Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

கல்லீரல் - Liver


Discussions on "கல்லீரல் - Liver" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கல்லீரல் - Liver

    கல்லீரல்

    உடல் என்பது அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட பொருளாகும். பல கோடி நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாளங்கள் என பிண்ணிப் பிணையப்பட்டதே மனித உடலாகும். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் தமது பணியைச் சிறப்பாக செய்வதுடன், பிற உறுப்புகளுடன் இணைந்து முழு உடலையும் செயல்படுத்தும் தன்மை மிகவும் சிறப்பானதாகும்.

    ஆனால் இன்று பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடலானது பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. இந்த உறுப்புகளின் செயல்பாடுகளையும், அதனால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் கல்லீரல் பற்றி அறிந்து கொள்வோம்.

    கல்லீரல்

    கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 1/4 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது.

    கல்லீரல் செல்களினால் (Hepatic cells) ஆனது. பல இரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம்.

    நாம் உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
    வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை உற்பத்தி செய்வது கலலீரல்தான்.

    பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் அங்கங்கே படிந்து இரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

    இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.
    இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.




    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and babyarasu22 like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    பித்த நீர்

    பித்த நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச் சுவையுடைய இதில் மூன்று வகையான பொருட்கள் உள்ளன.

    தண்ணீர் (Water)
    பித்த உப்பு (Bile salt)
    பித்த நிறமிகள் (Bile pigments)


    பித்த நிறமிகள்தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின் தாக்கம் இருக்கும்.
    பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப்பதற்கும் (Absorption) உதவுகிறது.

    பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ச்,ஞீ,ஞு – ஓ மற்றும் கால்சியம், செரித்தலுக்கும் உதவுகிறது.
    பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உப்புகள்தான்.

    உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்குப் பித்த நீர் உதவுகிறது.

    உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்குச் சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது. உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை நாம் சாப்பிடும்போது அது குளுக்கோஸ் (Glucose) ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் தேவைக்கு அதிகமாக உள்ளபோது சர்க்கரை நோய் வர வாய்புள்ளது. எனவே தேவைக்கு அதிகமான உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

    பிளாஸ்மா புரதங்களை தயாரிக்கிறது.
    உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறது. இரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

    இரும்புச் சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது.

    நோய்த் தொற்றுதலை எதிர்த்துப் போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

    இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கும் கல்லீரல் சில காரணங்களால் பாதிக்கப்படுகிறது.

    jv_66 and babyarasu22 like this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் வீக்கம் உருவாக காரணங்கள்

    முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு அருந்துவது.

    மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது புகை பிடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் வீக்கமடைகிறது. மேலும் மன அழுத்தம், மனக்கிளர்ச்சி இவைகளாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது.

    கல்லீரலைத் தாக்கும் நோய்கள்
    வைரல் ஹெப்பாடிட்டீஸ் (Viral Hepatitis) ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன. இதில் வைரல் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சைக்ரோஸ் (Cirrhosis of Liver), Cholelithesis, Cholecystitis, Carcinoma of liver, Hepatomegaly.
    கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகள்
    உடல் களைப்பு, பசியின்மை, அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி (Joint pain), வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுநீர் சிவப்பு மஞ்சள் நிறமாகவும், மலம் நிறம் மாறியும் வெளியாகும். மலச்சிக்கல் அல்லது பேதி போன்றவை உண்டாகும்.

    கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
    · அசைவ உணவுகள்,

    · எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்,

    · சோடா உப்பு கலந்த உணவுகள்,

    · எளிதில் சீரணமாகாத உணவுகள்,

    · வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகள்.

    கல்லீரல் பாதிப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    · முறையான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

    · நன்கு சுத்தமான நீரை அருந்தவேண்டும். தினமும் போதிய அளவு நீர் அருந்துவது நல்லது.

    · மது, புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

    · தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

    · மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    jv_66 and babyarasu22 like this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் மூலிகைகள்

    கீழாநெல்லி – Phyllanthus amarus

    வில்வம் – Aegle marmelos

    அத்தி – Ficus racemosa

    வேப்பிலை – – – Azadirachta indica

    நெல்லி – Emblica officinalis ்

    தும்பை – Leucas aspera

    துளசி – – Ocimum sanctum

    அருகம்புல் – Cynodon dactylon

    கல்லீரல் பாதிப்ơல் உண்டாகும் காமாலை நோயை குணமாக்க,

    நீர்முள்ளிப் பூ,

    வேப்பம் பூ,

    நெருஞ்சில்,

    திரிபலா

    சிவதை வேர்

    சம அளவு எடுத்து நீரில் இட்டு குடிநீராக காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் கல்லீரல் பாதிப்பினால் உண்டான காமாலை குணமாகும்.
    கீழாநெல்லி – 1 கைப்பிடி
    சுக்கு – 5 கிராம்
    மிளகு – 5 கிராம்
    சீரகம் – 5 கிராம்
    சோம்பு – 5 கிராம்

    இவற்றை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்ட காமாலை நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.
    உணவு

    உப்பு, புளி நீக்க வேண்டும். அதிக அளவு கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பழங்கள்
    பப்பாளி, வாழை, பேரீட்சை, திராட்சை, மாதுளை, கோதுமை, பார்லி கஞ்சி உட்கொள்ளலாம்.

    இளநீர், பதநீர், பனை நுங்கு, கரும்புச் சாறு, தேங்காய் பால் அருந்தலாம்.

    மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தி, கல்லீரலைப் பலப்படுத்த இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன.

    கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோமாக.

    jv_66 and babyarasu22 like this.

  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

    கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின்மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை
    உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.


    பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தி ன் மூலம் எல்லா உறுப்புகளு க்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிந்து அடைப் பை ஏற்படுத்தி விடுகிறது. இத னால் இதயத்திற்கு தேவையா ன ரத்தம் செல்வதில்லை.

    இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீ ரலில் சுரக்கும் பித்த நீரான து கரைத்து விடுகிறது. இத னால் மாரடைப்பு ஏற்படாம ல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீர லில் கொழுப்பு தேங்குவதா ல், இன்சுலின் எதிர்ப்பை ஏற் படுத்துவதாகவும், அதிகளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரைநோய் மற்றும் இதயநோய்களை உருவாக்குகிறது.

    ஈரலில் மிக அதிக அளவுக் கு கொழுப்பு சேர்வதால், ஆ ல்கஹால் அல்லாத கொழு ப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது பரவலாகிவிட்ட இ ந்தக் காலக் கட்டத்தில், குழ ந்தைகள் முதல் பெரியவர் கள் வரை கல்லீரல் கொழு ப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என் கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-

    பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பா னங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெ டாமல் இருக்க சில ரசா யனங்கள் சேர்க்கப்படு கின்றன. அவை 100 சத வீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிடுவது குழந்தைகள்தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வி டுகிறார்கள்.

    நொறுக்குத் தீனிகளால் 10 வகையா ன கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்ற ன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பா டிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடி ட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலி திசிஸ் 8. கலேசிஸ்டி டிஸ் 9. கார்சி னோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத் தீனிகளில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சிய வற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது.

    நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டா ல் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய வை கடுமையாகப் பாதிக்கப்படு ம். நொறுக்குத்தீனியை அளவு க்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமா காமல் குடலில் தேங்குகிறது. இவைதான் விஷமாக மாறுகி றது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் அஜீரணக் கோளாறு, பசியி ன்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

    jv_66 and babyarasu22 like this.

  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை நிவாரணிகள்!!!
    Written by: Boopathi Lakshmanan


    இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் வேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதாராமில்லாத உணவுகள் ஆகியவற்றால் இதுவரையிலும் கண்டிராக மற்றும் கற்பனைக்கும் எட்டாத பிரச்சனைகள் நமது வாழ்க்கைக்கு முன் வருகின்றன. இவற்றில் சில பிரச்சனைகள் இப்போதைக்கு மிகவும் சிறியதாகவே இருந்தாலும், முறையான சிகிச்சைகள் செய்யாமல் விட்டு விட்டால் மிகப்பெரிய சுகாதார சவால்களாக வலிந்து வளரத் தொடங்கி விடுகின்றன. கல்லீரலில் கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சனைகளுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும்.

    இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப்பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன. கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!! கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில்தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது. நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

    மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன. இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியோ துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. இதோ இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில நிவாரணங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்!

    க்ரீன் டீ
    க்ரீன் டீ குடிப்பதன் காரணமாக இந்த கல்லீரல் பிரச்சனையை பெருமளவு பின்னோக்கி தள்ள முடியும். உங்களுடைய தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொண்டு, அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களின் உதவியுடன் நல்ல பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

    சிட்ரஸ் பழங்கள்
    கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும்பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள் - விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

    பாகாற்காயின்
    பாதுகாப்பு பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறாகவும்

    பால் நெருஞ்சில்
    பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்டதாகும். கல்லீரலில்சேதமடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    முழு தானியங்கள்
    முழு தானியங்களுக்கு கல்லீரல் கொழுப்பை உடைத்து அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை வெளியேற்றும் குணங்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், பதப்படுத்தப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் அவற்றின் பகுதிப் பொருட்களை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள்.

    தக்காளி
    தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும். மிகவும் எளிதாக கிடைக்கும் தக்காளியை தினமும் சாப்பிட்டு, கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளுக்கு தீர்;வு காணுங்கள்

    இதர வழிகள் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை சமாளிக்க எண்ணற்ற இயற்கையான வழிகள் உள்ளன. ரோஸ்மேரி, அதிமதுரம், டான்டேலியன் மற்றும் அது போன்ற பிற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும். எனினும், இந்த மூலிகைகளை கர்ப்பமாக இருக்கும்

    குறிப்பு கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போன படி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன்,

    ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட்ட உடலை வளர்க்க வேண்டும். பட்டினி கிடந்து உடலின் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் தவறு. உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் கல்லீரல் அபாயத்திற்குள்ளாகி, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வரச் செய்து விடும் சூழல்களும் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

    jv_66 and babyarasu22 like this.

  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகள் தெரியுமா?

    உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன.

    ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

    இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதைப் சற்று கவனிப்போம்.

    வாய் துர்நாற்றம்

    கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

    கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

    கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

    செரிமானப் பிரச்சனை

    கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

    வெளுத்த சருமம்

    கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

    அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

    உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

    மஞ்சள் நிற கண்கள்

    கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

    வாய் கசப்பு

    கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

    வயிறு வீக்கம்

    கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

    jv_66 and babyarasu22 like this.

  8. #8
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    காக்க... காக்க.... கல்லீரல் காக்க...!

    நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். "அதிகம் மது அருந்தினால், கல்லீரல் கெட்டுப் போகும்' என்பது தான், சாதாரண மக்களுக்கு, கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று, கல்லீரல் நோய்கள் தொடர்பாக, நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

    இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்தியாவில், பத்து லட்சம் பேர், பல்வேறு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சி தகவல்.

    இந்தியாவில், இதுவரை நடந்துள்ள, இரண்டாயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில், 500 சிகிச்சைகளில் பங்கேற்றவர் பிரபல டாக்டர் ஆனந்த் ராமமூர்த்தி. லண்டனில், இது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றவர். சென்னை அப்பல்லோ மருத்துவமனை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான இவர், கல்லீரல் நோய்கள் தொடர்பாக கூறியதாவது:

    உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை கல்லீரல் செய்கிறது. நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல், முற்றிலும் பாதிக்கப்பட்டால், மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே, கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது, நம் கையில் தான் உள்ளது.

    மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால், கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே, என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

    மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்.

    பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை, கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள். கல்லீரல், 70 சதவீதம் பாதிக்கும் வரை, நிறைய பேருக்கு அறிகுறிகள் தெரிவது இல்லை. மஞ்சள் காமாலை போன்றவை, உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள், தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

    நம் நாட்டில் பதிமூன்று ஆண்டுகளாக, இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து வருகிறது. எனினும், இது தொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்களிடம் போதிய அளவில் இல்லை. சென்னை அப்பல்லோவில் மட்டும், 225 மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    சிறுநீரகம் போன்று, "டயலிசீஸ்' செய்ய இயலாது. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது இயலாத காரியம்.

    உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து, இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள், கல்லீரல் பெறலாம்; அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து, கல்லீரலின், 70 சதவீத பகுதி வரை வெட்டி எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால், இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லை. கல்லீரல் அளித்தவர், அறுவை சிகிச்சைக்கு பின், ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். புண் ஏற்படும், வலி ஏற்படும் என்ற பீதி ஏதும் வேண்டாம். பின்னர், வழக்கமான வாழ்க்கை வாழலாம்.

    வெட்டப்பட்ட கல்லீரல், இரண்டு மாதத்திற்குள் வளரும்.
    எனவே, ஒருவர் முற்றிலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட, நெருங்கிய உறவினர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால், அந்த உயிரை காப்பாற்றலாம். ஒருவர் தினமும் மது அருந்தினால், உறுதியாக கல்லீரலை பாதிக்கும். சிலர் எப்போதாவது மது அருந்துபவர்களாக இருக்கலாம். ஆனால், அவருக்கு, கொழுப்பு படிந்து, கல்லீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்தால், அது ஆபத்து. எனவே, நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றினால் கல்லீரலை காக்கலாம்.


    jv_66 and babyarasu22 like this.

  9. #9
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் கோளாறை தடுக்கும் உணவு

    உடல் என்பது அற்புதமாக உருவாக்கப்பட்ட பொருளாகும். பல கோடி நரம்புகள், தசைகள், எலும்புகள், ரத்த நாளங்கள் என பின்னிப் பிணையப்பட்டதே மனித உடலாகும். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் தமது பணியைச் சிறப்பாக செய்வதுடன், பிற உறுப்புகளுடன் இணைந்து முழு உடலையும் செயல்படுத்தும் தன்மை மிகவும் சிறப்பானதாகும்.

    ஆனால் இன்று பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதன் தன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடலானது பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் தான் மனித உடலில் மிகப் பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும்.

    கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. கல்லீரல் செல்களினால் ஆனது. பல ரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறு சுறுப்பாக இயங்கும் ஒரு ரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். மாரடைப்பை தடுக்கும் நாம் உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

    இந்த மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல் தான். பொதுவாக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும்.

    அதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

    உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இரும்புச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறது. நோய்த் தொற்றுதலை எதிர்த்து போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது கல்லீரல் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.

    கொழுப்புச் சத்துக்களைச் செரிக்க வைக்கும் பித்த நீர்:

    பித்த நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச்சுவையுடைய இதில் மூன்று வகை பொருட்கள் உள்ளன. தண்ணீர், பித்த உப்பு, பித்த நிறமிகள். பித்த நிறமிகள் தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின் தாக்கம் இருக்கும். பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப் பதற்கும் உதவுகிறது.

    பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்ட மின்களான ஓ மற்றும் கால்சியம் செரித்தலுக்கும் உதவுகிறது. பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லாமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உறுப்புகள்தான்.

    உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பித்த நீர் உதவுகிறது. உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்கு சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது.

    உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை நாம் சாப்பிடும் போது அது குளுக்கோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் தேவைக்கு அதிகமாக உள்ள போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு அதிகமாக உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

    அறிகுறிகள்:

    உடல் களைப்பு, பசியின்மை, அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுசீர் சிவப்பு மஞ்சள் நிறமாகவும், மலம் நிறம் மாறியும் வெளியாகும். மலச்சிக்கல் அல்லது பேதி போன்றவை உண்டாகும்.

    காமாலை நோயை குணமாக்க:

    நீர்முள்ளி பூ, வேப்பம்பூ, நெருஞ்சில், திரிபலா, சிவதை வேர், சம அளவு எடுத்து நீரில் இட்டு குடிநீராக காய்ச்சி காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் கல்லீரல் பாதிப்பினால் உண்டான காமாலை குணமாகும். கீழா நெல்லி-1 கைப்பிடி, சுக்கு-5 கிராம், சீரகம்-5 கிராம், சோம்பு-5 கிராம்.

    இவற்றை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்ட காமாலை நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் மூலிகைகள் கீழா நெல்லி, வில்வம், அத்தி, வேப்பிலை, நெல்லி, தும்பை, துளசி, அருகம்புல்.

    கல்லீரல் வீக்கம் உருவாக காரணங்கள்:

    முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவது, மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. மேலும் மன அழுத்தம், மனக் கிளர்ச்சி இவைகளாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது.

    தாக்கும் நோய்கள்:

    வைரஸ் ஹெப்பாடிட்டீஸ் ஏ,பி,சி,டி,இ, என்று பல வகைகள் உள்ளன. இதில் வைரஸ் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

    தவிர்க்க வேண்டியவை:

    கல்லீரல் நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை. அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், சோடா உப்பு கலந்த உணவுகள், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள்.மது, புகைப் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். முறையான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

    உணவுமுறை:

    நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும், தினமும் போதிய அளவு நீர் அருந்துவது நல்லது. தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உப்பு, புளி நீக்க வேண்டும், அதிக அளவு கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, வாழை, பேரீட்சை, திராட்சை, மாதுளை, கோதுமை, பார்லி கஞ்சி உட்கொள்ளலாம்.

    இளநீர், பதநீர், பனை நுங்கு, கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப் படுத்தி, கல்லீரலைப் பலப்படுத்த இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன. கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.


    jv_66 and babyarasu22 like this.

  10. #10
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கல்லீரல் - Liver

    கல்லீரல் வீக்கமும், மஞ்சள் காமாலையும் வேறு வேறா?

    ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்

    கல்லீரல் வீக்கத்தை Hepatomegaly என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். சில தொற்று நோய்கள், நுண்கிருமிகளின் தாக்குதல், கட்டிகள், ரத்தசோகை, இதயக் கோளாறு போன்றவற்றால் கல்லீரல் வீக்கமடையலாம். இவர்களுக்கு வலது பக்க வயிற்று வலி, அசதி, மஞ்சள் காமாலை உருவாகலாம். கல்லீரல் சுருங்கி இறுதி நிலையான cirrhosis-ம் இப்படி வரலாம்.
    கிருமிகளால் உருவாகும் மஞ்சள் காமாலைகளான Hepatitis A, Hepatitis B, Hepatitis C, mononucleosis போன்றவற்றின் மூலமும் இப்படி ஆகலாம். மது உட்கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

    கல்லீரல் சார்ந்த எல்லா நோய்களையும் ஆயுர்வேதம் காமாலை என்று அழைக்கிறது. நவீன மருத்துவத்துக்கு ஒப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் காமாலையின் பிரிவும் சொல்லப்பட்டுள்ளது. கோஷ்ட கத காமாலை என்று சொல்லக்கூடிய Hepato Cellular Jaundice, Obstructive Jaundice என்ற பித்தம் குடலுக்கு வராமல் தடைபடுகிற நிலையையும், மற்ற நோய்களால் வருகிற காமாலையைப் பற்றியும் தனித்தனியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    கல்லீரல் வீக்கத்துக்கு நோய்க் காரணத்தைத் துல்லியமாக அறிய வேண்டும். பித்தத்தைக் குறைக்கும் கசப்பான மூலிகைகளை முதலில் மருந்தாக்க வேண்டும். இதற்குச் சீந்தில், பொன் சீந்தில், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை வேர், பேய்ப்புடல், கடுகுரோகிணி, மரமஞ்சள் போன்றவற்றைக் கஷாயம் வைத்துக் கொடுக்கலாம். பேதிக்கு மருந்து கொடுப்பதன் மூலம் பித்தம் நன்றாக வெளியேற்றப்படும்.

    கல்லீரலை வலுப்படுத்தத் திராட்சை, திப்பிலியால் செய்யப்பட்ட திராக்ஷாதி ரசாயனம் என்கிற லேகியத்தைக் கொடுக்கலாம். நெல்லிக்காய் போட்டுக் காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்குச் சிறந்தது. வீட்டிலேயே கீழாநெல்லியைப் பறித்து வேர் நீக்கி அரைத்துக் காலை வெறும் வயிற்றில், புளிக்காத மோரில் 10 கிராம் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆயுர்வேத முறையில் மருந்து சாப்பிட்டாலும் Ultra sonogram எடுத்துப் பித்தப் பையில் கட்டிகள், கற்கள் இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். கல்லீரல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை Liver function test மூலம் பார்க்க வேண்டும். HAV Igm, Anti HCV, HBsAg போன்ற பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சற்றுக் குணமாகிவரும் நிலையில் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், செவ்விளநீர், புடலங்காய் கூட்டு போன்றவை நன்கு பலனளிக்கும்

    கைமருந்துகளாகக் கீழ்க்கண்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

    # கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மஞ்சள் ஆகியவற்றை மொத்தமாக 20 கிராம் பொடி செய்து கொள்ளவும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 3 கிராம் அளவில் சாப்பிட வேண்டும்.

    # 50 கிராம் நெல்லி வற்றல், 50 கிராம் சீரகம் இரண்டையும் பொடியாக்கி, காலை மாலை இருவேளை என ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    # கரிசலாங்கண்ணி இலையைச் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து, இடித்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் மேற்கண்ட இரண்டு தூள்களிலும் வகைக்கு 50 கிராம் எடுத்துக் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை, வேளைக்கு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

    கல்லீரல் பாதுகாப்பு

    தவிர்க்க வேண்டிய உணவுகள்

    # எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவு.

    # கொழுப்பு அதிகம் நிறைந்த வெண்ணெய், பாலாடைக்கட்டி, நெய், அசைவ உணவு.

    # டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு, சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக், தயிர், தேங்காய், ரசம், புளித்த உணவுகள்.

    # கடலை மாவில் செய்யப்படும் வடை, போண்டா, பஜ்ஜி, சிப்ஸ், மிக்சர், தக்காளி சட்னி, பூரி கிழங்கு, பிற கோதுமை உணவுகள்.

    # பச்சை மிளகாய், வாழைக்காய், உருளைக் கிழங்கு, கொத்தவரங்காய், சேப்பங் கிழங்கு, பாகற்காய். சேர்க்க வேண்டிய உணவுகள்

    # மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பருப்புக்கீரை.

    # அவரைப் பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்திரிப் பிஞ்சு.

    # முளைகட்டிய பயறுகள், வாழைப்பூ, வாழைத் தண்டு, கல்யாணப் பூசணி, வெண்டைக்காய், கோவக்காய், சுண்டைக் காய், முள்ளங்கி.

    # கல்யாணப் பூசணியின் மேல் ஓடு மற்றும் உட்புறம் உள்ள பஞ்சை நீக்கி இடையில் உள்ள நுங்கு பாகத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துப் பிழிந்த ரசத்தில் 1 அவுன்ஸ் அளவு தினமும் 2 அல்லது 3 வேளை, சிறிதளவு கற்கண்டுத் தூள் கலந்து குடிக்கலாம். காமாலை நீங்கும். அத்துடன் சிறுநீர் தாராளமாகப் போகும்.

    # பூவரசு இலைக் கொழுந்தை அரைத்து ஒரு எலுமிச்சம்பழ அளவு எடுத்து மோரில் கலந்து, தினமும் 3 வேளை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் இளநீர் குடித்துவர வேண்டும். இப்படி 7 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    jv_66 and babyarasu22 like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter