Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

ரத்தப் புற்றுநோய்க்கு புதிய மருந்து!


Discussions on "ரத்தப் புற்றுநோய்க்கு புதிய மருந்து!" in "General Health Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ரத்தப் புற்றுநோய்க்கு புதிய மருந்து!

  ரத்தப் புற்றுநோய்க்கு புதிய மருந்து!

  புதுவைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனை

  பிப்ரவரி-4: உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

  புற்றுநோய் என்றாலே பயந்து நடுங்கிய காலம் ஒன்று இருந்தது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல் முன்னேற்றத்தால் இதையும் சாதாரண நோய் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

  உடலில் உள்ள செல்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், இயல்புநிலைக்கு மாறாக வளரும் நிலையைப் புற்றுநோய் என்கிறோம். இது ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உருவாகி, நாளடைவில் விபரீத வளர்ச்சி அடைந்து, உயிருக்கே ஆபத்து தரும் அளவுக்குக் கொடூரமான நோயாக உருவெடுக்கிறது.


  வம்சாவளி காரணமாக முதுமையில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பது கடினம். ஆனால், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், நார்ச்சத்து குறைந்த மேற்கத்திய உணவுமுறை, பால்வினை நோய்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயின்ட், நிக்கல், பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுதல், அணுக்கதிர் வீச்சு, வைரஸ் பாதிப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்பநிலையில் கவனித்து விட்டால் குணப்படுத்துவது எளிது.

  ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னமும் சாதாரண மக்களுக்கு முழுவதுமாக எட்டவில்லை. பலரும் புற்றுநோய் பாதிப்பின் இறுதிக் கட்டத்தில்தான் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் வருகின்றனர்.

  இதனால் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புதிதாக ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன.புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளைத் தெரிந்து கொண்டால் ஆரம்பத்திலேயே இதைக் கவனித்து ஆபத்தைத் தடுத்துவிடலாம். அந்த அறிகுறிகள்தான் என்ன?

  1. உடலில் ஏற்படும் கட்டி

  2. உடல் எடை குறைதல்

  3. தொடர் ரத்தசோகை.

  4. தொடர்ந்த வயிற்றுப்போக்கு.

  5.சிறுநீர், மலம் வெளி யேறுவதில் மாற்றம் அல்லது இவற்றில் ரத்தம் வெளியேறுதல்.

  6. நீண்ட நாட்களுக்குக் காயம் ஆறாமல் இருத்தல்.

  7.மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுதல்.

  8. மார்பகத்தில் கட்டி

  9. நீண்ட கால அஜீரணம் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம்.

  10. ஏற்கனவே உடலில் இருந்த கட்டி அல்லது மரு அளவிலும் நிறத்திலும் மாற்றம் அடைதல்.

  11. பல வாரங்களுக்குத் தொடர்ந்த இருமல், இருமலில் ரத்தம் வருதல்

  12. குரலில் மாற்றம்.


  புற்றுநோயில் பல வகை உண்டு. இவற்றில் நோய் ஆரம்பித்த சில காலத்துக்குள் உயிருக்கு ஆபத்தைத் தருவதில் முன்னிலை வகிப்பது ரத்தப் புற்றுநோய். இது திடீர் ரத்தப் புற்றுநோய் (Acute Myeloid Leukemia AML), நாட்பட்ட ரத்தப் புற்றுநோய் (Chronic Myelogenous Leukemia CML) என்று இரண்டு வகைப்படும்.

  முதலாம் வகையைவிட இரண்டாம் வகைதான் அதிகம் பேரை பாதிக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது. ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

  இந்த நோயுள்ளவர் களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துவிடும். இவற்றின் வளர்ச்சி முறையாகவும் இயல்பாகவும் இருக்காது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைந்துவிடும்.

  இதன் விளைவாக அடிக்கடி காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, அதீத சோர்வு, ரத்தசோகை, உடல் எடை குறைவது, ரத்தப்போக்கு போன்ற தொல்லைகள் உண்டாகும். இவற்றைத் தொடர்ந்து பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மரணம் நெருங்கும்.

  இந்த நோய்க்கு மருந்தே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. 2001ல் ‘இமாடினிப்’ என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டபோது இந்த நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்ததுபோல் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அதேவேளையில் இதற்குப் பக்கவிளைவுகள் நிறைய இருந்ததாலும் இந்த மருந்தையே எதிர்த்துப் போராடும் அளவுக்குப் புற்றுசெல்களுக்கு ஆற்றல் வந்துவிட்டதாலும் வேறு புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

  இதனால் போனாடினிப், நிலோடினிப், டாசாடினிப் எனும் மூன்று வகை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுக்கும் பழைய மாதிரியான பக்க விளைவுகள் ஏற்பட்டதால் அடுத்து ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் தொடர்ந்தது.

  இத்தகைய சூழலில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் பயோகெமிஸ்ட்ரி மற்றும் மாலிக்குலர் பயாலஜி துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் பாஸ்கரன், முத்துவேல் சுரேஷ்குமார் மற்றும் ஆய்வு மாணவர்களான ஹேமந்த் நாயக், ஓம் பிரகாஷ் சர்மா ஆகியோர் குழுவாக இணைந்து சிஎம்எல் ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தும் புதுவகையான மருந்துகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

  ‘‘தற்போதுள்ள புற்றுநோய் மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், மத்திய அரசு ஆண்டுக்கு சராசரியாக ஒண்ணேகால் லட்சம் ரூபாயை ஒவ்வொரு நோயாளிக்கும் செலவிட்டு வருகிறது. என்றாலும் இந்த மருந்துகள் தேவையான அளவுக்குச் செயல்படாத காரணத்தால், நம் நாட்டிலேயே புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க விரும்பினோம்.

  அதன்படி கடந்த 3 ஆண்டு களாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருள்களை ஆராய்ச்சி செய்து ஏழு வகை யான புதிய மருந்துகளைத் தயாரித் தோம். நம் உடலில் ‘பிசிஆர் ஏபிஎல் டைரோசின் கைனேஸ்’ (BCRABL Tyrosine kinase) எனும் என்சைம் தயாரிப்பைக் கட்டுப்படுத்துகின்ற மரபணுதான் இந்த வகைப் புற்றுசெல்கள் வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. இந்த மரபணுவின் வேலையைத் தடுத்துவிட்டால் புற்றுசெல்கள் வளர வழியில்லை.

  நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்துகள் இந்த மரபணுவுடன் இணைந்து, கலந்து, அதன் வேலையை முடக்கிவிடுகிறது. இதன் பயனாக சிஎம்எல் புற்றுசெல்கள் வளர்வதில்லை. தற்போது சந்தையில் உள்ள மருந்துகளை ஒப்பிடும்போது இந்த மருந்துகள் நோயை இரண்டு மடங்கு வேகமாக குணப்படுத்துகின்றன. இவை எல்லாவற்றையும்விட, இந்த மருந்துகளை நம் நாட்டிலேயே தயாரிப்பதால் இவற்றின் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

  இனி சாமானிய மக்களும் இவற்றைப் பயன்படுத்தி புற்றுநோயை ஜெயிக்க முடியும்’’ என்கிறார் இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரும் இணைப் பேராசிரியருமான பாஸ்கரன். இவர் அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சியில் 20 ஆண்டு காலம் அனுபவம் பெற்றவர். இந்தியாவுக்கு வந்து இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார். பாராட்டுவோம்!  டாக்டர் கு.கணேசன்  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 22nd Mar 2015 at 12:53 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter