Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 3 Post By chan
  • 3 Post By chan
  • 3 Post By chan
  • 3 Post By chan
  • 2 Post By sumitra
  • 2 Post By chan

வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes


Discussions on "வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes

    வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது

    இப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா?
    ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று.

    அப்படி என்ன நோய் என்கிறீர்களா?


    பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள்.
    முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும்.

    இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும்வாய்ப்புண்டு.

    அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமே… என்று நினைக்கத் தோன்றுகிறதா?

    உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ,வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இதுஅலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல.

    நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலிகூட தலை போகும் பிரச்சனையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால்ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்த முயலவேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

    அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

    கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்தரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வெயின் (திஞுடிண) என்றுபெயர்.




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes-29.jpg  
    jv_66, sumitra and Dangu like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes

    வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.

    இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.

    வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது
    மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித்தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின்பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லதுவீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக,மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

    அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது,ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பதுபோன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு உள்ளது.

    ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தைஇதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது,ரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும்.

    ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவைஎன்பதை புரிந்துகொள்ள வேண்டும்.




    Attached Thumbnails Attached Thumbnails வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes-29.jpg  
    jv_66, sumitra and Dangu like this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes

    வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்

    · அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதியபராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம்.

    · பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.

    · வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு

    · கருவுற்றிருக்கும் பெண்களக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில்ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

    அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.

    பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கானவாய்ப்பு அதிகம் உள்ளது.

    அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, (நர்ஸ், போலீஸ்,செக்யூரிட்டி வேலைகளில் இருப்பவர்கள்) அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.




    Attached Thumbnails Attached Thumbnails வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes-29.jpg  
    jv_66, sumitra and Dangu like this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes

    வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய்க்கான அறிகுறிகள் என்ன?

    · தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.

    · கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல்.

    · பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல்.

    · பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

    · கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு)

    · வெரிகோஸ் வெயின் (Varicose vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.

    வரும்முன் தடுக்க

    இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும்.

    வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது.

    மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

    எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

    எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.

    தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

    தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும்.

    எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும்.

    எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    சிகிச்சை
    வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கானசிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாகஉருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும்வேதனைகளைக் குறைக்க முடியும்.

    அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாகபயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு ரத்த நாளத்தின் மூலமாக இந்நோய்ஏற்பட வாய்ப்புண்டு.

    · Microsclerotheraphy, Laser surgery, Endovenous Ablation Theraphy, Endoscopic Vein surgery, ambulatory phlebectomy, Vein stripping and ligation,

    உள்ளிட்ட முறைகளில் இந்நோய்க்குசிகிச்சை அளிக்க இயலும்.
    வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும்,வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள்.

    ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள்உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையானபஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன.



    jv_66, sumitra and Dangu like this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes

    Really good analysis you have made to expalin us about the causes of Varicose Veins. Thank you very much!

    chan and Dangu like this.

  6. #6
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: வெரிகோஸ் வெயின் - Varicose Veins Causes

    Very useful information.


  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    வெரிக்கோஸ் வெயின்ஸ்

    வெரிக்கோஸ் வெயின்ஸ்

    ஏன்? எப்படி?

    இது ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்னை!
    பார்க் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது பக்கத்தில் வந்து அமர்ந்தார் அந்த நடுத்தர வயது மனிதர். லுங்கி கட்டிக்கொண்டு காலில் சாக்ஸ் அணிந்திருந்தது வினோதமாக இருந்தது. ‘‘வெரிக்கோஸ்னு சொன்னாங்க தம்பி...மளிகைக்கடை வேலை நமக்கு... நாள் முழுக்க நின்னுட்டே இருக்கம்ல...’’ என்று சாக்ஸை கழட்டினார்.



    இரண்டு கால்களிலும் தழும்புகளும் காயங்களுமாக ரணகளம். வெரிக்கோஸ் வெயின்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அது இந்த அளவு மோசமானதாக இருக்குமா? ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் பாலகுமாரிடம் கேட்டோம்.

    ‘‘இதை கால் நரம்பு சுருண்டு கொள்கிற பிரச்னை என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், ரத்த நாளங்களில் ஏற்படுகிற பிரச்னைதான் ‘வெரிக்கோஸ் வெயின்ஸ்’ (Varicose veins). அது நரம்பு அல்ல’’ என்று அறிமுகம் கொடுப்பவர், வெரிக்கோஸ் பற்றி இன்னும் நுட்பமாக விளக்க ஆரம்பிக்கிறார்.

    ‘இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு சுத்த ரத்தத்தை தமனிகள் (Arteries) எடுத்துச் செல்கின்றன. பாதத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டிய ரத்தத்தை சிரைகள் (Veins) எடுத்துச் செல்கின்றன. இந்த சிரைகள் சுருண்டு கொள்வதையே வெரிக்கோஸ் என்கிறோம்..

    ’’நாளங்கள் எதனால் இப்படி சுருண்டுகொள்கின்றன?

    ‘‘பாதத்தில் இருந்து மேல்நோக்கி ரத்தம் செல்வதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதிலும், பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக ரத்தம் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் உதவிபுரிகின்றன. இதற்காக அதிக ஆற்றல் செலவாவதால் சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன. வால்வுகள் செயலிழப்பதால்ரத்த ஓட்டம் நின்று, நாளங்கள் சுருண்டு கொள்கின்றன...’’ வெரிக்கோஸில் வகைகள் எதுவும் இருக்கிறதா?

    ‘‘வெளியில் தெரியும் ரத்தநாளங்கள், உள்ளுக்குள் இருக்கும் ரத்தநாளங்கள், இந்த இரு நாளங்களையும் இணைக்கும் நாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் என 3 வகைகள் இருக்கின்றன. அரிதாக கைகளிலும் வெரிக்கோஸ் வரலாம். ஆனால், கால் களோடு ஒப்பிடும்போது கைகளில் அழுத் தம் குறைவு என்பதால் கைகளில் வெரிகோஸ் வரும் வாய்ப்பும் குறைவுதான்.

    ’’வெரிக்கோஸ் குறைபாடு எதனால் வருகிறது?

    ‘‘வெரிக்கோஸ் இதனால்தான் வருகிறது, இவர்களுக்குத்தான் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. வெரிக்கோஸ் யார் யாருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என்ற சாத்தியங்களை வேண்டுமானால் சொல்லலாம். அதிக நேரம் நிற்கும் பணி, முதுமை, புகைப்பழக்கம், பருமன், பரம்பரைக் குறைபாடு, இடுப்பை இறுக்கும் உடைகள்,

    ஹை ஹீல்ஸ் காலணிகள், விபத்து, உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பது போன்ற காரணிகளால் ரத்தநாளங்களின் வால்வுகள் செயலிழந்து போகலாம். ஹார்மோன் கோளாறுகள், மாதவிலக்குத் தொடர்பான பிரச்னைகள், கர்ப்பம் போன்ற காரணங்களால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் வெரிக்கோஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்...’’

    வராமல் தடுப்பது எப்படி?

    ‘‘வெரிக்கோஸை எப்படித் தடுக்கலாம் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. மேற்சொன்ன காரணங்களைத் தவிர்ப்பதன் மூலம் வெரிக்கோஸ் ஏற்படாமல் ஓரளவு தடுக்க முடியும்...’’

    அறிகுறிகள் என்னென்ன?

    ‘‘வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு நாளங்கள் சுருண்டு கொள்வது, தசைப்பிடிப்பு, வீக்கம், மாலை நேரங்களில் மட்டும் ஏற்படும் வலி, தோலின் நிறம் மாறுவது, அரிப்பு, 4 வாரங்களுக்கு மேல் ஆறாத காயம் போன்ற அறிகுறிகள் கால்களில் தெரிந்தால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது...’’வெரிக்கோஸால் ஆபத்து ஒன்றும் இல்லையே?‘‘வெளிநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸால் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை.

    ஆனால், உள் ரத்தநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் மிகவும் ஆபத்தானது. ரத்தநாளங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தம் திடீரென்று திட்டுத்திட்டாக உறைந்து நுரை யீரலுக்குச் சென்று மூச்சுத்திணறலை உண்டாக்கும். உடனடியாக கவனிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு...’’

    உள் ரத்தநாளங்களில் வெரிக்கோஸ் ஏற்படுவது ஏன்?

    ‘‘விபத்து, மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருப்பது, புற்றுநோய், கருத்தடை மாத்திரை உபயோகிப்பது போன்ற காரணங்களால் உள் ரத்தநாள வெரிக்கோஸ் வரும்...’’மருத்துவர்கள் வெரிக்கோஸை எப்படி கண்டு பிடிக்கிறார்கள்?

    ‘‘முதல் வகை வெரிக்கோஸில் கால்பகுதியில் ரத்தநாளங்கள் சுருண்டிருப்பது வெளிப்படையாகவே தெரியும். உள் ரத்தநாளங்களில் ஏற்பட்டிருந்தால் டாப்ளர் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும். எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறது, வால்வுகள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை டாப்ளர் ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்...’

    ’இதற்கு என்ன சிகிச்சை?

    ‘‘ஆரம்பகட்டமாக இருந்தால் மருந்து, மாத்திரை, ஊசி, சாக்ஸ் போட்டுக் கொள்வது என எளிதான சிகிச்சைகள் அளிக்கப்படும். நிரந்தரத் தீர்வு வேண்டு மென்றால் அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. இதில் வழக்கமான அறுவை சிகிச்சை, லேசர் அறுவை சிகிச்சை, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி முறை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன.

    இந்த சிகிச்சைகளில் ரத்த நாளத்தின் ரத்தம் வரும் வழியை அடைத்துவிடுவது, மாற்று ரத்தநாளம் வழியாக ரத்தத்தை செல்ல வைப்பது, பிரச்னைக்குரிய ரத்தநாளத்தை அகற்றிவிடுவது என்று பல வழிகள் இருக்கின்றன...

    ’’ரத்தநாளத்தை அகற்றுவதால் ஆபத்து இல்லையா?

    ‘‘ஏற்கெனவே செயலிழந்து போன ரத்தநாளத்தைத்தான் அகற்றுகிறோம். அதனால், எந்த ஆபத்தும் இல்லை!’’

    ‘‘உள் ரத்தநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் மிகவும் ஆபத்தானது. உடனடியாக கவனிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு...’’


    Last edited by chan; 7th Apr 2015 at 02:04 PM.
    jv_66 and Dangu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter