பித்தப்பை (Bile )

பித்தப்பை கற்கள் உருவாகும் இடம் பித்தப்பைதான். இந்தக் கற்கள் பித்தப்பையின் எந்தப் பகுதிக்கு செல்கிறதோ அந்தப் பகுதியில் அடைப்பை உருவாக்கும். பித்தப்பையிலிருந்து பித்தக் கற்கள் நோய்த் தொற்றை உருவாக்கலாம். பித்தப்பையிலிருந்து நீர் வெளியே செல்லுமிடத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலையை உருவாக்கலாம்.
கற்களின் இடுக்கு ஓரங்களிலெல்லாம் பாக்டீரியா உருவாக வாய்ப்பு இருப்பதால் பித்தப்பையில் பித்த நாளங்களில் திரும்பத் திரும்ப நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு ரெக்கண்ட் கோலான்ஜைடிஸ் என்று சொல்லப்படும்.

பித்தக் கற்களால் ஏற்பட்ட அடைப்பால், பித்த நீர் நாளங்கள் வழியாக சீராக சென்று ரத்தத்தில் கலக்க முடியாமல் போகும்போது அப்ஸ்ட்ரக்டிவ் டைப் மஞ்சள் காமாலை உருவாகும். இப்படி அடைப்பினால் உருவான மஞ்சள் காமாலை தானாகச் சரியாகாது.

அடைப்பை நீக்கினால்தான் சரியாகும்.பித்தக் குழாயிலிருந்து பித்த நீர் சிறுகுடலில் சேருமிடத்தில் பெரிய பித்த கற்கள் உருவாகி அங்கும் அடைப்பு ஏற்படலாம். இந்த நிலைக்கு கால் ஸ்டோன் இலியஸ்(Gallstone illieus ) எனப் பெயர். இப்படி பித்த கற்களால் பித்தப்பையில், பித்த நாளங்களில், ஈரலில், சிறு குடலில் பாதிப்பு ஏற்படுகிறது.

பித்தப்பையின் சுவரில் பாலிப் என்ற குடல் நீட்சிகளின் வளர்ச்சி அதிகமாவது கண்டறிந்தவுடனேயே அறுவை சிகிச்சை மூலம் உடனே பித்தப்பையை நீக்கி விட வேண்டும். இந்த நீட்சிகளின் வளர்ச்சியால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

பித்தப்பையின் சுவர் முழுவதிலும் ஒரு மெல்லிய கால்சியம் படிந்த மடிப்பு உருவாகும். இதைப் போர்ஸிலியன் கால் ப்ளாடர்(Porcelain Gall Bladder ) என்று பெயர்.

இந்த மடிப்பு உருவானால் உடனே பித்தப்பையை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் ஒன்று அது புற்று நோயாக மாறும் வாய்ப்புண்டு. அடுத்து தொற்று உருவானால் மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்.

பித்தப்பையை நீக்கிவிட்டால் அதிலிருந்து பித்த நீர் சுரக்காது. அதனால் ஜீரணம் நடைபெறாது என்று பலர் தவறாக எண்ணி பயப்படுகிறார்கள். பித்தநீரை கல்லீரல் 800சி.சிலி ருந்து 1000 சி.சி. வரை சுரக்கின்றது.பித்தப்பையில் 30-40சி.சி. வரையிலும் சேமிக்கப்படுகிறது.இதனால் தேவைக்கு அதிகமான 30-40 சி.சி. அளவு சேமிக்கப்படும் பித்தப்பையை நீக்குவதால் ஜீரண மண்டலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நிமூபணமாகியுள்ளது.

சரியாக விரிந்து சுருங்க முடியாத பித்தப்பையில்தான் பித்தக் கற்கள் உருவாகின்றன. அதனால் சரியாக வேலை செய்யாத நிலையில் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக்கவே சுரக்காது. வேலை செய்யாத பழுது பட்ட பித்ப்பையினால் ஜீரணத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அதனால் எதிர்மறை பாதிப்புதான் நேரிடும் என்பதால் பழுதுபட்ட நிலையில் அதை வைத்துக் கொள்வதை விட நீக்கிவிடுவதே நமது உடலுக்கு நல்லது.
Similar Threads: