Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

காது, மூக்கு, தொண்டை நோய்கள்


Discussions on "காது, மூக்கு, தொண்டை நோய்கள்" in "General Health Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  காது, மூக்கு, தொண்டை நோய்கள்

  காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் நோய்கள்

  காது: கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இதன் முக்கியத்துவத்தை உணராமல் காது வலிதானே என்று அலட்ச்சியமாக இருந்து விட்டால் கடைசியில் உங்கள் வார்த்தைகளையே நீங்கள் கேட்க முடியாத பரிதாப நிலை உண்டாகி விடும். எனவே, பின்வரும் காது பிரச்னைகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.

  நடுச்செவியில் நீர்க் கோர்வை: காது கேளாமை, காது வலி, தலைச்சுற்றல் உண்டாக்கும் சிறு வயதிலேயே காது கேளாமை ஏற்பட்டால் குழந்தையின் அறிவு வளர்ச்சியும் மொழி கற்கும் திறனும் பாதிக்கப் படும். நீண்ட நாட்களுக்கு நீர்க்கோவை இருந்தால் கொலஸ்டிடோமா எனும் எலும்பு அரிப்பு நோய் உருவாகி மூளை காய்ச்சல் ஏற்படும். இந்நோய் முற்றி கோமா நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது.

  இதற்கு கே.டி.பி. லேசர் கதிர் மூலம் செவிப்பறையில் 0.8 மி.மீ. துவாரம் இட்டு தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும். நடுச்செவியில் காற்று அழுத்தத்தை சமனாக்க சிறிய டுயூப் பொருத்தப்படும். நீர்க்கோர்வை முழுமையாக நீங்கி காது நன்றாக கேட்கும் போது இந்த டீயூப் தானாகவே வெளியே வந்து விடும். மாஸ்டாட்டோ டிம்பனோ பிளாஸ்டி என்னும் மைக்ரோ லேசர் சிகிச்சை மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். செவிப் பறை இற்று விட்டால் அவரவர் திசுவின் மூலமாகவே மாற்று செவிப்பறையை உருவாக்கலாம். நடுச்செவி எலும்புகள் இற்றுவிட்டால் 24 கேரட் தங்கத்தால் ஆன செயற்கை எலும்புகளை பொருத்தி மீண்டும் காது கேட்கும் திறனை பெற்றுக் கொள்ளலாம்.

  தலைச்சுற்றல்: உள்காதில் உள்ள 3 அரைவட்டக் குழாய்களின் நீர்க் கோர்வை அதிகமானால் தலைச்சுற்றல், வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை ஆகிய பிரச்னைகள் உருவாகும். இது மீனியர்ஸ் என்னும் நோயின் அறிகுறி. இதனை தக்க மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் தலைச் சுற்றலைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் அரைவட்டக் குழாய்களிலுள்ள தலைச்சுற்றலுக்கு காரணமான குபுலா என்னும் நரம்பு மண்டலங்களை உணர்விழக்கச் செய்து நிரந்தர தீர்வு காண முடியும்.

  காக்ளியர் இணைப்பு:
  முற்றிலும் காது கேட்கும் சக்தியை இழந்த குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் மூலம் அறுவை சிகிச்சை செய்து உரிய பேச்சுப் பயிற்சியை வழங்கினால் குழந்தைகளின் காது கேட்கும் சக்தியும், பேசும் திறனும் மேம்படும், தழும்பு, வீக்கம், வலி, முடி அகற்றுதல் எதுவுமின்றி குழந்தைகளுக்கு கேட்கும் திறன் எளிதில் கிடைக்கும். பெரியவர்களுக்கு பேச்சுப் பயிற்சி இல்லாமலேயே இப்பிரச்னையை தீர்க்கலாம். இந்த காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொள்ள முன்பெல்லாம் காதின் பின்புறத்தில் 15 சென்டி மீட்டர் அளவிற்கு அறுக்கப்பட்டது. தற்போது வெறும் 3 சென்டி மீட்டர் நீளத்திலேயே தழும்பில்லாமல் மயக்க நிலையிலேயே நியூரல் டெலி மெட் என்னும் கம்ப்யூட்டர் சாதன உதவியுடன் காக்ளியர் இம்ப் ளாண்ட் எலக்ட்ரோட்ஸ் ஆகியவை சிறப்பாக இயங்குகின்றனவா என்பதை கண்டறிய முடியும். இரண்டு வாரங்களில் காது கேட்கும் சக்தியை பெற முடியும். பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

  மூக்கு சைனஸ்: மூக்கின் அருகில் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கு அடைப்பு உண்டாவதே சைனஸ், மூக்கை இரண்டாகப் பிரிக்கும் விட்டம் நடுவில் இல்லாமல் வளைந்து இருந்தால் சைனஸ் அறைகளில் சளி தேங்கும். சளியில் வளரும் பாக்டீரியா காரணமாக சீழ் உண்டாகி தலைவலி, காய்ச்சல் முக வீக்கம் தொண்டை வீக்கம், காது வலி, காது அடைப்பு உண்டாகும். இதனால் மூக்கில் இருந்து ரத்தத்துடன் சீழ் வடியும் நிலையும் ஏற்படும். இதற்கு கே.டி.பி. 532 லேசர் கருவி மூலம் எண் டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை அல்லது செப் டோபிளாஸ்டி சிகிச்சை பெறலாம். தழும்போ, காயமோ ஏற்படாது.

  பாலிப்ஸ்:
  தூசி மகரந்தம் பெட்ரோல் – டீசல் புகை ஆகியவை ஏற்படுத்தும் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக மூக்கில் பாலிப்ஸ் எனப்படும் சதை வளர்கிறது. இதனால் நுகர்வுத் தன்மை பாதிக்கப்படுகிறது. மூச்சுத்திணறல் ஏற்படலாம். எண்டாஸ்கோபி லேசர் அல்லது டெப்ரைடர் அறுவை சிகிச்சை மூலம் பாலிப்ஸ்களை அகற்றலாம். பின்னர் மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தலாம்.

  உருவ சீரமைப்பு: ரைனோபிளாஸ்டி எனப்படும் சிகிச்சை மூக்கின் உள்புறத்தில் சிகிச்சைகள் வழங்கி உருவத்தை மாற்றலாம். 18 வயதைக் கடந்தோருக்கு மட்டுமே இச்சிகிச்சையை வழங்க முடியும்.

  தொண்டை டான்சில்ஸ்: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நுண்கிருமி களின் தாக்குதலால் டான்சில் சதைகளில் சீழ் கோர்த்து காய்ச்சல் தொண்டை வலி ஆகியன உண்டாகின்றன. டான்சி லைட்டிஸ் காரணமாக மூட்டுவலி, இருதய நோய், சிறுநீரக கோளாறுகள் ஏற்படலாம். உரிய சமயத்தில் இதற்குச் சிகிச்சைப் பெற வேண்டும். மருந்துகளால் சரியாகவில்லை யெனில் கே.டி.பி. லேசர் மூலம் ரத்தக் கசிவு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

  அடினாய்டு சதை வளர்ச்சி: மூக்கில் உள்ள திசுக்களின் அபரிமித வளர்ச்சி காரணமாக அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு ஏற்பட்டு வாயில் மூச்சு விடுதல், காதில் சீழ் கோர்த்தல், காது கேளாமை குறட்டை மற்றும் சுவாசப பிரச்னைகள் உண்டாகலாம். இதன் காரணமாக மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். எண்டாஸ் கோபிக் லேசர் அல்லது மைக்ரோ டெப்ரைடர் மூலமாக அடினாய்டு சதை வளர்ச்சியை நீக்க முடிய ும்.

  குறட்டை: குறட்டை பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு எடைக்குறைப்பும் குறட்டையை குறைக்க முடியும்.

  குரல்வளை:
  குரல் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குரல் வளை நோயின் அறிகுறிகள். குரல் வளையில் உருவாகும் புற்றுக் கட்டி களையும் கே.டி.பி. லேசர் மூலம் குணப்படுத்த முடியும்.

  குரல் மாற்று சிகிச்சை:
  குரல் நாண் நரம்பு பாதிக்கப்பட்டால் தைரோஸ்பிளாஸ்டி என்னும் குரல் மாற்றுச் சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்ய முடியும். இச்சிகிச்சையில் மருத்துவரிடம் பேசி கொண்டே வேண்டிய குரலை பெற முடியும். இனிமையான குரலையும் தேர்வு செய்யலாம். குரல் நாண்களில் திசுக்களை புகுத்தி கணீரென்ற குரல் வளத்தைப் பெற போனோ சர்ஜரிகள் கையாளப்படுகின்றன.


  Sponsored Links
  Mary Daisy likes this.

 2. #2
  Mary Daisy's Avatar
  Mary Daisy is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Daisy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Little Roma Puri
  Posts
  5,047
  Blog Entries
  4

  Re: காது, மூக்கு, தொண்டை நோய்கள்

  unknown info. . . . . . .


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter