Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #61
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    சர்க்கரையில் அக்கறை

    சமாளிக்க ஈசி டிப்ஸ்


    'ரு சர்க்கரையில்லாத காபி கொடுங்க’, 'ஸ்வீட்... சின்ன பீஸ் போதும்’ - பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே உச்சரித்து வந்த வார்த்தைகள் இவை. ஆனால், இன்றைய இளைஞர்களும் ஹோட்டல், பார்ட்டி, பங்ஷன்களில் தித்திப்பு உணவுகளை அதிகம் தவிர்க்க... இப்போது தனியாக சர்க்கரை இல்லாத டீ கேன்களை விருந்துகளில் வைப்பது சகஜமாகிவிட்டது. காரணம், 'கசப்பான’ சர்க்கரை நோய்தான்.

    மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சர்க்கரை நோய் பற்றிய பயத்திலேயே பலரும்


    வாழ்கின்றனர். சர்க்கரையைக் கட்டுப்படுத்த வழி தேடி, கடைசியில் 'அறுகம்புல் ஜூஸ்’ விற்பவர் முன் போய் நிற்கிறார்கள். அரிசியைக் கண்டால் அலறுகிறார்கள். நடையோ நடை என்று நடக்கிறார்கள். 'சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. வாழ்க்கை முறையில் சின்னஞ்சிறு மாற்றங்களை செய்து கொண்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்' என்கிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பரணிதரன்.

    'சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உணவு விஷயத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை. சுவையான லட்டு, அல்வா சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எதை, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும்'' என்கிறார்.

    உடல் எடை


    உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவேண்டும். உடல் எடை சற்று அதிகமாக இருந்தால், ஐந்து அல்லது 10 சதவிகிதம் எடையைக் குறைப்பது கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன். உடலில் உள்ள எல்லா கொழுப்பும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதில்லை. கொழுப்பு எங்கே அதிகம் படிகிறது என்பதுதான் முக்கியம். அதிலும், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு ஆபத்தானது. இப்படி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்திருப்பவர்களை 'ஆப்பிள்’ டைப் என்போம். இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ.க்குக் கீழும், பெண்களுக்கு 80 செ.மீ.க்குக் கீழும் இருக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உணவு

    சாப்பிடும் உணவைத் திட்டமிடுவது அவசியம். தட்டில் ஊட்டச்சத்து நிறைவாகவும், கொழுப்பு மிகமிகக் குறைவாகவும், கலோரி தோராயமான அளவிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இலையின் ஒரு பகுதியில் சாதத்தை அதிகமாகவும், மற்றொரு பகுதியில் காய்கறியை வைத்தும் சாப்பிடுவோம். இலையைத் திருப்பி காய்கறிகள் அதிகமாகவும், சாதம் குறைவாகவும் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கரிப்பதில் கார்போஹைட்ரேட்டுக்குதான் முக்கிய பங்கு இருக்கிறது. எது எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளதோ அது எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. உணவில் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, வண்ணங்களைச் சேர்க்கலாம்.

    வயிறு நிறைய பயிறு


    முடிந்தவரை சமைக்காத இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது, எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம். வயிறு நிறைய முளைவிட்ட தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள என்சைம்கள் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலைப் பாதுகாக்கும். மேலும், நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். இதனால், நம் உடல், சர்க்கரையைக் கிரகிக்கும் வேகம் குறையும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆப்பிள், கேரட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சர்க்கரையை மட்டுமல்ல, ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கும்.

    வீட்டு உணவு

    வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செய்யப்படும் உணவுகளில் சுவையூட்டிகள், நிறமேற்றிகள் உள்ளிட்ட பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் சுவைமிக்கதாக இருந்தாலும், அதில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன. அவற்றில், கார்போஹைட்ரேட்தான் அதிக அளவில் உள்ளது. வீட்டில் என்ன சமைக்கிறோம்; அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு தவிர்க்கப்படும். உணவை பொறுமையாக மென்று சாப்பிடவேண்டும். போதும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு சாப்பிட வேண்டாம். கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.



    உடற்பயிற்சி

    அன்றாட உடற்பயிற்சி நோயின் தீவிரத்தைக் குறைத்து, எதிர்காலத்தில், சர்க்கரை நோய்



    ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் செலவிடப்படும் கலோரி காரணமாக உடல் எடை குறைகிறது. இதனால், உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. உடற்பயிற்சியானது இன்சுலின் ஏற்புத் தன்மையை (சென்சிடிவிட்டி) அதிகரிக்கிறது. தொடர் உடற்பயிற்சியால் கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமும் குறைகிறது. எனவே, தினமும் உடற்பயிற்சிக்கு என்று நேரத்தை செலவிடுவது அளவில்லா ஆரோக்கியத்தைத் தரும்.


    சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...
    1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
    2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
    3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.
    4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.
    5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.


    Sponsored Links
    Last edited by chan; 31st Mar 2015 at 02:23 PM.
    jv_66 and Dangu like this.

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    மகிழ்ச்சியாக இருக்க விரும்புங்கள்!


    1 சோனம் கபூர்...

    பாலிவுட்டின் பேபி டால்! நடிகர் அனில் கபூரின் அன்பு மகள். 2007ல் Saawariya படம் மூலம் அறிமுகமானவர். “I hate love stories” படத்தில் இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்டு, பிஸியான ஸ்டாராக வலம் வருபவர். நம்ம ஊர் தனுஷ் உடன் Raanjhanaa படத்தில் நடித்த அந்த அழகியேதான்! (தமிழில்: அம்பிகாபதி).



    சோனம் தினமும் சராசரியாக 10 மணி நேரத்துக்கும் அதிகமாக படப்பிடிப்புத் தளத்தில் ஆடுகிறார்... ஓடுகிறார்... காதல் செய்கிறார்... கண்ணீரும் விடுகிறார். ஓயாது உழைக்கும் இவரைப் பற்றி பலரும் அறியாத ஒரு ரகசியம்...

    இவர் டைப் 1 நீரிழிவாளர் (Juvenile diabetes ) என்பது! ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என எந்த பேதமும் பாராமல் தாக்கக்கூடிய டயாபடீஸ் பிரச்னையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணமாகத் திகழ்கிறார் சோனம்.

    ஒரு காலத்தில் 90 கிலோ எடை இருந்தார். சைஸ் 16. இது தனது நீரிழிவுக்கு சவாலானது என உணர்ந்த அடுத்த நிமிடமே, செயலில் இறங்கினார். இப்போது அவரது எடை
    65 கிலோ. சைஸ் 2! தீவிரமான உடற்பயிற்சி மற்றும் திட்டமிட்ட உணவுத் திட்டமே அவரது வெற்றி ரகசியம். 5 வேளைகளாகப் பிரிக்கப்பட்டலோ கார்போஹைட்ரேட் ஹை புரோட்டீன் உணவு முறை. காலை உணவாக ஓட்மீல் மற்றும் அனுமதிக்கப்பட்ட பழங்கள். அதன் பின் உடற்பயிற்சி.

