Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree24Likes

All details about HIGH BLOOD PRESSURE - உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூ


Discussions on "All details about HIGH BLOOD PRESSURE - உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூ" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?

    இரத்த கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தத்தினால் ஏற்படுவது, இது ஏற்படுவதற்கான காரணங்களை துல்லியாமாக கூறமுடியாது. ஆனால் இது பரம்பரை ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. அது பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் என அது பரம்பரை பரம்பரையாக தொடர்வதாகும்.

    பொதுவாக இவை தொடர் மன அழுத்தத்தின் காரணமாகவும், ஓய்வில்லாத கடுமையான உழைப்பு, அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களின் மூலமும் மற்றும் இறைச்சி, தேயிலை, புகையிலை மற்றும் போதை பொருட்களின் மூலமாகவும் இந்த இரத்த கொதிப்பு உண்டாகிறது.

    ஆனால் இவையனைத்தும் எந்த அளவில் ஏற்படுத்துகின்றன என திடமாக சொல்லமுடியாது. இவை எதுவாக இருந்தாலும் சரி இரத்த அழுத்தமானது ஒரே நாளில் ஏற்படுவதில்லை. நீண்ட காலங்கள் உள்ளுற இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    நம்முடைய இரத்த அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றார்போல் மாறும். துயரம், அதிக அளவிலான மகிழ்ச்சி, அச்சம் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் மூலமாக இரத்த அழுத்தமானது 30 முதல் 60 எண்கள் வரை உயரும்.
    நாம் உறங்கும் போது உள்ளதை விட நடக்கும் போதும் அதைவிட ஓடும் போதும் இரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். நமது இதயமானது அதிக அளவு இரத்த அழுத்தம் ஏற்படும் போது அதற்கு ஏற்றவாறு விரிந்து தர வேண்டும். இல்லையெனில் இதயமானது அதிக இரத்த அழுத்தத்தை தாங்காமல் நின்று விட கூடிய அபாயமும் உண்டு.

    அதிக இரத்த கொதிப்பானது நமது இரத்த குழாய்களை பாதிக்கும் .நம்து இரத்த குழாயானது ரப்பரை போன்று நெகிழ்ச்சி தன்மையுடையது. ஆனால் நமக்கு வயதேற ஏற அவை தனது நெகிழ்ச்சிதன்மையை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கும். இந்த நெகிழ்ச்சி தன்மை இருக்கும் வரையில் தான் இரத்த கொதிப்பினை குழாய்கள் தங்கும்.

    நெகிழ்சிதன்மை மாறிய பின்பு அவை இந்த இரத்த கொதிப்பின் அழுத்தத்தை தாங்காது இதனால் இரத்த குழாய்கள் வெடிக்கவும் கூடும். எனவே நமதுடலில் ஆரோக்கியம் இருக்கும் போதே இவற்றிற்கான பரிகாரங்களை செய்ய ஆரம்பித்துவிட வேண்டும். இதன் மூலம் இந்நோயினை மேலும் வளரவிடாமல் தடுக்கலாம்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    Thanks for the details.

    Jayanthy





  3. #13
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    Thank you very much for sharing this great information about the Hypertension ( இரத்த கொதிப்பு )


  4. #14
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    Thanks for this details.


  5. #15
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    Thank u. But what are remedies to reduce the BP?


  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    Quote Originally Posted by kavithasankar View Post
    Thank u. But what are remedies to reduce the BP?
    details given in
    உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூற்றுவன்


  7. #17
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: இரத்த கொதிப்பு ஏற்படுவது ஏன்?-Reason for Hypertension

    Very useful information.


  8. #18
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: High Blood Pressure - உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூற்

    Very useful information.


  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்த புதிய க&a

    ரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்த புதிய கருவி!

    ‘சைலன்ட் கில்லர்’
    இது ஏதோ ஒரு பிரபலமான ஆங்கிலப் படத்தின் பெயர் என்று நினைத்துவிடாதீர்கள். மனித உடலில் அமைதியாக இருந்து திடீரென்று உயிரைப் பறிக்கிற ‘உயர் ரத்த அழுத்த’ நோய்க்குத்தான் இந்தப் பெயர். தற்போது நம் உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் ரொம்பவே மாறிவிட்ட காரணத்தால், இந்த நோயின் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் அண்மைக்காலமாக இளம் வயதிலேயே இதன் பாதிப்பு தொடங்கிவிடுகிறது என்பதுதான் சோகம்.

    பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால், அது நார்மல். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது. 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து, உடலிலிருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் இது.




    ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்திச் சீராக நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பது இயல்பு. தவிர, உடற்பருமன், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், பிறவியிலேயே ரத்தக்குழாய் பாதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, புகைப்பழக்கம், மதுப் பழக்கம், மன அழுத்தம், உறக்கமின்மை, போதிய ஓய்வின்மை, உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களாலும் ரத்த அழுத்தம் அதிகரிப்பது உண்டு.

    தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தம் இருப்பதைச் சொல்லும் அறிகுறிகள். ஆனால்,பெரும்பாலா னோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. திடீரென்று மயக்கம், பக்க வாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அப்போது பார்த்தால் ரத்த அழுத்தம் 180க்கு மேல் எகிறி இருக்கும்.

    எந்தவித தொல்லையும் கொடுக்காமல் உடலில் மறைந்திருக்கும் இந்த நோயைக் காலமுறைப்படி டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தை அளந்து கொள்வதன் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அப்படி இருந்தால் அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால், பலவித ஆபத்துகள் அணிவகுக்கும். முக்கியமாக, இது இதயத்தைப் பாதிக்கும்பொழுது இதயம் வீங்கி துடிப்பதற்குச் சிரமப்படும். மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப்படும்போது பக்கவாதம், மயக்கம், மரணம் ஏற்படவும் கூடும். இது கண்ணை பாதித்தால், பார்வை பறி போய்விடும்; சிறிது சிறிதாகச் சிறுநீரகங்கள் கெட்டுச் செயல் இழந்துவிடும்.

    ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு மாத்திரை, மருந்துகள் உள்ளன. சிலருக்கு ஒரு வகை மாத்திரை மட்டும் பலன் தராது. அப்போது பல வகை மாத்திரைகளைக் கலந்து தருவார்கள். உணவுக்கட்டுப்பாடு ரொம்பவும் முக்கியம். புகைபிடித்தல், மது அருந்துதல் கூடாது. உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், அதிக எண்ணெய் உள்ள உணவுகள் ஆகாது. இப்படி வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    மருந்து, மாத்திரை, உணவுக்கட்டுப்பாடு என்று இருந்தும் ஒருவருக்கு ரத்த அழுத்தம் கட்டுப்படவில்லை என்றால், அதை ‘எதிர்ப்பு காட்டும் உயர் ரத்த அழுத்தம்’ என்று சொல்வார்கள். உலக அளவில் உயர் ரத்த அழுத்தமுள்ள 100 நோயாளிகளில் சுமார் 35 பேருக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. ரத்த அழுத்தத்தை அளக்க இதுவரை பல்வேறு கருவிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

    இப்போது புதிதாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘பேராலூப்’ (BaroLoop) என்பது இதன் பெயர். ஃபிரெய்பர்க் பல்கலைக்கழகத்தைச் (University of Freiburg) சேர்ந்த டாக்டர் டென்னிஸ் பிளாட்ஷா (Dr. Dennis Plachta) தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் இது சாத்தியமாகியுள்ளது.

    இது எப்படி வேலை செய்கிறது? இந்தக் கேள்விக்கு டாக்டர் டென்னிஸ் பிளாட்ஷாவே பதில் சொல்கிறார்...‘‘மூளையிலிருந்து வேகஸ் நரம்பு வருகிறது. இது மார்பு மற்றும் வயிற்றில் உள்ள இதயம், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்குக் கட்டளைகளைக் கொண்டு வருகிறது. இதில் ‘பேரோரிசப்டார்ஸ்’ எனும் நரம்பிழைகள் உள்ளன. இவைதான் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

    நாங்கள் கண்டுபிடித்திருக்கும் கருவியை இதயத்துடிப்பைச் சீராக்க உதவுகின்ற ‘பேஸ்மேக்கர்’ கருவியுடன் ஒப்பிடலாம். சிறிய செல்போன் அளவில் உள்ள இக்கருவியில் ‘‘எம்சிஇ’ (Multichannel cuff electrodeMCE) என்ற ஒரு மின்கற்றை உள்ளது. அதில் 24 எலெக்ட்ரோடுகள் உள்ளன. இதயத்துடிப்பில் கோளாறு உள்ளவர்களுக்கு பேஸ்மேக்கரை நெஞ்சுக்குள் பொருத்துவது மாதிரி, இதை சிறிய அறுவை சிகிச்சை மூலம் கழுத்தில் வேகஸ் நரம்பு வருகின்ற இடத்தில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

    இதில்உள்ள எலெக்ட்ரோடுகள் ரத்தக் குழாயின் சுருங்கி விரியும் தன்மையை உணர்ந்து, ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, மற்றொரு எலெக்ட்ரோடு அதைக் கண்டுபிடித்து வேகஸ் நரம்பிழைகளைத் தூண்டி மூளைக்கு சிக்னல் அனுப்பும். உடனே மூளை ரத்த அழுத்ததைக் கட்டுப்படுத்த வேகஸ் நரம்புக்குக் கட்டளையிடும். இப்படி உடலுக்குள் இருந்தபடியே இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

    தற்போது எலிகளுக்கு இதைப் பொருத்தி சோதனை செய்தபோது, எந்தவித பக்க விளைவும் இல்லாமல், ரத்த அழுத்ததை 40 சதவீதம் குறைத்துள்ளது. இந்தக் கருவியை மேலும் நவீனப்படுத்துவதன் மூலம் இன்னும் நன்றாகவே ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார், டென்னிஸ் பிளாட்ஷா. இது பயன்பாட்டுக்கு வரும்வரை நாம் காத்திருப்போம்.


    டாக்டர் கு.கணேசன்


    Last edited by chan; 22nd Mar 2015 at 01:06 PM.
    jv_66 likes this.

  10. #20
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: ரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்த புதிய Ĩ

    Thanks for the useful info.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter