Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #51
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோயாளிகள் ஏன் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்?

    முன்பு பரம்பரை நோய் என குறிப்பிடப்பட்டு வந்த நீரிழிவு நோய் இப்போது சளி, காய்ச்சல் அளவிற்கு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என ஆகிவிட்டது. பெரும்பாலும் இதற்கு நமது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், சமையல் முறையில் இரசாயன கலப்புகள் நிறைந்த உணவுப் பொருள்களின் அடக்கமும் தான் இன்று பெரும்பாலானோருக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான காரணமாக விளங்குகிறது.

    குணப்படுத்த முடியாத நோய் என்பதினாலும், கடைசி வரை மருந்து மாத்திரை, இன்சுலின் ஊசிகள் மற்றும் உணவுக் கட்டுபாடினால் தான் இந்நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதினாலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி அவசியம் தேவை.

    அதிலும் நீரிழிவு நோயிலிருந்து ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்து உணவுகள் மிகவும் உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அடையும் ஆரோக்கிய பயன் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

    இன்சுலின் சுரக்க உதவுகிறது நார்ச்சத்து உணவுகள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது மற்றும் இன்சுலின் சுரப்பி இயற்கையாகவே உடலில் வெகுவாக சுரக்க செய்கிறது



    இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு கலப்பதை குறைக்கிறது நார்ச்சத்து உணவுகள்.





    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-18-1426659230-1reasonsahigh-fiberdietisinsanelyhealthyfordiabetes.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-18-1426659236-2reasonsahigh-fiberdietisinsanelyhealthyfordiabetes.jpg  
    jv_66 and Dangu like this.

  2. #52
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அடையும் ஆரோக்கிய நன்மைகள்!!!


    கல்லீரல் இரத்தத்தில் மட்டும் அல்லாது உங்கள் கல்லீரலில் சேரும் சர்க்கரை அளவையும் குறைக்க நார்ச்சத்து உணவுகள் பயன் தருகிறது.



    பசியை தீர்க்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு பசி அதிகமாக எடுக்கும். அதிக உணவு சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கூடிவிடும். அதுவே நீங்கள் நார்ச்சத்து உணவுகள் சாப்பிடும் போது நீங்கள் குறைந்த அளவு உணவு உட்கொண்டாலே பசி அடங்கிவிடும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காது தாக்குப்பிடிக்கும்.



    நிறைய கலோரி நார்ச்சத்து உணவுகள் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மற்றும் கலோரிகள் அதிகமாய் அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் உடற்திறன் அதிகரிக்கும் மற்றும் அடிக்கடி பசிக்காது.



    உடல் எடை நார்ச்சத்து உணவுகள் உங்கள் உடல் எடையை சரியான அளவில் பேணிக்காக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் நிறையவே பயனடையலாம்.




    Attached Thumbnails Attached Thumbnails All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-18-1426659264-6reasonsahigh-fiberdietisinsanelyhealthyfordiabetes.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-18-1426659256-5reasonsahigh-fiberdietisinsanelyhealthyfordiabetes.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-18-1426659250-4reasonsahigh-fiberdietisinsanelyhealthyfordiabetes.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-18-1426659243-3reasonsahigh-fiberdietisinsanelyhealthyfordiabetes.jpg  
    jv_66 and Dangu like this.

  3. #53
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைக்காவிடில் சந்திக்கக்கூடிய பெரும் ஆபத்துக்கள்!!!

    இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருப்பதாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதற்கான அறிகுறிகள் உடலில் தென்படும். அதில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகப்படியான தாகம், எடை குறைவு, அதிகப்படியான சோர்வு போன்றவை பொதுவான அறிகுறிகள்.

    இத்தகைய அறிகுறிகள் தென்படும் போதே, அதனை கட்டுப்பாட்டுடன் வைக்க முயற்சிக்க வேண்டும். அப்படி சீரியஸாக முயற்சியில் இறங்காவிடில், உடலில் உள்ள திசுக்களானது பாதிக்கப்பட்டு, பின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதுடன், உயிருக்கே உலை வைக்கும் பல்வேறு நோய்களில் பாதிக்கப்படக்கூடும்.

    மாரடைப்பு சர்க்கரை நோய் வந்தால், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தமும் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' போல் வந்துவிடும். இதனால் தமனிகளானது பாதிக்கப்பட்டு, விரைவில் மாரடைப்பு வரக்கூடும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இறப்பதற்கு முக்கிய காரணமும், இது தான்.



    சிறுநீரக நோய் டைப்-1 நீரிழிவினால் பாதிக்கப்பட்ட முன்றில் ஒரு பங்கு மக்களுக்கு நீரிழிவு நெப்ரோபதி என்னும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடும். மேலும் இந்த நிலையில் டைப்-1 நீரிழிவு உள்ளவர்களுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது அவ்வப்போது இரத்தத்தை சுத்தப்படுத்தும் டையாலிசிஸ் என்னும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.




    நரம்பு பாதிப்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது கட்டுப்பாட்டுடன் இல்லாமல் தீவிரமடைந்தால், உடலில் உள்ள நரம்புகளானது பாதிக்கப்படும். இதற்கு நீரிழிவு நியூரோபதி என்று பெயர். அதிலும் இதனால் உடலின் எந்த பகுதியில் உள்ள நரம்புகள் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். இப்படி நரம்புகள் பாதிக்கப்பட்டால், அவை ஒரு கட்டத்தில் ஊனத்தை ஏற்படுத்திவிடும். மேலும் இந்த பிரச்சனையானது டைப்-1 நீரிழிவு உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் தான் அதிகம் பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே மூட்டுகள் மற்றும் கால்களில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அதனை உடனே குணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், ஊனம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.




    நீரிழிவு விழித்திரை சர்க்கரை நோயானது கண்களில் கூட பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எப்படியெனில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கும் போது, இரத்த நாளங்களின் சுவர்களில் சர்க்கரையானது படிகங்களாக தங்கி அடைப்புக்களை ஏற்படுத்தும். இப்படி அந்த அடைப்புகளானது கண்களுக்கு செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்டால், அவை விழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையை இழக்கச் செய்துவிடும்.





    குறிப்பு மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் சர்க்கரை நோயானது தீவிரமாக இருந்தால் தான் ஏற்படக்கூடும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறி தென்பட ஆரம்பித்தால், அதனை கட்டுப்பட்டுத்தும் முயற்சியில் உடனே இறங்குங்கள். இல்லாவிட்டால், உயிரையே இழக்க நேரிடும். மேலும் இந்த பிரச்சனைகள் டைப்-1 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.



    Attached Thumbnails Attached Thumbnails All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-26-1403758439-4-eye.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-26-1403758429-3-nervousdamage.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-26-1403758418-2-kidneyproblems.jpg   All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்-26-1403758412-1-heartpain.jpg  
    jv_66 and Dangu like this.

  4. #54
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    இது நோயல்ல எனக்குக் கிடைத்த வரம்!
    சுகர் ஸ்மார்ட்
    “எனக்கு மிகுந்த வலிமையையும் எதையும் தாங்கும் திறனையும் டயாபடீஸ்தான் அளித்திருக்கிறது. இது வலி மிகுந்ததாக இருந்தாலும், உண்மையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?’’
    - ஹாலி பெர்ரி



    ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் ஹாலி பெர்ரி. ‘மான்ஸ்டர்ஸ் பால்’ படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர். ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட (டை அனதர் டே) நாயகி. உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுபவர். அது மட்டுமல்ல... 46 வயதிலும் குழந்தை பெற்று சாதனை படைத்தவர்! ‘‘நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நீரிழிவே காரணம்’’ என்று தயங்காமல் கூறுகிற ஹாலியை, 22 வயதில் டைப் 1 டயாபடீஸ் தாக்கியது.

    ‘‘அழகு என்பது காலப்போக்கில் குறைந்து மறைந்துவிடும். ஆரோக்கியம் அப்படி அல்ல. அதை நாம் வாழ்நாள் முழுவதும் பேணிக்காக்க முடியும். அதற்கான அற்புத வாய்ப்பை டயாபடீஸ்தான் எனக்கு வழங்கியது’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் பேசுகிற ஹாலி, ‘40 வயது என நம்ப முடியாத பிரபலங்கள்’ பட்டியலிலும் இடம் பெற்றவர்!

    1989 முதல் இடைவிடாது நடித்துக்கொண்டே இருக்கிறார் ஹாலி. ‘‘நான் சிறுமி யாக இருந்த போது, ‘நீ ஒரு நல்ல தோல்வியாளராக இல்லையென்றால், ஒரு நல்ல வெற்றியாளராவதற்கு வழியே இல்லை’ என என்னுடைய அம்மா கூறினார்’’ என்கிற இந்த அழகுப்பெண், வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகப் பாவிக்கிறார்.

    ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்பட பல முக்கியமான விருதுகளை நடிப்புக்காக பெற்றிருக்கும் ஹாலிக்கு, ஒருகட்டத்தில் ரஸ்ஸி விருது வழங்கப்பட்டது. மிக மோசமான நடிப்புக்கு வழங்கப்படும் விருது இது என்பதுதான் விஷயமே...

    அந்த விருதை யும் ஹாலி நேரிலேயே சென்று பெற்றுக்கொண்டார். இதுவே அவரது சிறப்பான மனநிலைக்கான அறிகுறி. இப்படி எல்லா விஷயங்களையும் நதியின் போக்கிலேயே செல்வது போல இயல்பாக எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தவர் ஹாலி. இதுவே, அவரது மன அழுத்தத்தையும் நீரிழிவையும் சிறப்பாகக் கையாளத் தூண்டுகோலாக அமைகிறது.

    ஹெல்த் மட்டுமல்ல... சுற்றுச்சூழல் விஷயங்களில் ஹாலிக்கு மிகுந்த அக்கறை உண்டு. 2006ல், அமெரிக்காவிலுள்ள மாலிபூ கடற்கரைப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த கேப்ரில்லோ போர்ட் திரவ இயற்கை வாயு வசதியை எதிர்த்துப் போராடினார் ஹாலி. ‘‘நாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி நான் அக்கறை கொண்டுள்ளேன்.

    கடல் சார்ந்த வாழ்க்கை மற்றும் கடலின் சூழலியல் பற்றியும் நான் அக்கறை கொண்டுள்ளேன்’’ என்றார். ஹாலி உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போராளிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்கு அம்மாகாண ஆளுனர் அர்னால்ட் ஸுவாஸ்நேகர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    ‘‘நீரிழிவு இருப்பதாலேயே நான் சத்தான உணவு சாப்பிடுகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் ஆரோக்கியமாக இருப்பதால்தான் 46 வயதிலும் கர்ப்பம் அடைந்து, சிரமம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது’’ என்கிற ஹாலிக்கு, டயாபடீஸ் அறியப்பட்டதே ஓர் அதிர்ச்சிக் கதைதான்...

    ஹாலியின் 22 வயதில், அவரது உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒரு வார காலம் கோமாவிலேயே கிடந்தார். அப்போது செய்யப்பட்ட சோதனைகளில்தான் அவருக்கு டைப் 1 டயாபடீஸ் இருப்பதே தெரிய வந்தது. அதன் பிறகு 26 ஆண்டுகளாக அவர் நீரிழிவையும் ஒரு தோழன் போல பாவித்து வருகிறார்!

    குறிப்பிட்ட நேரத்தில் இன்சுலின் போட்டுக்கொள்வது ஹாலிக்கும் கஷ்டமான காரியமாகவே இருந்தது. ஆனாலும், ‘வேறு வழி இல்லை’ என அறிந்த பிறகு, இன்சுலினை அவர் விட்டுவிடவே இல்லை. ‘‘தாய்ப்பாலை மறப்பது போல இன்சுலினையும் எப்படியாவது மறந்துவிடத்தான் நினைத்தேன். ஆனால், அதுதானே நான் நானாக இருக்க உதவி செய்கிறது. அது இப்போது என் குழந்தை போல!’’ என்று சிரிக்கிற ஹாலிக்கு இப்போது 2 குழந்தைகள்.

    ‘‘எங்கள் குடும்பத்தில் யாருக்குமே நீரிழிவு கிடையாது. பள்ளியில் படிக்கும்போது நான் கொஞ்சம் குண்டாகவே இருந்தேன். அப்போது அதுதான் ஆரோக்கியம் என்று நம்பினேன். 22 வயதில் ரொம்பவும் சோர்வாக உணர்ந்து, ஒரு கட்டத்தில் டயாபடீக் கோமாவில் விழுந்த போதுதான் என் வாழ்க்கை வேறு மாதிரி என்கிற விஷயமே எனக்குப் புரிந்தது.

    ‘நீ உன் பார்வையை இழக்கக்கூடும்... உன் காலைக்கூட வெட்டி விடுவார்கள்... சிறுநீரகம் பழுதாகும்... இதயம் சிக்கலாகும்’ என பலரும் பலவிதமாக மிரட்டிய போது, உலகமே தலைகீழானது போல உணர்ந்தேன். ‘இனி நீ சாக வேண்டியதுதான்’ என்று மட்டும்தான் அவர்கள் கூறவில்லை.

    அப்போது என் கண்களில் மரண பயம் இருந்தது. என்னுடைய டாக்டர் நல்லபடியாக விளக்கிய பிறகுதான் எல்லாமே தெளிவானது. என்னையும் என் உடலையும் நன்றாகக் கவனிக்க வேண்டிய தருணம் இது என முடிவெடுத்தேன்.

    உண்மையைச் சொல்வதானால், டயாபடீஸ் என்னைப் பிடிப்பதற்கு முன் இருந்ததை விடவும்,. இப்போது மிகவும் ஹெல்த்தியாக இருக்கிறேன்!’’ என்கிற ஹாலி, இப்போது முறையான உணவு மற்றும் உடற்பயிற்சித் திட்டத்தில் இருக்கிறார்.

    ஹாலியின் டயட் ‘லோ ஃபேட் அண்ட் சுகர்’ முறையில் அமைந்திருக்கிறது. இனிப்பு வகைகள், ஜங் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு விடை கொடுத்தாயிற்று. ஏராளமாக பச்சைக் காய்கறிகள் சாப்பிடுகிறார். கொஞ்சம் சிக்கன், மீன், பாஸ்தா உண்டு. சிவப்பு மாமிசம் வேண்டவே வேண்டாம் என்கிறார்.

    இனிப்பு அதிகமுள்ள பழங்களும் கிடையாது. வழக்கமான உடற்பயிற்சிகளோடு யோகாவும் செய்கிறார் ஹாலி. அடிக்கடி ரத்த சர்க்கரையை சோதித்து, அதற்கேற்பவே இன்சுலின் எடுத்துக் கொள்கிறார். இதற்கான கிட் பேக் எந்த நேரமும் ஹாலியுடனேயே பயணிக்கிறது.

    டயாபடீஸ் போலவே வாழ்வின் சகல பிரச்னைகளையும் ரிலாக்ஸாக சமாளிக்கிறார் ஹாலி. முன்னாள் பாய்ஃப்ரெண்ட் ஹாலியை அடித்த போது காதில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. அன்று முதல் அவரது ஒரு காதில் 80 சதவிகிதம் மட்டுமே கேட்கும் சக்தி உண்டு. ஆனால், அந்தக் குறையே தெரியாமல் செயல்படவும் அவர் வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக்
    கொண்டிருக்கிறார்.

    நீரிழிவு என்பது ஒரு நோய் அல்ல... அதனால் எந்தக் குறையும் இல்லை... மொத்தத்தில் அது ஒரு வாழ்க்கைமுறை. இதற்கு ஏற்பவே இம்மண்ணில் வாழ்ந்து காட்டும் நட்சத்திரம்தான் ஹாலி!

    ‘‘‘இனி நசாக வேண்டியது தான்’ என்று மட்டும்தான் அவர்கள் கூறவில்லை. அப்போது என் கண்களில் மரண பயம் இருந்தது...’’‘‘நான் ஆரோக்கியமாக இருப்பதால்தான் 46 வயதிலும் கர்ப்பம் அடைந்து, சிரமம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது!’’

    பாதமும் தலை போல முக்கியம்தான்

    நீரிழிவாளர்கள் மற்ற உறுப்புகளுக்கு அளிக்கக்கூடிய அதே அளவு முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். பாதங்களில் புண், வலி போன்றவை ஏற்பட்டால், ‘கால்தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி கண்டுகொள்ளாமல் விடுவதுதான் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்று விடுகிறது.

    நீண்ட காலம் படுக்கையில் கிடப்பதற்கும், ஊனம் ஏற்படக்கூடிய அபாயத்தையும் கூட ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அதனால் ஏற்படும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகள் மற்றும் உடல்ரீதியான சிகிச்சைக்கான செலவுகள் சிரமம் தரக் கூடியவை.

    பாதங்களில் சீழ்ப்புண் இருந்தால் உரிய நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, அந்நோய் ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை சரிவர உணர்ந்து, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். பாதங்களை தினம் தினம் பராமரித்துக் கண்காணித்தாலே இச்சிக்கல்களை தவிர்க்க முடியும். அல்லது கடுமையான விளைவுகள் ஏற்படுவதை தாமதப்படுத்தவாவது முடியும்.

    அபாயத்தை கண்டறியுங்கள்


    நீண்ட காலமாக சர்க்கரைநோய் உள்ளவர்கள், குளுக்கோஸ் கட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வைக் கோளாறு
    உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதங்களில் சீழ்ப்புண் ஏற்படவும், அது அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயமும் அதிக அளவில் உள்ளது. பின்னர் ஏற்படக்கூடிய அபாயங்களை முன்னரே அறிவதன் மூலமே, பாதங்களை பயனுள்ள விதத்தில் பராமரித்து, பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

    பாதங்களை பரிசோதியுங்கள்

    *நீரிழிவு உள்ள அனைவருமே அபாய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள, ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவமனையில் தங்கள் பாதங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    *ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான அளவில் பாதங்களில் அதிக அபாய நிலவரங்கள் உள்ளவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    *நரம்புக் கோளாறு உள்ள நோயாளிகள், தங்கள் பாதங்களை அடிக்கடி மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    அதிக அபாய நிலவரங்களை சமாளிப்பது எப்படி?

    *நரம்புக் கோளாறு இருக்கும் நோயாளிகள் சரியாக பொருந்தும் ஷூ அல்லது அத்லெடிக் ஷூ அணிய வேண்டும்.

    *உணர்ச்சியின்மையுடன் சேர்ந்து வரக்கூடிய தொல்லைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணர்வற்று மரத்துப்போன நிலைமை இருப்பதை உணர்ந்தால் மருத்துவரை உடனே தொடர்புகொள்ள வேண்டும். இப்பிரச்னை குறித்து மிகவும் உன்னிப்பாக இருப்பது மிக முக்கியமாகும். இதை ஒருபோதும் உதாசீனம் செய்யக் கூடாது.

    *வீட்டில் இருக்கும்போது கூட, அப்படியே வெறும் காலோடு நடக்கக் கூடாது. பாதங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, அவற்றை அடிக்கடி
    கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

    *க்ளடிகேஷன் (நடக்கும்போது கால்களில் வலி மற்றும் பலவீனம் மற்றும் ஓய்வாக உட்கார்ந்துவிட்டால் நிவாரணம் ஏற்படும் நிலை) அறிகுறிகளை உணர்ந்தால், மருத்துவர் ஆலோசனையுடன் ‘செல் நாளக்குழாய் பரிசோதனை’ மேற்கொள்ள வேண்டும். க்ளடிகேஷனுக்கு உடற்பயிற்சி மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது உகந்தது.

    *பல காலமாக அல்ஸர் (சீழ்ப்புண்) உள்ள நோயாளிகளும் அல்ஸர் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நீண்ட காலமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், குளுக்கோஸ் கட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வைக் கோளாறு உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு பாத அபாயம் அதிக அளவில் உள்ளது.

    (கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

    ஸ்வீட் ரிசர்ச்

    நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், கால்சியமும் வைட்டமின் டியும் எடுத்துக்கொள்வதன் மூலம், டைப் 2 டயாபடீஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.




    Last edited by chan; 21st Mar 2015 at 10:51 AM.
    jv_66 likes this.

  5. #55
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சாக்லெட் வாழ்க்கை!

    1 .‘‘ரத்த சர்க்கரை எகிறியதன் விளைவாக நானும் நீரிழிவுக்குள் வந்து விட்டேன். இது என்னை கொல்லப் போவதில்லை. என்றாலும், நான் சரியாகச் சாப்பிட வேண்டும்... உடற்பயிற்சி செய்ய வேண்டும்... எடையைக் குறைக்க வேண்டும்... மீதி வாழ்க்கை முழுக்க நான் நலமாக இருக்க எனக்கு இது உதவி செய்யப்போகிறது!’’ என்கிறார் டாம் ஹேங்ஸ்.

    செய்யும் தொழிலே தெய்வம் என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தெய்வம் பக்த னையே சோதிப்பது போல, தொழிலும் தன் வேடிக்கை விளையாட்டுகளை உழைப்பாளி யின் மீது நிகழ்த்துவதுண்டு. அப்படியொரு சுழலில் சிக்கியவர்தான் ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ். Big (1988), Philadelphia (1993), Forrest Gump (1994), Apollo 13 (1995), Saving Private Ryan, You‘ve Got Mail (1998), Cast Away (2000), The Da Vinci Code (2006), Captain Phillips, Saving Mr. Banks (2013) உள்பட 70க்கும் அதிகப் படங்களில் நடித்தவர். போலார் எக்ஸ்பிரஸ், டாய் ஸ்டோரி ஆகிய அனிமேஷன் படங்களிலும் இவரது குரல் பலருக்குப் பரிச்சயமே.




    இந்தக் கடின உழைப்பாளியையும் டயாபடீஸ் விட்டுவிடவில்லை. காரணம் என்னவென அவரே சொல்கிறார்...‘‘36 வயதிலிருந்தே எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. 1992ல், முதன்முதலாக நீரிழிவுக்கான அறிகுறிகள் ஆரம்பமாகின. ‘League of Their Own’ படத்தில் பேஸ்பால் கோச் ஆக நடித்த போது, பதிமூன்றரை கிலோ எடை அதிகரித்திருந்த நேரம் அது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘Cast away’ படத்தில் எங்கோ ஒற்றை மனிதனாகத் திரிந்த போது, 25 கிலோ இளைத்து, 77 கிலோ ஆகிவிட்டேன். அப்போது டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்... ‘இப்போது நீங்கள் ஹைஸ்கூல் பையன் எடைக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள்.

    அதனால் உங்களுக்கு டைப் 2 டயாபடீஸ் வராது!’ஹைஸ்கூலில் என் எடை 44 கிலோதான் இருந்தது. அந்த எடையை வைத்துக்கொண்டு நான் எப்படி நடிப்பதாம்! அதனால் டாக்டரிடம் கூறினேன்... ‘டயாபடீஸ் வந்தாலும் பரவாயில்லை டாக்டர்... என்னால் சமாளிக்க முடியும். எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் என் தொழிலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது!’ என்று...’’ டாம் விளையாட்டாகக் கூறியது, 2013ல், அவரது 57 வயதில் நிஜமாகிவிட்டது. டைப் 2 பட்டியலில் அவரும் இணைந்துவிட்டார்.

    20 ஆண்டுகளையும் தாண்டி, ‘ப்ரீ டயாபடீஸ்’ எனும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருந்தார் அவர். இவ்வளவு காலம் நீரிழிவுக்குள் அவர் மூழ்காமல் தப்பியதற்குக் காரணம் அவரது முறையான வாழ்க்கை முறை.

    டயட், உடற்பயிற்சியில் அவர் எப்போதும் எந்தக் குறையும் வைப்பதில்லை.‘‘திடீரென எடையை அதிகரிக்கச் செய்வதும் எடையைக் குறைப்பதும் உடலின் சமநிலையை பாதிக்கும். இது டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை விரைவுபடுத்துகிறது. டாம் ஹேங்ஸ் போன்ற நடிகர்கள் இந்த விஷயத்தில் மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்...’’ என்கிறார் டாக்டர் ஹாலி பிலிப்ஸ்.

    எடையைக் குறைப்பதற்காக டாம் ஹேங்ஸ் பின்பற்றிய YoYo டயட் கூட, அவருக்கு நீரிழிவை அளித்திருக்கலாம் என்கிறார்கள் சில மருத்துவர்கள். எனினும் தன் தொழிலுக்காக எல்லா அசௌகரியங்களையும் டாம் சகித்துக்கொள்ள நேர்ந்தது. தொழில்முறைச் சிக்கல்களால் நீரிழிவை நோக்கி காந்தம் போல இழுக்கப்படும் சூழல் உருவானாலும், திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம், நீரிழிவைத் தள்ளிப் போட முடியும். இதற்கு டாம் ஹேங்ஸின் வாழ்க்கை பின்பற்ற வேண்டிய உதாரணம்!

    ‘‘என் வாழ்க்கை இப்போது ஒரு சாக்லெட் பாக்ஸ் போல மாறிவிட்டது. இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால், அளவும் மிக முக்கியம்’’ என்று ஒரு கவிதை போல டயாபடீஸ் தத்துவம் சொல்கிறார் டாம்! திடீரென எடையை அதிகரிக்கச் செய்வதும் எடையைக் குறைப்பதும் உடலின் சமநிலையைப் பாதிக்கும். இது டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை விரைவுபடுத்துகிறது...

    ஸ்வீட் டேட்டா

    2035ம் ஆண்டுக்குள் உலக மக்களில் பத்தில் ஒருவரைக் கைப்பற்றுவதற்காக நீரிழிவு வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறது!

    2. பொதுவான சந்தேகங்கள்

    ‘‘என் முப்பதாண்டு அனுபவத்தில் சர்க்கரை நோயாளிகளில் பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகள் சிலவற்றுக்கு இங்கே பதில் சொல்லியிருக்கிறேன். இந்த சந்தேகங்கள் உங்களுக்கும் வந்திருக்கலாம். படித்து, புரிந்து, பலன் பெறுங்கள்...’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.?

    ஓட்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளதாமே! நான் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாமா?!

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஓட்ஸ் என்பதும் ஒரு தானியம்தான். 100 கிராம் ஓட்ஸ் 340 கலோரி தருகிறது.

    அரிசியும் கோதுமையும் இதே அளவு கலோரிகள்தான் தருகின்றன. ஆக, அரிசி சாதம் சாப்பிடுவதும் ஓட்ஸ் சாப்பிடுவதும் ஒன்றுதான். என்றாலும், ஓட்ஸை நீங்கள் சாப்பிட விரும்பினால், அதன் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். 30-40 கிராம் ஓட்ஸ் எடுத்து, பாலில் நனைத்து சாப்பிட்டால் சரி. அதையே கூழ் அல்லது கஞ்சிபோல சாப்பிட்டால், ரத்த சர்க்கரை உடனே எகிறிவிடும்!

    ? சிறு வயதிலிருந்தே அதிக இனிப்பு சாப்பிட்டுப் பழகிவிட்டேன். இப்போது திடீரென இனிப்பை நிறுத்த முடியவில்லை. இனிப்பையும் சாப்பிட்டுக்கொண்டு, கூடுதலாக மாத்திரை யையும் போட்டுக் கொள்ளலாமா?!

    உங்களுக்கு மட்டுமல்ல... பலருக்கும் இந்த சந்தேகம் வருவதுண்டு. அதனால், சிறிது விளக்கமாகவே பதில் சொல்கிறேன். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகப்படியாக இருக்கிற ரத்த சர்க்கரையைக் குறைக்க இன்சுலின் மருந்தைச் செலுத்துகிறோம் அல்லது மாத்திரையைக் கொடுத்து இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறோம்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்கெனவே கணையம் சோர்வடைந்த நிலையில் இருக்கும் என்பதால், சர்க்கரை நோய் மாத்திரைகளால் ஓரளவுக்குத்தான் கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்யமுடியும். கூடுதலாக இனிப்புப் பொருட்களை சாப்பிட்டுக்கொண்டு, கூடுதலாக சர்க்கரை நோய் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டாலும், கணையத்தில் இன்சுலின் சுரப்பது அதிகரிக்காது. வண்டியின் பாரம் தாங்காமல் படுத்துவிட்ட மாட்டை அடித்துத் துன்புறுத்தினால் அது எழுந்து நடக்க சண்டித்தனம் செய்யும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    அதுபோலத்தான் இதுவும். ரொம்பவும் களைத்துப்போன கணையத்தை அதிக மாத்திரைகளால் தூண்டினாலும் இன்சுலின் சுரக்காது. ஆகவே, நீங்கள் இனிப்பை அதிகமாக சாப்பிட்டால், அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் தங்கி நோயை அதிகப்படுத்தவே செய்யும். குறையாது. வேண்டாம், வீண்வம்பு!

    ? சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையும் உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். நான் கேரட் சாப்பிடலாமா?

    ! பூமிக்கு அடியில் விளைபவை எல்லாமே கிழங்குகள் இல்லை. உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவை மாவுச்சத்து அதிகமுள்ள கிழங்குகள். கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவை வேர்கள்.

    இவற்றில் நார்ச்சத்து அதிகம். பூண்டு, வெங்காயம் போன்றவை தண்டுகள். இவற்றில் கிழங்குகளைத்தான் சர்க்கரை நோயாளிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை வேண்டிய அளவுக்கு சாப்பிடலாம். கிழங்குகளைவிட கேரட் குறைந்த கலோரிகளைத்தான் தருகிறது.

    ? சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடலாமா?

    ! பரோட்டா மைதாவில் செய்யப்படுகிறது. மைதாவில் மாவுச்சத்து அதிகம். இதில் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. ஒரு நடுத்தரமான பரோட்டா 400 கலோரி தருகிறது. இது உடனே ரத்த சர்க்கரையை அதிகரித்துவிடும்.

    ? சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேறு ஏதேனும் நோய் வரும்போது சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாமா?

    ! கூடாது. சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அவசியம் சாப்பிட வேண்டும். வேறு நோயின் காரணமாக நோயாளியின் உணவுமுறை மாறினால், அதற்கேற்ப டாக்டரிடம் ஆலோசித்து மாத்திரையை அல்லது இன்சுலின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

    நோயாளிக்கு ரத்த சர்க்கரை மிகவும் குறைந்தாலொழிய அதாவது, சர்க்கரைத் தாழ்நிலை வந்தால் ஒழிய சர்க்கரை நோய் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. ரத்தத்தில் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அந்த நோயாளிக்கு ஏற்படுகின்ற எந்த நோயும் குணமாகும்.

    ? டாக்டர் கொடுத்த மாத்திரையை சரியாகச் சாப்பிடுகிறேன். தினமும் வாக்கிங் போகிறேன். என்றாலும் என் ரத்தத்தில் சர்க்கரை உணவுக்குப்பின் 220 மி.கி. உள்ளது. இது ஏன்?

    ! பின்வரும் காரணங்கள் இருக்கலாம். உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து சிகிச்சையில் சில மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்...

    * உணவுமுறை சரியில்லை.
    * உணவு சாப்பிடும் நேரம் சரியில்லை.
    * உடற்பயிற்சி போதுமானதாக இல்லை.
    * பொருத்தமில்லாத மாத்திரை.
    * மாத்திரையின் அளவு போதுமானதாக இல்லை.
    * இன்சுலின் தேவைப்படலாம்.
    * மன அழுத்தம்.

    ? எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளது. இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

    ! சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் பல ஆபத்துகள் அணிவகுக்கும். முதலில் தொண்டையிலும் நுரையீரலிலும் அடிக்கடி அழற்சி ஏற்படும். புண் உண்டாகும். சளி பிடிக்கும். புகையிலையில் உள்ள ‘நிகோட்டின்’ நச்சு ரத்தக்குழாய்களை சுருக்கி உயர் ரத்த அழுத்தம் சின்ன வயதிலேயே வருவதற்கு ஏற்பாடு செய்யும்.

    மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை இவர்களுக்கு சீக்கிரத்தில் வரக் காத்திருக்கும். கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இதனால் கால்களுக்கு ரத்தம் குறைந்து கால்விரல் அழுகிவிட வாய்ப்புண்டு. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவையும் வரலாம்.

    ? சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியது அவசியமா?

    !சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்புகளுக்குத் துணைபோவது வைட்டமின் குறைபாடும் ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’ (Free Radicles) எனப்படும் வேதிப்பொருட்களும்தான். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.

    ? எனக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு அடிக்கடி உடல் குளிர்கிறது. இது ஏன்?

    ! ‘தைராய்டு சுரப்பு’ குறைவாக இருக்க (Hypothyroidism) வாய்ப்புள்ளது. தைராய்டு ரத்தப் பரிசோதனை (T3, T4, TSH) செய்து பார்த்துக்கொண்டால் அது தெரிந்துவிடும்.

    ? 3 ஆண்டுகளாக என் கணவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவருக்கு அடிக்கடி உடல்வலி வருகிறது. இது ஏன்?

    ! உங்கள் கணவருக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், உடல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தும் உடல்வலி இருந்தால் மூட்டு நோய்கள், தசை நோய்கள், வைட்டமின் குறைபாடு, வைரஸ் தொற்று, ரத்தசோகை என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன.

    ? சர்க்கரை நோயாளிகள் ‘நட்ஸ்’ என்கிற கொட்டை வகைகளை சாப்பிடலாமா?

    ! பொதுவாக முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டை வகைகளில் கலோரி அதிகம் என்பதால் இவற்றை சாப்பிட யோசிப்பார்கள். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள், தாதுச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடண்ட் சத்துகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இவற்றை சாப்பிட வேண்டியதும் அவசியம். அதாவது, கொழுப்பு உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் 15-20 கிராம் அளவுக்கு ஏதாவது ஒரு கொட்டை வகையை சாப்பிடலாம்.

    ? 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்றாலும் உடல் அசதியாகவும் சோர்வாகவும் உள்ளது. என்ன காரணம்?
    ! உங்கள் உடலின் முறையான செயல்பாட்டுக்குத் தேவையான எரிபொருள், குளுக்கோஸ். சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால், அந்த குளுக்கோஸ் சரியான அளவில் செல்களுக்குள் நுழைந்து, சக்தியைத் தரும். உடலில் சோர்வு இருக்காது.

    உங்களைப் பொறுத்த அளவில் சர்க்கரை நோய் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது. அதனால்தான் உங்கள் உடல் செல்களுக்குத் தேவையான சத்து கிடைக்காமல், சோர்வைத் தருகிறது. சத்து இல்லாவிட்டால் சக்தியில்லை. அப்போது உடலில் களைப்பும், சோர்வும், பலவீனமும் ஏற்படுவது நியாயம்தானே!

    முதலில் நீங்கள் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த சரியான அளவில் மாத்திரை அல்லது இன்சுலின் பயன்படுத்துங்கள். வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய சத்து மாத்திரையையும் சாப்பிடுங்கள். இவற்றோடு உடற்பயிற்சியும் செய்யுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

    ? எனக்கு சர்க்கரை நோயும் ரத்தசோகையும் உள்ளது. இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாமா?

    ! பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது. பதிலாக, முருங்கைக்கீரை சாப்பிடலாம்.

    ? நீரிழிவு நோய் நுரையீரல்களை பாதிக்குமா?

    ! கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய் நுரையீரல்களை நிச்சயம் பாதிக்கும். காச நோய், நிமோனியா போன்ற நோய்கள் தாக்கும்.

    ? நான் ஒரு சுகர் பேஷன்ட். நன்றாகத்தான் இருக்கிறேன். நான் எதற்கு வருடா வருடம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்துகொள்ள வேண்டும்? என்ன அவசியம்?

    ! ‘வருமுன் காப்பது நல்லது’ என்பதை சர்க்கரை நோயாளி ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு பல சிக்கல்கள் உடலில் இருந்தாலும் வெளியில் தெரிவதற்கு நாளாகும்.

    உதாரணத்துக்கு, இதயத்தமனி ரத்தக் குழாய்களில் 90 சதவிகிதம் அடைத்த பிறகுதான் நெஞ்சுவலியே வரும். இந்த நெஞ்சுவலிகூட சிலருக்கு வெளிக்காட்டாது. திடீரென்று மயக்கம் வந்து உயிருக்கு ஆபத்து வந்துசேரும். அப்போது டாக்டர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாது.

    இந்த மாதிரி நிலைமைகளைத் தவிர்க்கத்தான் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். இப்படிப் பரிசோதனை செய்யும்போது 100 பேரில் 10 பேருக்கு வெளியில் தெரியாமல் இருந்த பல நோய்கள் உடலுக்குள் உள்ளதைக் கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்திருக்கிறோம். உயிருக்கு வரக் காத்திருந்த ஆபத்துகளைத் தடுத்திருக்கிறோம்.


    Last edited by chan; 23rd Mar 2015 at 02:33 PM.
    jv_66 likes this.

  6. #56
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோய் வருவது ஏன்?
    டாக்டர் கு. கணேசன்



    நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.
    இன்சுலின் சுரப்பைத் தடுப்பதற்கெனப் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன; பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதைத் தூண்டுகின்றன. இவற்றை சர்க்கரை நோயின் முன்காரணிகள் ( Diabetes Risk Factors ) என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.

    பரம்பரைத் தன்மை

    நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் (Genes) உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.
    உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்று இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்தச் செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளும். அதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவது இல்லை.
    புத்தகங்களை அச்சிடும்போது பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.
    நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்தப் பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.

    உடல் பருமன்
    சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.
    இன்னொரு வழி இது: உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.

    இன்சுலின் எதிர்ப்பு உணர்வு

    உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள், இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை; இன்சுலினை எதிர்க்கின்றன. இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.
    சில வேளைகளில், கையில் சாவி இருந்தாலும், அது பூட்டைத் திறக்கச் சண்டித்தனம் செய்யும் அல்லவா? அதுபோல, சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரந்தாலும், அது சரிவர வேலை செய்யாது. காரணம், இவர்களுடைய செல்களில் இன்சுலின் ஏற்பான்கள்' (Insulin Receptors) குறைவாக இருக்கும். இதனால், செல்களுக்குள் குளுகோஸ் நுழைய முடியாமல் ரத்தத்தில் தங்கிவிடும். இதன் விளைவாக, ரத்தச் சர்க்கரை அதிகமாகி, இவர்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடும். இதைத்தான் இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' (Insulin Resistance) என்கிறோம்.
    அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.

    மன அழுத்தம்

    நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.
    இதனால் நீரிழிவு நோய் வருகிறது. மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு நோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தால் அது அதிகப்படலாம்.

    அடிக்கடி கர்ப்பம் அடைதல்

    கர்ப்பமான பெண்களுக்கு, கர்ப்பப்பையில் குழந்தை வளர்ந்து வரும்போது சில ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் வருகிறது. இந்த ஹார்மோன் பிரச்சினை பிரசவத்துக்குப் பிறகு பல பேருக்குச் சரியாகிவிடுகிறது. இதனால், குழந்தை பிறந்த பின்னர், இவர்களுக்கு நீரிழிவு நோய் மறைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.
    அதிலும் அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினையும் அடிக்கடி வருவதால், நீரிழிவு நோய் நிலைத்துவிடுகிறது. குறிப்பாகச் சொன்னால், கர்ப்பத்தின்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தையைப் பெற்ற பெண்கள், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

    உயர் ரத்த அழுத்தம்

    சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்த மும் மிக நெருங்கிய நண்பர்கள். சர்க்கரை நோயை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, ரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    ரத்த மிகைக் கொழுப்பு

    உடல் பருமன் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ஒருவருக்குத் திசுக் கொழுப்பும் ரத்தக் கொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் கொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு நோய் வரும்.

    சினைப்பை நீர்க்கட்டிகள்

    பெண்களுக்குச் சினைப்பையில் உருவாகின்ற ஒரு வகை நார்க்கட்டிக்கு சினைப்பை நீர்க்கட்டி' (Poly Cystic Ovary Syndrome - PCOS) என்று பெயர். இந்த நோய் டெஸ்டோஸ்டீரான் (Testosterone) எனும் ஹார்மோன் அதிகமாவதால் வருகிறது. உடல் பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களுக்கு முகத்தில் பருக்களும், முடியும் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு சரியாக நிகழாது. கழுத்தின் பின்புறத் தோல் கறுப்பாக, தடிப்பாக, வரிவரியாக இருக்கும் (Acanthosis nigricans). இந்த நோய் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது.

    சோம்பலான வாழ்க்கை முறை

    உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. இந்த மாதிரி அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படித் தொடர்ந்து சுரக்கும்போது, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.

    சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா
    ?
    மேற்சொன்ன வழிகளில் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதைத் தள்ளிப்போடலாம்.

    # மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.

    # எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

    # நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    # குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    # தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    # உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

    கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
    தொடர்புக்கு: gganesan95@gmail.com


    Last edited by chan; 23rd Mar 2015 at 07:43 PM.
    jv_66 likes this.

  7. #57
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    இனிப்பானவர்களே... இனியவர்களே!

    டயாபடீஸ் என்பது ஒரு டைம் பாம். அது இன்றோ, நாளையோ, அடுத்த ஆண்டோ, இன்னும் பத்தாண்டுகளிலோ, என்னையும் உங்களையும் - ஏன் இந்தக் குழந்தைகள் உள்பட - பல லட்சக்கணக்கானோரைத் தாக்கக்கூடும். - மேரி டைலர் மூர் (அமெரிக்க நடிகை)

    இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ, நண்பருக்கோ சர்க்கரை நோய் என்று பரவலாக அறியப்படும் நீரிழிவுக் குறைபாடு இருக்கக்கூடும். இந்தப் பிரச்னை அறியப்பட்ட அந்த நிமிடத்தில், நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்திருப்போம்.