    பிறகு பிரவுன் பிரெட்டும் முட்டையின் வெள்ளைக்கருவும். அதோடு புரதச்சத்து பானம். மதிய உணவுக்கு ராகி சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், சாலட். மாலையில் மீண்டும் பிரவுன் பிரெட்டும் முட்டையின் வெள்ளைக்கருவும். இரவு உணவில் சூப், சாலட், ஒரு துண்டு க்ரில்டு சிக்கன் அல்லது மீன். இடையிடையே உலர் பழங்கள்.

    நாள் முழுக்க நிறைய நீராகாரம் உண்டு. சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றையெல்லாம் சோனம் கண்ணாலும் பார்ப்பது இல்லை!மருத்துவர்கள் சோனம் கபூருக்கு அளித்த 4 அறிவுரைகளை அவர் தவறாது பின்பற்றுகிறார்.

    * பிதீ1ணீநீ அளவைத் துல்லியமாகப் பராமரித்தல்
    * சமச்சீர் உணவுத் திட்டம்
    * வழக்கமான உடற்பயிற்சி
    * சரியான மருந்துகள்.

    இந்த அளவு சோனம் துல்லியமாகச் செயல்படுவதற்கு, ஒருமுறை அவர் பட்ட அவஸ்தையும் காரணம். வயிற்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றை அவர் கண்டுகொள்ளாமல் விட்ட போது, அது குடல் நோயாக மாறி, அவரை மருத்துவமனை படுக்கையில் 10 நாட்கள் தள்ளியது. அந்தக் கொடுமையான அனுபவத்துக்குப் பிறகு, அவரது உடல்நல அக்கறையில் அலட்சியம் காட்டுவதே இல்லை!

    திட்டமிட்டுச் செயல்பட்டதன் காரணமாக, சோனம் கபூரால் ஒரே ஆண்டில் 30 கிலோ எடை குறைக்க முடிந்தது. வெயிட் ட்ரெயினிங், யோகா, பைலேட்ஸ் ஆகிய மூன்றும்தான் அவரது ரெகுலர் பயிற்சிகள். இவற்றோடு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்குவாஷ் ஆடுவார்... மீனாக மாறி நீந்துவார்.

    ‘‘நீரிழிவுக்குப் பிறகு, நீங்கள் ஹைபர் சென்சிட்டிவ் உடையவராக (மிகை உணர்வு) மாறிவிடுவீர்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்பதில் ஏற்கனவே உங்களுக்கு ஒருவித சிக்கலான மனப்பான்மை இருப்பதால், யார் என்ன சொன்னாலும் உங்களைப் பாதிக்கும். நீங்களும் அவர்களுக்குப் பதிலுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் சண்டைதான் மிஞ்சும். உறவுகள் சிக்கலாகும். நான் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன்... அதற்கு ஏற்பவே செயல்படுகிறேன்.

    இது உங்களுக்கும் பொருந்தும் என சக நீரிழிவாளர்களுக்கு மனவியல் ரீதியாக புதுமையான கோணத்தில் அனுபவம் பகிர்கிறார், நாள் தவறாமல் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சின்சியர் சோனம். இதில் அவருக்கு எந்தச் சலிப்பும் வருத்தமும் இல்லை என்பதே செய்தி!சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றைஎல்லாம் சோனம் கபூர் கண்ணாலும் பார்ப்பது இல்லை!

    2 சரியா? தவறா?


    உலகின் ஒட்டுமொத்த டயாபடீஸ் நபர்களில் 10 முதல் 15 சதவிகிதத்தினரே டைப் 1 பிரச்னை உடையவர்கள்.

    குடும்பப் பின்னணியில் சர்க்கரை நோய் இருந்தால்தான் அடுத்த சந்ததியினருக்கும் வரும்?

    இது முற்றிலும் தவறு. குடும்பப் பின்னணியில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், மற்றவர்களுக்கும் வருவதற்கான அபாயம் அதிகம். ஆனால், அப்படி இல்லாதவர்களுக்கும் இன்று வேறு காரணங்களால் நோய் வரும். முன்பெல்லாம் 60, 70 வயதில் வந்த சர்க்கரை நோய், இப்போது 18, 19 வயதிலேயே வருகிறது.

    அடிபட்ட காயமோ, புண்ணோ உடனே ஆறிவிட்டால் சர்க்கரை நோய் இருக்காது?

    இதுவும் தவறான அபிப்ராயம். சர்க்கரையின் அளவைப் பொறுத்த விஷயம் இது. அளவு அதிகரிக்கிற போதுதான் காயம் ஆறாமல் இருப்பதெல்லாம் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் அப்படி இருக்காது.அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குத்தான்

    சர்க்கரை நோய் வரும்?

    அப்படிப் பார்த்தால் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு சர்க்கரை நோயே இருக்காது இல்லையா? என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்.

    இனிப்பு அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்?

    இனிப்பு சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும். பருமன் கூடினால் சர்க்கரை நோய் வர சந்தர்ப்பங்கள் அதிகம்.பாகற்காய் மாதிரி கசப்பான அயிட்டங்கள்

    சாப்பிடுவது சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்?


    சர்க்கரை இனிப்பு என்பதால், கசப்பான உணவுகளை சாப்பிடுவது அதை ஈடுகட்டும் என கண்மூடித்தனமாக உருவான நம்பிக்கை இது. வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். அதை சாப்பிடுகிற போது உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. பருமனாவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் அபாயமும் குறைகிறது.

    சர்க்கரை நோயாளிகள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும்?

    அது அவரவர் எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தது. எடைக்கும் உயரத்துக்கும் ஏற்றபடி, உழைப்புக்கேற்றபடி சாப்பிடுவதில் தவறில்லை.

    கஞ்சி மாதிரியான திரவ உணவுகளை சாப்பிடக் கூடாது?

    கோதுமையை சப்பாத்தியாக சாப்பிடுகிறோமா, கஞ்சியாக சாப்பிடுகிறோமா என்பதில் இல்லை பிரச்னை. அதில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி போன்றவை மிக நல்லது.

    சர்க்கரை நோய்க்கு காலத்துக்கும் மாத்திரைகளைத் தொடர வேண்டும்?

    கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் கண்டிப்பாக இருந்தால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளின் உதவியின்றி இருக்கலாம்.

    சுய சோதனையே போதும்?

    சர்க்கரையின் அளவை சரிபார்க்க உதவும் கருவியை வைத்துக் கொண்டு, வீட்டிலேயே அடிக்கடி பார்த்துக் கொள்கிறவர்கள் பலர். அதற்காக அதையே முழுக்க நம்பாமல், அடிக்கடி பரிசோதனைக்கூடத்தில் செய்கிற போது, உடனேயே இந்தக் கருவியிலும் செய்து, வித்தியாசத்தைப் பார்க்கலாம். வீட்டிலேயே வாரம் ஒரு முறை கூட சோதனை செய்து கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் செய்து பார்க்கலாம்.

    பிதீகி1நீ என்கிற சோதனையில் கடந்த 2 அல்லது 3 மாதங்களுக்கான சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ளலாம். ஏற்ற, இறக்கம் சரியாகத் தெரிய இந்த சோதனை உதவும்.


    குறைந்தால் நல்லதுதானே?
    சிலருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சாப்பிடுகிற போது, சர்க்கரையின் அளவு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பிக்கும். தனக்கு சர்க்கரை ரொம்பவும் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் தப்பர்த்தம் செய்து கொள்வார்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும், இப்படி மாத்திரைகளால் சர்க்கரை அளவு குறையலாம். எனவே, சிறுநீரகப் பரிசோதனை, நீரிழிவு நோயாளிகள் எல்லாருக்கும் அவசியம்.

    மாத்திரைகள் உதவாத போது?

    ஆரம்ப நிலை நீரிழிவை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகளின் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். சர்க்கரை அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். இன்சுலின் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், அது தொடர்கதையாகி விடும் (Once on insulin. always on insulin) என பரவலான நம்பிக்கை ஒன்று உண்டு. இது தவறு. சர்க்கரை அளவு தாறுமாறாக எகிறும் போது சிலருக்கு சில வாரங்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு, கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, பிறகு, மருத்துவர் ஆலோசனை பெற்று, மறுபடி மாத்திரைகளைத் தொடரலாம்.

    இன்சுலினில் பல வகைகள் உள்ளன. ஷார்ட் ஆக்டிங் இன்சுலின் என்பது 4 முதல் 6 மணி நேரம் வரை பலனளிக்கும். இதை உணவுக்கு முன் போட்டுக் கொள்ள வேண்டும்.

    லாங் ஆக்டிங் இன்சுலின் என்பது 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்துக்குப் பலனளிக்கும்.நோயாளிகளின் உடல்நிலை மற்றும் பாதிப்பின் அளவைப் பொறுத்து நாளொன்றுக்கு 1 முதல் 4 இன்சுலின் ஊசிகள் வரை தேவைப்படலாம்.

    மாத்திரைகளை ஆரம்பித்த பிறகு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு தடவை, முறையான மருத்துவப் பரிசோதனை முக்கியம். ரத்த சர்க்கரை அளவுக்கான சோதனையும், ரத்த அழுத்தத்துக்கான சோதனையும் செய்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரைக்கான சோதனையை எப்போதும் மாத்திரையை சாப்பிட்ட பிறகே எடுக்க வேண்டும். இவை தவிர, பி.பி. மற்றும் கொலஸ்ட்ராலுக்கான சோதனைகளும் அவசியம்.


    Last edited by chan; 1st Apr 2015 at 10:50 AM.
    Dangu likes this.

  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு – உணவு முறை.



    நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது.

    உணவுக்கட்டுப்பாடு என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர் தவறாக கருதி கொள்கின்றனர். உண்மையில் இது மிக மிக எளிதான முறை இதில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய 2 விதிகள்

    1. எந்த உருவிலும் சர்க்கரையை சாப்பிடக் கூடாது.

    2. மொத்த கலோரி(calorie) அளவைக் கட்டுப்படுத்துதல்.

    நீரிழிவுக்காரர்களின் எதிரி என்று சொல்லப்படும் அரிசி உணவையே அவர்கள் சாப்பிடலாம். ஏன்னென்றால் கோதுமை, இராகி, அரிசி இம்முன்றிலுமே ஒரே அளவு மாவுச்சத்து இருப்பதே காரணம். வெள்ளை அரிசியை விட கைகுத்தல் அரிசியே சிறந்தது.

    ஆனால் உட்கொள்ளும் அளவை குறைத்து
    கொள்ளவேண்டும்.சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மணிச்சம்பா அரிசி (சந்தையில் உள்ள மூல்கிரி அரிசி),பல்வேறு ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு(Low
    GlycemicIndex) நீரிழிவுக்குச் சிறந்த்து என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

    நீரிழிவுக்கார்ர்களுக்கென்று வீட்டில் தனியாக சமையல் தேவையில்லை.மற்றவைகளுக்கு சமைக்கப்படும் உணவையே சாப்பிடலாம்.அரிசி உணவு குறைவாகவும்,கீரை,காய்கறிகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் நீரிழிவுக்கார்ர்களின் தோழர்கள்.தரைக்குக்கீழ் வளரும கிழங்கு சாப்பிடக் கூடாது. இரண்டு சாப்பாட்டிற்கிடையில் வயிற்றை நிரப்புக் கூடிய மோர்,சூப்,எலுமிச்சை பழச்சாறு, தக்காளிச்சாறு மற்றும் தக்காளி வெள்ளரிக்காய் சாலட்அதிகமாக சாப்பிட வேண்டும். மதுப் பழக்கத்தையும் நொறுக்குத் தீனி திண்பதையும் அடியோடு நிறுத்த வேண்டும்.

    உணவு அட்டவணை

    சாப்பிடக் கூடாது.

    1. சர்க்கரை.
    2. கரும்பு.
    3. சாக்லெட்.
    4. குளுக்கோஸ்.
    5. காம்பளான்.
    6. குளிர் பானங்கள்.
    7. சாம் வகைகள்.
    8. பால் கட்டி.
    9. திரட்டுப்பால்.
    10. பனிக்கூழ்.
    11. வாழைப்பழம்.
    12. பலாப்பழம்.
    13. மாம்பழம்.
    14. நுங்கு.
    15. சப்போட்டா.
    16. சீதாப்பழம்.
    17. உலர்ந்த திராட்சை.
    18. சேப்பங்கிழங்கு.
    19. உருளைக்கிழங்கு.
    20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.


    அளவோடு சாப்பிடலாம்.
    1. கம்பு.
    2. ஓட்ஸ்.
    3. அரிசி.
    4. அவல்.
    5. இரவை.
    6. பார்லி அரிசி
    7. சோளம்.
    8. மக்காச் சோளம்.
    9. கேழ்வரகு.
    10. கோதுமை.
    11. பாதாம் பருப்பு.
    12. முந்திரிப் பருப்பு.
    13. வேர்க்கடலை.
    14. பிஸ்தா பருப்பு.
    15. வால் நட்.Font size


    அளவில்லாமல் சாப்பிடலாம்.
    1. பாகற்காய்
    2. சுரைக்காய்.
    3. வாழைத்தண்டு.
    4. வெள்ளை முள்ளங்கி.
    5. தக்காளி.
    6. கொத்தவரங்காய்.
    7. காராமணி.
    8. வெள்ளரிக்காய்
    9. அவரைக்காய்.
    10. முருங்கைக்காய்.
    11. கீரை.
    12. கண்டங்கத்திரி.
    13. கோவைக்காய்.
    14. வெங்காயம்.
    15. பூசணிக்காய்.
    16. கத்திரிக்காய்.
    17. வாழைப்பூ.
    18. பீர்க்கங்காய்.
    19. பப்பாளிக்காய்.
    20. வெண்டைக்காய்.
    21. முட்டைக்கோஸ்.
    22. நூல்கோல்.
    23. கோவிப்பூ.
    24. சீமை கத்திரிக்காய்.

    Last edited by chan; 1st Apr 2015 at 02:12 PM.
    sumathisrini and Dangu like this.

  4. #64
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    கிளைசமிக் அளவுகள்


    சில உணவுகள் ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இந்த வகை உணவுகளிலுள்ள கலோரிகளே இருந்தாலும், வேறுசில உணவுகள் ரத்த சர்க்கரையை பாதிப்பதில்லை. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் உணவுகளின் தன்மையை அளவிடுவது தான் "கிளைசெமிக் இன்டெக்ஸ்" எனப்படும். இவைகளை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம். சர்க்கரை நோயாளிகள் அதிக 'கிளைசெமிக் இன்டெக்ஸ்' உணவுகளை ஒதுக்க வேண்டும்.

    பொருட்கள் கிளைசமிக் இன்டெக்ஸ்

    தானிய வகைகள்

    1. ரொட்டி - 70
    2. கம்பு - 71
    3. பச்சரிசி - 72
    4. கோதுமை பரோட்டா - 70

    டிஃபன் உணவுகள்

    1. இட்லி - 80
    2. சுண்டல் - 80
    3. பொங்கல் - 55
    4. பெசரெட்டு - 60
    5. உப்புமா - 75

    பால், பால் சார்ந்த உணவுகள்

    1. பால் - 33
    2. தயிர் - 36
    3. ஐஸ்கிரீம் - 36

    பழங்கள்

    1. ஆப்பிள் - 39
    2. வாழைப்பழம் - 69
    3. ஆரஞ்ச் - 40

    இனிப்பு வகைகள்

    1. ஃப்ருக்போஸ் - 20
    2. குளூகோஸ் - 100
    3. மால்டோஸ் - 105
    4. சுக்ரோஸ் - 59
    5. தேன் - 87

    காய்கறிகள்

    1. பீன்ஸ் - 51
    2. உருளைக்கிழங்கு - 70
    3. சர்க்கரை வள்ளி கிழங்கு - 48
    4. கருணாக்கிழங்கு - 51
    5. பீட்ரூட் - 64

    பருப்புகள்

    1. கடலைபருப்பு - 47
    2. பச்சைப் பயிறு - 48
    3. உளுந்து - 48

    இதர

    1. வேர்க்கடலை - 13
    2. உருளை வறுவல் - 51
    3. தக்காளி சூப் - 38

    நார்ச்சத்து



    நார்ச்சத்து உணவுகளில் கொழுப்பு குறைவாக இருக்கும். இவ்வகை உணவுகள் சத்துகளை தவிர மற்றவற்றை வெளியேற்றிவிடும். ஒரு நாளில் 40 கிராம் நார்ச்சத்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்தால் விளையும் நன்மைகள்.


    1. நார்ச்சத்து, உடலில் சர்க்கரை சீரணிப்பதை தாமதப்படுத்துகிறது. இதனால் இன்சுலினின் வேலை சுலபமாகும்.
    2. கொலஸ்ட்ரால் செரிமாணத்தை குறைக்கிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
    3. தண்ணீரை உறிஞ்சி மலத்தை அடர்த்தியாக்கி ஈஸியாக வெளியேற்ற உதவும். மலச்சிக்கலை தவிர்க்கும்.
    நார்ச்சத்து மிகுந்த பொருட்களில் முக்கியமானது வெந்தயம். அலோபதிக் மருத்துவர்களே

    இதன் பொடியை சிபார்சு செய்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள், 10-20 கிராம் வெந்தயத்தை, உணவுக்கு சிறிது (5-10 நிமிடங்கள்) முன்பு அல்லது உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு குறையும். அதிக அளவு வெந்தயம் வாய்வு கோளாறுகள், வயிறு உப்புசம், பேதி இவைகளை உண்டாக்கலாம். தவிர வெந்திய இலைகளில் விட்டமின், தாதுப் பொருட்கள் இருந்தாலும். டயாபிடீஸ் நோயை கட்டுப்படுத்தாது. வெந்தய விதைகள் தான் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

    உணவுகளின் பரிமாணங்கள்
    சமைத்த உணவு, சமைக்காத உணவு, திரவ உணவு, திட உணவு இவை மாவுசத்து ஜுரண மாவதை வெவ்வேறு விதமாக கட்டுப்படுத்தும். ராகி கஞ்சி, கோதுமை கஞ்சி இவைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். காரணம் இவை சீக்கிரமாக டைஜெஸ்ட் ஆவது தான். தவிர பசியை, திரவ உணவுகளால், தீர்க்க முடியாது. அதிகம் உட்கொள்ள வேண்டும். கலோரிகள் அதிகரிக்கும். கம்பை அடையாகவும், கோதுமையை சப்பாத்தி ஆகவும் உண்டால், ரத்த சர்க்கரை அதிகமாவது தாமதமாகும். அதேபோல் ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிடுவது, ஜுசாக செய்து குடிப்பதை விட, நல்லது.

    சர்க்கரை நோயாளிகள் எந்த விதமான கஞ்சி, கூழ், களி சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    புரதத் தேவைகள்:

    உடல் திசுக்களை போஷித்து, வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பொருள் புரதம். சராசரி மனிதனுக்கு 50-60 கிராம் புரதம் தினசரி தேவை. அதாவது மனிதனின் உடல் எடைக்கு ஏற்ப 0.8 லிருந்து 1.0 கிராம், ஒருகிலோ உடல் எடைக்கு என்ற கணக்கின் படி புரதம் தேவை.

    கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் சேர்ந்த கலவை புரதம். இதில் சல்ஃபரும் பாஸ்பரஸீம் சேர்ந்திருக்கலாம். அமினோ அமிலங்கலால் உருவாக்கப்படுவது புரதம். இந்த அமினோ அமிலங்களை முழுவதுமாக உடலால் தயாரிக்க முடியாது. சில அமினோ அமில புரதங்களை உணவு மூலம் தான் உடலில் சேர வேண்டும்.

    1. முதல் தர புரதங்கள், மாமிசங்கள் (மட்டன், சிக்கன், மீன், இதர மாமிசங்கள்) முட்டை இவற்றில் அதிகம். பால், தயிர், பனீர் இவைகளிலும் முதல்தர புரதம் உண்டு.

    2. இரண்டாந்தர புரத சோயா பீன்ஸ், பருப்புகள், பட்டாணி பாதாம் பருப்பு, இதர பீன்ஸ் வகைகள்.

    3. மூன்றாம் தர புரதங்கள் - தானியங்கள் (ஓட்ஸ், பார்லி, கோதுமை, ராகி, அரிசி)

    உங்களின் உணவு தேவைகளில் மூன்றில் ஒரு பங்காவது முதல் தர புரதம் சேர்ந்து இருக்க வேண்டும்.

    Dangu likes this.

  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!

    காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார்.



    சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்... அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.

    ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமானது. நண்பர் ஒருவர், நீரிழிவுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு போலி மருத்துவரின் முகவரியைச் சொல்ல, அங்கே சென்றார். அந்த மருத்துவர் சில இலைகளைக் கொடுத்தார். ‘இரவில் ஒரு தம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு வைத்து, காலையில் நீரைக் குடியுங்கள்.

    நீரிழிவு ஓடிவிடும்’ என்றார். காமாட்சிநாதன் அதை நம்பினார்... தினமும் மூலிகைத் தண்ணீரைக் குடித்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக அவரால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மையை அடைவதிலேயே பிரச்னை!

    வேறு வழியில்லாமல் நீரிழிவு நிபுணரை அணுகினார். பரிசோதித்த டாக்டர், காமாட்சிநாதனின் உடலில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாகியிருக்கிறது என்பதைச் சொன்னார்... கடிந்து கொண்டார். ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், தாம்பத்தியத்தைப் பாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது என்பதை சுட்டிக் காட்டினார்.

    நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண்கள் பாதிக்கப்படும்... சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்... இதய நோய்கள் ஏற்படும்... பாதங்களில் புண்கள் வரும். இவை அனைவரும் அறிந்தவை. சரி... நீரிழிவு, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? ஆம்... நிச்சயமாக... எப்படி?

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதையே ‘சர்க்கரை நோய்’ அல்லது ‘நீரிழிவு பிரச்னை’ என்கிறோம். நமது ரத்தக்குழாய்களில் மூன்று பகுதிகள் உள்ளன. உட்பகுதி ‘எண்டோதீலியம்’ என்று அழைக்கப்படும். இதனுள் பல ரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் Advanced glycation end products எனும் பொருட்கள் உருவாகி ரத்தக்குழாயின் உட்சுவரை அடைத்துக் கொள்ளும். மற்ற உறுப்புகளுக்குப் போக வேண்டிய ரத்த ஓட்டம் இதனால் குறையும். நீரிழிவு பிரச்னையுடன் கொழுப்பும் அதிகமாகிவிட்டால் ரத்தக்குழாய்களின் சுவர்கள் மேலும் குறுகிவிடும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.

    ஆணுறுப்பில் நிறைய காலி இடங்கள் உள்ளன. செக்ஸ் உணர்வுக்கு உட்படும் போது உடலின் மற்ற இடங்களில் உள்ள பெருமளவு ரத்தம், காலியான இடங்களில் சேர்ந்து ஆணுறுப்பை பலூன் போல விரிவடைய செய்கிறது... விறைப்புத் தன்மையை ஏற்படுத்து கிறது. இப்படி ஆணுறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்தால், விறைப்புத்தன்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். சரியாக உறவில் ஈடுபட முடியாது. தாமதமாக விந்து வருவது, விந்து வராமல் போவது, மூத்திரப்பைக்குள் விந்து போய்விடுவது போன்ற பிரச்னைகளும் உண்டாகும்.

    பெண்களுக்கு ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் யோனிமலரில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் செக்ஸில் முழுமையான சுகத்தை அடைய முடியாது. பெண் உறுப்பில் நீரும் சுரக்காது. ‘டயாபடிக் நியூரோபதி’ பிரச்னையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாகும். நீரிழிவு பிரச்னையால் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்னை அடைந்த ஆண்கள் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. நரம்புகளைத் தூண்டிவிடும், விறைப்புத் தன்மையை அடைய வைக்கும் மருந்துகளும் மாத்திரைகளும் இப்போது கிடைக்கின்றன.

    அவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, அத்தியாவசியமான உடற்பயிற்சி களை மேற்கொள்வது, பொரித்த, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பது, வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பிரச்னை உள்ளவர்கள் உடனே அணுக வேண்டியது சரியான நீரிழிவு நிபுணர் ஒருவரை!


    Dangu likes this.

  6. #66
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    ஓர் ஆரஞ்சு விளக்கு முன்னெச்சரிக்கை!

    ஆரம்ப நிலை நீரிழிவு
    விளக்குகிறார் பேராசிரியர் டாக்டர் எஸ்.முத்துச் செல்லக்குமார்

    நமது நாடு, கொஞ்சம் கொஞ்சமாக நீரிழிவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு நீரிழிவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 6.5 கோடி. நீரிழிவுக்கு முந்தைய நிலையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 7.72 கோடி என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ என்றால் என்ன?

    ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...’ என்பதுபோல, யானை போன்ற மிகப்பெரிய நோயாகக் கருதப்படும் நீரிழிவு வரும் முன்னே, ‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ மணியோசைபோல முந்திக்கொண்டு,முன்னெச்சரிக்கை மணியை உடலில்அடிக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் prediabetes என்று அழைக்கிறார்கள்.உடல் அடிக்கும் இந்த மணியோசைசத்தம் சிலருக்கு மட்டும் கேட்கிறது.

    சிலருக்குக் கேட்பதில்லை. தங்களின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறுபவர்களுக்கு, இந்த ஓசை prediabetes என்ற உச்சரிப்பாகக் கேட்கத் தொடங்கிவிடுகிறது.‘அட, வரும்போது பார்த்துக்கொள்ளலாம்... எனக்குத்தான் ஒருதொந்தரவும் இல்லையே’ என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு ஓசை கேட்காது.

    ‘நீரிழிவு’ என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

    ஒருவருக்கு நீரிழிவு உள்ளது என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனை மூலம் எப்படித் தெரிந்து கொள்ளலாம்?

    காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு126 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்றஅளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ...உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 200 மில்லி கிராம் / டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ...

    ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (பிதீகி1சி) 6.5 சதவிகிதம் அளவு அல்லது அதற்கு மேலோ இருந்தாலோ... நீரிழிவு நோய் உள்ளது என்று கூறிவிடலாம்.

    நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கான ரத்த குளுக்கோஸ் அளவுகள்ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்வதற்கு ரத்த குளுக்கோஸ் எந்த அளவில் இருக்க வேண்டும்?

    காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேரஇடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்றஅளவுக்குக் குறைவாக இருந்தாலோ...

    உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாகஇருந்தாலோ...ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (பிதீகி1சி) 5.6 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

    நீரிழிவுக்கு முந்தைய நிலையில் ரத்த குளுக்கோஸ் அளவுகள் இப்போது, நாம் முன்பு பார்த்த நீரிழிவுக்கு முந்தைய நிலைக்கு வருவோம். இது இரண்டும்கெட்டான் நிலை. இவர்களுக்கு நீரிழிவு இல்லை என்றும் சொல்ல முடியாது... இருக்கிறது என்றும் சொல்ல முடியாது.

    ஆரம்ப நிலையைக் கவனிக்காமல், கண்டுபிடிக்காமல் போனால், விரைவில் இவர்கள் அனைவரும் நீரிழிவாளர்களாகி விடுவார்கள் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லலாம். காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேரஇடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்றஅளவில் இருந்து 125 மில்லி கிராம் / டெசி லிட்டர் வரை இருந்தாலோ...

    உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 199 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவு வரை இருந்தாலோ...ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (பிதீகி1சி) 5.7 சதவீதம் முதல் 6.4 சதவீதம் என்ற அளவு வரை இருந்தாலோ... நீரிழிவு முந்தைய நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம்.

    இந்த நிலை உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. அதனால், இவர்கள்தங்களுக்கு நீரிழிவு இல்லையென நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இந்த நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.

    இருந்தபோதிலும், குறிப்பாகச் சிலபிரிவினருக்கு இந்த நிலைஏற்பட்டுள்ளதா என்பதைக்கண்டறிவது மிகவும் அவசியம். யார் இந்த குறிப்பிட்டபிரிவினர்?

    *45 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    *45 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், பருமன் உள்ளவர்கள் (ஙிவிமி: 25 கிகி/மீ2 என்ற அளவுக்குள் இல்லாதவர்கள்)

    *உடற்பயிற்சி இல்லாமல், சோம்பலாகஇருப்பவர்கள்

    *தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தயாருக்காவது நீரிழிவு நோய் இருப்பின்...

    *மிகுந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்

    *ரத்த கொலஸ்ட்ரால் மிகுந்தவர்கள்

    *பல்வேறு நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள் உள்ளவர்கள்

    *இதய நோய் / மூளைத் தாக்கம் / ரத்த நாள நோய்கள் உள்ளவர்கள்

    *பெண்களைப் பொறுத்த வரை, பருமன்உள்ளவர்கள்

    *கர்ப்பக் காலத்தில் நீரிழிவுக்குச் சிகிச்சை பெற்றவர்கள்

    *அதிக எடை (4 கிலோவுக்கு மேல்) உள்ள குழந்தை பெற்றவர்கள்

    *கருவணுவகத்தில் நீர்க்கட்டி நோய் உள்ள பெண்கள் (PCOS Polycystic Ovary Syndrome) இவர்கள், நீரிழிவுக்கு முந்தைய நிலை பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இவர்கள் அனைவரும், இந்த நிலை இல்லை என்ற போதிலும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நீரிழிவுக்கு முந்தைய நிலை கண்டுபிடிக்கப்பட்டவர்களின் கவனத்துக்கு...

    * சீனி (சர்க்கரை), வெல்லம், கருப்பட்டி, பனைவெல்லம் போன்ற நேரடிசர்க்கரைப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு வகைகள், க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். நெய், வெண்ணெய், டால்டா, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி,முட்டையின் மஞ்சள் கரு ஆகிய கொழுப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    * உணவில் அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த தானியங்கள், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மீன், முட்டை வெள்ளைக் கரு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * எடை, வேலை செய்யும் திறன்

    ஆகியவற்றைப் பொறுத்து, தேவைப்படும் கலோரியை கணக்கிட்டு (மருத்துவர்மற்றும் உணவியல் நிபுணர்), அந்த அளவு சக்தி தரும் உணவுகளை தினமும்
    உட்கொள்ள வேண்டும்.

    *மது, புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். தினமும், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.

    *போதிய நேரம் உறங்குவதுடன், கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.

    இப்படிச் சில ஆரோக்கிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை முறையாகமேற்கொண்டாலே, உடலுக்குள் நீரிழிவு முகாமிடாமல் முந்தைய நிலையிலேயேகண்டறிந்து முறியடிக்கலாம்!

    இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமேஇந்த நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.


    Last edited by chan; 4th Apr 2015 at 06:13 PM.
    Dangu likes this.

  7. #67
    bookslover is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    737

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Nice information

    chan likes this.

  8. #68
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    சர்க்கரை நோய் மருந்துகள்

    சமுதாயத்தை பயமுறுத்தும் பூதம் என சர்க்கரை நோயை மருத்துவர்கள் பூதாகரமாக்குவதாக சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பு மிகுந்தவர்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் வராமல் இருந்த நீரிழிவு, இப்போது நம்மில் அரிசியை பிரதானமாக உண்ணும் மக்கள், எந்த உணவாக இருந்தாலும் அளவு தாண்டி உண்பவர்கள் மற்றும் ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கும் பருமனாக இருப்பவர் களுக்கும் என உலகம் முழுவதுமே தாக்குவதாக அறியப்படுகிறது.

    20 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கே வரும் டைப் 1 நீரிழிவானது, அமெரிக்காவிலே கடந்த பத்தாண்டுகளில் 23% அதிகரித்து உள்ளதாகவும், இந்தியாவில் இப்போது இருப்பதைவிட இரு மடங்கு அதிகரித்து 2025ல் 7 கோடி மக்களுக்குப் பரவும் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

    தொற்றுநோய்களாலும் புற்றுநோய் களாலும் மாண்டு கொண்டிருந்த மனிதகுலம் இப்போது நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் நோய், இவற்றால் வரும் மாரடைப்பு, வாதம் என 40லிருந்து 80 வயது வரை வாழும் வாழ்க்கை யையே பயமுறுத்தி ஆட்டம் காண வைத்திருக்கிறது.

    40 - 50 வயதுகளில் இறந்து கொண்டு இருந்த இந்தியர்களை, மருத்துவ அறிவியல் வளர்ச்சியானது இன்று 80 வயது வரை சராசரியாக வாழ வைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், மக்கள் அனைவருக்கும் மருந்துச் சுமையோ, மருத்துவச் செலவோ இல்லாத வயோதிகத்தை அளிக்கவே நவீன மருத்துவம் விரும்புகிறது.

    இளம் வயதினருக்கு - 20 வயதுக்குக் கீழே இன்சுலின் உடலில் சுரக்காததால் பாரம்பரியத்தால் வருபவர்களுக்கு Type I DM என்றும், இன்சுலின் சுரந்து, திடீரென இன்சுலின் சுரப்பது பற்றாமல் அல்லது சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல், நடுத்தர வயதினருக்கு வருவதை Type II DM என்றும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பமாக இருக்கும் போது மட்டும் வரும் கர்ப்ப கால சர்க்கரை (Gestational Diabetes) என மூன்றாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதும் (Type I DM) மூன்றாவதும் (Gestational Diabetes) முழுமையாக இன்சுலினால் மட்டுமே குணப்படுத்தப்படுகிறது.

    சர்க்கரை நோய் என்று வந்த பின்பு இனிப்பு, கிழங்கு, பழங்களைத் தவிர்த்து அரிசி பதார்த்தங்களைக் குறைத்து, தினசரி உடற்பயிற்சியை தவமாக செய்து, மாதாமாதம் ரத்தப் பரிசோதனை செய்து மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உண்டு வந்தால் சுகாதாரமான, தரமான வாழ்க்கைக்கு உத்தர வாதம் உண்டு.சர்க்கரை நோய் வருவதற்கு உடலில் சர்க்கரையை குறைக்கும் இன்சுலின் சுரக்காமல் (Insulin Deficiency) போவதும் சுரக்கும் இன்சுலின் குறைக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் குறைக்காமல் (Insulin Resistance) போவதும் காரணம்.

    அதனால், உடலில் இன்சுலின் சுரப்பதைத் தூண்டும் மருந்துகள் (Sulfonylurea, Glimepiride, Glipizide, Gliclazide, Glibenclamide), சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் வேலை செய்வதைக் கூட்டும் மருந்துகள் (Insulin Sensitizers Metformin, Pioglitazone), இன்சுலின் சுரப்பியை பாதுகாக்கும் மருந்துகள் (Acarbose, Miglitol, voglibose), இன்சுலின் ஊசிகள் (Insulin)...

    இவை தவிர உடலில் சர்க்கரையை உறிஞ்சாமல் தடுக்கும் மருந்துகள் என பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாக புதுப் புது நீரிழிவு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் அதிகரிக்கவே, இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்யும் ஒவ்வொரு கம்பெனியும் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சர்க்கரை நோயின் ஒவ்வொரு நிலைக்கும் மருந்து கண்டுபிடிக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகின்றன.

    சர்க்கரை நோய் மருந்துகளில் மிக மலிவாக கிடைக்கும் (Sulfonylurea, Glimepiride, Glipizide, Gliclazide, Glibenclamide) மருந்துகளின் மிக முக்கிய பக்க விளைவு சர்க்கரையின் அளவை மிகக் குறைத்து (Hypoglycemia) விடுவதாகும். அதனால், இம்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அளவாக அடிக்கடி உணவுடன், நேரத்துக்கு மருந்துகளை உட்கொள்ளுவது,

    மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு சரியான நேரத்தில் உட்கொள்ளுவது மற்றும் விரதம் இருப்பதையும் காலம் தள்ளி சாப்பிடுவதையும் தவிர்ப்பது, அதிக உணவையும் அதிக இடைவேளையையும் தவிர்ப்பது, அதிக உடற்பயிற்சி யைத் தவிர்ப்பது என நோயையும் அதன் மருந்துக்கான விளைவையும் தன் உடலின், உணவின் மாற்றங்களையும் புரிந்து நடந்து கொண்டால் பாதிப்பின்றி பத்திரமாக வாழலாம்.

    சர்க்கரை நோய் மருந்துகளில் அடுத்து பரவலாக உபயோகப்படுத்தப்படுபவை இன்சுலின் வேலை செய்வதைக் கூட்டும் (Insulin Sensitizers Metformin, Pioglitazone) மருந்துகள். இவற்றுக்குச் சர்க்கரை அளவை உடனடியாகக் குறைக்கும் பக்கவிளைவு கிடையாது. Metformin மருந்துகள் எல்லா சர்க்கரை நோய் மருந்துகளுடன் சேர்த்து தரப்படுகின்றன. எடை கூடாது. இன்சுலின் ஊசி போட வேண்டிய அளவுக்கு நோயைத் தள்ளாது.

    Pioglitazone மருந்துகள் சர்க்கரையின் அளவை நன்றாகக் குறைக்கும் சக்தி உடையவை. ஒரு சிலருக்கு எடை கூடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதய, சிறுநீரக நோயாளிகளுக்கு தர மாட்டார்கள்.உணவில் உள்ள சர்க்கரையின் அளவை உறிஞ்சும் சக்தியைக் குறைக்கும் (Insulin Sparer) மருந்துகள் சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த கொடையாகும். Acarbose, Miglitol, Voglibose மருந்துகள் எல்லாச் சர்க்கரை நோய் மருந்துகளுடனும் தரப்படுகின்றன.

    இன்சுலின் ஊசி Type I மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத Type II நோயாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தரப்படுகிறது. வேலை செய்யும் நேரம், கால அளவு, சர்க்கரையை குறைக்கும் தன்மையைப் பொறுத்து பல்வேறு வகை இன்சுலின் ஊசிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

    உடலிலேயே ஊசியைப் பொருத்தி தேவைக்கு ஏற்ப வெளியிடும் கம்ப்யூட்டர் ஊசிகளும் உள்ளன. பருமனைக் கூட்டும் இன்சுலின் ஊசிகளிலிருந்து, எடையை பாதிக்காத ஊசிகள் வரை விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லையே இல்லாதது.

    சர்க்கரை நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஹைப்போ கிளைசிமியா என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60mgக்குக் கீழே செல்லும்போது ஏற்படும் நிலை. நீரிழிவு உள்ளவர்களுக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாத ஜுரம், வாந்தி, பேதி என்ற நிலையிலும் மருத்துவர் அறிவுறுத்தலுக்கு அதிகமாகவோ, வயதானவர்கள் தெரியாமல் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போதோ, உணவு குறைவாக உட்கொண்டு, உடற்பயிற்சியை அதிகப் படுத்தும் போதோ, திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் ஆர்வமாக மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டு உணவை மறக்கும் போதோ ஏற்படலாம்.

    ஹைப்போ கிளைசிமியாவின் அறிகுறிகளாக உடல் நடுக்கம், வாந்தி, குமட்டல், படபடப்பு, மனப்பதற்றம், பசி மற்றும் மயக்கமாகி, உடல் வலிப்புடன் உளறுவதாக மாறலாம். இதில் எந்த அறிகுறி இருந்தாலும், இன்சுலின் எடுப்பவராக இருந்தாலும், காரணமின்றி அரை மயக்க நிலையில் இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் கரைசலோ, சர்க்கரைக் கரைசலோ, இனிப்புகளோ தொட்டு தொட்டு வைத்து மருத்துவரை அணுகும் வரை மருந்தாக தர வேண்டும்.

    சர்க்கரை நோய் மருந்துகளுக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பக்க விளைவு உடல் பருமனைக் கூட்டுவதாகும். இது நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது நடைபெறும். ஒருவர் ஒழுங்காக மருந்து உட்கொண்டு உணவு, மருந்து, நடைப்பயிற்சி என்று எல்லாம் செய்தும் மாதா மாதம் ரத்தப் பரிசோதனை செய்யாவிட்டால் ஒருசில மாதங்களிலேயே சர்க்கரை கூடி உடல் மெலியக் காணப்படுவார்கள்.

    சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். பார்வை மங்கலாகும். விரல் நுனி, கை, கால் இழுப்பதுடன் மரத்துப் போகும் உணர்வும் ஏற்படலாம். அதிக அளவு சர்க்கரை உடலில், ரத்தத்தில் இருக்குமானால் நரம்புகளில் பாதிப்பு (Diabetic Peripheral Neuritis) ஏற்பட்டு கால்களில் மரத்துப்போதல், வலி, புண் ஏற்படலாம்.

    சர்க்கரை நோயைப் பற்றி தெளிவாக அறிந்து மருத்துவர் அறிவுரையின் பேரில் நடந்து கொள்ளுபவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற் பயிற்சி என வாழ்க்கை நோய் பற்றிய தெளிவு வந்துவிடுவதால் மற்ற நோய்கள் வராமல் வாழ் நாட்களை நீட்டித்துக் கொள்ளலாம். பருமனைக் கூட்டும் இன்சுலின் ஊசிகளிலிருந்து எடையை பாதிக்காத ஊசிகள் வரை விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லையே இல்லாதது!

    நீரிழிவு - பருமனை விரட்ட!

    2 குழந்தைகள், 2 பெரியவர்கள் உள்ள ஒரு குடும்பத்தின் ஒரு மாதத் தேவை...

    இவற்றில் மிச்சமாகிற பணத்தை, காய்கறிகளுக்கு ஒதுக்கலாம். பெரும்பாலான வீடுகளில் கூட்டு, பொரியல் என்பது ஒரு வேளை மட்டுமே எடுத்துக் கொள்கிற உணவாக இருக்
    கிறது. அதைத் தவிர்த்து, 3 வேளைகளுக்கும் விதம் விதமான காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் நீரிழிவும் பருமனும் பக்கத்தில் வராது.

    அரிசி 3 முதல் 5 கிலோ

    இட்லி அரிசி 3 கிலோ

    தேங்காய் 4 (வாரம் 1)

    எண்ணெய் 1 லிட்டர்


    Dangu likes this.

  9. #69
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நீரழிவு நோய் என்றால் என்ன?

    குட்பை டயாபடீஸ்!

    வரும்முன் தடுக்க... வந்த பின் காக்க....

    அய்யய்யோ அவருக்கு சர்க்கரையாம்'' என்று நாலு தெரு தாண்டி இருந்தவரைப் பார்த்து அதிர்ந்த நாட்கள் கடந்துவிட்டன. வீட்டுக்கு வந்த விருந்தினர்களிடம், காப்பியா? டீயா?' என்ற கேள்விக்கு அடுத்துக் கேட்கப்படுவது, 'சர்க்கரை வேணுமா?, வேண்டாமா?' என்பதுதான். "பொண்ணுக்குச் சர்க்கரை இல்லியாம்'' என்பது சீக்கிரமே, திருமணத்துக்கான சிறப்புத் தகுதிகளில் ஒன்றாகிவிடும் அளவிற்கு சர்க்கரை நோய் இன்று பரவலாகிவிட்டது. நோயைப் பற்றி பயப்படுவதை நிறுத்தி, அதை எதிர்கொண்டு வெளிவருவதை யோசிக்கும்போதே, நோயில் இருந்து பாதி வெளிவந்ததாக அர்த்தம் என்கிறார்கள் மருத்துவர்கள்.



    சர்க்கரை நோய் ஏன் வருகிறது? வராமல் தடுப்பது எப்படி? சர்க்கரை நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது? சர்க்கரை நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது? சர்க்கரை நோயால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவது எப்படி? சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள் என்னென்ன? என எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறார் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் பரணிதரன்.

    'நாம் சாப்பிட்ட உணவானது, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி் செய்கிறது. ரத்தத்தில் கலக்கப்பட்ட குளுக்கோஸை திசுக்கள் தானாகக் கிரகிக்க முடியாது. இதற்கு ஒரு சாவி போல செயல்படுவதுதான் இன்சுலின். கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது.

    ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, இன்சுலின் செயல்திறன் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது. இதையே சர்க்கரை நோய் என்கிறோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது நரம்பு மண்டலம், கண், சிறுநீரகம், ரத்தக் குழாய் என உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கிறது.

    சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தவிர, ப்ரீ டயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற வகைகளும் உண்டு.

    டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்
    .


    டைப் 2
    சர்க்கரை நோய் என்பது மரபியல் மற்றும் வாழ்க்கைமுறை மாறுபாட்டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போதுமானதாக இருக்காது. இதை இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' என்போம்.

    டைப் 2 சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரலாம்?
    45 வயதைக் கடந்தவர்கள்
    உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள்
    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்தவர்கள்
    குடும்பத்தில் பெற்றோருக்குச் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்
    ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள்
    உடல் உழைப்பு குறைந்தவர்கள்
    உடற்பயிற்சி செய்யாதவர்கள்
    கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்
    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
    உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்



    Last edited by chan; 6th Apr 2015 at 04:38 PM.
    Dangu likes this.

  10. #70
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    முதல்நிலை தடுப்பு முறை

    சர்க்கரை நோய் வராமல் தடுப்பதே முதல்நிலை தடுப்பு முறை.

    இதைப் பின்பற்றிச் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?



    உயரத்திற்கேற்ற சரியான எடையைப் பராமரிக்க வேண்டும்.

    உங்கள் எடை எத்தனை கிலோ எனக் குறிக்கவும், உங்கள் உயரத்தை மீட்டரில் அளந்து அதை இரண்டாகப் பெருக்கவும், இப்போது எடையை உயரத்தால் வகுத்தால் வருவதே... பி.எம்.ஐ (BODY MASS INDEX)பொதுவாக பி.எம்.ஐ 25க்குள் இருந்தால் அது சராசரி. ஆனால், இந்தியர்களுக்கு பி.எம்.ஐ அளவு 18.5க்கு கீழ் இருந்தால் சராசரி எடையைவிடக் குறைவு, 18.5 முதல் 22.9 வரை இருந்தால் சராசரி, 23 முதல் 29.9 வரை இருந்தால் உடல் எடை அதிகம், 30க்கு மேல் இருந்தால் பருமனான உடல்.

    உங்கள் பி.எம்.ஐ அளவு எப்போதும் 18.5 முதல் 22.9க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

    நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான வாய்ப்பையும் குறைக்கும்.

    இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீக்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    உடல் உழைப்பு மிகக் குறைந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறை டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும். டி.வி, கம்ப்யூட்டருக்கு முன்னால் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்காமல், துடிப்பான வாழ்க்கைமுறைக்கு மாறுவதன் மூலம் நோயைத் தடுக்க முடியும்.

    தசைகளுக்குக் கடினமான வேலை கொடுங்கள். அது இன்சுலின் செயல்திறனை அதிகப்படுத்தும், குளுக்கோஸ் கிரகிக்கும் திறனை மேம்படுத்தும்.

    தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது, டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை 30 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கிறது.




    மிகச் சரியான டயட்

    சர்க்கரை நோயைத் தடுக்கும் டயட் என்பது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுதான். சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடுவது சர்க்கரை நோயைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

    தகுந்த அளவில், வெவ்வேறு ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சரிவிகிதத்தில்் எடுத்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படை.

    சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாகவும்், கொழுப்பு குறைவானதாகவும், கலோரி நடுத்தர அளவி்ல் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

    நாம் சாப்பிடும் அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள் மீது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

    Last edited by chan; 6th Apr 2015 at 04:40 PM.
    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter