ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!!!

ஆண்களுக்கும், ஆரோக்கியதிற்கும் என்றுமே ஏழாம் பொருத்தமாகத் தான் இருக்கும். அலுவலகம், வீடு என மாறி மாறி வேலையின் குவியலில், உடல்நலன் மீது அக்கறை கொள்ள மறந்து போகும் ஜீவனாகவே இருந்து வருகின்றனர் ஆண்கள். எத்தனை வேலைபாடுகள் இருப்பினும் உடல்நலம் மீதும் கவனம் செலுத்த வேண்டய அவசியம் இருக்கிறது.

சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத காரணங்களினால், ஆண்களுக்கு பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும். குறிப்பாக, சாதாரண முதுகு வலி, இடுப்பு வலி, கை கால் வலி என நீங்கள் நினைப்பவை பெரிய ஆபத்துகளுக்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம் என்பது தான் உண்மை.

இந்த உண்மையைத் தெரியாமல், பல ஆண்கள் சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் அல்ல தைலத்தை தேய்த்துக் கொண்டு, காலையில் எழுந்து மறுபடியும் அன்றாட வாழ்க்கையை தொடங்குகின்றனர். ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாய அறிகுறிகள் உள்ளன. அவற்றை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...

முதுகு வலி

உங்களது இடுப்பு மற்றும் விலா எலும்புகளுக்கு மத்தியில் ஊசி வைத்து குத்துவது போல வலி ஏற்படும். பலர் இது சாதாரண முதுகு வலி என நினைத்து விட்டுவிடுகின்றனர். ஆனால், இது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான அறிகுறி என யாருக்கும் தெரிவதில்லை. பத்தில் ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனையால் சிறுநீரக கல் கோளாறு ஏற்படுகிறது.

குதிகால் வலி

ஏதோ காலில் குத்துவது போல வலி இருக்கும், நம்மில் பலர் இதன் விபரீதங்களை அறிந்துக் கொள்வது இல்லை. இவ்வாறு குதிகாலில் வலி அடிக்கடி வந்தால், இது முதுகுத்தண்டு தட்டு நெகிழ்தலாக கூட இருக்க நிறைய வாய்ப்புள்ளது. எனவே, சரியான மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது அவசியமாகும்.

வாய் துர்நாற்றம்

நேற்றிரவு சாப்பிட்ட உணவின் காரணமாக தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. பல் துலக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால், சிலருக்கு என்ன செய்தாலும் வாய் துர்நாற்றம் சரியாகாது.

அவர்களும் இதைப்பற்றி அவ்வளவு பெரிதாய் நினைவில் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், தொடரும் வாய் துர்நாற்றம் நுரையீரல், கல்லீரல் நோய்களுக்கான அறிகுறி என்பதை நாம் அறிவதில்லை. ஏன் இது கல்லீரல் செயலிழப்பிற்கான அறிகுறியாக கூட இருக்காலாம்.

வயிற்றுப்போக்கு
பெரும்பாலும் வயிற்றுப்போக்கு உணவு செரிமான கோளரின் காரணமாக தான் நடக்கிறது. ஆயினும் சில சமயம் காரணமின்றி சிலருக்கு வயிற்று போக்கு தொடர்ச்சியாக ஏற்படும், இவை ஆண்களுக்கு தசைகளை சோர்வூட்டும், முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுத்தும் மற்றும் தைராய்டு உருவாகவும் காரணமாக அமையும். எனவே, எந்த உடல் சார்ந்த பிரச்சனைகளும் காரணங்கள் இன்றி ஏற்படுவது போல இருந்தால். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

விறைப்பு தன்மை கோளாறு


இன்று ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது விறைப்பு தன்மை கோளாறு. இதற்கு பலவிதமான மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன, அவை பலனும் அளிக்கிறது. ஆனால், இது ஓர் அபாய நோயிற்கான அறிகுறியும் கூட, பார்க்கின்சன் (Parkinson Disease) இது நரம்பியல் சார்ந்த நோய் ஆகும்.

பொதுவாக நடுவயது ஆண்களுக்கு இது ஏற்படுகிறது. இது நேரடியாக மூளையை பாதிக்கும் நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இதுப்போன்ற கோளாறுகள் ஏற்படும் போது மற்றவர்கள் சொல்லும் மருத்துவத்தை தவிர்த்து, குறித்த மருத்துவரிடம் சென்று ஆலோசித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.

கழுத்து/தோள்பட்டை வலி

அளவில்லாத வேலைப்பாடுகளின் காரணமாக கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்பட காரணம் இருக்கின்றன. ஆயினும், லைம் (lyme) எனப்படும் நோய்க்கும் இது அறிகுறியாக கருதப்படுகிறது. இது ஒரு பாக்டீரியல் தொற்று நோயாகும். இந்த நோய் தோலில் பென்சில் முனை அளவு மட்டுமே வடு போல தோன்றும். இதனால் மூட்டு சார்ந்த கோளாறுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கால் வலி

பொதுவாக அலுவலகத்தில் நீண்ட நேரம் நின்று வேலை செய்தாலோ, அதிக நேரம் நடந்தாலோ கூட ஏற்படும் இந்த கால் வலி. ஆனால் இது இதய கோளாறுகளுக்கும் ஓர் அறிகுறி என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும் முதுகுத்தண்டு கோளாறுகளுக்கும் கூட இது அறிகுறியாக திகழ்வதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Similar Threads: