Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree58Likes

Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்


Discussions on "Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்" in "General Health Problems" forum.


  1. #21
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    Dear lakshmi
    THANKS
    vasanthi
    mct


    Sponsored Links

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?



    ‘உடல் எப்போதும் அசதியாகவே இருக்கிறது; கொஞ்சமாக உணவைச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது; மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக ஏற்படுவதில்லை’... இப்படிச் சொல்பவர்களிடம், ‘உங்களுக்குத் தைராய்டு கோளாறு இருக்கிறதா?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.

    இன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், பின்னால் ஏற்படுகிற அறிவாற்றல் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

    தைராய்டு என்பது என்ன?

    நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும். சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.

    தைராக்சின் ஹார்மோன்
    தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்' (T4), ‘டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்' எனும் புரதம் உள்ளது. இதில் ‘டைரோசின்' எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினை இணைத்து வினைபுரிந்து T4 மற்றும் T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இத்தனைச் செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற 'தைராய்டு ஊக்கி ஹார்மோன்' ( TSH ) கட்டுப்படுத்துகிறது.

    தைராக்சின் பணிகள்
    குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை எனப் பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்குத் தைராக்சின் தேவை.

    கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக் கூழிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன் செய்கிற அற்புதப் பணிகள்.

    மேலும் இதயம், குடல், நரம்பு, தசை, பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகளையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பதுபோல், தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை.
    குறை தைராய்டு

    தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது. முகம் வீங்கும். முடி கொட்டும். இளநரை தோன்றும். தோல் வறட்சி ஆகும். பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கை, கால்களில் மதமதப்பு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும். ரத்தசோகை, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் குறை தைராய்டு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியமான அறிகுறிகள்.
    என்ன காரணம்?
    நாம் உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து இருப்பதில்லை. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்குத் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கத்தில் ஒரு கழலைப் போன்று தோன்றும். அதற்கு ‘முன்கழுத்துக் கழலை' (Goitre ) என்று பெயர்.
    சண்டித்தனம் செய்து படுத்துக்கொண்ட மாட்டை என்னதான் தார்க்குச்சி கொண்டு சீண்டினாலும், அது எழுந்து வண்டியை இழுக்காது; மாட்டுக்குக் காயம் ஆவதுதான் மிச்சம். அதுபோலத்தான் இதுவும். இந்த நிலைமை நீடிப்பவர்களுக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.

    இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு இந்தத் தைராய்டு பிரச்சினை உருவாகிறது என்கிறது புள்ளிவிவரம். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.

    இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease) ஏற்படலாம் என்கிறது மருத்துவம். அதாவது, நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள், சொந்த உடலின் செல்களையே, வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளாகக் கருதி அழித்துவிடுகின்றன. பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், இதைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது. இப்படித் தைராய்டு செல்கள் அழிக்கப்படுபவர்களுக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.

    இது தவிரப் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்படுவது, தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது, முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைவது போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு ஏற்படலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படலாம்.

    இன்றைய தலைமுறையினருக்குக் குறை தைராய்டு ஏற்படுவதற்கு மன அழுத்தம்தான் முக்கியமான காரணம். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.
    குழந்தைக்கும் குறை தைராய்டு
    பிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism ) ஏற்படுவதுதான் வேதனைக்குரியது. கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.

    இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், மஞ்சள் காமாலை நீடித்தால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித் தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

    பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு 'வளர்ச்சி மைல்கல்' தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டுத் திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பின்னடைவும் பாதிப்பும் ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தமான நிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றலாம்.

    பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q. ) குழந்தை பின்தங்கும். முக்கியமாக, கற்றலிலும் நினைவாற்றலிலும் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். அல்லது மாதவிலக்கு அதிக நாட்கள் நீடிக்கும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை உடனடியாக டாக்டரிடம் காண்பித்துத் தகுந்த சிகிச்சை பெற்றால், பாதிப்புகள் குறையும்.

    பரிசோதனைகள் என்ன?
    ரத்தத்தில் T3, T4 மற்றும் TSH அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும். இது தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைக் கணிக்க முடியும். இன்றைய நவீன மருத்துவத்தில் 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

    சிகிச்சை என்ன?
    குறை தைராய்டு பாதிப்புக்குத் தைராக்சின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த மருந்தின் அளவு, அதற்கான கால அளவு ஆகியவற்றை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை நிறுத்தக்கூடாது. அயோடின் குறைவால் வரும் முன்கழுத்துக் கழலை நோய்க்குப் போதுமான அளவு அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அறிவு மந்தம், மாதவிலக்குக் கோளாறுகள், மலட்டுத்தன்மை, பிரசவகால சிக்கல்கள் போன்றவற்றைத் தடுத்துக்கொள்ள முடியும்.
    முறையான உணவு
    நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிட வேண்டியது முக்கியம். பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு, கழுத்துக்கு உண்டான உடற்பயிற்சி / யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டால், குறை தைராய்டு பிரச்சினைகளைத் தடுக்க முடியும்; தள்ளிப்போடவும் முடியும்.
    சுரப்பைப் பாதிக்கும் உணவுகள்
    நாம் வழக்கமாகச் சாப்பிடும் சில உணவு வகைகளின் அளவு அதிகமாகிவிட்டால், அவை தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். அப்போது தைராய்டு சுரப்பி உணவிலுள்ள அயோடின் சத்தைப் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக, தைராக்சின் ஹார்மோனைத் தேவையான அளவுக்குச் சுரக்காது. இதனால் குறை தைராய்டு ஏற்படும். தைராய்டை பாதிக்கிற கீழ்க்காணும் உணவு வகைகளை அளவோடு சாப்பிடுங்கள். ஏற்கெனவே ‘குறை தைராய்டு' உள்ளவர்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
    - கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.
    தொடர்புக்கு: gganesan95@gmail.com

    Last edited by chan; 6th May 2015 at 08:12 PM.
    Suganya Vasu likes this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு: டயட் முறைகள்:-

    உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்சனை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்சனைகள் தோன்றும்.

    அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்சனைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. தைராய்டு பிரச்சனையை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

    கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
    தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. மீன்வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் உப்பைப் பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்து வைக்கக் கூடாது.

    அப்படி திறந்து வைத்தால், உப்பிலுள்ள அயோடின் காற்றில் கரைந்து விடும். உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம்.

    அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.









    Suganya Vasu likes this.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு ஹார்மோன் தைராய்டு சுரப்பி:

    குழந்தை பிறப்பு, குழந்தையின்மை, வளர்ச்சி, சீக்கிரமே முதுமை என உடலில் நடக்கும் அனைத்து மாற்றங்களுக்கும் காரணம் ஹார்மோன்கள். இவற்றின் சமச்சீரின்மையால்தான் பல உடல், மன நோய்கள் ஏற்படுகின்றன. ஹார்மோன்கள் செய்யும் வேலைகள், ஹார்மோன் சமச்சீரின்மையை எப்படித் தவிர்ப்பது என்பதைப் பேசும் மினி தொடர் இது.


    கழுத்து பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும். தைராய்டு சுரப்பியில் இருந்து டி3 (T3) என்ற டிரியோடோதைரோனைன் (Triiodothyronine) மற்றும் டி4 (T4) என்ற தைராக்சின் (Thyroxine) ஆகிய இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. உடலில் வளர்ச்சிதை மாற்ற செயல்பாடு, மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடு, வளர்ச்சிக்கான ஹார்மோன் போன்றவற்றை இயக்குவதும், கட்டுப்படுத்துவதும் இந்த ஹார்மோன்கள்தான். தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் ஹைப்போ தைராய்டு என்றும், அதிகமாகச் சுரந்தால் ஹைப்பர் தைராய்டு என்றும் சொல்கிறோம்.

    ஹைப்போ தைராய்டு குறைபாடு உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அணுக்களே, உடலுக்கு எதிராகத் திரும்புவதால்தான் (தன் எதிர்ப்புச் சக்தி) பெரும்பாலும் தைராய்டு குறைபாடு வருகிறது. இதைத் தடுக்க முடியாது. சிலருக்கு அயோடின் குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்னை, பிறக்கும்போதே ஏற்படும் தைராய்டு குறைபாடு போன்ற பிரச்னைகளால் தைராய்டு பிரச்னை வரலாம். பெண்களுக்கு ஆண்களைவிட அதிக அளவில் ஹைப்போ தைராய்டு பிரச்னை வருகிறது.

    அறிகுறிகள்:
    சோர்வு, பசியின்மை, எடை அதிகரித்தல், வேலைகளில் ஆர்வம் இன்மை, இதயத் துடிப்பு குறைதல், மலச்சிக்கல், கழுத்துப் பகுதியில் வலி போன்றவை தைராய்டு சுரப்பி சீராக சுரக்காததன் முக்கிய அறிகுறிகள்.

    குறைபாட்டால் என்ன நிகழும்?
    கர்ப்பம் தரிக்கும் சமயத்தில் தைராய்டு குறைபாடு ஏற்பட்டால், கருக்கலைதல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் வரலாம். குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடு இருந்தால், பேச்சுக் குறைபாடு, கேட்கும் திறனில் குறைபாடு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை ஏற்படலாம். பெண் குழந்தைகளுக்குப் பூப்படைதல் தள்ளிப்போதல், சீக்கிரம் பூப்படைதல் நடக்கலாம். சில பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தைராய்டு குறைபாடு காரணமாக, குழந்தைப் பேற்றில் சிக்கல் ஏற்படும். அலுவலகத்தில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது, உடல் எடை அதிகரிக்கும். இதனால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். மேலும் மாரடைப்பு மற்றும் மூட்டு வலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு.



    தீர்வு:

    ரத்தப் பரிசோதனை மூலமாகவே தைராய்டு குறைபாட்டைக் கண்டறிந்து, மாத்திரைகள் மூலமே பெரும்பாலும் தைராய்டு குறைபாட்டை சீர்செய்ய முடியும். உடல் பருமன் உள்ள அனைவருக்குமே தைராய்டு குறைபாடு இருக்கும் என்று சொல்ல முடியாது. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனை பேரில், அயோடின் நிறைந்த உப்பை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

    ஹைப்பர் தைராய்டு:
    டி3, டி 4 ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னை இது. உடலில் ஏற்படும் தன் எதிர்ப்புச் சக்தி பிரச்னை காரணமாகவோ, தைராய்டு சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டாலோ, அதிகப்படியான அயோடின் உப்பு உடலில் தங்கிவிடுவதாலோ, சில நேரங்களில் தைராய்டு அதிகமாகச் சுரந்து, வளர்சிதை மாற்றம் மிகவும் வேகமாக நடக்கும்.



    ஹைப்பர் தைராய்டால் என்ன நிகழும்?

    தைராய்டு குறைபாடுக்கு நேர் எதிராக, உடலில் மாற்றங்கள் நிகழும். ஞாபக மறதி, கோபம், தூக்கமின்மை ஏற்படும். கருவுற்ற பெண்களாக இருந்தாலும் வாந்தி அதிகம் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஆண்களின் மார்புப் பகுதி பெரிதாகும். எலும்புகள் இணைகிற பகுதியில் வலி ஏற்படும். மன அழுத்தம், மூட் ஸ்விங், திடீர் பயம், பதற்றமான மனநிலை இருக்கும்.

    தீர்வு:
    ஹைப்பர் தைராய்டு பிரச்னையை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். தைராய்டு அதிகமாகச் சுரப்பதைத் தடுக்க அயோடின் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, சோயா சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். மாத்திரைகள் மற்றும் அறுவைசிகிச்சை மூலம் இந்தப் பிரச்னையை சீர்செய்ய முடியும்.
    தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருக்கும்பட்சத்தில், அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும். 95 சதவிகிதம் சாதாரணக் கட்டிகளாகத்தான் இருக்கும். 5 சதவிகிதம் புற்றுநோய்க் கட்டிகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.






  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

    தைராய்டு பிரச்னைகளை சரி செய்வது எப்படி?

    இன்றைய தினம் இளம் பெண்களை அதிகமாகப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் தைராய்டு ஹார்மோன் பிரச்னை முன்னிலை வகிக்கிறது. தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி.

    இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இதன் இயல்பான எடை 12லிருந்து 20 கிராம் வரை இருக்கும். இந்த எடைக்கு மேல் அதிகமானால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று பொருள். அப்போது நோயாளியானவர் உணவை விழுங்கும்போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும்.

    தைராய்டு ஹார்மோன்கள்

    தைராய்டு சுரப்பி, தைராக்சின்(T4), டிரைஅயடோதைரோனின் (T3) எனும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இவற்றில் தைராக்சின் செய்யும் பணி முக்கியமானது. தைராய்டு செல்களில் `தைரோகுளோபுலின்’ எனும் புரதம் உள்ளது. இதில் `டைரோசின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது.

    தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனை சுரக்கின்றன. ரத்தத்துக்கு தைராக்சின் ஹார்மோன் தேவைப்படும்போது, அதை அனுப்பி வைக்கின்றன. மற்ற நேரங்களில், அதை தைரோகுளோபுலினில் சேமித்து வைக்கின்றன. இத்தனை செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் `தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ (TSH) கட்டுப்படுத்துகிறது.

    தைராக்சின் பணிகள்

    கருவில் உள்ள குழந்தையின் 11வது வாரத்திலிருந்து சுரக்கத் தொடங்குகின்ற தைராக்சின் ஹார்மோன், அப்போதிலிருந்தே உடலிலுள்ள செல்களின் இயக்கத்தையும், வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலைகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுகிறது. குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்கு தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதி

    வினைகள் புரிவதற்கு தைராக்சின் தேவை. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை முடுக்குவது தைராக்சின். புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக்கூழிலிருந்து குளுக்கோஸை பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன்தான். இதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது.

    மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பதும் தைராக்சின் ஹார்மோன்தான். உடல் செல்களில் பல நொதிகள் உருவாவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது.

    இவ்வாறு உடலின் அன்றாட தேவைக்கு ஏற்ப, கூட்டியும் குறைத்தும் சுரந்து, கருவில் வளரும் குழந்தை முதல் முதிய வயது வரை, அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துல்லியமாக செய்து முடித்து, உடலைப் பேணி இயக்கும் உன்னதமான ஹார்மோன், தைராக்சின். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை.

    குறை தைராய்டுதைராய்டு சுரப்பியில் தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், குறை தைராய்டு (Hypothyroidism) எனும் நிலைமை ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இவை... உடல் சோர்வு, உடல் தளர்வு, சாதாரண வெப்பத்தைக்கூட குளிர்ச்சியாக உணர்வது, குளிர் தாள முடியாமல் போவது, முடி கொட்டுவது, உலர்ந்த தோல், தோலில் அரிப்பு, பசி குறைவது. அதே நேரத்தில் எடை அதிகரிப்பது, ஞாபக மறதி, மலச்சிக்கல், அதிக தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கைகால்களில் மதமதப்பு, கருத்தரிப்பதில் பிரச்னை, மூட்டுவலி.

    இப்படிப் பல பிரச்னைகள் குறை தைராய்டு உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படும் என்றாலும், உடனே பயந்துவிட வேண்டாம். வேறு சில நோய்களிலும் இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு ஏற்படுவதுண்டு. அதே நேரம், டாக்டரை கலந்து ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளைச் செய்து, தைராய்டு நோயை உறுதி செய்யவும் தயங்க வேண்டாம்.

    குறை தைராய்டு நோய் உள்ளவர்களுக்குக் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோா்த்துக் கொண்டு பருமனாவதும், குரலில் மாற்றம் ஏற்படுவதும், தோல் வறண்டு போவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள். ரத்தசோகை இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவையும் இந்த நோய் உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியத் தடயங்களாகும்.ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தைராய்டு நோயாளிக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக, ஒன்றன்பின் ஒன்றாகவே வெளியில் தெரியவரும். என்றாலும், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடாமல், ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

    பெரியவர்களுக்கு ஏற்படும் குறை தைராய்டு நோய்க்கு `மிக்சிடீமா’ (Myxoedema) என்று பெயர். இதுவே குழந்தைகளுக்கு ஏற்படுமானால், அதைக் `கிரிட்டினிசம்’ (Cretinism) என்று அழைக்கின்றனர்.என்ன காரணம்?அடிப்படையில் உடலில் ஏற்படுகிற அயோடின் சத்துக் குறைபாடுதான் `குறை தைராய்டு நோய்’க்கு முக்கியக் காரணம்.

    இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு இப்படித்தான் தைராய்டு பிரச்னை உருவாகிறது. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்கு தைராக்சின் ஹார்மோனை சுரக்க முடியாது.

    பதிலாக, அது வீங்கிவிடும். அப்போது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று அது காணப்படும். அதற்கு ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre) என்று பெயர். இது ஒரு தன் தடுப்பாற்றல் நோய் (Auto immune disease).

    குடலை பாதிக்கும் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் (Anti bodies) தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு சுரப்பி செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு நோய் உண்டாகிறது.

    பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுதல், தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சையால் அகற்றுதல், முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைதல் போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு நோய் வரலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படும். மன அழுத்தம் கூட இதற்கு ஒரு காரணம்தான். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.

    குழந்தைக்கும் குறை தைராய்டுபிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism) ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித்தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

    பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு `வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டு திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பாதிப்பு ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றும்.

    பள்ளி வயதில் அதன் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q.) பின்தங்கும். முக்கியமாக, கற்றலில் குறைபாடு கள், நினைவாற்றலில் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை
    உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால், குழந்தை எப்போதுமே மந்த புத்தியுடன்தான் இருக்கும். காலத்தோடு கவனித்து, தகுந்த சிகிச்சை பெற்றால், குழந்தைக்கு நோய் குணமாகும்.

    காரணம் என்ன?

    கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன் சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு அயோடின் சத்து கிடைக்காமல், தாயின் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, சில அறிகுறிகள் தென்படும். அதாவது, முடி உதிர்வது, உடல் பருப்பது, தோலில் வறட்சி ஏற்படுவது, நெடுநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் தாய் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், குழந்தைக்குப் பிறவியிலேயே குறை தைராய்டு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    மிகை தைராய்டுதைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கப்படும். இந்த நிலைமைக்கு `மிகை தைராய்டு’ (Hyperthyroidism) என்று பெயர். இந்த நோய் உள்ளவர்களுக்குப் பசி அதிகமாக இருக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும்.

    விரல்கள் நடுங்கும். விரல் நுனிகள் தடித்திருக்கும். உள்ளங்கை வியர்க்கும். அடிக்கடி மலம் போகும். அடிக்கடி சிறுநீர் கழியும். சிறிது கூட பொறுமை இருக்காது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும். கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். பாலுறவில் விருப்பம் குறையும். திருமணமான பெண்களுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும்.

    இந்த நோயை `கிரேவ் நோய்’ (Grave’s disease) என்றும் அழைப்பதுண்டு. இதுவும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிக அளவில் பாதிக்கும். சுமார் இரண்டு சதவிகித பெண்களுக்கு இது ஏற்படுகிறது. முக்கியமாக, 20 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படலாம்.

    அயோடின் உள்ள உணவுகளையோ, மருந்துகளையோ அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு மிகை தைராய்டு நோய் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியில் கட்டிகள் தோன்றினாலும், முன்பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி தோன்றும்போதும் இந்த நோய் ஏற்படுவதுண்டு.

    பரிசோதனைகள்

    ரத்தத்தில் டிரைஅயடோதைரோனின் (T3), தைராக்சின் (T4), தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) ஆகிய மூன்று ஹார்மோன்களின் அளவைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். இத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். `ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

    சிகிச்சை முறைகள்

    அயோடின் குறைவினால் வரும் முன்கழுத்துக்கழலை நோய்க்கு, அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில், `எல்தைராக்சின்’(Eltraxin) மாத்திரையைச் சாப்பிட வேண்டும். மிகை தைராய்டு நோய் உள்ளவர்கள் `நியோமெர்க்கசால்’ (Neomercazole) மாத்திரையையும், `புரோபுரனோலால்’ (Propranolol) மாத்திரையையும் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு, மருந்து தேவைப்படும் கால அளவு ஆகியவற்றை டாக்டர்தான் தீர்மானிக்க வேண்டும்.

    நோயாளியானவர் இந்த மருந்துகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றியிருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதுவே புற்றுநோயாக இருந்தால், அறுவை சிகிச்சையுடன் கதிரியக்கச் சிகிச்சையும் தேவைப்படும். இன்றைய நவீன அணுவியல் மருத்துவத்தில், `ரேடியோ அயோடின் ஐசோடோப்’ சிகிச்சை மூலம் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் உள்ளிட்ட தைராய்டு பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சி அடையாது!


    டாக்டா் கு.கணேசன்



    Last edited by chan; 2nd Jul 2015 at 02:56 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter