Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree263Likes

All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்


Discussions on "All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்" in "General Health Problems" forum.


  1. #81
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    hi chan, thanks for sharing the recipes


    Sponsored Links
    chan and Dangu like this.

  2. #82
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    70 வயதிலும் இனிய வாழ்வு நிச்சயம்!
    சுகர் ஸ்மார்ட்
    டயாபடீஸை நான் பாசிட்டிவாக வரவேற்றேன். நம்பிக்கையுடன் செயல்பட்டேன். அதனால் என் வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் நான் அனுபவிக்க முடிகிறது!

    - பாவ்லா தீன் (அமெரிக்க செலிபிரட்டி செஃப்)



    23 வயது ஆகும் முன்பே பெற்றோரை இழந்துவிட்டார் பாவ்லா தீன். இளம் வயதிலேயே திருமணம் ஆகி, விவாகரத்தும் ஆகிவிட்டது. திடீரென பீதியடையும் பிரச்னையும் திறந்தவெளியைக் கண்டால் இயற்கைக்கு மாறாக அச்சமடையும் ‘அகோராபோபியா’ என்ற மனப்பிரச்னையும் இருந்தது. அவர் அப்போதிருந்த நிலைமையில், வீட்டை விட்டு வேறு எங்கும் செல்லாமல் செய்ய முடிந்த ஒரே காரியம் - சமையல்!

    பாட்டியிடமிருந்து பாரம்பரியச் சமையலைக் கற்றுக்கொண்ட பாவ்லா, கணவரைப் பிரிந்த போது, அவரது கையில் 200 டாலர் மட்டுமே இருந்தது. இரண்டு குழந்தைகளையும் ஒரு தம்பியையும் வளர்க்க வேண்டிய சூழல். போஸ்டர் தொங்க விடுபவ, வங்கி டெல்லர், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் ஏஜென்ட் என பலவித வேலைகளை செய்து சமாளித்தார். கடைசியாகத்தான் கேட்டரிங் (த பேக் லேடி) ஆரம்பித்தார். பாவ்லா சமைப்பதை அவரது மகன்கள் டெலிவரி செய்வார்கள்.

    இதற்குப் பிறகு அவரது சமையல், சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்தது. ‘த லேடி - சன்ஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட ரெஸ்டாரென்ட், உலகம் முழுக்க பாவ்லாவின் பெயரைப் பிரபலப்படுத்தியது. பத்திரிகைகள், புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா, இணைய நிகழ்ச்சிகள் என பாவ்லா விதம் விதமாகச் சமைத்துக் கொண்டே இருந்தார்.

    பாவ்லாவின் சமையல் ருசிக்கு அமெரிக்காவே அடிமையாக இருந்த போதும், ஏராளமான சர்ச்சைகளும் உருவாகின. காரணம்... அவரது ரெசிபிகளில் காணப்பட்ட அதிக அளவு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை! அவரது ரெசிபிகள் குழந்தைகளையும் வெகுவாகக் கவர்ந்திருந்த நேரம் அது. ‘ஏற்கனவே குண்டாகிக் கொண்டிருக்கிற தேசத்தை, பாவ்லாவின் ரெசிபிகள் மேலும் மோசமாக்குகின்றன’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    ‘உணவு உலகின் மிக பயங்கரமான, மோசமான நபர்’ என்று ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ‘நான் உங்கள் சமையல்காரிதான்... டாக்டர் அல்ல... எதைச் சாப்பிடுவது என்பதில் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்... நான் எதையும் குறைவாகவே சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறேன்’ என்று பதில் கூறினார் பாவ்லா. இதற்குப் பிறகு அவரது மகன் பாபி தீன் ‘Not My Mama’s Meals’ (என் அம்மாவின் சமையல் அல்ல!) என்ற டி.வி. நிகழ்ச்சியைத் தொடங்கி, ஆரோக்கிய ரெசிபியை அளிக்கிறார்!

    ‘வெண்ணெய் இல்லாமல் என்னால் வாழவே முடியாது’ என்று ஒரு பேட்டியில் கூறிய பாவ்லாவை 60 வயதில் தாக்கியது டைப் 2 டயாபடீஸ். காரணம், அவரது சமையலில் அதிகம் காணப்பட்ட கொழுப்பும் சர்க்கரையுமேதான்!‘‘இப்போது என் உணவின் அளவைக் குறைத்திருக்கிறேன். மறுசீரமைப்பு செய்திருக்கிறேன். தானியங்கள் எடுத்துக் கொள்கிறேன். நிறைய சாலட், தர்ப்பூசணி சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டு, நிறைவாக உழைத்து, முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்படி மற்ற நீரிழிவுக்காரர்களுக்கும் சொல்கிறேன்’’ என்கிறார், 67 வயதிலும் பிஸி பிரபலமாகத் திகழும் பாவ்லா!

    ‘உங்களுக்கு நீரிழிவு வந்துவிட்டது’ என்று டாக்டர் கூறினால், சட்டென ஒரு அதிர்ச்சி தாக்கும்தான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்து, ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும்.

    நீரிழிவாளர்கள் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமான வாழ்வியல் முறை.நீரிழிவு என்பது அபாயமான குறைபாடு தான் என்றாலும், நாம் நன்றாக வாழ்வதிலோ, மகிழ்ச்சியாக இருப்பதிலோ, ஆரோக்கியமாக நீண்ட காலம் இருப்பதிலோ, இனியும் குறையொன்றுமில்லை! நம் உடலை கவனத்துடன் பேணுவதன் மூலம் டயாபடீஸ் சார்ந்த இன்னபிற குழப்பங்களையும் பிரச்னைகளையும் எளிதாகச் சமாளித்து விடலாம். உண்மையில், நீரிழிவால் எந்தப் பிரச்னையும் இல்லை.

    சரியாகக் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவால்தான் அத்தனை பிரச்னையுமே!நமக்கென ஒரு ஹெல்த் டீம்!நீரிழிவாளர்களுக்கு இருப்பது போல, மற்ற நோயாளிகளுக்கு இவ்வளவு பெரிய ஹெல்த் டீம் கிடையாது. நீரிழிவு மருத்துவரில் தொடங்கி, உணவு ஆலோசனை தரும் டயட்டீசியன், நமது இதயத்தை இதமாக்கும் கார்டியாலஜிஸ்ட், கண்களைக் கண்காணிக்கும் ஆப்தமாலஜிஸ்ட், கால்களைப் பராமரிக்கும் போடியாட்ரிஸ்ட், பற்களைப் பராமரிக்கும் டென்டிஸ்ட் உள்பட ஏராளமானோர், நமது தனிப்பட்ட தேவைக்கேற்ப உதவக் காத்திருக்கின்றனர்.

    டயாபடாலஜிஸ்ட், டயட்டீசியன் - இந்த இருவரையும் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையேனும் சந்திப்பது அவசியம். மற்ற நிபுணர்களைத் தேவைக்கேற்பவோ, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையோ சந்தித்து ஆலோசனை பெறலாம். இவர்கள் எல்லோரையும் விட மிக முக்கியமான ஒரு ஹெல்த் நிபுணர் உண்டு. அது நீங்கள்தான்! உங்களால்தான் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு நாளும்
    நீரிழிவைக் கண்காணிக்கவும் அதற்கேற்ப பராமரிக்கவும் முடியும்.

    நம் நீரிழிவை நாம் அறிவோம்!டயாபடீஸ் காரணமாக நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை, நாம் துல்லியமாக அறிவது மிக அவசியம். ஏதேனும் மாறுதல்களோ, தவறுகளோ தென்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்யவும் இந்த அறிதல் நமக்கு உதவும். குறைகளைக் கண்டுகொள்ளாமலோ, அறியாமலோ இருப்பதை விடவும், அவ்வப்போது சரிசெய்து வந்தாலே, அத்தனை குழப்பங்களையும் போக்கிவிட முடியும்!

    ரத்த சர்க்கரை அளவு முக்கியம்!ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போதுதான், பாதிப்புகளும் ஏற்படத் தொடங்குகின்றன. குளுக்கோஸ் லெவல் என்ன என்பது அவ்வப்போது அளவிடப்பட்டாலே போதும்... அதைச் சரியான அளவுக்கு கொண்டு வந்துவிடலாம். அளவு எவ்வளவு என அறியாமலே இருக்கும்போதுதான், அளவில்லா பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். நீரிழிவு மருத்துவருக்கும் இந்த அளவுகளே நம் நிலையை உணர்த்த உதவும்.

    இந்த நாள் இனிய நாள்!


    ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, நாம் ஒவ்வொரு நாளையுமே புத்துணர்வுடன் தொடங்க வேண்டும். எதை உண்பது? எதைத் தவிர்ப்பது? எவ்வளவு சாப்பிடலாம்? என்னென்ன செயல்பாடுகள் / உடற்பயிற்சிகள் தேவை? நமது உடலுக்கேற்ற உணவை உட்கொள்வது ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக்கும். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் நீரிழிவாளர்களுக்கு மட்டுமல்லவே... மனிதர்கள் அத்தனை பேருக்கும் பொருந்துகிற ஒரு விஷயம்தானே? ஆகவே, இதுபற்றி ஒருபோதும் வருத்தம் கொள்ள வேண்டாம்!

    நல்வாழ்வை நாளும் தொடர்வோம்!

    உங்கள் மருத்துவர் ரத்த சர்க்கரை சோதனையை எப்போதெல்லாம் செய்யக் கூறியிருக்கிறார்? அதற்கேற்ப வீட்டிலோ, பரிசோதனைக்கூடத்திலோ டெஸ்ட் எடுத்து, அந்த பரிசோதனை முடிவுகளைக் குறித்து வையுங்கள். முந்தைய அளவுக்கும் இப்போதைய அளவுக்கும் உள்ள வேறுபாடு பற்றியும் ஏன் அப்படி என்றும் சிந்தியுங்கள். அதற்கேற்ப அடுத்து வரும் நாட்களைத் தொடருங்கள். ரத்த சர்க்கரை தவிரவும், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்த அளவுகளையும் அவ்வப்போது அறிவது அவசியம்.

    இலவச அறிவுரைகளால் என்ன பயன்?

    புதிதாக நீரிழிவு அறியப்பட்டவர்களுக்கு பயம், பதற்றம், கழிவிரக்கம் போன்றவை ஏற்படுவது சகஜமே. இந்த உணர்வுகளை மருத்துவர் முறையான ஆலோசனைகள் மூலம் போக்கிவிடுவார். ஆனால், நம் வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி, அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் உள்ளவர்கள் என அத்தனை பேரும் அறிவுரைகளை அள்ளி வழங்கத் தொடங்குவார்கள். நம் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்றாலும், அவை மருத்துவ ரீதியானவை அல்ல என்பதுதான் பிரச்னை.

    ‘அந்த இலையைச் சாப்பிடுங்கள்... இந்தக் காயைச் சாப்பிடுங்கள்’ போன்றவை எல்லாம் அப்படியொன்றும் அபாயம் அளிப்பவை அல்ல என்றாலும், அவற்றால் பயன்கள் உண்டா? அது இருக்கட்டும்... யாரேனும், ‘மாத்திரையெல்லாம் சாப்பிடாதீங்க’ என்று சொன்னால் மட்டும் நம்பவே நம்பாதீர்கள்.

    நீரிழிவு மருத்துவர் அளிக்கும் மருந்துகள் உலக அளவில் பலவிதங்களில் பரிசோதிக்கப்பட்டு, ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உங்களுக்குத் துணைபுரிபவை. மருத்துவர் உங்கள் உடலுக்கேற்ப பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வதால் பாதகம் நேராது. அதனால் மருத்துவர் ஆலோசனை இன்றி மாத்திரை சாப்பிடுவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்.

    தொடர்ச்சி முக்கியம் 5 ஆண்டுகளைக் கடக்கும் நீரிழிவாளர்களில் சிலருக்கு ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். ‘இவ்வளவு காலமாக மாத்திரை சாப்பிட்டும் ரத்த சர்க்கரை அளவு கூடியிருக்கிறதே’ என்று தோன்றும். அந்தக் குழப்பத்தில் அவர்கள் அதுவரை அரைகுறையாகவேனும் பின்பற்றி வந்த அத்தனை கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விடுவார்கள். இதுதான் மிகவும் மிரட்டலான விஷயம். முதலில் நாம் அறிய வேண்டிய விஷயம்...

    மாத்திரை, மருந்துகள் சாப்பிட்ட உடனே சரியாகிவிடக்கூடிய ஒரு நோய் அல்ல - நீரிழிவு. இது தொடர்ச்சியாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு குறைபாடு. ‘நேற்று மாத்திரை சாப்பிட்டோம்... இன்று விட்டு விட்டால்தான் என்ன?’ என்பது போலவோ, ‘உடற்பயிற்சிக்கு ஒரு வாரம் லீவு கொடுப்போம்’ என்பது போலவோ விதிமீறல்கள் கூடாது. ஏனெனில், இது விளையாட்டல்ல... வாழ்க்கை!போக்குவரத்து விதிகளை ஒவ்வொரு நாளுமே மதித்துப் பின்பற்றுவது போன்றே, நீரிழிவு விதிகளையும் மதித்துப் பின்பற்ற வேண்டும்.

    ரத்த சர்க்கரை அளவுகள் குறித்து உங்களுக்கு சந்தேகமோ, சலிப்போ ஏற்பட்டால், தயங்காமல் நீரிழிவு மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். அவரால் அதைச் சரி செய்ய நிச்சயமாக உதவ முடியும்.40 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, 70 வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிற பல சீனியர்கள் உள்ளனர்.

    இவர்களை உங்கள் வீட்டுக்கு அருகிலோ, மருத்துவமனையிலோ எளிதாக அடையாளம் காண முடியும். அவர்கள் எதையும் இழந்துவிடவில்லை என்பதை, அவர்களின் மகிழ்ச்சியில் இருந்தே உணர முடியும். வாழ்வின் மீதான நம்பிக்கை ஒன்றே அவர்களை காலங்காலமாக வாழ வைக்கிறது. டயாபடீஸ் உடன் வாழ மிகப்பெரிய‘வில் பவர்’ வேண்டும் என்பது உண்மைதான். கவலையே வேண்டாம்... அது நிச்சயமாக உங்களுக்கு இருக்கிறது!

    ஸ்வீட் டேட்டா!

    2003ல், இந்தியாவில் இருந்த நீரிழிவாளர்களின் எண்ணிக்கை 3.5 கோடி. பத்தே ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட இருமடங்காகி இருக்கிறது. 2013 கணக்கெடுப்பில் 6.7 கோடி!

    இவர்கள் எல்லோரையும் விட மிக முக்கியமான ஒரு ஹெல்த் நிபுணர் உண்டு. அது நீங்கள்தான்!

    குறைவாகச் சாப்பிட்டு நிறைவாக உழைத்து முறையாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்!

    அளவு எவ்வளவு என அறியாமலே இருக்கும்போதுதான், அளவில்லா பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும்.


    Last edited by chan; 7th Apr 2015 at 02:13 PM.
    Dangu likes this.

  3. #83
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுப் பட்டியல்




    நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.


    இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை சக்தியாகவும், தேவைக்கு அதிகமான சர்க்கரையை கொழுப்பாகவும் சேமித்து வைக்க உதவுகிறது.


    நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப்பணியை செய்கிறது.


    பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறையும் போது அல்லது வேலை செய்ய முடியாத போது உணவில் உள்ள சர்க்கரை சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகிறது.


    இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது 180 mg/dL தாண்டும் போது சிறுநீரில் சர்க்கரை வெளியாகிறது, இது தான் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்.


    இவ்வாறு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு முறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.


    இதோ நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுப்பட்டியல்,


    காலை


    மருதம் பட்டை மூலிகைக் கஷாயம் – ஒரு கப் (100 மி.லி) அல்லது டீ, காபி சர்க்கரை இல்லாமல் அருந்த வேண்டும்.


    காலை டிபன்


    இட்லி – 3 அல்லது தோசை – 2, சப்பாத்தி- 1, இடியாப்பம்- 1, சம்பா ரவை உப்புமா, மிளகு பொங்கல், வெந்தயம் கலந்த கஞ்சியுடன் புதினா, (தேங்காய் சட்னி கண்டிப்பாக சாப்பிடக்கூடாது). இதனை தவிர ஏதேனும் கீரை சூப் குடிக்கலாம்.


    காலை 11 மணி


    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சாறு வகைகளில் ஏதாவது ஒன்று கட்டாயம் சாப்பிடவும். பாகற்காயை சாறாக குடிக்கலாம்.


    மதிய உணவு


    ஒரு கப் சாதம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாகற்காய், பீன்ஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் சேர்த்த சாம்பார் சாப்பிடலாம்.


    மேலும், பழவகைகளில் பேரிக்காய், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.


    இரவு உணவு


    கோதுமை சார்ந்த உணவுகள், 2 அல்லது 3 காய்கறி பச்சடி மற்றும் சட்னி வகைகள்.

    Last edited by chan; 12th Apr 2015 at 01:52 PM.
    Dangu likes this.

  4. #84
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Useful lashmi

    chan and Dangu like this.

  5. #85
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Last edited by chan; 16th Apr 2015 at 07:34 PM.
    thenuraj and Dangu like this.

  6. #86
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    1. அந்த 9 மாதங்கள்!

    ‘‘என் வாழ்வு ஒரு வண்ணமயமான ஓவியத்துக்கு ஒப்பானது. நீரிழிவு அதில் ஒரு துளிவண்ணம் மட்டுமே!’’
    - சல்மா ஹெய்க்



    சல்மா ஹெய்க்...ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட நடிகை... ‘ஃப்ரீடா’ படத்தில் மெக்சிகோ ஓவியை ஃப்ரீடா காவ்லோ ஆகவே வாழ்ந்து காட்டியவர். மெக்சிகோவிலிருந்து ஹாலிவுட் வந்து விடாமுயற்சியாலும் வித்தியாச நடிப்பாலும் வெற்றி கண்டவர். திரைப்படம் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் நடத்துபவர். 41 வயதில் வாலன்டினா என்ற அழகுக் குழந்தையைப் பெற்றெடுத்தவர்.


    சல்மாவின் கர்ப்ப காலத்தில் கூடுதல் சுமையை அளித்தது நீரிழிவு. ஆம்... அது Gestational diabetes எனும் கர்ப்பகால நீரிழிவு. ‘‘ஆரம்பத்தில் எனக்கு அது தெரியவே தெரியாது. கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் இது ஏற்பட்டது என டாக்டர்கள் கூறினார்கள். தாயாக மாறுவதற்காக மகிழ்வதா? நீரிழிவு தாக்கியதற்காக வருந்துவதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லைஅப்போது. 9 மாதங்களும் என்னை மசக்கை பாடாகப்படுத்தியது... ஒருவழியாகச் சமாளித்து, வாலன்டினாவை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினேன்!’’ என்கிற சல்மா ஹெய்க்,

    சர்க்கரை அளவு குறைவான பழங்களைச் சாப்பிட்டு, கர்ப்ப காலத்தைக் கடத்தினாராம். மசக்கையும் நீரிழிவும் சேர்ந்து தாக்கும் போது, எதைத்தான் சாப்பிட முடியும்?

    ‘‘என்னை விடுங்கள்... மூன்றாம் உலக நாடுகளில் கர்ப்பிணிகள் படும் கஷ்டத்தை நினைத்தாலே மனம் கலங்குகிறது. வறுமை மற்றும் அறியாமை காரணமாக, அந்தப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சில நாடுகளில் தொப்புள் கொடியில் மண்ணைக் கொட்டிக்கூட சடங்கு செய்கிறார்கள். இதனால் டெட்டனஸ் போன்ற நோய்கள் தாக்குகின்றன. தாயும் சேயும் மடியக்கூட நேரிடுகிறது. இதையெல்லாம் நான் அறிந்த பிறகு, என் பிரசவ காலத்தில் சிரமப்பட்டேன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது...’’ என்கிற சல்மா,

    இப்போது யுனிசெஃப் அமைப்பின் தூதுவராகச் செயல்படுகிறார். மூன்றாம் உலக நாடுகளின் தடுப்பூசி செலவுகளுக்கு நிதி திரட்டித் தருகிறார்.கர்ப்ப கால நீரிழிவுக்கான பரிசோதனைகள் அனைத்துக் கர்ப்பிணிகளுக்குமே 24 முதல்28 வரையுள்ள காலகட்டத்தில் செய்யப்படுகின்றன. குடும்பத்தில் ஏற்கனவே நீரிழிவாளர்கள் இருக்கும்பட்சத்தில், ஆரம்பத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    பொதுவாக பிரசவத்துக்குப் பின் கர்ப்பகால நீரிழிவு விலகிவிடும். எனினும், அடுத்தபிரசவத்தில் எட்டிப் பார்க்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு, இது பிற்காலத்தில் டைப் 2 நீரிழிவாக மாறவும் கூடும்.

    ஆகவே, உணவுக்கட்டுப்பாட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனம் இருக்கட்டும் எப்போதும்!இது இன்னொரு தோழியின் கர்ப்பகால நீரிழிவு அனுபவம்...‘‘என்னுடைய முதல் பிரசவ காலத்தில் கர்ப்பகால நீரிழிவு ஏற்பட்டது. குழந்தை பிறந்த பிறகு அதை அறவே மறந்துவிட்டேன். எனக்கும் நீரிழிவுக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறை கர்ப்பம் ஆன போது, அந்த அதிர்ச்சி என்னை மீண்டும் தாக்கியது.

    சோதனை முடிவு எனக்குத் தெரிவிக்கப்பட்ட போது, வருத்தத்தை விடவும் கோபம் அதிகமாக இருந்தது. குழந்தையை நல்ல முறையில்பெற்றெடுக்கும் வரை, எனக்கு ஏராளமானகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக, என் வாயைக் கட்ட வேண்டும். உணவு ப்ரியை ஆன எனக்கு, இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும், என் குழந்தைக்காகஎன்னையே நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். என் தினசரித் திட்டம் இப்படி மாறியது...

    *சர்க்கரை அற்ற / கொழுப்பு குறைவான உணவு
    *மிதமான உடற்பயிற்சிகள்
    *காலை எழுந்ததும் ரத்த சர்க்கரை சோதனை
    *2 மணி நேர இடைவெளிக்குள் எந்த நொறுக்குத்தீனியையும் நொறுக்காமல் இருப்பது...

    கடைசி விஷயம்தான் எனக்கு மிகக்கடினமாக இருந்தது என்பதைச் சொல்லத்தேவையில்லை!கர்ப்பிணிகள் மாறிவரும் மனநிலைக்கேற்ப, எதையேனும் அவ்வப்போது சாப்பிடுவது வழக்க
    மான ஒன்றே. நானோ, எப்போதுடா அடுத்த 2வது மணி நேரம் வரும் என கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. கண்டதையும் சாப்பிட்டு ரத்த சர்க்கரை அளவு எகிறி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே!

    மருத்துவர் கூறிய அறிவுரைகளை கறாராகப் பின்பற்றினேன். சல்மா ஹெய்க், மரியா கரே, ஏஞ்செலினா ஜூலி உள்பட பல பிரபலப் பெண்களும் இந்தச் சூழ்நிலையை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்கள் என்று அறிந்த போது, எனக்கும் புதிய உத்வேகம் கிடைத்தது. என் இரண்டாவது குழந்தையை இனிமையாகப் பெற்றெடுத்தேன். அதன் பிறகு என்னுடைய உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சிநடைமுறைகளும் ஒருபோதும் மாறவில்லை. இப்போது என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்... ‘நீரிழிவுக்கு நான் பயப்பட மாட்டேன்’ என்று!

    ஸ்வீட் டேட்டா

    *20 முதல் 29 வயது உடைய கர்ப்பிணிகளை விடவும், 30 முதல் 39 வயதுகளில் கர்ப்பம் தரிக்கும் பெண்களையே கார்ப்பகாலநீரிழிவு அதிகம் பாதிக்கிறது.
    *இந்தியாவில் 16 சதவிகித கர்ப்பிணிகள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.
    *இது சென்னையில் 17%, திருவனந்தபுரத்தில் 15%, அலுவாவில் 21%, பெங்களூருவில் 12%, ஈரோட்டில் 18.8%, லூதியானாவில் 17.5% என்கிற அளவில் இருக்கிறது.
    *ஐரோப்பிய / அமெரிக்க பெண்களை விட, இந்தியப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்பட 11.3 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    தாயாக மாறுவதற்காக மகிழ்வதா? நீரிழிவு தாக்கியதற்காக வருந்துவதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை அப்போது...

    2. கீட்டோன் ரொம்ப கெட்டவன்!

    ‘வாயே நோயைச் சொல்லும்’ எனத் தொடங்கிய டாக்டர் யஷ்வந்த்குமார் வெங்கடராமன், ‘வாய் நாற்றத்தின் மூலம் நீரிழிவைக்கூட அறிய முடியும்’ என புதிய அதிர்ச்சி கொடுத்தார். நீரிழிவு கீட்டோன்ஸ் பற்றியும் ஈறு பிரச்னைகளைத் தவிர்க்க, நீரிழிவாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், இந்த பல் மருத்துவ நிபுணர் தொடர்ந்து விளக்குகிறார்.

    நமது உடலால் இன்சுலினை சுரக்க இயலாத நிலை ஏற்படும்போது, குளுக்கோஸ் முறையாகக் கிடைக்காமல் போய், செல்களால் ஆற்றல் பெற முடியாது. இச்சூழலை சமநிலைப்படுத்த, உடலிலுள்ள கொழுப்பை அது எரிக்கத் தொடங்கும். சர்க்கரைக்குப் பதிலாகக் கொழுப்பு எரிக்கப்படுவதால், ‘கீட்டோன்’ என்ற பொருள் உருவாகி ரத்தத்திலும் சிறுநீரிலும் கலக்கும். விரதம் இருக்கும்போது அல்லது சாப்பிடாமலே இருக்கும் போதும், இந்த கீட்டோன்கள் உருவாகும். அதிக புரதம், குறைவான மாவுச்சத்து உணவை உட்கொள்ளும்போதும் உருவாகும்.

    கீட்டோன்களின் அளவு எகிறும்போது வாய் நாற்றம் ஏற்படும். அசிட்டோன் என்கிறகீட்டோன் உருவானால், வாயில் நெயில் பாலீஷ் வாசனை வீசும். இந்த அசிட்டோன் நெயில் பாலீஷில் காணப்படுகிற வேதிப்பொருள்என்பது கூடுதல் தகவல்!கீட்டோன்களின் அளவு பாதுகாப்பு வரையறைகளைத் தாண்டும்போது, அது அபாய கட்டத்தை நோக்கிச் செல்லும். இந்நிலையை diabetic ketoacidosis (DKA) என்று குறிப்பிடுகிறோம். இதன் அறிகுறிகள்...

    *மூச்சுக்காற்றில் இனிப்பான பழ வாசனை
    *சாதாரண நிலையை விட, அதிக முறை சிறுநீர் கழித்தல்
    *வயிற்றுவலி, குமட்டுதல் அல்லது வாந்தி
    *அதிக ரத்த சர்க்கரை அளவு
    *குறைவான அளவு மூச்சு விடுதல் அல்லது மூச்சு விடுதலில் சிரமம்
    *குழப்ப உணர்வு

    இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம். டி.கே.ஏ. என்கிற இந்நிலை மிக அபாயமானதாகவே கருதப்படுகிறது. பெரும்பாலும் டைப்1 நீரிழிவாளர்களையே தாக்குகிறது.ஈறு நோய்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?நியூரோபதி, கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகள் ஆகியவற்றில் ஈறு நோய்கள் ஓர் அறிகுறியாக அடையாளம் காணப்படுவதைப் போலவே, நீரிழிவாளர்களும் ஈறு பிரச்னைகளால் அதிகம் அவதிப்படுகிறார்கள்.

    ஈறு பிரச்னைகளை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கவோ, அதன் வீரியத்தைக் குறைக்கவோ முடியும்.இவ்விஷயங்களை தினமும் பின்பற்றவும். றீரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதே முதன்மையான முக்கியமான வழிமுறை.

    *தினமும் இருமுறைசீராகப் பல் துலக்குவதை வழக்கமாக்குங்கள். அதோடு, பல் இடுக்குகளைச் சுத்தம் (floss) செய்யுங்கள்.

    *பாக்டீரியா உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ள இடம் என்பதால், தினமும் நாக்கினையும் நன்கு சுத்தம் செய்யுங்கள். பாக்டீரியாக்களே வாய் நாற்றத்துக்கு அடிப்படை.

    *தினமும் நிறைய நீர் பருகுவது நல்லது. இது கழிவுகளை வெளியேற்றும். உமிழ்நீரை அதிகப்படுத்தும். இதனால் பாக்டீரியாக்கள் பெருகுவது குறைக்கப்படும்.

    *உமிழ்நீர் குறைந்து காணப்பட்டால், சுகர்ஃப்ரீ மின்ட் அல்லது கம் பயன்படுத்தலாம்.

    *தேவைக்கேற்ப உமிழ்நீர் சுரக்கத் தூண்டும் அல்லது அதிகப்படுத்துவதற்கான மருந்துகளை பல் மருத்துவர் பரிந்துரைப்பார்.

    *பல் மருத்துவரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்திப்பதை வழக்கமாக்குங் கள். உங்களுக்கு நீரிழிவு இருக்கிற விஷயத்தை அவருக்கு மறவாமல் தெரியப் படுத்துங்கள்.

    *Dentures போன்ற பற்கருவிகள் பொருத்தி இருந்தால், அவை சரியான அளவில் பொருந்தி இருக்கின்றனவா எனப் பரிசோதித்துக் கொள்வதுடன் குறிப்பிட்ட காலத்தில் அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.

    *புகைப் பிடிக்க வேண்டாம்.நீரிழிவோடு பல் மற்றும் ஈறு நோய்கள் சேரும்போது அவை அதீத பலம் பெறுகின்றன. துர்நாற்றத்தை வெளிப்படுத்தி நமக்கு யுத்த எச்சரிக்கை அளிக்கின்றன. அப்போதும் அவற்றை குணப்படுத்தாவிட்டால் ரொம்பவே சிரமம் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. வாய் சுத்தமாக இருந்தால் நீரிழிவும் கட்டுப்பாட்டில் இருக்கும்!

    அசிட்டோன் என்கிற கீட்டோன் உருவானால், நம் வாயில் நெயில் பாலீஷ் வாசனை வீசும். இந்த அசிட்டோன் நெயில் பாலீஷில் காணப்படுகிற வேதிப்பொருள்!

    thenuraj and Dangu like this.

  7. #87
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்



    ஓ.... Diabetesக்கு நீங்க தனி thread create செய்து இருக்கீங்களா...!! சூப்பர் லக்ஷ்மி...

    chan and Dangu like this.

  8. #88
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    ப்ரீ டயாபடீஸா.. பயம் வேண்டாம்

    டாக்டர் கருணாநிதி
    உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 7.72 கோடிப் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம்.

    'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?'

    'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.'

    'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?'

    'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.'


    'ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?'

    'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள்.

    இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.'

    'ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?'

    ''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன ஆனால் அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

    தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. இரவில் உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம்.

    பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம். இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'


    Last edited by chan; 18th Apr 2015 at 03:40 PM.
    santhi1984 likes this.

  9. #89
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    Thanks for the recipes

    chan likes this.

  10. #90
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All details about DIABETES-நீரழிவு நோய் விவரங்கள்

    நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்


    1. உங்கள் சிகிச்சை முறையில் உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும். உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் உணவைப் போலவே உங்கள் உணவும் அமைந்து இருக்கலாம்.

    2. தினமும் சரியான நேரத்தில் உணவுகளை அளவுடன் உண்ண வேண்டும். ஒருபோதும் உணவைத் தவிர்த்தல் கூடாது.


    3. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமை, கேழ்விரகு போன்ற உணவு வகைகளையே உண்ண வேண்டும். என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி, கோதுமை, பார்லி, போன்ற எல்லா வகையான தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதைவிட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதை முக்கியமானதாகும்.


    4. புரதசத்து அடங்கியுள்ள முளைவிட்ட கடலை, பச்சை பயிறு, முழுக்கடலை, காராமணி, மொச்சை, பட்டாணி, போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ந்துக் கொள்ள வேண்டும்.

    5. உணவு தாளிக்கும் போதும், பொறிக்கும் போதும் அனுமதிக்கப்பட்ட எண்ணெய் அளவையே உபயோகிக்க வேண்டும். நல்லெண்ணேய், சபோலா, சன்பிளவர். ரீபைண்ட் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய் வகைகளை உபயோகிக்கலாம்.

    6. சமைக்கும் போது, குறைந்த அளவு உப்பையே உபயோகிக்க வேண்டும் சாப்பிடும்போது மீண்டும் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். (இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர் கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பு சேர்த்துக் கொள்ளவும்).

    7. ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் வரை நீரை கண்டிப்பாக அருந்த வேண்டும். சாப்பிடும் போது நீர் பருகுவதை தவிர்த்தல் நலம். (சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு நீரின் அளவு - மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்)

    8. நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களையும், கீரை, காய்கறி வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

    9. இடைப்பட்ட நேரத்தில் உண்ணக்கூடிய உணவு வகைகள்
    மோர், தக்காளிச்சாறு, சூப், முட்டைக்கோஸ், முள்ளங்கி, சாலட், போன்றவைகளை கூடுமான வரையில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

    10. சிறந்த உணவுக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றினால்
    அ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கலாம்.

    ஆ. இந்நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும். (விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல சிறுநீரக மற்றும் இருதய பாதிப்பு)

    இ. உட்கொள்ளும் மருந்தின் அளவைக் குறைக்கலாம்.

    ஈ. உடல் எடையை சீரான முறையில் வைத்துக் கொள்ளலாம்.

    உ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது ஏற்படும் அறிகுறிகள்

    அதிக பசி, வியர்வை பெருகுவது, உடல் நடுக்கம்,படபடப்பு, பலவீனம், தளர்ச்சி, மயக்கம், பார்வை மங்குதல், மனநிலை மாற்றம்இந்த நிலைக்கான அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தாலும், இதனைத் தொடர்ந்து மயக்கம்மும், சுயநினைவற்ற நிலைமையும் தோன்றும்.

    இன்சுலின் சார்ந்த இளம் வயதினர்களுக்கு இழுப்பு வருவது அறிகுறிகளில் ஒன்றாகும்.

    மேற்கண்ட அறிகுறிகள் தோன்றும் பொழுது நீரழிவு நோயாளிகள் சர்க்கரையோ அல்லது குளுக்கோஸோ எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகமாகி சுயநினைவு இன்றி இருப்பின் டாக்டரிடம் காண்பித்து உடல் வழி செலுத்தும் குளுக்கோஸ் தரப்படுவதால் சில நிமிடங்களில் சயநினைவு வர வழிவகுக்கும்.

    11. தினமும் மருத்துவர் கூறும் வகையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது நடத்தல் அவசியம்.


    Last edited by chan; 19th Apr 2015 at 03:27 PM.
    thenuraj and Dangu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter