மது ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவுமா?
அமெரிக்காவில் 15 சதவீதம் பேர் தூக்கத்துக்காக மதுவை நாடுகின்றனர். உறக்கம் வருவதற்கு மது உதவும். ஆனால், நீடிப்பதற்கு உதவாது. நடுஇரவில் ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தை அடைந்தபிறகு விழிப்பு ஏற்பட்டுவிடும்.
தனித்தனியாக தூங்கும் வழக்கம் தம்பதியினரிடையே அதிகம் இருக்கிறதா?
நான்கில் ஒரு தம்பதி தூக்கக் குறைபாட்டால் தனித்தனியாகவே தூங்குகின்றனர். குறிப்பாக, குறட்டை பிரச்சினையால் சேர்ந்து தூங்குவது தடைபடுகிறது. சுவாசக் குறைபாட்டால் குறட்டை வருகிறது. இப்பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் பகலிலும் களைப்பாகவே உணர்வார்கள். உடன் தூங்குபவரின் குறட்டையால் மனைவியோ, கணவனோ இரவு முழுவதும் தூக்கத்தை இழக்கவும் நேரிடுகிறது.
தூக்கக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?
20 முதல் 25 மணி நேரம் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் போகும்போது, நமது செயல்திறன் பாதிக்கப்படும். ரத்தத்தில் 0.10 சதவீதம் ஆல்கஹால் கலப்பதற்குச் சமமான விளைவு உடலில் ஏற்படும். நினைவுத்திறனும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும். பார்வைக்கும் செயல்பாடுகளுக்கும் (கண், கை) இடையிலான ஒருங்கிணைப்பு பாதிக்கப்படும். கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும். வண்டி ஓட்டுபவர்களுக்கு விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
பீரில் கொழுப்பு உள்ளதா?
கிடையவே கிடையாது. ஆல்கஹால், கார்போஹைட்ரேட் மற்றும் கொஞ்சம் புரதம் உண்டு. இவற்றிலிருந்துதான் கலோரிகள் கிடைக்கின்றன.
பண்டிகைக் காலத்தில் அதிக உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
பண்டிகை நாட்களில் என்னென்ன சாப்பிடப் போகிறோம், எவ்வளவு சாப்பிடப் போகிறோம் என்பதை முன்பே திட்டமிட்டு மனதுக்குள் அட்டவணை இட்டுக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது திட்டமிடுவது எந்த பயனையும் அளிக்காது.
ஏற்கெனவே மனதளவில் ஏற்படுத்திக்கொண்ட திட்டத்தை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு வடை, ஒரு மைசூர்பாகு, ஒரு கேக் என்று திட்டமிட்டுக்கொண்டால் அதை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்படி இல்லையென்றால், நோய்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியதுதான்

Similar Threads: