Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree58Likes

Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்


Discussions on "Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்

    தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

    அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம்.

    தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது.

    உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.

    இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.

    பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது.

    புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன.

    இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும். சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது.

    இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது.

    அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

    சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும்.

    சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும்.

    செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

    முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

    உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும்.

    தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.


    Sponsored Links
    jv_66, Mary Daisy, sumitra and 1 others like this.

  2. #12
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    Really great pain you have taken to update us with the complete details of Thyroid gland and the related diseases ! Thank you!

    Mary Daisy and chan like this.

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    Thanks a lot for the useful details

    chan likes this.
    Jayanthy





  4. #14
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    very useful sharing. . . . .

    chan likes this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    பலரும் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்த உண்மைகள்!

    நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் எனப்படும் என்டோக்ரைன் (Endocrine System) சுரப்பியிலேயே பெரிய சுரப்பி தைராய்டு தான். இது நமது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ளது.

    இதனுள் தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் எனப்படும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் இருக்கின்றன. இதை மருத்துவ பெயரில் T3 & T4 என குறிப்பிடுகின்றனர்.

    தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

    இவைகளின் முக்கிய பணியே உடல் எடையை கட்டுப்படுத்துதல், உடலிற்கு தேவையான சக்தியை உபயோகப்படுத்துதல், நமது உறங்கும் தன்மைக்கு வழிசெய்தல், உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துதல் போன்றவை ஆகும்.

    தைராய்டு பிரச்சனை ஏற்படும் போது மேல் கூறியவற்றில் எல்லாம் கோளாறுகள் ஏற்பட வாய்புகள் இருக்கின்றன. இந்த கட்டுரையின் மூலமாக, இதுவரை நீங்கள் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்து தெரியப்படுத்தவிருக்கிறோம்...

    உடல் எடை குறைதல்
    உங்களுக்கு ஹைப்பர் தைராய்டு என்பதை அறிவுறுத்தும் அறிகுறிகளில் ஒன்று உடல் எடை குறைதல். பசியின்மை ஏற்படும் காரணத்தால் உடல் எடை குறைவு ஏற்படும். இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். வியர்வை அதிகரிக்கும், படபடப்பு மற்றும் கை நடுக்கம் ஏற்படும்.

    உடல் எடை அதிகரித்தல்
    தைராய்டின் இன்னொரு பிரச்சனை உடல் எடை அதிகரித்தல். அதிலும் ஹைப்போ தைராய்டு உடல் எடையை அதிகரிக்க செய்யும். இது இரண்டு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகையில் இதயத்துடிப்பை குறைய செய்கிறது, கைகளில் உணர்வின்மை அடைய செய்கிறது, உங்கள் கழுத்தை பெரிதாய் ஆக்குகிறது. மற்றும் பெண்களுக்கு மாதவிடாயை அதிகரிக்கவும் செய்யும்.

    ஆன்டி-தைராய்டு
    ஹைப்போ தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த, மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளை நேரம் தவறாது உட்கொள்ள வேண்டும்.

    மற்றும் ஹைப்பர் தைராய்டைக் கட்டுப்படுத்த ஆன்டி-தைராய்டு மாத்திரைகளும், கதிரியக்க (Radioactive) அயோடின் சிகிச்சை முறையும் இருக்கின்றன. மற்றும் உங்கள் மருத்துவர் தரும் மாத்திரைகளின் மூலமாக தான் இவற்றின் அறிகுறிகளான இதயத்துடிப்பு அதிகரித்தல், குறைதல் போன்ற கோளாறுகளை சரி செய்ய இயலும்.

    தைராய்டு புற்றுநோய்
    உங்கள் தொண்டை பகுதியில் வீக்கம் ஏற்படுதல், சுவாசிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலி ஏற்படுதல் மற்றும் தொண்டை கரகரப்பு ஏற்படுதல் போன்றவை எல்லாம் தைராய்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள். இப்படி எதாவது ஏற்படும் போது கதிரியக்க ஐயோடின் சிகிச்சை மூலமாக தைராய்டு பகுதியை அகற்றிவிடுவார்கள்.

    நீரிழிவு நோய்
    தைராய்டு காரணமாக டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்கிறது. ஆண்களை விட பொதுவாக பெண்களுக்கு தான் அதிகமாக தைராய்டு பிரச்சனைகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பரிசோதனை
    தைராய்டை கண்டறிய தைராய்டு ப்ரோபைல் (Thyroid Profile) பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஹார்மோனில் தைராய்டின் தூண்டுதல் எந்த அளவு இருக்கிறது என கண்டறியப்படுகிறது. இதில் தைராய்டின் தூண்டுதல் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது ஹைப்போ தைராய்டு என கூறப்படுகிறது. தைராய்டின் தூண்டுதல் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது ஹைப்பர் தைராய்டு என கூறப்படுகிறது.

    அனைவரும் கட்டாய பரிசோதனை
    முப்பத்து ஐந்து வயதிற்கு மேல் ஒவ்வொருவரும் கட்டாய தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இந்த பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

    சிகிச்சை
    உங்களுக்கு தைராய்டு இருக்கிறது என கண்டறியப்பட்டால், மருத்துவர் தரும் மருந்துகளை கட்டாயம் நேரம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நீங்கள் சரிவர மருந்துகளை உட்கொள்ளவில்லை எனில், அது இதய பாதிப்புகளையும், மலட்டுத்தன்மையும் ஏற்பட காரணமாகிவிடும்.

    ஊட்டச்சத்து உணவு
    தைராய்டினை சரியான நிலையில் கட்டுக்குள் வைக்க, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். முக்கியமாக, அயோடின் மற்றும் செலினியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சைவம் உண்பவர்கள், கீரை, பூண்டு, எள்ளு போன்றவைகளை உணவுக்கட்டுப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றும் மீன், காளான், சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால் உடலுக்கு செலினியம் சத்து நிறைய கிடைக்கும்.

    எச்சரிக்கை
    இந்திய என்டோகிரினாலஜி (Endocrinology) மாத இதழில் வெளிவந்த கணக்கெடுப்பின் படி, தைராய்டு பிரச்சனையின் காரணமாக ஹைப்போதைராய்டிஸம் இருப்பதாய் கண்டரியப்பட்டவர்களில் 5,376'ல் 10.95% பேர் தான் தப்பிப் பிழைத்துள்ளனர். எனவே, ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, சரியாக நேரம் தவறாமல் மருந்துகள் உட்கொள்ளவேண்டியது அவசியம்.




  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    1’தைராய்டு’ என்பது என்ன?

    நமது உடம்பில், பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை, ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான், தொண்டையில் இருக்கும், ‘தைராய்டு’ சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோனின் பெயர், ‘தைராக்சின்’.

    2’தைராய்டு’ சுரப்பியின் பயன் என்ன?


    இதயத்தை, சீராக வைக்க உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும் ‘தைராக்சின்’ ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு, மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள், சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகிறது.

    3 ‘தைராய்டு’ குறைபாட்டில் இருவகை உள்ளதாமே!
    ஆம். ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது, மற்றொன்று, தைராய்டு குறைவாக சுரப்பது.

    4’தைராய்டு’ இருப்பதற்கான அறிகுறிகள்?
    முடி உதிர்தல், மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதை
    விட வித்தியாசமாக இருக்கும். மாதவிடாயில் பிரச்னை, கழுத்து வீக்கம், மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலை உருவாகும்.

    5 ‘தைராய்டின்’ பாதிப்புகள் என்னென்ன?
    அதிகமாக, ‘தைராக்சின்’ சுரந்தால் எடை குறையும்; இதயத்துடிப்பு அதிகமாகும்; கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, வயிற்றுப்போக்கு என, பல சிக்கல்கள் ஏற்படும்.’தைராக்சின்’ குறைவாக சுரந்தால், மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவது, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    6 ‘தைராய்டு’ பிரச்னை உள்ளோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்?
    ‘தைராய்டு’ குறைவாக சுரக்கும் பிரச்னை இருந்தால், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.

    7 ‘தைராய்டு’ காரணத்தால்தான், கழுத்துப் பகுதி வீக்கமடைகிறதா?
    ‘தைராய்டு’ சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாதபோது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ‘தைராய்டு’ சுரப்பி வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில நேரங்களில், அயோடின் குறைபாட்டாலும், கழுத்து வீக்கம் ஏற்படலாம்.

    8 ‘தைராய்டு’ பிரச்னை இருந்தால், மூட்டுகள் வலிக்குமா?
    மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவை ‘தைராய்டு’ பிரச்னைக்கான அறிகுறிகள்தான்; அதோடு ‘தைராய்டு’ ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடு, உடலில் அங்கங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.

    9 தைராய்டு சுரப்பியில் கட்டிகள் வருமாமே!
    ஆம், தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு. அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம். இதுமட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பியில் நேரடியாக கூட புற்றுநோய் கட்டிகள் வரும்.

    10 தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?
    பொதுவாக, மக்களுக்கு வரக்கூடிய குறைபாடு தைராக்சின் குறைவாக சுரப்பது. இக்குறைபாடு
    ஒரு முறை வந்துவிட்டால் தைராக்சின் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். ஆனால், தைராக்சின் அதிகமாக சுரந்தால் மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தலாம்.



  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு - ஒரு சிறு அலசல்....


    எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:

    தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

    இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

    தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

    உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

    பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

    உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

    ரெசிபி
    கோதுமை பால் பர்பி: முழு கோதுமை இரண்டு கப் எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அதை நன்றாக அரைத்து இரண்டு கப் கெட்டிப் பால் பிழியவும். அடி கனமான பாத்திரத்தை எடுத்து இரண்டு கப் சர்க்கரை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமைப் பால் சேர்த்து பின்னர் நெய் மற்றும் முந்திரி சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பால் கெட்டியான பின் ஒரு தட்டில் ஊற்றி பர்பிகளாக வெட்டி சாப்பிடலாம்.

    அவல் பக்கோடா: அவல் இரண்டு கப், வெள்ளை ரவை கால் கப், பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் தேவையான அளவு, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை. அவலை இரண்டு நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும். ரவை, பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை பக்கோடா பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

    தேங்காய் பால் உருளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 2 கப் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சிறிது. அரிசி மாவு அல்லது பொரி கடலைத் தூள் 2 டீஸ்பூன். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பிரியாணி பொருட்களைப் போட்டு வதக்கவும்.

    அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போடவும். தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி மாவு, புளி அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு புதினா கொத்தமல்லி, பொரி கடலைப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம்.

    டயட்
    உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

    தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.

    பாட்டி வைத்தியம்
    தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

    ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
    உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

    அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.

    அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.
    தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.
    தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.



    Last edited by chan; 1st Mar 2015 at 04:19 PM.
    Suganya Vasu likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்

    தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம்.

    தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.

    பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது.

    இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும். சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது. அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

    சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும்.

    சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

    முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

    அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.



    Attached Thumbnails Attached Thumbnails Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்-ht3070.jpg  
    Last edited by chan; 3rd Mar 2015 at 08:11 PM.
    Suganya Vasu likes this.

  9. #19
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    very very useful info. Hyper thyroid ullavargal cauliflower, broccoli cabbage unavil serkala? reply pl
    thanks
    vasanthi
    mct

    chan likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    Quote Originally Posted by vasanthi View Post
    very very useful info. Hyper thyroid ullavargal cauliflower, broccoli cabbage unavil serkala? reply pl
    thanks
    vasanthi
    mct
    hi @vasanthi

    don't take cauliflower, broccoli cabbage

    lakshmi



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter