Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

Reason for Sweating in the Palms and Foot-உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில


Discussions on "Reason for Sweating in the Palms and Foot-உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Reason for Sweating in the Palms and Foot-உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில

    உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்ப்பதற்கு காரணங்கள்








    ''உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்ப்பதற்கு மூன்று விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று, பிறப்பிலேயே ஒருவரின் உடல் அமைப்பு அப்படி அமைந்திருக்கலாம். இரண்டாவது, 'ஹைபர் தைராய்டு எனப்படும் தைராய்டு அதிகமாகச் சுரந்தாலும் உள்ளங்கையும் உள்ளங்காலும் எந்த நேரமும் வியர்க்கும். மூன்றாவது, அளவுக்கு அதிகமான கவலை (Anxiety). குறிப்பாக, தேர்வு சமயத்தில் சிலருக்கு அதீதக் கவலை மற்றும் பதட்டத்தால் அளவுக்கு அதிகமாக வியர்த்து, தேர்வு எழுதும் பேப்பரே ஈரமாகிவிடும். மற்றவர்களுடன் கை குலுக்கக்கூட முடியாது. இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன.


    இயல்பாகவே இதுபோன்ற உடல் அமைப்புகொண்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் இரவு படுக்கும் முன்பு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இந்த மருந்துகளைத் தடவிக்கொண்டு படுக்கலாம். காலையில் எழுந்ததும் கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இந்த மருந்துகள் ஓரளவு மட்டுமே நிவாரணம் தரும். இவற்றைப் பயன்படுத்தியும் வியர்வை கட்டுப்படாவிட்டால், 'அயன்டோபோரேசிஸ் (Iontophoresis) என்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

    உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி வியர்வைத் துளைகளை அடைப்பதுதான் இந்தச் சிகிச்சை. மொத்தம் 40 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சையைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் ஓரளவு வியர்வை குறைய ஆரம்பித்ததும், வாரத்துக்கு இரண்டு முறை மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும்.

    இந்தச் சிகிச்சை எடுக்க முடியாதவர்களுக்கு 'போடோக்ஸ் (Botox) என்ற மருந்து உள்ளது. இதை ஊசி மூலம் கையில் செலுத்த வேண்டும். ஒரு முறை இந்த ஊசி போட்டால் சுமார் ஆறு மாதம் வரை வியர்வைத் தொந்தரவு இருக்காது. ஆனால், இதற்கான செலவு சற்று அதிகம். தைராய்டு, பதட்டம் மற்றும் கவலையால் இந்தத் தொந்தரவுக்கு ஆளானவர்கள், முதலில் இந்தப் பாதிப்புகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே, பிரச்னையைச் சரி செய்து விடலாம்!'


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Reason for Sweating in the Palms and Foot-உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில

    Thanks for the share.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter