ஏன் இப்படி? -நோயறிதல் (டயக்னாசிஸ்)

சாதாரண தொண்டை வலி என்று டாக்டரிடம் போவோம். அவரோ காது மூக்கு தொண்டை என எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்வார். ஒரு ‘பென் லைட்’டை வைத்து என்னதான் பார்க்கிறார்? அதில் என்ன கண்டுபிடிக்க முடியும் என்று நினைப்போம். உண்மையில், மருத்துவர்கள் அந்த சிறுசிறு பரிசோதனைகளிலே நம் உடலின் பல பிரச்னைகளை கண்டறிந்து விடுவார்கள். அதற்குப் பெயர்தான் டயக்னாசிஸ்... அதாவது, ‘நோயறிதல்’.


நம் உறுப்புகளின் மாற்றத்தைப் பொறுத்து அது என்ன பிரச்னையாக இருக்கலாம் என்று கண்டறிவதே நோயறிதல். சில அடிப்படையான சோதனைகள் மூலம் எதையெல்லாம் கண்டறியலாம்? ‘ஆ’ சொல்லுங்க...

சளி, தொண்டை வலி என்று சில காரணங்களுக்காக டாக்டரிடம் போகும் போது ‘ஆ’ சொல்லுங்க’ என்பார்கள். தொண்டையில் வீக்கம் அல்லது நிற மாற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காகவே அந்த சோதனை. தொண்டையில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் கலர் மாற்றத்தைப் பொறுத்து அது சாதாரண புண்ணா, கேன்சரா என்று தெரிந்து கொள்ள முடியும். சில நேரம் தொண்டையின் உட்புறத்தி லுள்ள வீக்கம், மூளைக்கட்டிக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

கண்ணில் லைட் அடித்தல்...உடம்பு சரியில்லை என்று போனாலே பொதுவாக கண்ணைப் பரிசோதிப்பார்கள். கண் பல நோய்களைக் காட்டிக் கொடுத்துவிடும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கண்ணை வைத்து கண்டறியலாம்.

கண் நரம்பு களை சிறிய டார்ச் லைட் அதாவது, ‘பென் லைட்’ மூலம் சோதனை செய்வார்கள். கண் பாப்பாவைச் சுற்றியுள்ள நீர்ப்படலம் ரொம்பவும் வற்றிப் போய் இருந்தாலோ, அதிகமாக இருந்தாலோ அது உங்கள் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். முட்டியை தட்டிப் பார்த்தல்...

கால் நரம்புகள் மற்றும் மெட்டபாலிசம் பிரச்னைகளை ஆராய்வதற்காக முட்டியை தட்டிப் பார்ப்பார்கள். தட்டும் போது எங்கு வலி இருக்கிறது என்று தெரியும். அது சாதாரண கால் வலியா, இல்லையா என்பதும் தெரியும். முதுகு வலி, கால்வலி, நடக்க சிரமமாக இருத்தல் ஆகியவை முதுகுத் தண்டுவட பாதிப்பின் காரணமாக இருக்கலாம்.

வயிற்றை அமுக்கிப் பார்த்தல்...வயிற்று வலி என்றால் முதலில் வயிற்றை அமுக்கிப் பார்ப்பார்கள். வயிறு கல் மாதிரி இருக்கிறதா அல்லது சாதாரணமாக இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள். அதை வைத்து வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகளில் வீக்கமோ கட்டியோ வேறு எதாவது பிரச்னை இருக்கிறதா என்று ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். பிரச்னை இருக்கும் என்று தெரிய வரும் பே ட பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்கள்.

எடுத்த உடனே எல்லாவற்றுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை என்று இறங்க முடியாது. அதற்குத்தான் இந்த எளிய ஆரம்பகட்ட பரிசோதனைகள் பயன்படுகின்றன. உங்கள் மருத்துவரை புரிந்துகொண்டு அவரது பரிசோதனைகளுக்கு முறையான ஒத்துழைப்பு கொடுங்கள்!


Similar Threads: