Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

கொலஸ்ட்ரால்- Cholesterol


Discussions on "கொலஸ்ட்ரால்- Cholesterol" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    லிபிட் ப்ரொஃபைல்
    “எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையை ‘திடுக்’ என முடித்து வைக்கும் வில்லன் கொழுப்பு. நம் தாத்தாக்களின் தலைமுறையில் 60 வயதுகளில் வந்த மாரடைப்பு, இப்போது இருபதுகளிலேயே வர ஆரம்பித்திருப்பதற்கு கொழுப்பு பிரதான காரணமாக இருக்கிறது.


    இந்த கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளும் முறைதான் லிபிட் ப்ரொஃபைல் (Lipid profile)’’ என்று அறிமுகம் கொடுக்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான கிருபாகரன்.

    லிபிட் ப்ரொஃபைலில் என்னென்ன இருக்கும்?

    ‘‘லிபிட் ப்ரொஃபைலில் பல வகை கொழுப்புகள் அடங்கி யிருக்கும். குறிப்பாக, ஹெச்.டி.எல். (Highdensity lipoprotein) என்கிற நல்ல கொழுப்பு, எல்.டி.எல். (Lowdensity lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பு என 2 வகைகள் இருக்கின்றன.

    இந்த இரண்டு வகைகளில்தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். லிபிட் ப்ரொஃபைலில் காணப்படும்

    டிரைகிளிசராய்ட்(Triglycerides) என்பதும் கெட்ட கொழுப்புதான்...’’

    லிபிட் பரிசோதனை ஏன் அவசியம்?


    ‘‘பொதுவாக நல்ல கொழுப்பின் அளவு சராசரியாக ஆண்களுக்கு 40 mg/dl என்ற அளவில் இருக்க வேண்டும். பெண்களுக்கு 50 mg/dl என்ற அளவு இருக்க வேண்டும். நம் நாட்டிலோ, இது தலைகீழாக நல்ல கொழுப்பின் அளவு குறைவாகவும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகவும் இருக்கிறது.

    இந்தக் கொழுப்பின் அளவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அதற்கேற்றாற் போல வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், பல நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, ‘கொழுப்பு - இதயத்துக்கு எமன்’ என்பதால் மாரடைப்பு நம் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்குத்தான் லிபிட் ப்ரொஃபைல் சோதனை உதவுகிறது...’’

    யார் யார் செய்து கொள்ள வேண்டும்?

    ‘‘பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. பருமன் பிரச்னை உள்ளவர்கள், பரம்பரை ரீதியாக இதய நோய் உள்ளவர்கள், தைராய்டு குறைவாக சுரப்பவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு இப்பரிசோதனை கட்டாயம்.

    மேற்கத்திய நாடுகளுக்கு வரும் இதயம் தொடர்பான நோய்கள் 10 வருடங்களுக்கு முன்னரே இந்தியர்களுக்கு வந்துவிடுவதாக சமீபத்தில் ஓர் ஆய்வு தெரிவித்திருக்கிறது. அதனால், இதயம் தொடர்பான நோய்கள் வர அதிகம் சாத்தியம் உள்ளவர்கள் முன்னரே லிபிட் பரிசோதனை செய்ய வேண்டும்...’’

    இதற்கு என்ன சிகிச்சை?

    ‘‘வாழ்க்கை முறையை மாற்றுவதுதான் முக்கியமான சிகிச்சை. புகைப்பழக்கம், உடல் உழைப்பற்ற வேலை, தவறான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் கெட்ட கொழுப்பின் அளவு உடலில் அதிகமாகிறது.

    அதனால் இந்த காரணிகளைத் தவிர்ப்பது முக்கியம்.

    எளிமையான உடற்பயிற்சிகள், நாள் ஒன்றுக்கு 30 நிமிடமாவது நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.

    துரித உணவுகள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், முட்டையின் மஞ்சள்கரு,

    எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடாமல் இருப்பது என, நம் பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும்.

    பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்ப்பது எல்லா வகையிலும் நல்லது.

    இப்போது இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால், கொழுப்புப் பிரச்னையை கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...’’


    Sponsored Links
    RathideviDeva likes this.

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    லிபிட் பரொஃபைல் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

    ‘‘வழக்கமான ரத்தப் பரிசோதனை செய்யும் முறையிலேயே இந்தப் பரிசோதனையையும் செய்கிறார்கள்.

    லிபிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்வதற்கு முன் 8 மணி நேரம் எந்த உணவும் சாப்பிட்டிருக்கக் கூடாது. அதனால், இரவு சாப்பிட்ட பிறகு, காலை உணவுக்கு முன் இந்த இடைவெளி தானாகவே கிடைத்து விடும் என்பதால் காலையில்தான் இந்த பரிசோத னையை செய்வார்கள்.

    இதை Fasting lipid profile என்பார்கள். ஒரு கப் காபி கூட தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், காலையில் டீ, காபி கூட சாப்பிடக் கூடாது.

    இந்தப் பரிசோதனையில் கொழுப்பின் அளவோடு, வேறு ஏதேனும் நோய்கள் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு இந்தப் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

    அதாவது, நீரிழிவு உள்ளவர்களுக்கு எல்.டி.எல். கொழுப்பு சராசரி அளவு இருந்தால் கூட, அதை எந்த அளவு குறைக்கிறோமோ அவ்வளவு நல்லது!’’

    எவ்வளவு செலவாகும்?

    ‘‘அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கட்டணம் இருக்கக்கூடும். இந்த மதிப்பு மருத்துவமனைகளைப் பொறுத்தும், பரிசோதனை நிலையங்களைப் பொறுத்தும் மாறும். சராசரியாக 4 மணி நேரத்தில் இந்த முடிவுகளை சொல்லிவிடுவார்கள்.

    இந்தப் பரிசோதனையை பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. தரமான பரிசோதனை நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். பரிசோதனைக்குச் செல்பவர்கள் கொலஸ்ட்ரால் மட்டும் பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டால், இந்த லிபிட் பரிசோதனை செய்து கொடுப்பார்கள்.

    பொதுவாக மற்ற பரிசோதனைகளோடு இதையும் செய்துகொள்ளலாம். நாமாகவே ஒரு பரிசோதனை நிலையத்துக்கு சென்று பரிசோதித்துக் கொள்வதைவிட ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செல்வதே நல்லது!’’


  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    கொழுப்பு உடலில் செய்யும் மாற்றங்கள் - தெரிந்திருக்க வேண்டியவை

    நன்றி: ஆசிரியர் நியான்ட்டர் செல்வன்
    ஆரோக்கியம் & நல்வாழ்வு குரூப்

    வெண்ணெய் அல்லது எதாவது கொழுப்பை எடுத்து காற்றுபடும்படி வெளியே வையுங்கள். விரைவில் கருப்பு நிறம் படிய துவங்கும். அதன்பின் கொழுப்பு கெட்டுபோய்விடும். இதன் பெயர் ஆக்சிடைசேஷன். காற்றில் உள்ள ஆக்ஸிஜன் கொழுப்புக்கு எதிரி. விரைவில் கொழுப்பை கெட்டு போக வைத்துவிடும்.


    இதை நினைவில் கொள்ளவும். அடுத்து நம் லிவருக்கு செல்வோம்.
    உணவில் உள்ள சர்க்கரை இங்கேதான் ட்ரைகிளிசரடு கொழுப்பாக மாற்றபடும். அதை ரத்தத்தில் சுமந்து செல்ல வி.எல்.டி.எல் எனும் வாகனம் தயார் ஆகும். ஏராளமா சர்க்கரை உணவில் இருந்தால் ஏராளமா ட்ரைகிளிசரைடு இருக்கும். அந்த சூழலில் நிறைய சின்ன, சின்ன வி.எல்.டி.எல்லை லிவர் உற்பத்தி செய்யும். எவ்ளோ சீக்கிரம் ட்ரைகிளிசரைடை லிவரில் இருந்து அனுப்பறமோ, அவ்ளோ சீக்கிரம் லிவருக்கு நல்லது. காரணம் அத்தனை சர்க்கரையை அது புராசஸ் செய்யணும்.

    இப்ப சின்ன சைஸ் வி.எல்.டி.எல்லில் ஏறி ஜம் என ட்ரைகிளிசரடு நம் ரத்தகுழாய் வழியா தொப்பைக்கு செல்லும். அங்கே நம் தொப்பை சைஸை இன்னும் ஓரிரு இஞ்சு பெரிதாக்கும்

    ட்ரைகிள்சர்டை சுமந்து செல்லும் பணியை செய்து முடித்த வி.எல்.டி.எல் இப்ப எல்.டி.எல் என அழைக்கபடும். எல்.டி.எல்லுக்கு அடுத்த பணி ஒன்று உண்டு. குப்பை உணவை உண்டதால் இதயகுழாயின் இன்ஃப்ளமேஷன் எனும் புண் உருவாகி இருக்கும்.

    அதை குணப்படுத்த எல்.டி.எல் மேலே பூசப்படும்.
    மீதம் இருக்கும் எல்.டி.எல் என்ன ஆகும்?

    இது சின்ன சைஸ் எல்.டி.எல் என்பதால் நம் ரத்தகுழாயில் உள்ள ஓட்டைகளில் உள்லே நுழைந்து மாட்டிகொள்ளும்.

    இப்ப முன்பு சொன்ன ஆக்ஸிடைஸேஷன் (கொழுப்பு/ஆக்ஸிஜன்) நினைவுக்கு வருதா?
    குட்....நம் ரத்தத்தில் இருக்கும் ஏராளமான ஆக்ஸிஜன் ரத்தகுழாயில் இருக்கும் சின்ன சைஸ் எல்.டி.எல்லை தாக்கும். ஆக்ஸிடைசேஷன் நிகழும். கொழுப்பு கெட்டு புண் உண்டாகி மாரடைப்பு நிகழும். இதை தடுக்கும் சக்திவாய்ந்த மினரல்களை ஆண்டிஆக்சிடண்டுகள் என்கிறோம். ஆனால் அவையும் ஒரு எல்லை வரை தான் நம்மை காப்பாற்றும்.

    இப்ப கொழுப்பு உணவு நம்மை எப்படி காப்பாற்றும் என்பதை பார்ப்போம்.

    வெண்ணெய்/முட்டை போன்றவை நம் லிவருக்கு பெரிய சைஸ் எல்.டி.எல்லை உற்பத்தி செய்ய உதவும். கொழுப்பு உணவில் ட்ரைகிளிசரைடு எண்ணிக்கையும் குறையும். ஆக லிவர் பெரிய சைஸ் டைப் ஏ எல்.டி.எல் உருவாக்கும்.

    இந்த பெரிய சைஸ் எல்.டி.எல் நம் ரத்தகுழாயில் உள்ல ஓட்டைகளை விட அளவில் பெரியவை என்பதால் அவை நம் ரத்தகுழாயில் ஒட்டாது. ஆக்சிடைசேஷன் நிகழாது.

    ஆனால் பெரிய சைஸ் எல்.டி.எல் எடை அதிகம். நார்மல் கொலஸ்டிரால் டெஸ்டால் நம் உடலில் உள்ள எல்.டி.எல் என்ன வகை என்பதை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை. எடை அதிகம் உள்ள பெரிய சைஸ் எல்.டி.எல் நம் எல்.டி.எல் கணக்கை அதிகம் காட்டும். உடனே "எல்டிஎல் அதிகம் ஆயிடுச்சு, பட்டரை குறை, முட்டையை நிறுத்து என சொல்லி" அரிசியை விழுங்க வைத்து சின்ன சைஸ் எல்.டி.எல்லை உருவாக்கி நம் எல்.டி.எல் அளவை குறைந்து நம் உயிருக்கு உலைவைத்துவிடுவார்கள் மருத்துவர்கள்.

    Dangu likes this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    List of foods that help to lower cholesterol



    janu23 and Dangu like this.

  5. #15
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    Many thanks for sharing the details about Cholesterol.

    chan likes this.

  6. #16
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    அசைவ உணவை காட்டிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

    தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும்.

    காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.

    அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன.

    காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும். கொழுப்பை குறைக்கிறது, மலச்சிக்கலை போக்கும்.

    தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

    இதய நோய்க்கும் ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர்ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது. தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்


    chan likes this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    நல்ல உணவும்,நல்ல கொழுப்பும் !!!

    உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புக்காரர்களே! நீங்கள் உடலாலும் சுகமாக வாழச் செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். அந்த உணவுத் தெரிவும் சரியாக இருக்க ஒல்லி உடம்புகாரர்களை காப்பி அடித்தால் நல்லது. உடலை சரியான அளவுகளில் வைத்திருக்கும் கலை இவர்களுக்குத்தான் கைவந்த கலையாக இருக்கும், காரணம், இவர்கள்தான் சரியான உணவு எடுத்துக்கொள்ளும் போது உடல் சுகமாக இருப்பதையும், அல்லாத உணவை எடுத்துக்கொள்ளும் போது உடல் சங்கடப்படுவதையும் உணரும் தன்மையில் இருக்கிறார்கள். சரி இனி தரும் உணவுகள் பற்றி பார்ப்போம்.
    நல்ல கொழுப்பு உணவுகள்:

    1. ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை:
    ஆறு மணி நேரம் நீரில் ஊறிய நிலக்கடலையானது நச்சுத் தன்மை நீக்கப்பட்டு, உயிர்ப்புத் தன்மை அதிகரிக்கப்பட்டு முழுமைத் தன்மை அடைகிறது. இதை அப்படியே பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள கொழுப்பு செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (Vitamins), நொதிகள் (Enzymes) உருவாகத் தேவையான புரதமும் (Protein) கொண்டுள்ளது. நிலக்கடலையை வறுத்து அல்லது சமைத்து உண்டால் கண்டிப்பாக கெட்டக் கொழுப்புச் சேரும்.

    2. இயற்கை இனிப்பு உணவுகள்:
    இயற்கை இனிப்புகளான தேன், கரும்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீச்சை, மற்றும் இனிக்கும் பழச்சாறுகள் யாவும் கொழுப்புச் செரிமானத்தை திறம்பட நடத்த உதவியாக இருக்கும். இதில் பி-உயிர்ச் சத்துகள் மாவுச் சத்துடன் முழுமையாக இருப்பதால் இவை உடனடிச் சக்தியாக மாறி கொழுப்புச் சத்தை செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. சான்றாக கடலை மிட்டாய் செரிக்க அதனுடன் கலக்கப்பட்ட வெல்லம் உதவுகின்றது.

    3. மிளகு:
    எந்த ஒரு அசைவ உணவோடும் மிளகுத் தூளை கனிசமாகச் சேர்த்துக் கொள்ளும் போது மிகச் சுலபமாகக் கொழுப்பு செரித்து விடுகிறது. மிளகில் இருக்கும் பி-உயிர்ச் சத்துக்களும் தாதுச் (Minerals) சத்துக்களும் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி செய்கின்றன. மிளகில் உள்ள தாவரச் சத்துக்கள் (Phytofactors) அசைவ உணவின் விஷத்தன்மையை வெளியேற்ற உதவுகின்றன. பச்சை மிளகாய் உள்ளிட்ட மசாலா அதிகம் சேர்த்த அசைவ உணவுகள் செரிக்கச் சற்று கடினமாக இருக்கும்.

    4. மீன்கள்:
    குளத்து மீன்களைவிட கடல் மீன்கள் நல்லவை. கடல் மீன்களில் சிறிய அளவு உள்ளவையும் தோல் மென்மையாகவும் உள்ளவையும் சிறந்தவையாகும். வாலை மீன் உள்ளிட்ட மீன் வகைகளில் பாதரசம் உள்ளிட்ட உயர் அடர்த்தி உலோகங்கள் (Heavy metals) தோலில் படிந்துள்ளதால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மீன் கொழுப்பு சுலபமாக செரிக்கக்கூடியதாகவும் மூளைக்கு உணவாகவும் திகழ்கிறது.

    Dangu likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    5. மாமிசம்:

    பொதுவாக மாமிச உணவுகள் செரிக்க குறைந்தபட்சம் 12 மணி நேரமும், அவை செரித்தபின் அதன் கழிவுகள் வெளியேர மூன்று நாட்களும் ஆகும். அன்றாடம் மாமிச உணவு எடுத்துக் கொள்பவர்கள் தினமும் மலம் கழித்தாலும், உண்மையில் அது மூன்று நாட்களுக்கு முந்தய மலமேயாகும். அதே போல், மாமிச உணவில் 1/3 பங்கு மட்டுமே சக்தியும் 2/3 பங்கு கழிவையும் கொண்டுள்ளது.

    மாமிசம் மூலம் கிடைக்கும் சக்தியானது அதன் கழிவை வெளியேற்றவே போதாது ஆகையால், மாமிச உணவை தவிர்ப்பது நல்லதுதான். அதே சமயம், மாமிச புரதத்தில் சில அத்தியாவசிய அமினோஅமிலங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாவர உணவுகளில் கிடைக்காது. அந்த விதத்தில் மாமிச உணவு தேவைதான். ஆக, மாமிச உணவு தேவையென்றால், குறைவான அளவுகளில், அதுவும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மாமிசக் கொழுப்புகளில் சதை தனி கொழுப்பு தனி என்று இருக்கும் பறவை இறைச்சி நல்லது. அதுவே சதையும் கொழுப்பும் இரண்டரக்கலந்து இருக்கும் பாலூட்டிகள் (ஆடு, மாடு மற்றும் பன்றி) மாமிசம் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதே போல் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் அதிகம் கொடுத்து வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நம்மை குண்டாக்கும் தன்மை கொண்டது.

    இவைகள் வேகமாக வளரக் கொடுக்கப்படும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு பெண்தன்மையையும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் உடல் பருமனாவது அதிகரிக்கின்றது. பிராய்லர் கோழிகளை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹார்மோன் சமன்பாடு குலைந்து மன உளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்குப் பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம்.

    6. எண்ணெய்கள்:
    அசைவ உணவைவிட எண்ணெய் தான் அதிக ஆபத்தானது. அசைவ உணவை எண்ணெயில் பொறித்து சாப்பிடும் போது மிகக் கெட்ட கொழுப்பாகிவிடுகிறது. அதே போல் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சுடவைத்து பயன்படுத்தும் போது அது மிகக் கெட்டக் கொழுப்பாக மாறி விடுகிறது. எண்ணெய்களில் மிகவும் சிறந்தது ஆலிவ் எண்ணெயாகும்.

    இதை இரண்டு அல்லது மூன்று முறைசுடவைத்தாலும் கெட்ட கொழுப்பாக மாறுவதில்லை. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒமேகா-9 வகைக் கொழுப்பானது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த எண்ணெயானது மற்ற எண்ணெய்களைவிட மூன்று மடங்கு அடர்த்தியானது. இதன் விலை அதிகம் தான், ஆனால் உங்கள் இதயம் அதைவிட அதிகம்தானே.

    ஆலிவ் எண்ணெய்க்கு அடுத்து சிறந்த எண்ணெய் தேங்காய் எண்ணெயாகும். இதுவும் ஓரிரு முறைசுட வைத்தாலும் கெட்டுப் போவதில்லை. மூன்றாவது சிறந்த எண்ணெய் நல்லெண்ணையாகும். ஆலிவ் எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் பித்தத்தையும் கபத்தையும் போக்கும் தன்மையுடையன. நல்லெண்ணை வாய்வையும் உடல் உஷ்ணத்தையும் நீக்க வல்லது.

    நல்லெண்ணை சமையல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனபதால்தான் அதற்கு நல்லெண்ணை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மூன்று எண்ணெய்களைத் தவிர மற்ற எண்ணெய்களெல்லாம் ஆரோக்கியத்திற்கு சுமார்தான். இதயத்திற்கு நல்லது என்று மற்ற எண்ணெய்களைக் குறிப்பிடுவதெல்லாம் டூப்பு.

    உண்மையில் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயா எண்ணெயெல்லாம் மித வெப்ப நாடுகளுக்கு (Temperate countries) ஏற்றதாகும். நம்மைப்போல் வெப்ப நாடுகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய்யே ஆகும்.

    7. தேங்காய்:
    தேங்காய் என்பது ஒரு முழுமைப் பொருள். இதில் எல்லாவித அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் உயர் கொழுப்புகளையும், இவைகளைச் செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்கள், மற்றும் தாதுச் சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புத உணவாகும்.

    தேங்காயை சமையலில் பயன்படுத்தும் விதத்தில்தான் நல்லதாகவும் கெட்டதாகவும் மாறி விடுகிறது. தேங்காயை அதிகம் வேகவிடாமல் மேலோட்டமாக வதக்கிய நிலையில் எடுத்துக் கொண்டால் சுலபமாகச் செரித்துவிடும், இல்லையேல் செரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பரிந்துரை அளிக்கப்படுகிறது.

    இவர்களின் செரிமானத்தை அதிகரிக்க வழி தெரியாததால் இப்படி பரிந்துரை செய்கின்றனர். இவர்களின் பரிந்துரையால் இப்போதெல்லாம் அதிகமாக வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியே அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

    வெங்காயத்தை அரைப்பதால் நரம்பு பாழ்பட்டுப்போகிறது. தக்காளியை அரைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வழியாகி விடுகிறது. ஐய்யோ! பாவம், நல்லதை விட்டு கெட்டதற்கு மாறுகிறார்கள். தேங்காயோடு மிளகு அல்லது இயற்கை வெல்லம் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேங்காய் சுலபமாக செரித்துவிடும். தேங்காய் ஆரோக்கியத்திற்கு கேடு என்பவர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.

    8. முட்டை:
    முட்டையும் ஒரு முழுமை உணவேயாகும். முட்டையை அவித்து சாப்பிட்டால் அத்தனையும் வாய்வாகிவிடும். அதே முட்டையை சிறிதளவு எண்ணையில் மிளகு சேர்த்த ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அத்தனையும் செரித்தும் கெட்டக் கொழுப்பு ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

    முழுமையற்றதை எடுத்துக்கொள்ளும் போது செரிமானச் சிக்கல்தான் ஏற்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன. மஞ்சள் கருவில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளும் கொண்டுள்ளன. இவையிரண்டும் சேர்ந்தால் தான் நல்லது நடக்கும்.

    9. பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள்:
    பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளில் ஒமேகா-3 வகை கொழுப்பு ஓரளவுக்கு இருக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வகைப் பருப்புகள் செரிக்கச் சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். இவைகளைத் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது சுலபமாக செரிக்கும்.

    10. வெண்ணைப்பழம்:
    ஆல்பகடா பழம் என்று அழைக்கப்படும் வெண்ணைப் பழம் ஒமேகா-3 வகை கொழுப்பை ஓரளவுக்கு கொண்டு இருக்கிறது. நோய்வாய்படும் நேரத்திலும் இப்பழம் சுலபமாக செரித்து சக்தி அளிக்கவல்லது.

    நண்பர்களே! நல்ல கொழுப்பைக் கொடுக்கும் உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று ஆரோக்கியமாய் வாழுங்கள்.




    Last edited by chan; 11th Mar 2015 at 12:17 PM.
    Dangu likes this.

  9. #19
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    Attached the pdf of all above posts. This may be useful to our friends/members.

    Attached Files Attached Files
    chan likes this.

  10. #20
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    migavum ubayogamana thagaval
    thelivaga vilakkiyatharku nandri
    vasanthi
    mct


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter