அட்ரினல் சுரப்பி

அட்ரினல் சுரப்பி மனிதனின் இரு சிறுநீரகத்தின் மேல் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது. இவை நாளமிள்ளா சுரப்பியின் ஒரு பகுதியாகும். அளவில் சிறியதாக இருந்தாலும், உடலில் பல ஹார்மோன் தொடர்பான செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது.

அட்ரினல் சுரப்பி நன்றாக இயங்கும்போது உடலின் ஹார்மோன் தொடர்பான செயல்கள் உடலை சீரான இயக்கத்தில் வைக்கின்றன. ஆனால் அட்ரினல் சுரப்பி சரியாக இயங்காதபோது அல்லது பாதிப்படையும்போது அதனோடு தொடர்புடைய உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

அட்ரினலின் செயல்கள்
அட்ரினலின் சுரப்பி ஸ்டிராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது. ஸ்டிராய்டில் அல்டாஸ்டிரோன்,கார்டிஸால் என்ற ஹார்மோனை கொண்டிருக்கிறது.

அல்டோஸ்டிரோன், பொட்டாசியம் மற்றும் சோடியத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கிறது.

கார்டிஸால், அட்ரினல் சுரப்பியின் மெடுல்லா பகுதியில் சுரக்கிறது. இது உடலின் சர்க்கரை அளவு மற்றும் வளர்சிதை மாற்றத்தினை கட்டுப்படுத்துகிறது. மேலும் மனஅழுத்தம் ஏற்படும்போது எதிர்வினை ஆற்ற உதவுகிறது.

அட்ரினலின் சுரப்பியானது அனைத்து நாளமிள்ளா சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டுப்பாட்டில்இயங்குகிறது.

அட்ரினல் சுரப்பி சரியாக இயங்காதபோது ஏற்படும் அறிகுறிகள்:
தலைசுற்றுதல், உடல் அதிகமாக சோர்வடைதல், உயர் இரத்த அழுத்தம்(Hypotension), வியர்த்தல், குமட்டல், வாந்தி, சர்க்கரை அளவு குறைதல், தோலில் கரும்புள்ளிகள் தோன்றுதல், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுதல், உடல் எடை கூடுதல் அல்லது குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இவற்றை இரத்த பரிசோதனை செய்வதன் மூலமாக உறுதிப்படுத்தலாம். இரத்த பரிசோதனையில் அட்ரினல் ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன், க்ளுக்கோஸ், பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் அளவுகளை அறிந்து கொள்வதன் மூலமாகவும், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் உறுதிப்படுத்தலாம்.

உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு அட்ரினலின் சுரப்பி நன்றாக இயங்குவது அவசியம். அதற்கு நாம் உண்ணும் உணவுகளில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற ஊட்டச் சத்து நிறைந்த இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது உடலை நன்றாக செயல்பட வைக்கிறது


Similar Threads: