Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 1 Post By malbha
 • 1 Post By malbha
 • 1 Post By malbha
 • 1 Post By malbha

Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல


Discussions on "Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல" in "General Health Problems" forum.


 1. #1
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல  காய்ச்சல் (Fever) - ஒரு நோய் அல்ல


  உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு, அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6F (37C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.


  காய்ச்சல் ஒரு நோயா?
  காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காகவும் உடம்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், Antibody-களையும் உருவாக்குகிறது.


  காய்ச்சல் மூளையை பாதிக்குமா?
  காய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை.


  மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?
  அப்படியில்லை. குழந்தைக்கு கனமான உடை, போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
  காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.
  காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளை அழிக்கத்தான் வருகிறது என்றாலும் சிலநேரங்களில் உடம்பில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றவும் வரும். இல்லையென்றால் அந்த கழிவுகள் நம் உடலில் பல இடங்களில் தேங்கி அங்கு வலிகள் ஏற்படுவதற்கும், கேன்சர் கட்டிகளாக மாறிவிடும்.

  தொடரும்


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by malbha; 9th Feb 2015 at 09:53 AM.
  jv_66 likes this.
 2. #2
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  re: Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல

  காய்ச்சலுக்கு என்ன சிகிட்சை செய்யலாம்?
  காய்ச்சலுக்கு எந்த வித சிகிட்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிட்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான். போதுமான ஓய்வு இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.


  மருந்துகள் பாதுகாப்பானது அல்ல:
  காய்ச்சல் ஜலதோசத்திற்கு மாத்திரைகள் பாதுகாப்பானது அல்ல. "ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்" என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்ககூடாது என்று fda கூறுகிறது.


  மூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன் படுத்துவது கெடுதி செய்யும். அவற்றில் அடங்கியுள்ள சில இரசாயணங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும். மற்றும் புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்து செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் (ppa) பக்க வாதத்திற்கு அடிகோலும். எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.


  உறங்குவதிலோ, பேசுவதிலோ இடையூறு இருந்தால் இருமல் மருந்துகளை உபயோகிக்க வேண்டாம். சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும். சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது. இது நல்லது. இருமல் ஒரு நோயல்ல.

  தொடரும்--

  Last edited by malbha; 9th Feb 2015 at 09:53 AM.
  jv_66 likes this.
 3. #3
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  re: Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல

  காய்ச்சல் வந்த நபருக்கு எந்த விதமான உதவிகள் செய்யலாம்?
  # முதலில் காய்ச்சல் வருவதைக் கண்டு பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் எல்லா காய்ச்சல்களுமே உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு எதிராக நம் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுதான்.


  # காய்ச்சல் ஏற்பட்ட நபருக்கு செரிமான சக்தி குறைந்து போயிருக்கும். ஏனென்றால் உடலின் முழு சக்தியும் திரட்டப்பட்டு நோயெதிர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும். அதனால் பசி இருக்காது. காய்ச்சல் முழுமையாக குறையும் வரை எந்த உணவையும் கட்டாயப்படுத்தி கொடுக்கக்கூடாது.


  # தேவையான போது தண்ணீர் கொடுக்கலாம். தண்ணீர் அருந்தும் போது குமட்டல், வாந்தி இருந்தால் வாயை நனைக்கும் அளவு தண்ணீர் கொடுத்தால் போதும்.


  # உதடுகள் வறண்டு காணப்படும் போது தண்ணீரால் உதடுகளை நனைத்துவிடலாம்.


  # வெப்பம் அதிகரித்துக் காணப்படும் போது அடி வயிற்றிலும், நெற்றியிலும் ஈரத்துணியை இடலாம்.


  # முழு ஓய்வு அவசியம்.


  # தாகம் முழுமையாக ஏற்பட்ட பின்பு மெதுவாக பசியுணர்வு தெரிய ஆரம்பிக்கும். அதுவரை உணவையோ, காபி,டீ போன்றவைகளையோ தரக்கூடாது.


  # பசி ஏற்பட்ட பின்பு நீர்த்த உணவுகளில் துவங்கி, அடுத்தடுத்த வேலைகளில் படிப்படியாக திட உணவுகளுக்கு வரலாம்.


  ….இம்முறையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். ஒவ்வொரு முறையும் காய்ச்சல் ஏற்படும் போது இவற்றைக் கடைபிடித்தால் ஆரோக்கியம் நிலையானதாக மாறும். நோய் என்ற பயத்திற்கே இடமில்லை.


  எல்லா வகை பீதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?
  # பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


  # பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.


  # தூக்கம் என்பது அவசியமானது. இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.


  # இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவுகளில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.

  தொடரும்--

  Last edited by malbha; 9th Feb 2015 at 09:54 AM.
  jv_66 likes this.
 4. #4
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  re: Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல

  காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?
  எப்போதுமே பசி இல்லாமல் எதுவும் சாப்பிடக் கூடாது குறிப்பாக காய்ச்சல் வந்துவிட்டால். தாகம் இல்லாமல் எதையும் அருந்தக்கூடாது. பசிக்கும்போது பழங்கள் சாப்பிடலாம். தாகம் இருக்கும்போது பழச்சாறு அருந்தலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.


  காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான். எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச்சத்து அதிகம் தேவைப்படும். இந்நிலையில் தயிர், பருப்பு - கீரைகள் - காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச்சத்தை உடலுக்கு அளிக்கும். அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.


  நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்
  எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.


  நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Vitamins) மற்றும் கனிமங்களின் (Minerals) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை வராமலே தடுக்கலாம்!


  நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  Vitamin A, Vitamin B Complex (Vitamins B-1, B-2, B-5, B-6, Folic Acid) , Vitamin C போன்ற சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு Neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.


  காப்பர் சத்து:

  நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.

  வைட்டமின் E:

  இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம்.

  வைட்டமின் B12:

  B12ன் தலையீட்டால்தான் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம். ஈரல், முட்டை போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்தி விதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.

  துத்தம் (ZINC):

  உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.

  தாவர வேதிப்பொருள்:

  உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை. வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.

  அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடும்.
  இயற்கை நமக்கு தந்த கவசமான நோய் எதிர்ப்பு சக்தியை சத்தான உணவுகள் உண்பதன் மூலம் வளர்த்துக் கொள்வோம். ஒவ்வொரு நோயும் பரவுவதாக நாம் கேள்விப்படும் போது மட்டும்தான் நாம் ஆரோக்கியம் பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறோம். இதற்கு மாறாக நாம் ஆரோக்கியமாக இருக்கும் போதே அதனை எப்படி நிலையானதாக மாற்றிக் கொள்வது என்று யோசித்தால் எந்த விதமான சீசன் பீதிகளுக்கும் நாம் ஆளாக வேண்டியதில்லை. மேற்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை உடல் பெறவும், பயத்திலிருந்து விடுபடும் வலிமையை மனம் பெறவும் உதவ முடியும்.
  காய்ச்சலின் போது அதிகமான உடல் தொந்தரவுகள் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை. அருகிலுள்ள அக்குபங்சர், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

  முற்றும்


  jv_66 likes this.
 5. #5
  Kate Hadija's Avatar
  Kate Hadija is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  hadija
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  chennai
  Posts
  2,449

  re: Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல

  Good one Malbha


 6. #6
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  re: Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல

  மிகவும் உபயோகமான பகிர்வுகள் மலர் . பலருக்கும் இவை தெரியாதவை . மிக்க நன்றி .

  Jayanthy

 7. #7
  sairaarni is offline Newbie
  Real Name
  saira banu
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  arni
  Posts
  32

  Re: Fever- காய்ச்சல் ஒரு நோய் அல்ல

  Use full info..


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter