முதுமை நாம் பிறக்கும்போதே தொடங்கி விடுகிறது. நம்மை அறியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண!ணமுமாக முதுமை அடையத் தொடங்கி விடுகிறோம். மரணம் தான் இதற்கு முற்றுப்புள்ளி. மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முதுமையை நாம் வெறுக்கிறோம். முதுமை காலத்திற்கு என்றே பிரத்யேக நோய்கள் உள்ளன. அதிவும் மிகவும் தொல்லை தருவது தூக்கமின்மையேபிறந்து ஒரு வருடம் ஆகும் குழந்தை அதிக நேரம் தூங்குகிறது. வயது ஏற ஏற தூங்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது.

தூக்கம் ஒவ்வொருவருடைய உடல்நலம் மற்றும் மனநிலையைப் பொறுத்தது.தூக்கத்தின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக முதுமையில் தூக்கம் சற்று குறைவது உண!மையே. முதுமையில் சுமார் ஐந்திலிருந்து எட்டு மணி நேரம்தூக்கம் தேவை.

தூக்கத்தின் மொத்த நேரத்தை விட ஆழ்ந்த தொடர் தூக்கம்தான் மிகவும் முக்கியம். புதிய ஆய்வுகளின்படி முதுமையில் குறைந்த தூக்கம் போதும் என்ற கருத்தை மறுத்துள்ளனர். முதுமையில் ஒருவர் பகலில் சுறுசுறப்பாக வேலை செய்தால் அவருக்கு அதிக நேரம் ஆழ்ந்த தூக்கம் தேவைப்படுகிறது. அதே நேரம் பகல் முழுவதும் படுத்துக் கொண!டே இருப்பவர்களுக்கு இரவில் குறைவான தூக்கம் இருந்தால் போதுமானது.

தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள் உள்ளன. பலர் பகலில் நீண!ட நேரம்தூங்கி விடுகிறார்கள். அதனால் இரவில் தூக்கம் வருவதில்லை. பல நோய்களாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது. உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத் திணறல், வயிற்றில் புண!, தைராய்டு தொல்லைகள், இதய பலஹீனம் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் தூக்கம் வருவதில்லை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க வேண!டியிருக்கும். அதனால் தூக்கம் தடைபடும். இரவில் படுப்பதற்கு முன் அதிகமாக காபி, டீ மற்றும் தண!ணீர் குடித்தாலும் தூக்கம் பாதிக்கும். மனம் சார்ந்த கவலைகளாலும் தூக்கம் குறையும்.

நல்ல தூக்கம் பெற சில வழிமுறைகள் :-

* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்கு செல்ல வேண!டும். அதே போல் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண!டும்.

* படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்றிய மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண!டும்.

* படுப்பதற்கு முன்பு சிறிதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

* மாலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண!டும். அது இரவில் நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

* இரவில் படுத்துக்கொண!டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண!டும்.

* மன உளைச்சல்களும், கவலைகளும் தூக்கத்தின் எதிரிகள். அதை தவிர்ப்பது அவசியம். இதற்கு தியானம் மிகச் சிறந்த மருந்து.

* நல்ல தூக்கத்திற்கு தூக்க மாத்திரை ஒரு நிரந்தர தீர்வு அல்ல. தூக்க மாத்திரையை தினமும் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

* தூக்கமின்மைக்கு நோய்கள் காரணமாக இருந்தால், அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள வேண!டும்.

பகல் தூக்கத்தை குறைத்து, மாலையில் உடற்பயிற்சி செய்து, இரவில் குறைந்த அளவு உணவு உண!ண வேண!டும். படுப்பதற்கு முன் தியானம் செய்ய வேண!டும். சிறிது வெதுவெதுப்பான பால் அருந்த வேண!டும். அமைதியான சூழலில் மனதை ஒருநிலைப்படுத்தி தூங்க முயற்சிக்க வேண!டும். இது முதலில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் பழக்கத்திற்கு வரும்போது நல்ல தூக்கம் பெற முடியும்.