    வாழ்வே முடிவுக்கு வந்தது போன்ற ஓர் உணர்வு நமக்குள் வியாபித்திருக்கும். எல்லாவற்றையும் இழந்துவிட்டது போலவும் தனித்துவிடப்பட்டது போலவும் குழப்பமான மனநிலைக்குள் தள்ளப்பட்டிருப்போம். காலப்போக்கில், வேறு வழியின்றி, நீரிழிவு வாழ்க்கைக்குப் பழக்கப்பட வேண்டும்தானே?

    நீரிழிவு எனும் மாயச்சுரங்கத்தில் சிக்கி, மீள வழி தெரியாமல் தவிப்பதாக, இனியும் எண்ண வேண்டாம். நீரிழிவையும் அது சார்ந்த ஏராளமான பிரச்னைகளையும்
    வெற்றிகரமாக எதிர்கொண்டு, நலமுடனும் வளமுடனும் மகிழ்வுடனும் வாழ்வோர் ஒருவர் இருவரல்ல... பல லட்சம் பேர் உண்டு. இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என முரசு கொட்டும் அளவுக்கு, உலகில் - குறிப்பாக இந்தியாவில் நீரிழிவாளர்களின் எண்ணிக்கை மிகமிகப் பிரமாண்டமானது. இதுவரை என்ன செய்தோம் என்பதை விடுங்கள்... இனி நாம் என்ன செய்ய வேண்டும் என நமக்கு வழிகாட்ட, ஏராளமானோர் எக்கச்சக்க அனுபவங்களோடு காத்திருக்கிறார்கள்.

    டயாபடீஸ் என்பது நிச்சயமாக ஒரு நோயல்ல... அது ஒரு குறைபாடுதான் (டிஸ் ஆர்டர்). இதுதான் முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.எனக்கும் உங்களில் பலரைப் போலவே, தற்செயலாகத்தான் நீரிழிவு அறியப்பட்டது. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே ஜி.டீ.டீ. என்ற குளுக்கோஸ் தாங்கு திறன் சோதனை எடுத்துக்கொண்டேன். இதுதான் நான் இனிப்பானவன் என்பதை உறுதியாக உலகுக்கு அறிவிக்கும் சோதனை. இதன் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்தாலும் கூட, நாம் நெகடிவ் ஆகக்கூடாது. டயாபடீஸுடன் வாழ்வது நிச்சயம் சோகம் அல்ல... நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று நினைக்கக் கூடாது... அவ்வளவுதான்!

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்... அவருக்கு டைப் 1 டயாபடீஸ் (பிறப்பிலேயே வருவது). இறுதி வரை இன்சுலின் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படியொரு சூழலிலும் அவர் பிரமாதமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் (கிரிக்இன்ஃபோ.காம் பாருங்கள்). அக்ரம் போலவே, நீரிழிவைப் பற்றி வருந்தாமல், ஆனால் - அதற்குரிய கட்டுப்பாடுகளை மதித்து சாதித்தவர்கள் பல பேர். நம்மாலும் அது உறுதியாக முடியும். அடிப்படையான சிறு குறிப்புகளிலிருந்து நம் புதுவாழ்வைத் தொடங்கலாமா?

    * விருந்தும் விரதமும் நமக்கு (அதாவது நீரிழிவுகாரர்களுக்கு) ஆகாது. ஆகவே, செவ்வாய், வெள்ளி தோறும் சாமிக்கு விரதம், துணையுடன் சண்டை போட்டு பட்டினிப்போர், அரசியல் உண்ணாவிரதங்கள் (பிரியாணி விரதம் உள்பட!) - இதற்கெல்லாம் உடனடி தடா.எப்போதாவது ஒருமுறைதானே என கல்யாண வீட்டிலோ, பார்ட்டிகளிலோ, ஸ்பெஷல் விருந்துகளிலோ புகுந்து விளையாடி விடாதீர்கள். ரத்த சர்க்கரை அளவு தறிகெட்டுப்போய் பிரச்னைகள் தொடங்கும்.

    பி.கு.: வடையும் அடையும் உங்களுக்குப் பிடிக்கக்கூடும். ஆனால், ஸ்வீட்டுக்குப் பதிலாக எக்ஸ்ட்ரா வடை சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. ஜாக்கிரதை...
    சர்க்கரை குறைப்பாட்டுக்கு கொலாஸ்ட்ராலும் உயர் ரத்த அழுத்தமும் நெருங்கிய உறவினர்கள்!

    * சரி... ரொம்பப் பயமுறுத்த வில்லை... நீங்கள் தாராளமாக நிறையச் சாப்பிடலாம். ஆனால், இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். தினமும் 5 முறை கூட சாப்பிடலாம்... கொஞ்சம்
    கொஞ்சமாக!

    * காலை உணவு... மெட்டபாலிசம் என்கிற வளர்சிதை மாற்றத்துக்கு அவசியமான இந்த விஷயத்தை பல பேர் கண்டுகொள்வதே இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 12 ஆண்டுகளாக டிஃபன் சாப்பிட்டதே இல்லை என்று பெருமையாகச் சொல்கிறார். டயாபடீஸ்காரர்கள் அப்படியெல்லாம் இருக்கவே கூடாது. இது ரொம்ப முக்கியம்.

    * காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சுண்டல் / வெள்ளரிக்காய் / சாலட் / ஓட்ஸ் - இப்படி ஏதேனும் எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். மதிய உணவோடு வாரம் இருமுறை கீரை மஸ்ட் கண்ணா மஸ்ட்!

    * டால்டா, நெய், கெட்டித் தயிர், வெண்ணெய், பனீர், சீஸ் ஆகியவற்றை கிருஷ்ண பாலனுக்கே அர்ப்பணித்துவிட்டு, கொழுப்பு நீக்கிய நீர்மோரே சிலாக்கியம். கொழுப்பே இல்லாத தயிர் கிட்டினாலும் ஓ.கே.

    * மாலை 5 அல்லது 6 மணிவாக்கில் சர்க்கரை, வெண்ணெய் இல்லாத கோதுமை பிரெட் / சாண்ட்விச் அல்லது 2 இட்லி (குஷ்பு இட்லி அல்ல!) அல்லது ஒரு சப்பாத்தி (மைதா ஆகாது... கோதுமையே சிறப்பு) சாப்பிடலாம்.

    * நேரடி இனிப்புகளும் பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள பழங்களையும் தவிர்த்து விடுங்கள். லெமன் சால்ட் / சர்க்கரை இல்லாத தக்காளி ஜூஸ் சாப்பிடலாம். வேறு ஜூஸ் வேண்டாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது சில பழங்கள் சாப்பிடலாம்.

    * உணவு பற்றி நிறையவே சொல்லிவிட்டேன். புகையும் மதுவும் பற்றி உங்களுக்கே தெரியும்.

    * மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாகவே மாத்திரை மாற்றி மாற்றி சுயமருத்துவம் செய்வது கூடவே கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலை, எடை, உணவுப்பழக்கம், வயது என பல காரணிகளுக்குத் தகுந்தாற்போலத்தான் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் கூட, அதையும் குறித்து வையுங்கள்.

    * 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனையின் போது பிஙிகி1சி சோதனை எடுத்துக்கொள்ளுங்கள். இது நாம் அந்தக் காலகட்டத்தில் எந்த லட்சணத்தில் உடலை பராமரித்தோம் என்பதை புட்டுப்புட்டு வைத்துவிடும். இது சாதாரண ரத்தப் பரிசோதனைதான். காலையில் உணவோ, காபியோ உட்கொள்ளும் முன் ஃபாஸ்டிங்கில் எடுக்கவேண்டும். ஏறத்தாழ ரூ.300 கட்டணம்.

    * வாக்கிங்... இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். வாரத்தில் 5 நாட்களாவது கட்டாயம் வாக்கிங் போகவேண்டும். தலா 45 நிமிடங்கள். மொத்தமாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் காலை, மாலை என்று பிரித்துப் பிரித்தும் செல்லலாம். இதுதவிர சிறு உடற்பயிற்சிகள், யோகா நல்லது.

    ஸ்வீட் டேட்டா

    டைப் 2 நீரிழிவாளர்களில் 85 சதவிகிதத்தினர் பருமன் (ஓவர் வெயிட்) ஆனவர்களே!

    விருந்தும் விரதமும் நீரிழிவுகாரர்களுக்கு ஆகாது.

    லிஃப்ட் பயன்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வேண்டியவர்கள் மாடிப்படிகளைப் பயன்படுத்துவதே நல்லது!

    2. குழந்தைகளின் நீரிழிவு ஏன்? என்ன செய்வது?

    வம்பர் 14... குழந்தைகள் தினமும் உலக நீரிழிவு தினமும் ஒருசேர கொண்டாடப்படுகிறதே... என்ன ஒரு சோகமான ஒற்றுமை! குழந்தைகள் நீரிழிவால் பாதிக்கப்படுவது இப்போது மிக அதிகம். முன்பெல்லாம், குழந்தைகள் நீரிழிவு என்பது, இளநிலை நீரிழிவாகவே (டைப் 1) இருக்கும். இவ்வகை நீரிழிவில் கணையமானது போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்வதில்லை. அதனால் சிறுவயதிலிருந்தே இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும்.

    சமீபகாலமாக, டைப் 2 நீரிழிவு நிலையும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்திச் செய்யப்பட்டாலும், அது முறையாக செயலாற்றும் திறன் இல்லாமலும் ரத்த சர்க்கரையை குறைக்க இயலாததாகவும் இருக்கிறது. இது பற்றி விரிவாக விளக்குகிறார் நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.

    உடலிலுள்ள கணையம் இன்சுலின் சுரக்கும் சக்தியை இழக்கும்போது வகை 1 நீரிழிவு ஏற்படுகிறது. இதையே type 1 / insulin dependent diabetes / juvenile diabetes ஆகிய பெயர்களிலும் அழைக்கிறோம். வைரஸ் தாக்குதலினாலோ, உடலின் நோய்க்காப்பு இயங்குமுறையானது, கணையத்திலுள்ள செல்களை அழிப்பதனாலோ இக்குறைபாடு ஏற்படக்கூடும்.

    இவ்வகை நீரிழிவை இன்சுலின் ஊசி மருந்து வழியாக மட்டுமே நிர்வகிக்க முடியும். இன்சுலின் தரப்படவில்லை என்றால், ரத்தச் சர்க்கரை அளவு அபாயகரமாக அதிகரிக்கும். அதோடு, ரத்தத்தில் குறிப்பிட்ட வகை அமில அளவுகளும் அதிகரிக்கத் தொடங்கும். இதுவே மிக அதிகமாக அச்சம் ஏற்படுத்துகிற சிக்கலான நீரிழிவு கீட்டோ அமிலத்துவம் என்று அழைக்கப்படுகிற நீரிழிவு வகைக்கு இட்டுச் செல்லும்.

    டைப் 1 நீரிழிவு பிரச்னைக்கு இன்று வரை ஒரே சிகிச்சை, ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவது மட்டுமே. இன்சுலினை வலியற்ற இன்சுலின் பம்ப் வழியாக தர முடியும் என்பதுதான் இதில் முக்கிய முன்னேற்றம். இப்போது, இன்சுலின் பம்ப் இன்சுலினை உட்செலுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கண்டறிந்து, அதற்கேற்ப இன்சுலின் உட்செலுத்தப்படும் விகிதத்தையும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    நமது உடலின் கணையத்தில் இன்சுலின் உருவாக்குகின்ற செல்களைப் போலவே இதுவும் செயல்படுவதால், செயற்கை முறை கணையம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, ரத்த சர்க்கரையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, இதன் இன்சுலின் அளவுகளும் ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருக்கும்.

    ரத்த குளுகோஸ் அளவு திடீரென இறங்கும் ஹைபோகிளைசிமியா என்பது டைப் 1 நீரிழிவில் ஏற்படக்கூடிய இன்னொரு ஆபத்தான சிக்கல். குளுக்ககான் என்று அழைக்கப்படுகிற, கணையத்தில் உருவாகிற மற்றொரு ஹார்மோன் போதுமான அளவு இல்லாத காரணத்தால்தான் இது பெரும்பாலும் நிகழ்கிறது.

    சில மாதங்களுக்கு முன், இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்கக்கூடிய ஒற்றை பம்ப் உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். இரட்டை ஹார்மோன் சிகிச்சை என இது அழைக்கப்படுகிறது. நமது கணையத்தைப் போலவே சிறப்பாகச் செயல்படுவதற்கும் நீரிழிவு குழந்தைகளின் வாழ்க்கையை இன்னும் எளிதாக ஆக்கவும் இது உதவும்.

    டைப் 2 நீரிழிவு நிலையில், உடலானது போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதனால் முறையாகச் செயல்பட இயலாத நிலை இருக்கிறது. அல்லது இன்சுலின் செயல்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை காணப்படுகிறது. இன்சுலினை சார்ந்திராத நீரிழிவு நோய் என்று இது குறிப்பிடப்படுகிறது. அளவுக்கு அதிக எடை அதிகரிப்பு மற்றும் போதுமான உடற்பயிற்சி இல்லாத காரணங்களால் இது ஏற்படுகிறது. இதை முறையாக நிர்வகிக்கா விட்டால், ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கக்கூடும்.

    ஆனால், அமில அளவுகள் அதிகரிப்பதில்லை. இந்த வகை நீரிழிவு நிலையை பொதுவாக மாத்திரைகள் வழியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எப்போதேனும் இன்சுலின் தேவைப்படலாம்.

    இந்த இரு வகை நீரிழிவு நிலைகளிலும் சிகிச்சையின் முக்கிய அம்சமாக அமைவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே. தவறாமல் செய்யப்படும் உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கவழக்கங்கள் முக்கியமானவை. டைப் 1 நீரிழிவு குழந்தைகள் இனிப்புகள், கேக்குகளை உட்கொள்ளத் தடையில்லை.

    அனைத்து வகை உணவுகளையும் மிதமான அளவுகளில் அவர்கள் உண்டு மகிழலாம். உணவுக்கேற்ப, எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். வயது வந்த நபர்களைப் போன்றே, சரியான கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத நீரிழிவு நிலையால் ஏற்படும் சிக்கல்களும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும். கண்கள், சிறுநீரகச் செயல்பாடு, கொலஸ்ட்ரால் (கொழுப்பு அளவு) மற்றும் பாதங்கள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.

    நீரிழிவை முழுமையாகத் தடுக்க முடியுமா? குழந்தைகளை பாதிப்பதிலிருந்து

    எப்படி காக்க முடியும்?


    இவை பலருக்கும் எழும் கேள்விகள்...
    டைப் 2 நீரிழிவின் இடர்பாட்டை, இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நிச்சயமாக குறைக்க முடியும். முன்மாதிரி நடத்தை
    மற்றும் பெரியவர்களை பின்பற்றி நடத்தல் ஆகியவற்றை குழந்தைகள் பின்பற்றுகிறார்கள் என்பதால், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.

    டைப் 1 நீரிழிவுக்கான இடர்காரணிகள் அதிக அளவு மரபணு சார்ந்ததாக இருக்கின்றன. இந்த இடர்பாட்டை டைப் 2 நீரிழிவு நிலையில் உள்ள அதே அளவுக்கு குறைக்க இயலாது. எனினும், ரத்தத்தில் வைட்டமின் டி அளவை சிறப்பாகக் கொண்டிருப்பதன் மூலமும், 1 வயதுக்கு முன் பசும்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் இந்த இடர்பாட்டை குறைக்க முடியும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.

    இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்கக்கூடிய ஒற்றை பம்ப் உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.

    ரத்தத்தில் வைட்டமின் டி அளவை சிறப்பாகக் கொண்டிருப்பதன் மூலமும், 1 வயதுக்கு முன் பசும்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும்
    டைப் 1 நீரிழிவு ஏற்படுவதைக் குறைக்க முடியும்.

    Last edited by chan; 24th Mar 2015 at 02:34 PM.
    jv_66 likes this.

  8. #58
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?



    டயாபடீஸ் வந்துவிட்டதால் மட்டுமே வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. இன்னமும் நாம் அனுபவிப்பதற்கு ஏராளமான சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அதற்காக நன்றியுடன் இருப்போம்!



    டேல் இவான்ஸ் என்ற அமெரிக்க நடிகை கூறிய இவ்வாசகம் முழுக்க முழுக்க உண்மையானது. அதற்கு ஒட்டுமொத்த உதாரணமாகவும் அவரே வாழ்ந்தார் என்பது இன்னும் சுவாரஸ்யம். நடிகையாக மட்டுமல்ல... எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் சாதனைகள் புரிந்தவர். இவரை நாயகியாகக் கொண்ட டேல் இவான்ஸ் காமிக்ஸ் புத்தகங்களும் புகழ்பெற்றவை. 41 திரைப்படங்களும், 4 தொலைக்காட்சித் தொடர்களும் இன்றும் டேலின் பெயர் சொல்கின்றன.


    4 முறை திருமணம் செய்திருந்தாலும், கிங் ஆஃப் கௌபாய்ஸ் என்ற புகழுக்குரிய பாடகரும் நடிகருமான ராய் ரோஜர்ஸின் 51 ஆண்டுகால ப்ரிய மனைவியாக, டேல் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து பெற்றதும் பெறாததுமாக 9 குழந்தைகளை வளர்த்தார்கள்.

    நோய்வாய்ப்பட்ட குழந்தை, டவுன் சிண்ட்ரோம் பாதிப்புக்கு உள்ளான இன்னொரு குழந்தை, வாலிப வயதை எட்டாமலே இவ்வுலகை விட்டுப் பிரிந்த குழந்தைகள் என ஏராளமான துயரங்களையும் டேல் சுமக்க வேண்டியிருந்தது. சர்ச் பஸ் விபத்தில், டேலின் தத்துக் குழந்தை இறந்துபோன அடுத்த நாளே, மற்றொரு அதிர்ச்சியாக அவரைத் தாக்கியது நீரிழிவு.

    எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் டயாபடீஸ் கால்பந்து போல உதைத்துக் கொண்டே இருந்தது என்று, பின்னர் ஒருமுறை வேடிக்கையாகச் சொன்னார் டேல். உண்மைதான்... அவரது அம்மா, அம்மாவின் இரு சகோதரிகள், மகன், பேரன் (14 வயதில்) என ஏகப்பட்ட பேருக்கு டயாபடீஸ்!ஒரு கட்டத்தில் அவர் மாத்திரைகளிலிருந்து இன்சுலினுக்கு மாற வேண்டி வந்தது. இப்போது இருப்பதைப் போன்ற மெல்லிய, வலியற்ற இன்சுலின் பென் அப்போது கிடையாதே...

    ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி போடுவது என்றாலே கசப்பாக இருந்திருக்கிறது டேலுக்கு. பிறகு அதுவும் கைப்பழக்கமாக, டயட்டிலும் கவனம் செலுத்தினார். சர்க்கரை மற்றும் உப்பு உபயோகத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தார். அதனால்தான், அவரது 80 வயதுக்குப் பிறகும் ஃபாஸ்ட்டிங் குளுக்கோஸ் அளவை 150 160 எம்.ஜி./டி.எல். என்ற மேஜிக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிந்தது!

    மூப்பு காரணமாக ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற சிக்கல்களையும் அவர் சந்தித்தார். இருப்பினும், இறுதி வரை இன்சுலின், டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை விட்டு விடவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஸ்ட்ரோக் தாக்கிய பிறகுதான், அவர் Rainbow on a Hard Trail என்ற நூலையே எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. அதன் பிறகு, 88வது வயதில் (2001), அவர் இயற்கை எய்தும் வரை நீரிழிவை வெற்றிகரமாகவே எதிர்கொண்டார்!

    நீரிழிவைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் கொள்ளுங்கள்... மாத்திரைகளோ, இன்சுலினோ மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அவ்வளவுதான்! இதுதான் டேல் இவான்ஸ், அவரது அனுபவத்திலிருந்து நமக்குச் சொல்லிச் சென்ற இனிப்பான வார்த்தைகள்!
    எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் டயாபடீஸ் கால்பந்து போல உதைத்துக் கொண்டே இருந்தது!

    ஸ்வீட் டேட்டா


    2 விழிப்புணர்வே முக்கியம்!

    1 நீரிழிவாளர்களில் டைப்2 டயாபடீஸால் பாதிக்கப்பட்டிருப்போர் உலக அளவில் 90%

    நீரிழிவு என்பது ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதுதான். நாம் சாப்பிடுகிற உணவு ரத்தத்தில் சர்க்கரையாகத்தான் (குளுக்கோஸ்) மாறுகிறது. அது செல்களுக்குச் சென்று எரிக்கப்பட்டு சக்தியாக மாறுகிறது. அது செல்களுக்கு எடுத்துச் செல்லப்பட இன்சுலின் தேவை. நம் உடலிலுள்ள கணையம் (பான்கிரியா) என்ற உறுப்பு மூலமே இன்சுலின் என்ற இயக்க நீர் சுரக்கிறது.

    இன்சுலின் இல்லையென்றால் செல்களுக்கு ரத்தத்திலிருந்து சர்க்கரை போய் சேராது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். செல்களுக்கு சக்தி கிடைக்காது. உறுப்புகளுக்கும் சக்தி இல்லாமல் பழுதடையும். இப்படியொரு இக்கட்டான இன்சுலின் குறைபாடுதான் சர்க்கரை நோயின் மூலாதாரம்! என அடிப்படையிலிருந்து ஆழமாகத் தொடங்குகிறார் டயாபடாலஜிஸ்ட் மனோன்மணி.

    நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. சர்க்கரை வந்தவர்களும் நோயாளிகள் அல்ல. இன்சுலின் என்னும் இயக்க நீர் குறைபாட்டால் ஏற்படும் மாற்றமே இது. ஆகவே, இதை குறைபாடு என்றே கூறுவோம்.

    *இரண்டாவது வகை (டைப் 2) நீரிழிவானது, பொதுவாக 30 வயதுக்கு மேல்தான் வரும். பாரம்பரியம் ஒரு காரணம். எடை அதிகமாக இருப்பது, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, அதீத மன அழுத்தம், மன அமைதியின்மை இவை எல்லாம் இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்குக் காரணமாகலாம். இதற்கு டயாபடீஸ் மெலிட்டஸ் என்று பெயர்.சாப்பிடும் முன்: 80 110 mg/dl சாப்பிட்டு, 2 மணி நேரம் கழித்து: 120 140 mg/dl இதுதான் ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பான அளவு

    *நம் உடலில் இன்சுலின் என்ற இயக்க நீர் சுரக்காமல் இருந்தாலும், குறைவாக சுரப்பதாலும், அதன் வேலையை சரிவர செய்யாததினாலும் இயல்பான அளவைவிட கூடுகிறது. இதன் அறிகுறிகள்... சோர்வு, அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, எடை குறைதல், மூட்டு வலி, கைகால் அசதி, அடிபட்ட காயம் ஆறாமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும் உறுப்பில் அரிப்பு, பார்வைக் கோளாறு ஆகியவை. எந்தவித அறிகுறியும் இல்லாமல் மருத்துவ பரிசோதனை மூலமும் டைப் 2 நீரிழிவு தெரிய வரலாம்.

    *கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையானது கண், சிறுநீரகம், கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள், இதயம், மூளை மற்றும் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கும். நினைவிழந்த நிலையும் ஏற்படலாம்.

    *இது ஒரு தொடர் குறைபாடு. அதனால் பரிசோதனையும் தொடர் சிகிச்சையும் அவசியம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், பரிசோதனை, விழிப்புணர்வு... இவை மிகவும் அவசியம்.

    * எப்போதும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

    காலை உணவு : 8 - 9 மணி.
    இடைவேளை : 11 மணி
    மதிய உணவு : 1 - 1:30 மணி
    இடைவேளை : 4 மணி
    இரவு : 7 -8 மணி

    * தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உப்பு குறைவாக உபயோகிக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்க்கக் கூடாது. இனிப்பு வகைகள் அறவே கூடாது. விரதமும் விருந்தும் தவிர்க்க வேண்டியவை.

    * காய்கறிகள்: எல்லாம் சாப்பிடலாம். கிழங்குகள் தவிர்க்கவும். கீரை வகைகள் மிக நல்லது.
    பழங்கள்: ஆப்பிள், சாத்துகுடி, தர்பூசணி, பப்பாளி, கொய்யா, மாதுளை சாப்பிடலாம்.

    * சரிவிகித சம உணவு:

    1. பயறு, பருப்பு வகைகள், 2. தானிய வகைகள், 3. காய்கறிகள், 4. கீரை வகைகள், 5 பழங்கள், 6. கொட்டை வகைகள்.
    * கசகசா, வெந்தயம், பூண்டு, சீரகம், சோம்பு, எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

    * பழங்களை சாறு பிழிந்து சாப்பிடாமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஓட்ஸ், ராகி முதலியவற்றை கஞ்சியாக செய்யாமல் களி மாதிரி செய்து சாப்பிடவும். எண்ணெயில் பொரித்த உணவு தவிர்க்கவும்.

    * உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அளவைக் குறைத்து, தேவையானவற்றை மட்டும் நேரம் தவறாமல் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுப்பாடாக இருக்கும்.

    * உடற்பயிற்சி...

    காற்றோட்டமான பசுமையான மரங்கள் நிறைந்த இடத்தில், காலையில் 3045 நிமிடம் வேகமாக நடப்பது மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுவது நல்லது. நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது. வயது, அவரவர் ஆரோக்கிய அடிப்படையில் பயிற்சி பெற்று யோகா செய்யலாம். பொதுவாக காலையிலிருந்து சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவையும் நல்ல உடற்பயிற்சிகளே!

    * பரிசோதனைகள்...

    சாப்பிடும் முன், சாப்பிட்ட பின் ஒன்றரை முதல் 2 மணி நேரத்துக்குள் ரத்த சர்க்கரை அளவு பார்க்க வேண்டும். குளுக்கோ மீட்டர் மூலம் பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவையும் அவ்வப்போது பார்க்க வேண்டும்.3 மாதத்துக்கு ஒருமுறை பிஙிகி1சி பார்க்க வேண்டும். அதில் 3 மாதத்தின் சராசரி அளவு தெரியும். அது 7 சதவிகிதத்துக்குக் கீழே இருக்க வேண்டும். சிறுநீரக பரிசோதனை (யூரியா, கிரியட்டினன்) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை, இதயம், ரத்தக்குழாய்கள், சிறுநீரகக்கல் பரிசோதனை செய்ய வேண்டும்.

    * மருந்துகள்...


    மருத்துவர் ஆலோசனையின் பேரில் மாத்திரை (அ) இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். வெளியூர் சென்றாலும் மருந்து, மாத்திரை பெயர் விவரம் ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொள்ளவும். போகும் வழியில் சாப்பிட வழி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தாழ்நிலை சர்க்கரை வர வாய்ப்புண்டு.

    * மன அமைதி மிகவும் முக்கியம். சின்னச் சின்ன காரணங்களுக்கு எல்லாம் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், நம்முடைய கடமையை மனமகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் செய்ய முடியும். ஆரோக்கியமாக பிறரைப் போலவே பல ஆண்டுகள் வாழ முடியும்.நீரிழிவுக்கு விழிப்புணர்வே மிகவும் முக்கியம். இந்த குறைபாட்டை நிறைவாக்கி நலமாக வாழ்வது உங்கள் கையில்தான் உள்ளது!

    ஒரு சாம்பிள் மெனு காலை உணவு: இட்லி (அ) தோசை 2 (அ) மூன்று. புதினா சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், சுண்டல் காய்கறி.
    இடைவேளை: மோர், வெள்ளரிக்காய், எதாவது பழம்.
    மதியம்: ஒன்றரை கப் கைக்குத்தல் அரிசி (அ) ஹைஃபைபர் அரிசி சாதம், சுண்டல், காய்கறி பொரியல் (அ) கூட்டு, சாம்பார், ரசம்.
    இடைவேளை: காபி (அ) டீ சர்க்கரையின்றி, காய்கறி சாலட் (அ) பழம் (அ) சுண்டல்.
    இரவு: இரண்டு சப்பாத்தி, காய்கறி குருமா, சுண்டல்.
    சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து பால் சாப்பிடலாம்.

    Last edited by chan; 28th Mar 2015 at 09:04 PM.
    jv_66 and sarjana ul like this.

  9. #59
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    All posts are noted with interest to make pdf 2

    jv_66 and chan like this.

  10. #60
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    இனிப்பைக் குறைத்தும் இனிமையாக உண்ணலாம்!
    1. நீரிழிவைச் சமாளிப்பது என்பது அறிவியல் மட்டுமே அல்ல...
    அது ஒரு கலை!


    நீரிழிவாளர்களுக்கு மட்டுமல்ல... எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும் கூட, சர்க்கரை பயன்பாடு அதீத விளைவுகளை ஏற்படுத்துகிறது. வேணாம்... ஆனா, வேணும் என்கிற இரட்டை மனநிலைக்குள் நம்மைத் தள்ளுகிற இந்த இனிப்பை என்னதான் செய்வது?ரொம்பவும் யோசித்துக் குழம்ப வேண்டாம். இதோ... இந்த குட்டி மாற்றங்கள் நம் உடல்நலத்தைப் பாதிக்காமலே, உணவை இனிமையாக்கும்.



    *ஃப்ரெஷ் ஜூஸ் நல்லதே... நீரிழிவு இல்லாதவர்களுக்கு மட்டும். நீரிழிவாளர்களும் எடை குறைப்பில் ஈடுபடுவோரும் இதற்கு மாற்றாக அனுமதிக்கப்பட்ட பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஜூஸில் அதிக அளவு சர்க்கரையும் குறைந்த அளவு ஊட்டச்சத்துமே உள்ளன. உதாரணமாக... ஓர் ஆப்பிளில் 2.6 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் 50 கலோரியும் உள்ளன. அதோடு, பழத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து நம் வயிறு நிறைவதாகவும் உணர வைக்கிறது. 250 மி.லி. ஆப்பிள் ஜூஸிலோ 6 டீஸ்பூன் அளவு சர்க்கரையும். 123 கலோரியும்
    உள்ளன.

    *பாக்கெட் பவுடர்களாக விற்கப்படும் இன்ஸ்டன்ட் சூப் வகைகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே ஃப்ரெஷ் ஆக சூப் தயாரித்து சூடாகப் பருகலாம். ஏனெனில், இன்ஸ்டன்ட் சூப்களில் 4 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் 171 கலோரிகளும் காணப்படுகின்றன. நாமே தயாரிக்கும் சூப்பில் புத்தம்புது காய்கறிகளைப் பயன்படுத்துவோம்... அதில் சர்க்கரை குறைவு... ஊட்டச்சத்தோ அதிகம். இதயத்துக்குப் பாதிப்பு உண்டாக்கும் அதிக அளவு உப்பையும் நாம் தவிர்க்க முடியும்.

    *கடைகளில் கிடைக்கிற ஃப்ரூட் யோகர்ட் போன்றவை கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம். மாற்றாக சர்க்கரை இல்லாத பிளைன் யோகர்ட் சாப்பிடலாம்... அதிக இனிப்பில்லாத பழங்களை தனியாகச் சாப்பிடலாம்.

    *காபி ஷாப்களில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் வேளையில் ஹாட் சாக்லெட், க்ரீம் கலந்த பானங்களைத் தவிர்க்கலாம். இவற்றில் 4.5 டீஸ்பூனுக்கும் அதிக சர்க்கரையும், 200 கலோரியும் உள்ளன. கொழுப்பு தனி! தேநீரிலோ குறைவான சர்க்கரையும் 20 கலோரியும்தான் கிடைக்கும், பால் கலந்திருந்தாலும் கூட! எது நல்லது?

    *ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீமில் 3 டீஸ்பூன் சர்க்கரையும் 180 கலோரியும் காணப்படுகின்றன. ஆசைக்கு எப்போதாவது செயற்கை இனிப்புள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். உண்மையில் வாழைப்பழத்தில் இதைவிட அதிக சத்துகளும் குறைவான சர்க்கரையுமே உள்ளன. ஆனால், நீரிழிவு கட்டுப்பாட்டைப் பொருத்தே வாழைப்பழ காமெடிகளுக்கு அனுமதி!

    *எப்போதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என அதீத வேட்கை ஏற்பட்டால், சடாரென சாக்லெட்டை எடுக்க வேண்டாம். ஒரு பார் சாக்லெட்டில் 260 கலோரியும் 6 டீஸ்பூன் சர்க்கரையும் இருக்கக் கூடும். அது மட்டுமல்ல...

    இனிப்பு ஆர்வமும் இதில் அடங்காது. கடலைமிட்டாயும் சிப்ஸும் கூட இப்படித்தான். தின்னத் தின்ன இன்னும் இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கும். ஒன்று மட்டும்தான் எனத் தொடங்கி, ஒரு பாக்கெட்டையே காலி செய்பவர்களே நம்மில் பலர். மாற்றாக கொஞ்சம் செர்ரி அல்லது கொய்யா சாப்பிடலாம். ஒரு சிறிய கப் செர்ரியில் 50 கலோரியும் 2 டீஸ்பூன் சர்க்கரையுமே உள்ளன. ஸ்வீட் டேட்டாசராசரி அமெரிக்கர் தன் வாழ்நாளில் 35 டன் உணவு உட்கொள்கிறார்!

    2. வாய் நாற்றமா? நீரிழிவாக இருக்கலாம்!

    இந்தத் தலைப்பைச் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் பல் மருத்துவர் யஷ்வந்த் குமார் வெங்கடராமன். உண்மைதான்... வாயே நோயைச் சொல்லும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, நீரிழிவையும் வாய் நாற்றமே சொல்லி விடுகிறது. அதோடு, நீரிழிவாளர்களும் இன்ன பிறரும் வாய் மற்றும் பற்களைப் பராமரிப்பது குறித்தும் அவர் விளக்குகிறார்.

    வாய் நாற்றம் என்பது நாம் வாயின் வழியே வெளியிடும் காற்றின் வாசம்தான். இது விரும்பத்தகாத மணமாக இருக்கும்பட்சத்தில் Bad Breath அல்லது Halitosis என்று அழைக்கப்படுகிறது. மிகுந்த தர்மசங்கடம் விளைவிக்கும் இந்த விஷயத்தை நாம் அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. முக்கியமாக நம்மை விட நமக்கு அருகில் உள்ளவர்களே, இதனால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    வாய் நாற்றத்தின் ஆரம்பம் பல் சுத்தம், வாய் சுத்தம் இல்லாததுதான். சில நேரங்களில் உணவில் அதிகம் சேர்க்கப்பட்ட பூண்டும் பின்விளைவுகளை அளிக்கும். இந்தச் சிறிய காரணங்களைத் தாண்டினால், அது பெரிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், உடனடியாக பல் மருத்துவரின் துணையோடு, இதைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.

    சரி... வாய் எப்படி நோயை சொல்லும்?

    *வாய் பராமரிப்பு சரியில்லாத காரணத்தால், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் கந்தக சேர்மங்களை வெளியிடும்.

    *மூச்சுக்காற்றில் பழ வாசனை இருப்பது ketoacidosis என்ற நிலையைக் குறிக்கும். இது நீரிழிவு உள்ளவர்களுக்கு உண்டாகும் வாய்ப்பு அதிகம். இது மிக அபாயமான ஒரு நிலையாகும். இன்சுலின் மிகமிகக் குறைந்து, உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களும் எரிக்கப்பட்டு, உடல் அபாயகட்டத்தை நோக்கிச் செல்லும்.

    *அதீத துர்நாற்றம் வாயிலிருந்து வெளிப்படுமானால், அது வயிற்றுக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். தொடர்ச்சியாக வாந்தி எடுத்திருந்தாலும் இப்படி நேரலாம்.

    *சிறுநீர் அல்லது மீன் அல்லது அமோனியா நாற்றம் இருந்தால், அது தீவிரமான சிறுநீரகப் பிரச்னையாகலாம்.

    *அழுகிய பழ வாசனை Anorexia Nervosa எனும் சாப்பிட பயப்படும் குறைபாட்டைக் குறிக்கும். எடை அதிகமாகி விடுமோ என்ற பயத்தில் உணவைத் தவிர்க்கும் மனநலப் பிரச்னை இது.

    *ஆஸ்துமா மற்றும் நுரையீரல், கல்லீரல் பிரச்னைகளும் மூச்சுக்காற்றில் மாறுபட்ட நாற்றத்தை உண்டாக்கும்.

    இவை இருக்கட்டும். வாய் நாற்றத்தின் மூலமே நீரிழிவை அறிய முடியும் என்பதே சமீபத்திய ஆய்வு முடிவு. நீரிழிவுக்கு முந்தைய நிலையையும் ஆரம்ப கால நீரிழிவையும் கூட, இன்ஃப்ராரெட் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் கண்டறிய முடியும். இது மட்டுமல்ல... ப்ரீத்தலைசர் கருவியை பயன்படுத்தியே ரத்த சர்க்கரை அளவை அறியக்கூடிய சோதனைகளும் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது வெற்றியடையும் பட்சத்தில், நீரிழிவாளர்கள் ஒரு துளி ரத்தத்தைக்கூட பரிசோதனைக்காக அளிக்க வேண்டியதில்லை!

    டயாபடீஸ் வாய் மணத்துக்கு என்ன காரணம்?

    நீரிழிவாளர்களின் வாய் நாற்றத்துக்கு முதல் காரணம் ஈறு சார்ந்த பிரச்னைகளே...இவற்றை Gum Diseases (Periodontitis) என்று குறிப்பிடுகிறோம். Periodontitis என்பதை பல்சூழ்திசு அழற்சி என்று தமிழில் சொல்லலாம். ஈறு அழற்சி அல்லது ஈறுவீக்கமான gingivitis, லேசான அல்லது நடுத்தரமான அல்லது பல்சூழ்திசு அழற்சி வரை பலதும் ஈறு சார்ந்த பிரச்னைகளே...

    இந்நோய்களில் நம் பல்லுக்கு ஆதரவு அளிக்கும் திசுக்களையும் எலும்புகளையும் பாக்டீரியா வெறியோடு தாக்குகிறது. இதனால் வீக்கம் ஏற்படுகிறது. அதோடு விட்டால் பரவாயில்லை... வீக்கம் காரணமாக உடலின் மெட்டபாலிசம் என்கிற வளர்சிதைமாற்றமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    வளர்சிதைமாற்றத்தில் கோளாறு ஏற்பட்டால், ரத்த சர்க்கரை அளவு கூடுவதும் இயல்பு. அதன் பிறகு நீரிழிவும் மோசமாகும் என்பது நாம் அறிந்ததே. சாதாரணமாக பல்லிலோ, ஈறிலோ ஏற்படக்கூடிய ஒரு சிறிய பிரச்னை கண்டுகொள்ளாமல் விடப்பட்டால், நீரிழிவையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது அதிர்ச்சியான செய்திதானே?

    மற்றவர்களை விடவும், நீரிழிவாளர்களுக்கு ஈறு நோய்களைக் குணப்படுத்த அதிக காலம் பிடிக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீரிழிவும் ஈறு நோய்களும் சேரும்போது இருமுனைக் கத்தி போல அபாயமாகி விடுகிறது. நீரிழிவு காரணமாக ஈறு நோய்கள் ஏற்படலாம். ஈறு நோய்கள் காரணமாக நீரிழிவு அதிகமாகலாம். IOSR Journal of Dental and Medical Sciences அளித்துள்ள ஆய்வுத்தகவலின் படி, மூன்றில் ஒரு நீரிழி வாளருக்கு ஈறு நோய்களும் இருக்கின்றன.

    ஏற்கனவே நீரிழிவுடன் தொடர்புள்ள இதய நோய்கள், ஸ்ட்ரோக் ஆகியவற்றோடும் ஈறு நோய்களுக்குத் தொடர்பு இருப்பது அடுத்த அதிர்ச்சி.கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு காரணமாக உடலின் ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுகிறது. ஈறுகளிலும் இப்பிரச்னை எதிரொலிக்கிறது. ஈறுகளுக்கும் பற்களுக்கும் போதுமான ரத்தம் பாயாவிட்டால், அவை பலவீனம் ஆவதோடு, நோய்த்தொற்றுக்கும் ஆளாகின்றன.

    வாய்ப்பகுதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, அங்கு பாக்டீரியாவும் கன்னாபின்னாவென வளர்கிறது. இதனால் நோய்த்தொற்றும் வாய் துர்நாற்ற மும் உண்டாகின்றன. சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத போதோ, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் திறனையும் உடல் இழக்கிறது. ஈறு நோய்கள் குணமாவதும் கடினமாகிறது. இப்படி சுத்திச் சுத்தி அடிக்கிறது இந்தத் தாக்குதல் புயல்!ஈறு நோய்களின் பிரதான அறிகுறி வாய் நாற்றம்தான். மற்ற அறிகுறிகள்...

    *சிவந்த அல்லது மென்மையான ஈறு...

    *ஈறுகளில் ரத்தக் கசிவு...

    *பல் கூச்சம்...

    *ஈறு பின்னடைதல்...

    ஈறு பிரச்னைகளிலிருந்து எப்படி வருமுன் காப்பது? நீரிழிவு கரோட்டின் என்ற நிலையை ஏன் அபாயமாகக் கருதுகிறோம்? அடுத்த இதழில் பேசுவோம்.

    சாதாரணமாக பல்லிலோ, ஈறிலோ ஏற்படக்கூடிய ஒரு சிறிய பிரச்னை கண்டுகொள்ளாமல் விடப்பட்டால், நீரிழிவையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். நீரிழிவும் ஈறு நோய்களும் சேரும்போது இருமுனைக் கத்தி போல அபாயமாகி விடுகிறது.


    Last edited by chan; 30th Mar 2015 at 12:56 PM.
    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter