Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By chan
  • 2 Post By jv_66
  • 1 Post By sumitra

Snoring- குறட்டை விடுவது ஏன்?


Discussions on "Snoring- குறட்டை விடுவது ஏன்?" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Snoring- குறட்டை விடுவது ஏன்?

    குறட்டை விடுவது ஏன்?

    நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

    விழித்திருக்கும்போது வராத குறட்டை,தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?
    தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.

    அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.

    என்ன காரணம்?
    சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.

    ஆபத்தானதா?
    குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும்.

    அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.

    ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.

    இதில் சில ஆபத்துகளும் உள்ளன. இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.

    தடுக்க என்ன செய்யலாம்?

    தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    மல்லாக்கப் படுக்க வேண்டாம்.

    ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

    உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

    தைராய்டு பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

    மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

    தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sumitra like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Snoring- குறட்டை விடுவது ஏன்?

    Thanks for the details

    chan and sumitra like this.
    Jayanthy





  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Snoring- குறட்டை விடுவது ஏன்?

    Very much valuable information about Snoring!!!!!!!! Thank you!

    chan likes this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குறட்டை விடுவது ஏன்?

    ஆண்களின் குறட்டை

    ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

    நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும்.

    *அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

    *டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.

    *அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

    *சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது.

    *ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும்.

    *இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது.

    குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.





  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குறட்டை விடுவது ஏன்?

    அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியேஏற்படுவதற்கான அறிகுறிகள்:

    அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

    கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.

    (0 – எப்போதும் இல்லை,
    1 – குறைந்த அளவு வாய்ப்பு,
    2 – போதுமான அளவு வாய்ப்பு,
    3 – அதிக அளவு வாய்ப்பு).


    1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?

    அ) “டிவி’ பார்க்கும் போது.

    ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.

    இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.

    ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.

    உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.

    ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

    மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

    இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.

    சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர்.

    உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.
    குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

    சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.

    காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

    ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

    மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்;

    இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.

    தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

    குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள்
    விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும்.

    “ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.

    தேன், குறட்டையை நிறுத்துவதற்கு ஒரு சிறந்த உணவாக உள்ளது. எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல், தேன் தடுக்கின்றது. இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி, தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. மாமிசங்களுக்கு பதிலாக, மீன் சாப்பிடுங்கள். குறட்டையை விளைவிக்கும் பொருளாக, மாமிச இறைச்சி வகைகள் உள்ளன. இத்தகைய சிவப்பு இறைச்சிகளை தவிர்த்து, மீனை உணவில் சேர்த்துக் கொண்டால், குறட்டையை கட்டுப்படுத்த முடியும்

    தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.


  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: குறட்டை விடுவது ஏன்?

    Very useful suggestions you have given for rectifying this snoring problem. thank you!


  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குறட்டை விடுவது ஏன்?

    குறட்டை தானேன்னு நினைக்காதீங்க... - செயல்திறனை பாதிக்கும் உங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு

    'சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்' என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:

    1குறட்டை ஏன் வருகிறது? இது நோய் தானா?

    மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். உடலுக்கு தேவையான ஆக்சிஜனை உள்ளே செலுத்தி, கார்பன் - டை - ஆக்சைடை வெளியேற்றுகிறோம். சுவாசிக்கும்போது, காற்று செல்லும் வழியில் அடைப்பு ஏற்படுவதால், குறட்டை வருகிறது. இது ஒரு நோய் தான்; எந்த சந்தேகமும் வேண்டாம். மூக்கில் சதை வீக்கம், மூக்குத்தண்டு வளைவு, மூக்கை ஒட்டிய, தாடைப் பகுதிகளில் ஏற்படும் தசை வீக்கம் போன்ற காரணங்கள், குறட்டை வர வாய்ப்புள்ளது.

    2. ஆண்களுக்கு மட்டுமே குறட்டை வரும் என்பது சரியா?
    'ஆண்களுக்கு மட்டும் தான் குறட்டை வரும்; பெண்களுக்கு வராது. குண்டாக இருந்தால் தான் குறட்டை வரும்; ஒல்லியாக இருப்பவர்களுக்கு வராது' என்ற, எண்ணம் பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறு. இரண்டு தரப்பினருக்கும் குறட்டை வர வாய்ப்புள்ளது. ஆண் - பெண், குண்டு - ஒல்லி என்ற பாகுபாடெல்லாம் குறட்டைக்கு கிடையாது.

    3. குறட்டை விடுவோருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?
    மூக்கில் காற்று உட்புகும் முன்புற பகுதியில் தசை வீக்கம், நாக்கின் பின் பகுதியில் வீக்கம், நாக்கு அகலமாக இருத்தல், தாடை, தொண்டை பகுதியில் கொழுப்பு சேர்ந்து, தசையில் ஏற்படும் தளர்ச்சியாலும் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. காற்று எளிதாக செல்ல முடியாமல் தடை ஏற்படுவதால், உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால், சிலர், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பதறி அடித்து எழுவர். இது, முற்றிய நிலை.

    4. குறட்டை விடுவோருக்கு எந்த மாதிரியான பாதிப்பு வரும்?
    குறட்டை விடுவோருக்கு ஆரம்பத்தில் லேசான சத்தம் வரும்; அடுத்து, பக்கத்து அறையில் இருப்போரையும் பாதிக்கும் வகையில், சத்தம் அதிகமாகும். அடுத்த நிலையில் தான், மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை வரும். இதுதான், குறட்டை பாதிப்பின் முற்றிய நிலை.
    இதனால், நுரையீரல் பாதிக்கும், இதய நோய்கள் வரும். படிப்படியாக உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைய வாய்ப்புள்ளது.

    5. குறட்டைக்கும், அவர்களின் செயல்திறனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
    குறட்டை விடுவோர், காலையில் எழுந்ததும் சோர்வுடன் காணப்படுவர். சுறுசுறுப்பு இன்றி, மந்தமாக இருப்பர். சிந்தனை திறன் குறையும். இது, செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். திறம்பட செயல்பட முடியாமல், பணியில் பின்னடைவு ஏற்படும்; அலட்சியமாக இருந்தால் வேலை இழப்புக்கும் வழி வகுத்துவிடும். இத்தகையோர், உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி விழுவர். டிரைவர்களாக இருந்தால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான், குறட்டை விடுவோரை, 'பைலட்'களாக எடுப்பதில்லை என, விமானத் துறையில் கொள்கை முடிவே உள்ளது.

    6. குறட்டை சிக்கலுக்கு தீர்வு காண என்ன வழி?
    குறட்டை அளவைக் கண்காணித்து, போதிய அளவில், ஆக்சிஜன் செல்வதை உறுதி செய்ய வேண்டும். 'எண்டோஸ்கோபி' செய்து, மூக்கு, நாக்கு, தொண்டை பகுதிகளில் பரிசோதித்து, எதனால் அடைப்பு ஏற்படுகிறது என, அறிய வேண்டும். நாக்கு அகலமாக, தடிமனாக இருந்தாலும் சிக்கல் வரும். மூக்கு அடைப்பு நீக்கல், மேல் தாடைப் பகுதியை வெளியிலும் நீட்டுதல், நாக்கின் அளவை சிறிதாக்குதல், கழுத்தின் தசைப் பகுதியை இறுகச் செய்யும் அறுவை சிகிச்சைகள் செய்வதால் குறட்டை பிரச்னை தீரும்.

    7. இசைக்கருவிகள் வாசித்தால் குறட்டை போகும் என்கின்றனரே உண்மையா?
    தொண்டையின் சதைப்பகுதியை இறுகச் செய்ய மூச்சுப் பயிற்சி அவசியம். இதற்காக, 'டெக்ரிடோ' என்ற இசைக்கருவி வந்து விட்டது. மூக்கு வழியாக காற்றை இழுத்து, வாய் வழியாக ஊத வேண்டும். பெரிதாக இருந்த இசைக்கருவி, தற்போது சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளது; இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. யோகாவில் இதற்கான
    பிரத்யேக பயிற்சிகள் உள்ளன.

    8. சிக்கலின்றி தூங்க பிரத்யேக இயந்திரம் வந்துள்ளதாக கூறுகின்றனரே?
    உண்மை தான். 'ஸ்லீப்பிங் மெஷின்' என்று பெயர். சூட்கேஸ் வடிவில் இருக்கும்; தானியங்கி வசதியுடன் கூடிய கருவி, 50 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. தடையின்றி தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் என்பதால், நிம்மதியாக தூங்கலாம்.
    இதை பயன்படுத்துவதால், குறட்டை பிரச்னை தீர்ந்து விடாது; தூக்கத்திற்கான தற்காலிக தீர்வு தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்குள், உரிய பயிற்சிகள் செய்து உடல் எடை குறைத்தல், தாடைப் பகுதி தசைகளை இறுகச் செய்தல் போன்ற குறட்டையைப் போக்கும் முயற்சிகள் எடுப்பது அவசியம்.

    9. குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவர் என, கூறுவது சரியா? குறட்டையால் மற்றவர்களுக்கு பாதிப்பு வருமா?
    'குறட்டை விட்டுகிட்டு எப்படி நிம்மதியா தூங்குறான் பாரு...' கிராமங்களில் கூறுவது உண்டு. உண்மையில் குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவதில்லை; மற்றவர்களையும் சரியாக தூங்க விடுவதில்லை. குறட்டை விடுவோரின் அருகில் படுப்போருக்கு, ரத்த அழுத்த பாதிப்பு வரும். இந்த பாதிப்பு நாளடைவில், இதய நோய்கள் வரை கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, உரிய நேரத்தில் அளவான சாப்பாடு, எளிதான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், குறட்டை பிரச்னை வராமல் தப்பலாம்.

    டாக்டர். ஜி.கணநாதன்,
    இயக்குனர், காது, மூக்கு, தொண்டை பிரிவு,
    ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை.



  8. #8
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: குறட்டை விடுவது ஏன்?

    Important and Usefull informations.Thanks for sharing.


  9. #9
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: குறட்டை விடுவது ஏன்?

    Very useful info Letchmy.


  10. #10
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: குறட்டை விடுவது ஏன்?

    Useful Info.........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter