Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree96Likes

Sleep Disorders and Sleeping Problems - தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுĨ


Discussions on "Sleep Disorders and Sleeping Problems - தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுĨ" in "General Health Problems" forum.


  1. #21
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Sleep Disorders and Sleeping Problems - தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறு&

    Thank u Chan for sharing this article @chan


    Sponsored Links
    chan likes this.

  2. #22
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Sleep Disorders and Sleeping Problems - தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறு&

    தூக்கத்தின் அவசியத்தை உணர்த்தும் தெளிவான பதிவு, மிக்க நன்றி லக்ஷ்மி.

    Thanks for letting me to know about this thread Komathi.


    chan likes this.

  3. #23
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Sleep Disorders and Sleeping Problems - தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறு&

    Quote Originally Posted by kkmathy View Post
    ஹாய் தோழிகளே,

    நாம் தூங்கப் போகும் நேரம் பற்றி ஒரு பக்கம் விவாதித்துக் கொண்டு இருக்கும் நாம், இரவுத்தூக்கம் கெட்டால் என்ன ஆகும் என்று ஒரு விளக்கம்/போஸ்ட் போட்டு இருக்கிறார் நமது தோழி லெட்சுமி (chan ).


    இதையும் படியுங்கள் தோழிகளே @Parasakthi @gkarti @sumathisrini @laddubala @kodiuma @jv_66 @femila@Vimalthegreat @sujivsp @PriyagauthamH @sarayu_frnds @salma @RathideviDeva @naliniselva @malbha @jash @roseagalya @Kate Hadija @thenuraj @jayakalaiselvi @Suganya Vasu @Sriramajayam @Dangu @shansun70.
    Thank u for tagging me sis....

    chan likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #24
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Sleep Disorders and Sleeping Problems - தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறு&

    Excellent and needed sharing sis.....

    chan likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Sleep - தூக்கம்...

    தூக்கமும் கண்களை தழுவட்டுமே...


    தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம் தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.

    அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

    தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது

    தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது. அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.

    உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.

    சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள். மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.

    மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.

    உடல் உழைப்பு

    உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும். உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது. இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன். அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.

    எவ்வளவு நேரம் தூங்கலாம்

    ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து தூக்கம் வித்தியாசப்படும். இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை. ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும். பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் தூக்கம் அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.

    உடலில் உள்ள கடிகாரம்

    நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது. இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது. இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது. நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும். இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும். பின் இது தூக்கத்தைத் தூண்டும். அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர். இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.

    இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள். பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.

    “பகலில் தூங்குபவன் பாடையில் போவான்” என்பது சித்தர் வாக்கு.

    பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது. இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது. இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

    தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்

    தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.

    தூக்கத்தின் பயன்கள்

    ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.

    நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது. ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது. புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking) நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.

    நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

    தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம்.

    jv_66 likes this.

  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Sleep - தூக்கம்...

    ஆழ்ந்த உறக்கத்திற்கு

    உணவு முறைகளில் மாறுபாடு அவசியம் தேவை. சீரான, சமச்சீரான உணவுப் பழக்கம் வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். ஆவியில் வேகவைத்த பொருட்கள் நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்டு, அதிக காரம், புளி, உப்பு உள்ள பொருட்களை தவிர்த்து, நேரம் தவறாமல் சாப்பிட்டு வந்தால் அதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கு நம்மை ஆட்படுத்தும்.

    இரவில் கீரை, மோர், தயிர், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரை வயிறு உணவே சிறந்தது. மன உளைச்சல், கோபம், எரிச்சல் உண்டாக்கும் செயல்களை தவிர்ப்பது நல்லது.

    தூக்கம் வரும் முன் தூங்கச் செல்லக் கூடாது. தினமும் சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இரவு உணவுக்கு முன் கோடைக் காலமாக இருந்தால் குளிர்ந்த நீரிலும், குளிர் காலத்தில் சுடு நீரிலும் குளிப்பது நல்லது.

    இரவில் வெகுநேரம் கழித்து அதாவது பின்னிரவு நேரங்களில் சாப்பிட்டால் தூக்கம் வராது. 7-8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.

    இரவு தூங்கச் செல்லும்போது மென்மையான இதமான இசை கேட்பது நல்லது. அதற்காக இரவு முழுவதும் வானொலியை பாடவிடுவதும் தவறு.

    மதுபானங்கள் சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதுபோல் இருக்கும். ஆனால் இது ஆழ்ந்த நித்திரையைத் தருவதில்லை. அதற்கு பதில் நடுநிசியில் எழுப்பிவிடும். இதனால் தூக்கமின்மையே மிஞ்சும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்த்தால் மட்டுமே நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

    தூக்கத்தைக் கெடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. டிவி, கணினி போன்றவற்றை படுக்கையறையில் வைத்தால் நம் கவனம் முழுவதும் அதிலேயே இருப்பதால் தூக்கம் கெடும்.

    இரவு உணவுக்குப் பின் குறுநடை அதாவது சிறிது தூரம் நடக்க வேண்டும். இது நல்ல தூக்கத்திற்கு மருந்து.

    காபின் (caffein) என்னும் நச்சுப் பொருள் காபி, டீ, சாக்லேட், கோலா போன்றவற்றில் உள்ளது. இது சாப்பிட்ட 8 மணி நேரம் வரை உடலில் தங்கியிருக்கும். இதனால் இவைகள் தூக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டது. தூங்கும் நேரத்தில் இவைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோல் சிகரெட்டில் நிகோடின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. இதுவும் தூக்கத்தைக் கெடுக்கக்கூடியது.

    படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். தலையணை அதிக உயரமில்லாமலும், நன்கு சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்

    jv_66 likes this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Sleep - தூக்கம்...

    தூங்கும் முறைகள்

    மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக்கொண்டு படுக்கக்கூடாது. இதனால் இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

    குப்புற படுக்கக்கூடாது. அதுபோல் கால்களை தவளைபோல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது.

    இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

    இதனால் வலப்பக்கம் உள்ள சூரிய நாடியில் எட்டு அங்குலம் வரை சுவாசம் செல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். மேலும் சூரிய நாடியில் வரும் வெப்பக்காற்று பித்த நீரை அதிகம் சுரக்கச்செய்து உண்ட உணவுகளை எளிதில் சீரணமாக்கும் .

    இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பவர்களின் இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைப்பதால் இரத்த ஓட்டமும் அதிகம் செல்லும். இதனால் இதயம் பலப்படும்.

    வலது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதால் சந்திர நாடியாகிய இடப்பக்க மூக்கின் வழியே சுவாசம் 15 அங்குலம் வரை செல்லும். இதனால் உடல் வெப்பத்திற்குப் பதில் குளிர்ச்சியே ஏற்படும். சீதளம் உண்டாகும். இரவு உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக மாற நேரிடும்.

    எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர்.

    உத்தமம் கிழக்கு

    ஓங்குயிர் தெற்கு

    மத்திமம் மேற்கு

    மரணம் வடக்கு

    கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.

    வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.

    வெறும் தரையில் படுக்கக்கூடாது அது உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கச் செய்யும்.

    இரவு படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் கசகசாவை கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல உறக்கம் ஏற்படும்.

    நல்ல தூக்கமே நோயற்ற வாழ்வுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து நல்ல தூக்கத்தை அடைந்து நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

    jv_66 likes this.

  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    தூக்கமின்மை - Why Is Sleep Important?

    தூக்கமின்மை
    தூக்கமின்மை, ஒருவரின் அறிவாற்றல் திறன்களான ஞாபக சக்தி, செயலில் கவனம் போன்றவற்றை மெதுவாக அழிக்கும். இதனால் தான், சிலர் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல், அடிக்கடி தேடிக் கொண்டிருக்கிறோம்.

    விபத்து கணக்கெடுப்பு தகவல்கள், பெரும்பாலான சாலையோர விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக, தூக்கமின்மையையே சொல்கின்றன.
    எனவே வாகன ஓட்டிகள், தினமும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தூக்கமின்மை இருந்தால், அது பாலியல் வாழ்க்கையை பாதித்து, தம்பதிகளுக்கிடையே பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

    நாள்பட்ட தூக்கமின்மை, இதய நோய் வருவதற்கு வழிவகுக்கும். ஏனெனில், இந்த பிரச்னையால், இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் மாரடைப்பில் இருந்து தமனி தடிப்பு வரை, எந்த இதய நோயும் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தூக்கமின்மையால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். மேலும் தூங்கும் நிலை கூட, சரும சுருக்கங்களை உண்டாக்கும்.

    மன இறுக்கத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பு இருப்பதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வோர் தான், அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

    அதனால் தான் அவர்கள் மன இறுக்கத்தினால், தூக்கமின்மை ஏற்பட்டு, நாளடைவில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். ஒருநாளைக்கு, கட்டாயமாக, எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். ஒருவர் சரியான நேரத்தில் தூங்கினால், உடல் உறுப்புகள் சரியாக செயல்படும்.


    தெ. தமிழ் அரசன்,
    பொது மருத்துவர்,
    சென்னை.


    jv_66 likes this.

  9. #29
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: தூக்கமின்மை - Why Is Sleep Important?

    Thanks Lakshmi for sharing benefits of sleeping.


  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    தூக்கம் எங்கே போனது

    தூக்கம் எங்கே போனது?

    மருத்துவர் வி. விக்ரம்குமார்


    அசைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

    கட்டுப்பாடின்றி விரைந்துகொண் டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்' இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

    என்ன தீர்வு?

    நிம்மதியான தூக்கத்தைத் தொலைப் பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறை களும்தான் என்ன?

    கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி.

    இரவின் கொடை ‘மெலடோனின்'
    உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

    அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

    நோய்களுக்கு வரவேற்பு
    தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

    தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன.

    வேண்டாம் பகல் உறக்கம்பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

    ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம்.

    சிகிச்சை
    l அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.

    l சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

    l பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ள லாம்.

    l திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

    l அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.

    l மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.

    l எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

    l மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

    l மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.

    l தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

    அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

    எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
    குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

    - கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்,

    தொடர்புக்கு: teddyvik@gmail.com


    Last edited by chan; 21st Sep 2015 at 02:40 PM.
    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter