Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By prakasam.k

Health Benefits of Curry Leaves - கறிவேப்பிலை வெறும் வாசனை பொருள் அல&#


Discussions on "Health Benefits of Curry Leaves - கறிவேப்பிலை வெறும் வாசனை பொருள் அல&#" in "General Health Problems" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Health Benefits of Curry Leaves - கறிவேப்பிலை வெறும் வாசனை பொருள் அல&#

  க*றிவே*ப்*பிலையை வெறு*ம் வாசனை*க்காக மட*்டு*ம் பய*ன்படு*த்*தி*வி*ட்டு *பி*ன்ன*ர் சா*ப்*பிடு*ம்போது தூ*க்*கி*ப் போடு**ம் பழ*க்*க*ம் ந*ம்*மி*ல் பலரு*க்கு உ*ண்டு.
  உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை என்று பலர் கருதுவதுதா*ன் அத*ற்கு*க் காரண*ம். ஆனால் இ*ந்த தகவலை*ப் படி*த்த *பிறகு அப்படிச் செய்ய மா*ட்டீர்கள்.

  கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.கறிவேப்பிலையின் அ*றி*விய*ல் பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.


  கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் ச*த்து*க்க*ள் உள்ளன.
  மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.இவை தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தையு*ம், மருத்துவ குண*த்தையு*ம் தரு*கிறது.


  கறிவேப்பிலை சாப்பிடுவதால்

  நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு*ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா*ப்*பி*ட்டு வ*ந்தா*ல், ர*த்த*த்*தி*ல் ச*ர்*க்கரை*யி*ன் அளவு க*ட்டு*ப்படு*ம்.

  வெறும் வயிற்றில் *தினமு*ம் கறிவேப்பிலை இலையை மெ*ன்று சா*ப்*பிட வே*ண்டு*ம். இ*ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த*வி*ர்*க்க*ப்படு*ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு*ம் அளவு*ம் குறை*ந்து*விடு*ம்.

  இளம் வய*தி*ல் நரை முடி வ*ராம*ல் தடு*க்க க*றிவே*ப்*பிலை பய*ன்படு*ம் எ*ன்பது தெ*ரி*ந்த *விஷய*ம். ஆனா*ல் தெ*ரியாத *விஷய*ம் ஒ*ன்று உ*ள்ளது. அதாவது, நரை முடி வ*ந்தவ*ர்களு*ம், உண*விலு*ம், த*னியாகவு*ம் க*றிவே*ப்*பிலையை அ*திகமாக சா*ப்*பி*ட்டு வ*ந்தா*ல் நரை முடி போயே போ*ச்சு.இது அனுபவ *ரீ*தியாக*க் க*ண்ட உ*ண்மை.

  கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

  சர்க்கரை நோயாளிகளுக்கு
  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

  மன அழுத்தம் நீங்க
  அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.

  கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்.

  இளநரை மாற
  இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
  கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

  கொழுப்புச் சத்து குறைய
  இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.

  சுவையின்மை நீங்க
  சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது.

  இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும்

  தன்மை நாவிற்கு கிடைக்கும்.

  வயிற்றுப் போக்கு குணமாக

  கறிவேப்பிலை - 20 கிராம்

  சீரகம் - 5 கிராம்

  இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

  குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
  கண் பார்வை தெளிவடையும்
  இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
  மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.
  கை கால் நடுக்கத்தைப் போக்கும்.
  வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்.
  நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.

  இவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம்.

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  prakasam.k is offline Newbie
  Gender
  Male
  Join Date
  Apr 2014
  Location
  trichy
  Posts
  89

  re: Health Benefits of Curry Leaves - கறிவேப்பிலை வெறும் வாசனை பொருள் அī

  கறிவேப்பிலையில் குவிந்து கிடக்கும் மருத்துவம் !!!
  கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. பெரும்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகின்றனர். சுவைத்தும், சமைத்தும் சாப்பிட வேண்டிய ஓர் அருமருந்து
  நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
  கறிவேப்பிலையை அரைத்து, சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல் செழித்து வளரும்.
  அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடலிலுள்ள நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை குறைந்து உடல் அமைப்பு மாறும்.
  கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
  கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
  தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.
  இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கும் தலைக்கு தேய்க்கும் எண்ணையாகவும் பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
  கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து தூளாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.
  அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.கறிவேப்பிலையை நன்கு நீரில் கழுவி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சோற்ரோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்
  கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும் தன்மை நாவிற்கு கிடைக்கும்.
  கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் ‘சித்தர் வாசுட நூலில்’ உள்ளன.
  இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை தூளாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலச்சிக்கல், மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு நோய்கள் குணமாகும்கறிவேப்பிலை குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். தன்மை கொண்டது இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண உறுப்புக்களின் தோழன் என்று கூறுவார்கள்
  கறிவேப்பிலை ரத்தத்தி இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் அறிவைப் பெருக்கவும் உதவுகின்றது கறிவேப்பிலையை பச்சையாகச் சப்பிச் சாப்பிட்டால் சளி குறையும் குரல் இனிமையாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப்பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத்துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. இவ்வாறு கறிவேப்பிலையின்மருத்துவ தன்மை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

  RAJAKITHU likes this.

 3. #3
  vasanthi is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  403

  Re: Health Benefits of Curry Leaves - கறிவேப்பிலை வெறும் வாசனை பொருள் அī

  ivvalavu siriya ilayil ethanai ariya payangal ulladu

  pagirndamaikku nandri
  vasanthi
  mct


loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter