Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

கல்லீரல் - Liver


Discussions on "கல்லீரல் - Liver" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

    நமது கல்லீரல் நமது உடலின் முக்கியமான அங்கங்களில் ஒன்று. நமது உடலில் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு இது. இதன் எடை 1.5 கிலோ கிராம். நமது உடலுக்குத் தேவையான கனிமப் பொருட்கள், வைட்டமின்கள் இவற்றை சேமிப்பதுடன், தேவைப்படும் போது புது புரதப் பொருட்களையும் உற்பத்திப் பண்ணுகிறது.

    நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்வதற்கு வேண்டிய பித்தநீர் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் உள்ள நோயைக் குணப்படுத்த தேவையான பொருட்களை உடைத்து நம் உடல் அவற்றை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. இரத்தம் உறையவும் கல்லீரல் உதவுகிறது. கல்லீரலைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவும் முடியும்.

    கல்லீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது என்று பார்க்கலாம்:

    மக்னீஷியம், மாவுச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடலில் சேரும் நஞ்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம்.

    அளவுக்கு அதிகமாக மது அருந்துவது 3 விதமான நோய்களை வரவழைக்கும்.

    1. ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ், (alcoholic hepatitis)

    2. ஆல்கஹாலிக் சிர்ரோசிஸ் ( alcoholic cirrhosis)
    எனப்படும் ஈரல் நோய்,

    3. கொழுப்பு கல்லீரல் அல்லது ஃபேட்டி லிவர் (fatty liver).

    மது அருந்துவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மது அருந்தாமலே இருப்பது உத்தமம்.

    புத்துணர்ச்சி கொடுக்கும் (recreational drugs) மருந்துகள் கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மருத்துவர்கள் கொடுக்கும் சில மருந்துகளும் நச்சுப் பொருள் கலந்ததாக இருக்கக்கூடும். மருத்துவர் குறிப்பிடும் அளவுக்கு மேல் இவைகளை சாப்பிட வேண்டாம்.

    ஆர்கானிக் எனப்படும் உயிர்ம உணவுகள் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidants) நிறைந்து இருப்பதால், இவை கல்லீரலை பாதுகாத்து, நச்சுப் பொருள்களை வெளியேற்றி, சுத்தப்படுத்தவும் செய்கின்றன.

    வண்ணப் பூச்சுக்கள், பூச்சி மருந்துகள் முதலியவற்றில் இருந்து வரும் நச்சு புகைகள், தூசுப் படலங்கள் நுரையீரலுக்குள் மிகச்சிறிய இரத்த நாளங்கள் வழியாக சென்று கல்லீரலை அடையக்கூடும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படும். இந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புக் கவசம் அணிவது நல்லது.

    உடற்பயிற்சி மிக அவசியம்.
    ஹெபடைடிஸ் A மற்றும் B தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுவது மிக இன்றியமையாதது.

    கல்லீரலுக்கு நன்மை பயக்கும் சில உணவு வகைகள்:

    பூண்டு: கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

    பச்சை காய்கறிகள்: பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது.

    மஞ்சள்: பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

    எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.

    பீட்ரூட், காரட்: நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.

    இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்


    Sponsored Links
    babyarasu22 likes this.

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் அழற்சி (ஹெப்படைடிஸ்) என்றால் என்ன?

    கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலின் வீக்கமாகும். கல்லீரல் அழற்சி, கல்லீரலின் நல்ல முறையில் இயங்கும் திறனைப் பாதிக்கும். கல்லீரல் என்பது உடல் உணவை சமிபாடடையச் செய்ய உதவும் ஒரு உறுப்பு ஆகும். இது கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்களையும் அகற்றி, சக்தியைச் சேமித்து வைக்கும். கல்லீரல் அழற்சி மிகவும் அடிக்கடி, ஒரு வைரசினால் ஏற்படுகிறது.

    பல்வேறு வகையான கல்லீரல் அழற்சி வைரசுக்கள் இருக்கின்றன. இந்தப் பக்கம், பிள்ளைகளைப் பாதிக்கக்கூடிய மிகவும் சாதாரண வகையான கல்லீரல் அழற்சி ஏ பற்றியது.
    கல்லீரல் அழற்சி ஏ க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

    இளம் பிள்ளைகளில், பெரும்பாலும் கல்லீரல் அழற்சி ஏ தொற்றுநோய் வீரியம் குறைந்தது. அவை எந்த அடையாளங்களையோ அறிகுறிகளையோ காண்பிக்காமலிருக்கலாம். வளர்ந்த பிள்ளைகள் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் காண்பிக்கலாம்:
    · உச்ச அளவிலான களைப்பு
    · காய்ச்சல், தலைவலி, மற்றும் பலவீனம் போன்ற காய்ச்சலுக்கான அறிகுறிகள்
    · குமட்டல் மற்றும் வாந்தி
    · அடிவயிற்றில் அசௌகரியம்
    · உங்கள் கல்லீரல் பகுதியில், கீழ் விலா எலும்பின் கீழ் வலது பக்கத்தில் வலி
    · பசியின்மை
    · சிறுநீர் கடும் நிறத்தில்
    · தசை வலி
    · அரிப்பு
    · தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சட் காமாலை)
    கல்லீரல் அழற்சி ஏ நோய்க்கான காரணங்கள்: மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் பானம்

    பெரும்பாலும் ஓருவர், உணவுடன் அல்லது பானத்துடன் சிறிய அளவு மலத்தை விழுங்கும்போது அவருக்குக் கல்லீரல் அழற்சி ஏ நோய் ஏற்படுகிறது. அதாவது, மிகவும் அடிக்கடி, மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் அல்லது பாலைக் குடிக்கும்போது, அல்லது சரியான முறையில் கழுவப்படாத உணவுகளை உண்ணும்போது இது ஏற்படுகிறது. சமைக்கப்படாத ஷெல்ஃபிஷ், பழங்கள் அல்லது பச்சைக் காய்கறிகள் போன்ற உணவுகள் இதற்கு மிகவும் சாதாரணமான ஊற்றுமூலங்கள். பின்பு கல்லீரல் அழற்சி ஏ வைரஸ் கல்லீரலில் தொற்றுநோயை உண்டாக்கும். பிள்ளைகள் கல்லீரல் அழற்சி ஏ வைரசினால் தொற்றுநோய்க்குள்ளாகும் சில பொதுவான வழிகள் பின்வருமாறு:

    · டயபர்கள் மாற்றிய பின்னர் அல்லது கழிவு அறைக்குச் சென்றபின்னர் தங்கள் கைகளை நன்கு கழுவாத ஒருவர், உங்கள் பிள்ளை உண்ணும் உணவைக் கையாளும்போது

    · ஐஸ் கட்டிகள் உட்பட, மாசுபடுத்தப்பட்ட நீரைப் பருகுவதால்

    · மாசுபடுத்தப்பட்ட தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட கடல் உணவுகளை உண்பதால்.

    உடற் திரவங்களை ,தொற்று நோயுள்ள ஒருவருடன் பரிமாற்றம் செய்து கொள்வதால்

    babyarasu22 likes this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரல் அழற்சி ஏ நோய்க்கான சிகிச்சைகள்: படுக்கை ஓய்வு மற்றும் நீராகரங்கள்

    கல்லீரல் அழற்சி ஏ நோயைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் இல்லை. உங்கள் பிள்ளையை வீட்டில் எப்படிப் பராமரிக்கவேண்டும் என உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை கூறுவார். உங்கள் பிள்ளை களைப்பு மற்றும் பெலவீனமாக இருந்தால் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கட்டும். உடல் நீர் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக, விசேஷமாக உங்கள் பிள்ளை வாந்தியெடுத்தால், சிறிய அளவில் தண்ணீர் பல முறைகள் கொடுக்கவும். ஓய்வு மற்றும் உடல் நீரேற்றம் என்பனவற்றால், உங்கள் பிள்ளையின் உடல் வைரசைத் தானாகவே அகற்றிவிடும். பெரும்பாலான பிள்ளைகள், கல்லீரலுக்கு நிரந்தரப் பாதிப்பில்லாமல் 1 அல்லது 2 மாதங்களில் நிவாரணமடைந்துவிடுவார்கள்.

    கல்லீரல் அழற்சி பி போன்ற வேறு வகை வைரல் கல்லீரல் அழற்சியினால் ஒரு நீடிக்கும் (தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்ற) தொற்றுநோய் விருத்திசெய்யப்படும். இவற்றைத் தீர்க்கமுடியாது.
    தடுப்பு மருந்து மற்றும் தகுந்த சுகாதாரத்தினால் கல்லீரல் அழற்சி ஏ நோயை தடுத்தல்

    கல்லீரல் அழற்சி ஏ மற்றும் கல்லீரல் அழற்சி பி தொற்றுநோயைத் தடுப்பதற்காக ஒரு தடுப்பு மருந்து தற்போது கிடைக்கிறது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களுக்கு நோயெதிர்ப்புத் திறன் அளிக்கப்படவேண்டும் என உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்யலாம். பிள்ளைகளைவிட பெரியவர்களே கல்லீரல் அழற்சி ஏ நோயினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். கைகளை நன்கு கழுவுதல் மற்றும் உணவு உண்ணும் பாத்திரங்களை கொதிக்க வைத்தல் என்பனவும் வைரஸ் பரவுவதை தடுக்க உதவும்.

    இந்த நோய் அதிகம் பரவியுள்ள ஒரு நாட்டுக்கு நீங்கள் போவதாகத் திட்டமிட்டால், உங்கள் குடும்பத்தினரை நோய்த் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்படி உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்யலாம்.
    முக்கிய குறிப்புகள்

    கல்லீரல் அழற்சி ஈரல் நல்ல முறையில் இயங்குவதைத் தடுக்கும்.

    கல்லீரல் அழற்சி ஏ வைரஸ் தான் பிள்ளைகளில் மிகவும் சாதாரண வகை. சிகிச்சை செய்யப்படாத கல்லீரல் அழற்சி பி ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தும்

    காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் உங்கள் கல்லீரல் பகுதியில், கீழ் விலா எலும்பின் கீழ் வலது பக்கத்தில் வலி என்பன இதன் அடையாளங்களாகும்.

    மாசுபடுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் அல்லது பருகுவதால் பிள்ளைகளுக்கு கல்லீரல் அழற்சி ஏ நோய் உண்டாகலாம்.

    ஒரு மருத்துவரின் பராமரிப்பின் கீழ், உங்கள் பிள்ளையின் கல்லீரல், 1 முதல் 2 மாதங்களில் நீண்ட காலப் பாதிப்பு ஏதுமில்லாமல், நிவாரணமடையலாம்.

    தகுந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம், உங்கள் குடும்பத்தை கல்லீரல் அழற்சி ஏ மற்றும் கல்லீரல் அழற்சி பி நோயிலிருந்து பாதுகாக்கலாம்.


  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்..!

    நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பலப்பல! சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.

    அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. கல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில எளிமையான வழிகளின் மூலமே குணப்படுத்தி விடலாம். அவைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

    ஆப்பிள் சீடர் வினிகர்

    ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

    டான்டேலியன் ரூட் தேநீர்

    டான்டேலியன் வேரில் தயாரிக்கப்பட்ட டீயை தினமும் இரு முறை குடித்து வந்தால், கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். கொதிக்கும் நீரில் இந்த வேர்களைச் சிறிது சேர்த்து, அந்த நீரை அருந்துவதும் நல்லது.

    நெல்லிக்காய்

    வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

    அதிமதுரம்

    சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

    மஞ்சள்

    தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

    ஆளி விதைகள்

    இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பப்பாளிப் பழம்

    கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.

    கீரை, கேரட் ஜூஸ்

    அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.

    சிகரெட், ஆல்கஹால் வேண்டாம்

    மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

    அவகேடோ மற்றும் வால்நட்ஸ்

    கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்

    ஆப்பிள், காய்கறிகள்

    கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

    ஃப்ளூரைடுக்கு 'நோ'

    ஃப்ளூரைடு கலக்காத நீரை தினமும் 12 டம்ளர் வரை அருந்துவது, கல்லீரலுக்கு நல்லது.

    உடற்பயிற்சி

    தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    க்ரீன் டீ

    இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

    பால் நெருஞ்சில் விதை (Milk Thistle Seeds)

    பால் நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது.

    babyarasu22 likes this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

    உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

    இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும்.

    வாய் துர்நாற்றம்

    கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

    கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

    கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

    செரிமானப் பிரச்சனை

    கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

    வெளுத்த சருமம்

    கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

    அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

    உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

    மஞ்சள் நிற கண்கள்

    கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

    வாய் கசப்பு

    கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

    வயிறு வீக்கம்

    கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.


  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரல் அழற்சி

    கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினால் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறிகளுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இரு வகையான கல்லீரல் அழற்சி நோய் உண்டு: குறைந்த கால அளவினது மற்றும் நீடித்தது.

    ஆறு மாதங்கள் வரை இருப்பது குறைந்த கால அளவினது.
    அதற்கு மேலுல் இருப்பது நீடித்த வகையாகும்.

    கல்லீரல் அழற்சி நுண்ணுயிரிகள் எனப்படும் ஒரு வைரசுகளின் தொகுதியால் இது ஏற்படுகிறது என்றாலும், நச்சுப் பொருட்களினாலும் (முக்கியமாக மதுவினாலும், சிலவகை மருந்துகளினாலும், சில தொழிற்சாலை கரைப்பான்களாலும், தொழிற்சாலைகளினாலும் கூட), பிற தொற்று நோய்களாலும், தம்மைத்தாமே கட்டுப்படுத்திக் கொள்ளும் நோய்களாலும் ஏற்படுகிறது.
    கல்லீரல் அழற்சி நோய்களின் வகைகள்: பொதுவான கல்லீரல் அழற்சி நோய்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    கல்லீரல் அழற்சிநோய் a:

    இது கல்லீரல் அழற்சி நுண்ணுயிரி a யால் உண்டாகிறது. நுண்ணுயிரியினால் உண்டாகும் கல்லீரல் அழற்சியில் இதுவே பரவலான வகையாகும். இது பொதுவாக சுகாதாரமற்ற இடங்களிலும் சாக்கடை வசதி குறைபாடு உள்ள இடங்களிலும் ஏற்படும். இந்நோய் பெரும்பாலும் வாய்வழிக் கழிவுகளினாலும் மலக் கழிவுகளினாலும் பரவுகிறது. இது பொதுவாகக் குறைந்த கால அளவினதாகும். இதன் அறிகுறிகள் மூன்று மாதத்திற்குள் மறைந்துவிடும். அறிகுறிகளை நீக்கும் இபுபுரூஃபன் போன்ற வலிகுறைப்பான்களைக் கொடுப்பதைத் தவிர இந்த a வகை கல்லீரல் அழற்சிக்கு வேறு மருத்துவம் எதுவும் இல்லை. இந்நோயைத் தடுக்கும் தடுப்பூசி உண்டு.

    இந்நுண்ணுயிரிகள் அதிகமாக இருக்கும் இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, தொலை கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் ஒருவருக்கு இத்தடுப்பூசி பரிந்துரை செய்யப்படுகிறது.

    கல்லீரல் அழற்சிநோய் b:

    இது கல்லீரல் அழற்சி நோய் நுண்ணுயிரி b யால் ஏற்படுகிறது. இது இரத்தத்திலும், இரத்த நீர்மங்களான விந்து, பெண்ணுறுப்புக் கசிவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. எனவே பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது போதைப் பொருள் செலுத்தும் ஊசி ஆகியவைகளால் பரவுகிறது. போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களிடம் இது பரவலாகக் காணப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாகவும், சீனா, மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியா, சகாராவை ஒட்டிய ஆப்பிரிக்க பகுதிகள் போன்ற உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது.

    இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான நோயாளிகள் இந்த வகையான நுண்ணுயிர்களை எதிர்த்து நின்று இரண்டொரு மாதங்களில் முற்றிலுமாகக் குணமடைய முடியும். இந்த நோயுடன் வாழ்வது சுகமாக இல்லாவிட்டாலும் இது பெரும்பாலும் நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    இருப்பினும் ஒரு சிலருக்கு இது நீடித்த நோயாக உருவாகும் வாய்ப்புள்ளது. இது குறுகிய காலக் கல்லீரல் அழற்சி— b என்று அழைக்கப்படுகிறது. இதற்குத் தடுப்பூசி உண்டு. போதைப் பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவோருக்கு இந்நோய் தாக்கும் ஆபத்து உள்ளதால் இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.


  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரல்அழற்சிநோய்—C:

    இதுகல்லீரல் அழற்சி நுண்ணுயிரி C யால் ஏற்படுகிறது. இது நோயால்பாதிக்கப்படவரின் இரத்தத்திலும் சிறுபான்மை எச்சில், விந்து, பெண்ணுறுப்புக்கசிவுகளிலும் காணப்படுகிறது. இந்நுண்ணுயிரி குறிப்பாக இரத்தத்திலேயே அடர்த்தியாகக்காணப்படுவதால் பெரும்பாலும் இரத்தத் தொடர்பினாலேயே தொற்றுகிறது. கல்லீரல் அழற்சி நோய்க்குவெளிப்படையான அறிகுறிகள் பெரும்பாலும் தென்படுவதில்லை.

    அல்லது சளிகாய்ச்சலுக்கு(ஃபுளூ) உரிய அறிகுறிகள் எனத் தவறாக எண்ணக்கூடிய அறிகுறிகள் தோன்றுவதில்லை. இதனால்பெருவாரியான மக்கள் இந்நோயை அறிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பாலான மக்கள் இந்தநுண்ணுயிரிகளை எதிர்த்து நின்று நோயில் இருந்து விடுபட்டு விடுகிறார்கள்.

    மற்றவர்களின் உடலில் இந் நுண்ணுயிரி பல ஆண்டுகள் நிலைத்து வாழலாம். இதுவே நாட்பட்டகல்லீரல் அழற்சி
    C என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நுண்ணுயிரி எதிர்ப்புமருந்துகளால் சிகிச்சை செய்யலாம். ஆனால் சில எதிர் விளைவுகள் தவிர்க்க முடியாதவை.கல்லீரல் அழற்சி C வகைக்குத் தற்போது எவ்விதத் தடுப்பு மருந்துகளும் இல்லை.

    மதுவால்உண்டாகும்கல்லீரல்அழற்சி

    தொடர்ந்துநீண்ட நாட்களாக மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அழற்சி உண்டாகலாம். இதுமதுவால் ஏற்படும் கல்லீரல் அழற்சி எனப்படும். அதிகமாக மது அருந்துபவர்களுக்குஓரளவிற்கு மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.இதற்கு எந்த அறிகுறியும் இருக்காது. பெரும்பாலும் இரத்தப் பரிசோதனையில்கண்டறியப்படும். தொடர்ந்து மது அருந்தினால் ஈரல்நோய் ஏற்பட்டு கல்லீரல்செயலிழக்கக் கூடும்.
    அரியவகைகல்லீரல்அழற்சிகள்:

    கல்லீரல்அழற்சி D:

    கல்லீரல் அழற்சி D வைரசால்உண்டாகிறது. இது ஏற்கெனவே கல்லீரல் அழற்சிநோய் B-யால்பாதிக்கப்பட்டவர்களுக்கே ஏற்படுகிறது (உங்கள் உடலில் கல்லீரல் அழற்சி B வைரஸ்இருந்தால் மட்டுமேஇது நிலைத்திருக்க முடியும்).

    கல்லீரல்அழற்சி E:
    கல்லீரல்அழற்சி E வைரசால் ஏற்படும் அரிய வகை நோயான இது கடுமையற்ற குறுகியகாலத் தொற்றாகும். இதுவும் வாய் மற்றும் மலக் கழிவுகளால் பரவுகிறது. ஒருவரிடம்இருந்து இன்னொருவருக்குப் பரவுவது மிகவும் அபூர்வமாகும்.
    தன்தடுப்பாற்றல்கல்லீரல்அழற்சி( Autoimmunehepatitis):

    இது நீடித்து நிலைக்கும் அரிய வகை கல்லீரல் அழற்சி நோய்ஆகும். இரத்த வெள்ளணுக்கள் கல்லீரலைத் தாக்கி நீடித்த அழற்சியையும் சிதைவையும்ஏற்படுத்துகின்றன. இது கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளைக்குக்கொண்டு செல்லும். இந்த எதிர்வினைக்கான காரணம் தெரியவில்லை.

    களைப்பு
    , வயிற்றுவலி, மூட்டுவலி, மஞ்சள்காமாலை (தோல் மற்றும் விழிவெண்திரை மஞ்சளாதல்), ஈரல்நோய்போன்றவை இதன் நோய்க்குறிகள். நோய்த்தடுப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி அழற்சியைக்குறைக்க மருந்துகள் அளிப்பதே தன்தடுப்பாற்றல் கல்லீரல் அழற்சிக்கான சிகிச்சை. பலவாரங்கள் ஊக்கியங்கள் (பிரட்னிசோலோன்) உட்கொண்டு வீக்கத்தைக் குறைத்துப் பின்அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

    Last edited by chan; 1st Mar 2015 at 12:51 PM.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரலை காப்போம்

    மனித உடலின் முக்கிய உறுப்பு கல்லீரல். அதன் செயல்பாடுகள் குறித்தும், அதை எவ்வாறு காக்க வேண்டும் என்பது பற்றியும் டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விளக்குகிறார். கல்லீரல் தான் நமது உடலின் பெரிய உள் உறுப்பு. சுமார் 3 முதல் 3.5 பவுண்ட் எடை கொண்டது. இந்த கல்லீரலின் வேலை தான் என்ன?

    * தன்னுள் பித்தப்பையை வைத்துள்ளது.

    * கல்லீரலும் மற்ற ஜீரண உறுப்புகளும் இணைந்து செரிமானம், சத்துக்களை உள்ளிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றது.

    * கல்லீரல் உணவுப் பாதையிலிருந்து வரும் ரத்தம் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு முன்பு வடிகட்டி நச்சுப் பொருட்களை நீக்கி ரத்தத்தை தூய்மை செய்கின்றது.

    மருந்து உட்கொள்ளும் பொழுது அதிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குகிறது. பித்த நீரை சுரக்கின்றது. இதுவே கொழுப்பினை செரித்து வைட்டமின் ஏ,டி,ஈ.கே இவைகளை எடுத்துக் கொள்ள உதவுகின்றது. உடலில் வைட்டமின், தாது உப்புக்கள், சர்க்கரை இல்லாமை ஏற்படாதிருக்க அவற்றை சேகரித்து வைத்துக் கொள்கின்றது.

    கல்லீரலின் இத்தகைய பங்கு இல்லாமல் உடலில் எந்த செயல்பாடும் நிகழ முடியாது. இந்த கல்லீரல் அதிகமாக பாதிக்கப்படுவதன் முதல் காரணம் குடிப் பழக்கமே. கல்லீரல் பாதிப்பின் பொதுவான அறிகுறியே ‘மஞ்ச காமாலை’தான். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் சோர்வு, எடை குறைவு, வாந்தி, வயிற்றுல் பிரட்டல் மற்றும் மஞ்சள் காமாலை ஏற்படும்.

    பொதுவில் கல்லீரல் பாதிப்பு என்பது, அது 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்படும் போதே வெளியே தெரியும். நமது உடலில், கல்லீரல் மட்டுமே பாதிப்பு ஏற்படும் திசுக்களை மாற்ற வல்லது. ஆயினும் அதற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டால் அது இயலாததாகி விடும். கல்லீரலின் வேலை ஒரு தொழிற்சாலையின் வேலையினைப் போன்றது.

    * பித்த நீர் சுரப்பினால் உணவு செரிமானம் நிகழ்கின்றது.

    * அதிக சர்க்கரையினை சேமித்து தேவைப்படும் பொழுது கொடுக்கின்றது.

    * ரத்தம் உறைவதற்கான சில பொருட்களை உற்பத்தி செய்கின்றது.

    * புரதம் உருவாக்குகின்றது. நோய் எதிர்ப்பு புரதத்தினை உருவாக்குகின்றது.

    * இரும்பு சத்தை உருவாக்குகின்றது. இது சிகப்பணு உற்பத்திக்கு இன்றியமையாதது.

    * தேவையற்றவைகளை யூரியாவாக மாற்றி சிறுநீரில் வெளியேற்றுகின்றது.

    * மருந்துகளை உடல் எடுத்துக் கொள்ள உதவுகின்றது. ‘சிரோஸிஸ்’ எனப்படும் கல்லீரல் நோய் பாதிப்பில் நல்ல திசுக்கள் தடித்த திசுக்களாக மாரி கல்லீரலால் வேலை செய்ய முடியாமல் ஆகிவிடுகின்றது.

    * கல்லீரலின் திசுக்கள் வீங்கலாம்.

    * ஹெப்படைட்டிஸ் ‘ஏ’ எனப்படும் வைரஸ் கிருமியால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் சுகாதாரமின்மை காரணமாகவே ஏற்படுகின்றது.

    கழிவுப் பொருள் சுகாதாரமின்மை காரணமாக உணவுடன் கலக்கும் பொழுதே இத்தாக்குதல் ஏற்படுகின்றது. கைகளை சுத்தமாய் கழுவுவது குறிப்பாக உணவு தயாரிக்கும் பொழுது கைகளை சுத்தமாய் கழுவுவது இந்த பாதிப்பினைத் தடுக்கும். இதற்கான ‘ஏ’ வாக்சின் (தடுப்பு ஊசி) எடுத்துக் கொள்வதன் மூலம் இதனைத் தவிர்த்து விடலாம்.

    ஹெப்டைட்டிஸ் ‘பி’ எனப்படும் வைரஸ் தாக்குதல் சுகாதரமில்லாத ஊசிகள், ரத்தம், தவறான உடல் உறவு இவற்றின் மூலம் ஏற்படுகின்றது. இந்த கிருமி கல்லீரல் புற்றுநோய், கல் லீரலை செயலிழக்கச் செய்வது போன்ற தாக்குதல்களை கொண்டு வந்து விடும். இதற்கான ‘பி’ வாக்சின் எடுத்துக் கொள்வதே இதனைத் தவிர்க்கும் முறையாகும்.

    ஹெப்படைட்டிஸ் ‘சி’ எனப்படும் வைரஸ் தாக்குதலும் பாதிக்கப்பட்ட ரத்தம், ஊசி போன்றவற்றால் ஏற்படுவது. சிரோஸில் மற்றும் கல்லீரல் புற்று நோய் வரை இந்த வைரஸ் கிருமியால் ஏற்படும். டி.ஈ. வைரஸ் கிருமிகளும் இது போல் உள்ளன.

    மேலும் சில வைரஸ் கிருமிகள், மது இல்லாமலும் கொழுப்பு மிகுந்த கல்லீரல், அதிக இரும்பு சத்தால் ஏற்படும் பாதிப்பு என சில கல்லீரல் தாக்குதல்களும் உள்ளன. இருதய நோயாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். பல பாதிப்புகள் சிகிச்சை, கவனிப்பின் மூலம் தீர்வு பெறக் கூடியவை. சில பரம்பரை காரணமாக ஏற்படக் கூடியவை.

    சின்ன காயத்தால் அதிக ரத்தப் போக்கு, உடல் அரிப்பு, ஆணுக்கு ஏற்படும் பருத்த மார்பகம், ஆண்மை குறைவு, குழப்பம், தசை தேய்மானம் போன்றவையும் கல்லீரல் பாதிப்பினால் ஏற்படக் கூடியவையே, கல்லீரலின் அதிக பாதிப்பிற்குப் பிறகே அறிகுறிகள் தெரியும்.

    எனவே அதிக சோர்வு, காரணமின்றி எடை குறைவு ஆகியவை இருந்தாலே கல்லீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுபோல் அடிக்கடி ஜுரம், வாந்தி, வயிற்று வலி இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    கல்லீரல் பரிசோதனைகள்:

    * பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் பிரச்சினைகள்
    * மருத்துவரால் உடல் பரிசோதனை
    * கல்லீரலுக்கான இரத்தப் பரிசோதனை
    * தேவைப்பட்டால் ஸ்கேன்
    * கல்லீரல் பயாபசி போன்றவைகள் ஆகும்.

    கல்லீரல் பாதிப்பிற்கு மிக நல்ல சிகிச்சைகள் நவீன மருத்துவத்தில் உள்ளன. எனினும் வருமுன் தடுப்பதே தகுந்த தீர்வு ஆகும். மது, புகை பழக்கமின்றி இருப்பதும், தடுப்பு ஊசிகளை எடுத்துக் கொள்வதும், முறையான உணவுப் பழக்கத்துடன் இருப்பதுதான்
    கல்லீரலை காக்கும் வழிகள்.

    மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது

    * வயிற்று வலி
    * பசியின்மை
    * சோர்வு
    * வயிற்றுப் பிரட்டல்
    * வயிற்றுப் போக்கு போன்றவை முதல் அறிகுறிகளாகக் காட்டும்.

    பாதிப்பு கூடும் பொழுது

    * உடல், கண்ணில் மஞ்சள் நிறம்.
    * கால், கணுக்கால், பாதம் வீக்கம்
    * வயிற்றில் வீக்கம்
    * அதிக ஜுரம், உடல் நடுக்கம்
    * முடி அதிகமாய் கொட்டி விடுதல்
    * வளைந்த கால், கை, நகங்கள்
    * அதிக எடை குறைவு
    * வாந்தியில் ரத்தம்
    * வெளிப்போக்கில் ரத்தம் போன்றவை இருக்கும்.

    அவசர மருத்துவ சிகிச்சை இதற்குத் தேவை. குடிப்பழக்கத்தாலும், அதிக எடையினால் கொழுத்த கல்லீரல் உருவாகின்றது. இதற்கான தீர்வு அவரவர் கையில்தான் இருக்கின்றது.




  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கல்லீரல் - Liver

    உணவு முறையின் மூலமாக கல்லீரலை பாதுகாக்க முடியும்

    * பாதாம்: இதில் உள்ள புரதம், நார்சத்து, ரிபோப்ளேவின், மக்னீயம், இரும்பு இவை மிகவும் நல்லது. மற்ற கொட்டை வகைகளும் சிறந்ததே. தேங்காய் தவிர்ப்பது நல்லது. கொட்டை வகைகளை 10&15 உப்பில்லாமல் சாப்பிடுவது நல்லது.

    * ஓட்ஸ்: அதிக கரையும் நார்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் நிறைந்த வைட்டமின்களும், தாது உப்புக்களும் கொண்ட இந்த உணவு கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.

    * சோயா: நல்ல புரதம் உடையது. கொலஸ்டிரால் இல்லாதது. நார்சத்து உடையது. மிக நல்ல உணவு.

    * கீரின் டீ அல்லது பால் இல்லாத டீ 1 முதல் 2 கப் நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    * கொழுப்பில்லாத தயிர், பால், சீஸ் அனைத்துமே நல்லது.

    * பசலை கீரை, வெள்ளை பூசணி, ராஜ்மா, பச்சை காலிப்ளவர் மிகவும் நல்லது

    * காய்கறி ஜூஸ் குறிப்பாக தக்காளி, காரட், இஞ்சி போன்றவை நல்லது.

    * பூண்டில் உள்ள அசிலின், செலினியம் என்ற இயற்கை பொருட்கள் கல்லீரல் என் ஸைம்கள் உருவாக உதவுகின்றன. உடலில் நச்சுப் பொருட்களை நீக்க பெரிதும் உதவுகின்றன.

    * திராட்சைப் பழம்

    * பீட்ருட், காரட்

    * ஆப்பிள்

    * ஆலிவ் எண்ணெய்

    * எலுமிச்சை

    * காபேஜ்

    * மஞ்சள்

    * வால் நட்ஸ்

    * 2 முதல் 3 லிட்டர் தண்ணீர்





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter