Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

Kidney Stones- சீறுநீரக கல்


Discussions on "Kidney Stones- சீறுநீரக கல்" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    Kidney Stones- சீறுநீரக கல்

    கிட்னி கற்கள்
    அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை". பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.

    இது உண்மைதானா? நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

    7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

    தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப்படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.

    கிட்னி கல் என்றால் என்ன?

    சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

    கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்:
    கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

    இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

    கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tract infections), சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

    யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

    நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியான கால்சியத்தை நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

    சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

    பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Kidney Stones- சீறுநீரக கல்-kidney-atone.jpg  

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    கிட்னி கற்கள் யாருக்கு வரும்?

    பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

    நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    கிட்னி கல் - அறிகுறிகள்

    சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.

    சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

    சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.

    நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.

    அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்*ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

    சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களை ஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

    ஆராய்ச்சியின் முடிவுகள்
    Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :

    மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    ஒன்று:- Health professionals follow up study
    45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

    இரண்டு:- Nurses Health study I
    94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.

    மூன்று:- Nurses Health study II
    1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

    Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.


  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,

    1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.

    2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.

    3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.

    4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.

    5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்

    6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.

    7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.

    8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.

    இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes), சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது:--

    மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.

    சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

    அதாவது, நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.

    முக்கியமாக அதிக தண்*ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீ*ர் அருந்த வேண்டும்.

    பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

    மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

    பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

    திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

    புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

    சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.


    நன்றி: டாக்டர். எம்.மகேஸ்வரி

    jv_66 and shrimathivenkat like this.

  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

    உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

    “கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும்.

    சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

    பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும்.

    மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

    எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார்.

    சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும்.


    கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன.

    இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.


  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

    * பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

    * சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

    * வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

    * மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

    * தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவதுநல்லது.

    jv_66 and shrimathivenkat like this.

  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    சிறுநீரக நோயின் அறிகுறிகள்!!!

    சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க, ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுப்பிடித்தால் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்திடலாம்.

    சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்கள் :-

    சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற வீதத்திலும் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில் தான் இந்த மாற்றங்களை உணரலாம்.அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் எதுவுமே வராது.

    சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்படுவது அல்லது வலி எடுப்பது :-

    சில நேரம் சிறுநீர் கழிக்கையில் கஷ்டப்படலாம் அல்லது அழுத்தத்தை உணரலாம் அல்லது வலி ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் தன்மை உண்டாகும். இந்த தொற்றுக்கள் சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் எடுக்கும்.

    சிறுநீரில் இரத்தம் :-

    இது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். கண்டிப்பான முறையில் இது சிறுநீரக நோயையே குறித்தாலும் கூட, சில நேரத்தில் வேறு காரணமும் கூட இருக்கலாம். அதனால் அப்படி ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

    வீக்கம் :-

    உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. அதனை அவையால் செய்ய முடியவில்லை என்றால், இந்த கூடுதல் நீர்மம் குவிந்து கொண்டே சென்று, அதனால் கைகள், கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.

    தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி :-

    எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனை சிறுநீரகங்கள் சுரக்கிறது. இது இரத்தச் சிவப்பணுக்களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். சிறுநீரக நோய் ஏற்பட்டால் எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து விடும். இதனால் உங்கள் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து விடும். இதன் மூலம் இரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அனைத்து அணுக்களுக்கும் ஆக்சிஜன் குறைவாக செல்லும். அதனால் தான் பொதுவான அயர்ச்சியும் தீவிரமான சோர்வும் ஏற்படுகிறது.

    மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் இயலாமை :-

    சிறுநீரக நோயுடன் தொடர்புடைய இரத்த சோகை, உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை வெறுமையாக்கும். இதனால் மயக்க உணர்வு, ஒருமுகப்படுத்தலில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    எப்போதும் குளிர்வது :-

    உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழல் நிலவினாலும் கூட, இரத்த சோகை இருப்பதால், எப்போதுமே குளிராகவே இருக்கும். பிளோன்ஃபிரிடிஸ் (சிறுநீரக தொற்று) இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.

    சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு :-

    சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் இரத்தத்தில் கழிவுகள் குவியும். இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும்.

    அமோனியா மூச்சு மற்றும் மெட்டாலிக் சுவை :-

    சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால், இரத்தத்தில் உள்ள யூரியாவின் (யூரேமியா) அளவு அதிகரித்து விடும். இந்த யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சு காற்றை சிறுநீரகம் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனை அமோனியா மூச்சு என்பார்கள். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.

    குமட்டல் மற்றும் வாந்தி :-

    சிறுநீரக நோய் இருந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் குவிந்து கொண்டே போகும். இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.

    மூச்சு விடுவதில் சிரமம் :-

    சிறுநீரக நோய்கள் இருந்தால் நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடும். மேலும் சிறுநீரக நோயினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவான இரத்த சோகையும் ஏற்படும். இதனால் உடலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

    முதுகு மற்றும் இரு பக்கங்களிலும் வலி :-

    சிறுநீரக நோய் இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால், கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமான வலி ஏற்படும். பாலிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அழற்சி என்ற தீவிரமான அழற்சி ஏற்படும் போது, தீவிரமான வலியும் சுகவீனமும் ஏற்படும்.


    Attached Thumbnails Attached Thumbnails Kidney Stones- சீறுநீரக கல்-kidney-atone-3021.jpg  
    Last edited by chan; 11th Feb 2015 at 01:36 PM.

  8. #8
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,449

    re: Kidney Stones- சீறுநீரக கல்

    ellame payanulla thagaval.

    chan likes this.

  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Kidney Stones- சீறுநீரக கல்

    Thanks for these very useful details.

    chan likes this.
    Jayanthy



  10. #10
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    392

    Re: Kidney Stones- சீறுநீரக கல்

    anaivarum padika vendiya pagirvu
    nandri
    vasanthi
    mct


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter