைமிளகாய், கோவைக்காய், டர்னிப், சௌசௌ.

    சேர்க்க வேண்டிய கீரை வகைகள்: முருங்கை, மணதக்காளி, பசலை, கொத்தமல்லி, புதினா, சிறுகீரை, பருப்பு கீரை, அகத்தி கீரை, முளைக்கீரை, புளிச்சகீரை.

    மிதமாக வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்:

    பட்டாணி, சுண்டைக்காய், கேரட்.

    மாதம் இருமுறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்:
    கிழங்கு வகைகள், சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை, வாழைக்காய், டபுள்பீன்ஸ் விதை போன்ற வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.

    தினமும் சேர்க்கக் கூடிய பழ வகைகள் ஏதாவது ஒன்று மட்டும்:
    (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)

    1/2 ஆப்பிள், 1 சாத்துக்குடி, பச்சை வாழைப்பழம் 1/2 மட்டும், தக்காளி 1 சிறியது, கொய்யாப்பழம் சிறியது 1, மலைவாழைப்பழம் 1, ஆரஞ்ச் 1.

    வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய பழங்கள்:
    (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)

    பச்சை திராட்சை 10 லிருந்து 15, பப்பாளி, தர்பீஸ், கிர்ணிபழம் - 100 கி, மாதுளை 1.

    தாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்:
    வெள்ளரி, எலுமிச்சம்பழம், மோர், வெஜிடேபிள் சூப், உப்பிட்ட ஊறுகாய் (எண்ணெய் இல்லாமல்)

    பயன்படுத்தக் கூடிய எண்ணெய்கள்:
    நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ரீஃபைண்ட் எண்ணெய்.

    அசைவம் சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்:
    முட்டை 1 (வெள்ளைக் கரு 2 மட்டும்), மீன் 2 துண்டு அல்லது கோழிக்கறி ( தோல் நீக்கியது) 100 கிராம் (5 துண்டு) அல்லது ஆட்டுக்கறி 100 கிராம் ( 5 துண்டு).


    jv_66, sarjana ul and Dangu like this.

  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோய் சந்தேகங்கள்

    மிகவும் அதிகமாக எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட வியாதிகளில், சர்க்கரை வியாதியும் ஒன்று. இருந்தும் பல சந்தேகங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. இவைகள் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள். இவற்றில் சில

    சர்க்கரை நோயாளிகலிடமிருந்து மற்றவருக்கு பரவுமா?

    இல்லை. ஜலதோஷம், ஃபளூ போல் மற்றவர்களுக்கு பரவாது, பரம்பரையாக வரலாம். மரபணுகோளாறுகளினாலும் வரலாம். வாழ்க்கை முறையாலும் ஏற்படலாம். ஆனால் தொற்று நோயல்ல.

    அதிகமாக இனிப்புகளை சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வரும்

    சர்க்கரை வியாதி மேற்சொன்னது போல், பாரம்பரியம், மரபணுகோளாறு, வாழும் முறை இவைகளால் ஏற்படும். இனிப்பு சாப்பிடு வதால் மட்டும் வராது. ஆனால் இனிப்பு சாப்பிடுவது, ஓரளவுக்குமேல், ஒர்வயதிற்கு மேல், நல்லதல்ல, உடல் எடை கூடும். இதனால் டைப் 2 டயாபிடீஸ் வரலாம். உங்கள் குடும்பத்தில் சர்க்கரை வியாதி இருந்தால், இனிப்பை குறைப்பது மட்டுமல்ல, சரியான உணவு முறை அவசியம்.

    சர்க்கரை நோயாளிகள் இனிப்பையே தொடக்கூடாது.

    ஆரோக்கிய உணவுடன், உடல் பயிற்சி களினாலும், மருந்துகளினாலும் சர்க்கரை லெவலை கட்டுப்படுத்தி வரும் நோயாளிகள், ஆரோக்கிய உணவின் ஓர் அங்கமாக இனிப்பை சேர்த்துக் கொள்ளலாம் அளவுடன்.

    பழங்கள் ஆரோக்கியமானவை. சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    பழங்களில் உள்ள நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆரோக்கியமானவை. பழங்களில் கார்போஹைடிரேட்டும் உள்ளது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்த பழங்களை சாப்பிட வேண்டுமென்பதை உங்கள் டாக்டரே தான் தீர்மானிக்க வேண்டும்.

    சர்க்கரை நோயாளிகள் விளையாட்டுக் களில் ஈடுபடமுடியாது.

    தவறு. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாஸிம் அக்ரம் ஒரு உதாரணம். இவர் டைப் - 1, இன்சுலீன் சார்ந்த நோயாளி. இவர் சிறப்பாக ஆட வில்லையா? சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்ச்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. 'ஆக்டிவ்' ஆக இருப்பது பல சிக்கல்களை, இதய நோயை, தடுக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் போகப்போக கண்பார்வை இழந்து குருடாவர்கள்

    கண்கள் பாதிக்கப்படுவது சர்க்கரை வியாதியின் ஓரு கெடுதலான விஷயம் தான் ஆனால் உங்கள் சர்க்கரை லெவல், ரத்த அழுத்தம், உடல் எடை கன்ட்ரோலில் இருந்தாலும், புகை பிடிப்பது இல்லாமல், தேவையான உடலுழைப்பு, உடற்பயிற்ச்சி இருந்தால் கண்கள் காக்கப்படும்.

    சர்க்கரை வியாதி இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

    வேண்டாம். ரத்தம் கொடுக்கும் போது மயக்கம், தாழ் சர்க்கரை நிலை ஏற்படலாம். வைரஸால் கூட நீரிழிவு நோய் வரலாமென்ற கருத்தும் இருப்பதால், ரத்த தானம் செய்ய நீரிழிவு நோயாளிகள் ஏற்றவர்கள் அல்ல.

    சர்க்கரை வியாதி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

    கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக முக்கியமான உணவு.

    நீரிழிவு வியாதி பெண்கள் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாமா?

    உபயோகிக்கலாம்.

    சர்க்கரை வியாதி உடைவர்கள் மதுபானங்களை குடிக்கலாமா?

    சாதாரணமானவர்களுக்கே மதுபானம் கெடுதல். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு கெடுதல் தான் செய்யும். பல மதுபானங்களில் சர்க்கரை இருக்கும். மிதமாக அருந்தலாம் என்று சில டாக்டர்கள் சொன்னாலும், அறவே தவிர்ப்பது நல்லது. டயாபிடீஸ் ரத்த அழுத்தத்தை உண்டாக்க கூடிய வியாதி. மது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். தவிர கல்லீரல் குடியால் கெட்டு விடும். மூளையும் குடியால் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் மதுபானத்தை தவிர்க்க வேண்டியதின் இன்னொரு காரணம் - அவர்கள் சாப்பிடும் மருந்து சர்க்கரை அளவை குறைக்கும் ("குளுக்கோபே" க்ளூகோஸ்) மருந்துகளுக்கு மதுபானங்கள் ஒத்துக் கொள்ளாது. அப்படி சாப்பிட்டால் தீடிரென்று சர்க்கரை அளவு குறைந்து விடலாம். தாழ்நிலை சர்க்கரை ஆபத்தானது. தவிர மதுபானங்கள் 'லேக்டிக் அசிடோஸை' (அதிக அளவு லாக்டிக் அமிலம்) உண்டாக்கும்.




    jv_66, sarjana ul and Dangu like this.

  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    கண்களைக் கவரும் நீரிழிவு

    நீரிழிவு நோயினால் உடலின் பல உறுப்புக்களும் பாதிக்கப்படும் என்றாலும் அதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கண்கள் தான். நீரிழிவினால் கண்ணில் நுண்ணுயிரித் தொற்று (Conjunctivitis - Iritis) கிளாக்கோமா (Glaucoma) எனப்படும் கண் விழி மிகுந்த அழுத்தம், புரை எனப்படும் காட்ராக்ட் (Cataract) போன்ற பலதரப்பட்ட கண் குறைபாடுகள் தோன்றலாம் என்றாலும் அவற்றிலெல்லாம் பெரிதும் தீங்கு விளைவிக்கக் கூடியது டயாபடிக் ரெடினோபதி (Diabetic Retinopathy) எனப்படும் விழித்திரை நோய் தான்.

    நீரிழிவு நோய் கண்களில் உள்ள எல்லாப் பகுதிகளையுமே பாதிக்கின்றது. அதனால் வேதனையோ வலியோ ஏற்படாமல் கண்பார்வை சிறுகச் சிறுகப் பாதிக்கப்படுகிறது. என்றாலும் டயாபடிக் ரெடினோபதி எனப்படும் விழித்திரை நோய் விழித் திரையைப் பாதித்துப் பார்வையை முற்றிலுமாகப் பறித்து விடக் கூடியது. ஆராய்ச்சிகளின் மூலம், 20 ஆண்களுக்கு மேலாக நீரிழிவு உள்ளவர்களில் 70% ரெடினோபதிக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் அனைவரது விழித்திரைகளும் குறிப்பட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கப்பட வேண்டும். இது மிகவும் அவசியம்.

    நீரிழிவு விழித்திரை நோய் வகைகள்
    முதல் வகை பின்புல விழித்திரை நோய் (Background Retinopathy). இந்த வகையில் ரத்தகுழாய் மிக சிறிய அளவில் விரிவடைவதால் (Aneurysm) மற்றும் மிகச்சிறிய 'புள்ளி'கள் போன்று விழித்திரையில் ரத்தக் கசிவுகள் தோன்றும்.

    தொடக்க நிலையில் தொல்லை எதுவும் இதனால் ஏற்படுவதில்லை. ஆனால் நீரிழிவு உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். என்பதற்கு இது ஒரு அபாய அறிவிப்பு ஆகும். நீரிழிவு நோயினர் இதைக் கவலையுடன் கருத்தில் கொள்ள வேண்டும். சிலரது கண்களில் கசிகின்ற திரவம் கண்ணில் காணும் பகுதி (Seeing Portion) யாகிய மாக்குலா (Macula) எனப்படும் விழித்திரையின் மையப்பகுதியில் சேர்ந்து விடக் கூடும். இதற்கு மாக்குலோபதி (Maculopathy) என்று பெயர். இதனால் பார்வை தெளிவற்றுப் போவதுடன் விரைந்து பார்வை இழப்பில் போய் முடியவும் கூடும். இந்த நிலை ஏற்படுகின்ற போது நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. அத்துடன் ஒழுக்கினைக் கட்டுப்படுத்துவதற்கு லேசர் ஒளிவழி உறைவு முறை மருத்துவம் (Laser Phoyocoagulation) செய்ய வேண்டும்.

    விழித்திரையிலிருக்கும் இரத்தக் குழாய்களில் இருந்து இயல்பு கடந்த (abnormal) புது இரத்தக் குழாய்கள் சில முளைத்துக் கிளைக்கும் போது (Outgrowth of normal blood vessels) அதை உயிர்மப் பெருக்க விழித்திரை நோய் (Proliferative Retinopathy) என்கின்றனர். புதிதாகத் தோன்றிய இரத்தக் குழாய்களின் சுவர்கள் எளிதி நொறுங்கக் கூடியவைகளாக இருப்பதால் அவற்றிலிருந்து இரத்த ஒழுக்கு எந்த நேரமும் ஏற்படக் கூடும். எனவே புதிய இரத்தக் குழாய்கள் கண்ணில் தோன்றக் கூடிய அறிகுறி தென்பட்டதுமே லேசர் ஒளிவழி உறைவு செய்யப்படவேண்டும்.

    சில நீரிழிவுக்காரர்களுக்கு விழித்திரை முழுவதுமே புதிய இரத்தக் குழாய்கள் பல தோன்றியிருந்தும் அவர்கள் அது பற்றிய விபரம் எதுவுமே தெரியாது இருக்கக் கூடும். இந்த இரத்தக் குழாய்களிலிருந்து பெருமளவு இரத்தப் பெருக்கு ஏற்பட்டுக் கண் முழுவதுமே திரவப் படலத்தில் முழ்கடிக்கப்படுகின்ற வரை கண் பார்வை ஒரளவு தெரியக்கூடும். ஆனால் இந்த அபாயம் எந்த நேரத்திலும் நிகழலாம். அவ்வாறு நிகழாவிட்டால் கண்ணில் நார்க்கற்றைகள் (Fibrous bands) ஏற்பட்டு விழித்திரையின் இணைப்பை விடுபடச் செய்து (Retinal detachment) கண்பார்வையை இழக்கச் செய்து விடும்.

    பார்வையின்மையைத் தவிர்க்கும் முறை
    நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முற்றிலும் அவசியமானது. நீரிழிவுக்காரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது விழித்திரைகளைச் சோதித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே விழித்திரையில் மாறுதல்கள் இருக்குமானால் இன்னும் குறைந்த கால இடைவெளியில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். பின்புலம் சார்ந்த விழித்திரை நோய் இருக்குமானால் மிகுந்த விழிப்புடன் நீரிழிவு கட்டுப்படுத்தபடுவதுடன் ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உயிர்மப் பெருக்க விழித்திரை நோய் அல்லது மாக்குலோபதி விழித்திரை இருக்குமானால் நீரிழிவுக் கட்டுபாட்டு மருததுவம் மட்டும் போதாது. லேசர் ஒளிவழி உறைவு முறை மருத்துவமும் செய்யப்படவேண்டும். லேசர் ஒளிக்கற்றைகளை விழித்திரை மேல் படுமாறு செலுத்தித் தீய்த்து விடுகின்ற முறையே இது. இதனால் வலியோ வேதனையோ ஏற்படாது என்பதுடன் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. வெளிநோயாளிகளாக இருந்து கொண்டே இதைச் செய்து கொள்ள முடியும். நீரிழிவினால் ஏற்படக் கூடிய விழித்திரை நோய்க்கு லேசர் ஒளிவழி உறைவு முறை ஒரு திறன் மிக்க மருத்துவமாகும். எனவே கண்களை நீரிழிவு கவர்ந்து கொள்ளும் முன்னர் காத்துக் கொள்வது தான் அறிவுடைமை.




    Attached Thumbnails Attached Thumbnails All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-kanai-kavarum-neerizhu-212.gif  
    jv_66, sarjana ul and Dangu like this.

  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    விழியே...விடைபெற்று விடாதே! -சுகர் ஸ்மார்ட்


    1. நீ என் இன்சுலினை போலவேதான்...

    நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது!

    - டயாபடீஸ் காதல் வரிகளிலிருந்து...

    சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உச்சி (முடி உதிர்வது) முதல், பாதம் (புண் ஏற்படுவது) வரை பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், கண்களில் ஏற்படும் பாதிப்புகள் முக்கியமானவை. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவினால் எந்த அளவுக்கு கண்கள் பாதிக்கப்படும்? இதனால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை குணமாக்குவது எப்படி? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்குப் பதில்களை பகிர்ந்து கொள்கிறார் கண் மருத்துவர் மற்றும் விழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.



    முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 4 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால்தான் இந்தியாவை நீரிழிவு நோயாளி களின் தலைநகரம் என்கிறார்கள். இந்தியாவில், நகர்ப்புற நீரிழிவு நோயாளிகளில் 2 சதவிகிதத்தினருக்கு விழித்திரைப் பாதிப்பு உள்ளது. சென்னையில் மட்டுமே 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது.

    கண்களில் ஏற்படும் முக்கியமான பாதிப்புகள்...

    கண்ணீர் ஓட்டம் குறைந்து கண்கள் உலர்தல்.

    கண்புரை (கேட்ராக்ட்) உருவாகுதல்.

    க்ளாக்கோமா என்ற கண் நரம்பு

    அழுத்த பாதிப்பு தோன்றுதல்.

    விழித்திரை பாதிப்பு.

    விழித்திரையில் இருக்கும் ரத்தக்

    குழாய்களில் அடைப்பு ஏற்படுதல்.


    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு டயாபட்டிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை கோளாறு தோன்றுகிறது. அதில் பெரும்பாலானவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். விழித்திரை பாதிப்பு எப்படிஏற்படுகிறது? சர்க்கரை நோய் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் ரத்த ஓட்டம் குறையும்.

    அப்போது விழித்திரைக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் பலவீனமாகி, ரத்தத்தில் இருக்கும் நீர் கசிந்து வெளியேறி, திசுக்களில் கலந்து சொதசொதப்பாக ஆகிவிடும். சிலருக்கு ரத்த மும் கசிந்து வெளியேறும். ஆரம்ப நிலையில் நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் தெரியாது. பார்வையும் மங்காது. வழக்கமான கண் பரிசோதனைக்கு சர்க்கரை நோயாளிகள் செல்லும்போது, அவர்களுக்கு இன்டைரக்ட் ஆப்தமோல்ஸ்கோபி பரிசோதனை செய்தால், தொடக்கத்திலே பாதிப்பை கண்டறிந்துவிடலாம்.

    முதலிலேயே கண்டறிந்தால் சிகிச்சை எளிது.விழித்திரை நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, ரத்தக் குழாய்கள் உடைந்து கண்களுக்குள்ளே ரத்தம் சிதறி, பார்வை மங்கிய பின் வந்தால், அது நோயாளிகளுக்கு சிரமமான சிகிச்சையாகிவிடும். டைப் 1 நோயாளிகள் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டு சில வருடங்கள் கழித்து கண்களையும் பரிசோதிப்பது அவசியம். டைப் 2 நோயாளிகள் எப்போது சர்க்கரை நோய் கண்ட றியப் படுகிறதோ, அப்போதிருந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்டறிய பண்டஸ் ஃப்ளோரெசின் ஆஞ்சியோகிராபி என்ற பரிசோதனை உள்ளது. ஃப்ளோரெசின் என்ற டையை கை நரம்பில் செலுத்த வேண்டும். அது விழித்திரை நரம்பு களை சென்றடையும். அதன் மூலம் விழித்திரை நரம்புகள் எப்படி இயங்குகின்றன? அவற்றில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது? எங்கெங்கு அடைப்பு, கசிவு இருக்கிறது என்பதை அறியலாம்.

    ஓ.சி.டி. என்ற ஆப்டிகல் கோகரன்ஸ் டோமோகிராபி பரிசோதனையைப் பயன்படுத்தி கண்களைத் தொடாமலே திசுக்களின் மாதிரியை சேகரித்துவிடலாம். லேசர் கதிர்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சோதனை நடக்கும். இது விழித்திரை நரம்புகளின் அடர்த்தியை பலவிதங்களில் ஆய்வு செய்து, பாதிப்பை படங்களாக்கித் தரும். அடுத்து பி ஸ்கேன் (B Scan)... அல்ட்ரா சவுண்ட் அலைகளை செலுத்தி விழித்திரை ஒட்டியிருக்கிறதா அல்லது பிரிந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் சோதனை இது.

    இப்பரிசோதனைகளை செய்து, பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிந்த பின், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உலர வைத்தல், உறிஞ்சி எடுத்தல், ஆபரேஷன் செய்தல் ஆகிய மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன.விழித்திரை ரத்தக்குழாய்களில் இருந்து நீரோ, ரத்தமோ கசிந்திருந்தால் லேசர் சிகிச்சை மூலம் அதை உலர வைத்துவிடலாம்.

    சில நிமிடங்களிலேயே இந்த சிகிச்சை முடிந்துவிடும். பச்சை நிற கதிர்கள் லேசர் மூலம் பாயும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியாக கணித்து, அதில் சரியான முறையில், தேவைப்படும் இடைவெளியில் லேசர் கதிர்களை பாய்ச்சுவதே இச்சிகிச்சை முறை.

    உலர வைப்பதற்கு பதில் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையையும் டைப் 1 நோயாளிகளுக்கு வழங்கப்படும். விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்டறிய கண்களுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன் போன்ற இச்சிகிச்சையை விழித்திரையில் மேற்கொள்ளலாம். நீரோ, ரத்தமோ கசிந்திருக்கும் பகுதியை கண்டறிந்து, அதற்குரிய மருந்தை செலுத்தி, நவீன ஊசியை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்க வேண்டும்.

    கசிந்த ரத்தம் விழித்திரையில் உறைந்து கட்டிபோல ஆகியிருந்தால், அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு விட்ரெக்டமி என்று பெயர். விழித்திரை என்பது வளரும் தன்மை கொண்டது அல்ல என்பதையும் சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டும். விழித்திரை யில் இருக்கும் ஒரு திசு இறந்து போனால் கூட, அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.

    அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது. அதனால் சர்க்கரை நோயாளிகள் விழித்திரை தொடர்புடைய பரிசோதனைகளை தவறாமல் செய்து, பாதிப்பு இருப்பின், உடனே சிகிச்சை எடுக்கவேண்டும்.

    குறிப்பாக விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று பரிசோதிப்பது மிகவும் நல்லது. சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் பார்வை இழப்பில் இருந்து தப்பி விடலாம்.

    நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல... 40 வயது கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று கண் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண் பிரஷர் அதிகமானால் பார்வைக் குறைபாடு ஏற்படும். எஃப்.எஃப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாளக் கோளாறுகளை அறிய முடியும். இப்பரிசோதனைக்குப் பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். என்ற ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாளக் கோளாறு குணமாகும்.

    விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க ஊசி மூலம் சிலிகான் ஆயில் செலுத்தப்படும். இது விழித்திரையை பலப்படுத்தும் என்று லேட்டஸ்ட் சிகிச்சை முறைகளையும் விளக்கிய டாக்டர் வசுமதி வேதாந்தம், இறுதியாகச் சொல்கிற விஷயம் எல்லோருக்குமானதே!சர்க்கரை நோயாளிகள் கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முக்கியமாக என்ன செய்ய வேண்டும்?
    வாரத்தில் 5 நாட்களாவது உறுதியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்!


    Last edited by chan; 19th Mar 2015 at 12:36 PM.
    jv_66, sarjana ul and Dangu like this.

  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ஸ்வீட் டேட்டா

    டைப் 1 வகை நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால், அவர்களது பார்வை 100 சதவிகிதம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. டைப் 2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால், 30 சதவிகிதத்தினரின் பார்வை கடுமையாகப் பாதிக்கப் படக்கூடும்.

    விழித்திரையில் இருக்கும் ஒரு திசு இறந்து போனால் கூட, அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது.

    2. பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?
    உங்கள் பாதங் களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு பாதங் களையும் தினந்தோறும் பரிசோதித் துக் கொள்ளுங்கள். கால் விரல்களுக்கு இடையிலும் கூட... தேவையெனில் வேறு யாராவது ஒருவரின் உதவியை நாடுங்கள். பாதங்களின் கீழ்ப்பகுதியைப் பார்க்க நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்தலாம். உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது பாதங்களை பரிசோதிக்குமாறு கூறுங்கள்.

    வீக்கமாக உள்ள அல்லது சிவந்து போய் இருக்கும் பகுதிகள், வெடிப்புகள், வெட்டுகள் அல்லது சிராய்ப்புகள், வறண்டு போன சருமத் தழும்புகள், ஜில்லென்று குளிர்வாக உள்ள பகுதிகள் (ரத்த ஓட்டம் தாழ்வாக இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது) அல்லது மிகவும் சூடாக இருக்கும் பகுதிகள் (உடலின் அப்பகுதி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது) என ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் பாதங்களை தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீரில் (சுடுநீர் வேண்டாம்) நன்றாக சோப்பு போட்டு கழுவவும். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள்.தினமும் இருமுறை உங்கள் ஷூக்களை சோதித்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது ஒரு பொருள் இல்லாதபடி ஷூக்களை மேலும் கீழுமாக கவிழ்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    நன்றாக பொருந்தும் ஷூ, சாக்ஸ்களை மட்டுமே அணியுங்கள். ஒரு போதும் வெறும் காலோடு நடக்க வேண்டாம்.கால்விரல் நகங்கள் வளரும் போது ஜாக்கிர தையாக இருக்கவும். விரல் நகங்களை நேர் குறுக்காக வெட்டவும். நகங்கள் தடிமனாகவும், வளைந்தும் இருந்தால் அல்லது உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால் வேறு யாரையாவது நகங்களை ஒழுங்காக வெட்ட உதவும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

    சுடுநீரால் ஏற்படும் தீப்புண், நடைபாதை, மணல், சுடுநீர் பாட்டில்கள் மற்றும் ஹீட்டிங் பேடுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். சூட்டையோ அல்லது தீப்புண்ணையோ உங்களால் உணர முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.கால் ஆணி அல்லது பாதங்களில் தடிமனாகிப் போய் விட்ட தோலை நீங்களாகவே வெட்டி எறிய முயற்சிக்க வேண்டாம். இந்த தொல்லைகளுக்கு பொடியாட்ரிஸ்ட் எனப்படும் பாத நிபுணரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைப் பெறவும்.

    பாதங்களில் சீழ்ப்புண் அல்லது வெளியே தெரியக்கூடிய வகையில் புண், வெட்டுப்பட்ட காயம் அல்லது கொப்புளத்தில் தொற்றுநோய், கால்விரல் சிவந்து மென்மையான நிலை, உணர்வில் மாற்றம் அதாவது, வலி, நடுக்கம், மரத்துப் போய்விட்ட நிலை அல்லது எரிச்சல், பாதங்களை நீங்கள் பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏதாவது வெடிப்புகள் காயங்கள் தென்பட்டால் நீரிழிவு மருத்துவர் அல்லது பொடியாட்ரிஸ்ட்டை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

    டாக்டரிடம் நீங்கள் ஆலோசனை பெறும் ஒவ்வொரு முறையும் பாதங்களையும் சரிவர பரிசோதித்துக் கொள்ளுங்கள்.நீரிழிவாளர்களுக்கு என்றே இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிற காலணிகளை, மருத்துவர் ஆலோசனையுடன் வாங்கி அணியுங்கள். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்கு பிரத்யேகமான ஷூக்களை அணியுங்கள்.கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள்.

    jv_66, sarjana ul and Dangu like this.

  10. #50
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Part 2 pdf will be given after completing the post.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter