சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் விஷயங்கள்!!!

தற்போது சருமத்தில் அலர்ஜி அதிகம் ஏற்படுகிறுது. சருமத்தில் ஆங்காங்கு தடிப்புக்களாக சிவப்பு நிறத்தில் இருப்பதோடு, அரிப்புக்களையும் ஏற்படுத்துவது தான் அலர்ஜி. அரிப்புக்கள் வர ஆரம்பித்தால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. எப்போதும் சொரிந்து கொண்டே இருக்க வேண்டியவாறு இருக்கும்.

சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் சருமத்தில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படும் போது சருமம் அரிக்க ஆரம்பிக்கும். ஆனால் சருமத்தில் அரிப்புக்கள் அதிகமாகும் போது அது மிகவும் தீவிரமான பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

ஆகவே அந்த நிலையில் உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இங்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலநிலை குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறட்சியடையும். இதற்கு குளிர்காலத்தில் வீசும் மிகவும் குளிர்ச்சியான காற்று தான். ஆகவே குளிர்காலத்தில் மாய்ஸ்சுரைசிங் க்ரீம்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதேப்போல் கோடையில் அளவுக்கு அதிகமான புறஊதாக்கதிர்கள் சருமத்தை தாக்குவதால் அரிப்புக்கள் ஏற்படுகிறது. இக்காலத்தில் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசனை பயன்படுத்த வேண்டும்.

டயட் நம் சருமத்திற்கு அடியில் உள்ள சரும செல்கள் கொழுப்புக்களின் மூலம் சருமத்தை மென்மையாக பராமரிக்கும். ஆனால் உங்கள் டயட்டில் உடலுக்கு வேண்டிய அளவு கொழுப்புக்கள் இல்லாவிட்டால், சருமம் வறட்சியடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

புகைப்பிடித்தல் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியெனில் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் சரும செல்களை பாதித்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

வாசனை திரவியங்கள்
வாசனை திரவியங்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் படும் போது, அது சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தும். ஆகவே சருமத்தில் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சோப்பு சோப்புக்களில் அதிகமான அளவில் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருப்பதால் தான் அவற்றில் நுரைகள் வருகின்றன. சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை முற்றிலும் வெளியேற்றிவிடும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பமாகிறது.

நிக்கல் நகைகள் நிக்கல் நகைகள் பலவித உலோக கலவைகளால் செய்யப்பட்டது. ஆகவே இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு அலர்ஜி ஏற்படும். ஆகவே உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால், இந்த மாதிரியான நகைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

லாடெக்ஸ் லாடெக்ஸ் என்பது ஒருவகையான துணி மெட்டீரியல். இது ரப்பர் மரத்தில் இருந்து வெளிவரும் பால் போன்ற நீர்மத்தில் இருந்து செய்யப்படுவதாகும். இது வழுவழுவென்று இருக்கும். இந்த வகையான துணி மெட்டீரியல் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை மெட்டீரியல் காண்டம், கைக்குட்டை போன்றவற்றில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹேர் டை தற்போது பலருக்கு விரைவிலேயே நரை முடி வந்துவிடுவதால், பலரும் தலைக்கு ஹேர் டை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஹேர் டையில் நிறைய கெமிக்கல் இருப்பதால், அது சருமத்தை வறட்சி அடையச் செய்து, சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தும்.

டாட்டூ ஃபேஷன் என்ற பெயரில் பலரும் கண்ட கண்ட இடங்களில் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். டாட்டூ குத்துவதற்கு கெமிக்கல் கலந்த கலவையைப் பயன்படுத்துவதால், அதனை குத்தும் போது சருமத்தில் கடுமையான அரிப்பு அல்லது அலர்ஜி ஏற்படக்கூடும்.

Similar Threads: