Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

Osteoporosis -எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும், அத&


Discussions on "Osteoporosis -எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும், அத&" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&

    தாடையெலும்பு

    தாடையெலும்பு மண்டையோட்டைச் சேர்ந்த எலும்பு ஆகும். இதுவும், முக எலும்பும் சேர்ந்து முகத்திலுள்ள மிகப்பெரியதும், மிகப் பலமுள்ளதுமான எலும்பை உருவாக்குகின்றன. இது முகத்தில் கீழ்த் தாடையை உருவாக்குவதுடன், கீழ் வரிசைப் பற்களையும் தாங்கியுள்ளது.

    குருத்தெலும்பு
    குருத்தெலும்பு (cartilage) என்பது பல விலங்கு இனங்களின் உடலில் உள்ள வளையக்கூடிய மென்மையான எலும்பு ஆகும். இது ஒரு வகை புரத நார்களாலும், வளைந்தால் மீண்டும் தன் நிலையைப் பெறும் மீண்ம நார்களாலும் (elastin) ஆன அடர்த்தியான இணைப்புத் திசு ஆகும். இது சவ்வு இழை மற்றும் வேறு பொருட்களினால் ஆனது. இவை அனைத்தும் திசுக்கூழ் எனப்படும் பாகுத் தன்மை கொண்ட பொருளில் அடக்கப்பட்டிருக்கும். குருத்தெலும்புக்குள் குருதிக் குழாய்கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றுக்குத் தேவையான சத்துப்பொருட்கள், திசுக்கூழ் ஊடாக அடர்த்தி வேறுபாடால் பரவல் முறையில் உறிஞ்சப்படுகின்றன. திசுக்கூழ் பல செயற்பாடுகளைக் கொண்டது. எலும்பின் இயக்கத்துக்கு வேண்டிய மழமழப்பான மேற்பரப்பை வழங்குவதும், எலும்புப் படிவுக்கான சட்டகமாகத் தொழிற்படுவதும் இவற்றுள் அடங்கும்.

    சுறா மீனின் உடல் முழுவதிலும் உள்ள எலும்பு இவ்வகை குருத்தெலும்பால் ஆனது. மனிதர்களின் உடலில் பல இடங்களில் குருத்தெலும்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் தைராய்டு குருத்தெலும்பு (Thyroid cartilage) என்னும் தொண்டைச் சுரப்பி குருத்தெலும்பு அவற்றில் ஒன்றாகும்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&

    காறை எலும்பு
    மனித உடற்கூற்றியலில், காறை எலும்பு (Clavicle) என்பது ஒரு நீண்ட எலும்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது தோள் பட்டையின் ஒரு பகுதியாக அமைகின்றது. இது தனது சொந்த அச்சில் சுழலக்கூடியது. சிலரில், சிறப்பாகப் பெண்களில், தோளின் இப்பகுதியில் கொழுப்புக் குறைவாக இருப்பதன் காரணமாக, இவ்வெலும்பு கண்ணுக்குத் தெரியும் விதமாகப் புடைத்து இருப்பதைக் காணலாம்.

    காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் கிடையாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது மேற் கையை, முதல் விலா எலும்புக்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, தோள் எலும்பின் (scapula) உச்சியுடன், உச்சிக்காறை மூட்டில் இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும்

    எலும்பு மச்சை
    எலும்பு மச்சை (Bone marrow) என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையான இழையமாகும். வளர்ந்தவர்களின் பெரிய எலும்புகளிலுள்ள எலும்பு மச்சை குருதிக் கலங்களை (செல்களை, கண்ணறைகளை) உற்பத்தி செய்கிறது. என்பு மச்சையில் சிவப்பு என்பு மச்சை, மஞ்சள் என்பு மச்சை என இருவகைகள் உண்டு. சிவப்பு என்பு மச்சையிலிருந்து குருதிச் சிவப்பணுக்கள், குருதி வெள்ளை அணுக்கள் மற்றும் குருதிச் சிறுதட்டுக்கள் உற்பத்தியாகின்றன. சில வெள்ளை அணுக்கள் மஞ்சள் என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன. மஞ்சள் என்பு மச்சையின் நிறத்துக்குக் காரணம் கொழுப்புக் கலங்கள் அதிகம் உள்ளமை ஆகும். பிறக்கும் போது எல்லா எலும்பு மச்சையும் சிவப்பு ஆகும். வளர்ந்தவர் ஒருவரில் சராசரியாக 2.6 கிலோகிராம் என்பு மச்சை இருக்கும். இதில் ஏறத்தாழ அரைப்பங்கு சிவப்பு என்பு மச்சையாகும்.

    சில வகையான குருதிப் புற்றுநோயால் தாக்குண்டவர்கள் தாங்கள் உயிர்பிழைக்க, சில குறிப்பிட்ட இணக்கம் உடைய எலும்பு மச்சையைப் பிறரிடம் இருந்து பெற்று உள் செலுத்தினால் புற்றுநோய் உற்றவர்கள் முற்றிலும் குணம் அடையக்கூடும். இது சில வகையான புற்றுநோய்க்குத் தீர்வுதரும் ஒரு நல்ல வழி. இதற்காக என்பு மச்சை கொடைக்காக பதிவகங்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன

    விலா எலும்பு
    முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் என்பன மார்புக் கூட்டை உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.

    jv_66 likes this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&

    மனித விலா எலும்புகள்

    மனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் தொங்கு விலா எலும்புகள் எனப்படுகின்றன

    இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.

    சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.

    மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சி யம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.

    சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.

    மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சி யம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    எல்லா நோய்களையும் நம்மால் குணப்படுத்துவதை விட எளிதாக தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.
    எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசைநார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன. இந்த எலும்புகளில்தான் கசியம் பொ
    மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசைநார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.

    இந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பொஸ்பேட் சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.
    இதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன.

    இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.

    சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.

    மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கல்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    jv_66 likes this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும்!

    ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும்!


    இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்... அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு பாதிப்பு பற்றிப் பேசுகிறார் எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

    நமது எலும்பு மண்டலத்தில் உள்ள தாதுச்சத்துகள், வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வயது ஆக ஆக குறையும். இதன் காரணமாக, எலும்புகள் தேய்வு அடைகின்றன. இவ்வாறு எலும்புகள் தேய்ந்து போவதைதான் மருத்துவ நிபுணர்கள் Osteoporosis எனக் குறிப்பிடுகின்றனர். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, இது ஒரு நோயல்ல. எலும்பு தேய்வு என்பது வயதான காலத்தில் உடலில் உண்டாகுகிற ஒரு பாதிப்பே.

    முதியவர்கள், உடல் உழைப்புக்கு வாய்ப்பு இல்லாமல் ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்தவாறு வேலை செய்பவர்கள், உடலில் வெயில் படுவதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள், வயிற்றுப் பிரச்னை காரணமாக பால் குடிக்கத் தயங்குபவர்கள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள்,

    மது அருந்துபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகமாக சாப்பிடுபவர்கள், வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் என பல தரப்பினருக்கும் எலும்புத் தேய்வு வரக் கூடும். குறிப்பாக, இப்பாதிப்பு பெண்களையே அதிகம் தாக்கக்கூடும். முக்கியமாக, 50 வயது கடந்த பெண்களுக்கு ஹார்மோன்கள் மாறுபாடு காரணமாக மாதவிலக்கு நிற்கும் காலகட்டத்தில் எலும்புத் தேய்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    பெண்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே வைட்டமின் மற்றும் புரதக் குறைபாடு, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல், குளிர்சாதன வசதி உள்ள
    இடத்தில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்ந்து போகக் கூடும். முதியவர்களுக்கு வயது காரணமாக எலும்புகள் தேய தொடங்கும்.

    அவர்கள் கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பாதுகாப்புடன் நடந்து போவதற்காக வீட்டில் தேவையான இடங்களில் கைப்பிடிகள் பொருத்த வேண்டும். தேவையில்லாத தரைவிரிப்புகளை அகற்றுவதும் நல்லது.

    நமது உடலில் உள்ள எலும்புகள் தேய்வுக்கு உள்ளாகும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அறிகுறிகள் எதுவும் கிடையாது. எலும்பு முழுவதும் தேய்வு அடைந்தபிறகுதான் அதற்கான அறிகுறிகள் கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

    உடல் களைப்பு மற்றும் வலி, சிறிய அளவில் அடிபடுவதன் காரணமாக இடும்பு எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் முறிவு (Fracture) ஏற்படுதல் ஆகியன எலும்பு தேய்ந்து போனதற்கான அறிகுறிகள் ஆகும். ஒருவருக்கு எலும்பு தேய்வு அடைந்து உள்ளது என்பதை Dexa Scan, X-Ray எடுப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    எலும்புத் தேய்வு மரபணு காரணமாக வருவது கிடையாது. இந்த பாதிப்பு வருவதைத் தடுக்க முடியும். ஆனால், முழுமையாக குணப்படுத்த முடியாது.

    எலும்புத் தேய்வுக்கு உள்ளாவதை சில சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த சிகிச்சை முறைகள் எலும்புத் தேய்வால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். நடத்தல், யோகாசனம் செய்தல் போன்ற உடற் பயிற்சிகளுடன் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ள பிராக்கோலி சாப்பிடலாம்.

    அன்றாட உணவுடன் தேவையான அளவு கால்சியம், புரதச்சத்து ஆகியவற்றையும் சரியான விகிதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவு வகைகளில் மீன், சிக்கன் சாப்பிடலாம். முட்டையில் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு, வெள்ளைக்கரு மட்டும் உண்ணலாம். மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம். கொழுப்பு அதிகம் உள்ள மட்டனையும் தவிர்ப்பது நல்லது.

    எலும்புத் தேய்வைக் கட்டுப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட சிகிச்சையில் எலும்பின் ஆற்றலை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ஒரு முறை எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவைசிகிச்சை மருத்துவரின் ஆலோசனைப்படி ஊசி போட்டுக் கொள்ளலாம்.மாதவிலக்கு நிற்கும் காலகட்டத்தில் எலும்புத் தேய்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.




  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்

    ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்!
    50 வயதைக் கடக்கும்போது, உடல் உபாதைகள் ஒவ்வொன்றாக வந்து சேரும். முதுமைக்கே உரிய தள்ளாமை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், கண் பிரச்னை, செவித்திறன் குறைபாடு என ஏகப்பட்ட பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். எலும்பு தேய்மானம் தொடர்பான பிரச்னைகளும் வந்து வாட்டும். எளிதில் உட்கார முடியாமல், நிற்க முடியாமல் போகலாம்.

    ''ஒவ்வொருவரும் தங்களின் உடல் எலும்புகளை வலுவாகவைத்துக்கொள்வதில், அக்கறை செலுத்தாமல் போனால், வருங்காலத்தில் 'ஆஸ்ட்டியோபோரோசிஸ்’ என்ற 'எலும்புத் திண்மைக் குறைவு’ நோயால் அவதிப்பட நேரிடும். இந்த நோய் உடலில் இருப்பது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. முற்றிய நிலையில்தான் எலும்பு முறிவு மற்றும் கூன் விழுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் சசீந்தர்.

    'ஆஸ்ட்டியோபோரோசிஸ் என்றால் என்ன?'
    'நமது உடலை தாங்கிப் பிடிப்பது எலும்புகள். 'ஆஸ்ட்டியோபோரோஸிஸ்’ என்பது எலும்பில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு. ஒவ்வோர் எலும்பும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். பழைய எலும்பு செல்கள் நீக்கப்பட்டு, புதிய செல்கள் உருவாகும். இளமையில் புதிய செல் மிக விரைவாக உற்பத்தியாகும். அதே நேரம், பழைய செல்கள் அழிவது என்பது மெதுவாக நடக்கும். ஆனால், முதுமைக் காலத்தில் புதிய எலும்பு செல் உருவாவது தாமதமாகும். பழைய செல்லுக்குப் பதில் புதிய செல், அந்த இடத்தில் உருவாகாமல் போகும்போது, அங்கு சிறுசிறு துவாரங்கள் ஏற்பட்டு எலும்பு வலு இழக்கும். இதன் முற்றிய நிலைதான் எலும்புகள் அடர்வு குறைந்து மிருதுவாகி, கடைசியில் உடைந்து வலியை ஏற்படுத்தும்.'

    'யார் யாருக்கு எல்லாம் வரும்? காரணங்கள் என்ன?'
    'ஆண், பெண் இருவருக்கும் வரும். ஆனால், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மத்தியிலேயே இது அதிக அளவில் காணப்படும். ஆஸ்ட்டியோபோரோசிஸில் மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகை, இந்தியாவில் அதிகம். 50 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றவுடன், 'ஈஸ்ட்ரோஜென்’ என்ற ஹார்மோன் குறைபாடு ஏற்படும்.

    இதனால் எலும்புகளில் அதிக அரிப்பு ஏற்பட்டு வலு இழந்துவிடும். இரண்டாவது வகை, வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படும். மூன்றாவது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, புகைபிடிப்பது, மது அருந்துதல், தைராய்டு குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் ஏற்படக்கூடியது. இது சற்று அரிதாகக் காணப்படுகிறது.'


    'இந்த நோய் உள்ளதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?'

    'இந்த நோய் முற்றிய நிலையை அடைய, மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும். 50 வயதைக் கடந்த ஆண்களும், மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களும் சற்று விழிப்பு உணர்வுடன் இருந்தால், இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவர்களைச் சந்தித்து, 'டெக்ஸா ஸ்கேன்’ பரிசோதனை செய்து எலும்பின் அடர்த்தியைக் கண்காணிக்க வேண்டும். அதில், 'டீ ஸ்கோர்’ எனச் சொல்லப்படும் அளவு எண் - 2.5 SDக்குக் கீழ் இருந்தால், அது ஆஸ்ட்டியோபோரோசிஸ். அதுவே, 1 முதல் 2.5 SDக்கு இடையே அமைந்தால், அது ஆஸ்ட்டியோபீனியா. எக்ஸ்ரே வழியே இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், டெக்ஸா பரிசோதனை முறை மிகச் சிறந்தது.'

    'சிகிச்சைமுறைகள் என்ன?'
    'ஆஸ்ட்டியோபோரோசிஸ் நிலை வருவதற்கு முன்பு, ஆஸ்ட்டியோபீனியா என்ற நிலை உள்ளது. இதை நாம் கண்டுபிடித்துவிட்டால் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்திவிடலாம். ஆஸ்ட்டியோபோரோசிஸ் நிலையை எட்டிவிட்டால், எலும்பு முறிவு ஏற்படும். அறுவைசிகிச்சை செய்து முதலில் எலும்புகளை சீர்செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் மூலம் ஆஸ்ட்டியோபோரோசிஸில் இருந்து தப்பிக்கலாம். எலும்பு ஆரோக்கியத்துக்கு, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். கால்சியத்தை நம் உடல் கிரகிக்க வைட்டமின் டி அவசியம். சூரிய ஒளியில் இருந்தே இதைப் பெற முடியும். உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், டாக்டரின் ஆலோசனையின்பேரில் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.''

    Last edited by chan; 4th Aug 2015 at 10:21 PM.
    jv_66 likes this.

  6. #16
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்

    Nalla vilakkam......thank u sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Osteoporosis -எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும், அ

    Very useful infos.

    Jayanthy





  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Osteoporosis and sunlight - எலும்பு தேய்மானம் தடுக்கும் சூரிய ஒ

    எலும்பு தேய்மானம் தடுக்கும் சூரிய ஒளி

    எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள்உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள் தான் எலும்புகள். மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இதில் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய ரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன. பொதுவாக எலும்புகள் பல வகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு அமைந்துள்ளன.

    எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்துக் காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளை கொண்டு எலும்புகளுக்கு விறைப்பு தன் மையை கொடுப்பது எலும்புத்திசுக்கள் தான். மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண்புழை, நரம்பு, ரத்த அணுக்கள், குருத் தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பது டன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது. மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன. எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

    எலும்பு தேய்மானம்

    மனிதன் முதுமை அடையும் போது உடல் உறுப்புகளில் ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து உணர முடியும். வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாகி நோயின் தீவிரம் மனிதனை முடக்கும்.
    எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக் கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து விடுவதால் எலும்புகளில் கால்சிய குறைபாடு காரணமாக தேய்மானம் ஏற்படுகிறது. எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானால் எலும்பு முறிவு ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானம் ஆகும்.

    காரணங்கள்

    ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாத விடாய் நின்று மெனோ பாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் எலும்பு தேய்மான நோய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத் தட்ட பஞ்சு போல் ஆகிவிடும். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் “d” குறைபாடும் ஏற்படும். ஆண்களை பொறுத்தவரை புகைப்பழக்கம், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை எலும்பு தேய்மான நோய்க்கு முக்கிய காரணமாகும்.

    மெனோ பாஸ்பருவம்

    பெண்களுக்கு மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட் ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் “மெனோ பாஸ்” எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் கால கட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து விடுவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மெனோ பாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் எலும்பு தேய் மானம் ஏற்பட காரணமாகிறது.

    வைட்ட மின் “d” குறைபாடு

    கிராமப்புறங்களில் குழந்தைப் பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவுப்பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் எலும்பு தேய் மானத்துக்கு காரணமாகும். வைட்ட மின் ‘டி’ குறைவு, ஊட்டச் சத்தில்லாத உணவு, வீட்டுக்கு ள்ளேயே அடைந்து கிடப்பது, வேலை இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது மற்றும் மரபுக் காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது.

    குளிர்பானம் குடித்தல்

    குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பொஸ் பேட் சத்து அதிகமாக உள்ளது. பொஸ் பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்கு செல்லும் கால்சியம் சத்து குறையும். எனவே சிறுவயதில் இருந்தே குளிப்பானங்களை குடிக்கக் கூடாது. சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும்.

    பக்க விளைவுகள்

    * எலும்பு முறிவு, மூட்டு வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், முதுகு வலி, உடல் சோர்வு, அசதி, முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு.

    தீர்வு என்ன?

    * முதியவர்கள் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

    * தினமும் 15 நிமிடமாவது சூரிய ஒளியில் உடல் படுவது அவசியம். இதன் மூலம் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் ‘டி’ தோல் மூலம் உறிஞ்சப்படும்.

    * கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

    * பச்சை காய் கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய் கறிகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். சோயாவையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

    * மீன்களை தினம் தோறும் சேர்த்து கொள்வது நல்லது.

    * புகை பிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

    * கால்சியம் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதை மருத்துவரின் ஆலோசனைப் பெற்று சாப்பிடலாம்.



  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை

    ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை

    நோய்களுக்கும் பெண்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும் போல. அதனால்தான் பலதும் பெண்களைக் குறிவைத்தே தாக்குகின்றன ஆஸ்டியோபொரோசி’ஸும் அப்படித்தான். அதென்ன ஆஸ்டியோபொரோசிஸ்?

    எலும்புப்புரை நோய், எலும்பு மெலிதல் நோய், எலும்புத்துளை நோய்... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆஸ்டியோபொரோசிஸ் ஆண்களுக்கும் வரும். ஆனால், அரிதாகவே தாக்கும்! பெண்களையோ பாரபட்சமின்றி தாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? யாருக்கெல்லாம் வரும்? தவிர்க்க முடியுமா? தப்பிக்க வழி உண்டா? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் எலும்பு, மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆறுமுகம்.


    ‘‘நம்முடைய எலும்புகளில் கால்சியம் சத்து குறைந்து, எலும்புகளின் அடர்த்தியும் குறைந்து, அவை உறுதித்தன்மையை இழந்து, மிருதுவாகும் நிலைதான் ஆஸ்டியோ பொரோசிஸ். மனித உடலில் மிக உறுதியான பாகமான எலும்பு, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கிய பிறகு, ஸ்பாஞ்ச் மாதிரி மிருதுவாக மாறும். 50 பிளஸ்சில் உள்ள பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது குறி வைக்கும். மெனோபாஸ் காலத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கும். அதன் விளைவாக கால்சியம் கிரகிக்கப்படும் திறனும் குறையும். விளைவு..? ஆஸ்டியோபொரோசிஸ்!

    சரி, எலும்புகள் மிருதுவானால் என்னாகும்?

    ஆரோக்கியமான ஒருவர், லேசாக கீழே விழுந்தாலோ, இடறினாலோ எலும்புகள் அத்தனை சீக்கிரத்தில் உடையாது. அதுவே ஆஸ்டியோபொரோசிஸ் பாதித்தவர்களுக்கு, லேசாக இடித்துக் கொண்டாலோ, வழுக்கி விழுந்தாலோ, எலும்புகள் உடையும்.

    அறிகுறிகள்?

    கால் வலி, மூட்டு வலி என எலும்புகள் இணைகிற இடங்களில் எல்லாம் வலி இருக்கும். மிதமான உடற்பயிற்சிகள் கூட களைப்படையச் செய்யும். வலிதான் பிரதான அறிகுறி என்பதால், அதை வைத்து, ஆஸ்டியோபொரோசிஸாக இருக்குமோ என யாருக்கும் சந்தேகிக்கத் தோன்றாது. அடிபட்டோ, கீழே விழுந்தோ, எலும்புகள் நொறுங்கும்போதுதான், அதன் வீரியம் தெரியும். முதுகெலும்பு, இடுப்பெலும்பு, விலா எலும்பு மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் இந்த பாதிப்பை அதிகம் காணலாம்.

    எலும்புகள் அடர்த்தி இழப்பதேன்?

    நன்றாக இருந்த எலும்புகள், திடீரென ஏன் தம் அடர்த்தியை இழக்க வேண்டும்? எலும்புகளின் அடர்த்தியைப் பொறுத்தே, அவற்றின் உறுதித் தன்மை தீர்மானிக்கப்படும். பெண்களைவிட, ஆண்களுக்கு இயல்பிலேயே எலும்புகளின் அடர்த்தி அதிகம். அதனால்தான், அவர்கள் ஆஸ்டியோபொரோசிஸால் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள். எலும்புகளின் அடர்த்தியானது குழந்தைப்பருவத்தில் அதிகரிக்கத் தொடங்கி, ஒருவரது 25வது வயதில் உச்சத்தில் இருக்கும். வயதாக, ஆக, அதாவது 35க்குப் பிறகு, அந்த அடர்த்தி மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கும். வருடத்துக்கொரு முறை முதுமையின் காரணமாக, 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை எலும்புகளின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும்.

    எப்படிக் கண்டுபிடிப்பது?
    DEXA என்கிற ஸ்கேன் மூலம் நடு முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவற்றின் அடர்த்தியைக் கண்டுபிடிக்கலாம். இந்த ஸ்கேன் செய்ய ரூ.2,500 செலவாகும். T score என்கிற அளவீட்டை வைத்து, ஆஸ்டியோபொரோசிஸ்தானா என்பதைக் கண்டுபிடிப்பார்கள். T score மைனஸ் 1 ஆக இருக்க வேண்டும். அது மைனஸ் 3 அல்லது அதற்கும் கீழ் என்றால் ஆஸ்டியோபொரோசிஸ் உறுதி செய்யப்படும். மைனஸ் 1க்கும் மைனஸ் 2.5க்கும் இடைப்பட்டிருந்தால், அது ‘ஆஸ்டியோபீனியா’ என்கிற நிலை. அதாவது ஆஸ்டியோபொரோசிஸை நோக்கிய பயணத்தின் ஆரம்பக் கட்டம்!

    சிகிச்சைகள்?

    தினசரி உடலின் இயக்கத்துக்கு கால்சியம் மிக அவசியம். அதற்குப் போதுமான கால்சியம் சேராத பட்சத்தில், அது எலும்புகளில் இருந்து தேவையான கால்சியத்தை எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    கால்சியம் உடலில் சேர, வைட்டமின் டி3 சத்து மிக அவசியம். வைட்டமின் டி3 சத்தை சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டுமே பெற முடியும். ஆனால், இன்று வெயிலுக்குப் பயந்துகொண்டு, தலை முதல் கால் வரை மூடி மறைத்துக் கொண்டுதான் வெளியே செல்கிறார்கள் பெண்கள். குறிப்பாக
    இஸ்லாமிய பெண்கள், பர்தா அணிந்த படியே வெளியில் செல்வதால், அவர்களுக்கு வைட்டமின் டி3 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகி, அதன் விளைவாக ஆஸ்டியோபொரோசிஸ் வரும் ஆபத்தும் அதிகம்.

    வைட்டமின் டி3 குறைபாடு உள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியிருந்தால், வைட்டமின் டி3 மருந்தை வாரம் ஒரு முறை என 6 வாரங்களுக்கும், பிறகு மாதம் ஒரு முறையும் தர வேண்டியிருக்கும்.

    கர்ப்பப்பையை சீக்கிரமே அகற்றி விட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கும் அபாயம் அதிகம். அவர்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்
    தெரபியுடன், கால்சியம் சப்ளிமென்ட்டுகளும் தர வேண்டும். எலும்புகளில் கால்சியம் சேரச் செய்வதற்கான பிரத்யேக ஊசிகளும் உள்ளன. வருடம் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டால், ஒரு வருடத்துக்குப் பலன் இருக்கும்.

    மூக்கின் வழியே இழுத்துக் கொள்ளக் கூடிய ஸ்பிரே வகை மருந்துகளும் உள்ளன. அவை, எலும்புகளில் உள்ள கால்சியத்தை, உடல் இழுத்துக் கொள்வதைத் தடுக்கும். ஒரு வேளை எலும்பு முறிந்தால், அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

    தப்பிக்க வழி?
    ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதுதான் முதல் வழி. பருமன் பிரச்னை, ஸ்டியோபொரோசிஸுக்கும் விதை போடலாம். ஜாக்கிரதை! உடற்பயிற்சி மட்டும்தான், இதற்கான ஒரே தீர்வு.

    கால்சியம் அதிகமுள்ள பால் மற்றும் பால் பொருள்கள், முட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் குடித்தால் கால்சியம் சேரும் என லிட்டர் லிட்டராக பாலைக் குடித்துக்கொண்டு, உடற் பயிற்சியே இல்லாமல் இருந்தால், எடை கூடும். வெயிலே படாமல் இருப்பது பாதுகாப்பானதல்ல. அதிகாலை வெயிலும், அந்தி சாய்கிற நேரத்து வெயிலும்,ஒன்றும் செய்யாது. தினம் சில நிமிடங்களாவது வெயில் உங்கள் மீது படட்டும்.”


    Last edited by chan; 17th Sep 2015 at 03:38 PM.
    jv_66 likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    osteoporosis

    எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்



    எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய். நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும். உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே.

    பலவீனமடையும் எலும்புகள்
    ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.

    இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் "D" குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்களைப் பொறுத்தவரை புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

    மெனோபாஸ் பருவம்
    மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் "மெனோபாஸ்" எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கல்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.

    வைட்டமின் "D" குறைபாடு
    கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம்.

    கல்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    வருமுன் காப்போம்
    குறிப்பாக குந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகம். பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கல்சியம் சத்து கடுமையாக குறையும். எனவே குழந்தைகள் இந்த குளிப்பானங்களை குடிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது. மேலும் எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகின்றனர்.

    மனிதன் முதுமை அடையும் போது உடல் உறுப்புகளின் ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் எமக்கு ஏற்படும் பக்க வீளைவுகளில் இருந்து உணர முடியும். வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாக நோயின் தீவிரம் ஆளைக் முடக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றது. நோய்க்கான காரணங்களை அறிந்து அவற்றிக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதன் மூலம் முதுமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.

    எலும்பு தேய்யமானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

    எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கல்சியம் என்ற தாது உப்பு.அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத் தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கல்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது..

    எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு:
    1 . எலும்பு முறிவு
    2 . மூட்டு வலி
    3 . மூட்டு வாதம்
    4 . கழுத்து எலும்பு தேய்மானம்
    5 . முதுகு எலும்பு தேய்மானம்
    6 . முதுகு வலி
    7 . உடல் சோர்வு
    8. அசதி
    9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
    10 . நடையில் தளர்வு இதுபோன்ற பக்க விளைவுகளால் பலரும் தமது சிரமத்திற்குள்ளாகிறார்கள்

    எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.

    மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதன் நீட்டம், ஒடுக்கமே ஒருவரின் உயரம், பருமன் என்பனவற்றை நிர்ணயிக்கின்றது. ஒருவரை நகர வைப்பதும், செயல்பெறச் செய்வதும், உறுதியான தோற்றத்தைக் கொடுப்பதும் எலும்புகள்தான். இவைகள் பாதிக்கப்பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.

    எலும்புகள் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய இரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.

    பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு அமைந்துள்ளன.

    எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந் துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.

    மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது

    மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

    எலும்பில் கல்சியம், பொஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கல்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்பெறுகின்றன. இந்த கல்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

    எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு "மூட்டுகள்" என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன. தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையாமூட்டுகள் ஆகும்.

    அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.
    * பந்துக்கிண்ண மூட்டு
    * கீழ் மூட்டு
    * வழுக்கு மூட்டு
    * செக்கு மூட்டு

    இந்த நால்வகை அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழு வழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.

    எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள "ஏந்தி" என்ற எலும்பாகும். மிகப் பெரிய எலும்பு "தொடை எலும்பாகும்". மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன. இவை 12 ஜோடியாக முள்ளந்தண்டுடன் இணைக்கப்பெற்று ஒரு கூடுபோல் காட்சியளிக்கும். இக்கூட்டினுள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கப்பெறுகின்றன.

    சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும். பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும். நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.

    தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.
    மண்டையறை எலும்புகள் – 8
    முக எலும்பு – 14
    காது எலும்புகள் – 6
    (மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
    தொண்டை எலும்பு – 1
    தோள்பட்டை எலும்பு – 4
    (காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)
    மார்புக் கூட்டில் – 25
    (மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
    முதுகெலும்புத் தூண் – 24
    மேற்கைகளில் – 6
    கைகளில் – 54
    இடுப்புக்கூடு – 4
    கால்களில் – 8
    கால்களின் கீழ் பகுதியில் – 52

    இவ் நோய் வராது தடுப்பது ஒன்றே சரியான தீர்வு, அதை எப்படி செய்வது?
    1 . எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.
    2 . வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம்.
    3 . நடைப்பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.
    4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
    5 . குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.
    6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
    7 . பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.
    8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.
    9 . காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
    10 . மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.
    11 . புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
    12 . பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வதால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்கலாம்.
    13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

    முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை நாம் சரி செய்து கொள்ள மேலே கூறப்பெற்ற அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்த்து மகிழ்வாக வாழலாம்.



    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter