Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By sumitra

Effects of Hepatitis B - ஹெபடைடிஸ் பி பாதிப்பு குறித்து அறிவ


Discussions on "Effects of Hepatitis B - ஹெபடைடிஸ் பி பாதிப்பு குறித்து அறிவ" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Effects of Hepatitis B - ஹெபடைடிஸ் பி பாதிப்பு குறித்து அறிவ

    ஹெபடைடிஸ் பி பாதிப்பு குறித்து அறிவோம்

    ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என, கல்லீரல் மருத்துவ நிபுணர் ஜாய் வர்க்கீஸ் தெரிவித்தார்.
    கல்லீரல் பாதிப்பு குறித்த மருத்துவ மாநாடு தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர் ஜாய் வர்க்கீஸ் கூறியது:


    கல்லீரல் பாதிப்புக்கு குடிப்பழக்கம், கல்லீரலில் கொழுப்புப் படிதல், ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் உள்ளிட்டவை காரணமாகின்றன.

    இதில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே கல்லீரல் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள் தெரியவரும். ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் ரத்தம், உடலுறவு ஆகியவற்றின் மூலமாகப் பரவுகிறது.

    மேலும் இந்த வைரஸ்கள் கருவுற்ற தாய்க்கு இருந்தால் அது பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைப் பிறந்த பின்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க தடுப்பு மருந்து உள்ளது. தற்போது இந்த தடுப்பு மருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

    எனவே அவர்கள் ஹெபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் உள்ளதா எனப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    இந்தப் பரிசோதனைக்கு கட்டணம் குறைவு, அதோடு இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க எல்லா வயதினரும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம்.

    மேலும் இந்த வைரஸ் ரத்தக் காயங்கள் மூலம் பரவும் என்பதால் ஒருவர் பயன்படுத்திய சீப்பு, பிளேடு, பல்துலக்கி உள்ளிட்டவற்றை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.

    கல்லீரல் பாதிப்பைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள், அதிக கொழுப்பு உள்ளவர்கள், மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


    மேலும் பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்களை உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    Similar Threads:

    Sponsored Links
    sumitra and kiruthividhya like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Effects of Hepatitis B - ஹெபடைடிஸ் பி பாதிப்பு குறித்து அறிவ

    Thank you for sharing such an important information.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter