Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

கொலஸ்ட்ரால்- Cholesterol


Discussions on "கொலஸ்ட்ரால்- Cholesterol" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கொலஸ்ட்ரால்- Cholesterol

    கொலஸ்ட்ரால்

    இதய நலம் தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்தக் கொலஸ்ட்ரால் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

    கொலஸ்ட்ரால் என்ற வார்த்தை இன்றைக்கு ஆரோக்கியம் தொடர்பான விவாதங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கொலஸ்ட்ரால் பற்றிய உண்மைகளைவிட வதந்திகளே அதிக அளவு பரவியுள்ளன. கொலஸ்ட்ராலை குறிப்பிட்ட அளவில் சேர்த்துக்கொள்வது உடலுக்குப் பல வகைகளில் நன்மையாக அமையும்.

    ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் சேர்க்கப்படும்போதுதான உடல் நலத்துக்குக் கேடாக அமைந்துவிடுகிறது. கதாநாயகனாகச் செயல்பட்டு நன்மை புரியும் கொலஸ்ட்ராலானது அளவுக்கு அதிகமான நிலையில் கொடூரமான வில்லனாக மாறி பல தீமைகளை விளைவித்திவிடுகிறது.

    சரி, கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

    கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும் உடலின் சில முக்கியதான பணிகளைச் செய்யவும் நமது உடலே குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து கொள்கிறது.

    கொலஸ்ட்ரால் (CHOLESTEROL) என்பது கோலி (STEROL) என்ற இரண்டு கிரேக்கச் சொற்கள் சேர்ந்து உருவான ஒரு வார்த்தை. கோலி என்ற கிரேக்கச் சொல்லுக்கு பித்த நீர் என்று பொருள். ஸ்ட்ரால் என்ற சொல்லுக்குக் கெட்டியான பொருள் என்று அர்த்தம். கல்லீரலானது இந்தப் பொருளை உருவாக்குவதால் இதற்கு இப்படி ஒரு பெயர் வழங்கப்பட்டது.

    அளவோடு இருந்தால் கொலஸ்ட்ரால் ஒரு கதாநாயகன் என்று சொன்னேன் இல்லையா, அது ஒன்றும் மிகை அல்ல. கொலஸ்ட்ரால் நம் உடலுக்குப் பல நன்மைகள் உண்டு. கொலஸட்ராலானது ஆண் இன ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரானையும் (TESTOSTERONE) பெண் இன ஹார்மோனாகிய ஈஸ்ட்ரோஜனையும் உற்பத்தி செய்ய துணைபுரிகிறது.

    செல்களில் மென் திசுக்களை உருவாக்க மற்ற கொழுப்புகளுடன் கொலஸ்ட்ராலும் இணைந்து செயல்படுகிறது. மேலும் மூளை, நரம்பு அமைப்புகள் உருவாகத் துணைபுரிகிறது. முக்கிய உயிர்ச்சத்தான வைட்டமின் டி&யின் (VITAMIN D) உற்பத்தியைத் தூண்டுகிறது.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails கொலஸ்ட்ரால்- Cholesterol-cholesterol1-.gif  
    jv_66 and Dangu like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    இவ்வளவு நல்லவனாக இருக்கும் கொலஸ்ட்ரால் ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் எந்த அளவு இருக்க வேண்டும் என்பது நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.


    உடலில் உள்ள 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லிகிராம் முதல் 200 மில்லிகிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் உடல் நலம் சீர்குலைகிறது. 75 கிலோ உள்ள ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் 5 அவுன்ஸ் அல்லது 75 முதல் 150 கிராம் அளவுள்ள கொலஸ்ட்ரால் இருக்கும். மனித மூளையின் மொத்த எடையில் 3 சதவீதம் கொலஸ்ட்ரால்தான். தோல், கல்லீரல் ஆகியவற்றின் மொத்த எடையில் 0.3 சதவீதம் கொலஸ்ட்ரால் உள்ளது.

    சிறுநீரக மேல் சுரப்பிகள், சினைப்பைகள், விதைப்பைகள் போன்ற உறுப்புகளில் கொலஸ்ட்ராலானது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உடலில் உள்ள மொத்த அளவு கொலஸ்ட்ராலில் 20 சதவீதம் ரத்தத்தில் இருக்கிறது.

    கொலஸ்ட்ராலை அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதம் (Low Density Lipo Protein) என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தைத் தீமை தரும் கொலஸ்ட்ரால் என்றும், அடர்த்தி மிகுந்த கொழுப்புப் புரதத்தை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்றும் பிரித்துள்ளனர்.

    நன்மை தரும் கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களில் படியும் தீமை தரும் கொலஸ்ட்ராலை அகற்றி அவற்றை ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று அழிக்கின்றன. இவ்வாறு ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்புப் படிவங்களை அகற்றி, ரத்தக் குழாய்களில் ரத்தமானது தடையில்லாமல் ஓட துணை புரிவதால் அதாவது ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பான பணியைச் செய்வதால் இவற்றை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்கிறார்கள்.

    ரத்தத்தில் இவ்வகையான கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதயத்துக்கு மிகவும் நல்லது.

    இதற்கு மாறாக ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதிகமாவதால் இதயத்துக்குப் பல்வேறு கேடுகள் ஏற்படுகின்றன.
    கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளைத் தேவைக்கு அதிகமாக தொடர்ந்து அதிக அளவு உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமாகிறது. இதன் காரணமாக அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தின் படிவங்கள் காலப்போக்கில் ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளின் சுவர்களிர் கொஞ்சம் கொஞ்சமாகப் படிகின்றன. இவற்றை உரிய காலத்தில் தடுக்கவில்லை என்றால் இதயத் தமனிகளின் உள்விட்டம் குறுகிக்கொண்டே வரும். மேலும் இதயத் தமனிகளின் சுருங்கி விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு தடித்துவிடும்.


    இதயத் தமனிகளின் உள்விட்டமானது இப்படிப் பல்வகைகளில் குறுகுவதால் இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. சில சமயங்களில் இதயம் தமனிகள் முழுமையாகத் தடைபடுவதால் இதயத் தசைகள் அவை இயங்குவதற்குத் தேவையான ரத்தத்தைப் பெற முடியாமல் மடிந்துவிடுகின்றன. இறுதியில் மாரடைப்பால் (Heart Attack) பாதிக்கப்படும் நிலைக்கு நோயாளி தள்ளப்படுகிறார்.


    jv_66 and Dangu like this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    எனவே நம் உடலில் தீமை தரும் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேர்வதை நாம் தடுக் வேண்டும். எ,ந்தெந்த பொருள்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொண்டால் எதைத் தவிர்க்கலாம் என்பதம் புரிந்துவிடும்.


    பொதுவாக டவிலங்கினங்களிடம் இருந்து கிடைக்கும் உணவு வகைகளிலும் பால், பால் பொருள்கள் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது.

    30 கிராம் எடை உள்ள ஆட்டு மூளையில் 1600 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.

    இதே எடையுள்ள கல்லீரலில் சுமார் 410 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.

    30 மில்லி கிராம் எடையுள்ள ஆட்டு சிறுநீரகத்தில் சுமார் 330 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.

    வெண்ணெய் அகற்றப்பட்£த ஒரு கப் பாலில் சுமார் 35 மில்லிகிராம் கொலஸ்ட்ராலும்,

    வெண்ணெய் அகற்றப்படாத ஒரு கப் தயிரில் சுமார் 35 கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.

    காய்கறி வகைகள், கனிகள், பலவகையான தானிய வகைகளில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவான அளவில் உள்ளது.

    வெண்ணெய் நீக்கப்பட்ட ஒரு கப் மோரில், 9 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது.

    இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேராதபடி உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொண்டால் இதயத்தைப் பாதுகாக்கலாம். இன்னொரு வழிமுறையையும் நீங்கள் பின்பற்றலாம்.

    20 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தங்களுடைய உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால் இதயத்தைப் பாதுகாக்கலாம். இன்னொரு வழிமுறையையும் நீங்கள் பின்பற்றலாம்.

    20 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    அதற்கேற்ப, தங்களுடைய உணவு முறையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்த தற்பாதுகாப்பு முறை. ஒவ்வொருவரும் தங்களுடைய ரதத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்து 150 மில்லி கிராம் அளவுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்த பாதுகாப்பு முறை எனலாம்.

    கொலஸ்ட்ரால் நமது இதய நலனைப் பாதிக்காதவாறு நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் என்ன?

    உடலின் எடையை சீரான அளவில் வைத்துச் சேர்த்து கொள்ளுங்கள்.
    நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்-.

    தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்ச செய்யுங்கள்.

    தினசரி உணவில் கொழுப்புச் சத்துகள் மிகுந்த உணவு வகைகளான வெண்ணெய், ஆட்டு இறைச்சி, கொழுப்பு அகற்றப்படாத பால், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ஆண்டுக்கு ஒருமுறை உங்களுடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்


    jv_66 and Dangu like this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    கொழுப்புசத்து பற்றி தெரிந்துகொள்வோம்

    “உணவே மருந்து, மருந்தே உணவு’. உண்ணும் உணவு சீராக அமைந்தால், அந்த உணவே நோயைப் போக்கும் மருந்தாகவும் அமையும். உயிரை வளர்க்கும் உணவுதான், அளவுக்கு மீறினால் நம் உயிரையும் பறிக்கின்றது.

    நம் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

    1. கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகள் -& Macro Nutrients

    2. கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் & Micro Nutritients்

    கண்களுக்கும் புலனாகும் உணவு வகைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை

    1. மாவுச்சத்து (Carbohydrates)

    2. புரதச் சத்து (Proteins)

    3. கொழுப்புச் சத்து (Fat)

    கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் இரண்டு வகைப்படும்.

    1. வைட்டமின்கள் (Vitamins)
    2. தாதுப் பொருட்கள் (Minerals)

    கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகளின் ஒன்றான கொழுப்புசத்து பற்றி தெரிந்துகொள்வோம்.

    இந்த கொழுப்புச் சத்து மூன்று வகைப்படும்.

    1. பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid -SFA)

    2. அபூரிதக் கொழுப்பு
    (Unsaturated fatty acid -UFA)

    3. டிரான்ஸ் கொழுப்பு (Trans fatty acid -TFA)

    இந்த கொழுப்புச் சத்துக்கள் ரத்தத்தில் மிருதுவாகவும், மெழுகுத் தன்மையுடனும் நகர்ந்து கொண்டிருக்கக்கூடியது. சீரான கொழுப்பின் அளவு, நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. இவை மிகவும் சக்தி வாய்ந்த எரிபொருளாகவும் செயல் படுகிறது.

    நம் உடலுக்குத் தேவையான மொத்த சக்தியில் 25% மட்டுமே கொழுப்பு உணவிலிருந்து கிடைக்க வேண்டும். மீதமுள்ள 75% ல் 60% மாவு உணவிலிருந்தும், 15% புரத உணவிலிருந்தும் பெறப்பட வேண்டும்.

    ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு 2000 kcal. இதில் 500 kcal மட்டுமே கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கலாம். 1 கிராம் கொழுப்பு உணவு 9 kcalசக்தியைத் தருகிறது. அப்படியென்றால், 50 கிராம் கொழுப்பு உணவு நமக்கு கிட்டத்தட்ட 500 kcal சக்தியைக் கொடுக்கும். இந்த 50 கிராம் கொழுப்பு உணவை மட்டுமே ஒரு நாளைக்கு ஒருவர் சாப்பிடலாம். ஆனால் நோயாளிகள் குறைத்து சாப்பிட வேண்டும். இதய நோயாளிகள் 5% மட்டுமே கொழுப்பு உணவு சாப்பிடலாம்.

    jv_66 and Dangu like this.

  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

    கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
    80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.



    கொலஸ்ட்ராலின் தன்மைகள்

    கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
    கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

    கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

    நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

    எது நல்ல கொலஸ்ட்ரால்?

    LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்
    hdlஃ என்பது நல்ல கொலஸ்ட்ரால்.

    ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது.

    இதற்கு Atherosclerosis என்று பெயர். ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
    கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
    Total Cholesterol <—>200 mgm%

    மொத்த கொலஸ்ட்டிரால்

    LDL Cholesterol <—>100 mgm%
    குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

    VLDLCholesterol <—>30 mgm%
    மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

    Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்

    HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்

    மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும்.

    10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 ட்ஞ்ட்% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.


    குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு எனப்படும் குtணூணிடுஞு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

    முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் கூஎஃ ன் அளவு

    150 mgm்% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35ட்ஞ்ட்% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 ட்ஞ்ட்% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


    Last edited by chan; 12th Feb 2015 at 12:10 PM.
    jv_66 and Dangu like this.

  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

    பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

    எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

    ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

    இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து

    100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

    கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

    பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

    ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

    பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

    இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

    அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

    ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

    இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.

    ஒமேகா 3 உள்ள உணவுகள்
    மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

    ஒமேகா 6 உள்ள உணவுகள்
    சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.

    ஆராய்ச்சி முடிவுகள்
    Dr.ஜான் சபேத் (Dr. Jhon Sabata) என்பவர் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகம் (Lomo Linda University) மூலமாக செய்த ஆராய்ச்சியில், பாதாம், பிஸ்தா, வேர்கடலை போன்ற உணவு வகைகளை தினமும் 2.3 அவுன்ஸ் (65 கிராம்) உண்பதால் 5.1% மொத்த கொலஸ்ட்ரால் அளவிலும், 7.4 ஃஈஃ கொலஸ்ட்ரால் அளவிலும் குறைகிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.

    jv_66 and Dangu like this.

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    Very useful sharing.

    Dangu likes this.
    Jayanthy





  8. #8
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?

    நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
    கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்.


    · சீரான உடற்பயிற்சி

    · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

    · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

    · மது அருந்துவதைத் தவிர்ப்பது

    · அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

    · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

    · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

    · யோகாசன பயிற்சி செய்வது,
    · தியானப் பயிற்சி செய்வது .

    Dangu likes this.

  9. #9
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    எது நல்ல கொழுப்பு?

    ரத்தத்தில் உள்ள மொத்தக் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்வரை ‘நல்ல கொழுப்பாக 'அமைய வேண்டும். அதாவது 40-50 மில்லி கிராம் அளவுக்காவது நல்ல கொழுப்பு இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஹெச்.டி.எல். கொழுப்பு (High-density lipoprotein - HDL) என்கிறார்கள்.

    இயல்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு அவர்களுடைய உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் காரணமாக, சரியான விகிதத்தில் ஹெச்.டி.எல். அமைவதால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

    ஹெச்.டி.எல். கொழுப்பு ஒரு போலீஸ்காரரைப் போல் செயல்பட்டு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை (இதை low-density lipoprotein - LDL என்கிறார்கள்) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. பொதுவாக ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.

    நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை, ஈரல் முதலியவற்றைச் சாப்பிடக் கூடாது.

    நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரையின் பேரில் குறிப்பிட்ட சில மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலமும் நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்கள் ஹார்மோன் மாத்திரை (HRT) சாப்பிடுவதின் மூலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

    Dangu likes this.

  10. #10
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கொலஸ்ட்ரால்- Cholesterol

    கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

    * ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.

    * மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.

    * ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.

    * மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.

    * கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter