Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

Osteoporosis -எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும், அத&


Discussions on "Osteoporosis -எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும், அத&" in "General Health Problems" forum.


  1. #21
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை

    Nice sharing Letchmi.


    Sponsored Links

  2. #22
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: osteoporosis

    Useful info Letchumi.


  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை

    டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்...
    *வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களையும், 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களையும், இந்த நோய் அதிகம் பாதிக்கும். மது குடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு இந்த நோய் முன்கூட்டியே வரும் வாய்ப்பு அதிகம்.

    டெக்ஸா ஸ்கேன் செய்துபார்த்தால் மட்டுமே இதன் பாதிப்பை அறியமுடியும். ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அளவை வைத்தும், இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும்.


    *40 வயதைக் கடந்த பெண்கள், வருடத்தில் மூன்று மாதங்களுக்கு கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி சத்துள்ள எள், கீரை வகைகள், பீட்ரூட், பாதாம், பிஸ்தா, முழு உளுந்து, பால் பொருட்கள், கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    *காலை மற்றும் மாலை வெயிலில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், அந்தச் சமயத்தில் வெளியில் வந்து உட்கார்ந்தால்கூட போதுமானது.


    Last edited by chan; 17th Sep 2015 at 07:55 PM.
    jv_66 likes this.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பெண்களை அதிகம் தாக்கும் எழும்பு புரை நோய

    பெண்களை அதிகம் தாக்கும் எழும்பு புரை நோய்


    பரவலாக நாற்பது வயதிற்கு மேல் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுதல் சாதாரணம். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும்.

    கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவுக்கு இட்டு செல்வதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும்.

    இந்த நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். ஆயினும் இத்தகைய நோயை தடுக்க டஜன் கணக்கில் வழிகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் ஆஸ்டியோ போரோசிஸ் வரக்கூடும்.

    ஆயினும் இது பெண்களுக்கு தான் அதிக அளவில் வருகிறது. குறிப்பாக இறுதி மாதவிடாய்/மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்காவில் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் தாக்கம் இருக்கிறது.

    எனவே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில் இந்நோய் இருப்பதாக உணரும் முன்னரே பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இப்போது அந்த எலும்புப்புரை/ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, எலும்புப்புரை அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் நோயிலிருந்து விடுபடுங்கள்.

    உடற்பயிற்சி :

    ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்க உதவும் விஷயங்களில் உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால், வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் வாரம் இரண்டு மூன்று முறையாவது ஏரோபிக் மற்றும் வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    உப்பு உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :

    உப்பை அதிகம் உட்கொள்ளும் போது, அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், அது மிகவும் ஆபத்தாய் முடியும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவருக்கு சிறுநீரில் கால்சியம் அதிகளவில் வெளியேறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    காப்ஃபைன் உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :

    உடலில் கால்சியம் உறிஞ்சுதலை, காப்ஃபைன் தலையிட்டு கெடுத்துவிடும். ஆகவே காப்ஃபைன் இருக்கும் சோடா, காபி மற்றும் சாக்லெட் போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.

    புகைப்பிடித்தல் கூடாது :

    புகைப்பிடித்தல் எலும்பு முறிவுகள் குணமடைவதை தடை செய்கின்றது மற்றும் உடலில் மீண்டும் புதிய எலும்பு வளர செய்யும் திறனையும் குலைக்கின்றது. ஆகவே புகைப்பிடித்தலை நிறுத்தினால், எலும்புகள் வலிமையடைவதோடு, முறிவிலிருந்தும் விரைவில் குணமடையலாம்.

    கால்சியம் அதிகம் உட்கொள்ளுதல் :

    தேசிய சுகாதார நிறுவனங்கள் பரிந்துரையின்படி, பெரியவர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் வரை உடலில் சேர வேண்டும். இந்த பரிந்துரை 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 70 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும், 1200 மில்லி கிராம் இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றது.

    வைட்டமின் டி அதிகப்படுத்துதல் :

    வைட்டமின் 'டி' உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக இத்தகைய வைட்டமின் 'டி' சத்தை சூரிய வெளிச்சமானது அதிகம் உற்பத்தி செய்கிறது. மேலும் பால், ஆரஞ்சு மற்றும் காலை உணவு தானியங்களில் வைட்டமின் 'டி' சத்தானது செறிந்துள்ளது.

    சோடா உட்கொள்ளுதலை கவனித்தல் :

    2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சோடா, கோலா ஆகியவை எலும்புகளை உருக்குவது தெரிய வந்துள்ளது. இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சோடா எலும்பை வலுவிழக்க செய்கிறது மற்றும் சோடாவை அதிகம் அருந்துபவர்கள் கால்சியம் நிறைந்துள்ள பாலை அவ்வளவாக உட்கொள்ளமாட்டார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    உட்கொள்ளும் மருந்துகளில் கவனம் :

    சில மருந்துகள் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகளை அதிகபடுத்துகின்றன. அதில் அழற்சி எதிர்ப்பு கார்ட்டிகோஸ் டீராய்டுகள் எனப்படும் ப்ரிட்னிசோன் முக்கியமான காரணி ஆகும்.

    மது உட்கொள்ளுதலை கட்டுப்படுத்தல் :

    ஒரு நாளைக்கு என்று அளவு வைத்து மது அருந்துதல் உண்மையில் எலும்பு முறிவுகளை தடுக்கும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் வகையில், அளவுக்கு மீறி மது அருந்தினால் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து, உடலில் கால்சியம் அளவுகளை சீர்குலைத்து, ஈஸ்ட்ரோஜன் போன்ற எலும்பை வலுப்படுத்தும் ஹார்மோன்களை குறைக்கிறது.

    jv_66 likes this.

  5. #25
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: பெண்களை அதிகம் தாக்கும் எழும்பு புரை நோ

    Very useful info Letchmy.
    Those articles helps me a lot.
    Thank you so much.


  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    எலும்பு வலுவிழப்பு நோய் தடுப்பது எப்படி?

    எலும்பு வலுவிழப்பு நோய் தடுப்பது எப்படி?


    ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ ( Osteoporosis ) என்று ஆங்கில மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

    அதிலும் குறிப்பாக மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்து போவது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்து வருகிறது.

    ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன?
    நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது.

    எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும்.

    அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’.ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும்.

    இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.

    காரணங்கள்?

    எலும்பு வலிமையை இழப்பதற்கு முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்து விடுவதால் இவர்களுக்கு எலும்பு பலவீனம் அடைந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்னை போன்ற பலவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது.

    பரம்பரை ரீதியாக குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவை சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.

    இதுபோல, உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கனவே எலும்புகள் பலவீனமாக இருக்கும் என்பதால் முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.

    என்னென்ன தொல்லைகள்?
    பெரும்பாலும் இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும்.

    நோயைக் கண்டறிவது எப்படி?
    முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவிகிதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது.

    இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையை விட சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை அதாவது, திண்ம அளவை (Bone Mineral Density - BMD) அளக்கும் பரிசோதனை.

    எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள், இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக்குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும்.

    இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்- டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

    யாருக்கு வாய்ப்பு அதிகம்?
    உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபொரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச்சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர்.

    கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    * உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
    * லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
    * உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா?
    * உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்து விட்டதா?
    * அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா?
    * அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா?

    சிகிச்சை என்ன?

    இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச்செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமைபெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது.

    முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது.

    கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு,

    மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.

    என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின் டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின் டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழி செய்யலாம்.

    அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின் டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

    சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்று சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாக கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    தடுப்பது எப்படி?

    * இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள்.
    * யோகாசனம் செய்வதும் நல்லது.
    * புகை பிடிக்கக் கூடாது.
    * மது அருந்தக் கூடாது.
    * காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக்கூடாது.
    * எல்லா சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும்.
    * வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
    * ஸ்டீராய்டு மாத்திரைகளை தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    * நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து எலும்பின் அடர்த்தியை அதாவது, திண்ம அளவை (Bone Mineral Density - BMD ) அளக்கும் டெக்சா ஸ்கேன் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம
    அளவைச் சொல்லிவிடும்.

    ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது.


    டாக்டர் கு.கணேசன்


    jv_66 likes this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஆஸ்டியோபொரோசிஸ் அறிவோம்!

    ஆஸ்டியோபொரோசிஸ் அறிவோம்!


    ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். நமது எலும்பு பலமாக இருந்தால்தான் நாம் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். பனிக்கட்டி உருகுவதுபோல எலும்பு அடர்த்தி குறைந்துவிட்டால் எலும்புகள் பலவீனமாகிவிடும். இதன் காரணமாக இடுப்பு, மூட்டு, கை எலும்புகள் முறிவு அடையக்கூடும்.

    ஆஸ்டியோபொரோசிஸ் பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள், குழப்பங்கள் உள்ளன. அவற்றில் எது உண்மை?
    தவறு

    *ஆஸ்டியோபொரோசிஸ் வயதானவர்களை மட்டுமே தாக்கும்.

    *ஆஸ்டியோபொரோசிஸ் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடியது.

    *பெண்களில், மெனோபாஸ் நிலையில் இருப்பவர்களுக்குத்தான் வருகிறது.

    *ஆஸ்டியோபொரோசிஸ் பற்றி கவலைப்படத் தேவை இல்லை.

    *ஆஸ்டியோபொரோசிஸ்க்கு சிகிச்சைகள் கிடையாது.

    *கால்சியம் மாத்திரை எடுத்துக்கொண்டாலே ஆஸ்டியோபொரோசிஸ்
    சரியாகிவிடும்.

    சரி
    *ஆஸ்டியோபொரோசிஸ் எந்த வயதினருக்கும் வரக்கூடும்.

    *ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்தப் பிரச்னை வரலாம்.

    *மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி, பெண்களுக்கு 30 வயதில்கூட இந்தப் பிரச்னை வருகிறது.

    *ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமாயினும் எலும்பு முறிவு ஏற்படலாம். இதனால் மரணம்கூட நேரலாம். எனவே, அவ்வப்போது பரிசோதனை செய்து, வரும் முன் காப்பது சிறந்தது.

    *ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் எலும்பு முறிவு ஏற்பட்டால் சிகிச்சை உண்டு.

    *இந்தியாவைப் பொறுத்தவரை, கால்சியம் குறைபாடு என்பது குறைவுதான். ஏனெனில், பால் முதலான பல பொருட்களில் கால்சியம் இருக்கிறது. உடலில் கால்சியம் சரியாகப் பயன்படுத்தப்படாமைதான் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்குக் காரணம். கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மட்டும் இன்றி, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்தையும் பெற வேண்டும், வைட்டமின் டி சத்துதான் கால்சியத்தை உடலுக்குக் கிரகிக்கும். மருத்துவர் அனுமதி இன்றி கால்சியம் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

    Last edited by chan; 16th Dec 2015 at 03:58 PM.
    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter